புதிய பதிவுகள்2

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

3 months ago
நல்ல முடிவைத் தந்த நியூ யோர்க் தேர்தல்👍. இவர் திட்டமிடும் எல்லா விடயங்களையும் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால், பலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பிற்கு ஒரு தலைமைக் குரலாக இருத்தல், குடியேறிகளை வரவேற்கும் போக்கு, என்பன காரணமாக என் போன்ற குடியேறிகளின் முழுமையான ஆதரவு மம்தானிக்கு! பி.கு: ட்ரம்பின் சிவப்புக் கட்சிக் காரர்களுக்கு செம அடி நேற்று, நியூ ஜேர்சியில் எப்போதும் போல நீலக் கட்சியின் பெண் ஆளுனர் 15% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி (கமலா நியூஜேர்சியில் அதிபர் தேர்தலை வென்றது ட்ரம்பை விட 6% வாக்குகளால் தான், எனவே இது சாதனை!) வேர்ஜினியா மாநில ஆளுனர் பதவி சிவப்புக் கட்சியிடம் இருந்து நீலக் கட்சியிடம் - இன்னொரு பெண் ஆளுனரிடம்- சென்று விட்டது. பென்சில்வேனியாவின் உச்ச நீதி மன்றத்தின் லிபரல் நீதிபதிகள் மூவர் சிவப்புக் கட்சியினரின் பிரச்சாரத்தையும் மீறி வென்றிருக்கின்றனர் -ட்ரம்ப் வந்து தேர்தல் மோசடி வழக்குப் போடும் போது குட்டி அனுப்பி விடுவார்கள்!

யானைகளை வனங்களுக்கு விரட்டும் நடவடிக்கை அமைச்சுக்குத் தெரியாது

3 months ago
Nov 5, 2025 - 03:56 PM ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "அத தெரண" வினவியபோது அவர் குறிப்பிடுகையில், இந்த "யானை விரட்டும் நடவடிக்கை" குறித்த செய்திகள் வெளியான பின்னரே அமைச்சு அதிகாரிகள் இது குறித்து அறிந்ததாகவும், அதன் பின்னர் அதுபற்றி வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன்படி, குறித்த நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு சுற்றாமல் அமைச்சு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித-யானை மோதலைத் தீர்ப்பதற்காக, மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான ஒரு நடவடிக்கையை ஆரம்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தச் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டினார். யானைகளை பாரியளவில் பாதுகாப்பு வலயங்களுக்குள் விரட்டுவது என்பது மனித-யானை மோதலுக்கு எந்த வகையிலும் அறிவியல்பூர்வமான தீர்வு அல்ல என்றும் அந்தச் சிரேஷ்ட அதிகாரி கூறினார். மனித-யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டத்தின்படி, தற்போது தப்பொவ மற்றும் கலாவெ ஆகிய வனப்பகுதிகளில் யானைகளுக்கான ஊட்டச்சத்து வலயத்தை ஏற்பாடு செய்தல், புத்தளம் உட்பட பல பகுதிகளில் சுமார் 70 ஏக்கர் புல்வெளிகளைப் பாதிக்கும் ஆக்கிரமிப்புத் தாவரங்களான அந்தர போன்றவற்றை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மின்வேலிகளைப் பலப்படுத்த புதிய அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், வனவிலங்குத் திணைக்களத்துக்காக 100 கெப் வண்டிகள் மற்றும் 180 மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மனித-யானை மோதல் முகாமைத்துவத்துக்கான தேசியத் திட்டத்தில் 600 புதிய வனவிலங்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதும் உள்ளடங்கியுள்ளது. தற்போது, சுமார் 60 வீதத்திற்கும் அதிகமான யானைகள் வனங்களுக்கு வெளியே தங்கியுள்ளதாகவும், கிராமப்புறங்களில் கிடைக்கும் உணவின் காரணமாகவே யானைகள் பாதுகாப்பு வனங்களுக்கு செல்வதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாதுகாப்புப் பகுதிகளில் புற்கள் உட்பட யானைகளுக்குத் தேவையான உணவை அதிகளவில் கிடைக்கச் செய்வதன் மூலம் கிராமங்களுக்குள் நுழையும் யானைகளைக் குறைப்பது, யானை வழித்தடங்களை உருவாக்குவது, மற்றும் மின்வேலிகளைப் பலப்படுத்துவது ஆகியவையே மனித - யானை மோதல் முகாமைத்துவத்திற்கான தேசியத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் சுற்றாடல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கிராமங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்டியடிக்கும் நடவடிக்கை கடந்த நவம்பர் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வனவிலங்கு அதிகாரிகள், விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2000 அதிகாரிகள் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmhlurmxl01f5qplpz6h5xyzi

ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?

3 months ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புனுகு பூனை கட்டுரை தகவல் ஸ்ரீனிவாஸ் நிம்மகட்டா பிபிசி செய்தியாளர் 5 நவம்பர் 2025, 06:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் கடைக்குப் போய் காபி குடித்தால் எவ்வளவு செலவாகும்? பத்து அல்லது பதினைந்து ரூபாய் ஆகலாம். ஒரு கேப்பச்சினோ குடித்தால் நூற்றைம்பது ரூபாய் ஆகலாம். ஆனால் ஒரு ஸ்பெஷல் காபி உள்ளது. அதைக் குடிக்க, நம்மிடம் அதிகப் பணம் இருக்க வேண்டும். அந்த காபியைக் குடிக்க, நீங்கள் ரூ. 1,600 முதல் ரூ. 8,000 வரை செலவழிக்க வேண்டும். அது, சிவெட் காபி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கோபி லுவாக் காபி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த காபி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Civet) என்ற விலங்குதான். பொதுவாக 'புனுகு பூனை' என்று அழைக்கப்படும் இதில், பல இனங்கள் உள்ளன. இப்போது, உலகம் முழுவதும் இப்பூனையின் மலத்திலிருந்து தயாரிக்கப்படும் காபிக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகவும் மாறி வருகிறது. பூனையின் மலத்தில் கிடைக்கும் பொருளில் இருந்து தயாரிக்கப்படும் காபி என்றவுடன், கேட்பதற்கு சற்று விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் அது உண்மைதான். இந்த ஆசிய புனுகுப்பூனை எப்படி காபி தயாரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த காபி இவ்வளவு விலை உயர்வாக இருப்பதற்குக் காரணம், ஆசிய பாம் சிவேட் (Asian Palm Civet) என்ற விலங்குதான். பூனை குடும்பத்தைச் சேர்ந்தது இல்லையா ? ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பேராசிரியரான மஞ்சுலதா பிபிசியிடம் இதுகுறித்துப் பேசுகையில், புனுகு பூனை என்ற பெயரில் 'பூனை' என்ற சொல் இருப்பதால், அது பூனை குடும்பத்தைச் சேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் "அது விவேரிடே குடும்பத்தைச் சேர்ந்தது, அதாவது காட்டில் சுற்றித் திரியும் பாலூட்டிகள். இதுவரை, புனுகு பூனையின் 38 இனங்கள் உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிவெட் பூனை சற்று நீளமான உடலையும், கூர்மையான நகங்களையும் கொண்டுள்ளது. தலை முதல் வால் வரை அதன் நீளம் இரண்டு முதல் இரண்டரை அடி வரை இருக்கும். அதன் எடை 3 முதல் 5 கிலோ வரை இருக்கும். அதன் ஆயுட்காலம் 15 முதல் 20 ஆண்டுகள்" என்று பேராசிரியர் மஞ்சுலதா விளக்கினார். "இது புழுக்கள், பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும். காடுகள் மற்றும் மலைகளில் காணப்படும் இந்த புனுகுப்பூனை திறமையாக மரம் ஏறும். புனுகுப்பூனை வாசனையை வெளியிடும் ஒரு வாசனை சுரப்பியைக் கொண்டுள்ளது. அதனால் இது வாசனை திரவியங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது தடை செய்யப்பட்டதால், இதே போன்ற வாசனையுடன் கூடிய செயற்கை புனுகுப்பூனை வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன" என்கிறார் மஞ்சுலதா. புனுகுப் பூனையில் இருந்து சேகரிக்கப்படும் எண்ணெய், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருப்பதியில் நடைபெறும் அபிஷேக சேவையிலும், ஆண்டுதோறும் நடைபெறும் கஸ்தூரி ஜின்னே சேவையிலும் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி விலங்கியல் பூங்காவில் 5 புனுகுப் பூனைகளை பராமரித்து வருவதாக அதன் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். அங்குள்ள புனுகு பூனைகளைப் பராமரிக்க விலங்கியல் பூங்கா அதிகாரிகள் அனுப்பிய ரூ.1.97 கோடி திட்டத்திற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இவை இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகள் உட்பட தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சேஷாசலம் காடுகள், திருப்பதியைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அல்லூரி மாவட்டத்தின் காபி தோட்டங்களிலும் இதைக் காணலாம் என்று பேராசிரியர் மஞ்சுலதா கூறினார். சிவெட் காபி உருவான வரலாறு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு நாள், சிவெட் பூனை மலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட காபி கொட்டைகளை காபி தூளாக அரைத்தனர். மக்கள் அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காபியை ருசித்தனர். கோபி லுவாக் என்ற காபி முதன்முதலில் இந்தோனீசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காபி, சிவெட்டுகள் எனும் விலங்கு வகையின் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பதால் இது சிவெட் காபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தோனீசியாவுக்குச் செல்லும் பலரும் இந்த காபியை ருசிக்காமல் திரும்ப முடியாது. ஆசிய பாம் சிவெட் என்ற இந்த விலங்கு உலகத்துக்கு அறிமுகமாக காரணம், டச்சு குடியேறிகள்தான் என்று பிபிசி முன்பு வெளியிட்ட ஒரு செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் படி, அவர்கள் 300 ஆண்டுகள் முன்பு ஜாவா, சுமத்ரா, சுலவேசி தீவுகளில் காபி மரங்களை நட்டிருக்காவிட்டால், இன்று உலகம் இந்த விலங்கு குறித்து இவ்வளவு கவனம் செலுத்தியிருக்காது. அதுவரை அந்த தீவுகளில் பழங்கள், பெர்ரி வகைகள், பூச்சிகள் மற்றும் புழுக்களை உணவாகக் கொண்டு வந்த இந்த உயிரினம், காபி செடிகள் மூலம் புதிய சுவையான உணவைக் கண்டுபிடித்தது. இந்த புனுகு பூனைகள் காபி செடிகளில் வளரும் வட்ட வடிவ காபி செர்ரிகளை ருசித்தன. அவற்றுக்கு அந்தச் சுவை பிடித்திருந்தது. ஆனால், அவை காபி செர்ரியின் சதையை மட்டும் சாப்பிட்டுவிட்டு விதைகளை அப்புறப்படுத்திவிட்டன. காபி செர்ரிகளில் உள்ள விதைகள் புனுகுப்பூனையின் செரிமானப் பாதையிலிருந்து வெளியேறுவதைப் புரிந்துகொண்ட தோட்ட உரிமையாளர்கள், விதைகளைப் புனுகுப்பூனையின் மலத்திலிருந்து பிரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர். "கழிவுகளைப் பயன்படுத்துவோம்" என்ற எண்ணம், சிவெட் மலத்திலிருந்து விலையுயர்ந்த காபியை உருவாக்க வழிவகுத்தது. ஒரு நாள், சிவெட் பூனை மலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட காபி கொட்டைகளை காபி தூளாக அரைத்தனர். அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட காபியை மக்கள் ருசித்தனர். இந்த காபியில் இருந்து வந்த மண் வாசனை மற்றும் அரிதான சாக்லேட் போன்ற சுவையை மக்கள் விரும்பினர். இப்படித்தான், கோபி லுவாக் என்ற காபி பிறந்தது. சுவைக்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காட்டுப் புனுகுப் பூனைகள், பொதுவாக மிகவும் பழுத்த, சிறந்த சுவை கொண்ட காபி செர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். காபி செர்ரிகளில் உள்ள விதைகள் சிவெட்டுகளின் செரிமானப் பாதை வழியாகச் செல்லும் போது, அவற்றின் செரிமான நொதிகள் காபி கொட்டைகளில் உள்ள புரத அமைப்பை உடைத்து , அவற்றின் அமிலத்தன்மையை நீக்குகின்றன. இது காபிக்கு அதன் தனித்துவமான சுவையையும் நறுமணத்தையும் தருகிறது. காட்டுப் புனுகுப் பூனைகள், பொதுவாக மிகவும் பழுத்த, சிறந்த சுவை கொண்ட காபி செர்ரிகளைத் தேர்ந்தெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இயற்கையாக நடைபெறும் இந்தத் தேர்வுதான் காபியின் சுவையை மேம்படுத்துகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் சிவெட்டுகள் இன்னும் வாழ்ந்து வருகின்றன. இந்த காபி இப்போது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன் அரிதான தன்மையின் காரணமாக, கோபி லுவாக் உலகின் மிக விலையுயர்ந்த காபிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது உலகில் நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு கப் வைல்ட் சிவெட் காபியின் விலை சுமார் ரூ. 1,600 முதல் ரூ. 8,300 வரை விற்கப்படுவதைக் காண முடியும். 'தி பக்கெட் லிஸ்ட்' திரைப்படத்தில் இடம்பெற்ற பிறகு இந்தக் காபிக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது என்று தி கார்டியன் என்ற ஆங்கில செய்தித்தாள் முன்பு குறிப்பிட்டிருந்தது. சிவெட் காபி எங்கெல்லாம் கிடைக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிவெட் காபி தயாரிக்க, காட்டு சிவெட் பூனைகள் பிடிக்கப்பட்டு, நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. தென்கிழக்கு ஆசியா முழுவதும் சிவெட் காபி இப்போது உற்பத்தி செய்யப்படுகிறது. சிவெட் காபி இப்போது அதன் பிறப்பிடமான இந்தோனேசியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர், வியட்நாம், கம்போடியா, லாவோஸ், இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட, அந்த பூனைகளின் இயற்கை வாழ்விடங்களிலும் உற்பத்தி செய்யப்படுகிறது . சிவெட் காபி தயாரிக்க, காட்டு சிவெட் பூனைகள் பிடிக்கப்பட்டு, நெரிசலான கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. அவற்றுக்கு காபி செர்ரிகளும் உணவாக அளிக்கப்படுகின்றன. இதனால் அவை நோய்வாய்ப்படுவதால் அவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. அழியும் அபாயத்தில் இருக்கும் விலங்குகளாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் குறிக்கும் சிவப்பு பட்டியலில் 'குறைவான கவலைக்குரியவை' என்ற வகையில் சிவெட் பூனைகளை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் சிவெட் காபி தூள் எங்கே கிடைக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைசூர் மற்றும் குடகு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிவெட் காபி தூளை ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றன. இந்தியாவிலும் சிவெட் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் பல நிறுவனங்கள் இதை விற்பனை செய்கின்றன. இது தொடர்பாக, மடிகேரியில் உள்ள குடகு காபி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை பிபிசி தொடர்பு கொண்டது. "நாங்கள் இங்கு சிவெட் காபி பொடியையும் விற்பனை செய்கிறோம். விவசாயிகளிடமிருந்து சிவெட் மலத்தை சேகரித்து, உலர்த்தி, கழுவி, சுத்தமான காபி பொடி தயாரிக்கிறோம். தற்போது, ஒரு கிலோவை ரூ.7,500க்கு விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு 50 கிலோ விற்பனை செய்கிறோம்," என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது. மைசூர் மற்றும் குடகு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் சிவெட் காபி தூளை ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றன. காபி தயாரிக்க விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றவா ? பட மூலாதாரம், Getty Images சிவெட் காபி தயாரிக்கும் முறையில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டி, பிபிசி முன்பு ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது. அவை கூண்டில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் சூழல் குறித்து இந்தோனீசியாவில் நடத்தப்பட்ட புலனாய்வை அது விவரிக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் பாலியில் உள்ள 16 தோட்டங்களில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 காட்டு புனுகு பூனைகளின் நிலையை மதிப்பிட்டனர். அதில், அவற்றின் கூண்டுகள் சுகாதாரமற்றவை என்றும் விலங்கு நலத் தரங்களை மீறுவதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால், காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் புனுகுப் பூனைகளின் மலத்தை மட்டுமே சேகரித்து அதிலிருந்து காபி தூள் தயாரிப்பதாக, விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிவெட் விலங்குகளின் செரிமான அமைப்பால் காபி கொட்டைகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை, சிவெட்டுகளுக்கு தீங்கு விளைவிக்காமல், ஆய்வகங்களில் நகலெடுப்பதற்கான வழிகளை மற்ற ஆராய்ச்சியாளர்கள் தேடுகிறார்கள். சுவை எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது ஒரு உயிரை விட மதிப்புமிக்கது அல்ல. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8gej3lx22o

950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!

3 months ago
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த சில காலங்களாக கைப்பற்றப்பட்ட 950கிலோ போதைப்பொருள்கள் நேற்று எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் மற்றும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் உசைன் ஆகியோரின் முன்னிலையில் கோம்பயன் மணல் இந்து மாயானத்தின் மின்தகன மேடையில் போடப்பட்டு குறித்த போதைப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன . பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் எடுத்துவரப்பட்ட குறித்த போதைப்பொருள்கள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. 950கிலோ போதைப்பொருள் கோம்பயன் மணல் மயானத்தில் எரித்து அழிப்பு!

தமிழர் தேசத்தின் தொன்மையை பாதுகாப்பதில் அக்கறையின்றி செயற்படும் அரச அதிகாரிகள்

3 months ago
Published By: Digital Desk 3 05 Nov, 2025 | 04:06 PM யாழ்ப்பாணத்தின் தொன்மையையும் சிறப்பினையும் பாதுகாக்கும் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை அக்கறையின்றி பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வெள்ளை சுண்ணாம்பு கல்லினால் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு கால பழமை வாய்ந்த வைரவர் ஆலயம் ஒன்று காணப்படுகின்றது குறித்த ஆலயத்தினை முற்றாக அழித்து, புனரமைப்பு செய்வதற்கு சிலரினால் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, தமிழர் தேசத்தின் சிறப்புக்களையும் தொன்மையும் பேணும் வகையில் வெள்ளை சுண்ணக்கல் கட்டிடக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு தரப்பினால் வலியுறுத்தப்படுவதாக தெரிகின்றது. இந்நிலையில் குறித்த விவகாரம் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, வரலாற்று தொன்மை மிக்க ஆலய கட்டிடக் கலையை முற்றாக அழிக்க முனைகின்ற தரப்பினரும், அதனை பாதுகாக்க விரும்புகின்ற தரப்பினரும் கலந்து கொண்ட கூட்டம், வலி வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தொழில்நுட்ப அலுவலகர்கள் மூலம் ஆய்வு செய்து அவர்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் முடிவுக்கு வரலாம் என்று பிரதேச செயலாளரின் ஆலோசனை இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி கள விஜயம் மேற்கொண்ட தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப ரீதியான எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாது, பறவைகள் தின்றுவிட்டு துப்பிய விதைகள் காரணமாக ஆலயத்தில் மரம் செடி முளைத்திருப்பதால் பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வெள்ளை சுண்ணக்கல் கட்டிடம் உருவாக்கப்பட்டு நூறு வருடங்களுக்கு மேற்பட்டமையினால், அவை வலுவிழந்திருக்கும் என்ற தமது ஊகத்தின் அடிப்படையிலும், குறித்த ஆலயத்தினை முற்றாக இடித்து அழிப்பதற்கு பரிந்துரைப்பதாகவும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எந்த அடிப்படையும் அற்றமுறையில் சிறுபிள்ளைத்தனமாக குறித்த அறிக்கை அமைந்துள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வெள்ளை சுண்ணக்கல் கட்டிடக் கலையின் தாற்பரியங்களை புரிந்து கொள்ளாது பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களினால் வேதனை வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த விடயத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போறோர் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தொல்லியல் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், குறித்த இதுவரை காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று ஆதங்கம் வெளியிடப்பட்டிருப்பதுடன், தமிழர்களி்ன் தொன்மையையும் சிறப்பையும் பாதுகாப்பதற்கு தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் தமிழர் தொன்மையை பாதுகாக்க விரும்பும் தரப்பினரால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229547

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்?

3 months ago
05 Nov, 2025 | 12:53 PM யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். அதேவேளை 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர். வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார். உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார். யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்? | Virakesari.lk

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம்

3 months ago
05 Nov, 2025 | 03:37 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகளில் வன்முறை கும்பல்கள் மற்றும் , போதைப்பொருள் வியாபாரிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் , அது தொடர்பில் பிரதேச சபை மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கொக்குவில் சந்தையில் மரக்கறி வாங்க வந்த நபர் ஒருவருடன் வன்முறை கும்பல் ஒன்று , முரண்பட்டு, அவரை மிக மோசமாக தலைக்கவசங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தால் , சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுவார்கள், மரக்கறி வாங்க வந்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டதுடன் , சந்தையில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கடந்த வாரம் திருநெல்வேலி , சந்தையினுள் சனநடமாட்டம் அதிமாக காணப்பட்ட பகல் வேளை நிறை போதையில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து , தகாத வார்த்தைகளை பேசி அட்டகாசம் புரிந்த நிலையில் , அது தொடர்பில் பொலிஸார் மற்றும் நல்லூர் பிரதேச சபையினருக்கு அறிவித்தும் , அவர்கள் சம்பவ இடத்திற்கு வராத நிலையில் போதையில் அட்டகாசம் புரிந்தவரின் குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்று இருந்தனர். அதேபோன்று , கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் , சந்தைக்குள் போதையில் இரு தரப்பினர் , முரண்பட்டு , வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைக்குள் ஒரு தரப்பு புகுந்து அங்கிருந்த கத்தியை எடுத்து மற்றைய தரப்பின் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர். இரு சந்தைகளிலும் நாளுக்கு நாள் போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளை வாங்கி பாவிப்பவர்கள் மற்றும் வன்முறை கும்பல்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து செல்லும் நிலையில் , அது அதனை கட்டுப்படுத்த நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் தொடரும் அட்டகாசம் | Virakesari.lk

நல்லூரில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கை

3 months ago
05 Nov, 2025 | 04:49 PM நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசி செல்பவர்களை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் கவனத்தில் எடுக்காது கழிவுகளை பலரும் வீசி செல்கின்றனர். அவ்வாறு கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் , பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், தொடர்ந்தும் கழிவுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில் அவ்வாறு கழிவுகளை வீசுபவர்களை எச்சரிக்கும் வகையில் அவர்கள் கழிவுகளை வீசி செல்பவர்களின் காட்சிகளின் காணொளிகளின் தரத்தை மிக குறைந்து, அவர்களை ஏனையோர் அடையாளம் காணாத வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு கழிவுகளை வீசுவார்கள் இனிவரும் காலங்களிலும், திருந்தாது இவ்வாறு செயற்பட்டால், அக் காணொளிகளை ஏனையோர் அடையாளம் காணும் வகையில், மிக உயர்ந்த (4K) தரத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளை வீசி சென்றவர்களுக்கு கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூரில் பொது இடங்களில் கழிவுகளை கொட்டுவோரின் சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் என எச்சரிக்கை | Virakesari.lk

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

3 months ago
05 Nov, 2025 | 04:53 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் உள்ளிட்ட பொருட்கள் இன்று புதன்கிழமை (05) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் காலை தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாகவும், இச்சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்! | Virakesari.lk

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months ago
https://noolaham.net/project/169/16872/16872.pdf தன் காதலியைக் கொன்ற ஒரு தனியன் யானையை ஒருவர் காடுகளில் துரத்தித் திரிவதைப் பற்றிய கதை. இதுவும் 3 பதிப்புகள் வெளிவந்த பிரபலமான செங்கை ஆழியான் நாவல்.

உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்!

3 months ago
அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரியின் எண்ணத்துக்கு தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, அச்சுறுத்தி, சகோதரி தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உடன்பிறந்த சகோதரனின் 11வது வயதில், சகோதரி தனது 18 வயதைக் கொண்டிருந்தபோது இந்த முறைகேடான தொடர்பு ஆரம்பித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது 22 வயதான சகோதரி, வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பெண் 2 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடன்பிறந்த தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பம்! | Virakesari.lk

மன்னாரில் காற்றாலை தொடர்பாக நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கின்றோம் -

3 months ago
05 Nov, 2025 | 04:56 PM மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்பி எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை (05) 95 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் போது போராட்ட களத்தில் இன்றைய தினம் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருந்தார்.அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.எதிர்வரும் காலத்தில் எவ்விதமான காற்றாலை திட்டங்களும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப் படாது என்கின்ற செய்தியை அமைச்சரவை ஊடாக தெரிவித்திருந்தார். எனினும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேளைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடையம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.எனவே இப்போராட்டக்கலத்தில் இருந்து நாங்கள் கூறிக்கொள்வது எமது போராட்டம் நின்று விடாது. குறித்த 14 காற்றாலைகளும் அகற்றப்பட்டு,ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்பட்டு,அதற்கான உத்தரவாதத்தினை வழங்குவதன் மூலமும்,மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்வு இடம் பெறாது என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகின்ற போதே இப்போராட்டம் நிறுத்தப்படும். குறித்த போராட்டம் நூறாவது நாளை எட்டுகின்ற போது மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.கிராமங்கள் தோறும் தீப்பந்த போராட்டமும் முன்னெடுக்கப்படும். நாட்டுக்காகவும்,நாட்டு வளத்தை பாது காப்பதும்,மன்னார் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படும். எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்.அவரது முடிவு கிடைக்கும் வரை இவ் போராட்ட களத்தில் நாங்கள் காத்திருப்போம். எமது கோரிக்கைகளான மன்னார் தீவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 14 காற்றாலைகள் அகற்றப்பட வேண்டும்,ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளால் மன்னார் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புக்களும் உடனடியாக நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபடுவதாக எமக்கு உத்தரவாதம் வழங்கி எழுத்து மூலம் எமக்கு வழங்க வேண்டும், மன்னார் மாவட்டத்தில் எவ்வித கணிய மணல் அகழ்விற்கும் அனுமதி வழங்க கூடாது.ஆகிய மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் காற்றாலை தொடர்பாக நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் காத்திருக்கின்றோம் - போராட்டக்களத்தில் இருந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவிப்பு | Virakesari.lk

யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு!

3 months ago
யாழ்ப்பாணத்தில் மாபெரும் சுனாமி ஒத்திகை! 05 Nov, 2025 | 01:03 PM இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்க்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை (05) பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது. காலை 9:15 மணியளவில் சுனமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்ட அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்படு செய்யப்பட்டிருந்தன. வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன் கிராம மக்களும தங்கவைக்கப்பட்டனர். இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள், மணவர்களில் ஒருசிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர். இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை பொலிசார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன. இச் சுனமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500 வரையான வடமராட்சி மெதடிஸ்த பெண்கள கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கு மேற்பட்டோரும், பொதுமக்கள் சுமார் 250 பேரும் கலந்துகொண்டுருந்தனர். குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்தம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229546

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

3 months ago
Nov 5, 2025 - 05:38 PM ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது. தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmhlyenbk01f6qplpl1ll93f5

நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

3 months ago
நான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம் - மேயராக தெரிவானபின் சொஹ்ரான் மம்தானி உரை நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம். நான் இளமையாக இருக்கிறேன். நாங்கள் ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்திவிட்டோம். நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும். இன்றிரவு முதல், ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் நகரம். (நியூயார்க் நகர மேயராக தெரிவான பின் சொஹ்ரான் மம்தானி ஆற்றிய உரையின் ஒரு பகுதி) https://www.jaffnamuslim.com/2025/11/blog-post_12.html

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்!

3 months ago
அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்! நேற்றைய தினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகனால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்திற்கு அருகில் நேற்று (04) காலை 10.30 மணியளவில் மோதர தேவாலய குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், கடந்த மே மாதம் 4ஆம் திகதி மீட்டியாகொடை, மானம்பிய, தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையை கரந்தெனிய சுத்தாவின் தரப்பு இயக்கியிருந்த நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் அவரது மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மீட்டியாகொடையில் கொல்லப்பட்டவரின் மகனான இசுரு என்பவர், கரந்தெனிய சுத்தாவின் மைத்துனனின் வெளிநாட்டில் உள்ள மகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதுடன் அவர், “உங்கள் அப்பாவை கொன்றது நான் தான். அவர் என் அப்பாவைக் கொன்றதால்” நான் அவரை கொன்றேன் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இசுரு என்பவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஆலோனையின் பேரில், எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் மேற்பார்வையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2025/1452085

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

3 months ago
பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்! கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முதல் விவசாயிகளின் இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்கள் வரை 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது, கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கட்சி கடுமையாகக் கண்டித்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. திமுக அரசு “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டது” என்றும், “பெண்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றும் குற்றம் சாட்டிய TVK, முதலமைச்சர் “தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வாரா” என்றும் கேள்வி எழுப்பியது. மற்றொரு தீர்மானத்தில், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த TVK, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான தலையீட்டைக் கோரியது. கனமழைக்கு மத்தியில் டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு TVK திமுக அரசை கடுமையாக சாடியது. அரசாங்கத்தின் “செயலற்ற தன்மை 20 லட்சம் தொன் இழப்புக்கு வழிவகுத்தது” என்று கட்சி குற்றம் சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரியது. வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டிய மற்றொரு தீர்மானம், முழுமையடையாத மழைநீர் வடிகால்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியது. வெள்ளத்தைத் தடுக்க ரூ.4,000 கோடி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறும் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது. Athavan Newsபொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்...கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். க
Checked
Sun, 02/08/2026 - 17:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed