புதிய பதிவுகள்2

கங்கனாவை அறைந்த பெண் பொலிஸ் அதிகாரி: விமான நிலையத்தில் பரபரப்பு

3 months 2 weeks ago
அப்படி ஒரு காயமும் இல்லை முகத்தில் பட்டி டிங்கரிங் செய்த பெயின்ற் எல்லாம் அடிச்சவரின் விரலில அப்பிப்போட்டுது.

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
ஒவ்வொருவருடைய எழுத்துக்கள் அவர் அவரது செயல்களை, செயலற்ற தன்மையை காட்டி விடும். எனவே உங்களின் இடத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சின்ன அனுபவ குறிப்புடன் முடிக்கிறேன். சாதாரண மக்களை தொடர்ந்து துன்புறுத்த முடியாது கூடாது என்பதற்காகவே நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. +அவை ஆரம்பித்து வைக்கப்பட்டபோது நானும் அங்கே இருந்தேன்.) இதனை சொல்வதன் ஊடாக அவர்களது இன்றைய போக்கை ஆதரித்து எழுதினேன் என்று அர்த்தம் இல்லை. நன்றி.

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை. புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள். பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான் வந்தவை. இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன. ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உங்களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

3 months 2 weeks ago
27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 ஈழப்பிரியன், வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 71 புள்ளிகள் 2)கிருபன் - 71 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 4)பிரபா - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள் 7)நுணாவிலான் - 51 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 41 புள்ளிகள் 11)சுவி - 39 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 35 கேள்விகளுக்கு (81 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
இங்கே தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுய அமைதி வாழ்வியல் சார்ந்து எதையாவது செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியானால் அவர்களை எனக்கு தெரிந்ததால் செய்கின்றனரா? அவர்கள் ஏதாவது செய்வதனால் எனக்கு அவர்களை தெரிந்திருக்கிறதா???

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!

3 months 2 weeks ago
கொடுக்கிறவர் நீங்கள். இதில் சொல்லப்பட்டவைக்கா கொடுக்கின்றீர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பதற்கா கொடுக்கின்றீர்கள்?😃 👇🏾 https://tgte-us.org/?page_id=480

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு

3 months 2 weeks ago
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரு வருடங்களுக்கு நீட்டிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதனடிப்படையில் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் பெரும்பாலான அமைச்சர்கள் அதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு இணக்கம் தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களிலில் பேசப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை எதிர்வரும் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ஜனாதிபதிக்கு சமீபமான பெரும்பாலானோரின் நிலைப்பாடு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது சிறந்தது எனவும் இரு வருடங்களில் நாடு ஸ்தீரமடைந்த பின் தேர்தலை நடத்துவது சிறந்தது என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது எனவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1982ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மேற்கொண்ட சர்வஜன வாக்கெடுப்பு முறைமையை தற்போது மேற்கொள்ள முடியுமா என அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் சிலர் சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வாறு நீதிமன்றத்தின் முன்னிலையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படின் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவிலும், பத்தரமுல்லை ‘Waters edge‘ ஹோட்டலிலும் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம், தமிழ் உறுப்பினர்கள் சுமார் 30க்கும் அதிகளவில் காணப்படுவதால் அவர்களில் பெருமபாலானோர் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக முன்வைக்கவில்லை. இதன் காரணமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு அவர்களின் விருப்பம் கிடைக்குமா கிடைக்காதா என்பது தொடர்பில் உறுதியான ஒரு சூழல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டுமெனில் அரசியலமைப்பை மீறிய ஒரு சட்டத்தை அரசாங்கம மூலம் தயாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், சர்வஜன வாக்கெடுப்பு கொண்டு வரப்படுமேயானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=279426

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார்.......! பெண் : கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பெண் : அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு பெண் : சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான் யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான் பெண் : என்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான் பெண் : வெண்ணிலவை உலகம் பார்க்க வச்ச இரவு கருப்பு தான் வேர்வை சிந்தி உழைக்கும் இந்த விவசாயி கருப்பு தான் பெண் : மண்ணுக்குள்ள இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான் மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவா கருப்பு தான் பெண் : பூமியில முதல் முதலா பொறந்த மனுஷன் கருப்பு தான் பெண் : மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான் பெண் : உன்ன என்ன ரசிக்க வச்ச உன்ன என்ன ரசிக்க வச்ச கண்ணு முழி கருப்பு தான் கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்பு தான் பெண் : { தாய் வயிற்றில் நாம் இருந்த } (2) கருவறையும் கருப்பு தான் வணக்கம் கருப்பு தான் பெண் : உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான் பெண் : ரெட்டை ஜடை பின்னலத்தான் கட்டும் ரிப்பன் கருப்பு தான் பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான் பெண் : அன்று முதல் எனக்கு தான் பூக்கள் மீது வெறுப்பு தான் பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான் பெண் : முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான் பெண் : உன்ன பொத்தி வச்சிருக்கும் உன்ன பொத்தி வச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்பு தான் பெண் : ஊர் அறிய பெத்துக்கணும் புள்ள பத்து கருப்பு தான் பெண் : நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஹான் நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான் அழகு கருப்பு தான் பெண் : சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான் யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான் பெண் : என்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான் .......! --- கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ---

தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு!

3 months 2 weeks ago
தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தயாரிப்பு (ஆதவன்) தமிழ்த் தேசிய இருப்புக்காக, ஐந்து அம்ச யோசனைகளைக் கொண்ட மூலோபாயக் கொள்கை மற்றும் செயற்றிட்ட வரைவைத் தயாரிக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது:- * தமிழர் தாயகத்தில் தமிழர் குடிப்பரம்பலை நிலைநிறுத்தலும், பிறப்பு வீதத்தை அதிகரித்தலும், அனைத்துத் தமிழர் கல்வி அடைவுமட்ட உயர்த்தலும் * தாயகக் கிராமங்களில் விஞ்ஞானத்துறை ஆசிரிய வளத்தை அதிகரித்தலும், வளப் பங்கீட்டை உறு திப்படுத்தலும் * தமிழர் பிரதேசங்களில் சுகா தார மருத்துவ சேவைகளை மேம்படுத்தலும் மருத்துவமனைகளில் மனிதவளம் குறிப்பாகத் தமிழ்த் துணை மருத்துவ ஆளணி மேம்பாட்டை அதிகரிக்கும் வேலைத்திட்ட முன்னெடுப்பும் * தமிழர் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்புச் சவால்களை வெற்றிகொள்ளலும், ஏழைத்தமிழரின் நீண்டகால வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும் *இளையோர் எதிர்கொள்ளும் போதை, தற்கொலை, விபத்துப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்தலும், தமிழ் மாணவர்களின் அறநெறிக் கல்வியை வலுப்படுத்தலும்ஆகியனவே இந்த ஐந்து அம்சத் திட்ட யோசனைகளாகும். இதேவேளை நிபுணர் குழுவில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் எமக்கு அறியத்தரலாம் என்பதுடன், பொருத்தமானவர்களை முன்மொழியலாம் - என்றுள்ளது.(ஏ) https://newuthayan.com/article/தமிழர்_இருப்புக்காக_செயற்றிட்ட_வரைவு!
Checked
Sat, 09/28/2024 - 20:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed