3 months ago
இவரின் தாயார் ஒரு அருமையான திரைப்பட இயக்குனர். நானா பட்டேகர் நடித்த சலாம் பாம்பே எனும் திரைப்படம்தான் அவரின் முதலாவது திரைப்படம். என் அபிமான முதல் 10 படங்களுக்குள் வரும்.
3 months ago
மேலே சொன்னது போல இதில் முழு பங்கும் ஒத்தை வீடு வாங்கிய நபர்கள் மீது என்பதல்ல என்வாதம். தனி நபர்கள் தம் வருவாயை பொய்யாக காட்டி, அல்லது வீட்டு விலை எப்போதும் கூடி கொண்டே போகும் என நம்பி அகல கால்வைத்தார்கள், அதே போலவே மத்திய, சிறு, பெரு நிறுவனங்களும். வங்கி கொமிசனுக்காக இத்தோடு ஒத்து ஓடியது. கடைசியில் நம்பிக்கை கெட்டு போக, எல்லாரும் ஒரே நேரத்தில் குப்பிற விழ, அரசுக்கு காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தான் மேலே சொன்னேன் - இது privatizing profit socializing risk. 2008 இல் வங்கிகள் செய்ததும், இப்போ சஞ்சீவ் ஆரணி செய்ததும் இதையேதான். இலாபம் வந்தால் தனி நபர்களுக்கு, நட்டம் வந்தால் அரசுக்கு. உண்மையில் இப்படி அரசு விழ விடாது என்ற அளவு பெரிய யாவரங்களை எடுத்து நடத்துவது ஒரு பலசரக்கு கடையோடு ஒப்பிடுகையில் மிக குறைந்த ரிஸ்க்.
3 months ago
அந்த ஊழலின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளியே வரும்போது, நடிகையாக மாறிய அந்த நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா, தானாக முன்வந்து சி.ஐ.டி.க்குச் சென்றார். பத்மேவுடன் புகைப்படம் எடுத்தேன். எனினும், பத்மேவை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். 2022 துபாய் புத்தாண்டு விழாவிற்கு என் சொந்த செலவில் என் குடும்பத்துடன் நான் சென்றேன். அன்று லட்சக்கணக்கான மக்கள் இருந்தனர். அந்த பெயர் கொண்ட நடிகைகளும் இருந்தனர். நான் பத்மேவுடன் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பத்மே என்று எனக்குத் தெரியவில்லை. துபாய் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. எனக்கு அங்கு ஒரு தொழில் உள்ளது. பத்மேவைச் சந்திக்க நான் துபாய் செல்லவில்லை. எனக்கு நிறைய பணம் இருக்கிறது. எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நான் கஷ்டப்பட்டு என் பெயரை உருவாக்கினேன். பலர் அந்தப் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறார்கள். நீங்கள் புத்தாண்டு விழாக்களுக்குச் சென்றால், கவனமாக இருங்கள், கவனமாக புகைப்படங்களை எடுங்கள் என்றும் கூறியுள்ளார். பத்மே என்பவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்பவராவார். Tamilmirror Online || புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது
3 months ago
06 Nov, 2025 | 12:59 AM முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பொது நிதியில் ரூ. 1.03 பில்லியனுக்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததாக விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விரிவாகக் கூறப்பட்டுள்ளது என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருந்தார். 2010-2014 வரையான காலப்பகுதியில் பஷில் ராஜபக்ஷ உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, அதில் 'மகா நெகும' திட்டத்திலிருந்து ரூ. 155,451,612 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 வாகனங்களை அவர் பயன்படுத்தியதாகவும், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் மூன்று சொகுசு வாகனங்கள் மற்றும் 11 பிற வாகனங்கள் உட்பட, அரசுக்கு ரூ. 612,000,000 இழப்பு ஏற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 64 கடற்படை வீரர்கள் மற்றும் 84 ராணுவ வீரர்கள் அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டதாகவும், ரூ. 264,370ஈ 800 பொது நிதியில் அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பொறுப்பான அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் கமந்த துஷார வலியுறுத்தியுள்ளார். இந்த முறைப்பாட்டுக்குரிய ஆவணங்களை கமந்த துஷார 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முன்னிலையாகி ஒப்படைத்துள்ளார். பசில் ராஜபக்ஷ மீது ரூ.1.03 பில்லியன் பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டு; ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை தொடக்கம் | Virakesari.lk
3 months ago
06 Nov, 2025 | 01:04 PM திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றவர்களும், பாடசாலைக்கு அவசர அவசரமாக செல்கின்ற மாணவர்களும் வீதிகளில் செல்கின்ற கட்டாக்காலி மாடுகளினாலும் அவை வீதியில் போடுகின்ற சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். எனவே குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் புதன்கிழமை (05) கட்டாக்காலி மாடுகள் பிடித்தல் தொடர்பான அறிவித்தலை மாநகரசபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக முதல்வர் விடுத்திருந்தார் அதில் மாநகர எல்லைக்குள் கட்டாகாலி மாடுகள் பொது இடங்களில் நடமாடுவது அதிகரித்த வண்ணம் உள்ளது மற்றும் மக்கள் பாதுகாப்பிற்கும் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாகிறது. இதனால், மாநகர சபை சார்பில் இத்தகைய மாடுகள் பிடிக்கப்படுவதுடன், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை உரிய உரிமையாளர்கள் மூன்று (03) நாட்களுக்குள் வந்து மீட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மாடுகளை மீளப் பெறாவிட்டால், அவை மாநகர சபைக்கு சொந்தமாக்கப்படும். மாடுகளை மீண்டும் பெற விரும்பும் உரிமையாளர்கள், உரிய அத்தாட்சிப் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் மாநகர சபையில் நிர்ணயிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்திய பின்னரே மாடுகளை மீண்டும் பெற இயலும். இனி வரும் காலங்களில் தண்டப்பணத் தொகை மேலும் அதிகரிக்கப்படுமென பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று (06) காலை பிரதான வீதி, கடல்முக வீதி, திருஞானசம்பந்தர் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் பெருமளவான கட்டாக்காலி மாடுகள் திரிவதை படங்களில் காணலாம். திருகோணமலை வீதிகளில் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் | Virakesari.lk
3 months ago
ஓம்…மறுக்கவில்லை. ஆனால் அந்த பொறி பற்றி எரிந்திராவிட்டால், அதாவது வீடு வாங்கிய தனிநபர்கள், மற்றும் சிறு வியாபாரங்கள் மாதாந்த கொடுப்பனவை கொடுப்பதில் சிக்கலில் மாட்டி இராவிட்டால் காடு பற்றி எரிந்திராது. நீங்கள் சொல்லும் 90 சதவீதம் களவை வழமை போலவே செய்து கொண்டிருப்பார்கள். இந்த 10% dominos இன் அடிக்கட்டை போல. கீழ் கட்டையை இழுக்க ஒட்டு மொத்த கட்டுமானமும் ஆட்டம் கண்டு விட்டது. கட்டுப்பாடுகள்: இவை 1992 க்கு முன்னிருந்தன. அடுத்து வந்த அரசுகள் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தின. இதை bonfire of financial regulations என பெருமையாக வேறு பீத்துவார்கள் வலதுசாரிகள். 2008 இன் பின் இறுக்கினார்கள். இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தளர்கிறது. அடுத்த 2008 வரை இது தொடரும்.
3 months ago
06 Nov, 2025 | 02:29 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானை பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யானைகளை துரத்துவதற்கான முயற்சிகளில் கூட அதிகாரிகள் பின்வாங்குவதாகவும், மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் யானையின் தாக்குதல் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் கிராமசேவையாளருக்கு அறிவித்தபோதிலும் தாக்குதல் நடந்து இருதினங்களின் பின்னரே குறித்த பகுதிக்கு அவர் வருகைதருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிராமங்களில் நடைபெறும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டிய கிராம சேவையாளரே இவ்வாறான நிலையிலேயே இருந்துவருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர். செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம் | Virakesari.lk
3 months ago
06 Nov, 2025 | 04:59 PM இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நவம்பர் 3, 2025 திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களில் ஒன்றான செருப்பு 1980 மற்றும் 1995 க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். "குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 25ஆவது சான்று பொருளான செருப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அந்த பாட்டா நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்ட அந்த செருப்பு, 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. " 1986ஆம் ஆண்டு இராணுவ உறுப்பினர்கள் குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான விசாரணையின்போது செம்மணியில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது முதன்முதலில் தெரியவந்தது. மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், ஒரு பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும். 45 நாட்கள் நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வாய்வு செப்டெம்பர் 6, 2025 அன்று நிறைவடைந்த நேரத்தில், ஒரு குழந்தையின் எலும்பு உட்பட 239 எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்த மேலதிக ஆய்வுகளுக்கான பாதீட்டை, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார். "ஏற்கனவே எடுக்கப்பட்ட 240 மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாதீடு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கென பணியாற்றுவதற்காக, சட்ட வைத்திய அதிகாரிகளான செல்லையா பிரணவன், மயூரதன் உள்ளிட்ட 7 நிபுணர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது." இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15, 2025 அன்று நீதிமன்றில் விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாண நீதிபதி எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ஞா.ரணிதா மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் ஆகியோர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டனர். மழைநீரால் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வைத் ஆரம்பிப்பது குறித்த தீர்மானத்தை ஜனவரி 19, 2026 வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, ஒக்டோபர் 13, 2025 அன்று யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது." செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு | Virakesari.lk
3 months ago
புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! 06 Nov, 2025 | 05:29 PM புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில் குற்றவாளி நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பிரதிவாதிகள், தம்மை தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணையை நிறைவு செய்த உயர் நீதிமன்றம் தீர்ப்பினை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (6) உயர்நீதிமன்றத்தில் நிறைவு செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்விலேயே இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவியான வித்யா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழாம் இந்த மரண தண்டனை தீர்ப்பினை அறிவித்திருந்தது. புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு! | Virakesari.lk
3 months ago
06 Nov, 2025 | 06:04 PM காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்ட காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை (6) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியான தாளங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்டது. இவ்வாறு பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்றபோது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார். சஹரான் குழு போன்றவர்கள் போல ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட, நேற்று புதன்கிழமை (5) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். சில தீய சக்திகள் அந்தப் பகுதியில் ஏதாவது வெடிபொருள் அல்லது வேறு ஏதாவது பொருளை புதைத்து வைத்துவிட்டு, அதை தோண்டி எடுப்பதற்காக குழி தோண்டியிருக்கலாம் என்பது போன்ற பல சந்தேகங்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் இன்று, அப்பகுதிக்கு சென்று நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்ரே இயந்திரம் மூலமாகவும் சோதனையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மட்டு. தாழங்குடா காணியில் மர்மமான குழி - அதிரடிப்படையினர் சோதனை - சஹரான் குழுவின் குண்டுசோதனையை நினைவுறுத்தி தொடர் விசாரணை | Virakesari.lk
3 months ago
அப்ப சேர, சோழ, பாண்டிய, பிராபாகர சாதனைகளை எல்லாம் நீங்களும் ஏனையோரும் நேரில் பார்த்தா எழுதுகிறார்கள். இந்த நாகரீகங்களில் இந்த வழக்கம் இருந்தது என்பது செய்தி அல்ல ஐயா, வரலாற்று தரவு.
3 months ago
நிச்சயமாக £80 கொடுக்கவில்லை. ஒரு espresso கோப்பை அளவு அதிலும் அரைவாசி. நிச்சயம் £20 க்கு கீழேதான். 2017 இல்.
3 months ago
பிரேமதாசாவுக்கு பின் வந்த ஜனாதிபதிகள் எல்லாரும் ஏதோ ஒரு சமயத்தில் 1983 பெரும் பிழை என ஏற்று கொண்டனர். எனவே தொடர்ந்து கறுப்பு ஜூலை என தமிழர் பிச்சைகாரன் புண்ணை நோண்டக்கூடாது. இப்படி செய்வது நஸ்ட ஈடு கிடைக்கும் என அங்கலாய்க்கும் புலம்பெயர் தமிழர் சிலரே. கள்ள கூட்டம் 😂. பிகு சில வார்த்தைகளை மாற்றி போட்டுள்ளேன்.
3 months ago
கக்கீம் மெளனத்தைக் கலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் குளிர் காயாமல் தேசியத் தலைவருக்கும் இவருக்கும் இது பற்றி நடந்த கலந்துரையாடலும் தேசியத் தலைவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியும் வெளிப்படையாக பேச வேண்டும்.
3 months ago
அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் இலவசமாக காணி கொடுக்கும் என்று... எதிர்பார்க்கின்ற முஸ்லீம் கோஷ்டிதான் தொடர்ந்து சவுண்டு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். உண்மையில் இவர்களுக்கும்... யாழ்ப்பாணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதே உண்மை. திருட்டு கூட்டம்.
3 months ago
இன்று நடந்த போட்டியில் வஸ்சின்டன் சுந்தரின் பந்து வீச்சும் அருமை மட்டையடியும் அருமை.................மனதுக்கு பிடிச்ச வீரர் நல்லா விளையாடும் போது அது பெருத்த சந்தோசத்தை தருது மனதுக்கு..............................
3 months ago
பிச்சைக்காரன் புண்ணைப்போல இன்றளவும் இதனைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீளவும் அங்கு குடியேறுவதை இன்று தடுப்பது யார்? புலிகளா அல்லது தமிழர்களா? தாம் தமது சொந்த இடங்களில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்குமிடத்து அவற்றைக் காட்டி மீளவும் அங்கு வாழ்வதில் உள்ள சிக்கல் என்ன? இதனை யார் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? பெருமளவு முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், வவுனியாவிலும் தற்போது வாழ்ந்து வரும்போது மீதமிருப்போர் மீளவும் தமது பகுதிகளில் வந்து வாழ்வதைத் தடுப்பது யார்? அல்லது புலிகள் மீது ஏதோ ஒரு விடயம் குறித்து விமர்சனம் வைக்கப்பட்டே ஆகவேண்டும் எனும் காரணத்திற்காக இப்பிரச்சினை இன்றுவரை எழுப்பப்பட்டு வருகிறதா? ஆம், புலிகள் வெளியேற்றினார்கள், தவறுதான், இன்று அவர்கள் இல்லை, தாராளமாகவே வந்து வாழலாமே? அதை விடுத்து அதே பல்லவியை ஆளுக்கொருவராக இன்றுவரை ஏன் மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? வாருங்கள், வந்து வாழுங்கள், எவர் உங்களைத் தடுப்பது?
3 months ago
மம்தானி மனைவியின் இஸ்லாம் உடை பற்றி ஆராய இன்னும் ஒருத்தனும் கிளம்பலையா? Ashroff Shihabdeen
3 months ago
2026 டி20 உலக கோப்பைக்கு இந்தியாவில் 5 மைதானங்கள் தேர்வு - இறுதிப்போட்டி எங்கே தெரியுமா? மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவ்வகையில் இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறும் என்றும் ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. https://www.maalaimalar.com/news/sports/cricket/bcci-shortlists-5-cities-for-t20-world-cup-796228
3 months ago
அண்ணை, உண்டு கழித்த கோப்பிப்பழ விதையை சுத்தமாக்கி தான் பொடியாக்குவார்கள்! {யாழில ஒரு பெரும்புள்ளியை கண்டுபிடித்தாச்சி! ஒரு கப் கோப்பிக்கு 8000ரூபா(இந்திய) செலவளித்தால் பெரும்புள்ளி தானே?!}
Checked
Mon, 02/09/2026 - 05:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed