புதிய பதிவுகள்2
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
அந்த வைத்தியரிடம் நானும் பாம்பு கடித்தவரை அழைத்து சென்றுள்ளேன் ....... அவர் சில மருந்துகளும் குடுத்து பின் கடிவாயில் கோழிகளின் பின்பக்கத்தை வைத்து அழுத்தி பிடிப்பினம் ......விஷமேறி அதுகள் ஒவ்வொன்றாய் இறக்கும் ........பின் கோழி சாகாதபோது நிறுத்துவார்கள் . ....... உறங்க விட மாட்டார்கள் ........ உங்களுக்கும் அப்படி நடந்ததா . .......! மன்னார் விடத்தல்தீவில் எனது உறவினர் ஒருவர் பிரபலமான பாம்புக்கடி வைத்தியராக இருந்தவர் . ........ இப்போது அவர் காலமாகி விட்டார் ......... அவரெல்லாம் மிகவும் ஆச்சாரமாக பக்திசிரத்தையாக வாழ்ந்து வந்தவர் . ......... ஒருவர் வீட்டுக்குள் வருவதைக் கொண்டு நேரகாலமெல்லாம் கணித்தே பாம்பு கடித்தவர் இருக்கிறாரா மோசம்போய் விட்டாரா என்பதை சொல்லி விடுவார் ........ இவர் பெரும்பாலும் இலவச வைத்தியம்தான் செய்வது வழமை ........ இன்றைய காலத்தில் பலர் இவற்றை நம்பப் போவதில்லை ஆயினும் எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் . .........!
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
திரிக்கு சம்பந்தம் இல்லை. குறிப்பாக, இது ஒரு வரலாறு குறிப்பாக. ஒருவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை. பாப்பாத்தி -இதை எப்படி பெயராக? இலங்கையில், (ஈழத்தமிழர் மத்தியில்) நான் அறிந்த வரையில் பாப்பாத்தி, என்பது (பெண் ) தனது கவர்ச்சி தோற்றத்தை பாவித்து (காட்டி), அவர்களின் காரியங்களை, தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்கள். இப்படி சில குடும்பங்கள் இருந்தன பாப்பாத்தி குடும்பங்கள் என்று. நாளடைவில், அவை பார்பார் குடும்பங்கள் என்று திரிந்து விட்டது. இங்குள்ளவர்களில், நான் மட்டுமே (வெளியே சொல்லி) இருப்பதால், இபோதைய சந்ததிக்கு, இது அருமையாகவே தெரிந்து இருக்கும் அல்லது சமுகத்தில் இருந்து அகன்று இருக்கும் என்று நினைக்கிறன். (இந்த பெயரின் வரலாறு அரா காலத்தில் இருந்து)
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
மழையால் கடசி போட்டி கைவிடப் பட்ட இந்தியா தொடரஒ 2-1 என வென்று விட்டினம் ஒரு நாள் தொடரில் தோல்வி 20ஓவர் போட்டியில் வெற்றி..........................
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது
கொலையுண்ட பெண் எப்படி? எதற்காக ?கொலையெய்யப்பட்டார் என்பது விசாரணையின் பின்னரே தெரியவரும் . செய்தி நிறுவனங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எழுதும் வக்கிர மனப்பாண்மை கொண்டவை என்பதில் மறுப்பு இல்லை தங்கள் வியாபாரத்திலேயே கண்ணாக இருக்கும் அதற்காக கண்ணும் காதும் மூக்கும் வைத்து எழுதும் கொலையுண்டவருக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளன . அவரது கணவன் ஒரு சராசரி கூலித் தொழிலாளி அவர்களுடைய நிலைமை இங்கே யாருக்கும் தெரியாது அந்தக் குழந்தைகள் தாய் இல்லாமல் எப்படி வாழ போகின்றார்கள் கொலையுண்டவரின் கணவரால் அந்தக் குழந்தைகளைத் தனியனாக நின்று காப்பாற்ற முடியுமா என்ற சிந்தனைகள் இல்லாமல்...... உயிருடன் இல்லாத கொலையுண்ட விசாரணையே இன்னும் நீதி மன்றத்திற்கு வராத நிலையில் தனி நபருடைய தனிப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து அப்படி இப்படி நடந்தது என மிகுந்த மலிந்த ரசனையுடன் கருத்துக்களை எப்படி யாழ் களம் அனுமதிக்கின்றது
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம்
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் யாழில் கைது!
08 Nov, 2025 | 04:46 PM (பு.கஜிந்தன்) கொழும்பு கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று இரவு சொகுசு காரில் வந்த குழுவொன்று, நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதே காரில் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , துப்பாக்கி சூட்டினை நடாத்திய பெண் உட்பட இருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனையை சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229855
சிங்களத்தின் நீதித்துறைக்கு இளஞ்செழியன் தன்னை மாற்றிக்கொள்ளமாட்டார்: வித்தியாதரன்
பழைய சம்பவங்கள் சிலவற்றை நினைவூட்டிய உரை.
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கு சிலர் (இவர்களின் கம்பனி முறிந்து, சாட்டப்பட்ட குறைந்த குற்றத்தையம் அவர்கள் எதிர்ப்பது) பொத்தாம் பொதுவாகவே சொல்லுவதாக அவர்களாகவே சொல்லி உள்ளனர். அனால், வரியை பற்றி அவர்கள் சொல்லுவது / பார்வை தவறு. வரி எப்போதும் , நடப்பாண்டில் கட்டப்பட வேண்டியதும், பிற்போடப்படுவதும் (வரித்திணைக்களம் அறிந்து அனுமதியுடன் ) எப்போதும் கடன், ஏனெனில் நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ கொடுக்கப்படவேண்டியது. இங்கே ஏற்கனவே 250 மில்லியன் நடப்பாண்டு அல்லாஹு 1 ஆண்டு வாரியாக இருக்க முடியாது என்பதன் கணக்கு இருக்கிறது. முறியும் போது, எந்த கடனும் கொடுக்கப்பவேண்டிய நிலை. ஊடகங்கள் அதையே சொல்கிறது. (250 மில்லினியனுக்கு வரி என்பான் உருவாக்க கணக்கு இல்லை ஊடகத்தில்) ஆனால், இங்கு சொல்லப்பட்டது, முறியும்போது கட்டப்படவேண்டிய (ஏய்க்கப்படாத ) வரியால் அரசு / பொதுமக்களுக்கு நாமம் போடப்படுவதாக. ஏய்க்கப்படாத (கட்டப்பட வேண்டிய) வரியில், நாமம் போடப்பவதற்கு, அரசு / பொதுமக்க எதை உழைத்தது அல்லது கொடுத்தது எந்த நிறுவனம் என்றாலும்? தனியார் வியாபார அமைப்பில், எந்தவிதமாக பார்த்தாலும்,(வரி அறவிடப்படும் தொகை கூடலாம், குறையலாம்), ஏய்க்கப்படாத வரிகளால் ஒரு போதும் அரசாங்கத்துக்கோ, பொதுமக்களுகோ நாமம் போடப்படுவது இல்லை. இது வரியின் அடிப்படை. வரி அறவிடப்படலாம் என்ற சட்டத்துக்கு (கருத்துருவாக்கத்துக்கு) யதார்த்தம் கொடுப்பதே ஒன்றில் வருமானம் (சில வரி அமைப்புகள் அல்லது சந்தர்ப்பத்தில் வருமானத்துக்கு வரி) அல்லது இலாபம் உருவாகினால். வரி என்பது பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் கதை. ஆனால் அரிசியை போட்டு உலைவைப்பதில்லை அரசு. (அதாவது அரசு முயற்சி எடுத்து உழைப்பது இல்லை) (மன்னர் , காலனித்துவ காலத்திலாவது சொல்லலாம் அரசு உழைத்தது என்று , ஒன்றில் பறிப்பதில், அல்லது படையை அனுப்பி கப்பம் கேட்பதில் என்று, அல்லது அரசுக்கே எல்லாம் சொந்தம், பாவனைக்கு அரசு அனுமதித்து இருப்பதாக.) அரசு உழைக்காதது, அரசு அந்த வரியை பிற்போடப்பட, முதலிட அனுமதிப்பதில் ஒரு பகுதி காரணம் கிட்டத்தட்ட தனிமனித ப்பார்வை - நான் உழைக்காதது, முதலிட்டு கூட வந்தால் நன்மை, இழந்தால் அது மட்டுமே, ஏனெனில் இப்படியான பல முதலீடுகள் (பிற்போடப்பட்ட வரிகள் பல கம்பனிகளில் முதலீடு ), முதலீட்டை இழந்தாலும் (குறிப்பிட்ட கம்பனிகளில் பிற்போடப்பட்ட வரியை) , மொத்தத்தில் கூடவே எனது நிகர வருமானம் (அதாவது வரி). மறுவளமாக, அப்படி செய்யாமல் அல்லது தடுத்தால் (அதாவது பிற்போட, முதலிட அனுமதிப்பது என்பதை தடுப்பது) தான், அனுமதிக்கும் போது வரும் வருமானத்தை பார்க்க , தடுக்கும் போது வருமானம் குறைவதன் சாத்திய கூறுகள் கூட. ஏனெனில் வியாபரங்கள் நீண்டகாலத்தில் முறிவது / நிலைப்பது, இயற்கை நிகழ்தாவான 50% க்கு கிட்ட. (அதாவது, பானைகள் குறைவது), பொருளாதாரம் சுருங்கும் சாத்திய கூறுகள் மிக அதிகம். அரசுக்கு எந்த பிறிம்பான முயறசியும் எடுக்காது, பொருளாதார செயற்பாடுகளை அதிகரிக்க, மற்றும் உந்துதல் அளிக்க ஒரு வழி. பொருளாதார வளர்ச்சி, அல்லது இருக்கும் நிலையை தக்கவைப்பதிலும் பெரும்பங்கு. அத்துடன் செல்வம் / பணத்தை தேக்கி வைத்து இருக்காமல், எப்போதும் பொருளாதா வளர்ச்சி இயக்கத்துக்குள் கொண்டுவருதல், மற்றும் அகன்ற சமூகத்துக்கு பரப்படுவது, பங்கிப்படுவது போன்ற்வவற்றில் பெரும்பங்கு. ( அத்துடன், பிற்போடப்பட்ட வரியை முதலிட அனுமதிப்பது, வேறு தெரியாத, மறைமுக பொருளதார விளைவுகளை ஏற்றப்படுத்தும்.) அரசுக்கு இப்படியான இலவச வாய்ப்புக்களை கொடுப்பதே, ஏய்க்கப்படாத வரிகள். (இதனால் தான் தனிப்பட்ட முதலீட்டில் கூட, வரியை பிற்போடும், முதலிட முறை இருக்கிறது.) (பொருளாதாரத்தில் இலவசம் என்பது இல்லை, இப்படியான மிக அருமையான சந்தர்ப்பங்களை தவிர்த்து.) ஆகவே, முறியும் வியாபாரங்களில் , கட்டப்படவேண்டி இருக்கும் (ஏய்க்கப்படாத) வரி, வாய்ப்புக்கான இலவச செலவு, அரசு எந்த பணத்தையும் முதலிடாமல், உழைக்காமல். இங்கு சிலர் சொல்லும் வைத்தியசாலை கட்டுவது, அவர்களின் வரி பற்றிய புரிதல் / பார்வையை கொண்டு செய்வது கடினம். (அரசு (அறவிட்ட) வரிப்பணத்தை கொடுத்து வியாபாரத்தை தூக்கி நிறுத்த, வியாபரம் முறிந்தால் தான் நாமம், அதுவும் ஒப்பீட்டளவில்.)
கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்
செய்தியாளரின் கேள்வியால் நடிகை கௌரி கிஷன் கோபம்: அதர்ஸ் பட ஊடக சந்திப்பில் என்ன நடந்தது? படக்குறிப்பு, நடிகை கௌரி கிஷன் 7 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, அந்தப் படத்தின் கதாநாயகியான கௌரி கிஷன் தனது எடை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு கோபமாக பதிலளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, "அந்த செய்தியாளர் சந்திப்பில் அவருக்கு ஆதரவாக வெளிப்படையாக யாரும் குரல் கொடுக்காத போதும், அவர் துணிச்சலாக அந்த நிலைமையைக் கையாண்டார்" என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கௌரி கிஷன், புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் 'அதர்ஸ்' (others) என்ற திரைப்படம் இன்று (நவம்பர் 7) வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்தச் சந்திப்பின்போது பத்திரிகையாளர் கார்த்திக்கும் நடிகை கௌரி கிஷனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சந்திப்புக்கு முன்பாக இந்த திரைப்படம் குறித்த மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, "கதாநாயகியின் எடை எவ்வளவு?" என்று கதாநாயகனிடம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதே நபர், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநரிடம் அதேபோன்ற மற்றொரு கேள்வியை எழுப்பினார். அப்போது உடனிருந்த நடிகை கௌரி கிஷன், "நீங்கள் தானே எனது எடை என்ன என்று கேட்டது?" என்றார். அதற்கு முதல் வரிசையில் இருந்த அந்த பத்திரிகையாளர், "ஆமாம். நான் கேட்டதில் என்ன தவறு" என்று பதிலளித்தார். "என்ன தவறா? நீங்கள் என் எடையை கேட்டுள்ளீர்கள், உங்கள் எடை என்ன? கூறுகிறீர்களா?" என்று கௌரி கிஷன் கேள்வி எழுப்பினார் இதற்கு மீண்டும் பதிலளித்த அந்த பத்திரிக்கையாளர் தான் கேட்ட கேள்வியில் தவறு இல்லை என்று கூறி குரலை உயர்த்திக் கோபமாகப் பேசினார். படக்குறிப்பு, பத்திரிக்கையாளர் கார்த்தி 'என்ன சம்பந்தம் உள்ளது?' அப்போது கௌரி கிஷன், "கதாநாயகியின் எடை என்ன என்று கேட்பது மரியாதைக் குறைவான கேள்வி" என்றார். "இந்தக் கேள்விக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?" என்று காட்டமாகப் பேசினார் கௌரி கிஷன். "ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உடல்வாகு உள்ளது. நான் எனது திறமை பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இதுவரை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலேயே நடித்து வந்துள்ளேன்" என்று பதிலளித்தார். அந்தச் சந்திப்பில் இருந்த மற்றொருவர் அந்த கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் பேச, கௌரி கிஷன், "எனக்கு அதில் எந்த நகைச்சுவையும் தெரியவில்லை, உருவ கேலியை (body shaming) இயல்பான செயலாக மாற்றாதீர்கள்" என்று கண்டித்தார். மேலும் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த அரங்கில் தான் ஒருவர் மட்டுமே பெண் என்றும், தன்னை அவர் குறிவைத்துப் பேசுகிறார் என்றும் கௌரி கிஷன் குற்றம் சாட்டினார். கௌரி கிஷன் மற்றும் பத்திரிகையாளருக்கு இடையிலான வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதும், அது குறித்த கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சினிமாவில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும், சினிமா துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்தும் விவாதங்கள் ஆன்லைனில் நடைபெற்றன. "கௌரி சிறந்த செயலைச் செய்துள்ளார். மரியாதையற்ற, தேவையற்ற கேள்வியைச் சுட்டிக்காட்டியதும், உடனே கத்தலும் கூச்சலும் எழும். அவரைப் போன்ற இளம் வயதிலான ஒருவர் தாம் சொல்ல வந்த கருத்தில் நிலையாக இருந்து பேசினார் என்பது பெருமையாக உள்ளது. எந்த ஆண் நடிகரிடமும் அவரது எடை என்ன என்ற கேள்வி கேட்கப்படுவதில்லை" என்று பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார். படக்குறிப்பு, நடிகர் ஆதித்யா மாதவன், இயக்குநர் அபின் ஹரிஹரன், நடிகை கௌரி கிஷன் மன்னிப்பு கேட்ட கதாநாயகன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அதே மேடையில் அருகில் அமர்ந்திருந்த படத்தின் கதாநாயகனும், இயக்குநரும் அமைதியாக இருந்தது குறித்தும் ஆன்லைனில் விமர்சிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவன் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில், "நான் அமைதியாக இருந்ததால், யாருடைய உடலையும் கேலி செய்வதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. எதிர்பாராமல் நடந்ததால் நான் உறைந்துவிட்டேன் – இது எனது முதல் படம். நான் இன்னும் விரைவாகத் தலையிட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். அவர் அதை எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருமே எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாராக இருந்தாலும், மரியாதை கொடுக்கப்பட வேண்டும். நான் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். கௌரி கிஷன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர். தமிழில் '96' திரைப்படத்தில் இளம் வயது ஜானுவின் (த்ரிஷா) கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் அந்த பத்திரிக்கையாளர் & யூட்யூபரின் செயல்பாட்டைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "உடல் எடையை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது. கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூட்யூபரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70jnp8718lo
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!
2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று முதல் Nov 8, 2025 - 07:26 AM 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும். வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் விவாதம் நடைபெறும் என்றும் பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்தது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (07) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜனாதிபதி நேற்று 4 மணித்தியாலங்களுக்கு மேல் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmhpmv6oa01gyqplph0135vca
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம்
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம் jeyamohanNovember 7, 2025 அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தொகுத்துக் கொண்டேன். (பூவை செங்குட்டுவன் தமிழ்விக்கி). அவர் நாத்திகராக இளமையில் தன் சிந்தனையை தொடங்கியவர். திராவிட இயக்க நாடக ஆசிரியராக தான் அவருடைய இலக்கியப் பணி உருவாகியது. தொடர்ந்து தமிழகம் முழுக்க பயணம் செய்து திராவிட இயக்கத்தின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வரும் போது பொருளியல் தேவைக்காக அவ்வப்போது வானொலிக்கும் எழுதி வந்தார். வசதியான அம்பலக்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் ஆகவேண்டும் என்னும் கனவுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து குடும்பத்துடன் போராடிக்கொண்டிருந்தார். அன்று குன்றக்குடி வைத்தியநாதன் திருச்சி வானொலிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாக இசைத்தட்டுகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு திரைப்படக்கனவு இருந்தது, அதற்கான முயற்சிகள் கைகூடாமலிருந்தது. குன்னக்குடி வைத்தியநாதனுடன் பூவை செங்குட்டுவன் நட்புகொண்டார். திருச்சி வானொலிக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பல நாடகங்களையும் ஓரிரு பாடல்களையும் பூவை செங்குட்டுவன் எழுதினார். ஒருமுறை மிகுந்த பணக்கஷ்டத்துடன் இருந்தபோது நாடகம் எழுத வாய்ப்பு தேடி குன்னக்குடி வைத்தியநாதனை அணுகினார். குன்னக்குடி வைத்தியநாதன் அப்போது நாடகத்திற்கான வாய்ப்பில்லை, ஒரு பாடல் எழுத வாய்ப்புள்ளது, அதை எழுத முடியுமா என்று கேட்டார். அது ஒரு முருக பக்தி பாடல். பூவை செங்குட்டுவன் அதற்கு தன்னால் முடியாது என்றும், எந்த வகையிலும் பக்தியுடனும் தனக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார். அதற்கு குன்னக்குடி ‘உங்களுக்கு தமிழ்தெரியும்தானே? தமிழ் தெரிந்த எவராலும் பக்திப்பாடல் எழுதமுடியும். தமிழையும் பக்தியையும் பிரிக்கமுடியாது’ என்று சொன்னார். ஆனால் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை குன்னக்குடி வைத்தியநாதன் எத்தனை சொல்லியும் பூவை செங்குட்டுவனுக்கு வரவில்லை. ‘அப்படி என்றால் பணம் இல்லை, கிளம்புங்கள்’ என்று குன்னக்குடி சொன்னபோது பணத்தின் பொருட்டு அப்பாடலை எழுதலாம் என்று முடிவு எடுத்து ஓர் அறையில் அமர்ந்து எழுத முயன்றார். தொடக்கம் அமையாமல் வெவ்வேறு வகையில் சொற்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தார். அன்றெல்லாம் இசைக்காக பாடல் எழுதும் பழக்கம் கிடையாது. பாடல் எழுதிய பிறகு பாடலில் உள்ளுறைந்துள்ள இசையை அறிந்து, அதற்கான ராகத்தை கண்டுபிடித்து, அதற்கு இசையமைத்து அதன் பிறகு பதிவு செய்வதுதான் பழக்கம். ஆகவே இசையும் அவரிடத்தில் தோன்ற வேண்டி இருந்தது. பாடல் இசையுடன் நிகழ வேண்டியிருந்தது. அது எளிமையாக அனைவருக்கும் சென்றடையும் பாடலாக இருக்க வேண்டும். அதே சமயம் முருகனின் பெருமையை சொல்லும் பாடலாகவும் அமைய வேண்டும். திடீரென்று தோன்றி ஒரு பாடலை முழுமையாக எழுதி முடித்தார்.ஒரு வார்த்தைக்கு பின் இன்னொரு வார்த்தையை பற்றி யோசிக்கவில்லை. ஒரு வரி இன்னொரு வரியை இயல்பாகவே கொண்டு வந்தது. அது அவருக்கும் முருகனுக்குமான ஒரு மிகக் குறுகிய உரையாடல்தான். ஒரு பத்தியை சரசரவென்று கிறுக்குவது போலத்தான் அதை எழுதினார். இளமையில் அவருடைய கிராமத்தில் முருகன் கோயிலின் பாறையை நோக்கி அவர்கள் கூச்சல் போட்டு அதிலிருந்து ஒரு எதிரொலி எழும் நினைவுதான் அப்பாடலுக்கான தூண்டுதல். அது சூலமங்கலம் சகோதரிகள் பாட ஒலிப்பதிவானது. அந்தப் பாடல் ஒலிபரப்பான நாள் முதல் தமிழகத்தின் மிக புகழ்பெற்ற முருகன் பாடல் அதுவே. முருகன் பாடல்களிலேயே இன்று வரைக்கும் தமிழகத்தில் மிக அதிகமாக ஒலிப்பதும் அதுதான். எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறையினரால் பாடப்படுவது. அனேகமாக அதை எவருமே கேட்டிருக்காமலிருக்க வாய்ப்பில்லை. ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். திருச்செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே மயிலாடும்’. அந்தப் பாடலை ஒரு விழாவில் சூரமங்கலம் சகோதரிகள் பாடக் கேட்டபோது அந்த விழாவிற்கு வந்திருந்த கவிஞர் கண்ணதாசன் இயக்குனர் கே.சங்கரிடம் “உங்கள் கந்தன் கருணை என்ற பாடலில் படத்திற்கு முருகனைப் பற்றி வள்ளியும் தெய்வானையும் பாடும் ஒரு பாடலைக் கேட்டு இருந்தீர்கள். அதற்கு இதைவிடச் சிறந்த ஒரு பாடலை என்னால் எழுத முடியாது. இதெல்லாம் தெய்வ அனுக்கிரகத்தில் இயல்பாக வரும் பாடல். இந்த இத்தனை எளிமையும் இத்தனை ஒழுக்கும் இத்தனை ஆழமும் ஒரே சமயம் அமைவது என்பது தன்னிச்சையாக நிகழ்வது. இது முருகனே எழுதச் சொன்ன பாடல். இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொன்னார். சங்கர் சூலமங்கல சகோதரிகளை அணுகி அந்த பாடலுக்கான உரிமை எங்குள்ளது என்று கேட்டார். சூலமங்கலம் சகோதரிகள் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பூவை செங்குட்டுவனை அறிமுகம் செய்து “இவர் தான் அதை எழுதினார்” என்றனர். செங்குட்டுவன் அப்போது ஒல்லியாக இளைஞனாக இருந்தார். பாடலின் உரிமையை கோரியபோது அவர் கண்ணதாசனை சென்று வணங்கி ஆசி பெற்றார். கண்ணதாசன் “வாழ்க்கையில் முருகன் அருளால் எல்லாமே வெற்றியாகும்” என்று வாழ்த்தினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அதே வடிவில் அந்த பாடல் மறுநாளே ஒலிப்பதிவாகியது. கே.வி மகாதேவன் அப்படத்திற்கு இசையமைத்தார். கே.வி.மகாதேவன் அதை மறு அமைப்பு செய்தபோது பின்னணிஇசை மட்டுமே சற்று மாறுபட்டது சூலமங்கலம் ராஜலட்சுமியும் பி.சுசிலாவும் இணைந்து அந்த பாடலை பாடினார்கள். கந்தன் கருணை படத்தில் அந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்துக்காக மகாதேவன் தேசிய விருது பெற்றார். விருதுக்கான பாராட்டுவிழாவில் அவ்விருது குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் உரியது என மகாதேவன் அறிவித்தார். குன்னக்குடி வைத்தியநாதனும் பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாக அந்தப்பாடலே வழியாகியது. இரவு முழுக்க அந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு இரவுகளில் அந்த பாடலை கேட்டேன்.அந்த பாடல் இளமையில் என்னை மிக கவர்ந்த பாடலாக இருந்தது. அதை நான் பாடி அலைந்ததை நினைவு கூர்ந்தேன். அந்த பாடலின் வெற்றிக்கு என்ன காரணம் என்று இன்றைய என்னுடைய பார்வையைக்கொண்டு யோசித்தேன். அதில் உள்ள கச்சிதமான தாளம் முதன்மைக்காரணம். பக்திப் பாடல்களில் நெகிழ்வு அமையும் போது நிறைய தருணங்களில் தாளம் அமைவதில்லை. நல்ல பாடல் நினைவில் நிற்பதற்கு கச்சிதமான தாளம் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. இந்தப் பாடல் ஒரு ஒரு நடனப் பாடல் அளவுக்கு தாளத்துடன் இருக்கிறது. தாளம் சரியாக வந்த பாடலில் அந்த வேகம் அமையும்போது நெகிழ்வு இல்லாமலாகிவிடும். இந்த பாடலில் எல்லா தருணங்களிலும் பக்தியின் நெகிழ்வும் நிகழ்கிகறது. சூலமங்கலம் சகோதரிகளின் பாடலிலேயே ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ போன்ற வரிகளில் ஆழ்ந்த நெகிழ்வு கண்ணீர்மல்க வைக்கும் அளவுக்கு வெளிப்படுகிறது. அதை அப்படியே திரைப்படப் பாடலிலும் கொண்டுவர முடிந்திருக்கிறது. பக்திப் பாடல்களில் வழக்கமாக நிகழும் செயற்கையான நெகிழ்வாக இல்லாமல் மிக இயல்பான உருக்கம் இதில் அமைந்துள்ளது. இதன் வரிகள் எந்த சிறு குழந்தைகள்கூட நினைவில் வைக்கக் கூடிய அளவு எளிமையானவை. குழந்தைக்கு புரியுமளவுக்கு நேரடியானவை. ஆனால் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என்ற வரி மொத்த தமிழகத்தின் ஒரு நிலக்காட்சியை அளிக்கிறது. முதல் வரியிலேயே தமிழகநிலம் முழுக்க ஆட்சி செய்யும் முருகனின் சித்திரம் வந்துவிடுகிறது. ‘சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு ‘என்ற வரி வழியாக நவீன காலகட்டத்திற்கு வருகிறது. அதன் பிறகு ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ என்ற வரி வழியாக இத்தனை ஆயிரம் ஆலயங்களுக்கு மேல் கோடான கோடி இதய ஆலயங்களிலும் நீ குடியிருக்கிறாய் என்று முடிகிறது. அத்துடன் ஒன்றை இசையறிந்தவர்கள் சொல்வார்கள். தமிழ்ச்செவிகளுக்கு மிகப்பழக்கமான ‘நாதஸ்வரப் பிடிகள்’ இப்பாடலில் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா என்ற வரியிலுள்ள முருகா என்னும் சொல்லில் உள்ள விசையை உதாரணமாகக் காட்டலாம். திருப்பரங்குன்றத்தில் என்ற சொல் நான்கு அலகுகளாக சரியான தாளச்சொல் போலவே அமைந்துள்ளதும் காரணம். பல்லாயிரம் முறை நாதஸ்வர நிகழ்வுகள் வழியாக இப்பாடல் தமிழுள்ளத்தில் நிலைகொண்டது. இன்றும் இந்தப்பாடலை பெரும்பாலான நிகழ்வுகளில் வாசிக்கிறார்கள். ‘அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை’யிலுள்ள அந்த லை சுழலும் விதம் நாதஸ்வரத்துக்கே உரியது. இந்த பாடல் எளிமையில் அமைந்த இயல்பான ஆழத்தால் தமிழ்மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம். இந்த பாடல் பூவை செங்குட்டுவனை ஒரு பக்திக் கவிஞராக நிலை நிறுத்தியது. அவர் விரும்பாமலே அவர் முருகனைப் பற்றிய பாடல் எழுத வேண்டிய நிலைமைக்கு ஆளானார். மிகச் சில ஆண்டுகளில் மிகத் தீவிரமான முருக பக்தராக மாறினார். நான் அவரை சந்தித்தபோது என்னிடம் அவர் சொன்னார் . ‘நான் முருகனை நோக்கி செல்லவில்லை. அவன் வந்து என்னை தூக்கிக்கொண்டு சென்றான். நான் வீட்டிலிருந்து கிளம்பி அருகிருக்கும் டீக்கடை வரைக்கும் நடந்து சென்று விட்டு திரும்பி வந்தால் என்னுடைய முருக பக்திப் பாடல் ஏதேனும் ஒன்று என் காதில் விழும்’ ‘பாப்புலர் கிளாசிக்’ என ஒருவகை எப்போதும் இலக்கியத்திலும் கலையிலும் உண்டு. அவை ஒரு தனிக்கலைஞரின் அகவெளிப்பாட்டால், கலைத்திறமையால் அந்த நிலையை அடைவன அல்ல. மக்களின் கூட்டான உள்ளமும் ஒரு குறிப்பிட்ட கலைவெளிப்பாடும் ஒரு வரலாற்றுத்தருணத்தில் இயல்பாக ஒருங்கிணைவதன் வழியாக நிகழ்பவை. அவை ஒருவகையான தற்செயல்கள்தான். அவற்றை திட்டமிட்டு திரும்ப நிகழ்த்தவே முடியாது. சிலசமயம் மிகமிக எளிய வரிகள், மிக எளிய மெட்டு, மிக எளிய கதை அந்த பெரும் அலையை உருவாக்கிவிடும். அது நிகழ்ந்தபின் அது ஏன் நிகழ்ந்தது என ஆய்வதே நாம் செய்யக்கூடுவது. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை செங்குட்டுவன் எழுதியிருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் புகழ்பெற்றவை. இன்றும் அவருடைய பாடல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. நான் வீட்டில் அமர்ந்து ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட பின்னர் யோசித்தேன். கிளம்பி அருகில் இருக்கும் டீக்கடைக்குள் சென்று ஒரு டீ குடித்துவிட்டு வருவதற்குள் அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்று கேட்கிறதா என்று பார்க்கலாம் என்று. டீ குடித்துவிட்டு வரும்போது தொலைவில் ஓர் ஆலயத்தில் செங்குட்டுவனின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும். எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்’ பூவை செங்குட்டுவன் தமிழ் விக்கி https://www.jeyamohan.in/223391/
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்! 08 Nov, 2025 | 02:08 PM ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் கடமைபுரியும் குறித்த தாதி, தனது பராமரிப்பில் இருந்த வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் இவ்வாறு கொலை செய்துள்ளார். இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையற்ற அதிகப்படியான தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி அவர் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. விசாரணையில், அவர் 10 நோயாளிகளைக் கொலை செய்ததுடன், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றார் என்றும் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஆண் தாதியின் பெயர் வெளியிடப்படாத நிலையில், வழக்கு விசாரணையின் இறுதியில், குற்றத்தை உறுதிசெய்த நீதிமன்றம், அந்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தாதியர்களால் அரங்கேற்றப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் இது முதல் முறையல்ல. வடக்கு ஜேர்மனியில் 1999 முதல் 2005 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், நீல்ஸ் ஹோஜெல் (Niels Högel) என்ற ஆண் தாதி இரண்டு வைத்தியசாலைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்தது. இவர் ஜேர்மனியின் நவீன வரலாற்றில் மிகவும் கொடூரமான தொடர் கொலைகாரராகக் கருதப்படுகிறார். தற்போது அதே பாணியில், இரவுப்பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி மற்றொரு தாதியர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை, ஜேர்மன் சுகாதாரத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/229845
ஜனாதிபதி முதலில் தன் கட்சி உறுப்பினர்களை போதை வர்த்தகத்திலிருந்து விலகுமாறு அறிவுறுத்துவது அவசியம் – நாமல் ராஜபக்ஷ
சாத்தான் குடும்பத்தில் பிறந்த ஒன்று வேதம் ஓதுகிறது.🤗
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
நியூயார்க் மேயராக மம்தானி தேர்வு பற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், EPA/Shutterstock படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி தனது தாயார் மீரா நாயருடன். 8 நவம்பர் 2025, 09:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முஸ்லிமான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். மம்தானியின் இந்த வெற்றி அரபு மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோஹ்ரான் மம்தானியின் வெற்றியை 'வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அசாதாரணமானது' என்று அரபு ஊடகங்கள் கூறுகின்றன. நியூயார்க் நகரத்தின் 'முதல் முஸ்லிம் மேயர்' என்று அவரது வெற்றி அரபு ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. பல சேனல்கள் மம்தானி ஆதரவாளர்களின் கொண்டாட்டங்களை மையப்படுத்தி, அதை ஒரு சிறப்பான வெற்றி என்று வர்ணிக்கின்றன. "இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, அதேசமயம் கம்யூனிஸ்டாக அறியப்படும் மம்தானி, நியூயார்க்கில் சரித்திரம் படைத்துள்ளார்" என்று கத்தாரின் அல்-ஜசீரா வலைத்தளம் தெரிவித்தது. அல்-ஜசீரா சேனல், மம்தானியின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடும் காட்சிகளை ஒளிபரப்பி, "இது ஒரு அசாதாரணமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல்" என்று விவரித்தது. அந்த சேனலின் செய்தியாளர், "இந்தத் தேர்தலில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது நியூயார்க் மேயர் தேர்தலில் கடந்த பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு ஆகும்." என்று கூறினார். அல்-அரேபியா சேனல் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி அல்-அரேபியா சேனலின் கூற்றுப்படி, சுமார் 60 சதவீத வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர், இது நியூயார்க் நகரத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும். அந்த சேனல், "மம்தானி இளைஞர்களை அதிகளவில் ஈர்த்துள்ளார். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர்" என்று கூறியது. லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி வலைத்தளம், மம்தானியின் வெற்றி "நியூயார்க் நகரத்தில், முற்போக்கு கொள்கைகளுக்கான புதிய அத்தியாயத்திற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தது. டிரம்புடனான முரண்பாடு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு நிதியளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். சௌதி அரேபியாவின், அல்-அரேபியா தொலைக்காட்சி அதிகாலை 4 மணி முதல் தனது ஒளிபரப்பில் இந்தச் செய்தியை பிரதானமாக காட்டத் தொடங்கியது. மம்தானிக்கும் டிரம்பிற்கும் இடையிலான 'வார்த்தைப் போர்' பற்றியும் அது குறிப்பிட்டது. அல்-அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்கை நியூஸ் அரேபியா வலைத்தளங்கள் மம்தானியை "டிரம்பின் தீவிர எதிர்ப்பாளர்" என்று விவரித்தன. "நாட்டிற்கு துரோகம் இழைத்த டொனால்ட் டிரம்பை எப்படி தோற்கடிப்பது என்பதற்கு யாராவது உதாரணம் காட்ட வேண்டுமென்றால், நியூயார்க் நகரத்தை தான் காட்ட வேண்டும்" என்று மம்தானி தனது உரையில் கூறியதாக, ஸ்கை நியூஸ் அரேபியா மேற்கோள் காட்டியது. மம்தானி தனது உரையில் டிரம்பிற்கு 'சவால் விடுத்தார்' என்றும், அவரைத் 'விமர்சித்துப் பேசினார்' என்றும் அல்-ஜசீரா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆர்டி அரபிக் மற்றும் இரானின் அல்-ஆலம் தொலைக்காட்சியும் மம்தானி தனது உரையில் டிரம்ப் மற்றும் இஸ்ரேலை விமர்சித்ததை எடுத்துக்காட்டின. ஆர்டி அரபிக் மம்தானியை, "நெதன்யாகுவைக் கைது செய்யக் கோரியவர் என்றும், இஸ்ரேல் மீதான டிரம்பின் கொள்கைகளை விமர்சித்தவர்" என்றும் விவரித்தது. "சமீபத்திய அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சி ஒன்றை மம்தானி தந்துள்ளார்" என்று அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கூறியதை மேற்கோள் காட்டி எகிப்தின் அல்-காட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையையும் சாண்டர்ஸ் குறிப்பிட்டார். அதில், "குடியரசுக் கட்சியினரின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதில் முதலாவதாக, அவர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இல்லை, இரண்டாவதாக, அரசாங்க முடக்கம் (Shutdown)." 'அமெரிக்காவில் சியோனிஸ்டுகளின் தோல்வி' பட மூலாதாரம், Getty Images அரபு நாடுகளில் உள்ள சமூக ஊடக பயனர்கள் மம்தானியின் வெற்றியை அவரது இஸ்ரேல் எதிர்ப்பு மற்றும் பாலத்தீன ஆதரவு நிலைப்பாட்டின் வெற்றியாகப் பார்க்கின்றனர். 'ப்ரோ முஸ்லிம் பிரதர்ஹுட்' ஆதரவு பத்திரிகையாளர் ஹம்சா சவ்பா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மம்தானியின் வெற்றி வெள்ளை மாளிகையில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது அமெரிக்க அரசியலின் பழைய, வேரூன்றிய விதிகளை அசைத்துப் பார்க்கும்." என்று பதிவிட்டுள்ளார். அல்-வசத் கட்சித் தலைவர் அபு அலீலா மடி, மம்தானியின் வெற்றி "வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது" என்றும், "அவர் இஸ்ரேலிய லாபிக்கு சவால் விடுகிறார்" என்றும் கூறினார். பாலத்தீன-அமெரிக்க எழுத்தாளர் சமர் ஜரா, "மம்தானி உலகின் மிகவும் பிரபலமான நகரமான நியூயார்க்கில் வெற்றி பெற்றுள்ளார். சியோனிஸ்டுகள் அவருக்கு எதிராக இருந்த போதிலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது" என்று கூறினார். மம்தானியின் வெற்றி 'இஸ்ரேலிய லாபிக்கு ஒரு மாபெரும் தோல்வி' என்று அல்-ஜசீரா பத்திரிகையாளர் அகமது மன்சூர் கூறியுள்ளார். இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், CHANNEL 12 படக்குறிப்பு, ஸோஹ்ரான் மம்தானியின் 'இஸ்ரேல் எதிர்ப்பு' நிலைப்பாடு இஸ்ரேலிய ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. மறுபுறம், இஸ்ரேலிய ஊடகங்கள் ஸோஹ்ரான் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தையும், அவரது 'இஸ்ரேலிய எதிர்ப்புக் கொள்கைகளையும்' குறிப்பிட்டன. ஒரு வலதுசாரி சேனல் அவரை 'பாலத்தீன ஆதரவாளர்' என்று குறிப்பிட்டது. 'இஸ்ரேல் ஹயோம்' செய்தித்தாள் மம்தானியை மிக முக்கியமான சியோனிச எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்று வர்ணித்தது. பெரும்பாலான இஸ்ரேலிய செய்தி சேனல்கள் மம்தானியின் முஸ்லிம் அடையாளத்தை குறிப்பிட்டன. 'பாலத்தீன ஆதரவாளர் மம்தானி தனது வெற்றி உரையை அரபிக் மொழியில் தொடங்குகிறார்' என்று 'சேனல் 14'-இன் தலைப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. "கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் 'இஸ்ரேல் மீதான வெறுப்பு' அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே மம்தானி வெற்றி பெற்றதாகவும்" அந்த சேனல் தனது நேரடி ஒளிபரப்பில் கூறியது. நியூயார்க்கின் யூத வாக்காளர்களில் 16 முதல் 30 சதவீதம் பேர் மம்தானிக்கு வாக்களித்ததாக 'சேனல் 12' செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். இது அந்த சேனலின் ஸ்டுடியோவில் இருந்த குழு உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு தொகுப்பாளர், "யூதர்கள் இப்போது நியூயார்க்கை விட்டு வெளியேறும் நிலை வருமா?" என்று கேட்டார். 'சேனல் 12' தனது காலை செய்தி ஒளிபரப்பில், ட்ரூத் சோஷியல் தளத்தில் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதிவை குறிப்பிட்டுக் காட்டியது. அதில், "ஸோஹ்ரான் மம்தானிக்கு வாக்களிக்கும் எந்தவொரு யூதரும் யூத எதிர்ப்பாளராகவும் முட்டாளாகவும் இருப்பார்" என்று எழுதப்பட்டிருந்தது. 'பாலத்தீன ஆதரவு மற்றும் சியோனிச எதிர்ப்பு' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஸோஹ்ரான் மம்தானி தனது மனைவி ரமா துவாஜியுடன். மம்தானியின் வெற்றியைத் தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள அவரது பிரசார தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடி, 'சுதந்திர பாலத்தீனம்' என்று கோஷமிட்டனர் என்று பாதுகாப்பு செய்தித்தாளான மாரிவ் செய்தி வெளியிட்டுள்ளது. மம்தானி இஸ்ரேலை வெளிப்படையாக எதிர்க்கிறார் என்றும், 'இஸ்ரேலை ஒரு யூத நாடாக தான் கருதவில்லை என்றும், பாலத்தீனர்களின் உரிமையை ஆதரிப்பதாகவும்' அவர் முன்னர் கூறியதாக மாரிவ் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூயார்க்கிற்கு வரும்போது அவரைக் கைது செய்வேன்' என்று அவர் கூறியிருந்தார். மாரிவ் செய்தித்தாள் மம்தானியின் 2023-ஆம் ஆண்டு கருத்தை மேற்கோள் காட்டி, அது ஏறக்குறைய யூத-விரோதத்தை ஒட்டியே இருந்தது என்று கூறியது. 2023இல் மம்தானி, "நியூயார்க் காவல்துறை மக்களை வன்முறை மூலம் அடக்குகிறது, அது இஸ்ரேலிய ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது" என்று கூறியிருந்தார். பல இஸ்ரேலிய ஊடகங்களும் மம்தானியின் "இன்டிஃபதாவை (Intifada- அரபு மொழியில் 'எழுச்சி') உலகமயமாக்க வேண்டும்" என்ற முழக்கத்தைக் குறிப்பிட்டன. பாலத்தீன ஆதரவாளர்கள் இதை பாலத்தீனத்துடன் உலகம் துணை நிற்பதற்கான அழைப்பு என்று விவரிக்கின்றனர். ஆனால் பலர் அதை யூதர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஒரு முழக்கமாகக் கருதுகின்றனர். "இந்த மனிதர் தனது முழு தேர்தல் பிரசாரத்தையும் இஸ்ரேல் மீதான கடுமையான விமர்சனத்திலும், 'இன்டிஃபதாவை உலகமயமாக்க வேண்டும்' போன்ற முழக்கங்களை பரவலாக்குவதிலும் கவனம் செலுத்தினார்" என்று Ynet வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. மம்தானியின் வெற்றி 'நியூயார்க்கின் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மையைக் குறிக்கிறது' என்றும் 'இஸ்ரேலுக்கு ஒரு எச்சரிக்கை மணி' என்றும் Ynet விவரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04g3q150kdo
யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு!
உலக சாதனை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த Gosiame Sithole | 10 Babies in 1 delivery Tamil Mithran (Latest Tamil Cinema News) 1.51M subscribers <iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/DUigRYla65o" title="உலக சாதனை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த Gosiame Sithole | 10 Babies in 1 delivery" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
கொஞ்சம் ரசிக்க
நாம் வாழும் உலகில் விசித்திரங்களுக்குப் பஞ்சமே கிடையாது .........! 😀
ரசிக்கலாம் வாங்க
இங்க தொட்டு ஆடுவது நினைத்தே பார்க்கவியலாது! டி.ஆர் போல தொடமால் ஆடலாம் என்றால் ஆண் பெண் சேர்ந்து ஆடவிடாங்கள்!! ஒரே வழி பொடியள் பெண் வேடமிடவேண்டியது தான்!!!
ரசிக்கலாம் வாங்க
நல்லா இருக்கு .........! 🙂
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed