-
ஆபத்து- இலங்கை மக்களுக்கு இது தொடர்ந்து நடக்கலாம்
என்னால் வெளிப்படையாக அனைத்துவிடயங்களையும் பேசமுடியாதுவிட்டாலும் உங்களுக்காக சில செய்திகள் செய்தி 1) பேராதனையில் 21 வயதான மாணவி ஒருவர் Ceftriaxone என்ற மருந்து ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சைபலனின்றி இறந்தார். மருந்து மாறி ஏற்றப்பட்டுவிட்டது, தாதி தவறான மருந்தை ஏற்றிவிட்டார் என்ற வழமையான புராணங்களின் பின்னர் மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமையென உறுதிப்படுத்தப்பட்டது. செய்தி 2) அண்டி பயோட்டிக்ஸ் அலேர்ஜியினால் இதுவரை 15 மரணங்கள் ஏற்பட்டிருந்தாலும் 2 மரணங்களே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி 3) பல நோயாளர்களுக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மருந்துகளால்தான் ஒவ்வாமை ஏற்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது, மருந்துகளின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. செய்தி 4) செய்தி 5) தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்குடும்பப்பெண் ஒவ்வாமையால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணம். இவருக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படவில்லை, சத்திக்கு வழங்கப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த 5 செய்திகளாலும் உங்களுக்கு ஏதாவது விளங்குகின்றதா? எனக்கு எதுவும் விளங்கவில்லை ஓருவருக்கு ஒவ்வாமை எதனாலும் ஏற்படலாம், வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகளில் அண்டிபயோட்டிக் எனப்படும் மருந்துந்துக்குத்தான் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம், அப்படி ஒவ்வாமை ஏற்படும்போது அதற்குரிய வைத்தியத்தை உடனடியாக செய்வதன்மூலம் உயிரை பாதுகாத்துக்கொள்ளமுடியும். இவளவு நாட்களும் கதை இப்படித்தான் இருந்தது ஆனால் இப்போது அண்டிபயோட்டிக்கு மட்டுமல்ல சத்திக்கு வழங்கும் மருந்து வரை ஒவ்வாமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. Antibiotics ற்கு அலேர்ஜி வருவதை முன்கூட்டியே அறியமுடியுமா? ஆம், பெனிசிலின் Penicillin போன்ற அண்டிபயோட்டிக்கை நோயாளி ஒருவருக்கு வழங்குவதற்கு முன்பாக அது நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என அறிவதற்காக ஒரு சோதனை செய்யப்படும் அதை Sensitive test என்று கூறுவார்கள். அண்டிபயோட்டிக்ஸ் மருந்துகள் பெருமளவில் கண்ணாடிப்போத்தல்களிலேயே வருகின்றன, இதை வயல் Vial என்று அழைப்பார்கள். இப்படி வயல்களில் அடைத்துவரும் மருந்து நோயாளிக்கு வழங்கப்படுவதற்கு முன் எப்படி தயாரிக்கப்படும் முறை கீழே காட்டப்பட்டிருக்கின்றது. நோயாளிக்கு இந்த அண்டிபயோட்டிக் மருந்தை வழங்கமுன்பாக கரைக்கப்பட்ட அண்டிபயோட்டிக்கில் சிறிய அளவை மட்டும் எடுத்து அதை 10 மடங்கிற்கு ஐதாக்கி, ஐதாக்கப்பட்ட மருந்தை நோயாளியின் தோலில் ஏற்றுவார்கள். ஏற்றப்பட்டதும் வீங்கிப்போயிருக்கும் பகுதி பேனாவால் வட்டமிடப்பட்டு நேரம், திகதியிடப்படும், அடுத்த 20 நிமிடத்திற்குள் சாதாரணமாக இருக்கும் தோல் அடையாளமிடப்பட்ட கோட்டைத்தாண்டி சிவப்பு நிறமாகிச்சென்றால் அந்த நோயாளிக்கு குறிப்பிட்ட அண்டிபயோட்டிக்கிற்கு அலேர்ஜி என்பது உறுதிசெய்யப்படும். இந்தப்பரிசோதனை வழமையாக penicillin எனப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு மட்டும்தான் செய்யப்படுகிறது ஆனால் முதல்தடவை வழங்கப்படும்போது அனைத்து அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் இந்தப்பரிசோதனை செய்யப்படவேண்டும். அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கு மட்டும்தான் இந்தப்பரிசோதனைசெய்யப்படுகின்றது ஆனால் தற்போது எந்தமருந்துக்கு அலேர்ஜி வரும் என்பதை யாராலும் எதிர்வுகூறமுடியாத நிலையில் எதை வழங்குவதற்கு முன்பாகவும் இதை செய்யவேண்டுமா என்ற குழப்பத்தில்தான் அனைவரும் இருக்கின்றார்கள். காரணம் சத்திக்கு வழங்கப்படும் Antiemetic மருந்துகளுக்கே தற்போது ஒவ்வாமை வர ஆரம்பித்துள்ளது. ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்ற முன்னைய பதிவின் லிங்க் இங்கே Click https://www.manithanfacts.com/2024/01/drug antibiotic allergy .html
-
மீண்டும் சக்திமான் -shaktimaan
தூர்தர்ஷனில் சக்திமான் பார்த்த நினைவிருக்கிறதா?டாக்டர் ஜாகல், தம்ராஜ் கில்விஸன்,கீதாவிஸ்வாஸ்?கங்காதரர் வித்தியாதரர் மாயாதரர் ஓம்காரசாஸ்திரி? வாருங்கள் நினைவை மீட்டுவோம் சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன . அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன். 11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா? கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா?கங்காதரர் அகப்படுவாரா? என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம். ஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள். டைட்டிள் சோங்க் சக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது. கதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார். http://4.bp.blogspot.com/-O2-mBeo5Aa8/UAFqJcjWWgI/AAAAAAAAHqQ/MMN07yupOJI/s320/kilvish.jpg சக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன் வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும் நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ "இருள் நீடிக்கிறது". http://2.bp.blogspot.com/-TsIESzQE6HE/UAFsjR7Kn9I/AAAAAAAAHqg/qcRgLh3Hn5M/s320/311507_372570069474306_1403959557_n.jpgசக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா? அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்.."என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும். http://1.bp.blogspot.com/-dYa0cfksRiM/UAFtQcLvXbI/AAAAAAAAHrY/n-tdW68y6ws/s1600/48978_100001641115134_9902_n.jpg கீதா விஸ்வாஸ் அத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இதனால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார். இத்தொடர் மொத்தமாக 461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல் MDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது. எபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார். சின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள். http://1.bp.blogspot.com/-9TydEhLIjyg/UAFpTNaXG7I/AAAAAAAAHqI/3NnNEpjVaRc/s320/407815_341453482552703_162551560442897_1102676_162347799_n.jpg உண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல. எது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள். பல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன. http://2.bp.blogspot.com/-bp_l7blF6Uc/UAFs0LP87OI/AAAAAAAAHqo/FL1gC1xMz7s/s320/1126840-spcl_0140_e_super.jpg http://3.bp.blogspot.com/-3AP8pEX-5lw/UAFs2U5GYFI/AAAAAAAAHqw/U1PrXioz2cI/s320/1126841-spcl_0153_e_super.jpg http://3.bp.blogspot.com/-Q05sOp1JKWw/UAFs4hkZlVI/AAAAAAAAHq4/bnBLBLR6wo8/s320/1126842-spcl_0156_e_super.jpg http://1.bp.blogspot.com/-4YwQ7JGogUU/UAFs7aHdbnI/AAAAAAAAHrA/PwIFY6X5upc/s320/1126843-spcl_0161_e_super.jpg http://4.bp.blogspot.com/-dnehr7I7I_8/UAFs86YNA9I/AAAAAAAAHrI/b2qtZ2knq4I/s1600/Shaktiman%5B11%5D.jpg http://2.bp.blogspot.com/-BLxCX65AQPE/UAFs9r_yVfI/AAAAAAAAHrQ/QBaBypqaz9o/s1600/rom42.jpg 2012 ல் சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார்கள் .2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்கள் .சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிப்பதாக இருந்தார்,2012 ல் இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ராவன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்" என கூறினார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றுவரை இது நிறைவேறவேல்லை போதாததற்கு கொரோனா காரணமாக முகேஸ்கண்ணா மரணமடைந்துவிட்டார் என்றும் அண்மையில் நெட்டிசன்கள் வதந்தியை பரப்பியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
-
ஆபத்து!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பக்கவாதமாககூட இருக்கலாம்
இன்று உலகில் அதிகளவில் ஏற்பட்டுவரும் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பிரதான தொற்றா நோய்களில் பக்கவாதமும் ஒன்றாகும். இன்று 6 பேரில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் வருமுன் காக்கப்பட வேண்டிய ஒரு பிரதான நோயாகும். இருந்த போதிலும் பக்கவாதம் பற்றிய போதிய விழிப்புணர்வு பொது மக்களிடம் மிகக் குறைவாகக் காணப்படல் ஒரு வருந்தக் கூடிய விடயமாகும். இது மிகவும் அச்சுறுத்தக் கூடியதும்இ உயிரிழப்பைத் தோற்றுவிக்கக் கூடியதுமான ஒரு தொற்றா நோயாகும். நவீன மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பாக முன்னேற்றமடைந்திருந்தாலும் நாளுக்கு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நேயாயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது கடவுளுடைய அதிசயமான படைப்பிலே உருவான மனிதப் பிறவியில் மிகவும் பிரமிக்கக் கூடிய பல பிரமாண்டமான ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளதும் இ மிகவும் சிக்கலானதும் அதிக குருதிஇ நரம்பு விநியோகம் கொண்ட உறுப்பு மனித மூளையாகும். மனிதனில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் கட்டுப்படுகின்ற உயர் கட்டமைப்பு இ தொழிற்பாட்டு மையமும் அதுவேயாகும். மனிதனின் ஒவ்வொரு தொழிற்பாடுகளும் மூளையின் குறித்த ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படும். மூளையானது உயர் ஒட்சிசன் தேவையுள்ள குருதிக் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலால் உருவான அமைப்பாகும். அதே வேளை ஒட்சிசன் விநியோகம் தடைப்படும் போது முதலாவதாக இறக்கின்ற உறுப்பும் அதுவேயாகும். பக்க வாதம் அல்லது பாரிசவாதம் என்றால் என்ன???? மூளையின் குறித்த சில பாகங்கள் சடுதியாக செயலிழப்பதால் உடலின் சில பாகங்களை அசைக்க முடியாத நிலை உண்டாகின்றது. பொதுவாக மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகங்களையும் மூளையின் இடது பகுதி உடலின் வலது பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது. மூளையின் குறித்த பகுதி செயலிழப்பதால் அப் பகுதியால் கட்டுப்படுத்தபடுகின்ற உடலின் குறித்த பாகம் செயலிழந்துவிடுகின்றது. மூளைக்கு குருதியை கொண்டு செல்கின்ற நாடிகளில் ஏற்படும் திடீர் அடைப்புக்களால் மூளைக்கான சீரான குருதி சுற்றோட்டம் பாதிக்கப்படும். தொடரும் இன் நிலையானது மூளையின் விரைவான செயலிழப்புக்கு வழிகோலும். இதனால் மூளையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட குறித்த பாகத்துக்கான நரம்பிணைப்பு துண்டிக்கப்படுவதால் அப் பாகம் செயலிழக்கின்றது. இந்நிலை பக்கவாதம் எனப்படும். இதன் விளைவாக உடலில் பின்வரும் மாற்றங்கள் நிகழும் • சுய நினைவற்ற நிலை • புலனுணர்வுகள் உடலின் இயக்கம் என்பன பாதிக்கப்படும் • உடலின் ஒருபக்கம் செயலிழக்கும் • உடல் தசைகளுடைய அசைவு பாதிக்கப்படும் • உடல் பலவீனமடையும் • சுவாசிப்பதில் சிக்கல் நிலை தோன்றும் • மூட்டுகள் விறைப்புத்தன்மையாக மாறும் • முகம் மற்றும் வாய் சமச்சீரற்று காணப்படல் அல்லது வாய் சற்று கோணலாக மாறல் • வுழமையான பேச்சில் தெளிவின்மை • உணவை விழுங்குவதில் சிக்கல் • நினைவாற்றல் குறையும் • சடுதியான மயக்கம் கடும் தலைவலி ஏற்படும் இன்று கீழ்வரும் காரணிகள் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது. • வயது- வயது அதிகரிக்கும் போது ஆண் பெண் இருபாலாருக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் • இலிங்கம்- ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் • மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பக்கவாதம் ஏற்படுவதை பன் மடங்கு அதிகரிக்கும் • நீரழிவு நோய் ,உயர் குருதி அமுக்கம், மன அழுத்தம் போன்ற நிலைமைகளும் பக்கவாதத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும் • போதிய அளவு உடற்பயிற்சியின்மையால் குருதி சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு காலபோக்கில் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும் • முறையற்ற உணவு பழக்கங்கள் அதாவது நிரம்பிய கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகள் குருதி கலன்களில் கொலத்திரோல் படிவுகளை ஏற்படுத்துவதால் இது பக்கவாதத்திற்கு வழிகோலும் • பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் நிறமுர்த்தங்களாலும் இவை ஏற்படுத்தப்படும் • அதிகளவில் கருத்தடை மாத்திரைகள் பாவித்தல் கொகையின் (ஊழஉயiநெ) பாவித்தல் அதிக உடற் பருமன் போன்ற பல காரணிகளும் பக்கவாதம் ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்துகின்றது. பக்கவாதத்தில் பொதுவாக இரண்டு வகை உள்ளது • இஸ்கேமிக் (Ischemic stroke) • கீமோறேஜிக் (Hemorrhagic stroke) இஸ்கேமிக் (Ischemic stroke) மூளைக்கு செல்லும் இரத்தகுழாய்களில் கொழுப்பு பைபிரின் நார்கள் கல்சியம் ஆகியன படிவதாலும் இரத்தக்கட்டிகள் உறைவதாலும் கருதிக்குழாயின் பருமன் குறைவடைந்து மூளைக்கான குளுக்கோசு ஒட்சிசன் விநியோகம் தடைப்படுகிறது இதனால் மூளையின் கலங்;கள் காலப்போக்கில் இழக்கப்படுகின்றது. கீமோறேஜிக் (Hemorrhagic stroke) மூளையில் காணப்படுகின்ற சில குருதிக்குழாய்களின் சுவர் மென்மையடைந்து உயர் குருதி அமுக்கத்தின் காரணமாக ஏற்படுத்தப்படும் இரத்தக் கசிவினால் இந்நிலை உருவாகின்றது. சுpல வேளைகளில் குருதி மயிர்த்துளைக் குழாய் வெடிப்பினால் இது ஏற்படுகின்றது. இதற்கு தலையோட்டிலுள்ள அமுக்கமும் காரணமாகும். சில தடுப்பு முறைகள் • தினந்தோறும் ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளை றே;கொள்ளுதல். • ஆரோக்கியமான உணவுமுறைகளை கையாளுதல் • புகைத்தல் மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல் • நீரழிவு நோய் இதய நோய்களிலிருந்து விடுபடுதல் பக்கவாத புனர்வாழ்வு சிகிச்சையில் இயன் மருத்துவர்களின் பங்களிப்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வளித்து வழமையான நிலைக்கு கொண்டு வருவதில் இயன் மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பக்கவாதத்தினால் யாராவது பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டும். அதன் பின்னர் வைத்தியசாலையில் அந் நோயாளி உயிர் ஆபத்தை தாண்டிய பின்னர் இயன் மருத்துவ சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரால் சிபார்சு செய்யப்பட்டு இயன் மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும். இயன் மருத்துவர்களினால் தொடர்ச்சியான சரியான ஆலோசனைகளும் உடற்பயிற்சிகளும் வழங்கப்படும். பல்வேறு வகையான கையாளுதல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய வேளையில் பொருத்தமான புனர்வாழ்வளித்து வழமை நிலைக்கு திரும்பும் இயன் மருத்துவ நுணுக்கங்கள் கையாளப்படும். இதன் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு குணமடைய இயன் மருத்துவர்கள் துணை புரிவார்கள். பக்கவாதம் என்பது வரும் முன் தடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சரியான உடற் பயிற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமும் பக்கவாதம் வராமல் தடுக்க சிறந்த எளிய வழிகளாகும். ஆகையால் இதன் தோற்றத்துக்கு காரணமாகும் காரணிகளிலிருந்து முற்காப்பு எடுத்துக்கொள்வதுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு திறமையான இயன் மருத்துவரின் உதவியை நாடி தொடர்ச்சியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைய முடியும். எனவே பக்கவாதம் எனும் கொடிய நோயிலிருந்து எம்மையும் எம் அயலவர்களையும் பாதுகாத்து ஒரு ஆரோக்கியமான சமுகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பக்கவாதத்தை வராமல் விரட்டியடிப்போமாக.. க.ஹரன்ராஜ் இயன் மருத்துவர் (physiotherapist ) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை https://www.manithanfacts.com/