Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியானி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நியானி

  1. வணக்கம், யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 94 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைகின்றது. எனவே அதன் பின்னர் புதிய சுய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். (suvy) "கரை கடந்த புயல்" (kandiah Thillaivinayagalingam) காற்றாடி ( ரசோதரன்) "கலாச்சாரம்" & "துடிக்கும் இதயங்கள்" (kandiah Thillaivinayagalingam) இன்னொரு சக்கரவர்த்தி ( ரசோதரன்) "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" (kandiah Thillaivinayagalingam) "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" (kandiah Thillaivinayagalingam) கர்ண பரம்பரையின் கனவு ( ரசோதரன்) "அன்புடன் தேன்மொழி" (kandiah Thillaivinayagalingam) "ஏனிந்தக் கோலம்" (kandiah Thillaivinayagalingam) "வாழ்வில் வசந்தம்" & "தைமாசக் காத்துல தாழம்பூ வாசத்துல" ( kandiah Thillaivinayagalingam) ஓணாண்டி அன்போட கோஷான் நான் எழுதும் கடிதமே! (goshan_che) இன்றைய அதிசயம் ( ரசோதரன்) "உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" [காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக] (kandiah Thillaivinayagalingam) இறை குறைபடுமோ ? - (சுப.சோமசுந்தரம்) காதலர் தினக் கதை ( ரசோதரன்) காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்... (alvayan) "கும்மிருட்டில் நடனம்" (kandiah Thillaivinayagalingam) "அன்பு வலிமையானது" & "ஓடுகிற தண்ணியிலே" (kandiah Thillaivinayagalingam) ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ( ரசோதரன்) இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே (alvayan) "சொல்ல துடிக்குது மனசு" & "பாலகன்பிறந்தார்" (kandiah Thillaivinayagalingam) இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்? (ஈழப்பிரியன்) ஒரு முட்டை ஆயிரம் டாலர் ( ரசோதரன்) சும்மா ஒர் பதிவு (putthan) "இதுவும் கடந்து போகட்டும்" & "மாற்றங்கள்" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நெஞ்சோடு நிழலாடுதே" & "ஒளிரட்டும் புத்தாண்டு மிளிரட்டும் நம்வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) கைவிலங்குகள் ( ரசோதரன்) நியாயத்தின் சாம்பல் (villavan) "உன்னோடு வாழ்வது உவப்பானதே" & "புது விடியல்" (kandiah Thillaivinayagalingam) ஓயும் ஊசல் ( ரசோதரன்) ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் (goshan_che) "பிள்ளை நிலா" (kandiah Thillaivinayagalingam) "செருக்கு” [தன்முனைக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) குறள்மொழி இன்பம் / "குறள் 1265" (kandiah Thillaivinayagalingam) மூன்று கோழிக்குஞ்சுகள் ( ரசோதரன்) "யாரொடு நோக" [அந்தாதிக் கவிதை] & "நடை பயிற்சி" (kandiah Thillaivinayagalingam) விதியற்றவர் (மெசொபொத்தேமியா சுமேரியர்) ஓரக்கண்ணாலே உசிர் எடுத்து போறவளே!" & "வாசிப்பு" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "நீயில்லா வாழ்வு" (kandiah Thillaivinayagalingam) பூனைகளின் பேச்சுவார்த்தை ( ரசோதரன்) "தனிமையை இனிமையாக்கிய கனிமொழியே" (kandiah Thillaivinayagalingam) “ஏனடி இந்த வேதனை..?” (kandiah Thillaivinayagalingam) "பனியில் நனையலாமா? .. நிலவிலே காயலாமா?" & "என்றுமே முதலாளி" (kandiah Thillaivinayagalingam) ராணுவ ரகசியம் ( ரசோதரன்) "எது தான் சரி...?" [அந்தாதிக் கவிதை] & "மாங்கல்ய கனவுடன்" (kandiah Thillaivinayagalingam) அமைதி மணம் (villavan) "மன்னிப்பாயா என்னை", தாய்மை & "தாத்தா" (kandiah Thillaivinayagalingam) "பாலியல் வன்கொடுமை" (kandiah Thillaivinayagalingam) முழிக்கும் மொழி ( ரசோதரன்) பிட்டுக்கு மனம் சுமந்து (மெசொபொத்தேமியா சுமேரியர்) தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே (Kavi arunasalam) "நீயில்லை நிழலில்லை" (kandiah Thillaivinayagalingam) அவளைத்தொடுவானேன்....??? (விசுகு) "மூன்றும் உடையது", குறள் 1085 & "பனிப்பொழிவு" (kandiah Thillaivinayagalingam) "பணம் படுத்தும் பாடு", "தைப்பொங்கல்” [ஹைக்கூ கவிதை] & "மரியாதை" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) "தைமகளே வருக" [அந்தாதிக் கவிதை] (kandiah Thillaivinayagalingam) கண் கண்ட தெய்வம் ( ரசோதரன்) தூத்துகுடி கொத்தனாரு…. (goshan_che) "வாழ்ந்து காட்டுவோம்" & "வியர்வை சிந்தி விடியலை விரும்பும் உழவரே..!” (kandiah Thillaivinayagalingam) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) பார்த்தீனியம் ( ரசோதரன்) கிழவனை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) "கிராமியக் கலைஞன்" (kandiah Thillaivinayagalingam) தலைவரை கண்டா வரச்சொல்லுங்க (goshan_che) மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்? (villavan) "தை மகளே வருக" (kandiah Thillaivinayagalingam) பம்மாத்து (சுப.சோமசுந்தரம்) அப்பா...... (விசுகு) நானும் ஊர்க் காணியும் (மெசொபொத்தேமியா சுமேரியர்) "உழவர் திருநாள்" & "தித்திக்கும் பொங்கல் திருநாள்" (kandiah Thillaivinayagalingam) "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " (kandiah Thillaivinayagalingam) செவ்வந்தியில் செவ்வந்தி ( ரசோதரன்) இரத்த சொந்தம் (நிலாமதி) “காலம் எல்லாம் உனக்காகக் காத்திருப்பேன்” (kandiah Thillaivinayagalingam) "தை பிறந்தால்" & "பரோபகாரம்" (kandiah Thillaivinayagalingam) ஏழரைக்கனவு (தனிக்காட்டு ராஜா) யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. (தமிழ் சிறி) "புதிய ஆரம்பம்" (kandiah Thillaivinayagalingam) "வாடகை வீடு..!" (kandiah Thillaivinayagalingam) "உன்னைச் செதுக்கு" (kandiah Thillaivinayagalingam) "பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்" (kandiah Thillaivinayagalingam) "எங்களுக்கும் காலம் வரும்" (kandiah Thillaivinayagalingam) "கந்துவட்டி" (kandiah Thillaivinayagalingam) "சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிகிறதே!" (kandiah Thillaivinayagalingam) "இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]" (kandiah Thillaivinayagalingam) கூடுவேம் என்பது அவா / குறள்1310 (kandiah Thillaivinayagalingam) "தனிக் குடித்தனம்" (kandiah Thillaivinayagalingam) "மௌனம் சம்மதமா?" (kandiah Thillaivinayagalingam) “போராடி வென்றவள்" (kandiah Thillaivinayagalingam) "உயிர்பெறுமா ஓவியம்" (kandiah Thillaivinayagalingam) "வீட்டு வேலைக்காரி" (kandiah Thillaivinayagalingam) "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்" (kandiah Thillaivinayagalingam) "மீட்டாத வீணை.." (kandiah Thillaivinayagalingam) பதியப்பட்ட 94 ஆக்கங்களில் களஉறுப்பினர்கள் @kandiah Thillaivinayagalingam 53 ஆக்கங்களையும் @ரசோதரன் 16 ஆக்கங்களையும் பதிந்துள்ளனர். கள உறுப்பினர்கள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம், ரசோதரன் ஆகியோருக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  2. வணக்கம், யாழ் இணைய வழங்கி சில புதுப்பித்தல்களுக்கு உள்ளாவதால் யாழ் இணைய சேவைகள் செவ்வாய் 18 பெப் ஐரோப்பிய நேரம் 09:30 இலிருந்து அண்ணளவாக ஒரு மணித்தியாலத்திற்கு தடங்கலுக்கு உள்ளாகலாம்.
  3. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 27 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 27 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  4. சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல தனி மனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும், அநாவசியமான கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், கருத்தாடற்பண்பைக் கடைப்பிடிக்காத கள உறுப்பினர் மீது இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  5. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! எனும் திரியில் தலைப்புக்கு பொருத்தமில்லாத சீண்டல் கருத்துக்களும், பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் சக உறுப்பினர்களைச் சீண்டும் பதிவுகளை இட்டு கருத்துக்களத்தின் தரத்தை கீழிறக்கும் உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில்கொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடுங்கள்.
  6. யாழ்ப்பாணத்தில் அமைச்சர் எனும் திரியில் பண்பற்ற வகையில் தனிநபர் தாக்குதல் கருத்துக்களும், சீண்டல்களும், அதற்கான பதில்களும் என பதியப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்பட்டுள்ளது. களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாட்டு முறை மூலம் அறியத் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதை கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  7. வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) தம்பி நீ கனடாவோ..? (alvayan) என் இந்தியப் பயணம் (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை (ரசோதரன்) புளுகுப் போட்டி (ரசோதரன்) சிறந்த நடுவர் (ரசோதரன்) ஒரு பொய் (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன் (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க… (alvayan) புலம் பெயர்ந்த புகை (ரசோதரன்) பிஞ்சுக் காதல்… (alvayan) கனத்தைப் பேய்க் கவிதை….. (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. (goshan_che) காந்தி கணக்கு (ரசோதரன்) சனாதன வருத்தம் (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு (theeya) தோற்ற வழு (ரசோதரன்) பாக்குவெட்டி (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால் (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும் ( P.S.பிரபா) எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. (தமிழ் சிறி) அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம் (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய் (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....? (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள் (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் (ரசோதரன்) உயிர்த்தெழுதல் (ரசோதரன்) குரு தட்சணை (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்" (kandiah Thillaivinayagalingam) தேனும் விஷமும் (ரசோதரன்) சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா (விசுகு) நிலவே நிலவே கதை கேளு! (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ. (ஈழப்பிரியன்) நூலறிவு வாலறிவு (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு! (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் @ரசோதரன் 31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  8. ஆக்கம் "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
  9. “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல் எனும் திரியில் நீக்கப்பட்ட காணொளிகளை மீண்டும் மீண்டும் இணைப்பதை தவிர்க்கவேண்டும். களவிதிகளை தொடர்ச்சியாக மீறும் வகையில் கருத்தாடல் புரிவோர் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் உள்ள “கருத்துக்கள உறுப்பினர்கள்” பகுதிக்கு நகர்த்தப்படுவார்கள்.
  10. வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) இதுவரை பதியப்பட்ட 30 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் ரசோதரன் 12 ஆக்கங்களை பதிந்துள்ளார். உற்சாகமாக சுய ஆக்கங்களை பதியும் உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள உறுப்பினர்கள் பலர் இன்னும் பதியாமல் பார்வையாளார்களாக உள்ளனர். யாழ் அகவை 26 க்கு இன்னும் 15 நாட்களே உள்ளன என்பதால் விரைவில் ஆக்கங்களைப் பதியுங்கள். குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
  11. நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து? எனும் திரியில் தேவையற்ற கருத்தாடல்கள் நடைபெறுவதால் பல அரட்டைத்தனமான கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், திரியும் பூட்டப்பட்டுள்ளது.
  12. வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்கள் போன்று சுய ஆக்கங்களைப் பதிந்து யாழ் அகவை 26 இனை சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்சிறப்புப் பகுதி திறக்கப்பட்டுள்ளது ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். யாழ் களத்தில் முதலில் பதிந்த பின்னர் முகப்புத்தகத்தில் விரும்பினால் பிரசுரிக்க வேண்டுகின்றோம். சுய ஆக்கங்கள் பகுதிக்கு ஏதாவது பதிவுகளை மாற்ற விரும்பினால் இந்தத் திரியிலேயே அறியத்தாருங்கள். நன்றி.
  13. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  14. முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.
  15. வணக்கம், யாழ் களம் புதிய வழங்கிக்கு மாற்றப்பட்ட பின்னர், இணைப்புக்கள் சற்று மந்தமான வேகத்தில் இயங்குவதும், இதற்கு திண்ணை மென்பொருள் காரணமாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதால், திண்ணை வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. யாழ் இணையத்தின் இணைப்புக்களை திறப்பதற்கான வேகத்தை அவதானித்து, உரிய மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும். நன்றி
  16. இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு எனும் திரியில் இருந்து ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு துணைபுரியாத ஆரோக்கியமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் கருத்துச் சுதந்திரம் எனும் போர்வையில் பிறரை காயப்படுத்தும், மறைமுகமாகத் தாக்கும் கருத்துக்களை வைப்பது அனுமதிக்கப்படமாட்டாது.
  17. தனியார் ராணுவம் என்றால் என்ன? சோழர்களும் பேரரசை விரிவாக்க அதை பயன்படுத்தினார்களா? எனும் திரியில் ஆக்கபூர்வமான கருத்தாடலை விடுத்து சொற்களின் நுண்மை பற்றிய விவாதம் தொடர்வதால் திரி பூட்டப்படுகின்றது.
  18. ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் இன்று - சிறப்பு காணொளி ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், தாளையடி முகாம் மீதிருந்து வரக்கூடிய எதிரியின் தாக்குதல்களை எதிர்நோக்கியவாறு, குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் கடல்வழியாகப் பயணித்தனர். குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது. சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்கு முனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டியடித்து மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று, குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம். தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக் கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணிகள் ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்க வேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 இற்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு விநியோகப் படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் பிரிகேடியர் பால்ராச் அவர்கள் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத் தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் இரணைமடு குளத்தில் குளிக்கும் போது நீரில் முழ்கி சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமை தாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர். புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு, தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில், தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு விநியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை எதிரி அறிந்தபோது முதலில் திகைத்தாலும், ஆனால் அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதிரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த் தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான். வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே கடல்வழியான தொடர்ச்சியான விநியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக விநியோகத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு விநியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக் கொண்டனர் புலிகள். அதுவரை சரியான விநியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக் கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு (மீளொழுங்கு படுத்தப்பட்டு), தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினான். கவசவாகனங்கள், ஆட்லெறிகள், கனரகப் படைக்கலங்கள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல கவசவாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச் சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவாகனங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒரு தென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத் தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு (34) நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராச்சின் தலைமையிலான புலியணியினர். (வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாமுனைத் தரையிரக்கத்தில் நீருக்குள்ளால் 120 மி.மீ. கனரகப் பீரங்கியை இழுத்துச்சென்றனர் பெண்புலிகள்) தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டபோது, அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிக இலகுவாக, மிகக் குறைந்த இழப்புடன் ஆனையிறவுப் பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி, அனைவரும் தங்கள் தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப் பாதை வழியாக ஓடித்தப்பினர். முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான். சிங்களப்படை அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய கனவிலும் முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால், புலிகள் மிக வெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி, ஒரு மாதத்துக்கும் மேலாக எதிரியின் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு, இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர். கரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்டிலெறிகள் பளை ஆட்டிலெறித் தளத்தைத் தகர்ப்பதற்கு 26.03.2000 அன்று இரவு விடுதலைப் புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது, ஆனையிறவுத் தளம் எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்டிலெறித் தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்டிலெறித் தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்த நேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொரு பேர் இருந்தார்கள். குறிப்பிட்ட ஆட்டிலெறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் அந்த அணியை வழிநடத்திய வர்மனும் ஏற்கனவே வேவுபார்க்கச் சென்றவர்களுள் ஒருவனாவான். எனவே, அந்த அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த அவனால் முடிந்தது. ஆட்டிலெறித் தளத்தின் சுற்றுக் காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழைய வேண்டியதுதான். இந்த நிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாயினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்தாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத் தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்டிலெறித் தளத்தைப் பாதுகாத்து நின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறு நிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். ஆட்டிலெறித் தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து. ஆட்டிலெறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்டிலெறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத் திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும், போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக் கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து, பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்டிலெறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்டிலெறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்டிலெறிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்டிலெறிகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதன்மூலம், தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர். பளை ஆட்டிலெறித் தள அழிப்பு, ஆனையிறவு மீட்புப் போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு, உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கத்துக்கானது ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள். குடாரப்புத் தரையிறக்க மோதல் குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர். கண்டி வீதியில் நிலை கொள்ளல் குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக் கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பளை ஆட்டிலெறித் தள உள்நுழைவு கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்டிலெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி அணியினர் அங்கு அமைத்திருந்த 11 ஆட்டிலெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர். தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர். இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். பால்ராச் உயிருடன் பிடிபட்ட செய்தி இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத் தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். இத்தாவிலில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க எட்டிற்கும் மேற்பட்ட தடவைகள் இலங்கை இராணுவத்தினரால் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாவிலில் தரையிறங்கி நிலைகொண்ட புலிகள் அணியினரை முறியடிக்க முடியாத நிலைக்கு இலங்கைப் படையினர் தள்ளப்பட்டனர். இதனால், ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது. -இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவால் தொகுக்கப்பட்ட பதிவு ஆகும்
  19. யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் படம் கூறும் கதைகள் எனும் சுய ஆக்கத் திரியில் கள உறவு நில்மினியால் இணைக்கப்பட்ட படங்களும் அவற்றை ஒட்டிய கருத்துக்களும் பிரிக்கப்பட்டு நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள் எனும் புதிய திரிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
  20. சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. வேறு திரிகளில் இருந்து காவுவதும், தலைப்புக்கு சம்பந்தமற்று கருத்தாடல் புரிவதும் களவிதிகளுக்கு முரணானவை. தொடர்ச்சியாக மீறுபவர்கள் காலவரையின்றி மட்டுறுத்துனர் பார்வையில் வைக்கப்படுவர்.
  21. வணக்கம், கருத்துக்கள மென்பொருள் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதால் இன்று (18 Oct 2022) பின்னேரம் 5 மணியளவில் இருந்து சில மணி நேரங்களுக்கு யாழ் இணையம் இயங்க மாட்டாது. நன்றி நிர்வாகம்
  22. யாழ்கள கருத்தாடல்கள் விதிமுறைகள் தெளிவாகவே உள்ளன. விதிமுறைகளை உள்வாங்கிக் கருத்துக்கள் வைப்பதும், களவிதிகளை மீறும் கருத்துக்களை உடனுக்குடன் முறைப்பாட்டு (Report) முறை மூலம் அறியத்தருவதும் கருத்துக்களத்தின் தரத்தைப் பேண உதவும். மட்டுறுத்துனர்கள் சகல கருத்துக்களையும் பார்த்து மட்டுறுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை. அதனால் களவிதிகளை மீறும் சில கருத்துக்கள் கருத்துக்களத்தில் காணப்படலாம். இவற்றினை அகற்ற கள உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும், கள உறுப்பினர்களில் சிலர் கருத்துக்கள விதிமுறைகளை சட்டைசெய்யாதும், விதிமுறைகளை மீறும் வகையில் தந்திரமாக வளைத்தும் கருத்துக்கள் வைப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகளும், எ.கா. நிரந்தர மட்டுறுத்துனர் பார்வையில் விடப்படுவது, எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். மேலே உள்ள கருத்துக்கள் தொடர்பான சில விதிகள்: கருத்துக்கள், பின்னூட்டங்கள், விமர்சனங்கள் சமூகப் பொறுப்புடனும் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனிநபர்களையும் அமைப்புக்களையும் தாக்கும், திட்டித் தூற்றும், புண்படுத்தும், குந்தகம் விளைவிக்கும் பாதகமான கருத்துக்கள்/பதிவுகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், உயிரோடு இருக்கும்/மறைந்த சமூகத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும், அவதூறான சொற்களால் இகழ்தலும், இழிவுபடுத்தும் காணொளிகளும், மீமி படங்களும், அசைபடங்களும், போலியாக உருவாக்கப்பட்ட படங்களும், சமூகவலை இணைப்புக்களும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். யாழ்கள விதிகள்:
  23. தற்போது கருத்துக்கள உறவுகள் ஆறு விருப்புப் புள்ளிகள் வழங்கலாம்.
  24. நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கக்கூடிய பகுதியில் நடைபெறும் கருத்தாடல்களுக்கு நிர்வாகத்தில் உள்ளவர்களால் வழங்கப்படும் விருப்புப் புள்ளிகளின் எண்ணிக்கையை பொதுவில் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், அக் கருத்துக்களை நிர்வாகத்தினர் மட்டுமே பார்க்கமுடியும். மேலும், கருத்துக்கள மாற்றங்கள் பற்றிய கருத்தாடல் நிர்வாகப் பகுதியில் நடந்துகொண்டிருக்கின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
  25. கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் அநாகரீகமாக உரையாடவும் திண்ணையைப் பாவிப்பதை அனுமதிக்கமுடியாது. களவிதிகளை மீறும் கருத்துக்களை முறைப்பாடு முறை மூலம் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதை விடுத்து திண்ணையில் தேவையற்ற உரையாடலை தொடர்ந்ததனால் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் கள உறுப்பினர்கள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணைப் பகுதி தொடர்பான விதிகள்: திண்ணை உரையாடல்கள் யாழ் கருத்துக்கள விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். திண்ணை உரையாடல்கள் கண்ணியமான முறையிலும் நட்பு ரீதியிலும் இருத்தல் வேண்டும். தனிநபர் தாக்குதல், சீண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் உரையாடுதல், நீ, வா, போ என ஒருமையில் சக உறுப்பினரை விளித்தல், அநாகரீகமாக உரையாடுதல், இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்தல் போன்றன கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.