3 months ago
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு! அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது. தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து). இதனிடையே, ஸோரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452021
3 months ago
பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு! பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்துள்ளதுடன் பல வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவைகளும் செயலிழந்துள்ளன. சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வானூர்தியிர் சென்ற ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தில் சிக்கி 13 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி நாளை இரவு(06) வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கல்மேகி சூறாவளி மணிக்கு 120 கிமீற்றர் தொடக்கம் 165 கிமீற்றர் வேகத்திலும் வீசிய வருவதுடன் இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸைத் தாக்கும் 20வது புயலாக கல்மேகி உருவாகியுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமான முன்னெடுத்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காதகா வானம் தெளிவாகும் வரை காத்திருப்பதாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1452026
3 months ago
விடுங்கோ பையா.அவருக்கு அவர் பிரச்னை.😀மற்றும் போட்டியை திறம் பட நடத்திய கந்தப்புவுக்கும் பங்கு பற்றிய மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🙏
3 months ago
போட்டியைத் திறம்பட நடத்திய கந்தப்புவுக்கு நன்றிகள்.போட்டியில் வெற்றிபெற்ற Ahasthiyan , அல்வாயன், செம்பாட்டான் வாழ்த்துகள்
3 months ago
புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல; அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் - பிரதமர் 04 Nov, 2025 | 04:05 PM (இராஜதுரை ஹஷான்) புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். அரசாங்கம் என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். புதிய மாற்றத்தை நோக்கி செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் குளியாப்பிட்டிய கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய தொழிற்றுறையை உருவாக்கும் வகையில் கல்வி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாட்டில் வேலையின்மை பிரச்சினைக்கு கல்வி கொள்கை ஒரு காரணியாக உள்ளது. இதற்கு தீர்வாகவே புதிய கல்வி மறுசீரமைப்பை அறிமுகப்படுத்த தீர்மானித்தோம். புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுடன் இந்த ஆண்டு முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது.தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும். புதிய மாற்றத்துக்கான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்றுக்கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே. பாடசாலை கற்பித்தல் நேரம் அதிகரிப்பு தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கல்வி அமைச்சினால் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பு அடுத்தாண்டு முதல் அமுல்படுத்தப்படும். 1-6 தரங்களுக்குரிய புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் இந்த மாதம் இறுதி பகுதியளவில் நிறைவடையும் என்றார். https://www.virakesari.lk/article/229474
3 months ago
முதல் 3 இடத்தை பிடித்த அகஸ்தியன், அல்வாயான், செம்பாட்டான் , மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை திறம்பட நடத்திய கந்தப்பு அண்ணாவுக்கு நன்றியும் பாராட்டுக்களும்👏
3 months ago
கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி 05 Nov, 2025 | 09:43 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த கல்மேகி சூறாவளி புதன்கிழமை (05) தென் சீனக் கடலை நோக்கிச் நகர்ந்து சென்றது. https://www.virakesari.lk/article/229523
3 months ago
உலக சுனாமி தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் தயார்நிலை ஒத்திகை 04 Nov, 2025 | 05:28 PM (இராஜதுரை ஹஷான்) உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கரையோர மாவட்டங்களில் புதன்கிழமை (05) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை இடம்பெறவுள்ளது. களுத்துறை, காலி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அபாய இழிவளவாக்கல் நடவடிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. இச்சந்தர்ப்பத்தின் போது வீண் அச்சம்கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை) சம்பத் கொடுவேகொட குறிப்பிடுகையில், சுனாமி அனர்த்தத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் தான் இந்த ஒத்திகை இடம்பெறுகிறது. கடந்த காலங்களில் இவ்வாறான ஒத்திகை இடம்பெறும் போது உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று விட்டது என்று பொதுமக்கள் அச்சமடைந்தார்கள். ஆகவே வீண் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சுனாமி அனர்த்த முன்கூட்டிய சமிஞ்சை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 77 கோபுரங்களும் செயலிழந்துள்ளன. இந்த கோபுரங்களுக்கு சமிஞ்சை வழங்கிய செய்மதிகள் செயலிழந்துள்ளதால் இவை முற்றாக செயலிழந்துள்ளன என்றார். https://www.virakesari.lk/article/229497
3 months ago
அரசாங்கத்தின் அனுசரணையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன - நாமல் ராஜபக்ஷ 04 Nov, 2025 | 08:26 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகோகொடயில் நடைபெறவுள்ள பேரணியில் நாங்கள் பங்கேற்போம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த அரசியல் கட்சிகள் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அரசியல் கொள்கை வேறுபாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது முறையற்றது. அரசாங்கத்தின் அனுசரணையுடன் தான் பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுபவர்கள் அனைவரும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு என்று குறிப்பிடுவது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. பாதாளக்குழுக்கள் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைய செயற்படுகின்றன. அரசாங்கம் குறிப்பிடும் போது துப்பாக்கிச்சூடுகள் இடம்பெறுகின்றன. பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் காரணமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுவது தேசிய பாதுகாப்பின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது என்றார். https://www.virakesari.lk/article/229501
3 months ago
பெரதெனியாவில் புதுமுக மாணவர்களிடம் பகிடிவதை மற்றும் தேவை அற்ற விடையங்களில் தலையிடக் கூடாது என்று ஆரம்ப்பதிலயே கையப்பம் வாங்கியுள்ளார்களாம்.நான் அடிக்கடி கதைத்துக் கொள்ளும் மாணவர் சொன்னார்.செப்ரம்பரில் விரிவுரைகளுக்கு உரிய ஆயத்தங்கள் தொடங்கி இப்போ தொடர்ந்து நடக்கிறது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திறமை சித்தி பெற்று பெரதெனியா சென்ற ஒரு மாணவன் எனது பராமரில் இருக்கிறார்.
3 months ago
இதே போல செங்கை ஆழியானின் இன்னொரு கதை "யானை". வன்னிக்கும் கிழக்கிற்குமிடையேயான அடர் காடுகளின் புவியியலை விபரிக்கும் கதை. ஊரில் செங்கை ஆழியானின் புத்தகத்தை நூலகத்திலிருந்து கொண்டு வந்தால் ஒரு நாளில் வாசித்து முடிந்து விடும்😂! சிறியவை ஆனால், சுவாரசியமானவை!
3 months ago
சிறுவர்களை புலிகள் மண்ணில் புதைத்திருக்க மாட்டார்கள் -சன்னி ஞானந்த தேரர் யாழில் தெரிவிப்பு! November 4, 2025 0 செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்கள், குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் வெளிவந்துள்ள நிலையில், புலிகள் அவற்றை புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை பின்னடிக்க பார்ப்பதாக சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சன்னி ஞாஞானந்த தேரர் தெரிவித்தார். யாழ். நகர பகுதியில் சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து செயல்படுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிய இந்த ஜேவிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவில்லை. தற்போது புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதனை மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் அந்த குழியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் எலும்பு கூடுகள் வெளிவந்த படங்களை பார்த்தேன். செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களை புலிகள் புதைத்ததாக கூறி இந்த அரசாங்கம் விசாரணைகளை மூடி மறைக்க திட்டம் தீட்டுகிறது. அதேபோல் தெற்கில் பட்டலந்த விவகாரத்தை அரசியல் நோக்கத்துக்காக ஆரம்பித்தவர்கள் அதை கிடப்பில் போட்டு விட்டார்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்கு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எதனையும் செய்யாது ஒரு வருடம் தான் முடிந்திருக்கிறது எனக்கூறி ஐந்து வருடங்களையும் கடத்த போகிறார்கள். ஆகவே செம்மணி விவகாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் நீதியானதும் உண்மையான விசாரணைகளை மேற்கொள்ளாது என அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=347309
3 months ago
பதிலுக்கு நன்றி. நான் கேட்டதற்கு காரணம் வைத்திய கலாநிதி வல்லிபுரநாதனில் கட்டுரையில் குடிநன மதிப்பில் இலங்கைத்தமிழராக மலையக தமிழரை பதிவு நல்லது என்று கூறியிருந்தார். வெறும் பதிவில் எமது எண்ணிக்கையை கூட்டிகாட்ட மட்டும் அவர்களைச் சேர்க்காமல் அவர்களை நம்மை போல் நடத்துவதே சிறந்தது. ஆனால் அப்படி நடக்க இலங்கை தமிழர் மனநிலை ஒரு போதும் சம்மதியாது என்பதால் அவர்களுக்கு இழப்பு மட்டுமே தான் வரும் என்பது எனது அபிப்பிராயம்.
3 months ago
விக்ரமாதித்தனும் வேதாளமும்😂
3 months ago
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – வட்டுக்கோட்டை February 3, 2025 | Ezhuna இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது. சென்ற கட்டுரையில் மானிப்பாய்க் கோவிற்பற்றைப் பற்றி லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவைக் காட்டும் நிலப்படம் தரும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுத் தொடர்பாக அந்நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பற்றி ஆராயலாம். நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பு வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, அராலி ஆகிய மூன்று துணைப்பிரிவுகள் இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், நிலப்படத்தில் இரண்டு துணைப்பிரிவுகளை மட்டுமே குறித்துள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவை நிலப்படத்தில் எல்லை குறித்துக் காட்டவில்லை (படம்-1). நிலப்படம் காட்டும் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்று இன்றைய வலிகாமம் மேற்கு – சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகிறது. நிலப்படத்தில் கட்டியுள்ள வடக்கு எல்லையும் அமைவிடத்தைத் துல்லியமாக அறிவது கடினம் என்றாலும், இன்றைய கிராம சேவையாளர் பிரிவுகளான வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, சங்கரத்தை, அராலி மேற்கு, அராலி மத்தி, அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி கிழக்கு ஆகியவை இந்தக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனலாம். பிற்காலத்தில் வடக்கு எல்லையை அண்டிச் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இது, வலிகாமம் மேற்குப் பிரதேசசபையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. எல்லைகள் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் வடக்குப் பகுதியின் மூன்று பக்கங்களிலும் சங்கானைக் கோவிற்பற்றும், தெற்குப் பகுதியின் மேற்கு, தெற்கு எல்லைகளில் கடலேரியும் கிழக்கு எல்லையில் வழுக்கியாறும் உள்ளன. இக்கோவிற்பற்றின் கிழக்கு எல்லையை அண்டியே வழுக்கியாறு கடலேரியுட் கலக்கிறது. மேற்குப் பக்கம் உள்ள கடலேரிக் கரை எதிர்ப் பக்கத்திலுள்ள காரைநகர், வேலணை ஆகிய தீவுகளை நோக்கியபடி அமைந்துள்ளது. கிழக்கு எல்லையிலுள்ள வழுக்கியாற்றுக்கு அடுத்த பக்கத்தில் மானிப்பாய்க் கோவிற்பற்று உள்ளது. வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றின் தென் அரைப் பகுதியை அராலி துணைப்பிரிவு உள்ளடக்குகிறது. வடக்கு அரைப்பகுதியை வட்டுக்கோட்டை மேற்கு என நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. படத்தில் எல்லை குறித்துக் காட்டாவிட்டாலும், வட்டுக்கோட்டை கிழக்குப் பிரிவும் மேற்படி வடக்கு அரைப் பகுதிக்குள் அடங்குவதாகக் கொள்ளமுடியும் (படம்-2). குறிப்பாக, சங்கரத்தையும் அதை அண்டிய சில பகுதிகளும் வட்டுக்கோட்டை கிழக்குத் துணைப்பிரிவுக்குள் அடங்கியிருந்திருக்கக்கூடும். வீதிகள் இக்கோவிற்பற்றுக்குள் அடங்கிய பல வீதிகளை நிலப்படத்தில் காணமுடிகிறது. வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்கு அருகில் காணப்படும் சந்திப்பில் மூன்று வீதிகள் இணைகின்றன. இச்சந்திப்பிலிருந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் செல்லும் வீதி, தெற்கெல்லையை அண்டி அமைந்த வழுக்கியாற்றைக் கடந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் செல்கிறது. நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இவ்வீதி வழுக்கியாற்றைக் கடக்கும் இடத்தில் பாலம் எதுவும் இருக்கவில்லை. அதனால், மழைக்காலத்தில் போக்குவரத்துக் கடினமாக இருந்திருக்கும். வழுக்கியாற்றுப் பாலம் பிரித்தானியர் காலத்தில் அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த பேர்சிவல் அக்லன்ட் டைக் அவர்களின் முயற்சியால் 1843 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.1 இன்னொரு வீதி மேற்கு நோக்கிச் சென்று மூளாய் – தொல்புரம் எல்லையை அண்டிக் கடற்கரையை அடைகிறது. வட்டுக்கோட்டையில் இது தொடங்குமிடத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ள தேவாலய இல்லத்துக்கு இடம் தருவதற்காகப் போலும், வீதியைப் பெரிதாக வளைத்து வரைந்துள்ளனர். உண்மையில் இது இவ்வாறு இருந்திருக்க வாய்ப்பில்லை. லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் காட்டும் நிலப்படத்தில் இவ்வீதி நேராகவே உள்ளது. இவ்வீதியின் முடிவிடமே தற்காலத்தில் புன்னாலைப்பாலம் தொடங்குமிடம் ஆகும். மேற்படி வீதி புன்னாலைப் பாலத்தினூடாகக் காரைநகருக்குச் செல்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவுப்பகுதிகளையும் முழுமையாகக் காட்டும் மேலே குறிப்பிட்ட லெயுசிக்காமின் நிலப்படம் இவ்வீதி முடிவுறும் மூளாய்க் கரையிலிருந்தே காரைநகருக்கான கடல்வழிப்பாதை தொடங்குவதாகக் காட்டுகிறது. 1560 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்தபோது இடம்பெற்ற நிகழ்வுகளை விவரித்த கோட்டூ என்பவர், யானைத்துறைக்குச் செல்லும் வீதி பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும்2 அந்த யானைத்துறை காரை நகரில் இருந்ததுபற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். வழுக்கியாற்றிலிருந்து வட்டுக்கோட்டைக்கும், அங்கிருந்து புன்னாலைக்கும் செல்லும் வீதிகள் மேலே குறிப்பிட்ட யானைத்துறைக்குச் செல்லும் வீதியின் பகுதிகள் என்பதில் ஐயமில்லை. எனவே, இவ்வீதி போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு. முற்காலத்தில் யானை ஏற்றுமதி அரசாங்கத்துக்கு நல்ல வருமானத்தைத் தரும் செயற்பாடாக இருந்தது. இதனால், காரைநகரில் யானைத்துறை இயங்கிய காலத்தில் இந்த வீதி பொருளாதார முக்கியத்துவம் கொண்ட ஒரு வீதியாக இருந்திருக்கும். அடுத்த வீதி, வட்டுக்கோட்டையிலிருந்து வடகிழக்குத் திசையிற் சென்று சங்கானையுடனான எல்லைக்கு அருகே கிழக்கு நோக்கித் திரும்பிச் சங்கானையூடாக மானிப்பாய்க்குச் செல்வதாக நிலப்படம் காட்டுகிறது. வட்டுக்கோட்டையிலிருந்து வரும் வீதி கிழக்கு நோக்கித் திரும்பும் இடம் சித்தன்கேணிச் சந்தியாக இருக்கவேண்டும். தற்கால நிலப்படங்களோடு ஒப்பிடும்போது லெயுசிக்காமின் நிலப்படத்தில் சித்தங்கேணிச் சந்தியின் அமைவிடம் கூடுதலாகக் கிழக்கு நோக்கி நகர்ந்திருப்பதால் வீதி வடகிழக்குத் திசையில் செல்வதுபோல் வரையப்பட்டுள்ளது. தற்காலத்தில் சித்தன்கேணிச் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிப் புன்னாலை வரை செல்லும் வீதியையும் நேரே பண்டத்தரிப்புவரை செல்லும் வீதியையும் நிலப்படம் காட்டவில்லை. இதனால் இன்று நாற்சந்தியாக இருக்கும் சித்தன்கேணிச் சந்தியை நிலப்படம் ஒரு சந்தியாகக் காட்டவில்லை. மடம் ஒன்றைக் குறிப்பதன் மூலம் அராலித்துறையை நிலப்படம் காட்டுகிறது. இத்துறையை அண்மையிலுள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கு அக்காலத்தில் வீதித் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய வீதித் தொடர்பு இருப்பதை நிலப்படம் காட்டவில்லை. தற்காலத்தில், வட்டுக்கோட்டைச் சந்தியிலிருந்தும் வழுக்கியாற்றுப் பாலத்துக்கு அருகிலிருந்தும் வீதிகள் அராலித்துறைக்குச் செல்கின்றன. இவை நிலப்படத்தில் இல்லை. இவை அக்காலத்தில் முக்கியத்துவம் அற்றவையாக இருந்திருக்கலாம் அல்லது, நிலப்படத்தின் நோக்கத்துக்கு அவை தேவையற்றவையாகக் கருதப்பட்டிருக்கலாம். கட்டடங்கள் மானிப்பாய்க் கோவிற்பற்றுக்குள் இருப்பதாக லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் கட்டடங்களுள் வட்டுக்கோட்டை கிறித்தவத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் முக்கியமானவை. இவற்றைத் தவிர அராலித் துணைப் பிரிவுக்குள் கடற்கரை ஓரமாக ஒரு மடமும் உள்ளது. தேவாலயமும் குருமனையும் நல்லூர்க் கோவிற்பற்றைத் தவிர, இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை எடுத்தாளப்பட்ட எல்லாக் கோவிற்பற்றுகளிலும் தேவாலயமும் குருமனையுமே முக்கியமான கட்டடங்களாக நிலப்படத்திற் குறித்துக் காட்டப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மேற்குறித்த எல்லாத் தேவாலயங்களிலும் குருமனைகள் ஏறத்தாழ ஒரே மாதிரியான குறியீடுகளாகவே காணப்பட்டன. ஆனால், வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றில் குறித்துள்ள குருமனை சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. இது, இதுவரை பார்த்த குருமனைகளைவிடப் பெரிதாகவும் விரிவானதாகவும் காணப்படுகிறது. வழமையான குருமனையுடன் இணைந்ததாக நீளமான கட்டட அமைப்பொன்றை நிலப்படம் காட்டுகிறது. வேறு கோவிற்பற்றுகளில் இல்லாதவாறு இவ்விடத்தில் இவ்வாறான கட்டடம் காட்டப்பட்டிருப்பதாலும், அதைக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீதியைக்கூட வளைத்துக் காட்டியிருப்பதாலும், உண்மையிலேயே அவ்வாறான பெரிய கட்டடம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இது, வட்டுக்கோட்டைத் தேவாலயத் தொகுதி ஏதோவொரு வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த ஏனைய தேவாலயத் தொகுதிகளைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளக்கூடும். ஆனாலும், போல்தேயஸ் பாதிரியாரின் நூலிலுள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது, ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்கப் பகுதியில் வட்டுக்கோட்டைத் தேவாலயத்துக்குச் சிறப்பு முக்கியத்துவம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்நூலிலுள்ள வட்டுக்கோட்டைத் தேவாலயத்தின் படத்தில் தேவாலய இல்லம் ஓரளவு பெரிய கட்டடமாகவே காட்டப்பட்டுள்ளது (படம்-3). இப்படத்தை வரைந்தவர் கட்டடத்தைப் பார்க்கவில்லை என்பதால் இப்படத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. அக்காலத்தில் தெல்லிப்பழைத் தேவாலயமே தலைமைத் தேவாலயமாக இருந்துள்ளது.3 நிலப்படம் வரையப்பட்ட 1719 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட்டுக்கோட்டைத் தேவாலயம் புதிய வகிபாகத்தைப் பெற்று வளர்ச்சி பெற்றிருக்கக்கூடும். 1820 களில், பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் வட்டுக்கோட்டைத் தேவாலயம் அமெரிக்க மிசனின் முக்கியமான நிலையங்களில் ஒன்றாக விளங்கியது. 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசன் பணிக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பின்னர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஐந்து ஒல்லாந்தர் காலத் தேவாலயங்களில் முதலில் இயங்கவைக்கப்பட்ட இரண்டு நிலையங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. மற்றது தெல்லிப்பழை. அமெரிக்க மிசனின் புகழ்பெற்ற செமினரியும் பிற்காலத்தில் வட்டுக்கோட்டையிலேயே நிறுவப்பட்டது. ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் வட்டுக்கோட்டை பெற்றிருந்த முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாகவே அமெரிக்க மிசன் காலத்திலும் அது முக்கியத்துவம் பெற்றதா என்பது ஆய்வுக்குரியது. எவ்வாறெனினும், அமெரிக்க மிசன் கையேற்றபோது வட்டுக்கோட்டைத் தேவாலயமும் அதனோடிணைந்த குருமனையும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சிதிலமடைந்து இருந்தன என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். அக்காலத்தில் ஒல்லாந்தர் தேவாலயம் 170 அடி நீளமும் 56 அடி அகலமும் கொண்டதாகவும், நான்கு அடி தடிப்புக் கொண்ட கற்சுவர்களுடன் கூடியதாகவும் இருந்துள்ளது.4 மடம் நிலப்படம், அராலி துணைப்பிரிவின் தென்கிழக்குக் கரையோரத்தில் ஒரு மடம் இருப்பதைக் குறித்துக் காட்டுகிறது. ‘ராலி மடம்’ (Ralie maddam) என இதற்குப் பெயர் குறித்துள்ளனர். நிலப்படத்தில் பல இடங்களில் இவ்வாறான மடங்களுக்கு ஊர்ப்பெயரைத் தழுவியே பெயர் வழங்கப்பட்டிருப்பதால், இப்பெயரும் ‘அராலி மடம்’ என்பதன் திரிபாக இருக்கக்கூடும். இது இருக்குமிடம் இன்றைய அராலித்துறை என்பதில் ஐயமில்லை. நீண்ட காலமாகவே இவ்விடத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் வேலணைத் தீவிலுள்ள வடக்குத்துறைக்கு, இடையிலுள்ள ஆழம் குறைந்த கடலேரியூடாகச் சிறு வள்ளங்கள் மூலமும் சிலவேளைகளில் கால்நடையாகவும் போக்குவரத்து இடம்பெற்றுள்ளது.5 எனவே, இங்கே குறிக்கப்பட்டுள்ள மடம், துறைகளை அண்டிப் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட மடம் என்பதில் ஐயமில்லை. இதற்கு எதிர்க் கரையில் வேலணை வடக்குத் துறையிலும் ஒரு மடம் இருந்ததை லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள வேறு நிலப்படங்கள் காட்டுகின்றன. குளங்கள் வட்டுக்கோட்டைக் கோவிற்பற்றுக்குள் பதினாறு குளங்களை நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் ஏழு குளங்களுக்கு மட்டுமே சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. ஏனையவை குளம் (Tanck), கேணி (keúni) ஆகிய பொதுப் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. பதினாறு குளங்களில் வட்டுக்கோட்டை மேற்குப் பிரிவையும் கிழக்குப் பிரிவையும் உள்ளடக்கிய பகுதிக்குள் ஒன்பது குளங்கள் உள்ளன. இப்பிரிவில் இரண்டு நீர்நிலைகள் மட்டுமே வெட்டுத்துரவு, திக்கிராய்க் குளம் என்னும் சிறப்புப் பெயர்களுடன் காணப்படுகின்றன. எஞ்சியவற்றுள் மூன்று கேணிகளும் நான்கு குளங்களும் உள்ளன. அராலிப் பிரிவுக்குள் காணப்படும் ஏழு குளங்களுள் கோணாவில் குளம், ஒல்லிக் குளம், பெரிய குளம், திக்கிரிக் குளம், பெந்தாலிக் குளம் ஆகிய சிறப்புப் பெயர்களுடன் கூடிய ஐந்து குளங்களும் குளம் என்ற பொதுப் பெயருடன் இரண்டு குளங்களும் உள்ளன. தற்காலத்தில் அராலிப் பிரிவில் பதினாறு குளங்களும், வட்டுக்கோட்டைப் பிரிவில் அடங்கிய பகுதிகளுக்குள் பத்துக் குளங்களும் உள்ளதைப் பதிவுகள் காட்டுகின்றன.6 லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி அராலியில் ஏழு குளங்களே உள்ளதால், அக்காலத்தில் இருந்த பல குளங்களை நிலப்படம் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. வட்டுக்கோட்டையில் இன்று ஒரு குளமே கூடுதலாகக் காணப்படுகிறது. நிலப்படத்தில் கேணி, துரவு ஆகிய பெயர்களில் குறிக்கப்பட்டிருப்பவற்றைத் தற்காலத்தில் குளங்களாகக் கருதிப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை. நிலப்படத்திலுள்ள குளங்களுள் அராலிப் பிரிவிலுள்ள பெரிய குளம் இன்றுவரை பெயர் மாற்றமின்றி இருப்பதைக் காணமுடிகிறது. தற்காலப் பதிவுகளின்படி இதற்கு அராலிப் பெரிய குளம் என்ற பெயர் வழங்குகிறது. இதைவிட, வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் இருப்பதாக நிலப்படம் காட்டும் திக்கிராய்க் குளம் என்ற பெயருடன் தற்காலப் பதிவில் சங்கரத்தைக் கிராம சேவையாளர் பிரிவுக்குள் ஒரு குளம் உள்ளது. மேற்படி குளங்கள் இரண்டும் ஒன்றாக இருக்கக்கூடும். நிலப்படத்தில் வட்டுக்கோட்டைப் பிரிவுக்குள் குறித்துள்ள வெட்டுத்துரவும், தற்காலப் பதிவிலுள்ள வெட்டுக்குளத்துக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருந்தாலும் அவற்றின் அமைவிடங்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதால் இவை குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது. ஏனைய பல குளங்கள் பெயர் மாற்றம் பெற்றுள்ளன என்பதில் ஐயம் இல்லை. ஆனால், ஒப்பிடும்போது அடையாளம் காணத்தக்க பெயர் ஒற்றுமை இல்லாததாலும் நிலப்படத்தில் அமைவிடங்களைத் துல்லியமாக அறிய முடியாததாலும் பெயர் மாற்றங்களைப் பற்றிய சரியான தகவல்களை அறிவது கடினமாக உள்ளது. குறிப்புகள் செ. இராசநாயகம், யாழ்ப்பாணச் சரித்திரம் – ஆங்கிலேயர் காலம், (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2018), 133. Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 189. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 318, 322. Miron Winslow, Memoirs of Mrs. Harriet L. Winslow (New York: American Tract Society, 1840), 192. கா. குகபாலன், தீவகம்-தொன்மையும் மேன்மையும் (கொக்குவில்: 2017), 221. விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பதிவுகளின்படி. ஒலிவடிவில் கேட்க Your browser does not support the audio element. About the Author இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார். வடக்கன் சிவலையைத் தேடி.... அளவெட்டியிலிருந்து அராலி வரை விபரித்துள்ளார்.... வாசித்தால் ஒரு நாடகமே கண் முன் தோன்றும் 👍
3 months ago
அது படுபாதக கொலைகார இயக்கம் . ஜேவிபி சுத்தம் அது ஒரு நல்லாட்சி தரும் என்று தமிழர்கள் பிரசாரம் செய்வதால் அது உண்மையாகிவிடாது.
3 months ago
நான் நினைக்கிறேன் - இது அவர்கள் சுயமாகவே, கேள்விகள் கேட்கும் போது இப்படி பதிகிறார்கள் என. அரசு அப்படி ஒன்றாக கருதவில்லை. வட, கிழக்கு, மேற்கு மாகாணத்தில்தான் இப்படி நடக்க்க வாய்புண்டு. மலையக மக்கள் என்ற அடையாளத்தால் கிடைக்கும் ஒதுக்கலில் இருந்து வருங்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் இதை செய்ய கூடும். இதற்கு யாழ்பாண சாதி அமைப்பின் வரலாற்றில் ஒரு உதாரணமும் உண்டு. பல்வேறு இடைநிலையில் வைக்கப்பட்ட சாதிகள், தம்மை தாமே அடையாள மாற்றத்துக்குட்படுத்தி, வெள்ளாளர் என்ற குடையின் கீழ் வந்ததாயும், இதனால்தான் வெள்ளாளருக்குள் கூட ஏற்ற தாழ்வு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். மலையகத்தில் இந்த போக்கு இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருக்கும்வரை அவர்களுக்கான உரிமை, சலுகைகளை இது பாதிக்கவும் வாய்ப்பில்லை.
3 months ago
நான் கணக்கில ரொம்பவே வீக்- ஆனாலும். இலங்கை தமிழர் தொகை எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் போக்கை என்னால் கூட காண முடிகிறது. 30 வருட போரில் இளையோரை அதிகம் காவு கொடுத்ததன் பின் விழைவு, இன்னும் சில பத்தாண்டுகளுக்காவது இலங்கை தமிழர் பிறப்பு வீதத்தில் தெரியத்தான் செய்யும். ஆனாலும் ஒட்டு மொத்தமாக இது 15 வருடத்துள் மீள நேர்மறை வளர்சிக்கு வந்துள்ளது நல்ல செய்தியே. ஆனால் இது மட்டுமே நல்ல செய்தியாக எனக்கு படுகிறது. எமது மக்கள் தம் பாரம்பரிய வாழிடங்களில் குறிப்பாக, யாழ், மட்டகளப்புக்கு அப்பால் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் வீழ்சியை அல்லது மந்த நிலையை காட்டுவது கவலையான விடயம். யாரையும் ஒரு மாவட்டத்தில் இரு என கட்டாயம் செய்ய முடியாது. வாய்புக்கள் தேடி கொழும்பு இதர பகுதிகளுக்கு போவது இயல்பே. ஆனால் 1980 ற்கு முந்திய காலம் போல் இப்படி போவபர்கள், ஊருக்கு வருவதையோ, வாக்களிப்பு பதிவை ஊரில் வைத்திருப்பதையோ இப்போ செய்வதில்லை. கொழும்பு போனால் சில வருடங்களில் அங்கே ஐக்கியமாகி விடுகிறார்கள். யாழ் மாவட்டத்தில் கூட நகருக்கு 10 கிமிக்குள் இருக்கவே பலர் விரும்புகிறனர். மட்டகளப்பிலும் எழுவான்கரையில்தான் அநேகர். தரவுகளை பார்த்தால் - சனத்தொகை அடர்த்தி குறைந்த முதல் எட்டு மாவட்டமும் எமதுதான். ஒரு ஒற்றையாட்ட்சி நாட்டில் - குறைந்தளவு மக்கள், இப்படி அதிகளவு மண்ணை ஒரு அளவுக்கு மேல் பிடித்து வைக்க முடியாது. ஏனைய மாவட்டங்களில் வளப்பற்றாக்குறை ஏற்படும் போது, கவனம் எமது மாவட்டங்கள் மீதே திரும்பும். இது மேலும் எமது மாவட்டங்களில் எமது எம் வீதத்தை குறைக்கும். எமது தனித்துவத்தின் அடிப்படையே எமது மண்ணில் நாம் அறுதி பெரும்பான்யாக இருப்பதுதான். ஆகவே ஒட்டு மொத்தமாக சதவீதம் கூடி விட்டது என்ற நற்செய்தியை விட எமது பாரம்பரிய வாழிடத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாரதூரமான விடயம். இதை சரிக்கட்டும் அளவுக்கு வாய்புகளை ஏற்படுத்த முடியாவிடினும், மூன்று பிள்ளைகள் பெற்று, 8 மாவட்டங்களில் ஒன்றில் வாழ்வோருக்கு மாதாந்த தொகை போல ஏதும் கொடுத்தால் ஒரு சிறிய மாற்றம் வரலாம். ஆனால் நான் உட்பட சிறிய குடும்பமே நன்று என்ற மனநிலை தமிழ் சிங்கள மக்கள் இடையே ஊறிவிட்டது. இதை உதவி தொகைகள் பெரிதாக மாற்ற சாத்தியமில்லை. முஸ்லிம்களை பிழை சொல்ல முடியாது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு இதை செய்வதில்லை. எண்ணிக்கையே பலம், இறைவன் கொடுக்கும் அருள் பிள்ளைகள் என அவர்கள் இயல்பாக நம்புவதால், எண்ணிக்கை இயல்பாகவே அதிகரிக்கிறது. அப்போ சிங்களவர், தமிழர் எண்ணிக்கையை கூட்ட என்ன செய்ய வேண்டும்? முதலில் தத்தம் மாவட்டங்களுக்கு பதிவு அளவிலாவது மீள வேண்டும். இன்றைய வேகமான உலகில் இது சாத்தியமே. அடுத்து, தனித்துவத்தை பேண நாம் எம் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற கூட்டு மனோநிலை உருவாக வேண்டும். அப்படி உருவாகி பிறக்கும் பிள்ளைகளை தெருவில் விடாமல், பராமரிக்க சமூக அமைப்புகள் இருக்க வேண்டும். குடும்பகட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்புகள் போல, பிறப்புவீதத்தை ஊக்குவிக்கும் பிரச்சார அமைபுகளும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் முயன்றுமே - ஸ்கெண்டிநேவிய நாடுகளின் இது போன்ற திட்டங்கள் தோல்விதான். ஆகவே இதற்கு silver bullet முடிவு ஏதும் இல்லை.
3 months ago
அந்தப் பக்கம், இந்தப் பக்கம், எந்தப் பக்கம் இந்த ஊர்மனைகள் இருந்தாலும் எனக்கு இவை அந்தமான் பக்கம் மாதிரித்தான்! கண்னால் கண்ட இடங்களில் இவை இன்னமும் வரவில்லை!
3 months ago
என்டாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி வாத்தி அண்ணா...............................
Checked
Sun, 02/08/2026 - 17:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed