Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துமுதல்வாதமான மையவாதம் !

Featured Replies

முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூகச் சிந்தனை (இனக்குழும- நிலப்பிரபுத்துவ ) வாழ்வின் வெளிப்பாடுகள் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்திலும் தொடர்கின்றது. இங்கு அந்த சிந்தனை வடிவம் ( Subjective ) அகவுணர்சு சார்ந்த போலியுணர்வுக்குரியதாக இருக்கின்றது.
சமூகத்தின் சிந்தனை வடிவங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்ற புரிதல் என்பது அவசியமானதாகும். நாம் சமூகத்தின் முன் புத்திஜீவிகளாக பிரகடனப்படுத்துகின்ற போது அடிப்படையில் சமூகவிஞ்ஞானப் பார்வையில் சமூகத்தினை பார்க்க முயற்சிக்கின்றோமா என்ற கேள்வி அடிப்படையாக இருக்கின்றது.

இங்கு சிந்தனை வடிவம் என்பது தனிமனிதர்கள் தீர்மானித்துக் கொள்வதில்லை. அது வாழ்நிலையே அதனை தீர்மானிக்கின்றது. அதேபோல அகமுரண்பாடுகள் சமூகத்தினை தீர்மானிப்பதில்லை. மாறாக புறநிலை (objecitve) என்பது பொருளாதார உறவுடன் கூடித்தீர்மானிக்கின்றது. இது இன்றையப் பொழுதில் மக்கள் பெரும்திரளின் கூட்டு வடிவத்தில் இருந்து உருவாகின்றது. இது இனக்குழுமத்தில் இருந்தும் அது கடந்து நிலமானிய சிந்தனையில் இருந்தும் மாறுபட்டு முதலாளித்துவ சிந்தனையில் நுழைகின்றது.
இங்கு இனக்குழும- நிலமானிய சிந்தனை முறைகளின் எச்சங்கள் என்பது சமூகத்தின் தீங்கான பொதுவுண்மையாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -socially stigmatized) மனிதர்களை பிரிக்கின்றது, அடக்குகின்றது, வளர்ச்சியை தடுக்கின்றது. இவற்றை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ கட்டத்திற்கு தேசிய இயக்கங்கள் வளருகின்ற காலமாகும்.
”உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர;ச்சியும்தான்.” (லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)
இங்கு வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை வெட்டரிவாள், வேல்கம்புகொண்டு எதிர்க் கொண்ட வாழ்வியல் சிந்தனையான போட்டி பொறாமை, வஞ்சகம், பில்லி, சூனியம் என்று சுருக்கிக் கொள்ள முடியாது. 
நாம் எம்மை புத்திஜீவிகள் என்கின்ற போது நவீன காலத்திற்குரிய சிந்தனை வளர்ச்சியை உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்கேற்ப விடயங்களை விளங்கிக் கொள்ள புதிய சொற்கள், வரையறைகள் உருவாகிக் கொண்டே வருகின்றது.

யாழ்மையவாதத்திற்கு வாதம் (thesis) வைக்கின்ற போது அதற்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட வேண்டும். மாற்றாக பழைய உற்பத்தி உறவில் தொடர்ந்து வரும் சிந்தனை வடிவத்தை அப்படியே எவ்வித மறுவாதமும் செய்யாமல் ஒப்பிக்கின்ற போது சிந்தனை வடிவத்தினை வளர்க்க மறுக்கின்றது.
இங்கு பாகுபாடு சமூகத்தில் இல்லை என்று மறுப்பது என்பது ஒன்று பாகுபாடு ஏன் அவ்வாறு இருக்கின்றது, அதன் இயக்கப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்று ஆராய்வது வேறாகும்.

எனவே ஆண்டாண்டு காலமாக விளங்கப்படும் காரண காரியங்களுக்கு அப்பால் சமூக விஞ்ஞானப் பார்வையின் ஊடாக தெளிவுகளை முன்வைக்கப்பட வேண்டும்.
பழைய உற்பத்தி முறையில் தொடரும் சாதியம், பிரதேசவாதம், தீவிரமதவாதம் என்பன பழைய உற்பத்தி உறவை தொடர்ச்சியாக வைத்திருப்பதாக இருக்கின்றது.
இங்கு பொருளாதார அமைப்பின் மீது கட்டப்பட்ட சிந்தனை வடிவம் தீர்மானிக்கும் விடயங்களை வர்க்க விடுதலைக்கு எதிராக நிறுத்தப்படுவதாகும்.

அதாவது சாதியம், பிரதேசவாதம், தீவிர மதவாதம் என்பது மக்களை அடக்கியாள்கின்றது. இந்தச் சிந்தனையின் அணுகுமுறையைக் பின்பற்றி ஒடுக்கும் வர்க்கம் இவற்றை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டு வந்திருக்கின்றன. இவற்றின் மூலமாக மக்களை தமது கொடூர பிடியில் தொடர்ந்தும் வைத்திருந்தன> வைத்திருக்க முனைகின்றன. இவ்வாறான சிந்தனை என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளன. இவைகள் சாத்திரம்> சம்பிரதாயம்> சடங்குகள்> வழமைகள் (தேசவழமை) போன்ற போர்வைக்குள் மறைந்திருக்கின்றன. இவைகளே ஒடுக்குமுறைச் சக்திகள்.

இவ்வாறான கருத்துமுதல்வாதத்திற்கும், அகமுரண்பாட்டிற்கும் முன்னிலை கொடுத்து புனித முலாம் பூசுவது தான் தலித்தியம், இரட்டைத் தேசியம் என்ற கருத்துருவாக்கம். அடக்குமுறையையும், அகமுரண்பாட்டையும் உருவாக்கிக் கொள்ளும் இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -social stigmatized வசைகள், வடுச் சொற்கள்,) மனிதர்களை பிரிக்கின்ற சிந்தனை என்பது புதிய பொருளாதார அமைப்பு முறையை மாற்றியமைக்கின்ற போதே படிப்படியாக இல்லாதாக்க முடியும்.

இவைகளை வைத்தே வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை விளங்கிக் கொள்ளாது தமிழ் தேசத்தின் போராட்டத்தை வேளாளியமாக கொள்கின்றது. 
அகமுரண்பாட்டையும், கருத்துமுதல்வாத சிந்தனை வடிவத்தையும் பயன்படுத்துவது யார் என்றால் பேரினவாதம், அடையாள அரசியல் செய்பவர்கள், போலி இனவாத இடதுசாரிகள் ஆகும். 
அகநிலை சிந்தனை வடிவத்திற்கு மாற்றாக சமூக வளர்ச்சியை விளங்கிக் கொள்வது என்றால்..
இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார். 
இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையை மனித அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பினை பற்றிய போதிய முன்னறிவு அவசியமானதாகும். பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது. 
பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை வெளிக் கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுதாக விளக்கினார் என்கின்றார் லெனின். பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார். பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது. மூலதனம் இந்த பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார்.

தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது. மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய். உபரி பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சீயத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று லெனின் நிரூபித்தார்.

மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே வந்திருக்கின்றது. வர்க்கங்களை உள்ளடக்கியதே சாதியச் சிந்தனையும், அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்புமாகும்.
உற்பத்தி உறவு - உற்பத்தி சக்தி பற்றிய புரிதல் இல்லாவிடின் அடக்குமுறையாளர்கள் போராட்டங்களை சிதைத்துக் கொண்டே இருப்பார்கள்.

மேலதிகமாக வாசித்து அறியhttp://velanவேலன்.blogspot.no/2016/03/1_23.html

 
நன்றி ..வேலன் 
Velan இன் படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.