புதிய பதிவுகள்2

T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

3 months 2 weeks ago
அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து...........சின்ன‌ நாட்டு அணி வீர‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌ ம‌ழையில் மித‌க்கின‌ம்...............திற‌மை இருந்தா விளையாட்டில் எந்த‌ உச்சிக்கும் போக‌லாம்................

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
நீங்கள் 2௦௦8 லிருந்து யாழ் கள உறுப்பினராக இருகிரியல் மேல் உள்ள மூன்று கேள்வியும் இங்கு யாழில் பலமுறை வந்து போயிட்டுது விளங்கங்களும் சக உறுப்பினர் களால் கொடுக்கபட்டுள்ளது உங்களுக்கு மறதி நோய் இருப்பதாக நான் நம்பவில்லை சுமத்திரன் திரிகளில் எதாவது ஒரு திரியிலாகினும் சுமத்திரன் வல்லவன் அறிவாளி நிறுவணும் எனும் உங்கள் ஆசை நிறைவேற போவது கிடையாது ஏனென்றால் சுமத்திரன் தமிழர்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை செய்தது எல்லாம் துரோகமும் குழப்பமும் வஞ்சகமும் தான் அநேக தூதுவர்களின் உடனான சந்திப்பு இவர் மட்டுமே சென்று சந்திப்பை மேற்கொள்வார் காரணம் தமிழர்களுக்கு எதிரான பேச்சுக்கள் வெளியில் தெரிந்து விடகூடாது எனும் காரணம் .

உலக சிறுநீரக தினம்: உங்கள் சிறுநீர் எந்த நிறத்தில் இருப்பது ஆபத்தின் அறிகுறி?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே சிக்கலை அறிய முடியும் 1 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன. “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும். ’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு? இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம். சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார். "உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார். சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. "சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது. புரோட்டினூரியா என்றால் என்ன? புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார். "புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த். "இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார். புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள். புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்." புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி? சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது. உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார். மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன? சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்: உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல். உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது. சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது. சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது. நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை தீவிர சிறுநீரக நோய்கள் என்ன? நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும். ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை. நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும். நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

3 months 2 weeks ago
40-யும் வெல்ல வியூகம்: சிக்கலான இடங்களில் திமுகவே களமிறங்க திட்டம் 14 MAR, 2024 | 02:36 PM தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் வகையில் வியூகம் அமைத்துள்ள திமுக,கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத,சிக்கலானதாக கருதப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு அத்தொகுதிகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே 2019 மக்களவைத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் வசமாக்கியது திமுக.இந்த முறை, எந்த ஒரு தொகுதியையும் யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, கூட்டணியில் எந்த கட்சியையும் விட்டுக் கொடுக்காமல், வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுக, விசிக கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐஜேகே விலகியதால், பெரம்பலூர் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டது. மதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டது. இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக வைத்துக் கொள்ள நினைப்பதால் ஈரோட்டில் திமுக போட்டியிடுகிறது. அதற்கு பதில், காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி அல்லது விருதுநகரை மதிமுக கோரியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழகத்தில் போட்டியிட்ட, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், ஆரணி, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, கரூர், திருச்சி தொகுதிகளை அப்படியே ஒதுக்கும்படி கேட்டது. ஆனால், கள நிலவரம், வேட்பாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை சுட்டிக்காடி, இந்த முறை கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை தொகுதிகளில் சிலவற்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178714

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை

3 months 2 weeks ago
வெடுக்குநாறி மலை விவகாரம்: மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கு துணை போகின்றதா? - கஜேந்திரன் எம்.பி ஆதங்கம் Published By: DIGITAL DESK 3 14 MAR, 2024 | 04:46 PM மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறி மலை ஆலய பூசகர் உள்ளிட்ட கைதிகளை இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்கு சென்று 8 பேரையும் பார்வையிட்டு இருந்தேன். அதில் 5 பேர் 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பொய்யான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அவர்களது உடல் நிலை மோசமடைகின்றது. அதில் சிலருக்கு ஆஸ்மா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. அவர்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. மனிதவுரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இதுவரை அவர்களை பார்வையிடவில்லை. கைது இடம்பெற்ற அன்றே மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்த போதும் இதுவரை பார்வையிடவில்லை. மனிதவுரிமை ஆணைக்குழுவும் சட்டவிரோத கைதுகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் துணை போகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து முற்றுமுழுதாக பொய். கடந்த செவ்வாய்கிழமை நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே அவர்கள் உணவு எதனையும் உண்ணவில்லை. அதற்கு பிற்பாடும் அவர்கள் உணவு உண்ணவில்லை. மூன்றாவது நாளாக அவர்கள் உணவு உண்ணவில்லை. அவர்களது குடும்பத்தினர் நேரடியாக சென்று பார்வையிட்ட போதும் அவர்கள் உணவு உண்ணவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினரும் சென்று பார்வையிட்டிருந்தனர். அவர்களும் உண்ணாவிரதம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆகவே, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியது தவறானது. இவர்கள் மீது நெருக்குவாரத்தை உருவாக்கி பொய்யாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்க இவ்வாறு செயற்படுகின்றார்களா அல்லது அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்த வைக்க முயல்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, இதனை விளங்கிக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்களும் இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும். கொழும்பில் உள்ள இராஜதந்திர செயலங்களும் இந்த விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள போராட்டத்திலும் சகலரும் அணிதிரண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொளகின்றேன் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178736

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago
உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் பேட்டி: குணா குகை குழிக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது? படக்குறிப்பு, உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், ச. பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளா மற்றும் தமிழகத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் வரும் சம்பவத்தின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவினர், சுபாஷ் குழியில் விழுந்தது முதல் மீட்கப்பட்டது வரை நடந்த உண்மையையும், திரைப்படத்தில் காண்பிக்கப்படாத சம்பவங்களையும் பிபிசி தமிழ் நேர்காணலில் பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாள திரைப்படம், கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் காட்டப்படும் கொடைக்கானல் பகுதியில் உள்ள குகையை மையமாக வைத்து இக்கதை நகர்கிறது. கேரள மாநிலம் கொச்சினை அடுத்த மஞ்சும்மல் கிராமத்தைச் சேர்ந்த, 11 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் 2006இல், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் உள்ள ‘குணா குகை’க்கு சுற்றுலா செல்கின்றனர். அப்போது, குழுவில் இருந்த சுபாஷ் என்பவர் பல நூறு அடி ஆழமுள்ள குகையின் குழியில் விழுந்த நிலையில், சுபாஷை அந்தக் குழுவில் இருந்த குட்டன் என்கிற சிஜூ டேவிட் தன் உயிரைப் பணயம் வைத்து குழியில் இறங்கி காப்பாற்றுவதும், அதற்கு அவர்களின் நண்பர்கள் உதவுவதும்தான் படத்தின் கதை. கடந்த 2006இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ‘நட்பின் இலக்கணம்’ எனக் கூறி சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான, சுபாஷ், குட்டன் மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவுடன், மஞ்சும்மல் கிராமத்திற்குச் சென்று பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது. அவர்கள் திரைப்படத்தில் காண்பிக்கப்படாத பல சம்பவங்களையும், சுபாஷ் மீட்கப்பட்டது எப்படி என்ற தங்களின் உண்மையான ‘த்ரில்’ அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளனர். படக்குறிப்பு, சுபாஷ் மற்றும் குட்டன் மஞ்சும்மல் பாய்ஸ் - பெயர்க் காரணம் என்ன? கேள்வி: உங்கள் குழுவுக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பெயர் வரக் காரணம் என்ன? 11 பேர் குழுவாக மாறியது எப்படி? ஊரினுள் இந்தக் குழு என்ன செய்துகொண்டிருந்தது? சுபாஷ் பதில்: மஞ்சும்மல் என்பது எங்களது கிராமத்தின் பெயர். நாங்கள் 11 பேர் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள், நாங்கள் குழுவாகச் சேர்ந்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ குழுவை உருவாக்கினோம். ஊரினுள் விளையாட்டுகள், ‘டக் ஆஃப் வார்’ எனப்படும் கயிறு இழுத்தல் என மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது பொறுப்புகள் அதிகமானதால் விளையாட்டுகள் எல்லாம் இல்லை, குழுவாக எப்போதாவது எங்காவது சுற்றுலா செல்வோம். கேள்வி: 2006இல் சுற்றுலா செல்ல கொடைக்கானல் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? அங்கு என்னென்ன செய்தீர்கள்? குட்டன் பதில்: நாங்கள் மூணாறு போன்று சில இடங்களுக்குச் சென்றுள்ளதால், புதிதாக எங்காவது செல்லலாம் என எங்கள் குழுவில் இருந்த சுதீஸ்தான் கொடைக்கானலை தேர்வு செய்தார். அவர் ஏற்கெனவே இரண்டு முறை கொடைக்கானல் ‘குணா குகை’க்கும் சென்றிருந்தார். ஒன்பது பேர் இருக்கை அளவே கொண்ட டொயோடா குவாலிஸ் வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து, 12 பேராகப் பயணித்தோம். அங்கு கொடைக்கானல் ஆறு, ‘பைன் காடு’ எனப் பல இடங்களைப் பார்வையிட்டு மகிழ்ச்சியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். படக்குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் கொடைக்கானல் சென்ற புகைப்படம் குகைக்குள் சுபாஷ் விழுந்தபோது என்ன நடந்தது? கேள்வி: ‘குணா குகை’ தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தும் ஏன் தடுப்பை மீறிச் சென்றீர்கள்? சுபாஷ் விழுந்ததும் அங்கு சென்றது தவறு என உணர்ந்தீர்களா? குட்டன் பதில்: குணா குகை அருகே தமிழில் மட்டும் அறிவிப்புப் பலகை வைத்திருந்ததால், அது தடை செய்யப்பட்ட பகுதி என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சென்றபோது அங்கு எங்களுக்கு முன்பு சில சுற்றுலா பயணிகள் குகை பகுதிக்குச் சென்றதால், அவர்களைப் பின்தொடர்ந்துதான் நாங்களும் சென்றோம். நாங்கள் சென்றபோது சுபாஷ் குழியில் விழுந்தபின், இங்கு வந்தது தவறு என்பதை உணர்ந்தோம். கேள்வி: குகைக்குள் விழுந்ததும் சுபாஷூக்கு சுயநினைவு இருந்ததா? குகைக்குள் எட்டிப் பார்த்தபோது எப்படி இருந்தது? குட்டன் பதில்: குகைக்குள் விழுந்து அரை மணிநேரத்திற்கு சுபாஷூக்கு சுயநினைவே இல்லை. அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. குகைக்குள் சுபாஷ் விழுந்ததும் நாங்கள் அனைவரும் என்ன செய்வது எனத் தெரியாமல் அலைமோதினோம். குகைக்குள் நாங்கள் பார்த்த போது இருட்டாக, பயங்கரமாக இருந்தது. அரை மணிநேரத்துக்குப் பின் சுபாஷ் வலியில் மரண ஓலமிடும் சத்தம் கேட்டுத்தான் அவன் உயிருடன் இருக்கிறான், எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் எனத் தோன்றியது. அதன் பிறகுதான் காவல் நிலையம், வனத்துறை, தீயணைப்புத் துறை எனப் பலருக்கும் தகவல் தெரிவித்து, உதவிகள் பெற்றோம். படக்குறிப்பு, சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். படத்தில் வருவது போல் காவல்துறையினர் தாக்கினார்களா? கேள்வி: சுபாஷை மீட்க காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் போதிய உதவிகள் செய்தார்களா? திரைப்படத்தில் வருவது போல் தாக்கினார்களா? கிருஷ்ணா பதில்: சுபாஷ் குழியில் விழுந்ததும் உதவி கேட்டு கொட்டும் மழையில் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு என்னுடன் சேர்த்து நான்கு பேர் சென்றிருந்தோம். போலீசாரிடம் நாங்கள் நடந்ததைக் கூறியபோது, ‘குணா குகை’ அருகே சில கொலைகள் நடந்துள்ளதாகக் கூறிய போலீஸார், நாங்களும் அதேபோல் சுபாஷை குழிக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டோம் எனக் கூறி எங்களை லத்தியால் அடித்துத் துன்புறுத்தினார்கள். பின், சம்பவ இடத்திற்கு வந்து சுபாஷ் குழிக்குள் இருந்து சத்தமிடுவதைக் கேட்டவுடன்தான் போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஓரளவுக்கு உதவி செய்தார்கள். பெரிய அளவிலான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. குகைக்குள் இறங்க துணிச்சலாக முன்வந்தது எப்படி? கேள்வி: சுபாஷை மீட்க குகைக்குள் யாரும் இறங்க முன்வராதபோது குட்டன் மட்டும் எப்படி முன்வந்தார்? அதற்கான தைரியம் எப்படி கிடைத்தது? குட்டன் பதில்: சுபாஷ் விழுந்த சில நிமிடங்களில் கடும் மழை பெய்து, அவர் விழுந்த குழியில் மழைநீர் வழிந்தோடியது. மழைநீருடன் சில கற்களும் சென்றதால், மழைநீருடன் குழிக்குள் கற்கள் செல்வதைத் தடுக்க நாங்கள் அனைவரும் குழியைச் சுற்றி படுத்துக்கொண்டோம். மழை நின்றவுடன் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், வெகு நேரமாகப் பேசிக்கொண்டிருந்த அவர்கள் குழிக்குள் இறங்கி சுபாஷை காப்பாற்றுவதாக எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. அந்த நேரத்தில் சுபாஷை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் எனக்குத் தோன்றியது. அதனால், நானாக முன்வந்து சுபாஷை காப்பாற்ற குழிக்குள் இறங்கினேன், அதற்கு அரசு அதிகாரிகளும் சம்மதித்தனர். அந்த இக்கட்டான சூழலில் எங்கள் அனைவரது மனதில் சுபாஷை காக்க வேண்டுமென்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. எனக்கு சுபாஷை மிகப் பிடிக்கும், அவன் என் நண்பன், அதனால் எதையும் பொருட்படுத்தாமல் உடனடியாக இறங்கிவிட்டேன். படக்குறிப்பு, "படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கை கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன்" குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது? கேள்வி: குகையின் குழிக்குள் சென்றபோது எப்படி இருந்தது? சுபாஷை பார்த்த போது எப்படி உணர்ந்தீர்கள்? குட்டன் பதில்: குகையின் குழி சாதாரணமாக இல்லை, கும்மிருட்டாக குறுக்கும் நெடுக்குமாக கூர்மையான பாறைகளுடன், மிகவும் வழுக்கும் விதமாக, வெளவால் எச்சங்களின் நாற்றத்துடன் இருந்தது. படத்தில் காண்பிப்பது போல் நான் நெற்றியில் டார்ச் விளக்கு கட்டவில்லை. உண்மையில் டார்ச் விளக்கைக் கயிற்றில் சுற்றி என் கழுத்தில் கட்டியிருந்தேன். பாறைகளில் கால் வைத்து ஊன்றி நிற்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், டார்ச் லைட் பயன்படுத்தி சுபாஷை தேடினேன். கீழே இறங்க இறங்க சுபாஷ் கதறும் சத்தம் அதிகமானது. 70 அடி ஆழத்திற்கு மேல் செல்லும்போது கயிறு தீர்ந்துவிட, கூடுதல் கயிறு இணைக்கப்பட்டது. 90வது அடியில் சுபாஷை கண்டேன். அப்போது எனக்கு உயிர் வந்து போனது போல் இருந்தது, அந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளில் கூற முடியவில்லை. சுபாஷ் குகைக்குள் எப்படி சிக்கியிருந்தார்? கேள்வி: குகையில் இருந்து வெளிவருவதற்கான போராட்டம் எத்தகையது? குட்டன் பதில்: 98-ஆவது அடியில் கொக்கி போல் இருந்த ஒரு பாறையின் சிறு துண்டில், தனது தம்பியிடம் வாங்கி அவன் அணிந்திருந்த பெல்ட் சிக்கிக்கொண்டிருந்தது, அவன் செங்குத்தாக நிற்பது போல் சிக்கிக் கொண்டிருந்தான். தான் இறந்து வேற்று உலகில் இருப்பது போன்ற வார்த்தைகளுடன் உளறிக் கொண்டிருந்தான். அவனை நான் தொட்டதும், பயத்தில் என்னைத் தாக்க கையை உயர்த்தினான். பின் வலியில் கதறி அழ ஆரம்பித்து விட்டான். அவன் உடல் முழுதும் காயம், ரத்தம், சேறும் சகதியுமாக இருந்தான். வெளியில் எடுக்க கயிறு கட்டவே முடியவில்லை, தொட்டாலே கதறி அழுதான். கயிற்றைக் கட்டி மேலே வரும்போது, 3 முறைக்கு மேல் கயிறு பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டது, மீண்டும் எங்களைக் கீழே இறக்கி மேல ஏற்றியபோது இந்த சிக்கல்களைச் சமாளித்து மேலே வந்தோம். படக்குறிப்பு, "இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள்" உயிருடன் மீண்ட தருணம் கேள்வி: சுபாஷை உயிருடன் மீட்டு குழியில் இருந்து வெளியே அழைத்து வந்ததும் எப்படி உணர்ந்தீர்கள்? குட்டன் பதில்: வெளியே வந்ததும் சுபாஷை காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளேன் என நினைத்து மகிழ்ச்சியில் அழுதேன். என் நண்பர்கள் எங்களைத் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றனர். இதுவரை இந்தக் குழியில் விழுந்த 13 பேர் இறந்துள்ளனர், யாரும் பிழைக்கவில்லை. சுபாஷ் கடவுளின் பிள்ளை, கடவுளின் அருளால் பிழைத்துள்ளான் என அனைவரும் கூறினார்கள். கேள்வி: 2006 சம்பவத்திற்குப் பின் ‘குணா குகை’ சென்றீர்களா? உங்களுக்கு உதவிய ‘டூர் கைடு’, புகைப்படக் கலைஞர், பெட்டிக்கடை உரிமையாளர் ஆகியோரைச் சந்தித்தீர்களா? சுபாஷ் பதில்: சம்பவத்திற்குப் பின் நாங்கள் அனைவரும் கூட்டாக கடந்த வாரம் ‘குணா குகை’ சென்றிருந்தோம். 2006 சம்பவம் நினைவு வந்தாலும், எங்களுக்கு அச்ச உணர்வு இல்லை. அங்குள்ள கடைக்காரரை மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது, ‘டூர் கைது’, புகைப்படக் கலைஞரைப் பார்க்க முடியவில்லை. கேள்வி: குகைக்குள் விழுந்ததற்கு மது போதைதான் காரணமா? திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது போலத்தான் விழுந்தாரா? குட்டன் பதில்: நாங்கள் கொடைக்கானலில் தங்கியபோது மது அருந்தியது உண்மைதான். ஆனால், குகைக்குச் செல்லும்போதும், அதற்கு முன்பும் நாங்கள் மது அருந்தவில்லை. ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு நாங்கள் தாண்டித்தான் சென்றோம். அப்போது, நான்காவதாக தாண்டிய சுபாஷ் செருப்பு இடறி குழிக்குள் விழுந்து விட்டார், இதுதான் உண்மைக் காரணம். கேள்வி: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன், மது குடித்துவிட்டு கூத்தடித்ததாக கடும் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து? சுபாஷ் பதில்: எங்களை மக்கள் ஹீரோவாக பார்க்கிறார்கள், எங்களுக்கு நடந்த சம்பவத்தை அனைவரும் பரவலாகப் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் இந்தத் திரைப்படத்திற்கும், எங்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். எங்களைப் பற்றி யாரோ என்னமோ பேசட்டும், அவர்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை, அதை ஒரு பொருட்டாகவும் நாங்கள் நினைக்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/c06l3d02002o

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டர்களுக்கு கைவிலங்குடன் தொடர்ந்தும் சிகிச்சை

3 months 2 weeks ago
மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்; சட்டத்தரணிகள் பார்வையிட்டனர் Published By: DIGITAL DESK 3 14 MAR, 2024 | 03:11 PM வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை வவுனியா சட்டத்தரணிகள் சிலர் இன்று வியாழக்கிழமை (14) பார்வையிட்டனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தமக்கான நீதி வழங்கக்கோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றுமுன்தினம் தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடித்து வருகின்றது. கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலயபூசாரியார் த.மதிமுகராசா மற்றும்து தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன்,சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நேற்றயதினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வவுனியாவைசேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டனர். இதன்போது அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/178721

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

3 months 2 weeks ago
கெஹலிய உட்பட்டோருக்கு வழக்கு விசாரணைகள் முடியும்வரை விளக்கமறியல்! 14 MAR, 2024 | 03:46 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் இன்று (14) மறுத்துள்ளது. மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமே பிணைக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது. இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி போட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்சன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளர் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/178726

மயிலம்மா.

3 months 2 weeks ago
இன்னும் கவி ஐயாவின் படங்களைக் காணவில்லையே?! தொடக்கத்தில் மயிலம்மாவை அவ்வளவு ஆர்வமில்லாமல் தான் வாசிக்கத் தொடங்கினேன், இப்போது அடுத்த பகுதி எப்போது என காத்திருக்க வைத்துவிட்டார் யாழ் களச் சாம்பியன் சுவி அண்ணா.

முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை

3 months 2 weeks ago
அவர்கள் ஒருபோதும் உயிருடன் விடமாட்டார்கள் .....ஏதாவது சாக்கு போக்கு சொல்லி காலத்தை இழுத்தடித்துக் கொண்டு போவார்கள் .........!

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
சரி உங்கள் கூற்றுப்படி தவணை வழங்கப்பட்டதாயின் 1. அனைத்துலக நீதி மன்றில் ஶ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிக்க முற்படுகையில் சுமந்திரன் தவணை கேட்டிருந்தால் அடுத்த தவணை எப்போது வழக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது? 2. அதில் ஆஜராகிய சட்டத்தரணி யார்? 3. இது தொடர்பாக ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டதா? அந்த ICC இணையத்தள அறிக்கை இணைப்பை இங்கு இணைக்க முடியுமா?

மயிலம்மா.

3 months 2 weeks ago
மயிலிறகு........... 14. நேரே மயிலம்மா வீட்டுக்கு வந்தவன் முன்னால் இருந்த அம்மன் கோயிலில் வண்டியை நிப்பாட்டி விட்டு சென்று அம்மனைக் கும்பிட்டு கற்பூரம் ஏற்றி ஒரு சிதறுதேங்காயும் உடைத்து மூன்று பட்டும் ஒரு மஞ்சள் பட்டுச் சேலையும் அவ காலடியில் வைத்து விட்டு, சைக்கிளுடன் வீட்டுக்குள் வருகிறான். அவனைக் கண்டதும் மயிலம்மாவுக்கு முகம் மலர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஏன்டா வாமு இப்பதான் உனக்கு வழி தெரிஞ்சதோ. இத்தனை நாளா உன்னை இங்காலுப் பக்கம் காணேல்ல. சும்மா கோவப்படாதையுங்கோ மயிலம்மா.ஒரு நல்ல செய்தி உங்களிடம் சொல்ல வருகிறன் என்று சொல்ல.......பின்ன எனக்கு கோவம் வராதா கல்யாண வேலைகள் தலைக்கு மேல் கிடக்கு உன்னையும் காணேல்ல நான் என்னெண்டு நினைக்கிறது எதையென்று நினைக்கிறது சொல்லு. முதல்ல எனக்கு கிராமசேவகர் வேலை கிடைத்திருக்கு மயிலம்மா.நீங்கள் அப்போது வீட்டுக்கு வந்ததா அம்மா சொன்னவ. எனக்கு இப்ப விதானையாருடன் வேலை அதிகம். விடிய வெள்ளன அவரோடு போனானான் பின்னேரம்தான் வீட்டை வந்தனான் என்று சொல்லி தான் அஞ்சலாவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியதுவரை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறான். உண்மையா வாமு நான் கொஞ்சம் பயந்திட்டன்டா. சரி ஏதோ பொல்லாத காலம் அதெல்லாவற்ரையும் மறந்திடுவோம். அதென்ன கையில் பார்சல் என்று கேட்கிறாள். இது மயிலம்மா உங்களுக்குத்தான் எடுத்து வந்தனான்.அவளும் அதை அங்கேயே பிரித்துப் பார்க்க அதில் சுந்துவுக்கு ட்ரவுசர் சேர்ட் பனியன், பூவனத்துக்கு மூன்று சுடிதார் ஹீல்ஸ் செருப்பு, மயிலம்மாவுக்கு நாலு சேலைகள் சட்டைகள் பாவாடைகள், உள்ளாடைகள் அத்துடன் பாட்டா உட்பட ரெண்டு சோடி செருப்பு எல்லாவற்றுடனும் இனிப்பு சொக்கிலேட் எல்லாம் இருக்கு. அதெல்லாம் பார்த்த மயிலம்மாவுக்கு மனம் நெகிழ்கின்றது. பின் அதில் இருந்து ஒரு சேலையும் சுடிதாரும் தனியாக எடுத்து வைத்து உள்ளே சென்று ஒரு புது வேட்டியையும் கொண்டு வந்து அதோடு சேர்த்து சொக்கிலேட் மற்றும் இனிப்புகளும் வைத்து அவனிடம் இதை நீ கனகத்திடம் குடு. நாங்கள் ஒன்டுக்க ஒன்டாய் பழகிறானாங்கள். அவர்களும் சந்தோசப் படுவினம். பின் அவள் சிறிது தள்ளிச் சென்று கனகத்தைக் கூப்பிட அவளும் தன் வீட்டில் இருந்து எட்டிப்பார்த்து விட்டு வருகிறாள். கனகத்திடம் தனக்கு வேலை கிடைத்ததை சொல்லிய வாமன் பார்சலை அவளிடமும் தர அவளும் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறாள். அடுத்து செய்யவேண்டுய வேலைகள் பற்றி மயிலம்மாவும் வாமுவும் கலந்துரையாடி ஒரு கொப்பியில் எழுதுகின்றனர்.பின் மயிலம்மா அவனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று அந்த ஒரு லட்சம் ரூபா பணத்தில் இருந்து இருபத்தையாயிரம் ரூபாவை தனியாக எடுத்து அவனிடம் தர அவனும் என்ன மயிலம்மா இது எதுக்கு எனக்கு என்று கேட்கிறான். டேய் இது உனக்கென்று தரவில்லையடா. நான் ஒரு எழுபது எழுபத்தைஞ்சுக்குள் இந்தக் இந்தக் கலியானச் செலவுகளை முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கையில அதிகம் பணம் இருந்தால் கண்டபடி செலவு செய்யத் தோன்றும். மேலும் உனக்கு பூவனத்தைப் பற்றி தெரியும்தானே. என்ர மகள்தான் ஆனால் இந்தப் பணத்தைக் கண்டால் பெரிசாய் சிலவு செய்து கலியாணம் கட்ட நிப்பாள் அல்லது இந்தப் பணத்தை அப்படியே தனது புருஷன் வீட்டுக்கு கொண்டுபோக அடம்பிடிப்பாள். அம்மா படும் கஷ்டத்தைப் கொஞ்சமும் நினைக்க மாட்டாள். என்ர பிள்ளையைப்பற்றி எனக்குதான் தெரியும். இதை நீ கவனமாய் வீட்ட கொண்டுபோய் வைத்துக்கொள். அந்தப்பிள்ளை எவ்வளவு நம்பிக்கையுடன் நகைகளைக் கூட எடுக்காமல் நம்பிப் பணம் தந்தது. அதனால் எப்படியும் ஆறுமாதத்துக்குள் கடன் அடைச்சுப்போட வேணும் என்கிறாள்.அவனுக்கும் அது சரியென்றே தோன்றியது. அன்று அந்தச் சம்பவம் வெய்யிலில் வானவில் தோன்றி மறைவதுபோல் தற்செயல் நிகழ்வாய் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதிலிருந்து மயிலம்மா மது பாவிப்பதை அறவே விட்டிருந்தாள். வாமனும் தனது வேலையின் நிமித்தம் ஆங்காங்கே கொஞ்சமாவது பாவிக்க வேண்டிய அல்லது பாவிப்பதுபோல் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்குது. அவனால் அவளைபோல் அறவே விட முடியவில்லை. பூவனத்தின் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுந்துவும் வந்து விட்டான். அவர்கள் ஒரு வாடகைக்காரில் பெரியகடைக்கு சென்று தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள்.வாமுவும் மற்றவர்களும் சுந்துவோடு அவன் இல்லாத சமயத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.வாமனுக்கு கிராமசேவகர் வேலை கிடைத்தது பற்றி கதை வந்தபோது பூவனம்தான் சொல்கிறாள் அண்ணா அவன் அலுவலகம் திறக்க இடம் பார்க்கிறான் இன்னும் சரியா அமையவில்லை. சுந்துவும் என்னடா இவள் சொல்வது உண்மையா, நீ எனக்கு சொல்லவில்லை. அதெடா சுந்து இடத்தை பிடிச்சுட்டு சொல்லுவம் என்று இருக்கிறன் என்கிறான். கொஞ்ச நேரம் யோசித்த சுந்து ஏண்டா நீ எங்கட முன் அறையைப் பாவிக்கக் கூடாது. தங்கச்சியும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிடுவா, நானும் இங்கில்லை, அம்மாவும் தனியாய் இருக்கிறா.நீ இங்கிருந்தால் அவவுக்கும் துணையாய் இருக்கும். நாங்களும் பயமில்லாமல் இருப்பம். நீ என்னம்மா சொல்கிறாய் என்று தாயாரைக் கேட்கிறான். அவளும் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை, நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யலாம் என்கிறாள். வாமு நீ என்னடா சொல்கிறாய் என்று கேட்க அதில்லடா சுந்து விதானையின் அலுவலகம் எண்டால் நாலுவிதமான ஆட்களும் வந்து போவினம்.அது மயிலம்மாவுக்கு இடைஞ்சலாய் இருக்கும் இல்லையா..... அது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. உனக்கு வேறு நல்ல இடம் கிடைக்கும் வரை கூட நீ இதைப் பாவித்துக் கொள்ளலாம். அப்போது பூவனம் நீ விதானையானால் அலுவலகத்துக்கு தொலைபேசி தருவார்கள் எல்லோ. ஓம் தருவார்கள்....அப்ப நாங்கள் அண்ணனுடன் கதைக்கலாம் என்ன.... பின் எல்லோரும் கலைந்து போகிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்களுடன் பூவனத்தின் கல்யாணம் அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு அரசு விதானையும் அஞ்சலாவும் கூட வந்திருந்து அன்பளிப்புகள் கொடுத்து சிறப்பித்திருந்தார்கள். சுந்துவும் சமயத்தில் அவள் செய்த உதவிக்கு மனதார நன்றியைத் தெரிவித்து கொண்டான்.அடுத்து வந்த இரு நாட்களில் அவன் எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவன் வாமுவுடன் புகையிரத நிலையத்துக்கு செல்லும்போது அடுத்த மாதம் எனக்கு ஒரு மாத விடுமுறை வருகிறது அப்ப சந்திக்கலாம் என்று சொல்லி வந்த வண்டியில் ஏறி கையசைத்து விடை பெற்றுக்கொள்கிறான்........! 🦚 மயில் ஆடும்........! 14.
Checked
Sat, 06/29/2024 - 03:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed