3 months ago
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு! கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய யோகராஜா மயூரதி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்ட தாய், தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 months ago
யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை! யாழ். பருத்தித்துறை பகுதியில் மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்துள்ளது. இதையடுத்து கழிவகற்றல் வாகனத்தின் மூலம் நகரசபை தரப்பில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட்டார். இதன்போது வியாபாரிகள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தவிசாளர் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை!
3 months ago
சோகமான செய்தி. 😥 பிள்ளைகள் அருகில் இல்லாமல்... தனிமையில் வாழ்ந்த முதியவர்கள் போலுள்ளது. தனிமையம், முதுமையும் அந்தப் பெரியவரை மன நோயாளி ஆக்கி விட்டது. யாரை நோவது என்று தெரியவில்லை.
3 months ago
07 Nov, 2025 | 10:45 AM செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் தங்கு தடை இன்றி நீநி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த புதைகுழி அகழ்வ பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். பாராளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்கு பற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தி அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் கடமையாற்றினார். குறித்த வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாக அறியக் கிடைக்கும் நிலையில் குறித்த சட்ட வைத்திய அதிகாரி நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் இணைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதை குழி அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் ஆராயப்படும் - ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி! | Virakesari.lk
3 months ago
07 Nov, 2025 | 10:37 AM நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார் அந்நாட்டின் சுற்றுலா அபிவிருத்தியைப் பாராட்டியுள்ளார். இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் புதன்கிழமை (05) இலங்கையை வந்தடைந்தார். கண்டிக்கு நேற்று வியாழக்கிழமை (06) விஜயம் செய்தபோது, அந்தப் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய 07 நட்சத்திர ஹோட்டலைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்த ஹோட்டல் குறித்து நடிகர் தெரிவிக்கையில், இது உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களைப் போன்ற 7 நட்சத்திர ஹோட்டல். “இது மே அல்லது ஜூன் மாதங்களில் திறக்கப்படும். நான் அதைப் பார்க்க வந்தேன். சுகாதாரம் தொடர்பான எல்லா வசதிகளும் இங்கே உள்ளது. கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் சேவைகள் கிடைக்கின்றன,” என அவர் தெரிவித்தார். இலங்கையைப் பாராட்டிய நடிகர் சரத்குமார், இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு என கூறினார். “இங்கே எல்லாம் கிடைக்கிறது. பனிப் பொழிவைத் தவிர்ந்து இலங்கையில் ஏனைய எல்லா காலநிலையும் கிடைக்கிறது,” என அவர் தெரிவித்தார். இலங்கையில் எல்லாமே இருக்கு - நடிகர் சரத்குமார் பாராட்டு | Virakesari.lk
3 months ago
07 Nov, 2025 | 11:33 AM 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதேநேரம், நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 32,815 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,923,502 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில், அதிகபட்ச தினசரி வருகை 7,412 சுற்றுலாப் பயணிகளாக நவம்பர் முதலாம் திகதி பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதன்படி இந்தியாவிலிருந்து 431,235 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திலும் (177,167), ரஷ்யா (138,061), ஜேர்மனி (119,415) மற்றும் சீனா (113,619) ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ் ஆண்டின் இதுவரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.9 மில்லியனைக் கடந்தது | Virakesari.lk
3 months ago
07 Nov, 2025 | 01:25 PM உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர் ஒருவர் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். ஜனாதிபதி சட்டத்தரணி நீதியரசர் எஸ்.துரைராஜா, 1988 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தில் பதிவுபெற்று, 1989 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். இவர் நீதித்துறைக்கு தரமுயர்த்தப்படுவதற்கு முன்னதாக மேலதிக மன்றாடியார் தலைமையதிபதி நிலைவரையில் பல பதவிப்படிகளை கடந்து வந்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவரது பதவிக்காலத்தில், அதிகாரமிக்கவர்கள் புரிந்த குற்றங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு உயர்மட்ட குற்ற வழக்குகளில் வாதாடியுள்ளதுடன் பல விசேட வழக்காடல் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார். இவர் தனது சட்டமாணி பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் சட்ட முதுமாணி பட்டத்தினை ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். பாரிஸ்டராகவும் சொலிசிட்டராகவும் உள்ளீர்க்கப்பட்ட இவர் பிஜி குடியரசில் நீதியரசாகவும் பணியாற்ற நியமிக்கப்பட்டார். இலங்கை நீதித்துறையின் பெருமைமிகு வரலாற்றிலேயே, அப்போதைய இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியினால், இந்திய வம்சாவழியினரில் நியமிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணி இவராவார் என்பதுடன் அவ்வருடமே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இவர் தற்போது அதி சிரேஷ்ட நீதியரசராக பணியாற்றுகின்ற உச்ச நீதிமன்றத்திற்கு பதவியுயர்த்தப்பட்டதுடன் அவருடைய நீதித்தொழிலில் வழங்கியுள்ள பல அதிமுக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கலாக, 300 இற்கும் மேற்பட்ட தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். நீதிமன்றங்களுக்கும் அப்பால், நீதியரசர் துரைராஜா அவர்கள் சட்டக் கல்வி மற்றும் புலமைப்பரிசில்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இலங்கை கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவையின் உறுப்பினராக விளங்கும் இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கை மற்றும் கலாநிதி கற்கை நிகழ்ச்சித்திட்டங்களின் விரிவுரையாளராகவும் மதிப்பாய்வாளராகவும் காணப்படுகின்றார். சட்டம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் குறித்து பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சஞ்சிகைகளில் எண்ணிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டமா அதிபர்கள் மற்றும் மன்றாடியார் தலைமையதிபதிகளின் மாநாட்டிற்கு, இந்தியாவின் சட்டமா அதிபரின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் விசேட அதிதியாக அழைக்கப்பட்ட மிகஉன்னத கௌரவத்தினையும் நீதியரசர் அவர்கள் பெற்றிருந்தார். இந்நிகழ்வில், இந்தியாவின் சனாதிபதியும் பிரதமரும் முறையே பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டிருந்தனர். பொதுநலவாய நாடுகளிடையே சட்டக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தி வளப்படுத்தும் பொதுநலவாய நாடுகளின் சட்டக் கல்வி சங்கத்தின் போசகராகவும் காணப்படுகின்றார். அண்மையில், இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 1802 ஆம் ஆண்டில் இலங்கையின் மீயுயர் நீதிமன்றங்கள் தோற்றம்பெற்றதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என இரண்டிற்கும் நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவழித் தமிழர் இவரேயாவார். உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசாராக நியமனம் | Virakesari.lk
3 months ago
07 Nov, 2025 | 04:10 PM முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், வெள்ளிக்கிழமை (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். அதன் பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றுவருகிறது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த கணவன் உயிரிழப்பு | Virakesari.lk
3 months ago
07 Nov, 2025 | 05:13 PM தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி | Virakesari.lk
3 months ago
07 Nov, 2025 | 06:55 PM பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் சுதேச வைத்தியத்துறையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 6 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் கீழும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன நிலையங்களை வழங்கும் நிகழ்வு பண்ணையிலுள்ள சுகாதாரக் கிராமத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (07.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், வேலை இல்லை என்று சொல்லி தங்களுக்கு அரசாங்க வேலை கோருவார்கள். வேலை கிடைத்த பின்னர் வீட்டுக்குப் பக்கத்தில் திணைக்களத்தைக் கேட்பார்கள். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது. இதுவரை காலமும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் இல்லாமையால் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மிகப் பெரும் சவால்களை நாம் சந்தித்திருந்தோம். இந்த நியமனங்கள் ஊடாக அது சரிசெய்யப்பட்டுள்ளது. சுதேச மருத்துவம் என்பது ஒரு சாதாரண சிகிச்சை முறை மட்டும் அல்ல. அது நமது தொன்மையான பண்பாட்டு மரபின் உயிரோட்டம். நமது மண்ணின் செடிகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் தலைமுறைகளின் அனுபவ ஞானத்தின் அழகிய சங்கமமே இந்த சிகிச்சை முறை. இந்த மரபு தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படவேண்டும்; புதிய தலைமுறைக்கு உரிய முறையில் பரிமாறப்படவேண்டும்; அதில் நீங்கள் வகிக்க உள்ள பங்கு மிகப் பொறுப்பானதும் பெருமைமிக்கதுமானதாகும். எமது நோக்கம் தெளிவானது — மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சுகாதார சேவை சென்றடைய வேண்டும். நகர மையங்களில் மட்டுமல்ல தொலைதூர கிராமங்களின் கடைசிக் குடியிருப்புகளுக்கும் அது கிடைக்க வேண்டும். இந்தப் பயணத்தில், ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மக்களுக்குச் செல்லக்கூடிய மிக அருகாமையான நம்பிக்கையான மருத்துவ சேவை ஆளுமைகளாக இருப்பீர்கள். உங்கள் சேவை ஒரு மருந்தளிப்பு அல்ல — அது ஒரு ஆறுதல், ஒரு நம்பிக்கை, ஒரு மனிதநேயம். இன்று நீங்கள் பெறும் நியமனம் ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இது ஒரு மக்கள் சேவைக்கான உறுதி. மக்கள் உங்களை நம்பி வரும்போது, அந்த நம்பிக்கையை நீங்கள் காக்க வேண்டும். இதுவரை பல துறைகளில் மக்கள் சேவை பெரும்பாலும் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் நன்கு அறிவோம். நீங்கள் அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இல்லாமல், அத்தருணத்தை மாற்றும் தலைமுறையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளியையும் சந்திக்கும் போது, 'இந்த நிலை நான், அல்லது எனது குடும்பம் என்றால் நான் எப்படி அணுகுவேன்?' என்று நீங்கள் உங்களிடம் கேளுங்கள். அந்த ஒரு கேள்வியே உங்களை சிறந்த சேவை வழங்கும் வழியில் நடத்தி செல்லும். வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தை, மக்கள் சேவைக்கு மிக நெருக்கமான, அணுகத்தக்க மற்றும் செயல்திறனான இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாகாண நிர்வாக அலுவலகங்களை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மட்டுமே வைத்திருக்காமல், மாகாணம் முழுவதுக்கும் அணுகுமுறையை சமமாக்கும் வகையில் பல திணைக்களங்கள் நிலப்பரப்பாகப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. கிளிநொச்சியில் காணித் திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதும், மாங்குளத்தில் நீர்பாசனத் திணைக்களம் செயல்பட்டு வருகின்றதும் அதன் எடுத்துக்காட்டுகளாகும். இதேபோன்று, சுதேச வைத்தியத்துறையையும் மக்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் மையத்திலேயே நாம் அமைப்போம். நீங்கள் சேவையாற்றத் தயாராகுங்கள் — உங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமும் மாகாண நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களின் சேவையின் தொடக்கம் இன்று. அந்த சேவையின் அர்த்தத்தை மக்கள் தீர்மானிப்பார்கள். நீங்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையின் விளக்காக விளங்கிட வாழ்த்துகிறேன், என்றார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் - ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு ஆளுநர் நன்றி | Virakesari.lk
3 months ago
கள்ளத் தொடர்பு என ஏன் கொச்சைப் படுத்துகின்றீர்கள் ஐயா.. காலம் தாழ்த்தி வந்த காதல் என்று சொல்லலாமே,...😆
3 months ago
@Justin பாம்பு கடித்தால் இரத்தம் ஓடாமல் கட்டுப் போடுவார்கள். சிறிய வயதில் எனக்கும் ஏதோவொரு பாம்பு கடித்து காலில் கட்டுப் போட்டு கொட்டடியில் இருந்த விசகடி டாக்ரரிடம் கொண்டு போனார்கள். சிலர் அந்த இடத்தில் இருந்து இரத்தத்தை வெளியே எடுக்க வேண்டும் என்கிறார்கள். இப்போது இந்த முறையெல்லாம் செய்யவே கூடாது என்கிறார்கள். ஆனால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இதுவரை தெளிவாக எழுதுகிறார்கள் இல்லை. உங்களுக்கு தெரிந்ததை கொஞ்சம் எழுதலாமே.
3 months ago
3 months ago
இலங்கையில் கட்டு வரியனை கண்டங் கருவளை என்பார்கள். முத்திரைப் புடையன் , கண்ணாடி விரியன் இரண்டும் Russel's viper எனப்படும் மூர்க்கமான புடையன் பாம்பின் தமிழ் பெயர்கள். கட்டுரையில் இருக்கும் கட்டு வரியன் இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கின்ற வகை (common krait - Bungarus caeruleus). இதை விட இலங்கைக்கே உரித்தான கட்டு வரியன் பாம்பினம் Ceylon krait (Bungarus ceylonicus) இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. பெரிதாக வித்தியாசம் சாதாரண மக்களால் இந்திய இலங்கை கட்டு விரியன்களிடையே காண முடியாது. தமிழில் இரண்டும் கண்டங் கருவளை என அழைக்கப் படும். ஆனால், சிங்களத்தில் இந்தியக் கட்டு விரியனை "தெல் கரவலா" என்றும், இலங்கையின் கட்டு விரியனை "முது கரவலா" என்றும் அழைப்பார்கள். இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் இந்தியக் கட்டு வரியனுக்கெதிரான விஷ முறிப்பு மருந்து, இந்திய, இலங்கை கட்டு வரியன் பாம்புகள் இரண்டிற்கெதிராகவும் வேலை செய்யும் என்பது ஆறுதலான செய்தி!
3 months ago
என்பிபிக்கு விருப்பம் இருக்கலாம். தோட்ட உரிமையாளர்களும் எப்படி கொடுப்பது? தேயிலை விலை உயர்த்தவா? இது கொஞ்சம் சிக்கலே. ஏறத்தாள இலங்கை விமானசேவை போலவே.
3 months ago
தோட்டத் தொழிலாளர்கள் பல ஆண்டு காலமாக தமது சம்பள உயர்வை போராடி கேட்டும்... எத்தனையோ அரசுகளும், ஜனாதிபதிகளும் மாறி மாறி வந்த போதும் கொடுக்கப் படாமல் ஏமாற்றப் பட்டே வந்துள்ளார்கள். இம்முறை...அடுத்த தை மாதம் முதல் வழங்கப்படும் என்று அறுதியிட்டு கூறியுள்ள படியால், ஏமாற்ற மாட்டார்கள் என நினைக்கின்றேன்.
3 months ago
கங்காணியே மேலே ஏற்றியபடியால் அவலத்தில் நேய் நேய் என்றும் கத்த முடியாது. வீடுகள் மாறும் போதும் இதைவிட கூடுதலான புதிய புதிய பிரச்சனைகள் வரும்.
3 months ago
இது நீண்ட காலமாக ஒவ்வொரு அரசாலும் அப்பப்ப சொல்கிறார்கள். சகல தோட்டங்களும் தனியார் வசம் இருப்பதால் இது சாத்தியப்படுமா தெரியவில்லை?
3 months ago
யாழ்ப்பாணத்திற்கு எப்பதான் நெடுஞ்சாலை அமைக்கப் போகிறார்கள்?
3 months ago
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். ! தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் அரசாங்கத்தால் 2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1452236
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed