புதிய பதிவுகள்2

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months ago
மாடு தேடும் கதை யாழில் யாரோ அறிமுகபடுத்தி வாசித்தேன். ஜஸ்டின் அண்ணாவாகவும் இருக்கலாம். யாழின் சமூக சுரண்டலையும் காட்டி இருப்பார். யானை - யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் வன்னியில் போய் படிபிக்காமல், மாணவர்களை தொழிலாளர் போல் சுரண்டுவதை சுட்டும் கதையா? இப்படி ஒரு செ.ஆ கதை பல வருடம் முன்பு வாசித்தேன். குவேனி - யாழில் நான் எழுதி பாதியில் நிற்கும் கவிதை தொடர் ஒன்றின் இன்ஷ்பிரேசன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை ஜ‌யாவுக்கு ம‌ற்ற‌ உற‌வுக‌ளை உர‌சி பார்க்காட்டி தூக்க‌ம் வ‌ராது லொள்😁......................... வெற்றியின் ச‌ந்தோச‌ம் இது எத்த‌னை வ‌ருட‌ க‌ன‌வு இவெற்றியின் ச‌ந்தோச‌ம் இது எத்த‌னை வ‌ருட‌ க‌ன‌வு இது🙏🥰...................................................................

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : சின்ன பையன் சின்னபொண்ண காதலிச்சா ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும் ஆண் : கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா ஒரு காய்ச்சல் வரும் மன காய்ச்சல் வரும் பெண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து தினம் நான் பாடும் தேன் பாட்டு சின்னைய்யா என்னைய்யா இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா பெண் : எண்ணிரெண்டு வயதில் உன் கண்ணிரெண்டில் விழுந்தேன் ஆண் : முத்திருக்கும் கடலில் நான் முக்குளிச்சு எழுந்தேன் பெண் : வேலிகளை தாண்ட சொல்லும் வாலிபத்தின் வேகம்தான் ஆண் : வேறெதுக்கு பூத்ததிந்த பேரழகு தேகம்தான் பெண் : உன் முத்தமழையே இங்கு நித்தம் குளிக்கும் சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம் கட்டி வெள்ளம் அல்லவா ஆண் : சின்ன சின்ன கவிதை என் கை எழுத துடிக்கும் பெண் : மெல்ல மெல்ல எழுது என் மெல்லிடையும் தவிக்கும் ஆண் : கன்னி மலர் கண்ணில் பட்டால் கற்பனைகள் பாயாதா பெண் : கற்பனைகள் பாயாவிட்டால் கன்னி மலர் காயாதா ஆண் : என் முல்லை வனமே மின்னும் முத்து வடமே உன்னை பக்கம் வந்து நிக்கும் இன்ப சொர்க்கம் என்று சொல்லவா .......! --- சின்ன பையன் ---

அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ

3 months ago
அவரது அனுபவம். வளர்த்து விட்டவர்கள் இப்போ நழுவப்பார்க்கிறார்கள். இவர்களது ஆட்சிக்காலத்திலும் ஆட்கடத்தல், கொலை, கொள்ளை எல்லாம் நடந்தனவே. அப்போ இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தங்கள் தவறை மறைக்க மற்றவர்களை குறை கூறுவது இவர்களது வழமை. இவர்களது நீண்ட ஆட்சியின் வளர்ச்சியே இவையெல்லாம். அரசாங்கத்தின் அனுசரணையோடு நடப்பதென்றால், அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்? சிறையில் அடைத்து விசாரணை செய்ய வேண்டும் அரசாங்கம்? பாதாள உலக போதைக்கடத்தற்காரர் தங்களை பாதுகாத்துக்கொள்ள, தொழில் போட்டி காரணமாக கொலை செய்கிறார்கள். இவர் ஏன் பதறுகிறார்? தன்னையும் போட்டுத்தள்ளப்போகிறார்கள் என்றா?? கைது செய்யபோகிறார்களென்றா???

சிரிக்கவும் சிந்திக்கவும் .

3 months ago
தமிழா தமிழா · லாபத்தை விட இரக்கம் - **மருத்துவ அற்புதங்கள் பெரும்பாலும் மில்லியன் டாலர் விலைக் குறிச்சொற்களுடன்** வரும் உலகில், **பெங்களூரைச் சேர்ந்த தொலைநோக்கு பார்வை கொண்ட **புற்றுநோய் நிபுணர்** டாக்டர் விஷால் ராவ்**, லாபத்தை விட இரக்கத்தைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையை என்றென்றும் மாற்றினார். 👨‍⚕️" *தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குரல் பெட்டிகளை இழந்த பிறகு மீண்டும் பேச உதவும் ஒரு புரட்சிகரமான சாதனமான **ஆம் வாய்ஸ் புரோஸ்டெசிஸ்** ஐ அவர் கண்டுபிடித்தார். இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் விலை **₹15,000 முதல் ₹30,000** வரை இருந்தாலும், டாக்டர் ராவின் பதிப்பின் விலை **₹50** மட்டுமே - ஆனால் பணத்தால் வாங்க முடியாததை மீட்டெடுக்கிறது: **கண்ணியம், நம்பிக்கை மற்றும் குரல்.** 🔊" சிலிகானால் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய சாதனம், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக் குழாய்க்கு இடையில் **ஒரு வழி வால்வாக** செயல்படுகிறது, இதனால் நோயாளிகள் மீண்டும் இயற்கையாகப் பேச முடியும். 🙌" இன்னும் ஊக்கமளிக்கும் வகையில் - டாக்டர் ராவ் மற்றும் அவரது இணை கண்டுபிடிப்பாளர் **காப்புரிமையை இந்திய அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர்**, சுகாதாரத் திட்டங்களின் கீழ் தேவைப்படுபவர்களுக்கு இது **மலிவு விலையில் அல்லது இலவசமாக** இருப்பதை உறுதி செய்தனர். 🤝" லாபத்தால் இயக்கப்படும் ஒரு சகாப்தத்தில், மனிதகுலத்தால் இயக்கப்படும் **₹50 அதிசயத்தை** அவர் உருவாக்கினார் - உண்மையான கண்டுபிடிப்பு இதயத்திலிருந்து நேரடியாகப் பேசுகிறது என்பதை நிரூபிக்கிறது. 💙" #DrVishalRao #AumVoiceProsthesis #IndianGenius #HealthcareHero #Innovation #Inspiration #PrideOfIndia #fblifestyle Voir la traduction

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 39 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 39 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'புத்தர் இந்தியாவை விட்டு வெளியே எங்கேயாவது சென்றாரா?' புத்தர் நாகர்களை வென்று ஜேதவனத்திற்குத் [ஜேதவனம் (Jetavana) பரத கண்டத்தின் பண்டைய நகரமான சிராவஸ்தி அருகே கௌதம புத்தர் மற்றும் பௌத்த பிக்குகள் தங்குவதற்காகவும், பௌத்த தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அனாதபிண்டிகன் என்ற செல்வந்தன் புத்தருக்குத் தானமான வழங்கிய தோட்டமாகும்.] திரும்பினார். பின்னர் மீண்டும் நாக அரசரின் அழைப்பின் பேரில், புத்தர் மூன்றாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்தார். புத்தர் தனது மூன்றாவது பயணமாக 2-52 இல் இந்தியாவிலிருந்து ஐந்நூறு தேரர்களுடன் இலங்கைக்கு காற்றில் பறந்து சென்றார்? அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது ஒரு விசித்திரமான மற்றும் கண்கவர் காட்சியாக இருந்திருக்கும். பலர் இதை இந்தியாவில் பதிவும் செய்திருப்பார்கள், ஆனால் இந்தியாவின் எந்த வரலாற்று குறிப்பிலோ இல்லை புராணங்களிலோ அப்படி ஒன்றும் இல்லை! உப மனித நாகர்கள் அல்லது மனிதர் அல்லாதவர்கள், ஆயிரம் மைலுக்கும் அப்பால் இருந்த புத்தருக்கு ஐந்நூறு பிக்குகளுடன் மீண்டும் வருகை தரும் படி அழைப்பை அனுப்பும் திறன் கொண்டவை என்பது உண்மையில் விசித்திரமே ! எனினும் இது, இந்த அத்தியாயம், இலங்கையில் நடந்த எந்த மனித வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' என்ற புத்தகத்தின் பக்கம் 47 இல், கௌதம புத்தர் மகதத்திலும் [Magadha] அதற்கு அருகாமையிலும் ஒரு சிறிய பிரதேசத்தில் தான் வாழ்ந்தார், உலாவினார், இறந்தார் என்று கூறுகிறார். முன்பு கூறியது போல், 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' என்ற நூலின் பக்கம் 8ன் படி, புத்தர் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசியில் (Varanasi / Benares) இருந்து 250 மைல்களுக்கு அப்பால் செல்லவே இல்லை என்று கூறுகிறது. காசி என்பது பெனாரஸின் மற்றொரு பெயர். கீழே உள்ள அசோகப் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தைப் பார்க்கவும். இந்தியாவில் தோன்றிய எந்த ஆவணங்களும், புத்தர் வான்வழி பறந்து இலங்கைக்கு சென்றது பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. அத்தியாயம் 3, புத்த மரபின்படி உலகின் முதல் விவசாயி மன்னரான மகாசம்மதாவிலிருந்து [Mahasammata] புத்தரின் பரம்பரையைப் பற்றியது ஆகும். உதாரணமாக, இவரைப்பற்றி கூறும் பொழுது, 'முதல் பதவியேற்ற மன்னன், பூமியின் ஆட்சியாளர், புத்திசாலித்தனம் நிறைந்தவர், இளவரசர் மகாசம்மதா என்ற பெயரால், அவரது இராஜ்யத்தை ஆட்சி செய்தார் என்று வர்ணிக்கிறது. / The first inaugurated king, a ruler of the earth, full of brilliancy, prince Mahāsammata by name, reigned over his kingdom. மேலும் சித்தார்த்த (Siddhattha / பின்னர் புத்தர்) மற்றும் அவரது மகன் ராகுலபத்தா [Rahulabhadda] வைப் பற்றி கூறும் பொழுது, சித்தார்த்த சுத்தோதனனின் மகன் என்றும், உலகின் தலைவன் என்றும், ராகுலபத்தாவைப் பெற்றவன் என்றும், பின்னர் புத்ததன்மைக்காக அல்லது புத்தத்துவத்திற்காக, அதில் முழுநேரம் பாடுபடுவதற்காக, தனது வீட்டை விட்டு வெளியேறினான் என வர்ணிக்கிறது. / He the son of Suddhodana, Siddhattha, the chief of the world, begot Rāhulabhadda, and then left his home in order to strive for Buddhaship. புத்தத்தன்மை (சமஸ்கிருதம்: புத்தத்துவம், பாளி: புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இறுதியாக அந்த அத்தியாயம் "அரசர்களின் பெரும் பரம்பரையின் முடிவு" / End of the Great Lineage of Kings என்று முடிவடைகிறது. மகாநாம தேரரால் தொகுக்கப்பட்ட மகாவம்சம், இந்தக் கருத்துக்கு மாறாக, விஜயன் முதல் மகாசேனா வரையிலான பரம்பரையை மகாவம்சமாகக் கூறுகிறது. புத்தரின் மகாபரிநிர்வாணத்துடன் அல்லது புத்தரின் மரணத்துடன் தொடர்புபடுத்தி அரசர்களின் ஆட்சிக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 39 / Appendix – Dipavamsa / 'Did Buddha go anywhere outside India?' The Buddha returned to Jetavana after conquering the Nagas. The Buddha made a third visit to Lanka on the invitation of the Naga king. Buddha flew to Lanka with five hundred Theras from India on his third visit, 2-52. It would have been a strange and spectacular sight and many would have had recorded this in India, but none! Sub human Nagas or the serpents were capable of sending an invitation to the Buddha to visit again together with five hundred Bikkhus! Strange! This chapter is also not about any human historical events that took place in Lanka. V. A. Smith states in the page 47 of the Reference 'Asoka – The Buddhist Emperor of India by Vincent A. Smith, Third Edition 1919' that Gautama Buddha lived, moved, and died within a small territory in and near Magadha. As stated earlier, as per the page 8 of the Reference 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', that the Buddha never moved beyond 250 miles of Benares. Kasi is another name for Benares. See the map showing the extent of the empire of Asoka below. No documents originated in India give any details about the Buddha’s aerial flights to Lanka. Chapter 3 is completely about the Buddha’s lineage from Mahasammata [3. The first inaugurated king, a ruler of the earth, full of brilliancy, prince Mahāsammata by name, reigned over his kingdom.] to Siddhattha (later Buddha) and his son Rahulabhadda [47. He the son of Suddhodana, Siddhattha, the chief of the world, begot Rāhulabhadda, and then left his home in order to strive for Buddhaship.]. 3-50 reads thus;”End of the great lineage of kings”. Mahavamsa complied by Mahanama Thera, contrary to this concept, narrates the lineage from Vijaya to Mahasena as the Mahavamsa. The lengths of reigns of kings are given relative to the Buddha’s Mahaparinirvana, the death of the Buddha. This chapter is also not about human historical events that took place in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 40 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 39 https://www.facebook.com/groups/978753388866632/posts/32207411668907396/?

குட்டிக் கதைகள்.

3 months ago
காமிலா காதி · ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது. ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம். இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும் . தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும். ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும். மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும். காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது. ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது. வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்!! Voir la traduction

கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு

3 months ago
கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு 05 Nov, 2025 | 11:38 AM (இணையத்தள செய்திப் பிரிவு) கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி - இலங்கை ), சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதத்தின் மகளாவார். 'அன்சாம்பில் மொன்ட்ரியல்' (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார். கனடா சேவை மையத்தில் (Service Canada) பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர். தனது வெற்றியையடுத்து வீரகேசரிக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, "இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன். நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீதிப் போக்குவரத்துகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கியூபெக் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியின் இந்த வரலாற்று வெற்றி, மொன்ட்ரியால் மற்றும் கியூபெக்கின் பல்பண்பாட்டு ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Virakesari.lkகனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர...கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்!

3 months ago
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்! adminNovember 5, 2025 அதற்கு தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார் வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதையூடாக வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதற்கு வர்த்தகர்களைத் தவிர ஏனையோர் அவ்வாறு ஒருவழிப் பாதையாக்கியதன் ஊடாக போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதை ஆளுநர் குறிப்பிட்டார். நகரின் மத்தியிலுள்ள பேருந்து நிலையத்தாலேயே அந்த நெரிசல் ஏற்பட்டது என்பதையும், தனியாரும், இலங்கை போக்குவரத்துச் சபையினரும் நெடுந்தூர பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவதன் ஊடாக இதனைச் சீர் செய்ய முடியும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன் பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் மாவட்டச் செயலக கூட்டத்தில் தெரிவித்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், நெடுந்தூர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் வீதியின் நெருக்கடி நிலைமையை அவதானித்து நிலைமையை ஆராயலாம் எனக் குறிப்பிட்டார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள் ? யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார். யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/222342/

வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

3 months ago
வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு! வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டம்பஹுவவைச் சேர்ந்த 22 வயதான மோட்டார் சைக்கிளின் சாரதியே உயிரிழந்தவர் ஆவார். கட்டுவன: வலஸ்முல்ல-மிதெனியா வீதியில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 24 வயதான மோட்டார் சைக்கிளினின் சாரதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெரலபத்த: கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் உள்ள “Y” சந்திக்கு அருகில் ஒரு கொள்கலன் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோத்தியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலியந்தலையைச் சேர்ந்த 49 வயதான மோட்டாடர் சைக்கிளின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை: கொஸ்வத்த, சீனிமோதரவைச் சேர்ந்த 43 வயது பாதசாரி ஒருவர், மொரகெட்டியாரவில் கொழும்பு-வெல்லவாய வீதியை கடக்கும்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோதி உயிரிழந்தார். பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் ஒவ்வொரு பிரிவிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1452030

சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

3 months ago
சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில், பொருட்கள் சேவை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்ற MEMU (Mainline Electric Multiple Unit) பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த பொருட்கள் சேவை ரயிலுடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன, காயமடைந்தவர்கள் பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை, சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனம் (CIMS) ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளல் பயணிகள் ரயில், சிவப்பு சமிக்ஞையை மீறி, 60-70 கிமீ வேகத்தில் பொருட்கள் சேவை ரயிலில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா‍ 10 இலட்சம் ரூபாவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1452038
Checked
Sun, 02/08/2026 - 17:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed