Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தது தவறா? அல்லது அங்கு வளர்ந்தது தவறா?சிறைக்கைதிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

prison_srilanka.jpgவிடுதலையின்றி சிறையில் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வளர்ந்தது அல்லது வாழ்ந்ததுவா? என அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கேட்டுள்ளார்கள்.

தமது அவல நிலையையும், தமது குடும்பங்களின் துயரங்களையும் கருத்திற்கொண்டு, தம்மை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் செல்வதற்காகவாவது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சட்டத்தரணிகளிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக அவர்கள் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல வருடங்களாக அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களின் கீழ் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, உறவுகளை இழந்தும், பிரிந்தும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்களின் அன்பு கலந்த வேண்டுகோள்.

இன்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாங்கள் முற்றிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரச கட்டுப்பாடற்ற கஸ்ட பிரதேசங்களில் வாழ்ந்து வந்தவர்கள், வளர்ந்தவர்கள். அப்பகுதிகளில் நிலவிய போர்ச்சூழல்தான் எமது இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்பது யாவரும் அறிந்ததே. நாம் எதுவித இலாப நோக்கத்திற்காகவோ அல்லது தொழில் சார்ந்த விடயத்திற்காகவோ இன்று இந்த அவல நிலையினை அனுபவிக்கவில்லை. மாறாக நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சில கடப்பாடுகள் காணப்பட்டது. இதில் நாம் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த அனைவருக்கும் பொருத்தமானது. இருந்தும் ஏதோ ஒரு வகையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்று நாம் சிறையில் உள்ளோம். அந்த வகையில் நாம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தது தவறா? அல்லது அங்கு வளர்ந்தது தவறா? இந்தக் கேள்விகளுக்கு எமக்குப் பதில் தெரியவில்லை.

இதனால் எமது இளம் குடும்பங்கள் சமூக, பொருளாதார, காலசார பிரச்சினைகளுக்கு உட்பட்டு, நாளாந்தம் சீரழிவதோடு, இன்று எத்தனையோ குடும்பங்கள் பிரிந்து எமது பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். எமது அடிப்படைத் தேவைகள் மற்றும் வழக்கு விசாரணைக்கான செலவினங்களை மீதமிருக்கின்ற சொத்து சுகங்களை விற்று கூட, ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றார்கள்.

அத்தோடு எமக்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகள் பல தவணைகள் நீதிமன்றத்திற்கு சமூகம் தராமல், சர்வ சாதாரணமாக சாட்டுப் போக்குகளைக் காண்பித்து காலத்தை இழுத்தடிக்கின்றார்கள். அத்துடன், நீதிமன்றத்தின் சாதாரண விடுமுறைகள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளினாலும், வேறு சில காரணங்களாலும் வழக்குத் தவணைகள் நீண்ட காலத்திற்கு இழுபடுகின்றன. இந்த நிலைமைகளை எமது சார்பிலான சட்டத்தரணிகள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்களா, என்ற பெரும் கேள்வி எம் மனதில் எழுந்துள்ளது. இக்காரணிகளால் முற்றிலும் பாதிக்கப்படுவது எம்மைப்போன்று தடுப்புக்காவலில் இருப்பவர்களே.

ஆகவே கௌரவமிக்க சட்டத்தரணிகளே, ஏனைய சிவில் வழக்கு விசாரணைகளோடு எம்மை முற்று முழுதூக ஒப்பிட்டுப் பார்க்காமல், சற்று விலகி, எமது அவல நிலைமைகளையும், எமது குடும்பங்கள், பிள்ளைகள் படுகின்ற துயரங்களையும் கருத்திற்கொண்டு, எமது வழக்குத் தவணைகளுககுத் தவறாமல் சமூகமளித்து, எமக்கு எதிரான அநீதிகளைச் சுட்டிக்காட்டி, உங்கள் தொழில் தர்மத்தின் அடிப்படையில் எமது வழக்குகளைத் துரிதப்படுத்தி, குறைந்தது, நிபந்தனையுடனான பிணையையாவது பெற்றுத் தந்து, எமது எதிர்காலத்திற்கு ஒளியூட்டி, எம்மையும் ஏனைய சமூகத்தவர்களைப்போல இயல்பு வாழ்க்கை வாழ வழி சமைத்துத் தரும்படி மிகவும் பணிவுடனும், மரியாதையுடனும் வேண்டுகின்றோம் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/09/blog-post_2785.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.