புதிய பதிவுகள்2

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் உள்வாங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

3 months ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், சென்னை உட்பட இந்தியாவில் உள்ள ஐந்து பெரு நகரங்கள், நிலம் உள்வாங்கும் பிரச்னையை எதிர்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், சில நிபுணர்கள் இதற்கு மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றனர். உலகெங்கிலுமே கட்டடங்கள் சேதமடையும்போது பெரும்பாலும் அந்தக் கட்டடங்களின் கட்டுமானப் பிரச்னைகளே பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், 'நிலம் உள்ளிறங்குவதாலும் கட்டடங்கள் சேதமடைகின்றன; நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கான முக்கியமான காரணம்' என்கிறது அந்த ஆய்வு. Nature Sustainability ஆய்விதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வின்படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள 2,406 கட்டடங்கள் நிலம் உள்வாங்குவதால் சேதமடையும் அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதே நிலை இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு நீடித்தால், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் இன்னும் 23,529 கட்டடங்கள் சேதமடையும் என்கிறது இந்த ஆய்வு. கனடாவில் உள்ள யுனைட்டட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா டெக், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகளைப் பதிப்பித்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2030வாக்கில் டோக்கியோவை விட தில்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது இந்த ஆய்வு. ஐந்து மெகா நகரங்கள் செயற்கைக்கோள் மற்றும் ராடார் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இன்சார் (Interferometric Synthetic Aperture Radar - InSAR) என்ற முறையில் 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வேகமாக வளரும் ஐந்து மெகா நகரங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் நிலம் சுமார் சராசரியாக 4 மி.மீ. அளவுக்கு உள்வாங்குவது தெரியவந்திருக்கிறது. இந்த நகரங்களில் வசிக்கும் மக்களில், சுமார் 1.9 மில்லியன் மக்கள் இதன் பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும். தற்போதைய நிலையில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் மொத்தமாக 2,406 கட்டடங்களின் கட்டமைப்பு பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இதே போக்கு, ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்தால் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூருவில் உள்ள 23,529 கட்டங்களின் அடிப்படைக் கட்டுமானங்கள் சேதமடையக்கூடும் என்கிறது ஆய்வு. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஜவ்வாது மலையில் தங்க புதையல் - கட்டுமானத்திற்காக தோண்டிய போது கிடைத்தது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட ஐயப்பன் கோவில் தங்கம் - சபரிமலை மோசடி புகாரின் முழு பின்னணி 'பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல்'- பல் மருத்துவ உலகில் ஏற்படப் போகும் மாற்றம் என்ன? நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி நபர் தேர்வு: டிரம்ப் எதிர்ப்பை மீறி வென்றவருக்கு காத்திருக்கும் சவால்கள் End of அதிகம் படிக்கப்பட்டது நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கு முக்கியக் காரணமாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் என இந்தியாவில் உள்ள ஐந்து மிகப் பெரிய நகரங்களில் 8.3 கோடி பேர் தற்போது வசிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு, 2030வாக்கில் டோக்கியோவைவிட டெல்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது. இதன் காரணமாக, இந்த நகரங்களின் நீர்த் தேவை வெகுவாக அதிகரிக்கும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்காக சார்ந்திருக்கும் ஏரிகள், குளங்கள் போன்றவையும் ஆழ்துளைக் கிணறுகளும் தங்கள் நீர்வளத்திற்கு பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருக்கின்றன. மேலும், நிலத்தடியில் உள்ள நீரைத் தேக்கிவைக்கும் பகுதிகளும் பருவமழையால்தான் புத்துயிர் பெறுகின்றன. ஆனால், பருவமழை பெய்வதிலும் அந்த நீர் நிலத்தில் உள்வாங்கப்படுவதிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், இப்படி நிலம் கீழிறங்குவதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்கிறது இந்த ஆய்வு. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது. டெல்லியில் அதிகம் 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த ஐந்து நகரங்களிலும் நிலம் குறிப்பிடத்தக்க அளவில் உள்வாங்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் வருடத்திற்கு 51 மி.மீ. அளவுக்கு நிலம் உள்ளிறங்கியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 31.7 மி.மீயும் மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஒவ்வொரு நகரத்திலும் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும், பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை, அடையாற்றின் வெள்ளச் சமவெளி பகுதிகள், வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நீண்ட காலமாகப் படிந்துள்ள களிமண் படிவங்களால் நிலம் உள்வாங்குவதாகவும் கே.கே. நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலம் உள்வாங்குவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இப்படி நிலம் உள்வாங்கப்படுவதால் கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என இந்த ஆய்வு கூறினாலும், அதன் அர்த்தம் அவை உடனடியாக இடிந்துவிடும் என்பதல்ல என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மாறாக, வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்படும் தருணங்களிலும் மோசமான கட்டுமானப் பணிகளின்போதும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதே இதன் அர்த்தம் என இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் கட்டடத்தின் வயது, அவை எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்' என்கிறார் எஸ். ராஜா. நீர் வளத்துறை நிபுணர்கள் கூறுவது என்ன? ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக வாய்ப்பில்லை என்கிறார்கள் நீர் வளத்துறை நிபுணர்கள். "நிலத்தடி நீரை எடுப்பதால் வருடத்திற்கு 4 மில்லி மீட்டர் அளவுக்கு நிலம் உள்ளிறங்கும் என்பது சரியானதாகத் தெரியவில்லை. சென்னையில் பெரிய அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது என்றாலும்கூட, இப்படி நடக்காது" என்கிறார் தமிழக நீர் வளத் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமைப் பொறியாளர் எஸ். ராஜா. இதற்கான காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். "நிலத்தடியில் நீரைச் சேமிக்கும் நீரகங்கள் (Accufiers) இரண்டு வகையானவை. ஒன்று, அடைபட்ட நீரகம் (Confined Accufier). மற்றொன்று, அடைபடா நீரகங்கள் (Unconfined Accufier). அடைபட்ட நீரகங்களைப் பொறுத்தவரை, நிலத்தடி நீருக்கு மேலும் கீழும் நீர் உள்ளே செல்ல முடியாமல் மூடப்பட்டிருக்கும். இந்த இடங்களுக்கு பல மைல் தூரத்திலிருந்து நீர் வரவேண்டும். ஆனால், அடைபடா நீரகங்களைப் பொறுத்தவரை, அந்த இடத்தில் மழை பெய்தால் அதே இடத்தில் கீழே இறங்கும். இதனால், அந்த இடத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். " "சென்னையின் பெரும்பகுதிகள் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. அதனால், கோடை காலங்களில் நீர் வற்றினாலும், மழைக் காலங்களில் நீர் மட்டம் உயர்ந்துவிடும். சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. தரமணியைத் தவிர்த்த பெரும் பகுதிகள் மணற் பாங்கானவை. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்" என்கிறார் எஸ். ராஜா. தரமணி பகுதியின் கீழே களிமண் இருப்பதால் அங்கு மட்டும் நீர் உடனடியாக கீழே இறங்குவது நடக்காது என்கிறார் அவர். பட மூலாதாரம், Getty Images சென்னை ஐஐடியின் சிவில் எஞ்சினீயரின் துறையின் வருகை பேராசிரியரான எல். இளங்கோவும் இதே கருத்தை வேறு காரணங்களை முன்வைத்து சுட்டிக்காட்டுகிறார். "முதலில் இந்தத் தரவுகள் எப்படி வந்தன என்பதைப் பார்க்கலாம். செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்களைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது, செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்கள் கதிர்களை கீழே அனுப்பி, திரும்பப் பெறும். நிலப்பரப்பிற்கும் ராடாருக்கும் இடையிலான தூரம் கணக்கிடப்படும்." "நிலப்பகுதி உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ இந்த முறையில் பதிவாகும் என்பதுதான் புரிதல். 2015ல் இருந்து 2023 வரையிலான தரவுகளை வைத்து, இந்த ஆய்வு முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த நகரங்களில் நிலம் சற்று கீழிறங்கியிருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. சென்னை ஐஐடியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளுக்கு முன்பாக, கொல்கத்தா நகருக்கு இதே போன்ற ஆய்வுகளைச் செய்திருக்கிறோம். ஆனால், செயற்கைக்கோள் ராடார் தரவுகளை மட்டும் பயன்படுத்தி இதனை மேற்கொண்டால், முடிவுகள் துல்லியமாக இருக்காது.'' என்கிறார் எல். இளங்கோ. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொல்கத்தா நகர கட்டடங்கள் 'சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல' மேலும் ''இந்த ஆய்வைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு தவறுகள் நேரக்கூடும் என்பதையெல்லாம் கணக்கிட்டு, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றாலும்கூட, நிதர்சனத்தில் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். கொல்கத்தாவிலும் டெல்லியிலும் இதுபோல நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அங்கு ஆற்றுப் படிமங்கள் அதிகம். இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சினால், அதற்கு மேலே உள்ள களிமண் சுருங்கி, நிலம் கீழே இறங்கும். ஆனால், சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல.'' என்கிறார் எல். இளங்கோ ''சென்னையில் வேளச்சேரியிலும் தரமணியிலும் தரைக்குக் கீழே களிமண் இருக்கிறது. ஆனால், இந்த ஆய்வில் அந்தப் பகுதிகளில் நிலம் இறங்குவதாக குறிப்பிடப்படவில்லை. அடையாறு, அதன் தென் பகுதிகளில் தரைக்கு கீழே பாறைகள்தான் உள்ளன. சென்னை ஐஐடிக்கு கீழேயும் பாறைகளே உள்ளன. வடபழனியிலும் விருகம்பாக்கத்திலும் நிலத்தடி மணற்பாங்கானது. வேளச்சேரியிலும் தரமணியிலும் இதுபோல நடக்கலாம் என்றாலும், அங்கு நடப்பதில்லை. காரணம், சென்னையைப் பொறுத்தவரை மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில்தான் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் உடனடியாக கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். ஆகவே அங்கும் நிலம் கீழே இறங்க வாய்ப்பில்லை." "கொல்கத்தா போன்ற நகரங்களில் சில கட்டடங்கள் உள்ளே இறங்கியிருப்பதை நாம் சாதாரணமாகவே பார்க்க முடியும். இத்தாலி, ரோம் போன்ற இடங்களில் சில பழங்காலக் கட்டடங்கள் இதுபோல கீழே இறங்குகின்றன. ஆனால், சென்னையில் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்த ஆய்வுகளைப் பொறுத்தவரை வெறும் ராடார் தரவுகளை மட்டும் நம்பாமல், நேரிலும் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஏதாவது சில கட்டடங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, கட்டடங்கள் உண்மையிலேயே இறங்குகின்றனவா என்பதை கணக்கிட்டிருந்தால் இது சிறப்பானதாக இருந்திருக்கும்" என்கிறார் பேராசிரியர் எல். இளங்கோ. 'விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும்' இதே கருத்தையே எதிரொலிக்கிறார் எஸ். ராஜா. "இந்த ஆய்வு முடிவில் கே.கே. நகர், தண்டையார் பேட்டை பகுதிகளில் நிலம் அதிகம் கீழே இறங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அம்மாதிரி இடங்களில் சில கட்டடங்களைத் தேர்வுசெய்து அவை ஒரு வருடத்திற்கு எத்தனை மி.மீ. கீழே இறங்குகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென நவீன கருவிகள் இருக்கின்றன. அந்தத் தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்கிறார் அவர். இந்த ஆய்வில் குறிப்பிடப்படும் வேறொரு தகவல் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் எல். இளங்கோ. அதாவது, பல இடங்களில் நிலம் இறங்குவதாகக் குறிப்பிட்டாலும் டெல்லியின் துவாரகா போன்ற பகுதிகளில் நிலம் சற்று உயர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "ஆனால், இதுபோல நிலம் மேலே உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு" என்கிறார் எல். இளங்கோ. இருந்தாலும், நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக உறிஞ்சுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும் என்கிறார் அவர். நிலத்தடி நீர் கண்மூடித்தனமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்க என்ன செய்வது? "தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் நிர்வாக) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதனை கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் எஸ். ராஜா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6nwzy9g66o

புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா

3 months ago
கண்ணைக் கவரும் கவரும் கலர் படங்களுடன் செய்தியை இணைத்த @பிழம்பு க்கு ஒரு “ஓ….” போடுங்க. 😁 😂 பிற்குறிப்பு: நடிகை ஶ்ரீமாலியின் வயிறு உப்பிக் கொண்டு நிற்குது. “ஆன்ரி” ஆக முதல் ஜிம்முக்குப் போய் வயித்தை குறைக்க வேண்டும்.

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

3 months ago
"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை 06 Nov, 2025 | 01:29 PM அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானிக்கு (Zohran Mamdani), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அமெரிக்க அரசுடன் மம்தானி "அன்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்றும், ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் "நிறைய இழக்க நேரிடும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில், மம்தானியின் வெற்றிக்குப் பின்னரான பேச்சு குறித்து டிரம்ப் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: "மம்தானி தனது வெற்றி உரையின் போது பேசியது மிகவும் கோபமான பேச்சு என்று நான் நினைக்கிறேன். அதில் நிச்சயமாக என் மீது கோபமாக இருந்தது. அவர் ஒரு மோசமான தொடக்கத்திற்குச் சென்றுவிட்டார். அவர் என்னிடம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால் அவர் நிறைய இழக்க நேரிடும். நியூயோர்க் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்." (முன்னதாக, மம்தானி வெற்றி பெற்றால் மத்திய நிதியுதவிகளைக் குறைப்பேன் என்று டிரம்ப் அச்சுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது). மம்தானியின் கொள்கைகளைத் தொடர்ந்து 'கம்யூனிசம்' என்று விமர்சித்து வரும் டிரம்ப், தனது பேட்டியில் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தினார், "ஆயிரம் ஆண்டுகளாக, கம்யூனிசம் என்ற கருத்து வேலை செய்யவில்லை. இந்த முறை அது வேலை செய்யுமா என்று நான் சந்தேகிக்கிறேன். அது உண்மையில் ஒருபோதும் வேலை செய்யவில்லை. நியூயோர்க்கில் கம்யூனிசத்தில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு விரைவில் புளோரிடா நகரம் அடைக்கலமாக இருக்கும்." மம்தானி, தனது வெற்றியை அடுத்து ஆற்றிய உரையில் ஜனாதிபதி டிரம்பை நேரடியாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உரையில், "நீங்கள் பார்ப்பது எனக்குத் தெரியும் டொனால்ட் டிரம்ப். நான் உங்களுக்காக நான்கு வார்த்தைகள் வைத்திருக்கிறேன், சத்தத்தைக் கூட்டுங்கள் (Turn the volume up)" என்று சவால் விடுத்திருந்தார். மேலும், டிரம்ப் போன்ற கோடீஸ்வரர்கள் வரி ஏய்ப்பு செய்வதை நிறுத்தி, நிலப்பிரபுக்கள் தங்கள் குத்தகைதாரர்களைச் சுரண்டுவதைத் தடுக்க, ஊழல் கலாச்சாரத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்" என்றும் அவர் சூளுரைத்தார். மம்தானியின் வெற்றி, அமெரிக்க அரசியலில் இரு துருவங்களுக்கிடையேயான மோதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229631

பிலிப்பைன்சை தாக்கும் அடுத்தடுத்த சூறாவளிகள்

3 months ago
கல்மேகி சூறாவளியால் 114 பேர் பலி; பிலிப்பைன்ஸில் அவசரநிலை அறிவிப்பு 06 Nov, 2025 | 11:24 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளை தாக்கிய கல்மேகி சூறாவளியில் சிக்கி 114 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிலிப்பைன்ஸை நேற்று புதன்கிழமை (05) தாக்கிய சூறாவளி, இந்த ஆண்டு இப்பகுதியில் தாக்கிய மிக வலிமையான சூறாவளி என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கல்மேகி சூறாவளியால், பிராந்தியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான செபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளதோடு, 127 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 82 பேர் காயமடைந்துள்ளனர். நீரில் மூழ்கியதால் பெரும்பாலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கல்மேகி சூறாவளி இன்று வியாழக்கிழமை (06) காலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறி மத்திய வியட்நாமை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/229614

13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் - இந்தியாவில் சஜித்

3 months ago
13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் Nov 6, 2025 - 05:10 PM 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் உரையாற்றும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் முக்கிய உரையை நிகழ்த்தினார். அதில் அந்நாட்டின் ஊடகவியலாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmhncuqiu01feo29nzz8otr4l

தேசிய தொழுநோய் மாநாடு கொழும்பில் ஆரம்பம் : ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு

3 months ago
06 Nov, 2025 | 03:04 PM நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை (06) காலை கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஆரம்பமானதோடு அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். அடுத்த 10 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தொழுநோயை ஒழிப்பதற்கான வரைபடம் இதன்போது வெளியிடப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழுநோய் மாநாடு இன்று வியாழக்கிழமை (06) நாளை வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் நடைபெறும். நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இலங்கை1995 ஆம் ஆண்டில் தொழுநோயை ஒழித்த போதிலும் அந்தப் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. தொடர்ந்தும் புதிய நோயாளிகள் அடையாளங் காணப்படுகின்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500-2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர்களில் சுமார் 10% பேர் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, 2035 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை தொழுநோய் அற்ற நாடாக மாற்ற தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நோய் பரவுவதற்கு காரணமான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல், வைத்தியசாலை கட்டமைப்பால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் வசதிகளை மேம்படுத்துதல், அங்கவீனமுற்றவர்களுக்கான முறையான புனர்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழுநோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதில் பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சிற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சசகாவா மன்றம் என்பவற்றுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். இதேவேளை, புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 40% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான தொழுநோயாளிகள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதோடு முறையே மட்டக்களப்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது. நிப்பொன் மன்றத்தின் தலைவரும் தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ணத் தூதுவர் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளுக்கான ஜப்பானிய அரசாங்க நல்லெண்ணத் தூதுவர் யோஹெய் சசகாவாவும் (Yohei Sasakawa) இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கே மற்றும் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் யசோமா வீரசேகர ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். தொழுநோயாளிகள் சார்பாகவும் அஜித் திசாநாயக்க உரையாற்றினார். தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதிஅமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா(Akio ISOMATA), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டத்தின் குழுத் தலைவர் மொமோ தகுயுச்சி(Momoe Takeuchi), உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய தொழுநோய் திட்டக் குழுத் தலைவர் வைத்தியர் விவேக் லால் உள்ளிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/229639

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணிநீக்கம்

3 months ago
மாட்டை களவெடுத்தவர்களின் படங்களையும் பெயர்களையும் பிரசுரிப்பார்கள். ஆனால் இப்படியான குற்றங்களை செய்கின்றவர்களின் பெயரையோ அவர்களின் புகைப்படங்களையோ வெளி விட மாட்டார்கள். இங்கு (கனடாவில்) இப்படியான குற்றங்கள் நடந்து ஒருவரை கைது செய்தால், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு பெயரையும் வெளிவிடுவார்கள். இதன் மூலம், இவர்களால் பாதிக்கப்பட்டு இன்னும் வெளியில் சொல்லாமல் இருப்பவர்கள் துணிந்து வந்து சாட்சி சொல்வார்கள் (அப்படி சொல்கின்றவர்களின் தனிப்பட்ட விடயங்கள் அனைத்தையும் ரகசியம் காப்பார்கள்)

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

3 months ago
ரசோவின் பதிலோடு உடன்படுகிறேன், அதற்கு மேலதிகமாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்: 1. "நியூயோர்க் நகரில் ஒரு கழுதையை நீலக் கட்சி நிறுத்தினாலும் அது வெற்றி பெறும்" என ஒரு ஜோக் இருக்கிறது. அது உண்மை என்றாலும், இந்த தேர்தலில் கூமோ (Andrew Cuomo) என்ற முன்னாள் நியூயோர்க் மாநில ஆளுனரும் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். லிபரல், நீலக் கட்சிக் காரரான அவர் போட்டியிடக் காரணமே, மம்தானியின் சோசலிஸ்ட் கொள்கை, முஸ்லிம் மத அடையாளம், இஸ்ரேல் எதிர்ப்பு என்பன நீலக்கட்சியின் வாக்குகளை மம்தானி பக்கமிருந்து தன் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை தான். அப்படியிருந்தும் 9% வித்தியாசத்தில் மம்தானிக்கு வெற்றி என்பது எவ்வளவு தூரம் அவர் மீது சுமத்தப் பட்ட முத்திரைகள் வேலை செய்யவில்லை எனக் காட்டுகிறது. இன்னொரு ஜோக்கும் நடந்தது. தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ட்ரம்ப் "மம்தானியை விட கூமோவை நான் ஆதரிக்கிறேன்!" என்று ஒரு "பாரிய பாறாங்கல்லை" கூமோவின் கழுத்தில் கட்டி விட்டார்😂 - அன்றே கூமோவின் வெற்றி வாய்ப்பு பூச்சியமாகி விட்டது! 2. வேர்ஜினியா மாநிலம் எப்போதும் சிவப்பு நீலம் என மாறிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம். அங்கே நீலக் கட்சியின் பெண் ஆளுனரும், மாநில சட்டமா அதிபராக ஒரு ஆபிரிக்க அமெரிக்கரும் வென்றிருக்கிறார்கள். எனவே, இது நியூயோர்க்கை விட முக்கியமான ஒரு அமிலப் பரிசோதனை முடிவு எனலாம். 3. நியூஜெர்சி- இது நான் வசிக்கும் மாநிலம். இதுவும் பல ஆண்டுகளாக நீல மாநிலம், ஆனால் சிவப்புக் கட்சியினர் ஆளுனர்களாக இருந்திருக்கின்றனர் - 2018 வரையில் இது சாத்தியமாக இருந்தது. போன வருடம் அதிபர் தேர்தலில், நியூஜேர்சி மாநிலத்தை வெறும் 6% வாக்கு வித்தியாசத்தில் கமலா ட்ரம்பை வென்றார் . அப்போதே நியூஜேர்சி சிவப்புக் கட்சியின் பக்கம் சாய்கிறதோ என அச்சம் வெளிப்பட்டது. ஆனால், இந்த ஆளுனர் தேர்தலில், ஷெரில் 15% வித்தியாசத்தில் சிவப்புக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் விசிறியை வென்றிருக்கிறார். இந்த வாக்கு வித்தியாசம் தான் முக்கியமானது. நியூயோர்க் போலவே லண்டனும் ஒரு உலக ரீதியில் முக்கியமான நகரம் - சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவினதும் உலகினதும் பொருளாதார தலை நகரம் என்ற வகையில் ஒரு சோசலிஸ்ட் வென்றிருப்பது கவனத்திற்குரிய ஒன்று என நினைக்கிறேன். அச்சமின்றி, யூதர்களின் நிறுவனங்கள் ஆளும் நியூயோர்க் நகரிலேயே இஸ்ரேல் எதிர்ப்பை வெளிக்காட்டிய படி மம்தானி வென்றிருக்கிறார் என்பது இனப்படுகொலையை ஆதரிக்கும் தீவிர இஸ்ரேலியர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும் ஒரு விடயம்!

புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கு ; பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு ; தீர்ப்பு ஒத்திவைப்பு!

3 months ago
இன்னும் 10 அல்லது 15 வருடங்களுக்கு தீர்ப்பை ஒத்தி வைத்து விட்டு, பின் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். வயசு வட்டுக்குள் போன பின், அரவணைக்க கூடிய ஆட்களும் உறவுகளும் இல்லாமல் போன சூழ் நிலையில் வெளியில் வந்து வாழ்வை மீள ஆரம்பிக்கும் போது தான், உண்மையான தண்டனையை அனுபவிப்பார்கள் இந்த காட்டேரிகள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

3 months ago
*பாதுகாப்பு அமைச்சுக்கு 64800 கோடி ரூபா நிதி! 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் நாளை *கல்வி அமைச்சுக்கு கடந்த ஆண்டைவிட 3000 ஆயிரம் கோடி மாத்திரமே மேலதிக ஒதுக்கீடு - ----- ----- ------ அநுர அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாது காப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் ,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் மொத்தமாக 11,6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கு 1.105.782.000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முதலாம் வாசிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் இவை) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-

ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?

3 months ago
அண்மையில் பாலியில் (இந்தோனேசியா)இந்த காப்பி தயாரிக்கும் இடத்திற்கு போயிருந்தேன். சுவைத்துப்பார்ப்பதற்காக சிறிய அளவில் தந்தார்கள், மணந்து பார்த்தேன் வாசனை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் அதைக்குடிக்க மனம் இடம்தரவில்லை.
Checked
Mon, 02/09/2026 - 05:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed