3 months ago
அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்! 08 Nov, 2025 | 03:33 PM DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்தார். இது 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. DNAயின் இரட்டைச் சுருள் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சனுக்கு 1962 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது. அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோவில் பிறந்தார். ஜேம்ஸ் வாட்சன் தனது 15 வயதில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்க புலமைப்பரிசில் பெற்றார். DNA கட்டமைப்பு குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர ஜேம்ஸ் வாட்சன் கேம்பிரிட்ஜுக்குச் சென்றார், அங்கு அவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக்கை சந்தித்து தனது கண்டுபிடிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229849
3 months ago
வரமா? சாபமா? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 7, 2025 1 Minute சம்பவம் 1: யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 7 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார், ஆனால் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு மூன்று பிள்ளைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் 2: 24-05-2025 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது சம்பவம் 3: கிளிநொச்சியினை சேர்ந்த 56 வயதுமிக்க கர்ப்பிணி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த கர்ப்பிணி செயற்கை முறையில் கருத்தரித்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனுக்கு தெரியாமலேயே குறித்த பெண்மணி கருத்தரித்ததாக கூறப்படுகின்றது இவை இந்த வருடத்தில் முகநூலிலும் பத்திரிகைகளிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்த செய்திகள். ஏன் இவ்வாறு கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் திருமணம் செய்யும் சோடிகளில் அண்ணளவாக நான்கில் ஒரு சோடிக்கு (23%) குழந்தைப்பேறு இன்மை ஓர் பிரச்சனையாக இருக்கின்றது. இதற்கு தீர்வாக பல்வேறு சிகிச்சை முறைகள் பெண்ணோயியல் மருத்துவத்தில் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது IVF (In vitro fertilization) என்றழைக்கப்படும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் ஆகும். இந்த IVF சிகிச்சை முறையானது பல்லாயிரக்கணக்கான குழந்தை பேறு அற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தினை வீசியுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனினும் இந்த IVF சிகிச்சையின் பொழுது பல்வேறுபட்ட மருத்துவ ஒழுக்கவியல் (medical ethics) சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இவ்வாறான கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறான ஒரு சில பிரச்சனைகளை இப்பதிவு விளக்குகின்றது 1. செலுத்தப்படும் முளையங்களின் எண்ணிக்கை (number of embryos) IVF சிகிச்சையின் பொழுது வெளிச்சூழலில் கருக்கட்டபட்ட முளையம் தாயின் கருப்பையினுள் உட்செலுத்தப்படும். தாயின் வயது, முளையங்களின் தரம், தோல்வியடைந்த IVF சிகிச்சைககிளின் எண்ணிக்கை போன்றவற்றினை கருத்தில் கொண்டு முளையங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பொதுவாக தாயினது, பிறக்க போகும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல குழந்தைகள் பிறக்கும் பொழுது ஏற்படும் தீய விளைவுகளை கருத்தில் கொண்டும் ஓர் முளையத்தினை கருப்பையினுள் உட்பதிக்கவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரிதான சில சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். உதாரணமாக தாயின் வயது அதிகம், குறைந்த தரத்திலான முளையம், பலமுறை தோல்வி அடைந்த சிகிச்சை முறைகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். எவ்வாறாயினும் 03 முளையங்களுக்கு மேல் உட்பதிக்க சிபாரிசு இல்லை. ஆனால் இன்றைய வியாபார உலகில் மேற்குறித்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படாதன் காரணமாகவே இவ்வாறான மேற்குறித்த கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறு முளையங்கள் உட்செலுத்தப்பட்டு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது தாயாருக்கு ஏற்படும் ஒரு சில முக்கிய சிக்கல்கள் 1. உயர் குருதி அழுத்தம் அதன் காரணமான வலிப்பு நோய் மற்றும் ஈரல் செயலிழப்பு 2. கர்ப்பகால சலரோகம் 3. அதிக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள் 4. குருதி சோகை 5. பிள்ளை பேறிற்கு பின்னரான குருதி போக்கு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில முக்கிய சிக்கல்கள் 1. குறை மாதத்தில் பிறத்தல் 2. நிறை குறைவாக பிறத்தல் 3. பிறந்தவுடன் முதிரா குழந்தைகள் பிரிவில் அனுமதியும் அதன் நீண்ட கால தீங்கான சுகாதார விளைவுகள் 4. இருதய, சுவாச தொகுதிகளில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகள் 5. தாயாரின் அன்பினை மற்றும் அரவணைப்பினை உரிய அளவில் பெற முடியாத நிலைமை 6. தாய்ப்பாலினை உரிய அளவில் அல்லது முற்றாக பெறமுடியாத நிலைமை இவ்வாறான IVF சிகிச்சைகள் தனியார் மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டு பிரசவத்திற்க்கு அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதிரா நிலையில் குறை மாதத்தில் பிறக்கும் பொழுது முதிராக குழந்தைகள் நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்படும் இதன்காரணமாக மற்றைய தாயாரின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். முதிரா குழந்தைகள் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கை காணப்படும் 2. வயது கட்டுப்பாடு மற்றும் சம்மதம் 50 வயதினை கடந்த பெண்களுக்கு இவ்வாறான IVF சிகிச்சை முறைகளை வழங்க கூடாது என வைத்தியர்களுக்கான வழிகாட்டி வலியுறுத்துகின்றது. தாயினதும் கருவில் உருவாகும் குழந்தையினதும் நலத்தினை கொண்டே இந்த வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படும் பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரினதும் எழுத்துமூலமான சம்மதம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இவ்வாறு அதிகரித்த வயதில் ஓர் பெண் கருத்தரிக்கும் பொழுது குறித்த பெண் மனோரீதியாக மற்றும் மருத்துவ ரீதியாக கர்ப்பத்தினை தாங்கி பிள்ளையினை பெற்று வளர்த்து எடுக்க தகுதி வாய்ந்தவளா என்று தீர ஆராய வேண்டும். இலங்கையில் IVF (MEDICALLY ASSISTED REPRODUCTIVE TECHNIQUES) பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் ஏதும் இல்லை வெறுமனே வழிகாட்டுதல் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் இவ்வாறு மருத்துவ வழிகாட்டுதல்களை மீறி ஒன்றிற்கு மேற்பட்ட முளையங்களை தமது வியாபார நோக்கம் கருதி உட் செலுத்தி கர்ப்பிணி தாய்மாரின் உயிரினை ஆபத்திற்கு உள்ளாக்கும் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் நலனில் அக்கறையில்லாத வைத்தியர்களை புறக்கணிப்பதே தீர்வாகும். குறிப்பு : இங்கு தலையங்கத்தில் வரமா? சாபமா? என குறிப்பிட்டது IVF சிகிச்சை முறையினையே ஆகும். மக்கட் செல்வம் என்றும் வரமே. “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”……… திருக்குறள் நன்றி https://tinyurl.com/ys69ddn7
3 months ago
'இந்திய வாக்காளர் ஆவணங்களில் இடம் பெற்ற' பிரேசில் பெண் - வைரலானது பற்றி கூறியது என்ன? பட மூலாதாரம், Congress Party படக்குறிப்பு, புதன்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற லாரிசா நேரியின் புகைப்படம் கட்டுரை தகவல் லூயிஸ் பெர்னாண்டோ டோலிடோ , லண்டன் கீதா பாண்டே மற்றும் யோகிதா லிமாயே, இந்தியா 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் தேர்தல் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டில் இடம் பெற்றிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்தப் பெண் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிகையலங்கார நிபுணர் லாரிசா நேரி. இதுவரை இந்தியாவிற்கே வந்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்த அந்தப் பெண், "ஏதோ தவறு நடந்திருக்கலாம், யாரோ குறும்பு செய்து விளையாடுகிறார்கள்" என்று நினைத்ததாகக் கூறுகிறார். பின்னர் தன்னுடைய சமூக ஊடகக் கணக்குகளில் செய்திகள் வந்து குவிந்தன, பலரும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்யத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார். "முதலில் அது தவறான செய்தி, என்னை வேறு யாரோ என தவறாக புரிந்துக் கொண்டார்கள் என நினைத்தேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "பின்னர் என் முகம் பெரிய திரையில் தோன்றும் வீடியோவை எனக்கு அனுப்பினார்கள். அப்போதும், அது செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்பட்டது அல்லது ஏதோ நகைச்சுவை என்று தோன்றியது. ஆனால் நிறைய பேர் ஒரே நேரத்தில் செய்தி அனுப்பத் தொடங்கிய பின்தான், அது விளையாட்டல்ல, உண்மை என்பதை உணர்ந்தேன்" என்கிறார் லாரிசா நேரி. தென்கிழக்கு பிரேசிலில் பெலோ ஹொரிசாண்டே நகரில் வசிக்கும் நேரி, இந்தியாவிற்கு ஒருபோதும் வந்ததில்லை. என்ன நடக்கிறது என்பதே புரியாமல், விஷயத்தைத் தெரிந்து கொள்ள கூகுளில் அவர் தேடிய போதுதான் அவருக்கு எல்லாம் புரிந்தது. கடந்த ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுவைத்து வாக்குத் திருட்டு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்தது. பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, ஹரியாணா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பகிர்ந்தார். அதில், தகுதி இல்லாத வாக்காளர்களின் பெயர்களுடன் ஒரு உறுதிமொழியை கையெழுத்திடுமாறு அவரிடம் கேட்டிருந்ததாகவும், அதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை தொடங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என தெரிவித்தார். ஆனால், அவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை, நேரியின் புகைப்படத்துடன் வாக்காளர் அட்டை இருப்பது குறித்தும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அறிவதற்காக அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொண்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் மீது "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார் . அவரது சமீபத்திய கூற்றுகளில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தரவை தங்களது குழு ஆராய்ந்ததாகவும், அதில் சுமார் 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் பேரின் அடையாள அட்டையில் ஒழுங்கற்ற தரவுகளை கொடுத்திருக்கின்றனர் என்றும், ஒரு வாக்காளர் எண் - பல நபர்கள்; ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள் மற்றும் போலியான முகவரிகள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். ஹரியாணா தேர்தலில் தனது கட்சியின் தோல்விக்கு வாக்காளர் பட்டியலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடியே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, பெரிய திரை ஒன்றில் பல ஸ்லைடுகளைக் காட்டினார். அவற்றில் நேரியின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். "இந்தப் பெண்மணி யார்? அவரின் வயது என்ன? இவர் ஹரியானாவில் 22 முறை வாக்களித்துள்ளார்," என்று ராகுல் காந்தி கூறினார். பிரேசிலிய புகைப்படக் கலைஞர் மேத்தியஸ் ஃபெரெரோ எடுத்த ஒரு பெண்ணின் ஸ்டாக் புகைப்படம், பல வாக்காளர் பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நேரி என்ற பிரேசிலிய மாடல், சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என பல்வேறு பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக அவர் விவரித்தார். "அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான்" என 29 வயதான லாரிசா நேரி என பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். "ஆம், எனது சிறு வயது புகைப்படம், அதில் இருப்பது நான் தான்." தான் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றுவதாகவும், மாடல் அல்ல என்றும் கூறிய லாரிசா நேரி, அந்தப் புகைப்படம் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் 21 வயதாக இருந்தபோது தனது வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார். "நான் அழகாக இருப்பதாக சொன்ன புகைப்படக் கலைஞர், என்னைப் புகைப்படம் எடுத்தார்" என்று கூறினார். புகைப்படம் எடுக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் என பலரின் கவனம் தன் மீது குவிந்ததால் நேரி பயந்துவிட்டார். "நான் பயந்துவிட்டேன். இது எனக்கு ஆபத்தானதா, அதைப் பற்றிப் பேசுவது யாருக்காவது தீங்கு விளைவிக்குமா என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை. யார் சரி, யார் தவறு என்றும் எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் சம்பந்தப்பட்ட தரப்பினரை எனக்குத் தெரியாது," என நோரி கூறுகிறார். "எனது வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த செய்திகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை, காலையில் வேலைக்குச் செல்லவில்லை. நான் வேலை செய்யும் இடத்தின் எண்ணை கண்டுபிடித்து பல பத்திரிகையாளர்கள் போன் செய்து கொண்டிருந்தார்கள்". "அவர்கள் நான் வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு செய்ததால், சலூன் பெயரை என் சுயவிவரத்திலிருந்து நீக்கிவிட்டேன். என் முதலாளியும் என்னிடம் பேசினார். சிலர் அதை ஒரு மீம் போல நினைக்கிறார்கள், ஆனால் அது என்னை தொழில் ரீதியாக பாதிக்கிறது." பட மூலாதாரம், Congress Party படக்குறிப்பு, ஹரியானாவில் சீமா, ஸ்வீட்டி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட பல பெயர்களில் நேரி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக காந்தி கூறினார் நேரியின் புகைப்படத்தை எடுத்த மேத்தியஸ் ஃபெரெரோவும் திடீர் கவனத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சமீப காலம் வரை, இந்தியா என்றால், 2009-ஆம் ஆண்டு ஒளிபரப்பான Caminho das Índias என்ற பிரேசிலிய பிரைம் டைம் நிகழ்ச்சி மட்டுமே தெரியும் என்று அவர் கூறுகிறார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாடு ஒன்றில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை அவரால் இன்னும் சரியாக புரிந்துக் கொள்ளமுடியவில்லை. இந்தியாவில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு தன்னைத் தொடர்பு கொண்ட சிலர், புகைப்படத்தில் உள்ள பெண் யார் என்று கேட்டதாக பிபிசியிடம் தெரிவித்த அவர், "நான் பதில் சொல்லவில்லை. யாரின் பெயரையும் என்னால் அப்படி சொல்லிவிடமுடியாது. இவரை (நேரியை) நான் பல வருடங்களாகப் பார்க்கவில்லை. இதெல்லாம் மோசடி என்று நினைத்து, அந்த எண்களை நான் பிளாக் செய்தேன்." என்று அவர் பிபிசியிடம் கூறினார். இருப்பினும், ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது. "இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் என்னிடம் கேள்வி கேட்டார்கள், அது மிகவும் மோசமாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன், என்னுடைய இன்ஸ்டாகிராமை செயலிழக்கச் செய்தேன். பின்னர் என்ன நடக்கிறது என்பதை கூகுள் மூலம் உணர்ந்தேன், ஆனால் முதலில் எதுவுமே புரியவில்லை." சில வலைத்தளங்கள் அனுமதியின்றி நேரியின் புகைப்படத்துடன் தனது படங்களை வெளியிட்டதாக ஃபெர்ரெரோ கூறுகிறார். "மீம்ஸ்-களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதை ஏதோ ஒரு 'கேம்-ஷோ' நகைச்சுவை போல சித்தரிப்பது அபத்தமாக இருந்தது." 2017-ஆம் ஆண்டில், ஃபெரெரோ ஒரு புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கும் போது, தனக்கு நன்கு பரிச்சயமான நேரியை புகைப்படப் படப்பிடிப்பிற்கு வருமாறு அழைத்தார். அப்போது எடுக்கப்பட்ட நேரியின் புகைப்படங்களை ஃபெர்ரெரோ பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டதாகவும், நேரியின் ஒப்புதலுடன் புகைப்பட வலைத்தளமான Unsplash-இல் வெளியிட்டதாகவும் அவர் கூறினார். "அந்தப் புகைப்படம் பெரிய அளவில் வைரலானது... சுமார் 57 மில்லியன் பார்வைகளைப் பெற்றது," என்று அவர் கூறினார். அவர் இப்போது தனது Unsplash கணக்கிலிருந்து இணைப்பை நீக்கிவிட்டார், ஆனால் அதே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நேரியின் மற்ற புகைப்படங்களைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களை எங்களுக்கு அனுப்பினார். பட மூலாதாரம், ANI "புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பயந்துபோய் அவற்றை நீக்கிவிட்டேன். நான் புகைப்படம் எடுத்த ஒருவருக்கு இவ்வாறு நடப்பதை நினைத்து அச்சமடைந்தேன், அத்துமீறப்பட்டதாக உணர்ந்தேன். நிறைய பேர் என்னிடம் வந்து, 'ஏதாவது தவறு செய்துவிட்டதாக நினைக்கிறாயா?' என்று கேட்கிறார்கள், ஆனால் நான் தவறேதும் செய்யவில்லை. தளம் திறந்திருந்தது, மில்லியன் கணக்கானவர்களைப் போலவே நானும் பதிவேற்றினேன்" என்று சொல்கிறார். அவர் இப்போது நேரியுடன் இருக்கும் தனது புகைப்படங்களுடன் கூடிய பேஸ்புக் பதிவை, தனியுரிமை அமைப்பைப் பயன்படுத்தி தனிப்பட்ட (Private) புகைப்படமாக மாற்றியுள்ளார். "நமது ட்விட்டர், பேஸ்புக், தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் மக்கள் திடீரென பெருமளவில் நுழைவதைப் பார்க்கும்போது, பீதி ஏற்படுகிறது. அதன் முதல் எதிர்வினை எல்லாவற்றையும் மூடிவிட்டு, பின்னர் புரிந்துகொள்வதுதான். சிலர் அதை வேடிக்கையாக நினைத்தார்கள், ஆனால் எனக்கு அது வித்தியாசமாக இருந்தது." ஃபெர்ரெரோவோ அல்லது நேரியோ இதுவரை இந்தியாவுக்குச் வந்ததில்லை, உலகின் ஏதோ ஓர் இடத்தில் நடந்த ஒன்று அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாக மாற்றும் என்பதைப் புரிந்துகொள்ள இன்னும் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் தேர்தல் மோசடியைக் கண்டறிய உதவியதா, அது நேர்மறையானதா? என்று ஃபெர்ரெரோவிடம் கேட்டோம். "ஆமாம், அது நேர்மறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு உண்மையில் விவரங்கள் எதுவுமே தெரியாது," என அவர் கூறினார். இதுவரை தன்னுடைய நாட்டை விட்டு வெளியே எங்குமே செல்லாத நேரி, "இது எனது அன்றாட வாழ்விலிருந்து வெகு தொலைவில் உள்ளது. பிரேசில் தேர்தல்களைக் கூடப் பின்தொடராத நான் வேறொரு நாட்டின் தேர்தலைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்று சொல்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmxevpxdexo
3 months ago
3 months ago
மிகச் சரியாக உங்களை சுயவிமர்சனம் செய்துள்ளீர்கள். தொடருங்கள்...
3 months ago
17 வயது கிரிக்கட் வீரரின் மரணம் ஏன்?? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 2, 2025 1 Minute அக்டோபர் 29, 2025 அன்று மெல்போர்னின் கிரிக்கட் பயிற்சியின் பொழுது 17 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டினின் (Ben Austin) கழுத்து பகுதியில் பந்து தாக்கியதினால் மரணம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பந்து வீசப்பட்டு கொண்டிருக்க துடுப்பாட்ட வலையினுள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள T 20 போட்டிக்கான பயிற்சியின் பொழுதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயிற்சி அமர்வின் போது குறித்த வீரர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அவர் கழுத்துப் பாதுகாப்பு (ஸ்டெம் கார்டு) அணிந்திருக்கவில்லை. இதேமாதிரியாக 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) என்பவர் பந்தினால் தாக்கப்பட்டு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். குறித்த இருவரினதும் மரணத்துக்கான காரணம் மூளைப்பகுதியில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பதிவில் கழுத்து பகுதியில் ஏற்படும் காயங்களினால் எவ்வாறு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது குறித்து விளக்கப்படுகின்றது. இதற்கு முதற்படியாக மூளைக்கு இரத்தம் வழங்கும் நாடிகளின் அமைவிடம் பற்றி தெரிந்திருத்தல் அவசியம் ஆகின்றது. எமது மூளைக்கு தேவையான இரத்தத்தினை இரு நாடிகள் வழங்குகின்றன 1. Internal Carotid Arteries ( உட்கழுத்து நாடி ) 2. Vertebral Arteries (முதுகெலும்பு நாடி ) இவற்றின் உடலின் அமைவிடத்தினை கீழ் உள்ள படம் விளக்குகின்றது. படத்தில் முறையே நீலம் ( உட்கழுத்து நாடி ) மற்றும் பச்சை (முதுகெலும்பு நாடி ) நிறங்களினால் கோடிடப்பட்டுள்ளது இவற்றில் முதுகெலும்பு நாடியானது கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி அதாவது மூளையினை நோக்கி செல்கின்றது இவ்வாறு செல்லும் பொழுது கழுத்து பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் இருக்கும் துவாரங்களின் ஊடாகவே செல்லும். மேலும் கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து (Loop) பின்னர் மண்டையோட்டின் துவாரத்தின் ஊடக மூளையினுள் செல்கின்றது. இவ்வாறு வளைந்து வெளிநோக்கி செல்வதன் காரணமாகவே அதிக அசைவுகள் நடைபெறும் கழுத்து – மண்டையோட்டு பகுதியில் இந்த கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படாமல் இருக்க முடிகின்றது. எனினும் பின்வரும் காரணங்களினால் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது 1. கழுத்தின் முள்ளந்தண்டுகளின் கிடையான முனைகளின் ஊடாக செல்லும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் ஏற்படும் என்பு முறிவுகள், மூட்டு விலகல்கள் என்பவற்றின் காரணமாக கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது 2. கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து செல்லும் பொழுது நேரடியாக விசையின் தாக்கத்திற்கு உள்ளாகி கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு நாடியின் சுவரானது மெலிதாகவும் இலாஸ்டிக் தன்மை குறைந்தும் காணப்படுவதன் காரணமாக காயப்படும் தன்மை அதிகமாகின்றது மேற்குறித்த காரணங்களினால் பந்து மற்றும் கராத்தே அடி ( karate blow) போன்ற மொட்டையான விசைகள் கழுத்து பகுதியில் தாக்கும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது (Dissection of vertebral artery) மேலுள்ள படத்தில் மேற்குறித்த காயங்கள் ஏற்படும் பகுதிகள் 1,2 குறிக்கப்பட்டுள்ளன மேலும் சில சந்தர்ப்பங்களில் கழுத்து பகுதியில் கட்டாயம் விசை ஒன்று தாக்க வேண்டிய தேவை இல்லாமலேயே தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் வழமைக்கு மாறான எல்லை மீறிய அசைவு காரணமாகவும் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இவ்வாறான மொட்டையான விசையின் தாக்கத்தினால் களுத்துபகுதியில் உள்ள உட்கழுத்து நாடியும் காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் கழுத்து முள்ளந்தண்டு நாடி கிழிந்து காயப்படுவதன் காரணமாக அக்கிழிவுக்காயமானது விசை தாக்கிய இடத்தில் மட்டும் உண்டாகாது நீண்ட தூரத்திற்கு செல்லும் இதன் காரணமாக கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டாலும் தலையினுள் இரத்த கசிவு உண்டாகலாம் நன்றி https://tinyurl.com/4c3pmdem
3 months ago
போராட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டினலே போதும் உடனே, போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார்கள் மாவீரர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று மூக்கால் அழுவதே வேலையாகிவிட்டது. 15 வருடத்திற்கு மேலாகிற்று ஆனால் இவர்கள் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை. தொடர்ந்து தோல்வி பாதையில் வெற்றி நடை போடுவதும் ஒரு சுகம் தான். என்ன சுகம்! இந்த சுகம்!
3 months ago
நான் கேள்விப்பட்ட வரையில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள் என்று அறியவில்லை, ஆனால் உங்களில் யாராவது கேள்விப்பட்டிருக்கலாம். யாழ்ப்பாணத்தின் முஸ்லிமகள் வேறு பிரதேச முஸ்லிம்களை விட யாழ்ப்பாணத்து மக்களுடன் தான் அதிக பிணைப்புடன் இருந்தார்கள் என பெரியவர்கள் கூறக்கேள்விப்பட்டிருக்கின்றேன்.
3 months ago
சில சமயங்களில் சில விடயங்களுக்கு ஊர்ப்பாசம் தர்மோபதேசம் செய்யும். பல சமயங்களில் பலவிடயங்களுக்குக் கள்ள மௌனங்காக்கும்!🕶️
3 months ago
ஆம் நான் இப்பொழுது எகிப்தில்தான் தற்காலிகமக வசிக்கின்றேன். போன கிழமை இந்த நூதனசாலையை திறந்தார்கள். இதற்காக இங்கு ஒரு நாள் லீவு விட்டார்கள். கெய்ரோ மிகவும் பழமையான நகரம். அழகிய நைதி தமிழர்கள் இங்கு கைத்தறி, நெசவு தொழில்களுக்கக வந்து பல வருடங்களாக வாழ்கின்ரார்கள். பொதுவாக நான் மத்தியகிழக்கில் வேலை செய்யும்போது கண்டது என்னவென்றால் எட்கிப்தியர்கள் இலங்கை , இந்தியவர்களை மதிப்பதில்லை. கடினமாக நடத்துவார்கள். இங்கு அப்ப்டியள்ள இவர்கள் மிகவும் அன்பாக பழகுகின்ரார்கள். இந்த நுதனசாலை இருக்கும் கிசா பகுதிக்கு கடந்த மாதம் என்னுடய ஒடிட் விடயமாக சென்றிருந்தேன். மிக ஆழகான நகரம். பழைய இத்தாலிய கலாச்சரத்தை நினவூட்டுகின்றது. எகிப்ப்தை பெண்களாஇ போல நான் ஆழகனவர்களை எங்கும் காணவில்லை. .
3 months ago
நாகபட்டினத்தின் கடலில் உள்ள கடற்கலங்கள் தொடர்பான ஒல்லாந்தர் கால ஓவியம் | 1702
3 months ago
குமாரசாமி, அது தான் தெளிவாக கூறினேன் அரசியல் ரீதியான இனவாதம் என்பதை. இவ்வாறான இனவாதம் உருவாவதற்கு மற்றய இனம் தொடர்பான அச்ச நிலையை அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் மேற்கொள்ளவது முக்கிய காரணம். ஶ்ரீலங்காவில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பான அச்சநிலை என்பது அப்படி ஊட்டப்பட்டது. ஆனால், சமூக ரீதியான இனபேதம் என்பது நாம் மேலானவர்கள் என்ற நினைப்பில் மற்றய இனங்களை கீழானவர்கள் என்ற கற்பிதத்தில் ஏற்படும் இனபேதம். அப்படியான இனவாதம் சிங்கள மக்களிடம் இல்லை என்பதை அவர்களுடன் தனிப்பட பழகும் போது உணர்ந்து கொள்ளலாம். தமிழர்கள் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் அனுகூலங்களை நோக்கியதே என்பது வெளிப்படையானது. சிங்கள கட்சி என்பதை விட ஆளும் கட்சி என்பதே உண்மை. தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை அல்லது சுயாட்சியை வெளிப்படையாக ஆதரித்த எந்த சிங்களக் கட்சிக்கும் தமிழர்கள் அடையாளத்திற்காக கூட வாக்களித்தில்லை. உதாரணமாக 1982 ஜனாதிபதி தேர்தலில்ல நவ சமாஜக்கட்சி தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை வெளிபடையாக ஆதரித்தது. ஆனால் ஜேஆர் அதை விட பல மடங்கு அதிக வாக்குகளை யாழ்பாணத்தில் பெற்றார். 1999 ல் பலமாக தமிழர் தரப்பால் விமர்சிக்கபட்டசந்திரிகா கணிசமான வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் கூட தமிழ் மக்களின் சுயாட்சி அலகுகளை ஆதரித்த மக்கள் போராட்ட முண்ணணிக்கு வாக்களிக்காமல் என் பி பி கே மக்கள் வாக்களித்தனர். இந்த நிலையில் நீங்கள் தமிழர் பிரதேச தேர்தல் வாக்களிப்பை இங்கு உதாரணத்திற்கு எடுத்தது தவறானது.
3 months ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | “மோபி டிக் (Moby-Dick)” நாவல் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” நாவல் திமிங்கல வேட்டைக்குப் புறப்பட்டு தத்துவங்களுக்கு வலை வீசிய நாவல் அ. குமரேசன் மதம் கூறும் தத்துவங்களை விசாரணைக்கு உட்படுத்துகிற, இயற்கையில் மனிதரின் இடம் என்று விவாதிக்கிற ஆழ்ந்த உள்ளடக்கத்திலும், மாறுபட்ட சித்தரிப்பு வகையிலும் முத்திரை பதித்த படைப்பு என இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிற ஒரு நாவல், அது வெளியானபோது (1851) கரடு முரடான எழுத்து நடை என்று புறந்தள்ளப்பட்டது. மிக நீளமாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. புத்தகக் கடைகளில் விற்பனையாகாததால் பதிப்பகங்களால் புறக்கணிக்கப்பட்டவராக ஒரு துறைமுகப் பணியாளராக வேலை செய்தார் அதன் படைப்பாளி. இவரை எழுத்தாளர் என்று சொல்கிறார்களே என மற்றவர்களால் பேசப்படுகிற அளவுக்கே இருந்தவர் தனது மற்ற படைப்புகளும் ஏற்கப்படாத நிலையிலேயே காலமானார். ஹெர்மன் மெல்வில் (Herman Melville) அந்த அமெரிக்க எழுத்தாளர் பெயர் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) (1819–91). அவருடைய அந்த முக்கியமான நாவல் ‘மோபி டிக்’ (Moby-Dick). கடல் சார்ந்த வாழ்க்கையே மையமாக இருக்கும் மாலுமிகளும் தொடர்ச்சியாகப் பயணிக்கிறவர்களும் கப்பல்களை அடிக்கடி தாக்கக்கூடிய குறிப்பிட்ட திமிங்கலங்களுக்கும் இதர பெரிய உயிரிகளுக்கும் அடையாளப் பெயர்கள் சூட்டுவதுண்டு. அப்படி, கடலில் அட்டகாசம் செய்யும் ஒரு வெள்ளைத் திமிங்கலத்திற்குச் சூட்டப்பட்ட பெயர்தான் மோபி டிக் (Moby-Dick). அக்காலத்தில் மெழுகு, சில வாசனைத் திரவங்கள், எந்திர உயவுப்பசை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான கொழுப்பு எண்ணைக்காகவும், உணவுக்கான இறைச்சிக்காகவும், மருத்துவ ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கையால் வெட்டியெடுக்கப்பட்ட உறுப்புகளுக்காகவும் திமிங்கல வேட்டைகள் கட்டுப்பாடின்றி நடத்தப்பட்டன. அதன் செரிமான மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு பசை, கடல் நீரில் மிதந்து, சூரிய ஒளியால் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒரு நறுமணத்தைப் பெறும். அம்பரிஸ் எனப்படும் அந்தப் பொருள், மனிதர்களின் இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது! குறிப்பாக ‘விந்துத் திமிங்கலம்’ (ஸ்பெர்ம் வேல்) எனப்படும் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டன. அவற்றின் தலை வழியாகக் கிடைக்கும் கொழுப்பு எண்ணெய் விந்து போன்ற நிறத்துடனும் பசைத்தன்மையுடனும் இருப்பதால், அது திமிங்கலத்தின் விந்து என்று தவறாகக் கருதப்பட்டு அவ்வாறு குறிப்பிடப்பட்டது. (கடலில் திமிங்கலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து நாடுகளிடை திமிங்கல ஆணையம் (IWC) அமைக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில்தான் வணிக நோக்கத் திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் அந்தத் தடையைக் கண்டுகொள்வதில்லை). கடலில் இறங்கும் கப்பலின் கேப்டன் அந்த மோபி டிக்கையும் தேடுகிற பயணத்தின் மூலமாக மனிதர்களுக்கும் இதர உயிரிகளுக்குமான உறவு பற்றியும் பேசுகிறது இந்த நாவல். வேட்டையின் கதை சாகச வேட்கையும், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபடும் விருப்பமும் கொண்டவனான இஸ்மேல் ‘பிக்வோட்’ என்ற திமிங்கல வேட்டைக் கப்பலில்,ஒரு மாலுமியாக வேலைக்குச் சேர்கிறான்.. அவனுடைய பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. கப்பலின் கேப்டன் அஹாப் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்திக் கொண்டவர். மிகுந்த பிடிவாதக்காரரான அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தது மோபி டிக் (Moby-Dick) திமிங்கலத்தைப் பிடிக்க முயன்றபோதுதான். அதை எப்படியாவது கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற பழியுணர்வோடு இருக்கிறார். அதற்காகவே உலகின் எல்லாக் கடல்களிலும் கப்பலைச் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறார். அவருடைய பணியாளர்களுடன் திமிங்கல வேட்டைக்காரர்களான மூன்று பேர் சேர்ந்துகொள்கிறார்கள். பின்னர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஈட்டி எறிபவர்களான மூன்று பேர் அஹாப்பின் பழிவாங்கல் பயணத்தில் இணைகிறார்கள். அந்தப் பயணத்தை இஸ்மேல் சித்தரிப்பதன் மூலம் கடலின் பல்வேறு தன்மைகள், திமிங்கலம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இயல்புகள், திமிங்கல வேட்டை நுட்பங்கள், அது சார்ந்த சந்தை நிலவரங்கள், சாகசமும் சோதனைகளும் நிறைந்த மாலுமிகளின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நாம் அறிகிறோம். அஹாப்பின் பழி வெறி படிப்படியாக அதிகரித்து, அவரை ஒரு விசித்திரமான, கொடூரமான தலைவராக மாற்றுகிறது. அவர் திமிங்கலங்களால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களது கப்பல்களின் கேப்டன்களைச் சந்திக்கிறபோது அவர்கள் மோபி டிக் (Moby-Dick) பற்றி எச்சரிக்கிறார்கள். அவர் தன் நோக்கத்தில் பின்வாங்குவதாக இல்லை. உச்சக்கட்டத்தில் பிக்வோட் கப்பல் மோபி டிக்கைக் கண்டுபிடிக்கிறது. அஹாப்பும் மற்ற மாலுமிகளும், உடன் வந்த வேட்டையர்களும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான, அழிவுகரமான தாக்குதல்களில் இறங்குகின்றனர். மோபி டிக்கும் மோதுகிறது. அதுவொரு கடற்போராகவே நடக்கிறது. அஹாப் தனது ஈட்டியால் தாக்க முற்படும்போது மோபி டிக் (Moby-Dick) கப்பலைத் தாக்குகிறது. கப்பல் முழுமையாக அழிகிறது. உயிரிழக்கும் நிலையில் இருக்கும் மோபி டிக், ஒரு படகை மீட்க முயலும் அஹாப்பைக் கையில் ஈட்டியோடு கடலுக்குள்ளே இழுத்துச் சென்றுவிடுகிறது இஸ்மேல் தவிர்த்து மாலுமிகள், திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள் எல்லோரும் மோபி டிக் (Moby-Dick) தாக்குதலில் சிக்கியும் கடலில் மூழ்கியும் உயிரிழக்கிறார்கள். பயணிக்கிறபோது இறந்துபோகக் கூடியவர்களை கடலிலேயே நல்லடக்கம் செய்வதற்காகக் கப்பலின் தச்சர் செய்து வைத்திருந்த ஒரு சவப்பெட்டி நீரில் மிதக்கிறது. அதில் தொற்றிக்கொள்ளும் இஸ்மேல் மட்டும் தப்பிக்கிறான். அந்தப் பகுதிக்கு வரும் மற்றொரு கப்பலின் மாலுமிகள் அவனை மீட்கிறார்கள். தத்துவ விசாரணைகள் கூரிய ஆயுதம் இருந்தும் மோபியிடமிருந்து அஹாப் தப்பிக்க முடியாமல் போவது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எந்த அளவுக்கு அழிவில் இறங்க முடியும் என்று நுணுக்கமாக யோசிக்க வைக்கிறது. இயற்கையின் வழங்கல்களைப் பயன்படுத்திக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழலாமேயன்றி, இயற்கையோடு முரண்பட்டுப் பகைத்து வாழ முடியாது என்று நாவல் விவாதிக்கிறது. இயற்கையின் கட்டுக்கடங்காத வல்லமையின் பிரதிநிதிதான் மோபி டிக் (Moby-Dick) திமிங்கலம் என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். நாவல் நெடுகிலும் பைபிள் குறிப்புகள், தத்துவ விளக்கங்கள், மனிதரின் இருப்பு, நன்மை–தீமை பற்றிய கருத்தியல்கள், நீதிக் கோட்பாடுகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாவல் அப்போது எதிர்க்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். அஹாப் தன் விதியால் அலைக்கழிக்கப்பட்டாரா அல்லது தனது பழியுணர்வால் இழுத்துச் செல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டள்ளன. தலைமைப் பொறுப்பில் இருந்தவனின் மூர்க்கத்தாலும் முட்டாள்தனத்தாலும் மற்றவர்களும் அழிவைச் சந்திக்க நேரிடும் அரசியலும் நுட்பமாகப் பேசப்பட்டிருக்கிறது. எதிர்ப்புகளையும் புறக்கணிப்புகளையுமே சந்தித்த மெல்வில் தனது நாவல் குறித்த இத்தகைய நல்ல மதிப்பீடுகளைப் பார்க்க முடியாமல் போனது ஒரு துயரம்தான். படைப்பு வெற்றி பெற்று படைப்பாளி தோற்றுவிட்ட கதையா? இல்லை, படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது படைப்பாளியின் வெற்றிதானே? எழுத்தாளரின் சாகசங்கள் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) வாழ்க்கையே கூட சாகசங்கள் நிரம்பியதுதான். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையின் மரணத்தால் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, குடும்பத்திற்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல வேலைகளைச் செய்த அவர் பின்னர் ஒரு வங்கி ஊழியரானார். அதன் பின் பள்ளி ஆசிரியரானார். தனது 19ஆவது வயதில் ஒரு கப்பல் ஊழியராகச் சேர்ந்து கடல் பயணத்தைத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கப்பல் வாழ்க்கை சார்ந்த சில வெற்றிகரமான நாவல்களை எழுத உதவின. வேறொரு கப்பலில் வேலை செய்தபோது ஒரு தீவில் நிறுத்தப்பட்டிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பித்து ஓடினார், சில காலம் பழங்குடி மக்களுடன் பழகி வாழ்ந்தார். இடையில் பிரிட்டிஷ் சிறையில் சில மாதங்கள் அடைக்கப்பட்டார். விடுதலையாகி நாடு திரும்பிய பிறகு, அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். இந்தக் கடல் அனுபவங்களின்போது ‘மோக்கா டாக்’ என்று பெயரிடப்பட்ட திமிங்கலம் பற்றி நிறைய விவரங்களை அறிந்தார். அது மோபி டிக்காகப் பரிணமித்தது என்று விக்கிபீடியா, ‘ஜெமினி’ ஏஐ தளங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக் கழகங்களின் இலக்கிய ஆய்வுகளுக்குரிய ஒரு புத்தகமாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மௌன சினிமாக் காலத்திலேயே ‘தி ஸீ பீஸ்ட்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. பின்னர் அதே திரைக்கதையின் பேசும் பதிப்பாக நாவலின் பெயரிலேயே இரண்டு முறை திரைப்படங்களாக வந்தது. இந்தக் கதையைத் தழுவிய, வேறு கதாபாத்திரங்களையும் அனுபவங்களையும் காட்டிய சில தொலைக்காட்சித் தொடர்களும் வந்திருக்கின்றன. அறிவியலாளர்களும் பல்லுயிர்ப் பாதுகாப்பு அக்கறையாளர்களும் விடுக்கும் எச்சரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வேட்டைச் சுரண்டல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிரான பொதுச் சீற்றத்தை வளர்ப்பதில் தனது பங்கையும் அளிக்கிறது மோபி டிக் (Moby-Dick). https://bookday.in/books-beyond-obstacles-series-18-is-herman-melvilles-moby-dick-whale-hunting-novel-based-article-written-by-a-kumaresan/
3 months ago
பல ஊடகங்களும் இந்த விடயத்தில் மெளனமாகஇருக்கின்றார்கள். இந்தக்குரல் பதிவுகள் கொஞ்ச நாட்களாக சமுக ஊடகளில் வெளிவந்தாலும் இதன் உண்மைத்தன்மை அறியாத காரணத்தால் மெளனமாக இருந்தாலும். குரல்பதிவில் பேசிய நபர் குறுகிய காலத்தில் மர்மமான முறையில் இறந்த விடயமும் செல்வம் இது தொடர்பாக எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுத்துள்ளதும் சந்தேகங்களை எழுப்புகிறது.
3 months ago
இப்போதைய எகிப்து இன் முறையான உரித்தாளர் கொப்ட்ஸ் (Copts), இப்பொது சிறுபான்மை இனம், அரேபியரின் கைப்பற்றுதல் மற்றும் குடியேற்றத்தின் பின். ஏனெனில் Copts இன் சந்ததி தோற்றம், வழிவந்தது pharaoh (என்ற அரச வம்ச) குழுமத்தில் இருந்து (என்பது நம்பிக்கையும், வரலாறு சான்றுகளும் இருக்கிறது) Tutankhamun ஒரு pharaoh (அரசன், அரசவம்சத்தின் தலைவன்).
3 months ago
மிகவும் துயரமான செய்தி . எவ்வளவு ஆசைகளை அந்தப் பெண் வைத்திருந்திருபபார்.செயற்கை கருத்தரித்தல் செய்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாவது பல சந்தர்பங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்.விஞ்ஞானம் இதற்கொரு முடிவை காணும் முயற்சி இன்னும் பெறவில்லை என்பது பெரிய சோகம்.
3 months ago
இல்லை சுவி எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. பாம்பு கடித்தநேரம் அனேகமாக 8-8:30 இரவு. இரவில் கார்காரரை தேடியலைந்து வைத்தியரிடம் போக 10 மணியாகியிருக்கும். கால் விரலில் தான் கடித்தது.மெதுவாக இரத்தம் வந்தது. இது நடந்தது 60களின் கடைசியில் என்ன வைத்தியம் செய்தார் என்று ஞாபகம் இல்லை. மரங்களில் காண்பது கோடாலி பாம்பு என்பார்கள். வேறு பாம்பாகவும் இருக்கலாம்.
3 months ago
ஶ்ரீமாலி சொல்லுவது உண்மைபோலத் தான் தெரிகின்றது. “இருட்டில் பாம்பு படமெடுத்து ஆடினால் யாருக்கும் தெரியாது!” 🕶️
3 months ago
கருணைக் கொலை செய்தாரோ தெரியவில்லை. ஆனால்சட்டத்தை மீறுவதால் எற்படும் விளைவுகளை அவர் சிந்திதிருக்க வேண்டும். அல்லது கடுமையான மன அழுத்தத்ததினால் இப்படிச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
3 months ago
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed