புதிய பதிவுகள்2

புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா

3 months ago
செய்வது என்றால் நாமும் எதையாவது உருவவேண்டும். இங்கே அதற்கு இடமில்லாத போது .... உருப்பட வாய்ப்பே இல்லையே 🤪

துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?

3 months ago
என்னது துட்டன் காமனா 😂 நல்லவேளை டுடு கெமுனு வை துஸ்ட காமினி என்றது போல் இவரை துஸ்ட காமன் எண்டு எழுதவில்லை 😂. அட பாவியளா அது டு டன் காமென்.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது

3 months ago
வேனுமென்றால் இப்படியும் சொல்லலாம் ...இப்ப தானே உலகம் பல மாற்றங்களை சந்திக்கின்றது... மாற்று சிந்தனை,கட்டுடைத்தல் ..... தேவையென்றால் ஓஷோ சொல்லியிருக்கிறார் என சொல்லலாம்

முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்

3 months ago
சிறிலங்காவில் இனசுத்திகரிப்பு இரண்டு தான் உண்டு... ஒன்று தமிழன் சிங்களவர்களை இனசுத்திகரிப்பு செய்தது,மற்றது தமிழன் முஸ்லீம்களை இனசுத்திகரிப்பு செய்தது.... தமிழன் தான் அசுரன் ,,,,அப்படி தமிழ் சிவப்பு சிந்தனையாளர்கள் சொல்லுவினம்...😂

மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர.

3 months ago
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு. தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம். ஆனால் -- வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன? தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ---- A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்... B) தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்... C) சர்வகட்சி மாநாடு என்பர்... D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர். இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும். இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது. இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்... குறிப்பாக --- 2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர. ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார். அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர. அதாவது --- நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர். ஆகவே -- அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர. ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா? பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும். உண்மையும் அதுதானே! ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...? 1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார். 2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார். 3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார். 4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்... இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்... இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது? ஆனால் --- ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ---- ------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா? 1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன? அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது... 2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன? A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை” B) ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்” C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்” இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு. இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே? மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்? 159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே? அதென்ன?--- தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது? சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்! ஆகவே இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு... ஆனால்--- சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள். கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து” அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-

கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?

3 months ago
தாயகத்திலிருந்த போது இலங்கை சுகாதார அமைச்சு, புலிகளின் சுகாதாரப் பிரிவு, டொக்ரர் முருகானந்தனின் வெளியீடுகள் என்பன பாம்புக் கடியின் போது செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி பிரசுரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள், கண்டிருக்கிறேன். ஆனால், மக்களைச் சென்றடைவதில் சிக்கல்கள் இருக்கின்றன. சுருக்கமாக: செய்ய வேண்டியவை: 1. பாம்பு கடித்தவர் பதற்றமடையாமல் வைத்திருக்க வேண்டும். சுற்றியிருப்போர் குய்யோ முறையோ என்று குழம்பினால் கடிக்காளானவரும் பதற்றமாவார் - நஞ்சு விரைவாக உடலில் பரவும். 2. ஓய்வு நிலையில் படுக்க வைத்திருப்பது சிறந்தது. 3. கடி காயத்தில் ஏதாவது மண், அழுக்கு இருந்தால் சுத்தமான நீரும் சவர்க்காரமும் பாவித்துக் கழுவலாம். இதில் ஒரு விடயம் கவனிக்க வேண்டும்: புடையன் (viper) பாம்பு கடித்திருந்தால், கடந்து விட்ட நேரத்தைப் பொறுத்து காயத்தில் இருந்து இரத்தம் உறையாமல் வடிய ஆரம்பித்திருக்கும். இப்படியான நிலையில், கழுவுவதை விட்டு விட்டு, ஒரு சுத்தமான துணி அல்லது gauze பாண்டேஜினால் அழுத்தம் கொடுக்கலாம். 4. பாம்பை படம் எடுத்து மருத்துவமனைக்கு செல்வோருடன் அனுப்பலாம். பாம்பை அடித்துக் கொன்று எடுத்துச் செல்லலாம், ஆனால் அதற்காக நேரம் செலவழிக்கக் கூடாது. கடி பட்டவரைக் கவனிப்பதே முக்கியம். 5. உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். செய்யக் கூடாதவை: 1. கடிகாயத்திலிருந்து இதயம் நோக்கிச் செல்லும் இரத்தத்தை நிறுத்துவதற்காக இறுக்கக் கயிறு, பட்டி ஆகியவற்றால் கட்டுதல் கூடாது. இது பழைய கால நம்பிக்கை, ஆனால் இது தவறானதும் ஆபத்தானதுமான செயல். 2. கடிகாயத்தை அல்ககோல் போன்ற எரிவூட்டும் பதார்த்தங்களால் சுத்திகரிக்கக் கூடாது. 3. கடிகாயத்தை கீறுதல், வாயால் (80 களில் தமிழ் திரைப்படங்களின் கதாநாயகன் செய்வது போல😂) கடித்து உறிஞ்சுதல் என்பன செய்யக் கூடாது. 4. நாட்டு வைத்தியம், மந்திரம் என்ற பெயரில் கடி பட்டவர் மருத்து மனைக்குச் செல்வதைத் தாமதிக்கக் கூடாது. விசத்தை உறிஞ்சும் கல் என்பதெல்லாம் போலி மருத்துவங்கள். பயனற்ற நேர விரயங்கள்.

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – தவில் வித்துவான் கைது

3 months ago
இப்படியான பெண்களைத் ‘திருட்டின்பப் பிரியை’ என்று கொஞ்சம் மரியாதையாக அழைக்கலாம். நானென்றால் ‘கள்**க் காரிகை’ என்று இன்னும் மரியாதையாக அழைப்பேன்!

பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள் வந்தது எப்படி?

3 months ago
பட மூலாதாரம், Supplied கட்டுரை தகவல் அபூர்வா அமீன் பிபிசி குஜராத்தி 7 நவம்பர் 2025, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை. கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன. வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் என்பதாலும், மருத்துவ அறிவியலின் சில வரம்புகள் இருப்பதாலும், பேன்களை அகற்றும் சிகிச்சை இரண்டு மணிநேரம் நீடித்தது. கண் இமைகளில் ஏற்படும் அரிய வகை பேன், phthiriasis palpebrarum என்று அறியப்படுகிறது. பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, கீதாபென் மேத்தாவின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட பேன்கள் விசித்திரமான மருத்துவ பிரச்னையின் பின்னணி சவர்குண்ட்லாவில் உள்ள லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனையின் கண் மருத்துவர் மிருகங்க் படேலிடம் பிபிசி பேசியது. கீதாபென் சிகிச்சைக்காக புறநோயாளி பிரிவுக்கு வந்தபோது, சுமார் மூன்று மாதங்களாக அவரது கண் இமைகளில் தொடர்ந்து அரிப்பு இருப்பது குறித்துக் கூறியதாகத் தெரிவித்தார். "பொடுகு இருப்பதே கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதற்குப் பொதுவான காரணம். கண் இமைகளில் பேன் இருப்பது மிகவும் அரிதானது. கருவியின் மூலம் கண் இமைகளை கவனமாகப் பார்த்தபோது, அங்கு பேன் அசைவதைக் கண்டோம்" என்று மருத்துவர் மிருகங்க் படேல் கூறினார். "பேன்கள் மட்டுமல்ல, பேன்களின் முட்டையான ஈர்களும் பாதிக்கப்பட்டவரின் கண் இமைகளில் இருந்தன. கண்களில் ஈரும் பேனும் இருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தால் அவர் பீதியடைந்து விடுவார் என்பதால், முதலில் நாங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினோம். அதுமட்டுமல்ல, பேன்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை நீக்குவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும் விளக்கிச் சொன்னோம்." மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள், இதற்கு முன்னதாக சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் சென்று மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்றிருந்தனர். நோயாளி கீதாபென்னின் மகன் அமித் மேத்தா பிபிசியிடம் , "அம்மாவின் கண்களில் அரிப்பு இருந்தது. இரவில் அவரால் தூங்க முடியவில்லை. சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டினோம், எந்தப் பலனும் இல்லை. பின்னர் லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அம்மாவை பரிசோதித்த மருத்துவர் மிருகாங்க் அம்மாவின் கண்ணில் பேன் இருப்பதாகவும், அதை வெளியே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்," என்று கூறினார். "இந்த பேன் நம் உடலில் உள்ள ரத்தத்தை உரிஞ்சுகிறது. உடலின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கண் இமைகளின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அங்கு அவற்றால் ரத்தத்தை சுலபமாகக் குடிக்க முடியும். இந்தப் பேன்கள் கண் இமைகளின் மேல் அமர்வதால் நோயாளிக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பேன்களை எளிதில் அகற்ற முடியாது" என்று மருத்துவர் மிருகங்க் தெரிவித்தார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, மருத்துவர் மிருகங்க் படேல் பேன் அகற்றும் செயல்முறை இந்த வகையான பேன்கள் வெளிச்சம் ஏற்பட்டால் நகர்ந்துவிடுபவை. எனவே அவற்றை அகற்ற, McPherson எனப்படும் சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பேனாகப் பிடித்து வெளியே இழுக்க வேண்டும். "இந்த சிகிச்சைக்கு சுமார் இரண்டு மணிநேரம் எடுத்தது" என்று மருத்துவர் மிருகங்க் படேல் விளக்கினார். "செயல்முறை முடிந்ததும், நோயாளியின் கண் அரிப்பு குறைந்துவிட்டது. இதுபோன்ற அரிதான பாதிப்புகள் இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னிடம் வந்தபோது, நான் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் இதுவொரு அரிய பிரச்னை." சிக்கலான நடைமுறையை மேற்கொண்டு மருத்துவர் மிருகங்க் படேல் மற்றும் அவரது குழுவினர், நோயாளியின் கண் இமைகள் இரண்டில் இருந்தும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பேன்களையும் 85க்கும் மேற்பட்ட ஈர்களையும் அகற்றினர். சிகிச்சைக்கு அடுத்த நாளன்று மீண்டும் கண் பரிசோதனை செய்தபோது நோயாளியின் கண்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. பிபிசியிடம் பேசிய மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா, "நான் மருத்துவத் துறையில் 21 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் இன்று வரை இதுபோன்ற பாதிப்பை இரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். இது சற்று சிக்கலான பிரச்னை" என்று கூறினார். "நோயாளி இரண்டரை மாதங்களாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். சூரத்தில் சில மருத்துவர்களை அவர் சந்தித்து இருந்தாலும், நோய் கண்டறியப்படவில்லை, இது பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது" என்றார் அவர். ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் என்றால் என்ன? அமெரிக்க தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின்படி, ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் (Phthiriasis palpebrarum) என்பது கண் இமைகளில் பேன் மற்றும் அதன் முட்டையான ஈர் இருக்கும் அரிய மருத்துவ நிலை ஆகும். இந்தச் சிக்கல் ஏற்பட்டால், கடுமையான அரிப்பு, கண் இமைகள் சிவத்தல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இது பொதுவான கண் தொற்று போல் இல்லை என்பதால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கண்களில் எப்படி பேன் வரும்? ஆமதாபாத்தில் உள்ள துருவ் மருத்துவமனையின் கண் நிபுணர் மருத்துவர் ஹர்ஷத் அகஜா பிபிசியிடம் கூறுகையில், "இது மிகவும் அரிதான நோய். இந்த லார்வாக்கள் கொசுக்கள் முட்டையிடும் அதே வகையிலான லார்வாக்கள். சுகாதாரமின்மையால் ஏற்படுகின்றன." "பல ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்தில். இதுபோன்ற ஒரு பாதிப்பை பார்த்தோம். ஆனால் இது மிகவும் அரிதானது" என்றார் மருத்துவர் அகஜா. கண்ணிமைகளில் பேன் வருவதற்குக் காரணம், வீட்டிலுள்ள சில வகையான சூழல்களாகவோ, பயன்படுத்தும் தலையணைகளாகவோ இருக்கக்கூடும். "மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே கால்நடைகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பேன்கள் படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் அல்லது ஆடைகளில் இருக்கலாம்" என்று மருத்துவர் மிருகங்க் கூறுகிறார். "இந்த நோய் தற்செயலாகவும் ஏற்படலாம். காடு போன்ற இடத்திற்குச் செல்லும்போது அல்லது கால்நடைகளுடன் தொடர்பு கொள்ளும்போது அவை உடலில் ஒட்டிக்கொண்டு, தலையில் இருந்து கண் இமைகளுக்கு வந்து சேரலாம்" என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சாவர்குண்ட்லாவில் உள்ள ஸ்ரீ லாலுபாய் சேத் சுகாதார மந்திர் மருத்துவமனை கண் இமைப் பேன் முதன்மை அறிகுறிகள் கண் வலி, கண்களில் தொடர்ந்து அரிப்பு, தூக்கமின்மை ஆகியவை கண் இமையில் பேன்கள் இருப்பதற்கான அறிகுறிகள் என்று மருத்துவர் மிருகாங்க் கூறுகிறார். கண் இமைகளில் நீர் வடிதல், வீக்கம் ஆகியவை தோலில் ஏற்படும் தொற்று காரணமாக அரிப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகளாகும். இந்த வகையான நோய்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக ஏற்படும். வீட்டில் தூய்மையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். கண்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், நேரத்தைக் கடத்தாமல் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண் பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொள்வது பாதிப்பை அதிகப்படுத்தும் என்று மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpq1xzd7955o

கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்

3 months ago
நல்ல துணிச்சலாக, தெளிவாக கேள்வி கேட்கின்றார். பெண்களிடம் வக்கிரமாக கேள்வி கேட்பவர்களுக்கு செருப்படி இது!

கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்

3 months ago
இளஞ்செழியன் ஒரு நல்ல நீதியரசராக இருந்தவர். சில சிறந்த தீர்ப்புகளை வழங்கியவர், ஆனால் அழுது நடிப்பதிலும், செண்டிமண்ட் காட்சிகளில் வெளுத்து வாங்குவதிலும் நல்ல திறமையுள்ளவர். தனக்கு காவலாக வந்த சிங்கள பொலிசார் (தேவையில்லாமல் மூக்கை நுழைக்கப் போய்) கொல்லப்பட்டதன் பின் அந்த பொலிசாரின் பெற்றோறின் காலில் வீழ்ந்து அழுதது தொடக்கம், சிங்கள பெளத்த பிக்குகளை தொழுதது தொட்டு, தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என கண்ணீர் மல்க நாடகம் போட்டது வரை இவருக்கு நல்ல நடிப்பு திறமை உள்ளது எனக் காட்டியுள்ளார். அந்தந்த கால கட்ட ஆளும் கட்சிகளுக்கு விசுவாசமாக நடப்பது என்பது அரச உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களின் பொதுவான குணம். இவருக்கும் அது நிறைய இருந்தது.

துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?

3 months ago
பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங்கள் உட்பட 70,000 முதல் 100,000 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் 2002-இல் அறிவிக்கப்பட்டது. 2012-இல் திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பெரும் செலவு, அரசியல் குழப்பங்கள், கோவிட்-19 தொற்றுநோய், பிராந்திய மோதல்கள் என தொடர்ந்து பலமுறை தாமதங்களை எதிர்கொண்டது. இந்த மெகா திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவாகியுள்ளது, இதில் பெரும்பகுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்களால் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார். மர்மங்களுக்குப் பெயர் போன இடம் இந்த அருங்காட்சியகத்தை எகிப்தின் "உலகிற்கான பரிசு" எனக் குறிப்பிடுகிறார் அந்நாட்டின் பிரதமர் மொஸ்தபா மட்பௌலி. இந்த அருங்காட்சியம் எகிப்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார். "பண்டைய எகிப்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது" என்று கூறும் சலீமா, "கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் போனீஷியர்கள் கூட எகிப்தை மர்மம் மற்றும் அறிவு நிறைந்த நிலமாக நினைத்தார்கள்" என்றார். நவீன கால எகிப்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்க இந்த அருங்காட்சியகம் உதவும் என்று நம்பப்படுகிறது. வீடு திரும்பும் துட்டன்காமன் பட மூலாதாரம், Grand Egyptian Museum படக்குறிப்பு, கிரேட் எகிப்திய அருங்காட்சியம் 1922-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்தியலாளர் ஹோவர்ட் கார்ட்டர் துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்ததிலிருந்து, அவரைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகெங்கிலும் பல நகரங்களில் பல தசாப்தங்களாக காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், துட்டன்காமனின் தங்க முகக் கவசம், சிம்மாசனம் மற்றும் அவருடன் புதைக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் (இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதவை உட்பட) முதல் முறையாக முழுமையாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. "துட்டன்காமனின் கல்லறையில் கிடைத்த பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது அற்புதமானது" என்கிறார் சலீமா. "எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் துட்டன்காமனின் காட்சியகங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்." என்கிறார் மான்செஸ்டர் அருங்காட்சியக எகிப்து மற்றும் சூடான் காப்பாளரான கேம்பல் பிரைஸ். இவர் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார். "முக்கிய காட்சியகங்கள் அனைத்துமே கண்களை கொள்ளை கொள்ளக்கூடியவை, ஒவ்வொரு பொருளும் வியப்படையச் செய்கிறது. எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது." என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், REUTERS/Mohamed Abd El Ghany படக்குறிப்பு, 3,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ராமெசஸ் தி கிரேட் என்ற பிரமாண்டமான சிலை கிங் டுட்டின் பொக்கிஷங்களுடன், அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் 3,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ராமெசஸ் தி கிரேட்-இன் பிரமாண்டமான சிலை உட்பட பிற குறிப்பிடத்தக்க படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. கிமு 7000 ஆம் ஆண்டு வரையிலான பல பொக்கிஷங்களைப் போலவே, இந்த சிலையும் இங்கு வந்த கதை சுவராஸ்யமானது. கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தின் முன் 51 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக நகர் முழுவதும் காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. உலகின் பழமையான மற்றும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும், 4,600 ஆண்டுகள் பழமையான, கிங் கூஃபுவின் 'சூரிய ஒளிப் கப்பலுக்காக' பிரத்யேக சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எகிப்தியவியலாளர் ஜாஹி ஹவாஸ் (நடுவில்), கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி திரட்டவும் அதை மேம்படுத்தவும் உதவியுள்ளார். "எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்" இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா என்பது பொக்கிஷங்களை காட்சிப் பொருளாக வைப்பது மட்டும் அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்கிறார் எகிப்தின் இந்தியானா ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ். மேலும், இது எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது என்று தெரிவித்தார். "நமது நினைவுச் சின்னங்களை ஆராயும் விஞ்ஞானிகளாக நாம் மாற வேண்டிய நேரம் இது" என்று கூறும் அவர், "அரசர்களின் பள்ளத்தாக்கில், 64 அரச கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், அதில் ஒன்றைக் கூட எகிப்தியர்கள் தோண்டி எடுக்கவில்லை" என்றார். துட்டன்காமனின் கல்லறை உட்பட எகிப்தின் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஹவாஸ் சுட்டிக்காட்டுகிறார். எகிப்தியர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை அறிந்து கொள்வதிலும், தேடி பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், அவற்றை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இந்த அருங்காட்சியகம் அனைத்து எகிப்தியர்களுக்குமான இடமாக கருதப்பட்டாலும், சிலருக்கு நுழைவுக் கட்டணம் அதிகமாகத் தோன்றலாம். வயது வந்த எகிப்தியர்களுக்கான டிக்கெட் 200 எகிப்திய பவுண்டுகள் (சுமார் ரூபாய் 354) ஆகும். இந்தக் கட்டணம், வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் 1,200 பவுண்டுகளுடன் (சுமார் ரூபாய் 2100) ஒப்பிடும்போது மிகவும் குறைவானதுதான் என்றாலும், பல உள்ளூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானதாக தோன்றக்கூடும். "இறந்தவர்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்காமல், உயிருள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்று பேராசிரியர் சலீமா கூறுகிறார். "இது அனைவருக்கும் பொதுவானது, இருப்பினும் சில எகிப்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் சற்று அதிகம் என்றே தோன்றும்." பட மூலாதாரம், Mohamed Elshahed /Anadolu via Getty Images படக்குறிப்பு, இந்த அருங்காட்சியகம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. தொல்பொருளியலின் புதிய சகாப்தம் ஹவாஸைப் பொறுத்தவரை, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா கடந்த காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எகிப்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் ஆகும். நினைவுச்சின்ன காட்சியகங்களுக்கு அப்பால், இந்த வளாகத்தில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. அவை, எகிப்திய மற்றும் சர்வதேச குழுக்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து, மீட்டெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆகும். "இப்போது கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள லக்சர் மற்றும் சகாராவில் அகழாய்வு செய்து வருகிறேன். எங்கள் நினைவுச்சின்னங்களில் 30% மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் - இன்னும், 70% மணலுக்கு அடியில் உள்ளது," என்கிறார் ஹவாஸ். அருங்காட்சியகம் அதன் பரந்த அரங்குகளை பொதுமக்களுக்குத் திறந்தாலும், எகிப்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் இன்னும் அதன் பாலைவனங்களுக்கு அடியில் காத்திருக்கின்றன - எகிப்தின் தொல்பொருளியலின் புதிய சகாப்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. கூடுதல் செய்தி சேகரிப்பு: பிபிசி நியூஸ் அரபிக் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg1135klrxo

எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே

3 months ago
'என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே...............' சின்ன வயதில் தெரிந்து கொண்ட இந்த நையாண்டிப் பாடல் அதன் உட்பொருள் தெரியாமலேயே மனதில் தங்கிவிட்டது. இது அந்நியருக்கு எதிரான ஒரு நையாண்டி என்று அன்று எவரும் சொல்லித்தரவில்லை................
Checked
Mon, 02/09/2026 - 08:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed