3 months ago
இப்படியான பெண்களைத் ‘திருட்டின்பப் பிரியை’ என்று கொஞ்சம் மரியாதையாக அழைக்கலாம். நானென்றால் ‘கள்**க் காரிகை’ என்று இன்னும் மரியாதையாக அழைப்பேன்!
3 months ago
பட மூலாதாரம், Supplied கட்டுரை தகவல் அபூர்வா அமீன் பிபிசி குஜராத்தி 7 நவம்பர் 2025, 15:41 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது. சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை. கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன. வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் என்பதாலும், மருத்துவ அறிவியலின் சில வரம்புகள் இருப்பதாலும், பேன்களை அகற்றும் சிகிச்சை இரண்டு மணிநேரம் நீடித்தது. கண் இமைகளில் ஏற்படும் அரிய வகை பேன், phthiriasis palpebrarum என்று அறியப்படுகிறது. பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, கீதாபென் மேத்தாவின் கண்ணில் இருந்து எடுக்கப்பட்ட பேன்கள் விசித்திரமான மருத்துவ பிரச்னையின் பின்னணி சவர்குண்ட்லாவில் உள்ள லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனையின் கண் மருத்துவர் மிருகங்க் படேலிடம் பிபிசி பேசியது. கீதாபென் சிகிச்சைக்காக புறநோயாளி பிரிவுக்கு வந்தபோது, சுமார் மூன்று மாதங்களாக அவரது கண் இமைகளில் தொடர்ந்து அரிப்பு இருப்பது குறித்துக் கூறியதாகத் தெரிவித்தார். "பொடுகு இருப்பதே கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதற்குப் பொதுவான காரணம். கண் இமைகளில் பேன் இருப்பது மிகவும் அரிதானது. கருவியின் மூலம் கண் இமைகளை கவனமாகப் பார்த்தபோது, அங்கு பேன் அசைவதைக் கண்டோம்" என்று மருத்துவர் மிருகங்க் படேல் கூறினார். "பேன்கள் மட்டுமல்ல, பேன்களின் முட்டையான ஈர்களும் பாதிக்கப்பட்டவரின் கண் இமைகளில் இருந்தன. கண்களில் ஈரும் பேனும் இருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தால் அவர் பீதியடைந்து விடுவார் என்பதால், முதலில் நாங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினோம். அதுமட்டுமல்ல, பேன்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை நீக்குவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும் விளக்கிச் சொன்னோம்." மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள், இதற்கு முன்னதாக சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் சென்று மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்றிருந்தனர். நோயாளி கீதாபென்னின் மகன் அமித் மேத்தா பிபிசியிடம் , "அம்மாவின் கண்களில் அரிப்பு இருந்தது. இரவில் அவரால் தூங்க முடியவில்லை. சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டினோம், எந்தப் பலனும் இல்லை. பின்னர் லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அம்மாவை பரிசோதித்த மருத்துவர் மிருகாங்க் அம்மாவின் கண்ணில் பேன் இருப்பதாகவும், அதை வெளியே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்," என்று கூறினார். "இந்த பேன் நம் உடலில் உள்ள ரத்தத்தை உரிஞ்சுகிறது. உடலின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கண் இமைகளின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அங்கு அவற்றால் ரத்தத்தை சுலபமாகக் குடிக்க முடியும். இந்தப் பேன்கள் கண் இமைகளின் மேல் அமர்வதால் நோயாளிக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பேன்களை எளிதில் அகற்ற முடியாது" என்று மருத்துவர் மிருகங்க் தெரிவித்தார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, மருத்துவர் மிருகங்க் படேல் பேன் அகற்றும் செயல்முறை இந்த வகையான பேன்கள் வெளிச்சம் ஏற்பட்டால் நகர்ந்துவிடுபவை. எனவே அவற்றை அகற்ற, McPherson எனப்படும் சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பேனாகப் பிடித்து வெளியே இழுக்க வேண்டும். "இந்த சிகிச்சைக்கு சுமார் இரண்டு மணிநேரம் எடுத்தது" என்று மருத்துவர் மிருகங்க் படேல் விளக்கினார். "செயல்முறை முடிந்ததும், நோயாளியின் கண் அரிப்பு குறைந்துவிட்டது. இதுபோன்ற அரிதான பாதிப்புகள் இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னிடம் வந்தபோது, நான் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் இதுவொரு அரிய பிரச்னை." சிக்கலான நடைமுறையை மேற்கொண்டு மருத்துவர் மிருகங்க் படேல் மற்றும் அவரது குழுவினர், நோயாளியின் கண் இமைகள் இரண்டில் இருந்தும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பேன்களையும் 85க்கும் மேற்பட்ட ஈர்களையும் அகற்றினர். சிகிச்சைக்கு அடுத்த நாளன்று மீண்டும் கண் பரிசோதனை செய்தபோது நோயாளியின் கண்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன. பிபிசியிடம் பேசிய மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா, "நான் மருத்துவத் துறையில் 21 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் இன்று வரை இதுபோன்ற பாதிப்பை இரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். இது சற்று சிக்கலான பிரச்னை" என்று கூறினார். "நோயாளி இரண்டரை மாதங்களாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். சூரத்தில் சில மருத்துவர்களை அவர் சந்தித்து இருந்தாலும், நோய் கண்டறியப்படவில்லை, இது பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது" என்றார் அவர். ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் என்றால் என்ன? அமெரிக்க தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின்படி, ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் (Phthiriasis palpebrarum) என்பது கண் இமைகளில் பேன் மற்றும் அதன் முட்டையான ஈர் இருக்கும் அரிய மருத்துவ நிலை ஆகும். இந்தச் சிக்கல் ஏற்பட்டால், கடுமையான அரிப்பு, கண் இமைகள் சிவத்தல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இது பொதுவான கண் தொற்று போல் இல்லை என்பதால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கண்களில் எப்படி பேன் வரும்? ஆமதாபாத்தில் உள்ள துருவ் மருத்துவமனையின் கண் நிபுணர் மருத்துவர் ஹர்ஷத் அகஜா பிபிசியிடம் கூறுகையில், "இது மிகவும் அரிதான நோய். இந்த லார்வாக்கள் கொசுக்கள் முட்டையிடும் அதே வகையிலான லார்வாக்கள். சுகாதாரமின்மையால் ஏற்படுகின்றன." "பல ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்தில். இதுபோன்ற ஒரு பாதிப்பை பார்த்தோம். ஆனால் இது மிகவும் அரிதானது" என்றார் மருத்துவர் அகஜா. கண்ணிமைகளில் பேன் வருவதற்குக் காரணம், வீட்டிலுள்ள சில வகையான சூழல்களாகவோ, பயன்படுத்தும் தலையணைகளாகவோ இருக்கக்கூடும். "மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே கால்நடைகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பேன்கள் படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் அல்லது ஆடைகளில் இருக்கலாம்" என்று மருத்துவர் மிருகங்க் கூறுகிறார். "இந்த நோய் தற்செயலாகவும் ஏற்படலாம். காடு போன்ற இடத்திற்குச் செல்லும்போது அல்லது கால்நடைகளுடன் தொடர்பு கொள்ளும்போது அவை உடலில் ஒட்டிக்கொண்டு, தலையில் இருந்து கண் இமைகளுக்கு வந்து சேரலாம்" என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம், Supplied படக்குறிப்பு, சாவர்குண்ட்லாவில் உள்ள ஸ்ரீ லாலுபாய் சேத் சுகாதார மந்திர் மருத்துவமனை கண் இமைப் பேன் முதன்மை அறிகுறிகள் கண் வலி, கண்களில் தொடர்ந்து அரிப்பு, தூக்கமின்மை ஆகியவை கண் இமையில் பேன்கள் இருப்பதற்கான அறிகுறிகள் என்று மருத்துவர் மிருகாங்க் கூறுகிறார். கண் இமைகளில் நீர் வடிதல், வீக்கம் ஆகியவை தோலில் ஏற்படும் தொற்று காரணமாக அரிப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகளாகும். இந்த வகையான நோய்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன? சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக ஏற்படும். வீட்டில் தூய்மையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். கண்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், நேரத்தைக் கடத்தாமல் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண் பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொள்வது பாதிப்பை அதிகப்படுத்தும் என்று மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpq1xzd7955o
3 months ago
நல்ல துணிச்சலாக, தெளிவாக கேள்வி கேட்கின்றார். பெண்களிடம் வக்கிரமாக கேள்வி கேட்பவர்களுக்கு செருப்படி இது!
3 months ago
பட்டாம்பூச்சிக்கு சத்திரசிகிச்சையா?! முந்திச்செல்ல முயன்ற கார் விபத்தில் சிக்கியது. குதிரை கடிக்குமா?!
3 months ago
இளஞ்செழியன் ஒரு நல்ல நீதியரசராக இருந்தவர். சில சிறந்த தீர்ப்புகளை வழங்கியவர், ஆனால் அழுது நடிப்பதிலும், செண்டிமண்ட் காட்சிகளில் வெளுத்து வாங்குவதிலும் நல்ல திறமையுள்ளவர். தனக்கு காவலாக வந்த சிங்கள பொலிசார் (தேவையில்லாமல் மூக்கை நுழைக்கப் போய்) கொல்லப்பட்டதன் பின் அந்த பொலிசாரின் பெற்றோறின் காலில் வீழ்ந்து அழுதது தொடக்கம், சிங்கள பெளத்த பிக்குகளை தொழுதது தொட்டு, தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என கண்ணீர் மல்க நாடகம் போட்டது வரை இவருக்கு நல்ல நடிப்பு திறமை உள்ளது எனக் காட்டியுள்ளார். அந்தந்த கால கட்ட ஆளும் கட்சிகளுக்கு விசுவாசமாக நடப்பது என்பது அரச உயர் பதவிகளில் இருக்கும் தமிழர்களின் பொதுவான குணம். இவருக்கும் அது நிறைய இருந்தது.
3 months ago
காணொளி
3 months ago
பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங்கள் உட்பட 70,000 முதல் 100,000 பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் 2002-இல் அறிவிக்கப்பட்டது. 2012-இல் திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், பெரும் செலவு, அரசியல் குழப்பங்கள், கோவிட்-19 தொற்றுநோய், பிராந்திய மோதல்கள் என தொடர்ந்து பலமுறை தாமதங்களை எதிர்கொண்டது. இந்த மெகா திட்டத்திற்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை செலவாகியுள்ளது, இதில் பெரும்பகுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன்களால் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார். மர்மங்களுக்குப் பெயர் போன இடம் இந்த அருங்காட்சியகத்தை எகிப்தின் "உலகிற்கான பரிசு" எனக் குறிப்பிடுகிறார் அந்நாட்டின் பிரதமர் மொஸ்தபா மட்பௌலி. இந்த அருங்காட்சியம் எகிப்திய கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான சலீமா இக்ராம் கடந்த இருபது வருடங்களாக கிரேட் எகிப்திய அருங்காட்சியகத்துடன் இணைந்து பணியாற்று வருகிறார். "பண்டைய எகிப்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது" என்று கூறும் சலீமா, "கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் போனீஷியர்கள் கூட எகிப்தை மர்மம் மற்றும் அறிவு நிறைந்த நிலமாக நினைத்தார்கள்" என்றார். நவீன கால எகிப்தியர்களை அவர்களின் பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்க இந்த அருங்காட்சியகம் உதவும் என்று நம்பப்படுகிறது. வீடு திரும்பும் துட்டன்காமன் பட மூலாதாரம், Grand Egyptian Museum படக்குறிப்பு, கிரேட் எகிப்திய அருங்காட்சியம் 1922-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் எகிப்தியலாளர் ஹோவர்ட் கார்ட்டர் துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்ததிலிருந்து, அவரைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகெங்கிலும் பல நகரங்களில் பல தசாப்தங்களாக காட்சிப்படுத்தப்பட்ட பின்னர், துட்டன்காமனின் தங்க முகக் கவசம், சிம்மாசனம் மற்றும் அவருடன் புதைக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் (இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படாதவை உட்பட) முதல் முறையாக முழுமையாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. "துட்டன்காமனின் கல்லறையில் கிடைத்த பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது அற்புதமானது" என்கிறார் சலீமா. "எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் துட்டன்காமனின் காட்சியகங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன்." என்கிறார் மான்செஸ்டர் அருங்காட்சியக எகிப்து மற்றும் சூடான் காப்பாளரான கேம்பல் பிரைஸ். இவர் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார். "முக்கிய காட்சியகங்கள் அனைத்துமே கண்களை கொள்ளை கொள்ளக்கூடியவை, ஒவ்வொரு பொருளும் வியப்படையச் செய்கிறது. எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது." என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், REUTERS/Mohamed Abd El Ghany படக்குறிப்பு, 3,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ராமெசஸ் தி கிரேட் என்ற பிரமாண்டமான சிலை கிங் டுட்டின் பொக்கிஷங்களுடன், அருங்காட்சியகத்தின் பிரதான மண்டபத்தில் 3,200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ராமெசஸ் தி கிரேட்-இன் பிரமாண்டமான சிலை உட்பட பிற குறிப்பிடத்தக்க படைப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. கிமு 7000 ஆம் ஆண்டு வரையிலான பல பொக்கிஷங்களைப் போலவே, இந்த சிலையும் இங்கு வந்த கதை சுவராஸ்யமானது. கெய்ரோவின் பிரதான ரயில் நிலையத்தின் முன் 51 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலை, புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக நகர் முழுவதும் காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. உலகின் பழமையான மற்றும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும், 4,600 ஆண்டுகள் பழமையான, கிங் கூஃபுவின் 'சூரிய ஒளிப் கப்பலுக்காக' பிரத்யேக சிறப்புப் பிரிவு ஒன்றும் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எகிப்தியவியலாளர் ஜாஹி ஹவாஸ் (நடுவில்), கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதிலிருந்து நிதி திரட்டவும் அதை மேம்படுத்தவும் உதவியுள்ளார். "எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்" இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழா என்பது பொக்கிஷங்களை காட்சிப் பொருளாக வைப்பது மட்டும் அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்கிறார் எகிப்தின் இந்தியானா ஜோன்ஸ் என்று அழைக்கப்படும் தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ். மேலும், இது எகிப்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக உள்ளது என்று தெரிவித்தார். "நமது நினைவுச் சின்னங்களை ஆராயும் விஞ்ஞானிகளாக நாம் மாற வேண்டிய நேரம் இது" என்று கூறும் அவர், "அரசர்களின் பள்ளத்தாக்கில், 64 அரச கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும், அதில் ஒன்றைக் கூட எகிப்தியர்கள் தோண்டி எடுக்கவில்லை" என்றார். துட்டன்காமனின் கல்லறை உட்பட எகிப்தின் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஹவாஸ் சுட்டிக்காட்டுகிறார். எகிப்தியர்கள் தங்கள் சொந்த பாரம்பரியத்தை அறிந்து கொள்வதிலும், தேடி பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறும் அவர், அவற்றை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இந்த அருங்காட்சியகம் அனைத்து எகிப்தியர்களுக்குமான இடமாக கருதப்பட்டாலும், சிலருக்கு நுழைவுக் கட்டணம் அதிகமாகத் தோன்றலாம். வயது வந்த எகிப்தியர்களுக்கான டிக்கெட் 200 எகிப்திய பவுண்டுகள் (சுமார் ரூபாய் 354) ஆகும். இந்தக் கட்டணம், வெளிநாட்டு பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படும் 1,200 பவுண்டுகளுடன் (சுமார் ரூபாய் 2100) ஒப்பிடும்போது மிகவும் குறைவானதுதான் என்றாலும், பல உள்ளூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானதாக தோன்றக்கூடும். "இறந்தவர்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்காமல், உயிருள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்று பேராசிரியர் சலீமா கூறுகிறார். "இது அனைவருக்கும் பொதுவானது, இருப்பினும் சில எகிப்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் சற்று அதிகம் என்றே தோன்றும்." பட மூலாதாரம், Mohamed Elshahed /Anadolu via Getty Images படக்குறிப்பு, இந்த அருங்காட்சியகம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. தொல்பொருளியலின் புதிய சகாப்தம் ஹவாஸைப் பொறுத்தவரை, கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் திறப்பு விழா கடந்த காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எகிப்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் ஆகும். நினைவுச்சின்ன காட்சியகங்களுக்கு அப்பால், இந்த வளாகத்தில் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன. அவை, எகிப்திய மற்றும் சர்வதேச குழுக்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து, மீட்டெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆகும். "இப்போது கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள லக்சர் மற்றும் சகாராவில் அகழாய்வு செய்து வருகிறேன். எங்கள் நினைவுச்சின்னங்களில் 30% மட்டுமே நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் - இன்னும், 70% மணலுக்கு அடியில் உள்ளது," என்கிறார் ஹவாஸ். அருங்காட்சியகம் அதன் பரந்த அரங்குகளை பொதுமக்களுக்குத் திறந்தாலும், எகிப்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் இன்னும் அதன் பாலைவனங்களுக்கு அடியில் காத்திருக்கின்றன - எகிப்தின் தொல்பொருளியலின் புதிய சகாப்தம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. கூடுதல் செய்தி சேகரிப்பு: பிபிசி நியூஸ் அரபிக் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg1135klrxo
3 months ago
'என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே...............' சின்ன வயதில் தெரிந்து கொண்ட இந்த நையாண்டிப் பாடல் அதன் உட்பொருள் தெரியாமலேயே மனதில் தங்கிவிட்டது. இது அந்நியருக்கு எதிரான ஒரு நையாண்டி என்று அன்று எவரும் சொல்லித்தரவில்லை................
3 months ago
2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்! Published By: Priyatharshan 07 Nov, 2025 | 05:57 PM வரவு - செலவுத் திட்டம் - 2026 - நேரலை பகுதி - I - https://www.virakesari.lk/article/229638 புதிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்க 25 மில்லின் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சகல தொழிற்றுறைகளிலும் கடன் பெற்றுக் கொள்ள 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சுற்றுலாத்துறையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறை தலங்களை அபிவிருத்தி செய்ய 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அப்புத்தளை பிரதேசத்தை பிரதான சுற்றுலாத்துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி கொழும்பு பேர வாவியை தூய்மைப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி 2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் ஆள் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் - ஜனாதிபதி அடுத்த ஆண்டு முதல் அரச நிறுவனங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கலின் போது சேவைக் கட்டணம் அறவிடப்படாது. நிகழ்நிலை முறைமை கொடுக்கல் ,வாங்கல் கருத்திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் AI திட்ட பயிற்சிக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ப்ரோவ்ட் பேன்ட் பற்றுறுதிச்சீட்டு ( வவுச்சர் ) நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் - ஜனாதிபதி டிஜிட்டல் துறை ஆராய்ச்சியாளர்களுக்காக "அக்னி நிதியம் " உருவாக்கப்படும். இதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி சிறைச்சாலைகளை மறுசீரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி விசேட தேவையுடையவர்களின் நலன்களுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் - ஜனாதிபதி ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டும் 6000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி, சிற்றுச்சாண்டிச்சாலை மற்றும் வளாக பொது சேவை அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு 11 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபொல கொடுப்பனவு 5000 ரூபா, இதர கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிப்பு - ஜனாதிபதி தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி பிரஜா சக்தித் திட்டம் ஊடாக சகல மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்பது எமது கொள்கை - ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது வழங்கப்படும் 1350 ரூபா ,2026 ஜனவரி மாதம் முதல் 1550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரை - ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1550 மேலதிகமாக, அரசால் வருகை ஊக்குவிப்பு தொகையாக 200 ரூபா வழங்க பரிந்துரை - ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும் - ஜனாதிபதி பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2041 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது - ஜனாதிபதி கிராமிய வீதி அபிருத்திக்கு 24 ஆயிரம் மில்லியன் ரூபா, கிராமிய பாலம் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மகளிர் வலுவூட்டலுக்கு 240 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி யானை - மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும்,மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி வனவளத்துறை திணைக்களத்துக்கு நிரந்தர நியமனத்துக்கு அமைய 5000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம் - ஜனாதிபதி யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வு காண 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் உயர்கல்வி ,மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி சீன திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் - ஜனாதிபதி நெல்,வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உட்பட அத்தியாவசிய பொருட்களை சதொச நிறுவனம் கொள்வனவு செய்து களஞ்சியம் செய்யும் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி தேசிய பாற்பண்ணை தொழிற்றுறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மீன்பிடி தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்க 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி கிரான் பாலம், பொன்டுகால் பாலம் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி தூய்மையான குடி நீர்த் திட்டத்துக்கு 85,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி நீண்ட தூர பேருந்து சேவைக்கு புதிதாக 600 பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்ள 3,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - ஜனாதிபதி புகையிரத சேவைக்கு நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி வலுச்சக்தி துறையை வினைத்திறனாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் - ஜனாதிபதி வலுச்சக்தி்த் துறையை வினைத்திறனாக்கும் வகையில் "வலுச்சக்தி பரிவர்தனை" சட்டமூலம் அடுத்தாண்டு கொண்டு வரப்படும் - ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி திண்மக் கழிவகற்றலுக்கு 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு -ஜனாதிபதி வீதி நாய்கள் பாதுகாப்பு மற்றும் வீட்டு நாய்கள் இறந்ததன் பின்னர் புதைத்தல், எரித்தலுக்காக பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ பகுதியில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் வழங்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி மலையக மக்களுக்கு இந்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு திட்டத்தைத் நிறைவு செய்ய 4290 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள 20 இலட்சம் ரூபா வழங்கப்படும் - ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் கடன் பெறும் எல்லை 60 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட தரவுகள் முறையாக செயற்படுத்தப்படும் - ஜனாதிபதி அரச நிறுவனங்கள் தைரியமாக செயற்பட வேண்டும். தீர்மானிக்கப்பட்டதை போன்று நிதி ஒதுக்கப்படும் - ஜனாதிபதி சட்டத்துக்கமைய செயற்படுவதை எவ்வாறு சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது -ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் கேள்வி மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோர தீர்மானம் - ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் - ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு - ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - ஜனாதிபதி ஜனநாயகத்துக்கு எதிரான அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போது மனோ கணேசன் அதில் இல்லை என்று மேற்கோள் குறி ஊடாக குறிப்பிடுகிறேன் - ஜனாதிபதி பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி - ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி சுமார் நான்கரை மணித்தியாலங்கள் நிகழ்த்தி நிறைவு செய்தார். https://www.virakesari.lk/article/229734
3 months ago
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்
3 months ago
சுவிஸில் இருந்து வரும் போது, "டியூட்டி ஃபிறீயில்" வாங்கிக் கொண்டு வந்தது... இன்னும் வேலை செய்யுது போலை கிடக்கு. 😂
3 months ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1153298623052130 👈 1750 ரூபா சம்பள உயர்வு அறிவிப்பினை வரவேற்று, பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மலையக மக்கள்!
3 months ago
உயர் நீதிமன்ற நீதியரசர்களக கடந்த வாரம் மூன்று தமிழர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதை விட உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த தமிழர் எஸ் துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியுயர்தப்பட்டார். எனவே இளஞ்செழியனின் குற்றச்சாட்டு தவறானது. அவரது தனிப்பட்ட பிரச்சனையை இனப் பாகுபாட்டின் காரணமாக தனக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று சித்தரிக்க முயன்றுள்ளார். வழமையான தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்யும் வேலையை தானும் முயன்று பார்த்துள்ளார் என்றே எடுக்கவேண்டியுள்ளது.
3 months ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=705486168789596 👈 ஜனாதிபதியின் உரையின் போது, சபையில் உறங்கிக் கொண்டிருக்கும் அர்ச்சுனா இராமநாதன்.
3 months ago
ஆள் வேணுமெண்டும் நித்திரை மாதிரி நடிக்கக்கூடியவர் கண்டியளோ..😂இல்லாட்டி சுவீஸ் நேர நினைப்பிலை நித்திரையோ எண்டும் யோசிக்க வேண்டிக்கிடக்கு 😎
3 months ago
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. 96 நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது. OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும். அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன் இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம். எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை. இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை. ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும். இயக்குநர் பிரேம் குமார் இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி! இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்" - இயக்குநர் பிரேம் குமார் | Gauri Kishan: ``Action determines our worth'' - Director Prem Kumar
3 months ago
🤣..................... எவ்வளவைத் தான் வீடு முழுக்க நிரப்பி வைத்திருக்கின்றோம்............... பல பொருட்களை பத்து வருடங்களுக்கும் மேலாக தொட்டுப் பார்ப்பதும் இல்லை.........
3 months ago
இலங்கையின் மருமகன் சரத்குமார்... 😂 ஸ்ரீலங்காவை பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. 😜 ஈழத்தின் மருமக்கள்... விஜய், சரத்குமார் என்று பட்டியல் நீள்கிறது. 🤣
3 months ago
Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 06:23 - 0 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். Tamilmirror Online || அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
3 months ago
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை ! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது . தெற்கிலிருந்து, சகோதர மொழி பேசும் சுமார் 150 இளைஞர்கள் யுவதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்தனர். யாழ். பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை, கலாசார முறைப்படி விருந்தினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட உதவி மாவட்ட செயலர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் யு.சிவகாமி, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை !
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed