"ஐரோப்பியர்கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.
1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது."
--------------------------------------
பார்த்தலோமியோ அந்த இடத்தில் கால் பதிக்கவில்லை அதனால் தான் வாஸ்கொடகாமா என்று பதில் கூறினேன். நன்றி.