புதிய பதிவுகள்2

கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !

3 months 2 weeks ago
இந்த தேரரையே ஒரு பல்கலைக்கழக வேந்தர் ஆக்கியதும் கோதா என்று தான் ஒரு ஞாபகம். கோதாவின் நிர்வாகத் திறமை அங்கேயே சறுக்கி விட்டுது போல....😀 யாராவது பயத்தில் ஓட ஆரம்பித்தால் எல்லோரும் துரத்துவார்கள், எல்லாம் துரத்தும். ஓடின கோதா அப்படியே எங்காவது போயிருக்கலாம்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !

3 months 2 weeks ago
அப்போ தமிழ் பகுதிகளில் குண்டு போட்டதும் நிர்வாகத் திறமை அற்ற செயல்கள் தானே??

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!

3 months 2 weeks ago
ஏழு கட்ட தேர்தல், மொத்தம் ஏழு வாரம். தேர்தலே 49 நாட்களா? முந்தாநாள் வரை 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று விவாதித்து கொதித்துக் கொண்டிருந்தார்கள்....🤣

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும் என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது.

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

3 months 2 weeks ago
இலங்கையில் எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு அவர்கள் எல்லோருக்கும் குடியுரிமை கொடுக்கபட்டுவிட்டதாக 2005, 2010 க்கு பின்பு வந்தவர்கள் சொன்னார்கள். யாழ்கள இலங்கை உறவு குருஸ்சோ மற்றும் சிறி அண்ணா அதை உறுதிபடுத்தினார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர் ஒருவவரின் கேள்விக்கு அனதாபத்தை பெறுவதற்காக இலங்கை குடியுரிமை இல்லை என்று ஒருவர் பொய் சொன்ன தகவலும் படித்தேன்.

Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

3 months 2 weeks ago
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்

என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே

3 months 2 weeks ago
கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம். அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா? அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.

என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே

3 months 2 weeks ago
“என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” எஸ். தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760

புதிய கூட்டணிக்கு கைச்சாத்து

3 months 2 weeks ago
புதிய கூட்டணிக்கு கைச்சாத்து ஆ.ரமேஸ். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல ஐக்கிய சுதந்திர கட்சி தலைவர் சோம் கோச் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் உள்ளிட்ட தேசிய சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டதாக சவேரியார் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதேசத்தை தலமையகமாக கொண்டு செயற்படும் ஐக்கிய சுதந்திர கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து திசை காட்டி சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/மலையகம்/பதய-கடடணகக-கசசதத/76-334751

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

3 months 2 weeks ago
புடினால் உலக் அமைதி கெட்டது என்று கூறினால் அதற்கு ஆதாரம் கொடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாதம் அபவாதமாகிவிடும் 😁

கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !

3 months 2 weeks ago
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ! NO COMMENTS பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும் பௌத்மதகுரு தெரிவித்துள்ளார். கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். https://www.battinews.com/2024/03/blog-post_387.html

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!

3 months 2 weeks ago
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!! 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளிடம் பேசிய, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தெரிவித்தார். ஒரே கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் நடத்தப்படவுள்ளது என்றும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஆந்திரா, சண்டிகர், தாதா நாகர் மற்றும் ஹவேலி, கோவா, டெல்லி, குஜராத், இமாசல பிரதேசம், அரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார் கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், சட்டீஸ்கர், அசாமில் 3 கட்டங்களாகவும், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட்டில் 4 கட்டங்களாகவும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறினார். https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/how-many-phases-of-election-in-which-states-here-is-the-full-details-124031600060_1.html

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஆரம்பம்

3 months 2 weeks ago
வெடுக்குநாறி விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் ! வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில், நாளை மறுதினம் கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/296040

இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு!

3 months 2 weeks ago
இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு! வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங்க் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதற்கு அனாதை இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த ஒரு கும்பல், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பிகேஹள்ளி பொலிஸார் அங்கு சென்று, தகராறு செய்த கும்பலை விரட்டி அடித்தனர். பின்னர் அனாதை இல்லத்தில் சோதனை நடத்தியபோது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமியர் மீட்கப்பட்டனர். இந்த அனாதை இல்லம் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவசமாக அடைக்கலம் தருவதாக கூறிய சிறுமிகளை சேர்த்துள்ளது. ஆனால் அனாதை இல்லத்தில் சேர்ந்த சிறிது நாட்களுக்கு, பள்ளிக்கு சரியாக அனுப்பினர். அதன் பின்னர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்த அந்த சிறுமிகள், எங்களை வளைகுடா நாடுகளுக்கு கடத்த முயற்சி நடக்கிறது என கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இல்லத்தின் நிர்வாகி சமீர், உதவியாளர் சல்மா உட்பட 20 பேர் மீது, சம்பிகேஹள்ளி பொலிஸில், பிரியங்க் கங்கூன் முறைப்பாடு அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 20 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185235

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்? 17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=185234
Checked
Mon, 07/01/2024 - 04:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed