Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

2011-01-18 18:21:24

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்புடன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இந்த மாதம் 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதி சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

வியாபாரத்துக்கான உங்கள் திறவுகோல்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த வர்த்தகக் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களுடன், இந்தோனேசிய, நேபாளிய நிறுவனங்கள் மற்றும் கொழும்பு நிறுவனங்களும் பங்கேற்கவிருப்பதாக, இன்று செவ்வாய்க்கிழமை (18.1.2011) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் மன்றம், வரையறுக்கப்பட்ட இலங்கைக் கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் தனியார் நிறுவனமும் இணைந்து ஒழுங்க செய்துள்ள இந்தக் கண்காட்சி, துறைசார் நிபுணர்களின் வழிகாட்டல்களோடு நடைபெறவுள்ளதாக கண்காட்சி மற்றும் மாநாடுகள் சேவைகள் நிறுவனப் பணிப்பாளர் இம்ரன் ஹசன் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நலிவடைந்திருக்கும் கைத்தொழில் துறையை மேம்படுத்தி மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும் எனும் பிரதான நோக்குடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, 300 கண்காட்சிப் பீடங்கள் அமைக்கப்பட்டு, அதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணிக் கைத்தொழில் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும், இயந்திர சாதன உற்பத்தி சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்பது குடாநட்டு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனக் குறிப்பிட்ட அவர்,

விவசாயம், உணவு பதனிடல் மற்றும் பொதியிடல், கட்டுமானத்துறை, மீன்பிடித்துறை தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, அழகுக்கலை போன்ற முக்கிய துறைகளில் நவீன இயந்திர சாதனங்களையும், சேவைகளையும் இந்திய மற்றும் மலேசிய நிறுவனங்களின் உதவியுடன் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறினார்

இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தேசிய மற்றும் பல்தேசிய கைத்தொழில் நிறுவனங்களும் தமது உற்பத்தி பொருள்கள் மற்றும் இயந்திர சாதனங்களை இதன்போது காட்சிப்படுத்தவுள்ளதுடன், இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான முழுமையான விளக்கங்களையும் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைவரும் இந்தக் கண்காட்சியை பார்வையிடுவதனூடாக எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழில் முயற்சியாளராகி வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக அமையும் என்று யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள்

மூன்று தினங்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சிக்குச் சமாந்தரமாக யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் தொழில் மற்றும் நிதி வழிகாட்டல் கருத்தரங்குகள் நடைபெறவிருப்பதாக யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி யோகராஜசிங்கம் தெரிவித்தார்.

புதிதாக தொழில் ஒன்றைத் தொடங்க உத்தேசிப்பவர்களுக்கும், தற்போது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் பல்வேறு தொழில் வழிகாட்டல்களுடன், நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான வங்கி வழிகாட்டல்களும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தச்சுத்தொழில், மேசன் தொழில், வெல்டிங், பெயின்ரிங், வயறிங் உள்ளிட்ட கட்டட நிர்மானப் பணிகளில் ஈடுபடும் 60 பேருக்கு மூன்று தினங்களும் பயிற்சிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாரிய கூடாரம்

இந்த வர்த்தகக் கண்காட்சியை நடத்துவதற்கென சுப்பிரமணியம் பூங்காவுக்கு அருகிலுள்ள யாழ் மாநகரசபை வளாகத்தில் பாரிய கூடாரமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே கண்காட்சி ஒன்றுக்காக இவ்வாறான ஒரு கூடாரம் அமைக்கப்படுவது இதுவே முதல்தடவை என்று இம்ரான் ஹசன் கூறினார்

/newjaffna.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.