Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் முதலாவது பகுதி இது – GTN செய்தியை உறுதிப்படுத்துகிறார் கேபீ‐தமிழில்

Featured Replies

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் ஐலன்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் முதலாவது பகுதி இது – புவுN செய்தியை உறுதிப்படுத்துகிறார் கேபீ‐தமிழில் புவுN ‐

29 துரடல 10 01:49 யஅ (டீளுவு)

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சமூகங்களுக்கிடையேயான வேறுபாட்டை இல்லாதொழிப்பதில் மிக நேர்மையாகச் செயற்படுகிறார். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை மீளக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறார். போர் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பெரும்பான்மையான இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் புனர் வாழ்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் கூட ஆதரவளித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியற் தலைமைத்துவம் இல்லாமல் இவையெதுவும் சாத்தியமாகியிருக்காது.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னான இந்தப் புதிய சூழலை விளங்கிக் கொள்வதற்கும்இ அதன் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய சவாலை சந்திப்பதற்கும் தேவையான தந்திரோபாயத்தை வகுத்துக் கொள்ளவும் புலம்பெயர் தமிழ் சமூகம் முன்வர வேண்டும். கடந்த காலத்திலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்காமல் ஒவ்வொருவரும் மீள் கட்டமைப்பு வேலைகளில் பங்காற்ற வேண்டும். அதேபோன்று விடுதலைப் புலிகளுக்குப் பின்னான இக்கால கட்டப் பகுதியில் ஊடகங்களும் இணக்கப்பாட்டைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் காத்திரமான பங்கையாற்ற முன்வர வேண்டும். ஆக்கபூர்வமற்ற எந்த ஊடகங்களாலும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஊடகங்களினதும்இ ஊடகவியலாளர்களினதும் உரிமையை எவரும் தவறாகப் பயன்ப்டுத்தல் கூடாது. ஏவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் அபிவிருத்திஇ சமாதானத்தைக் கட்டமைத்தல்இ போரால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தல்இ முன்னாள் போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தல் போன்ற விடயங்கi கவனப்படுத்துதல் வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பணத்தைப் பெற்று புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு உதவவென நீங்கள் அண்மையில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை உருவாக்கியிருந்தீர்கள். அதற்குப் போதிய பலன் கிடைத்ததா? (இந்த தகவலை முதலில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது)

வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம் என்ற அமைப்பு புனர்வாழ்வுஇ புனர்நிர்மாணம் மற்றும் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய பிரதான அலுவலகம் இல: 10இ முதலாவது ஒழுங்கைஇ கதிரேசு வீதிஇ வைரவப்புளியங்குளம்இ வவுனியா என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. இந்நிறுவனம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. நாங்கள் மக்களுடைய நல்வாழ்வு குறித்தே அக்கறைப்படுகிறோம். துன்பப்படும் மக்களுடைய பிரச்சினைகளை அரசியலாக்காமல் அவற்றை மனிதாய அடிப்படையில் மட்டுமே நோக்குகிறோம். புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் மாதாந்தம் ஒ;வொரு டொலரை வழங்குமாறு கோருகிறோம். நிதி சேர்க்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக கொமர்ஷல் வங்கியின் வவுனியாக் கிளையில் வங்கிக் கணக்கையும் ஆரம்பித்திருக்கிறோம்.

நான்காவது ஈழப் போரின் திருப்பு முனை என்னவாக இருந்ததென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

அமெரிக்கா மீதான அல்ஹைதாவின் செப்ரம்பர் 11 தாக்குதல் எல்லாவற்றையுமே மாற்றி அமைத்து விட்டது. அது நடந்து 24 மணித்தியாலத்திற்குள் மேற்கைத்தேய அரசாங்கங்கள் தலைமை தாங்கிய சர்வதேச சமூகம் எல்லா ஆயுதக் குழுக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற் கொண்டன. இது எங்களுடைய நடவடிக்கைகளையும் பாதித்தது. இதைத்தவிர வேறும் பல காரணங்கள் இருக்கின்றன. எனினும் அல்ஹைதாவின் நடவடிக்கையே முக்கிய காரணமாக இருந்தது. இது மேற்கின் அணுகுமுறையை மாற்றியமைத்தது. உலகின் பல பாகங்களிலும் தனி நாட்டுக்காகப் போராடியவர்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். துரதிர்ஸ்டவசமாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அதன் முக்கிய தலைமைகள் இதனை உணர்ந்து கொண்டு தங்களுடைய தந்திரோபாயத்தில் தேவையான மாறடறங்கள் எதனையும் மேற் கொள்ளவில்லை. அந்நேரத்தில் தேவையான மாற்றங்களைச் செய்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய ஒரு உலக ஒழுங்கு எம்முன்னால் இருக்கிறது. அது ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை. எங்கள் முன்னால் உள்ள மிகப் பெரிய யதார்த்தம் அது.

கடந்த வருட மேயில் போர் முடிவடைந்த பிற்பாடு மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வுஇ புனரமைப்பு நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தி அடைந்துள்ளீர்களா?

நான் எதிர்பார்த்ததை விட நிலைமை நன்றாக இருக்கிறது. போர் முடிவடைந்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நாம் பாராட்ட வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உண்டு. வடக்கிற்கான எங்களுடைய அண்மைய விஜயத்தின் போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுத இருந்த பல நூற்றக்கணக்கான மாணவர்களுக்கு எம்மால் உதவக் கூடியதாக இருந்தது. அரசாங்கமும்இ புலம்பெயர் தமிழ் சமூகமும் ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக இணைவது சாத்தியமானதென யாரும் நம்பியிருக்கவில்லை. ஆனால் இன்று நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்காகப் பணி புரிகிறோம். ஏங்களுடைய கோரிக்கைகளுக்கான உதவிகள் தமிழ் மக்களிடமிருந்து கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இரண்டு பாடசாலை அதிபர்கள் தவணைப் பரீட்சை வினாத்தாள்களுக்குத் தேவையான பணத்தைப் பெற்றிருக்கிறார்கள். தற்போது போர் முடிவடைந்து விட்டது. நாங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அண்மையில் வவுனியா சுந்தரலிங்கம் தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தேநீருக்கும் பணிசுக்கும் 5 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியிருக்கிறோம்.

வன்னிப் போர் முனையில் இடம்பெற்ற பிரபாகரனின் மரணம் குறித்து நீங்கள் எப்போது முதன் முதலாக அறிந்தீர்கள்? அந்த நேரம் நீங்கள் எங்கிருந்தீர்கள்?

நான் கோலாலம்பூரில் இருந்தேன். பிரபாகரனின் மரணம் குறித்து நான் கேள்விப்பட்டது மே 19 ஆம் திகதி. நான் பிரபாகரனின் மிக நல்ல நண்பனாக இருந்தேன். அவர் இறந்ததை அறிந்து நான் துயரம் அடைந்தேன். நான் சொன்னதைக் கேட்டு அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டை எட்டியிருப்பாரானால் இறுதிப் போரைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அது காலங் கடந்து விட்டது. வன்னி கிழக்குப் பகுதியில் மே 10 ஆம் திகதி விடுதலைப் புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தனர். இராணுவத்தின் முன்னரங்க நிலைகளை உடைக்க முற்பட்டதில் 400 அனுபவம் வாய்ந்த புலி உறுப்பின்கள் கொல்லப்பட்டனர். இத் துன்பியலைத் தெடர்ந்து நான் அரசியற் பொறுப்பாளர் நடேசனுடன் கலந்துரையாடினேன். ஆனால் துரதிர்ஸ்டவசமாக மூன்றாந்தரப்பொன்றினூடாக இராணுவத்திற்கு ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி தாக்குதலை நிறுத்தலாமென அவர்கள் நம்பினார்கள். நாங்களும் பல்வேறுபட்ட நபர்களுடனும்இ ஐ.நா உட்பட்ட அமைப்புகளுடனும் பேசினோம். ஆனால் பிரபாகரன் முன்னரே மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அவை எதுவும் சாத்தியமாகவில்லை.

இலங்கையை விட்டு நீங்கள் எப்போது முதன் முதலாக வெளியேறினீர்கள்? எப்போது இலங்கைக்கு கடைசியாக வந்தீர்கள்?

1980இல் பிரபாவுடன் நான் இந்தியாவிற்குப் போனேன். வல்வெட்டித்துறையிலிருந்து படகு மூலம் அகதியாக இந்தியாவிற்குச் சென்றோம். அந்த நேரத்தில் பாக்கு நீரிணையைக் கடப்பதில் எந்தவித பிரச்சினைகளும் இருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் தான் 1970களில் பிரபாகரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெரும்பாலும் அது 1976 ஆக இருக்கலாம். அன்றிலிருந்து நானும் அவரும் இணைந்து பணியாற்றி வந்தோம். அந்நேரம் விடுதலைப் புலிகளும்இ ரெலோவும்தான் மிகப் பெரிய இயங்கங்களாக இருந்தன. யாழ்ப்பாணத்துத் தலைமைகளால் ஈழத்துக்கான போராட்டத்தை அவை நடத்தி வந்தன. நான் மகாஜனாக் கல்லூரியில் படித்தேன். பல்கலைக்கழகக் காலத்தில் எங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினோம். ஆனால் இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சி எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

புவுNனின் முன்னைய செய்தி

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐

புவுN ‐ 23 துரடல 10 12:45 யஅ (டீளுவு)

"என்னிடம் பெருமளவு பணம் உள்ளது. இது மக்களுக்கான பணம். இது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம்.

http://www.globaltamilnews.net

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.