Search the Community
Showing results for tags 'வவுனியா'.
-
வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டார்கள், வீட்டினுள் சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலையைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் விடுவித்துள்ளனர். எட்டு அடி நீளமுடைய முதலையொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/197799
-
Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 11:08 AM போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு ஒரு விசேட புனர்வாழ்வு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமையம் வவுனியா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 100 பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்க முடியும். நீதிமன்ற உத்தரவுக்கமைய போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும். இந்த புனர்வாழ்வு மையம் குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி, போதைப் பொருளுக்கு அடிமையான பெண்களை புதிய புனர்வாழ்வு மையத்துக்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193819
-
09 AUG, 2024 | 04:03 PM காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (09) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதானிகள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொண்டதோடு விடயங்களையும் கேட்டறிந்திருந்தனர். இதன்போது 62 பேருக்கு கடிதங்கள் தபால் மூலமாகவும் கிராம சேவையாளர் ஊடாகவும் அனுப்பப்பட்டு இந்த பதிவு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர், எதிர்வரும் மாதம் அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களுக்காக நஷ்ட ஈடும், சான்றிதழும் வழங்குவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தங்களிடம் அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/190658
-
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2024 | 02:37 PM வவுனியா ஶ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அதிபரை மாற்றுமாறு கோரி பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று புதன்கிழமை (24) பாடசாலையின் காலை பிரார்த்தனை முடிவடைந்த பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, எமது பாடசாலை கல்விநிலையில் வீழ்ச்சி நிலையினை கண்டுள்ளது. பாடசாலையில் நடைபெறும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் எவையும் சமர்பிக்கப்படவில்லை. அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக பெற்றோர்களிற்கு அறிவித்து கலந்துரையாடும் நடவடிக்கையினையும் அவர் முன்னெடுப்பதில்லை. இவ்வாறானா காரணங்களால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலைமை தொடர்ந்தால் பாடசாலையினை இழுத்து மூடவேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே உடனடியாக அவரை மாற்றித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றனர். குறித்த விடயம் தொடர்பாக பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்டு கேட்டபோது, நான் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக வெளிநபர்களின் உதவிகளை பெற்று மாணவர்களது கல்விவளர்ச்சிக்கு உரிய தேவைகளை செய்துள்ளோம், வறுமைப்பட்ட மாணவர்களின் தேவை கருதி சத்துணவு திட்டத்தினை விஸ்தரித்துள்ளோம். அனைத்திற்கும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலையின் நிர்வாகத்தை ஒரு சிலநபர்கள் சொல்வது போல நடாத்தமுடியாது. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் சரியாக செயற்பட்டால் நாம் பாடசாலையில் மாணவர்களுடன் முரண்பட வேண்டிய தேவை ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/189265
-
Published By: VISHNU 21 JUN, 2024 | 11:51 PM வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த வீதியில் நீண்டகாலமாக வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருகின்றது,இதனால் அந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததுடன் நோயாளர்காவு வண்டிகளும் சிரமத்துடனேயே பயணிக்கவேண்டியிருந்தது. இந்நிலையில் குறித்த வீதியானது எதிர்வரும் வாரங்களிலிருந்து ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா கண்டி வீதி வழியாக வருகைதரும் பொதுமக்கள் வழமைபோல வைத்தியசாலை சுற்று வட்டத்தினை பயன்படுத்தி வைத்தியசாலை வீதியால் தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும். அத்துடன் பூந்தோட்டம் பகுதியிலிருந்து வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள் கித்துள் வீதியினையோ அல்லது குளவீதியினை பயன்படுத்தி வைத்தியசாலைக்குச் செல்ல முடியும். இது தொடர்பான தீர்மானங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், நகரசபை,பிரதேசசெயலகம், பொலிசார் ஆகியவை இணைந்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/186664
-
Published By: VISHNU 30 MAY, 2024 | 11:42 PM வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கான் இயந்திரம் கடந்த சிலமாதங்களாக பழுதடைந்துள்ளமையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். வவுனியா பொது வைத்தியசாலையில் ஒரேயொரு CT இயந்திரம் மாத்திரமே உள்ளது. அது கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் CT ஸ்கான் எடுக்கவேண்டிய நோயாளர்கள் அனுராதபுரம், பொலனறுவை மற்றும், யாழ் போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அங்கு கொண்டுசெல்லப்படும் ஒரு நோயாளிக்காக நோயாளர்காவுவண்டியில் ஒருவைத்தியர் தாதியர் சிற்றூழியர் ஆகியோர் பயணிக்கவேண்டும். இதன் மூலம் நேரவிரயம் மாத்திரம் அல்லாமல் வீண் செலவும் ஏற்படுகின்றது. வைத்தியசாலையில் நோயாளர்காவு வண்டிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதற்காகவும் காத்திருக்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை சில தினங்களிற்கு முன்பாக குறித்த இயந்திரம் திருத்தப்பட்டநிலையில். அன்றையதினமே மீண்டும் அது பழுதடைந்துள்ளது. CT இயந்திரம் பழுதடைந்து மாதக்கணக்காகும் நிலையில் அதனைத் திருத்தி சீரான செயற்பாட்டில் ஈடுபடுத்துவதில் வைத்தியசாலை நிர்வாகம் விரைந்துசெயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. https://www.virakesari.lk/article/184910
-
Published By: VISHNU 19 APR, 2024 | 08:36 PM அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும். குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483