-
Posts
3060 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by தமிழினி
-
ஆழ்ந்த இரங்கல்கள் 😟
-
வாழ்த்துகள் சுமே அக்கா!
-
மிகவும் துயரமான செய்தி விசுகு அண்ணாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
-
தமிழ்ஈழ தேசியத் தலைவருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழினி replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே
-
உங்களது அளப்பரிய சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஏராளன். நாமும் எய்டனின் பெயரில் non profit organization ஆரம்பித்து அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ( வெளிநாட்டு உதவி இல்லாதவர்களுக்கு) உதவி செய்ய ஆரம்பித்துள்ளோம். முதலில் பண உதவியும் பின்னர் அவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்பை ஆரம்பித்து வைக்கவும் உதவுவது தான் எமது தற்போதைய திட்டம். வைத்தியர்கள் மூலம் உறுதி செய்த பின்பே உதவி செய்கின்றோம். எமது தொண்டு நிறுவனம் ஒரளவிற்கு வளர்ச்சியடைந்த பின்பு நிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு உங்களூடாகவும் உதவிகள் செய்வோம். மீண்டும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்படுவோருக்கும் மிக்க நன்றிகள் 🙏
- 66 replies
-
- 13
-
-
-
சடலமாக மீட்கப்பட்ட இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பெண்!
தமிழினி replied to Paanch's topic in வாழும் புலம்
ஆழ்ந்த இரங்கல்கள் -
நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு!
தமிழினி replied to கிருபன்'s topic in வாழும் புலம்
ஆழ்ந்த அனுதாபங்கள் -
2021 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தெரிவுகளில் ஈழத் தமிழர்.
தமிழினி replied to Nathamuni's topic in வாழும் புலம்
அருட்பிரகாசம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! -
Emojiயில் ஒளிந்திருக்கும் Disney movies கண்டுபிடியுங்கள்
தமிழினி replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in யாழ் ஆடுகளம்
Mulan -
யாயினி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!
-
இந்த ஆக்கத்தை வாசித்தபோது நீங்கள் பார்த்த கோணத்தில் எல்லோரும் பார்க்கப்போவதில்லை. அந்த பெண்ணின் கணவரை குறை சொல்வதாக நான் பார்க்கவில்லை மாறாக அந்த பெண் தனக்காகவும் சிறிது நேரம் செலவழித்திருக்கலாம் என்று தான் தோன்றியது. அதைத்தான் அந்த தோழியும் குடும்பம் குடும்பம் என்று தமக்காக எந்த நேரத்தையும் செலவுசெய்யாத பெண்களுக்கு சொல்லமுனைகின்றார். moral of this story: வாழ்க்கை அழகானது அதை அனுபவித்து வாழுங்கள்!!
-
நன்றி புங்கையூரான் அண்ணா. இந்த ஆக்கத்தை நான் சுட்டது முகநூலில் இருந்து அதனால் விபரங்கள் எதுவும் தெரியவில்லை. நம்மில் அனேகமானவர்கள் மற்றவர்களுக்காகவே வாழப்பழகிவிட்டோம். இனிவரும் தலைமுறை எம்மைப்போல் வாழாமல் தமக்கான வாழ்க்கையை அனுபவித்து வாழ்வார்கள்.
-
படித்ததில் பிடித்தது: வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்... எங்கள் தோழி... 50 வயதைக் கடந்தவள்.. அவள் பிறந்தநாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின் மரண செய்தி... பேரதிர்ச்சி எங்களுக்கு.. அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்... எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை, எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்... ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று.. அதில் தொனித்த வேதனையை எங்களால் இனம் காண முடிந்தது.. அவள் இறந்து 1 மாதமாயிற்று... பாவம் அவள் கணவர்... இப்போது எப்படி சமாளிக்கிறாரோ?? பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்.. பதில் இல்லை. அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்.. எப்படி இருக்கிறீர்கள் என்றேன்.. பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன். சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்.. பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.. "பிள்ளைகள் நலம்..நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்.. சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ... என் கண்கள் குளமாகியது. என் தோழி நினைவிற்கு வந்தாள். பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை. அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது, எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற திரைப்படத்திற்கு அவள் வரவில்லை, காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்.. இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்.. அவளுக்காக அவள் வாழவே இல்லை.. மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறாள்..இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை.. இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன், இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும், நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை.. ஆனால் இதையெல்லாம் சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை... தோழிகளே.. எத்தனை .பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. அது உங்கள் நேரம்.. உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள் பள்ளி, கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,பகிருங்கள், சிரியுங்கள்..வாழ்க்கையை அனுபவியுங்கள்.. இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. உங்களுக்கான இன்பத்தை மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்.. நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்.. இறுதியாக ஒரே ஒரு வார்த்தை.. வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்... அனுபவித்து வாழுங்கள் வாழ்க்கை அழகானது
- 13 replies
-
- 11
-
-
-
ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 : இரண்டாவது சுற்று ஆரம்பம்
தமிழினி replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்
பெல்ஜியம் எதிர் இத்தாலி சுவிற்சர்லாந்து எதிர் ஸ்பெயின் டென்மார்க் எதிர் செக் குடியரசு இங்கிலாந்து எதிர் உக்ரைன் -
குவளை B ல் தான் அதிக தண்ணீர் உள்ளது
-
இளையராஜாவின் பாடல்கள் emojiல்.. கண்டுபிடியுங்கள்
தமிழினி replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in யாழ் ஆடுகளம்
சிவப்பிற்கு வேறு பெயர்கள் யோசித்த போது வரவில்லை ஆனால் பூட்டிற்கு தாழ் என்று யோசித்தபோது செந்தாழம் பூ மனதிற்குள் மணி அடித்தது -
இளையராஜாவின் பாடல்கள் emojiல்.. கண்டுபிடியுங்கள்
தமிழினி replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in யாழ் ஆடுகளம்
2. 🩸🔒🌻🕺🔟🎶 செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் 11. ☁️🌙🏖🚶♂️🤷♀️ ஆகாய வெண்ணிலா தரை மீது வந்ததேனோ இரண்டும் ஒரு guess தான். -
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்கண்ணா! அம்மாவின் ஆத்மசாந்திக்கு இறைவனை வேண்டுகின்றேன்.
-
எமைக்காக்க தம்முயிரை கொடுத்த அனைத்து மாவீர்ர்களுக்கும் வீரவணக்கங்கள்!!