புதிய பதிவுகள்2

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

3 months 2 weeks ago
மனிதனாக வாழுவார் உலகையும் வாழவிடுவார் போல் தெரியவில்லையே அவருடைய தேர்தலின் பின்னான அறிவிப்பு. மூன்றாம் உலகப்போர், "ஒரு அடி தூரத்திலேயே" உள்ளது என எச்சரிக்கிறாரே. வாழ்த்த பயமாக இருக்கிறது. நமது வாழ்வின் முடிவு ஒரு அடி தூரத்திலிருக்கும்போது எப்படி வாழ்த்த முடியும்? நாமே அழிவை அழைப்பது போலுள்ளதே.

போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்

3 months 2 weeks ago
முள்ளிக்குளம்தான் சரி. நான் மதவாச்சி/ வவுனியா - மன்னார் பாதையில் இருக்கும் குளங்களை எல்லாம் மூளையைக் கசக்கியும், கூகிள் மாப்பைப் பார்த்தும் முள்ளிக்குளம் நினைவுக்கு வரவில்லை! முள்ளிக்குளம்... மூன்று முறிப்பூடாக மடு செல்லும் பாதையில் உள்ளது. 1995 களில் நான் சைக்கிளில் திரிந்த இடங்கள் இவை. இதில் நான் சொன்ன மூன்று குறிப்புக்கு ஒரு சிறப்புண்டு. இந்தக் கிராமம் வவுனியா-மன்னார்-முல்லைத்தீவு மாவட்டங்களை இணைக்கும் மையப் புள்ளியில் இருப்பதாகும்

குற்றமே தண்டனை

3 months 2 weeks ago
பல படிக்கக் கூடிய பிள்ளைகள் சில தவறுகளால் படிக்காமல் போய் பின் பெரிய முதலாளிகள் ஆகிவிடுகின்றனர்.........கவலை வேண்டாம்.......! 😁

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

3 months 2 weeks ago
இந்த Afd இன் ஆரம்பித்தவர்களில். ஒருவர் இந்தியா வம்சத்தைச் சேர்ந்தவர்,.முன்னார் pds. க்கு இருந்த ஆதரவு இப்போ குறைந்து Afd க்கு கூடியுள்ளது ..இது ஒரு குறிப்பிட்ட வீதத்தை விட்டு கூடப்போவதில்லை காரணம் நாட்டை கொண்டு நடத்த முடியாது ...அப்போ வாக்களித்த மக்கள் வெறுப்பு அடைவார்கள் எனவே… பயப்படவேண்டாம். . 🤣🙏 தொடர்ந்தும். புட்டினை ஆதரியுங்கள். வாழ்கையை அனுபவித்து வாழுங்கள்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
கடந்த இரண்டு உலக யுத்தத்திலும் ஜேர்மனி - இத்தாலி - ஜப்பான்.. இவை எதிரிகளாகவும்.. அமெரிக்காவும் மிச்ச மேற்கும்.. நேச நாடுகளாகவும் இருந்தன. ரஷ்சியா அப்பவும் தனியாத்தான் சண்டை போட்டது. ஆனால் 3ம் உலகப் போரின் பரிமானம் வேறுபட்டதாக இருக்கும். ரஷ்சியாவோடு.. நேரடியாக நேட்டோ மோதினால்.. ரஷ்சியா.. கிழக்கு ஜேர்மனியில் நிற்காது.. பிரிட்டனிலும்.. அலஸ்கா வழியாக நியுயோர்க்கிலும் நிற்கும். ஏனெனில்.. கடந்த இரண்டு உலகப் போரின் போதும் அமெரிக்கா ரஷ்சியாவை எதிர்த்து சண்டை செய்யவில்லை. ஜேர்மனி தான் செய்தது. புட்டின் ஒரு உலகப் போருக்கு தானாகப் போகும் அளவுக்கு புத்திசாலித்தனமற்றவரல்ல.. ஆனால் போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்வார். தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புட்டினுக்கு வாழ்த்துக்கள். ரஷ்சியாவின் பொருண்மிய வளர்ச்சி.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இவைகளே.. எதிரிகளுக்கு சரியான அடியாக இருக்கும். அதனை நோக்கி புட்டின் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். சுவீடனும்.. பின்லாந்தும் ஏலவே அமெரிக்காவின் வால் தான். அது ஏலவே நேட்டோ ஆயுதங்களை தான் வைச்சிருக்கின்றன. இப்போ வெறும் பேப்பர்களில் கையெழுத்து போட்டிருக்கினம்..! அவ்வளவே. ஏலவே அவை நேட்டோ ஒத்துழைப்பு நாடுகள் தான்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
புட்டினுக்கு உண்மையான ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?? இந்த யாழ் களத்தில், ஒருவர் கூட இல்லையே?? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்கிறார்கள். ....அதாவது மேற்கின் அமெரிக்காவின் எதிரி. புட்டினை ஆதரித்து .. வேறு சிறந்த காரணிகள் இல்லை ....புட்டினிடமும் இல்லை அவர்கள் என்ன செய்ய முடியும்??? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்க்க வேறு மார்க்கம் இல்லை .. ...அவர்களின் இருப்பிடம். ஒருபோதும் மாறாது உறுதியானது

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

3 months 2 weeks ago
அந்த சுதந்திரம் Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள். மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். நண்பா! சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.

என்னோட சாதி..

3 months 2 weeks ago
சாதி வெறிகளை ஒழிக்க அரசு ரீதியாக சட்டங்களை உருவாக்க வேண்டும். சாதி கதைப்போருக்கு தண்டனைகள் வழங்க வேண்டும். எல்லோரும் சமம் என்றொரு நிலையை சட்ட ரீதியாக கொண்டு வரவேண்டும். சாதியையும் மதத்தையும் கணக்கில் எடுக்காமல் தமிழர் பிரதேசங்களில் ஒரு ஆட்சி முறையே நடந்தது என்பதை யாரும் நம்பினால்........ சட்டங்கள் மூலமாக எதையுமே சாதிக்கலாம் என்பதையும் நம்பலாம். இல்லையேல் சிரட்டை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மௌனத்தை விட பிரம்புகளே சொன்னதை சாதித்தது என்பது உலக வரலாறு.

என் இந்தியப் பயணம்

3 months 2 weeks ago
பயணம் முடிந்து வந்த கையோடு யாழிலும் பகிர்வதற்கு என் பாராட்டுக்கள். எங்கே சுமே யின் கதையை (யாழின் பங்களிப்பை ) காணவில்லயே என எண்ணினேன்.

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
இதை வைச்சு புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும் அடிக்கிறம். உக்ரேனை எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறம். அப்பிடியே ரஷ்யாவையும் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கடை கைக்குள்ள கொண்டு வாறம்....😎

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
முட்டாள்தனம் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு??? பிள்ளைகளையாவது படிப்பை ஜனநாயகத்தை உண்மையை பார்க்கும்படி வளருங்கள்.

என் இந்தியப் பயணம்

3 months 2 weeks ago
இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அட இப்படியொரு பிரச்சினை இருக்கா....அப்பநான் நினைக்கவே முடியாது.. நல்லாகப் போகிறது....தொடருங்கள்..

என் இந்தியப் பயணம்

3 months 2 weeks ago
ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.

என் இந்தியப் பயணம்

3 months 2 weeks ago
நன்றி கருத்துக்கும் வருகைக்கும். நல்ல ஆசைதான் 😀 மிக்க நன்றி அண்ணா நன்றி புங்கை உண்மைதான் அண்ணா. மேலதிக பொ திக்கு 150 பவுண்டஸ். அதிலும் ரிக்கற்றுக்கு 100 பவுண்ட்ஸ் கூடக் குடுக்கலாம். எந்த விமானத்திலும் உணவு இப்ப நன்றாகவே இல்லை

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்

3 months 2 weeks ago
கச்சதீவிற்கு வந்து போவதா பிரச்சனை.........இந்திய மீனவர்கள் காரைதீவு (காரைநகர்) வரை வந்து போவது தானே பிரச்சனை. நடுக்கடலில் எல்லை தெரியாது என்பதற்காக, எப்பவுமே எங்களின் கரை மட்டும் வருவீர்களா? இதில் கச்சதீவு எங்களிடம் இருந்தால் என்ன, உங்களிடம் இருந்தால் என்ன.
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed