Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுதி 3- தேசிய - சாதிய- இனவெறிகள்!!!

Featured Replies

சுயநிர்ணய உரிமை
முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு  சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது  தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது.  முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப் பிரிந்து போகும் உரிமை ஒன்றைத் தான் குறிக்கினது.‘‘ (பக் 306 லெனின்-நூல் திரட்டு 1) இங்குகுறிப்பாக முதலாளி வர்க்கத்தின் சந்தையை உறுதி செய்வது அடங்கி இருக்கின்றது.
ஒடுக்கும் வர்க்கம் தமது சந்தையை பாதுகாக்கும் பொருட்டு மற்றைய இனத்தின் மீது நிர்ப்பந்தம் புரிக்கின்றது.நிர்ப்பந்தத்தின் விழைவு ஒரு இனத்தின் பிரதிநிதி என்பதால் பாட்டாளி வர்க்கமே ஒடுக்குதலுக்கு உள்ளாகுவதனால்அவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமாகின்றது. ஆனால் இந்த சுயநிர்ணயப் போராட்டத்திற்குதேசிய முதலாளிகளே முன்னுக்கு நிற்கின்றனர். இந்நிலை துரதிஷ்டமானது மாறாக பாட்டாளி வர்க்கத்தின்தலைமையிலேயே சுயநிர்ணய போராட்டம் நிகழ வேண்டும். சுயநிர்ணயத்தை பின்வருமாறு ஸ்ராலின்வரையறுக்கின்றார்.  ‘‘சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் தான் விரும்பக் கூடிய வகையில் தன்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பதாகும். தன்னாட்சி  அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அதற்கு உரிமையுண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டரசுக் கோட்பாடு அடிப்படையில் உறவு வைத்துக்கொள்வதற்கும் அதற்கு உரிமையுண்டு. பின் அக்கூட்டரசிலிருந்து முழுமையாக பிரிந்து செல்வதற்கும் அதற்கு உரிமைஉண்டு. தேசங்கள், இறைமைத் தன்மை கொண்டவை, தேசங்கள் அனைத்தும் சமமானவை ஆகும்.‘‘  (ப.32 மா.தே. .பி.ஸ்ராலின்) குறிப்பிட்ட பிரச்சினையை எடுத்துக் கொண்டால் எது தேச மக்கள் பிரிந்து போகக் கூடாது என்றபொருள்படாது. அதேவேளை ஒருநாட்டிளுன் இருந்து பிரிகிறதா? அல்லது சேர்ந்திருப்பதா என சுயமாக தீர்மானிப்பதாகும்.
 
பொதுவுடமைவாதிகளுக்கு இனம், மதம், மொழி, சாதி,  இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு மாறாக அல்லாமல், பாட்டாளிகளின் ஒற்றுமையை முதன்மையாகக் கொண்டும், வர்க்கப் புரட்சியை நிபந்தனையாகக் கொண்டேசுயநிர்ணயப் பேராட்டம் இடம்பெறவேண்டும்.  ஆனால் ஏகாதிபத்தியத்தில் எழுகின்ற தேசங்களின் போராட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் தேசத்தின் விடுதலை அவசியமானது.  பாட்டாளி மக்களின்ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்ற நிலமைகளில், எவ்வாறான போராட்ட யுக்தியை பொதுவுடமைக்கட்சி வகுக்க வேண்டும் என்பதில், முதலாளித்துவ தேசிய வாதிகளுக்கும், பொதுவுடமைவாதிகளுக்கும் இடையில்மாறுபாடான யுக்திகள் அடங்கியிருக்கின்றது. தமிழ் தேசத்தினதும், தேசிய இனங்களின் சுயநிர்ணயப் போராட்டமே ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தேசிய இனம் கடந்து ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
 ‘‘சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது,  ஒரு கோட்பாடு என்ற முறையில் கூட்டாட்சியை ஏற்றுக் கொள்வதற்குச்சமமல்ல, ஒருவர் அக்கோட்பாட்டை உறுதியாக எதிர்ப்பவராகவும், ஜனநாயக மையப்பாட்டை ஆதரிப்பவராகவும்இருக்கலாம், ஆயினும் முழுமையான ஜனநாயக மையப்பாட்டை அடைவதற்குரிய ஒரே வழி என்ற முறைpயல்தேசங்களின்  ஏற்றத் தாழ்வுகளைவிடக் கூட்டாட்சி நல்லதென்று விரும்பலாம். இதே கண்ணோட்டத்துடன் தான்மையவாதியான மார்க்ஸ்,  ஆங்கிலேயர்கள் அயர்லாந்தை வன்முறையில் அடிமைப்படுத்தி  வைத்திருப்பதை விடஅயர்லாந்தும் இங்கிலாந்தும் சேர்ந்த ஒரு கூட்டாட்சி மேலானது என்று கருதினார். (பக் 307 நூல் தொகுப்பு 1 - லெனின்)ஒவ்வொரு நாட்டின் உடைய இணைவுவானது சுதந்திராமாக இணைந்து கொள்வதில் நிர்ணயம் பெறுகின்றது. அதாவதுஉதிர்ந்த நிலையில் இருக்கின்ற போது ஒவ்வொரு தனநபர்கள், இனங்கள் இணைந்து கொள்ளும் போதே சுயநிர்ணயம்என்பது பொருள் உள்ளதாகவும், விருப்பு வெறுப்பைக் கவனத்தில் கொண்டு முரண்பட்ட சக்திகள் ஒன்றிணைந்ததாககொள்ள முடியும், அதுவே உண்மையான சுதந்திரம் அடங்கியுள்ளது.
ஏகாதிபத்தியத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே உயர்ந்த ஜனநாயக விழுமியம் பற்றி லெனின் தேசிய இனம் பற்றிய உரிமைக்கு ஈடாக உதாரணமாகக் கொண்டார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது விவாகரத்துப் போன்றது என்ற உள்ளடக்கம் என்பது உதிரியான மனிதர்கள் உடன்படுவது இல்லாவிடின் சுதந்திரமாக விலகும் உரிமை. இது தனித்துவவாத பொருளாதார சிந்தனை வடிவம், உரிமை பெற்றபின்னரே சாத்தியமான விடயமாக இருக்கின்றது. ஆனால் விவாகரத்து என்பது குறைவிருத்தி கொண்ட நாடுகளில் பெரும் எண்ணிக்கை விகிதத்தில் இல்லாத நிலையை அறிந்து கொள்ள முடியும். மணவிலக்கு என்பது பொருளாதார ரீதியாக தனித்துவமான மனிதர்களை உருவாக்க முடிகின்ற நிலை முதலாளித்துவ- ஏகாதிபத்தியக் கட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தனித்துவாத மனித உறவுகளை முன்கூட்டியே கணித்த பெரும் அறிவியல் மூலவர்களைச் சாரும். நாடுகள் பிரிந்த பின்னர் அவைகள் இணைந்து கொள்ளவும் முடியும். ‘‘பிரிவினைக்குப் பிறகுஒரு வேளை கூட்டாட்சி ஏற்படலாம்‘‘ (பக். 313 மார்க்ஸ் நூல் தொகுதி 1 - லெனின்) இவைகள் சுதந்திரமாகநடைபெறவேண்டும். உண்மைச் சுதந்திரம் என்பது இதில் தான் அடங்கி இருக்கின்றது.  ஒரு தேசிய இனம் என்றால்கட்டாயம் பிரிந்து போகவேண்டும் என்றில்லை. எல்லா வகையான தேசியப் பிரிவினைகளையும் நிபந்தனையுடனேஅல்லது நிபந்தனை இன்றியே ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. உதாரணமாக தமிழ் மக்களுக்கு என்று உலகில்எந்தவொரு நாடுகளும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் உலகில் நாடு இல்லைஎன்பதற்காக, ஒரு நாடு உருவாக்கப்படவேண்டும் என்பது அகவுணர்வு சார்ந்தாகும்.
1917 ஏப்ரல் 24 ம் தேதி போல்ஷ்விக் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தோழர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய நூலின்தேர்ந்தபகுதிகள் கீழே  ....
தேசிய இனங்களை ஒடுக்கும் கொள்கை எதேச்சதிகாரம், முடியாட்சி ஆகியவற்றின் கொள்கையாகும்.நிலச்சுவாந்தர்களும்,முதலாளிகளும், சிறு முதலாளிகளும் தங்களுடைய தனித்த வர்க்க உரிமைகளைப் பாதுகாக்கவும், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே பிளவு ஏற்படுத்துவதற்காகவும் இந்தக்கொள்கையை ஆதரிக்கிறார்கள். பலவீனமான தேசங்களை அடிமைப் படுத்த முயற்சி செய்யும் நவீனகாலஏகாதிபத்தியம் தேசிய ஒடுக்குமுறையை முன்னைக் காட்டிலும் அதிகமாக தீவிரப்படுத்தும்.”
முதலாளித்துவ சமூகத்தில் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கும் முறையை ஒழிப்பதென்பது ஓரளவுக்குத்தான்சாத்தியமாகும் அதுவுங்கூட பரிபூரண ஜனநாயகக் குடியரசுமுறையும் சகல தேசிய இனங்களுக்கும் மொழிகளுக்கும்பரிபூரண சமத்துவத்தை உத்தரவாதம் அளிக்கும் அரசாங்க அமைப்பும், எந்த அளவிற்கு ஏற்படுகிறதோ அந்த அளவிற்குசாத்தியம்
ரஸ்சியாவின் பகுதிகளாக இருக்கும் எல்லா தேசிய இனங்களுக்கும் சுயேட்சையான அரசாங்கங்களை அமைத்துக்கொள்வதற்கும், பிரிந்து போவதற்கும் உரிமை உண்டு என்பதை ஏற்க வேண்டும். இந்த உரிமையை மறுப்பது என்றால்,பிற தேசங்களை ஆக்கிரமிப்பது என்ற கொள்கையை கடைப்பிடிப்பதற்கு சமம். பிரிந்து போகும் உரிமையை.பாட்டாளிவர்க்கம், ஒப்புக்கொண்டு ஏற்க வேண்டும். இது ஒன்றுதான் தொழிலாளர்களிடையே பரிபூரண ஒற்றுமைநிலவுவதற்கும், உண்மையான ஜனநாயக பாதையில் தேசிய இனங்களை மிகவும் நெருங்கச் செய்யும்
மேலிருந்து மேற்பார்வை வேலை பார்ப்பதை ஒழிக்க வேண்டும். கட்டாய அரசாங்க மொழி என்று ஒருகுறிப்பிட்டமொழி திணிக்கப்பட்டிருப்பதையும் ஒழிக்க வேண்டும். அந்தந்த இடங்களில் வாழும் மக்களாலேயே சுயஆட்சிப் பிரதேசங்களுடைய எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.”
தேசிய கலாச்சார சுயாட்சி (அதாவது தேசிய பண்பாட்டு தன்னாட்சி ) என்னும் தன்னாட்சிக் கொள்கையை பாட்டாளி வர்க்கக் கட்சி அழுத்தந் திருத்தமாக மறுக்கிறது. தேசிய பண்பாட்டுத்தன்னாட்சி என்பது ஒரே இடத்தில் வாழ்கின்றதொழிலாளரை, ஒரே தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளரைக்கூட அவரவர்களுடைய வெவ்வேறானதேசிய பண்பாட்டின்படி பிரித்து பிளவுபடுத்துகின்றது.”
குறிப்பிட்ட தேசிய இனங்கள் மட்டும் அனுபவித்து வரும் தனி உரிமைகளை ரத்து செய்தும், தேசியசிறுபான்மையோரின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் தரச்செய்தும், அடிப்படையான அரசியல் சட்டதிட்டம்கொண்டுவரப்பட வேண்டும். சகல தேசிய இனங்களைச் சார்ந்த சகல தொழிலாளர்களுக்கும் பொதுவானபாட்டாளிவர்க்க அமைப்பு இருக்க வேண்டும். சர்வதேச மூலதனத்தை எதிர்த்தும் முதலாளித்துவ தேசியத்தைஎதிர்த்தும், வெற்றிகரமான போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்த, இந்த பொதுவான அமைப்பே உதவிசெய்யமுடியும். பாட்டாளி வர்க்கம் இந்தப் போராட்டத்தை நடத்துவது என்பதையே சாத்திய மாக்கும்.” ---(நூல்-ஸ்டாலின் ).
தேசத்தினை உரிமையை பிரித்தும், இரட்டைச் தேசியம் என்றும், உள்ளக – வெளியக சுயநிர்ணயம் என்று பகுதியாக்கிப் பார்த்த நிலையை கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது.  பேரலையின் (சுனாமி) பின்னரான காலத்தில் நிதிக்கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. நிவாரணத்தை  யார் கையாள்வது என்ற பிரச்சனையில்  எழுந்ததாகும். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தம்மால் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையில் எழுந்ததாகும். இங்கு தேசத்தின் வளர்ச்சியை கூறுபோட்டுப் பார்க்க முடியாது. சுயநிர்ணயம் என்பது அனைத்து அம்சங்களையும் தீர்மானிப்பதாக அமைவதாகும். இவ்வாறே சட்டத்தின் ஊடாக பொது உரிமையை உறுதிப்படுத்தும் சலுகை அல்ல தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும்.
இங்கு சுயநிர்ணயத்திற்கு பதிலாக முன்னிறுத்தப்படும் பொது (equal) உரிமையை உறுதிப்படுத்தல் என்ற கோசம்தேசத்தினை ஏற்றுக் கொள்வதில் இருந்து அமைந்து விடுவதில்லை.
 
 
தமிழ் வலதுசாரியத்தின் போக்கு
முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தலைமையேற்றுள்ள தரகு வர்க்கம் என்பது  அதளபாதாளத்திற்கு தமிழ் தேசத்தின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தினை கொண்டு செல்கின்றது. இதில்  இடதுசாரி சந்தர்ப்பவாதிகளும், பேரினவாதிகளும், தமிழ் தரகு அணியும் ஒன்று சேரும் இடம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து நிற்பதாகும்.  தரகு வர்க்கத்தை தேசியமாக வரையறுப்பதோ அல்லது தரகு வர்க்கத்தை பொருத்தி விமர்சிப்பதே வரையறைப் பொருத்தமற்றதாகும். தமிழ் தேசத்தின் போராட்டத்தின் முனைப்பை தடுப்பதற்காகவும், சிதைப்பதற்காகவும் தமிழ் தரகு அணியின் தவறுகளை தமிழ் தேசிய சக்திகளின் தவறான முடிச்சுவிடப்படுகின்றது. இவற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை என்பது ஒத்தோடிகளிடம்  இருந்தும் வருகின்றது.
இதில் தமிழ் தரப்பின் போக்கை அறிவுதும் அவசியமாகின்றது. இவர்களின் போக்கு எவ்வாறு தடைக்கல்லாக இருக்கின்ற என்பதும் தமிழ் தரகு வர்க்கத்தின் போக்கு அடிப்படையில் ஏகாதிபத்திய விசுவாசம் கொண்டிருப்பதும் தற்செயலானது அல்ல. இந்த நிலையில் திரு சம்பந்தர் வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  திரு சம்பந்தனின் பேச்சை வலதுசாரிசிந்தனை கொண்டவர்கள் வெவ்வேறாக வியாக்கியானம் செய்கின்றார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் உரிமையைதீர்மானிப்பதற்கும், சமூக ஓட்டத்தினை பற்றி விளங்கிக் கொள்ளாத பிதட்டல்களை எல்லாம் சாணக்கியமாக நம்பும்அப்பாவித் தனம் என்பது மக்கள் கூட்டத்திற்கு பலன் கொடுக்க முடியாது. எனவே சம்பந்தர்  தமிழீழம் பற்றிப்பேசவில்லை என்று அங்கலாய்ப்பதாக தட்டடையாக விளங்கிக் கொள்வதும், விளக்கம் கொடுப்பது அபர்த்தமானபார்வையாகும்.  இன்றைய உலகத் அரசியல் நகர்வுக்கேற்ப செயற்படும் வலதுசாரி அணியாகிய மகிந்த- மைத்திரி-ரணில், சந்திரிக்கா, சுமந்திரன், சம்பந்தர் போன்ற ஆளும் வர்க்க அணி என்பது செயற்படுகின்றது.  இது தரகு வர்க்கத்தின் அணிச் சேர்க்கையாகும். இதன் காரணமாக வெளிவரும் அரசியல் என்பது மக்கள் விரோதமே.வலதுசாரியச் சிந்தனை கொண்டவர்கள் சேற்றுக்குள் முத்து எடுக்க முற்படுவது அவர்கள் சிந்தனைக்கு சரியாகஇருக்கும். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசியம் என்பது அதன் வேரை என்றைக்கும் இழக்காது தொடரும். அவ்வாறுதொடர்கின்ற போது எவ்வித சாத்தியமான தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை
இன்றைய அரசியல் போக்கு என்பது மகிந்த- மைத்திரி- ரணில் - சுமந்திரன்- சம்பந்தன் என்ற (தரகு) ஆளும் வர்க்கக்கூட்டுன் செய்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரைநிலமானியத்தில் சிந்தனைவாதிகளே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அணியில் பெரும்பான்மையாக அங்கம் வகிப்பதும், குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத் தன்மை கொண்ட போக்கை கொண்டவர்களாக இல்லை என்பதே வெளிப்பாடாகின்றது. இவர்களின் சிந்தனை, அரசியல் போக்கை வைத்து தேசியத்தினை அளவிட முடியாது.
 
 
 
இணக்க அரசியல்
 
இணக்கம் பேசும் கயமை அரசியல் என்பது அடிமையாக வைத்திருப்பதற்கான பூட்டு. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை மயில் இறகால் தடவிடும் அரசியலாகும். இணக்க அரசியல் என்பதை இந்த சமூக அமைப்பையும் சுரண்டல் சமூக அமைப்பையும் பாதுகாக்கும் அரசியலாககத் தான் வரையறுக்க முடியும். இன்றைய அரசியல் போக்கும் அதன் இயல்பு என்பதை உள்வாங்கிக் கொள்வதான அரசியல் நிலை என்பது ஆளும் வர்க்க நலனுக்கானது. ஒடுக்கப்படும் மக்களின் நலனில் மேல் அமைந்த சிந்தனை அல்ல. மென்சக்தி (தரகு) என்பது ஒரு பூட்டு - (protectionism) என்பது அடிமையாக வைத்திருக்கும் பூட்டுத் தான். இது பேரினவாதத்தின் ஒரு அங்கம் தான். தமிழ் சமூகத்தின் பிரதிநிதியென்று முழுத் தமிழ் மக்களின் தலைமை அல்லர்.  தரகு ஆளும் வர்க்கத்தின் ஒரு அங்கம், குறிப்பான நிதிமூலதன தாசர்களின் ஏவலாளர்கள். அவர்கள் ஒடுக்கப்படும் மக்களின் தலைமையாக இருக்க முடியாது. இவர்கள் போலித் தேசியம் பேசுபவர்கள் இவர்கள் விதேசிகள். சுதேசிய சிந்தனை என்பது மக்களின் இறைமையை விட்டுக் கொடுக்காமை. இங்கு இறைமையை தாரைவார்க்க தயாராக உள்ளவர்களே. இங்கு பந்தாடப்படுவது ஒடுக்கப்படும் மக்களாகும். இணக்க அரசியல் ஊடாக பேரினவாதத்துடன் கூடி விளையாடும் விளையாட்டுக்கள்  முரண்பாட்டை, மோதலை மூடி மெழுகுவதாகும். இணக்க அரசியலை வைத்து முழுச் சமூகத்தை ஒடுக்குவற்காக  அதிகாரம் வேண்டி நிற்பதாகும்.
பொதுப்புத்தி என்பது  கயிற்றை விட்டு நூலைப்பிடிக்கும் அரசியல் போக்குத் தான் ஆளும் வர்க்கங்களை எதிர்ப்பதாக கருதுபவர்கள், தேசியத்திற்காய் உழைப்பதாக கூறுகின்றவர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் பிரதான போக்கை விட்டு உப போக்கை முன்னிலைப்படுத்துகின்றார்கள். 
சர்வம் தழுவிய புரட்சி என்பது போல சமூகத்தின் போக்கானது உடனடியாக மாறக் கூடியது என்பது போல கருத்திடுவதுஅகநிலைப் போக்கிற்கு அப்பால் முன்னேற முடியாது.
தமிழ் தேசத்தின் உரிமையை கொண்டொழிக்கும் சதிகள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
சிங்கள பௌத்த சிந்தனை என்பது அது ஆழ ஊடுவியிருக்கும் ஒடுக்குமுறை சிந்தனை வடிவம். 
சிங்கள பௌத்த பேரிவாதத் சிந்தனை என்பதற்கு தமிழர்கள் தான் காரணம் என்பது அபர்த்தம்.
பேரினவாதத்தினையும், பேரினவாதிகளைக் காட்டியே மற்றவர்களை அடங்கிப் போ என்று உபதேசிக்கும் போக்கும்மறைமுக பேரிவாத ஆதரவாகவும்,  இது இணக்க அரசியலுக்கு வித்திடுகின்றது.
 
 
1920களில் பிரித்தானியாவின் ஆணைக்குழுவில் தமிழர்களுக்கான அந்தஸ்துப் பற்றிப் பேசிய பொன். அருணாசலத்தின்கோரிக்கை என்பது உயிர்ப்புப் பெற்று புதிய தலைமைக்கு 1949 இல் கைமாறியது.  சாணக்கியம் என்பது வழிகாட்டும்சிந்தனையில் இருந்து தான் முடிவு பெறுகின்றது. ஒரு தேசிய இனத்தின்  போராட்ட வடிவம்  காலத்துக்கு ஏற்பவும்புதிப்பிக்கப்படவேண்டும். 1920களிலும் பின்னர் 1948 ஆட்சி கைமாறிய பின்னரான அரசியலை அன்றைய அரசியல்தலைமைகளின் அரசியல் முதிர்சிக்கமைய (தரகு வர்க்கத்தின்) கோரிக்கைகள் வைத்துக் கொண்டு தேசிய அரசு என்றபோலித் தனத்தின் கீழ் உரிமையைக் கேட்கப்பட்டது.
 
பின்னர் 1977 க்குப் பின்னர் தேர்தல் பாதையை, சமரசவாதத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.   நாம்விரும்பி ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட வில்லை.  சமூக அமைப்பின் வரலாற்று ஓட்டமே எம்மை ஆயுதப் போராட்டத்திற்கு அழைத்தது.  ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது ஏதோ ஒரு காலத்தில் முன்னோக்கிச் செல்லமுடியுமேயன்றி பின்னோக்கிச் செல்ல முடியாது. போராட்டங்களில் தடைகள் ஏற்படுவது இயல்பு.  முள்ளிவாய்க்கால்ஏன் ஏற்பட்டது என்று சுயஆய்விற்கு உள்ளாக்கிச் செல்கின்ற போதுதான் அடுத்த கட்டத்திற்கான போராட்டம் என்பதுவெற்றி கொள்ள முடியும்.  
 
 
வரலாறு என்பது முன்னோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கின்றது. வரலாறு முன்னோக்கி நகர்ந்து செல்லதைஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வியாக்கியானம் செய்ய முடியும்.
ஒரு பொருளாதார அமைப்பு என்பது மாறிச் செல்கின்ற போது அதற்கு போதிய கட்டமைப்புக் கொண்ட ஜனநாயகவளர்ச்சி இல்லை என்றால் அதன் எல்லைகளை மீறித்தான் முன்னோக்கிச் செல்கின்றது. இந்த மாற்றம் சமாதானமுறையில் அல்லது பலாத்காரத்தின் ஊடாக நடைபெறலாம். ஆனால் அங்கு முரண்பாடுகள் இல்லாத காரணத்தினால்அல்ல. பழையதற்கும் புதியதற்கும் இடையோன முரண்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும்.
நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முன்னோக்கிச் சென்று முதலாளித்துவம் கட்டத்தை அடைகின்ற போது அதற்கானஜனநாயக உரிமைகள், உட்கட்டுமானம், நிறுவனமயமாதல் என்பது மாற்றத்திற்கு உள்ளாகித் தான் வந்திருக்கின்றது.மாற்றத்திற்கு உள்ளாகித் தான் இருக்கும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையானது தமிழ் இனவாதிகளாலோ அல்லது ஆயுதக் குழுக்களின் தான்உருவாக்கியதன்று. தேசிய இனப்பிரச்சனை என்பது தனியே இலங்கைக்கு மாத்திரம் பிரத்தியோகமானதல்ல.
முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ் மக்களை இணக்கிப் போங்கள்,   அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒருகலையாகும். மாறாக சாத்தியமில்லாதவைகளுக்காக காலத்தை விரையம் செய்கின்ற அரசியலியலாளர்களைகொண்டுள்ள இனமானது அழிவைத்தான் சந்திக்கும் என
பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் மீது அல்லது சிங்கள மக்கள் மீது கூற முடியுமா?
அது சரி தமிழ் மக்கள் அல்லது ஒடுக்கப்படும் மற்றைய தேசிய இனம் எந்த வகையில் தீண்டத்தகாதாரனவர்கள்ஆகின்றார்கள்? ஒடுக்கப்படுபவர்கள் மாத்திரம் மேலாதிக்கத்திற்கு ஒடுங்கிப் போக வேண்டும்.
 
 இந்த நிலையில் தமிழ் தேசம் சேர்ந்திருப்பதா தனியாக செல்வதா என தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. இங்கு சுயநிர்ணயம் என்பதே சேர்ந்திருப்பதான தனித்திருப்பதா என்று முடிவெடுக்கும் உரிமையாகும். இங்கு சுயநிர்ணயம் என்றால் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்யும் அபர்த்த அரசியலின் வெளிபாடாகும்.
இதே காலத்தில் கொலனித்துவத்தின் விழைவாக மாத்திரம் அல்ல.  முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு செல்கின்றபோது மொழியின் தன்னாட்சி, பொருளாதாரத்தில் தன்னாட்சி, நிலத்தின் மீதான தன்னாட்சி, கலாச்சாரப் பண்பாட்டுதன்னாட்சி என்று தேசிய இனங்கள் பண்பைக் கொண்டதாக வளர்கின்றது.  இந்த வளர்ச்சிப் போக்கை அடைகின்ற போதுகோரிக்கைகள் முரண்பாடாக வெளிப்படுகின்றது.
 
தேசிய இனங்களின், தேசங்களின் உரிமை என்பதை விளக்கிக் கொள்ள வேண்டும்.
தேசம் - தேசிய உரிமை என்பதை துடக்காகப் பார்ப்பது மாத்திரம் அல்ல அதனை வர்க்கப் போராட்டத்தின்அங்கமாகபார்க்காத பார்வை என்பது தொடர்வது மாற்றப்பட வேண்டும். வர்க்கப் போராட்டமாக கணிக்காத நிலை தான் தேசங்களாகவும், அதிகாரப் பகிர்வே தீர்வு என்றும், சோசலிசத்தில் தீர்வு என்றும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு முன்மொழியப்படுகின்றது.
 
பௌத்த சிங்கள தேசியப் பெருமிதத்தின் மீது கட்டப்பட்ட சிந்தனை என்பது குறுகிய காலத்தில் அல்லது நீண்டகாலத்தில் எவ்வித தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. பௌத்த சிங்கள சிந்தனை வடிவம் என்பதும், தீர்வு என்பதுபௌத்த சிங்கள சிந்தனைக்கு உட்பட்டது. இதற்கு அப்பால் ஒன்றுடமில்லை. ஆனால் உரிமையை வென்றெடுக்கவேண்டும் என்றால் தரகு வர்க்கத்தை கடந்து தான் செல்லவேண்டியிருக்கின்றது. இதுதான் யதார்த்தம் மற்றவை அர்த்தமற்ற வெற்றுக் கூச்சலாகும்.
தமிழ் மக்களின் பிரதான எதிரிகளாக சந்தைக்காய் இரத்தக்காடாக்கும் நிதி மூலதனத்தின் ஏவல்களும், அதன் உள்நாட்டுஏவல்களும் ஆகும்.  உள்நாட்டு ஏவல்கள் என்பது மகிந்த (சமரசம் செய்யப்பட்ட) மைத்திரி- ரணில்- சம்பந்தர்- சுமந்திரன் அணியாகும். எனவே தரகு அணிக்கும் தேசியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தரகு அணியை தேசியவாதிகளாக இட்டுக் கட்டுவதும் வரலாற்றுத் திரிபாகும்.
தேசிய இனங்களின் ஒடுக்குமுறையை தகர்க்காத ஜனநாயகப் போராட்டங்கள் எவையும் பாட்டாளி வர்க்கப்புரட்சிக்கான சாத்தியமில்லை. அவ்வாறு சாத்தியம் இருப்பதாக கருதுவதென்பது கற்பனாவாத- அகவுணர்வு பார்வைகொண்ட (குட்டிமுதலாளிய) மேட்டுக்குடிவாதமாகும்.
 
 
நிறுவனக்கட்டமைப்பை எதிர்ப்பது
 
வரலாற்று ஓட்டத்தை மையப்படுத்தியதாகவும் அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கை கணிக்காத ஆய்வுகள்,சிந்தனைகள், வெளிப்பாடுகள் தீர்வுகள் என்பது வரலாற்றில் எவ்வித புரட்சிகர பாத்திரத்தை கொடுக்கப்போவதில்லை. வரலாற்றை பின்னோக்கி குறிப்பிட்ட காலத்திற்கு நகர்த்த முடியும். ஆனால் அது எப்பொழுதும் சாத்தியம் இல்லை.வரலாற்று அனுபவம் என்பது முழுமையான உண்மையாக இருப்பதில்லை. தனிமனிதர்களின் அனுபவம் என்பது அனுபவவாதமாகும் இது வரலாற்று உண்மையல்ல.  
தேசிய இனங்களின் ஐக்கியம் நல்லாட்சி என்று வெளியே பிரகடனப்படுத்திக் கொண்டு தேசிய இனங்களின் சுயவளர்ச்சியை தடுக்கின்றது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிறுவனக் (institutions) கட்டமைப்புக்களைஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கும். இது ஏகாதிபத்திய காலகட்டத்தில் நிதிநிறுவனங்களின் நிபந்தனையாகும். இதுநவதாராளவாதப் பொருளாதாரத்திற்கு ஏற்ப செயற்டுவதாகும்.   இங்கு என்ன நடைபெறுகின்றது என்றால் தமிழர்கள்மாகாணசபை என்ற கட்டமைப்பை கூட இறுக்கமாக கட்டமைக்கக் கூடாது என்று சிங்கள பௌத்த பேரினவாதம்எண்ணுகின்றது. இதில் போலி இடதுசாரிகளும் வலது பேரினவாதிகளும் கையோர்க்கும் இடமாகும். சமூக வளர்ச்சிப் போக்கில்  தமிழர் தேசம் தன்னை அடையாளப்படுத்தி சில பிரேரனைகளை மாகாண சபை கொண்டுவந்துள்ளது.  இது நீண்ட கால நோக்கில் ஆபத்தானதாகும். 
இதனை சிங்கள பௌத்த பேரிவாதக் கட்டமைப்பு சரியான சிந்தித்து செயற்படுகின்றது.
 ஒரு தடவை மூர்ப்படைந்தும் மறுதடவை தற்காலிகமாக மறைக்கப்பட்டும் வளர்ந்து வந்த இப்பிரச்சினை பல்வேறுஉறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், இனவாதம் பரவுவதற்கும் இனக் கலவரங்களின் மூலமாகவும் ஆகிய செயற்பாடுகள்காரணமாக 1980 தசாப்தங்களில் பிரிவினைவாத போராட்டம் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. 2009ஆம்ஆண்டு
மே மாதம் பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்தபோதிலும் அதற்கு பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் தேசியஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், தேசியப் பிரச்சினையைத்
தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பிரிவினைவாதம் இன்னுமொரு வடிவத்தில் தலைதூக்கும்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அந்த ஆபத்தின்முகட்டிலேயே நிற்கின்றனர்.

மக்களை தேசிய இன அடிப்படையில் படிப்படியாக பிரித்துதுண்டாடுகின்ற அதன் மூலமாக வர்க்கத்தை பிரிக்கும்திசையை நோக்கி நகர்ந்துள்ள ஆபத்தான நிலையை தோல்வியுறச்செய்து
தேசிய ஒறறுமையை கட்டியெழுப்பும் திசையை நோக்கி, தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்பஅணுகுமுறையை எடுக்கும் திசையில், தேசியப் பிரச்சினைத் தொடர்பான ஒரு கருத்தாடலை ஆரம்பிப்பதுஅத்தியாவசியமாயிருக்கிறது. “ (ஜேவிபி -தேசியப் பிரச்சினை தீர்ப்பதற்கான அணுகுமுறை)

*பிரஜைகளுக்கான உரிமை ( நிறுவனமயப்பட்ட உரிமை)
*நிவிநெகும
*கிராம பஞ்சாயத்து

என்ற மூன்று போக்குக்களை அறிய முடிகின்றது. இந்த சிந்தனை உருவாகுவதற்கான மூலத்தினை கண்டடையவேண்டும்.  சிங்கள தேசம் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் என்பது தமிழ் தேசத்தில் உள்ளது போல அவ்வளவுபலவீனமானதல்ல. தமிழ் தேசத்தில் இருக்கின்ற சைவ- தமிழ்- வேளாளம் என்பது தேசியத்திற்கான வேர் இல்லை. அதுபல அகமுரண்பாடுகளை உருவாக்கத் ஊடே பலவீனப்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றது. தமிழ் தேசத்தினைபலவீனப்படுத்த வேண்டிய எதிர்க்கருத்தியல் வேலைகள் பல்வேறு முனைகளில் முன்னிறுத்தப்படுகின்றது. 
இதன் வெளிப்பாடாக தலித்தியம்- அடையாள அரசியல் - என தன்னார்வக் குழுக்களின் ஊடாகவும் அதனைபிரபல்யங்களின் ஊடாகவும் ஊக்குவிக்கப்படுகின்றது. தன்னார்வத் தொண்டு ஊழியர்களின் செயற்பாடுகளை இட்டுதமிழ் தேசம் விளிப்பாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. 
தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்ட வளர்ச்சி என்பது வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கிலும் அது சர்வதேசரீதியிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக இருப்பதே அதன் முற்போக்குப் பாத்திரமாகும். இந்தப் போக்கிற்குஎதிராக குறுந்தேசியத்தின் (தரகு வர்க்கத்தின் வங்குரோத்துத்து தனத்தின் ) தேர்தல் நலன் என்பது தமிழ் தேசத்தின்உரிமைக்கான போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் புலிகளின் பின்னரான அரசியல் வெளியில் முற்போக்குப்பாதையை நோக்கிப் செல்லத்தக்க அமைப்பு இல்லை என்பது தமிழ் தேசத்திற்கான பின்னடைவாகும்.
 
பேரினவாதத்தின் இந்த கடைந்தெடுத்த பிற்போக்கு நிலையான கருத்துருவாக்கம் என்பது ஒரு தேசத்தின் அழிவின்மேல் மாளிகை கட்ட யற்சிக்கும் மேட்டுக்குடி அரசியல் தான். இந்த வகை அரசியல் வெளிப்பாடுகள் என்பதுபெருந்தேசிய மையவாதச் சிந்தனையை தொடர்வதாகும் 
பிரஜைகளுக்கான உரிமை - நிவிநெகும- கிராம பஞ்சாயத்து என்ற மூன்று வடிவங்களும் மகிந்த சிந்தனையில்வெளிப்பாடே இவர்கள் நிறுவனமயப்பட்ட உரிமையை கொடுக்கும்  என்பது கூட லங்கா என்ற கட்டமைப்புக்கள் பஞ்சாயத்து மாதிரியான வடிவஅமைப்பிற்கு அப்பால் செல்ல முடியாது.  இது போலி இடதுசாரியம் முன்னிறுத்தும் உலகம் அழியும் காலத்தின் போது உங்களுக்கு சுயாட்சி வழங்கப்படும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
 
 
சமூக மாற்றமும் தேசிய உரிமையும்
இன்றைய உலகத்தில் மதம் சாதி இனம் என்றும் வர்க்கமாகவும் பிளவு பட்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தினை இணைத்துஒரு சுரண்டல் அற்ற சமூகத்தை நோக்கிய பயணத்தில் தடையாக இருப்பது மனிதர்களிடையே இந்தப் பொருளாதாரஅமைப்பு ஏற்படுத்தியுள்ள பிளவுகள். இந்தப் பிளவுகளை இல்லாது ஒழிப்பது நம்முன்னே இருக்கும் பெரும்கடமையாகும். குறிப்பாக இனங்களுக்கிடையேயுள்ள அவநம்பிக்கை அச்சம் பகைமை குரோதம் போன்றவற்றைஇல்லாது போக்குவது ஒன்று இரண்டு நாட்களில் நடைபெற்று விட முடியாது. இவற்றைப் போக்குவதற்கு தற்சமயம்புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைக்கான ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டும். இத்தீர்வின் மூலம் அவர்கள்படும் அல்லலுக்கு ஒரு தீர்வு. அந்த மக்களின் இருப்பிற்கு உத்தரவாதம் தேடியே 60 வருடங்களாக போராடிக் கொண்டுவருகின்றார்கள். போராட்டப்பாதையில் வெவ்வேறு வர்க்கத்தை பிரதிபலித்த சக்திகள் போராட்டத்தைதலைமையேற்று நடத்தியிருக்கின்றன. இந்தச் சக்திகளின் வர்க்க நிலைகாரணமாக தலைமைப் பாத்திரத்தைவலுக்கட்டாயமாக தம்மகத்தே கைப்பற்றியதும் அவர்கள் பின்னர் சர்வதேச சதிவலையில் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டநிலையில் தமிழ் மக்களிடையே அரசியல் வெற்றிடம் இருக்கின்றது. அந்த மக்கள் கடும் கண்காணிப்புக்குள்ளும்கடுமையான உளத்தாக்கத்தினுள்ளும் உண்பதற்கு மாத்திரமே வாயைத் திறக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டுஇருக்கின்றார்கள். குறிப்பாக முன்னாள் போராளிகள் கடும் கண்காணிப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  இந்தமக்களுக்கான தேவையை பெரும்பான்மை இனம் எவ்வாறு கையாளப்போகின்றது? அதிலும் குறிப்பாக மார்க்சீயர்கள்எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பது முக்கிய விடயமாகும். தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதை பாட்டாளி வர்க்க நலனை அடைவதற்கான ஒரு கருவியாக (Instrumental) பயன்படுத்தப்படுகின்றது. சுயநிர்ணயத்தை கருவியாக பயன்படுத்துவது என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலனில் பால் அமைந்திட வேண்டும்.
தென்னிலங்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சனை பற்றிய பிரச்சனையில் வெளிப்படையான கருத்துக்கள்பற்றாக்குறையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் எவ்வாறு வலதுதேசியவாதம்தன் கையில் எடுத்துக் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ளாமை தற்கால நிலமைகளையொட்டிய பிரச்சனைக்குதீர்வும் அடுத்த நிலைக்கு நகரும் படியான அரசியல் திட்டம் 40 வருட கால இடைவெளியில் 3 பெரும் அழிவுகளைச்சந்தித்தும் எது விடைகிடைக்காது வீரம் வீணாகியது. எந்த இடத்தில் தொடங்கப்பட்டதோ அதே இடத்தில் எவ்விதமுடிவும் அற்று வந்திருக்கின்றோம். இந்த அவலநிலையில் தேசிய இனங்களுக்கு இடையேயான மனக்கசப்பைஇல்லாதாக்குவது இன்று எம்முன்னுள்ள முக்கிய கடமையாகும். மார்க்சீயம் என்பது தத்துவம் அதில் இருந்து எமதுதேசத்திற்கான பொருந்தக் கூடிய கோட்பாட்டை உருவாக்க வேண்டும். அதேபோல மார்க்சீயம் என்பது ஒவ்வொருநாளும் சமூக நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் ஆகும். இன்றையப் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரு சமதர்மமுதாயத்திற்கான புரட்சிதான். நாம் கடக்க வேண்டிய பாதை வெகுதூரத்தில் இருக்கின்றது. ஒரு நோயாளிக்குஅறுவைச் சிகிச்சைதான் செய்யவேண்டுமென்பது வைத்திய ஆலோசனை அல்லது முடிவு. அறுவைச் சிகிச்சைசெய்யும் வரையும் வேறு மருந்துவகை கொடுத்து நோயாளியின் வலிக்கு ஆறுதல் கொடுப்பது தவறாகுமா? அதேபோலதான் முதலாளித்துவக் கட்டத்தினை அடைவதற்கு அதன் வரலாற்றுக் கடமையை முடித்துக் கொள்வதற்கும் அடுத்தநிலையை அடைவதற்குமான வழி இதுவாகும். இன்று பிரச்சனைகளை பொத்தாம் பொதுவாக அடக்கிக் கொள்கின்றநிலை உள்ளது.
இது பேரினவாத அரசும் சரி,  ஏகாதிபத்தியங்களும் சரி தேிசய இனப்பிரச்சினைகளை திசைதிருப்புவது, அல்லது தேசிய இனமுரண்பாட்டை அதிகப்படுத்துவது, அல்லது பயங்கரவாதம் என்ற போர்வையில் போராட்டத்தை திசைதிருப்புவது, நசுக்குவது என்ற நிலையில் செயப்படும் நிலைக்கு ஒத்ததாகும். ஆனால் தேசிய இனத்துவ மோதல் என்பது தேசியஇனங்களுக்கிடையில் பகை ஊட்டப்பட்டுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் உணர்ச்சி அதிகம்கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்கு தூபமிட்ட வர்க்கச் சக்திகள் பகையை தணிக்க எந்த முயற்சியும் எடுக்காது.அரசியல் சதிராட்டம் தொடர்வதால் பொதுவான பிரச்சனை பின்தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது. இதனால் தான்இனங்களின் தேசிய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு இலங்கைக்கான புதிய ஜனநாயகப் போராட்டம் என்பதுகட்டியெழுப்பப் படவேண்டும். ஆனால் இங்கு ஐக்கிய இலங்கைக்கான புரட்சி என்பது சாத்தியமில்லாத நிலையில் தொடர்ச்சியான உழைக்கும் வர்க்கம் பிரிக்கப்பட்டடே வருகின்றது. இந்த நிலையில் தமிழ் தேசத்தின் விடுதலை என்பது முக்கிய நிபந்தனையாக இருக்கின்ற வேளையில் அகமுரண்பாடுகளை களைவதாயிக் தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது  புதிய சனநாயகத் திட்டத்தில் அமைந்ததாக அமைகின்ற போது தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது உயர்ந்த ஜனநாயக தேசிய வடிவம் கொண்டதாக அமையும்.
 
“எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாகஒருபோதும் அழிக்கப்படவில்லை,  புதிய உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதாரநிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளைஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்கமுடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பேஇடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையேதோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும். மார்க்ஸ்”
நாம் கடக்கவேண்டிய  பாதையில் முதலாளித்துவ கட்டத்தை அடைந்த பின்னர் தான் சோசலிசத்தை அடையமுடியும்.இங்கு பழைய உற்பத்தி முறைக்கும் அது உருவாக்கிக் கொண்ட போலியுணர்விற்கும் புதிய பொருளாதாரகட்டமைப்பிற்குமான சிந்தனை மாற்றத்திற்கான போராட்டம் என்பது வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தேதொடர வேண்டும். எவ்வாறு புதிய பொருளாதார கட்டமைபில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமோ அதே போலபுதிய சமூகத்தின் கட்டுமாணங்களில் பழைய நிறுவனங்களில் உள்ள அனைத்தையும் மாற்றத்திற்கு கொண்டுவரவேண்டும். புரட்சியின் பின்னரான சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியில் பழைய உற்பத்தி முறையில்ஏற்பட்ட சிந்தனை கூறுகளுக்கு முடிவுகட்டும் நோக்குடன் நடைபெற்ற வர்க்கப் போரின் தொடர்ச்சிதான். அதில் உள்ளசாதகமான பாதகமான வெற்றி தோல்விகளை நாம் கற்க வேண்டியுள்ளோம். எவ்வாறு லெனின் சோவியத் புரட்சியின்பின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகர கடமையை நிறைவேற்றும் படி கட்சிக்கு அறைகூவல் விடுத்தார். கலாச்சாரப்புரட்சியிலும் பழைய உற்பத்தி உறவில் இருந்து பிற்போக்கு தனங்களையும் சோசலிசப் புரட்சியின் பின்னரும்வர்க்கங்கள் இருக்கும் என்பதினால் ஏற்பட்ட வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக பார்க்கத் தவறுகின்றதைதிட்டத்தில் அவதானிக்க முடிகின்றது.
சோசலிசத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் விடைபெறகிடைக்கும் என்ற நிலைப்பாடானது இன்றைய உலகில் உனக்கு கிடைக்காததை இட்டு கவலை கொள்ளாதே விண்ணுலக இராட்சியத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்து முதல்வாதத்திற்கு ஒப்பாகும். புரட்சிக்கான வேலைத்திட்டமானது அனைத்து இனங்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். தேசிய இனங்களின் (national questions )சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பதன் மூலமே ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
 
தமிழ் "மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்களஅரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்களசக்திகள், தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளமுடியும்" (தோழர் சண்)  இதனை ஒடுக்கும் தேசத்தில் உள்ள பாட்டாளிவர்க்கமும், முன்னணிச் சக்திகளும் ஏற்று சிங்கள மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும்.
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத வேலைத் திட்டமான இன்றைய நாடாளுமன்ற பாதையை அலங்கரித்துக்கொள்ளும் சிதைந்த கட்சிகளின் வேலைத் திட்டங்களுக்கு அப்பால் முன்னேறவில்லை என்பதை சுட்டி நிற்கும். புதியஜனநாயகப்புரட்சியை சீரளித்த தேர்தல் பாதையின் மூலம் வெற்றி கொள்ள முடியாது. முன்னர் குறிப்பிட்டது போன்றுசோசலிசம் தான் தீர்வு. ஆம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அனைவருக்கும் உரிமை கொடுக்கப்படும் அது உண்மை.போகும் பாதை நெடுந்தூரம் உள்ளது அதனை கடப்பதற்கு நேச சக்திகளின் உதவிதேவை. ஆனால் சோசலிசத்தைஅடைவதற்கு நேச வர்க்கங்களின் தேசிய இனங்களின் முதலாளித்துவ ஐனநாயக உரிமையை அங்கீகரிக்காதுஅவர்களை இணைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அங்கீகரிக்காத இடதுசாரி இயக்கங்களின் குறைபாடுதான்வலதுசாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். இதுதான் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆக புதிய ஐனநாயகப்புரட்சிக்கு அவசியமானது இனங்களின் நேச வர்க்கங்களின் முதலாளித்துவ ஐனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரித்துஅவர்களை இணைத்துக் கொள்வதாகும் சோசலிசம் கிடைந்த பின்னர் எல்லாம் கிடைக்கும் என்பதும் அதுமட்டும்பொறுக்க வேண்டும் என்ற வாதம் 1970களில் இருந்தது. அப்போது சிங்கள இடதுசாரித் தலைமை பிரிவினை வாதப்போராட்டமாகப் பார்த்தார்கள். ஆளும் வர்க்கத்துடன் நாடாளுமன்றப்பாதை போலி கம்யூனிஸ்டுக்களும்ஒடுக்குமுறையாளர்களின் ஆட்சியில் பங்கேற்றார்கள். சிறுபான்மை இனத்தின் மீதான யுத்தத்தை வெறும் காகிதத்தில்மறுத்துக் கொண்டு ஆட்சியில் பங்கேற்று யுத்தங்களுக்கு ஆதரவு அழித்தார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசத்தினதும்  சிறுபான்மை தேசிய இனங்கள் ஏற்றுக் கொள்ளும் படியான வேலைத் திட்டத்தை முன்வைத்தல்வேண்டும்.
தென்னிலங்கை சக்திகள் தேசியம் என்பதற்கு புனித முலாம் பூசுவதும், அதனை பிரிவினைவாதமாக பார்ப்பது என்பது ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தின் விழைவாகும்.  தேசம் என்பது பிரிந்து போவது என்பது அர்த்தமில்லை. பிரிந்துபோவதன் கூடிய சுயநிர்ணயம் என்பதும் தனிநாடு என்பதும் ஒன்றல்ல.  தென்னிலங்கை சக்திகளின் வேலைத்திட்டத்தை வாசிக்கின்ற போது முதலாளித்துவம் தேசத்தினை உருவாக்குகின்றது என்ற புரிதில் குழம்பிக் கொண்டிருப்பதையும் கண்டுகொள்ள முடியும்.
 
 
இறுதியாக
தமிழ் வலது சாரி, பிற்போக்கு தேசியவாதிகளின் இணக்க அரசியல், கனவான் அரசியல், அரசியல் நீக்கம் என்பற்றிற்கு எதிராக காத்திரமாக போராடுவதன் ஊடாகவே பாட்டாளி வர்க்கத்திற்கான புதியபாதையை திறந்து விட முடியும். தேசியப் போராட்டத்தினை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இடம்பெறுவதன் ஊடாக வலது தேசியத்தின் வேரை அறுக்க முடியும். தேசத்தின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ பொருளாதார நிறுவன அமைப்புச் சார்ந்ததாகவும் தேசிய இனங்களின் வளர்ச்சிப் போக்கை மறுத்துக் கொள்ளும் போக்கானது பிற்போக்குச் சக்திகளை முன்னோக்கி வளர்த்துவிடவே செய்யும் இதுதான்  கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு காட்டிநிற்கின்றது. எனவே சுயநிர்ணயம் என்பதை பிரிவினைவாதமாகவும், தேசத்தின் கோரிக்கைகளை இனவாதமாகக் கொள்வதும் தவறான சிந்தனைப் பார்வையின் வெளிப்படாகும். ஊனமுற்ற சமூக அமைப்பை மாற்றியமைப்பதற்கும், தமிழ் தேசத்தின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத்திட்டமே தீர்வாக இருக்கமுடியும்.
 
நன்றி வேலன் http://xn--velan-68n6cxa6nmc.blogspot.fr/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.