Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சு வீரமங்கை ஜோன் ஒப் ஆர்க் இன் 581-வது நினைவு தினம் இன்றாகும்! உலகத்தமிழர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய வரலாற்றுப் பதிவு!! - ம.செந்தமிழ்.

Featured Replies

y-St-Joan-of-Arc.jpgvideo123.gifபிரான்சின் 19வயது வீரமங்கையான ஜோன் ஒப் ஆர்க் இன் சிலிர்பூட்டும் வீரவரலாறு இன்று எல்லாமே முடிந்து விட்டதக நினைத்து மூலையில் இடிந்துபோய் இருப்பவர்களும் பழைய சுதந்திர வாழ்வை மறந்துவிட்டு கிடைத்துள்ள இனத்தை கருவறுக்கும் இன்றைய சிங்களத்தின் சதிகார வாழ்வை ஏற்று வாழத்தலைப்பட்டுள்ளவர்களும் அறியவேண்டிய விடையமாகும்.

யார் இந்த ஜோன் ஒப் ஆர்க்?

உலக சரித்திரத்தில் அழியாத இடம்பெற்ற ‘ஜோன் ஒப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப்பற்றி வல்லாதிக்க சக்திகளின் பக்கத்துணையுடன் சிங்களத்தால் அழிக்கப்பட்டுள்ள நாங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

அது 15ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து பிரான்சின் பல பகுதிகளை கைப்பற்றியது. பிரான்சு மன்னனான ஏழாவது சார்லசு அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பிரான்சு தேசத்தில் ‘தோம்ரிமி’ என்ற சிறிய கிராமத்தில் உளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் ஜோன். இவள் தனது தாய்நாடான பிரான்சு இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கடப்பதைப் பற்றி தன் தந்தையின் மூலம் அறிந்திருந்தால். எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குத் தோள்றியது.

நாளடைவில் இந்த விருப்பம் தீவிரமானது. ‘தாய் நாட்டைக் காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என்ற பொருளில் காட்சிகளும் குரல்களும் அடிக்கடி தனக்குள்ளே தோன்றுவதாக சொல்லத் தொடங்கினால் ஜோன். அது மட்டுமில்லை இந்த உயரிய குறிக்கோளுக்காகவே இறைவன் தன்னைப் படைத்திருப்பதாகவும் அவள் நம்பத்தொடங்கினால்.

இதைத்தன் தாய் தந்தையரிடமும் கிராமத்துப் பெரியவர்களிடமும் அவள் சொன்ன போது அவர்கள் நம்ப மறுத்தனர். ‘இது வெறும் கற்பனை!’ என்றவர்கள் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு வாழும் வழியைப் பார்க்குமாறு அவளுக்கு அறிவுரை கூறினார்கள். (இதைத்தானே தற்போதும் எம்மவர்கள் செய்து வருகின்றனர்.)

தோம்ரிமி பகுதியில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்து வீடுகளை நாசம் செய்து சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருந்த வேளையில் 16வயது மங்கையாக இருந்த ஜோன் இறைவனிடம் தமது கிராமத்தையும் மக்களையும் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தால்.

திடீரென அங்கு வந்த படைகள் கொள்ளையர்களுடன் போரிட்டு மக்களை காப்பாற்றியது. இந்த அதிசயம் தனது வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட இறைவனால்தான் நடைபெற்றதாக நம்பிய ஜோனின் மனதில் இறைநம்பிக்கை ஆழமாக பதிந்தது.

இந்தக் காலப்பகுதியில் பிரான்சு அரசுரிமைக்கான உள்நாட்டுச் சண்டை ஏற்பட்டது. ஆட்சியை கைப்பற்ற முயன்றவர்கள் பிரான்சை ஆக்கிரமிக்க முயற்சித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தார்கள்.

உள்நாட்டுக் கலவரம் கட்டுமீறிப் போய்கொண்டிருந்த நிலையில் மன்னன் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றான். இந்த வேளையில் ஜோன் ஒப் ஆர்க்கின் மனதில் தாய்நாட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு தயக்கம். முறையாக எவ்வித போர்பயிற்சியும் கற்றிராத நிலையில் என்னசெய்வது என்பதுதான் அந்தத் தயக்கம். தான் நம்பும் கடவுளிடம் ஆசிபெற்று அந்த நம்பிக்கையுடன் மன்னனைப் பார்க்கச் சென்றால்.

மன்னனை பார்ப்பதற்கு முன்னர் படைத்தளபதி ரோபேட்டை சந்தித்து தாய்நாட்டை காப்பாற்ற என்னுடைய பங்களிப்பை அளிக்க தயாராக வந்துள்ளதாக மன்னனிடம் தெரிவிக்கும்படி கூறினால்.ஜோனின் வயதையும் தோற்றத்தையும் அதுவும் ஒரு பெண்ணாக இருப்பதை பாரத்து நகையாடி வீட்டிற்கு செல்லுமாறு விரட்டிவிட்டான்.

இது கற்பனை அல்ல கடவுளின் ஆணை! என்று உறுதியாக நின்ற அவளை மெதுவாக நம்பத்தொடங்கினர் சிலர். அவர்களது உதவியுடன் மீண்டும் தளபதியைச் சந்தித்து தன்னிலையினை வலுவான வாதங்களுடன் முன்வைத்தால். கடைசியில் தளபதி பணிந்து மன்னரை பார்க்க அழைத்துச் சென்றார். பிரான்சு மன்னன் ஏழாவது சார்லசை சினான் எனும் நகரத்தில் சந்தித்தாள் ஜோன். தான் இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து பிரான்சை மீட்க வந்திருப்பதாக மன்னனிடம் பணிவுடன் தெரிவித்தாள். மேலும் தென் பிரான்சில் இருந்த ‘ஆர்லேன்சு’ என்ற முக்கிய நகரை மீட்க பிரெஞ்சுப் படையை தனது தலைமையில் அனப்புமாறு வேண்டினாள்.

அப்போது ஆர்லேன்ன்சு நகரத்தை ஆங்கிலேயர்கள் உள்நாட்டு படைகளின் ஆதவுடன் முற்றுகையிட்டு அதனை கைப்பற்றும் நிலையில் இருந்தார்கள் பெரும் தயக்கத்திற்குப் பின்னர் அவளது கோரிக்கையினை மன்னன் ஏற்றான். ஜோனிற்கு வேண்டிய உதவிகளைக் கொடுத்து பிரெஞ்சுப் படைக்கு தலைமை தாங்கவும் ஆதரவுதந்தார்.

போர்க்கவசம் அணிந்து ஒரு கையில் உருவிய கத்தி மறு கையில் அல்லிப் பூக்கள் வரையப்பட்ட வெண் கொடியுடன் குதிரையின் மீது அமர்ந்து ஐந்தாயிரம் பிரெஞ்சுப் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். இது நடந்தது 1429ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். அப்போது அவளது வயது 18. இளம் பெண் ஒருவளது தலைமையில் ஆர்லேன்சு நகரை நெருங்கிய பிரெஞ்சுப் படையைப் பார்த்து முதலில் சிரித்தனர் ஆங்கிலேயப் படையினர்.

ஆனால் சுதந்திர வேட்கை மிகுந்த ஜோனின் உணர்ச்சியூட்டும் தலைமையின் கீழ் வீரப் போர் புரிந்த பிரெஞ்சுப் படையினரின் தாக்குதலில் நகரின் கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழத் தொடங்கின. மிக முக்கியமான கடைசிக் கோட்டையைக் கைப்பற்றும் போரில் காயம் அடைந்து மருத்துவ சிகிச்சைக்காக ஜோன் போரிலிருந்து விலக நேர்ந்தது. இதைக்கண்டு மனம் தளர்ந்த பிரெஞ்சு வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

பிரெஞ்சு வீரர்கள் மனம் தளர்வதை விரும்பாத ஜோன் காயத்தையும் பொருட்படுத்தாது மீண்டும் போரில் குதித்தாள். கடும் போருக்குப் பின்னர் கடைசி கோட்டையையம் வென்று ஆர்லேன்சு நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச்செயலைப் பார்த்து ‘இவள் சாதாரண மானிடப் பெண் இல்லை தெய்வீக சக்தி மிக்கவள்’ என்று பிரான்சு மட்டுமல்ல எதிரி நாடான இங்கிலாந்தும் நம்பத் தொடங்கியது.

‘ஆர்லேன்சை மீட்ட நங்கை’ என்று சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றாள் ஜோன். ஜோனின் வாழ்ககை இத்துடன் முடியவில்லை. மேலம் பல போர்க்களில் கலந்து கொண்டு பிரான்சு தேசத்திற்கு வெற்றி மேல் வெற்றியைத் தேடிக்கொடுத்தாள். அவளது வீரம் ஆங்கிலேயர்களை பிரான்சின் வடக்கு மூலைக்கே விரட்டி அடித்தது. பிரான்சின் மன்னனாக ஏழாவது சார்லச முடிசூட்டிக் கொண்டதுடன் அதன் மாட்சிமை நிலைநாட்டப்பட்டது.

ஆனால் விரைவிலேயே வஞ்சகத்தால் பிடிபட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டாள் ஜோன். (எங்கும் காட்டிக்கொடுக்கும் கயவர்கள் இருக்கத்ததான் செய்கிறார்கள்) சூனியக்காரி என்று குற்றம்சாட்டி ஆங்கிலேயர்கள் அவளுக்கு மரண தண்டனை விதித்தனர்.

30-05-1431 அன்று இதே நாளில் உரின் நடுவே கழுமரத்தில் கட்டப்பட்டு சுற்றிலம் மரக் கட்டைகளை அடுக்கி தீ வைத்து எரிக்கப்பட்டாள் வீர மங்கை ஜோன். படைபட்டாளங்களோடு அதீத பலத்தோடு வந்துநின்ற ஆங்கிலேயப் படையினை எதிர்கொள்ளும் திராணியற்று மூலையில் முடங்கிக் கிடந்த பிரான்சு மன்னன் ஏழாம் சார்லசு செய்ய வேண்டியதை தனி ஒருத்தியாக அதுவும் போர்ப்பயிற்சி எதுவும் அதுவரை முறையாகக் கற்றுக்கொள்ளாத 19வயது மங்கை ஜோன் சாதித்து பிரான்சை மீட்டெடுத்து வரலாறு படைத்திருந்த போதும் அவளை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து மீட்க சார்லசு எவ்வித முயற்சியும் எடுக்கமல் இருந்ததுதான் சோகம்.

இவ்வாறு அசாதாரண வீரத்துடன் வாழ்ந்து இறுதியில் பெரும் துணிச்சலுடன் மரணத்தைத் தழுவிய அவள் இந்தப் பூமியில் வாழ்ந்தது மொத்தம் 19 ஆண்டுகளே(1412-1431).

இந்தியாவிற்கு ஒரு ஜான்சிராணி போல பிரான்சிற்கு ஓர் ஜோன்(ஒப் ஆர்க்). தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எத்தனை வீரத்தமிழச்சிகள் களமாடி எதிர்நின்ற சிங்களப்படைகளை கொன்று குவித்து தயாத்தை காத்துநின்றார்கள்.

முதலாவது பெண் மாவீரரான மாலதி அக்கா முதல் பெண் கரும்புலியாக சரித்திரம் படைத்த அங்கையற்கன்னி அக்கா ஆனந்தபுரத்தில் உலக வல்லரசுகள் சுற்றிவளைத்து நிற்க தீரத்துடன் எதிர்ச்சமராடி வீரச்சாவடைந்த மாலதி படையணித் தளபதி கேணல் விதுசா சோதியா படையணித் தளபதி கேணல் துர்க்கா உள்ளிட்ட எத்தனையோ தமிழ்ப் பெண்களை வீரத்திற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

ஆனால் அதுவல்ல தற்போது முக்கியம். தோல்வியின் பிடியில் நின்ற பிரான்சு தேசத்தை ஒரு 18வயது பெண்ணின் நம்பிக்கையும் தாய்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற விடுதலை உணர்வும் அரப்பணிப்பும் வெற்றிபெற வைத்துள்ளதைத்தான் நாம் இங்கே பார்க்க வேண்டும்.

பிரான்சு நாட்டின் மன்னரிற்கும் தளபதிக்கும் படைகளிற்கும் நம்பிக்கையளித்து போரில் தலைமைதாங்கி ஆக்கிரமித்து நின்ற ஆங்கிலேயப் படைகளை புறமுதுகிட்டு ஓடச்செய்த இந்த வீரமங்கையின் தன்னலம் பாராத நாட்டுப்பற்று எம்மில் எத்தனை பேரிற்கு உண்டு…?

நாங்கள் இனி நாட்டிற்கு திரும்பிப் போகமாட்டோம் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் ஒருபக்கம் என்றால் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்றால் தாமும் ஒதுங்கிக் கொண்டு தமது பிள்ளைகளையும் தடுத்து நிறுத்துபவர்கள் மறுபக்கமுமாக எமது தாயகவிடுதலைக்கு பெரும் இடையூறாக விளங்கி வருகின்றார்கள் எமது புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் சொந்தங்கள்.

தாய்நாடு அன்நியப்படைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றதே என வேதனையில் துடித்த ஜோன் எங்கே இப்ப இங்கே ஒரு பிரச்சினையும் இல்லை(?) எல்லாம் கிடைக்குது(!) இதைவிட வேற என்ன வேண்டும் என்று வியாக்கியானம் பேசும் தாயகத்து சொந்தங்கள் எங்கே.

தாய்மண்ணை எதிரியானவன் ஆக்கிரமித்து நிற்க சிங்களவர்களும் இசுலாமியர்களும் எங்கள் நிலத்தை கூறுபோட்டு பறித்தெடுக்க தமிழர்களின் தொழில்வளம் சிங்களவர்களாலும் இசுலாமியர்களாலும் பலப்பிரயோகத்தின் பின்னணியில் கபளீகரம் செய்யப்பட்டு நிற்க இளையவர்கள் நாகரிக வளையத்திற்குள் வல்வளைப்புச் செய்யப்பட்டு எமது கலாச்சார பண்பாட்டு அடிச்சுவட்டையே அசைத்து நிற்க பிரான்சு தேசத்தின் விடுதலையினை சாத்தியமாக்கிய இந்த ஜோனை ஒத்த எமது இளம் பெண்கள் வழிமுறைதவறி தூக்குக்கயிற்றுக்கும் பாழும் கிணற்றிற்கும் நெருப்பிற்கும் தமது தவறை மறைக்க பலியாவதும் இன்னும் ஏராளம்.. ஏராளம்.. இவைதானா உங்களது ஒன்றுமில்லை?

சொல்லுங்கள் தாயகத்து சொந்தங்களே சொல்லுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளை போரிற்கு அனுப்ப வேண்டாம். எமது இனத்தின் கடந்தகால வரலாற்றை புகட்டுங்கள். உலகிற்கே நாகரீகத்தை கற்றுக் கொடுத்த எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லுங்கள். போராளியாக இல்லாவிட்டாலம் நல்ல தமிழ் மகனாகவோ மகளாகவோ அவர்களை உருவாக்குங்கள்.

நாளைய தேசத்தை ஆளப்போகும் அவர்களை இலக்குவைத்து எதிரிகளும் துரோகிகளும் விரித்துள்ள வஞ்சக வலையில் இருந்து எமது இளம் சந்ததியை கட்டிக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றோர்களாகிய உங்களிடம்தான் உள்ளது. எல்லாம் கிடைப்பது போன்று இன்று தோன்றலாம். ஆனால் அய்யோ எல்லாம் போய்விட்டதே என்று நீங்கள் தலையிலும் மார்பிலும் அடித்து அழும்போது எல்லாமே எமது கைமீறிப் போயிருக்கும்.

அந்த நிலை வராமல் இருக்க நாம் எல்லோரும் இந்த வீரமங்கை ஜோன் ஒப் ஆர்க் எரியூட்டி கொல்லப்பட்ட இன்றைய நினைவுநாளில் உறுதி ஏற்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

http://www.youtube.com/watch?v=Hrhmmx0BsqE&feature=player_embedded

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ்(30-05-2012)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.