3 months ago
இருவருக்கும் மிக்க நன்றிகள்.நான் தேடத் தேடத்ட தென்ஆபிரிக்க தலைவி அவுட்டான பிடி தான் வருகுது.இப்ப கண் குளிர பாத்தாச்சசு.
3 months ago
"பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு 04 Nov, 2025 | 10:43 AM ரஷ்யா மற்றும் சீனா மட்டுமின்றி, வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் ஆசியப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அங்கு அணு ஆயுதச் சோதனை நடத்தப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், "ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள்." "ஆனால் நாம் அப்படி இல்லை. நாம் வேறுபட்டவர்கள், வெளிப்படையான சமூகம். நாம் சோதனைகளை நடத்தப் போகிறோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளோம்." "மற்றவர்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்தித்தான் வருகிறார்கள். வடகொரியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன." டிரம்ப் ஆசியப் பயணத்தில் இருந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகின (எனினும் ரஷ்யா ஏவுகணை அணு ஆயுத வல்லமை பெற்றதல்ல என மறுத்தது). இதனைத் தொடர்ந்து, ஆசியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அணு ஆயுதச் சோதனை நடத்த அந்நாட்டுப் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதச் சோதனைகள் குறித்துப் பேசியதற்குப் பின்னர் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ பதில்கள் மற்றும் மறுப்புகள் உடனடியாக வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியதற்குப் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைப்பில் இருந்து உடனடியாகவும், அதிகாரப்பூர்வமாகவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு குறித்த சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்குத் தொடர்ந்து கட்டுப்படுவதாகவும், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது. டிரம்ப் அணு ஆயுதச் சோதனை குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னர், சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாகப் பதிலளித்தது. அணு ஆயுத சோதனைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக டிரம்ப் கூறிய குற்றச்சாட்டைச் சீனா திட்டவட்டமாக மறுத்தது. அணு ஆயுதச் சோதனைகளைத் தடை செய்யும் விரிவான அணு சோதனைத் தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) சீனா உறுதியாக ஆதரிப்பதாகவும், அதன் உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான அதன் வாக்குறுதியை சீனா எப்போதும் மதிக்கும் என்று தெரிவித்தது. வடகொரியாவைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் அணு ஆயுதச் சோதனைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் ஒரு புதிய விஷயம் அல்ல. வடகொரியா பொதுவாக இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியான பதில் அளிப்பதை விட, அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துகிறது. இதற்கு முன்னரும், டிரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் இடையே அணு ஆயுத 'பட்டன்' குறித்து வெளிப்படையான வார்த்தைப் போர் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/229440
3 months ago
மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம் லக்ஸ்மன் அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன. கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வடக்கு, கிழக்கை வேறாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கம் என்று தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் தமிழீழம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். இவர்களுடைய நிகழ்வின் நோக்கம் இராணுவத்தினர், பாதுகாப்புத் தரப்பினருடைய நெருக்கடிகளுக்கானதாக இருந்தாலும் தமிழர்கள் அதிகாரம் பெறுவதைத் தடுப்பது தொடர்பிலேயே இருந்துள்ளது. அதே நேரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதற்காகவே நிதி சேகரித்துவருவதாகவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கமைய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்தும் என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் இருவருடைய கருத்துக்களின் அடிப்படையில், மாகாணசபைத் தேர்தல், 13ஆவது அரசியலமைப்புத் ஆகியவை உள்ளடங்கியிருந்தன. கடந்த வருடத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பேராதரவு தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்திருந்தது. தமது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வுகாணும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தார்கள். பொறுப்புக்கூறல் விடயத்திலும் ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கம் நீதியை பெற்றுத் தரும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதுவரை அமைந்திருக்கவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் பல திருத்தங்களை மேற்கொண்ட அரசாங்கம் இறுதியில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஏற்க மாட்டோம் என்றே தெரிவித்திருந்தது. தமிழர் தரப்பால் முழுமையான ஆதரவு பெற்ற தீர்மானமாக இல்லாத போதிலும் இந்தத் தீர்மானத்தினை தமிழீழம் அமைத்துக் கொடுக்கவிருக்கும் தீர்மானமாகவே பெரும்பான்மை சமூகம் பார்க்கிறது என்பதற்கான சில உதாரணங்களே அதிலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோரது கருத்துக்களைக் கொள்ளலாம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின்போது, 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிப்பதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அதனைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உடனடியாகவே கடுமையாக எதிர்த்திருந்தது. அது மாத்திரமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் கட்டமைப்பையும் கடுமையாக எதிர்த்திருந்தது. பிரேரணை ஒரு வருட காலம் நீடிக்கப்படக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்தது. ஏனெனில், தேர்தல் பிரசாரத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இராணுவத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளியோம் என்பதே அவர்களது உறுதிமொழியாகும். இந்த உறுதிமொழியில் பிழை ஏற்படுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் இடங்கொடுக்காது. பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்மறையான செயற்பாட்டையும் நிலைப்பாட்டையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகள் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் ஒருபக்கம் வைக்கப்பட்டபடி அரசாங்கம் தன்னுடைய வேலைகளை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சிங்கள அடிப்படைவாதிகள் தங்களுடைய வேலைகளை முன்னெடுக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நல்லிணக்கத்தினை கடந்த அரசாங்கங்கள் திணிக்க முயன்றது போன்றே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், 13ஐ அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் தமிழ் மக்களுக்கு நிம்மதியை கொடுத்துவிடப் போவதில்;லை. இதனை உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் உருவாகிவருகிறது எனலாம். இந்த இடத்தில், நாட்டுக்குள் புலிகளின் மீளுருவாக்கம் என்ற சிங்களவர்களிடமுள்ள அச்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் தூண்டிவிடப்படுவது வழமையாகும். ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரையும் புலிகளாகவே சிங்களவர்கள் பார்க்கின்ற சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது, அது அச்சத்தின் பயனாக உருவானதே. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த அச்சம் ஓரளவுக்குத் தணிந்திருந்தாலும் முழுமையாக இல்லாமல் போய்விட்டதாக யாரும் கொள்ள வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகிறன. ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சி இலங்கையில் உருவானவுடன் போராட்ட இயக்கம் ஒன்றின் ஆட்சி தமிழர்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் அவர்களுடைய மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றே தமிழர் தரப்பு நம்பியிருந்தது. குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் புலிகளின் மீளுருவாக்கம் குறித்தும் போராட்டம் பற்றியும் தெற்கில் கருத்துக்கள் உருவாக்கப்படுவது வழமையானதாகக் காணப்பட்டது. தற்போது நாட்டுக்குள் உருவாக்கப்படுகின்றவற்றுக்கு அப்பால் புலம்பெயர் நாடுகள் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் நகர்த்திவிடப்படுகின்றன. திலும் அமுனுகமவின் கருத்து அவ்வாறானதொன்றே. பல தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் அனுபவித்த கொடுமைகள் சிங்கள மக்களின் மனோநிலையில் அச்சத்தை விதைத்தே வைத்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த அச்சத்தைப் பயன்படுத்த அரசியல் தரப்பினர் வீருப்பங்கொள்வதில் தவறில்லை. என்றாலும், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நடைபெற்று வருகின்ற தமிழர்களின் அரசியல் ரீதியான முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் தற்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னப்படுகின்ற தவறான கற்பிதங்களில் ஒன்றாக திலும் அமுனுகம மற்றும் தசநாயக்க ஆகியோருடைய கருத்துக்கள் இருக்கலாம். இலங்கையின் சுதந்திரத்தையடுத்தே உருவான பாகுபாடு, பாரபட்சம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கையில் நல்லிணக்கம் சாத்தியத்துக்குட்படுத்தக் கூடியதா என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி. 2022ஆம் ஆண்டில். பௌத்த பிக்குகள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எரித்தார்கள். அவர்களது அந்த எரிப்பானது 13ஐஅல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரித்ததாகப் பேசப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய அக்கிராசன உரையில் பொலிஸ் அதிகாரமற்ற, ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில், அதிகாரங்களைப் பரவலாக்கிப் புரையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும். 2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார் ஆனால், அதனை நடத்தி முடிக்காமலே அவர் பதவி முடிந்து வீட்டுக்குச் சென்றார். தற்போது நிதிக் குற்ற விசாரணையில் இருக்கிறார். அதிகாரப் பரவலாக்கம் நடைபெறவில்லை. அரசியலமைப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேர்தல்கள் ஒழுங்கான நடைமுறையில் நடைபெறவில்லை. தமிழர்களின் புரையோடிப்போன பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் நாட்டுக்குள்ளும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழீழத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெறுகிறது என்ற கருத்துக்கள் மாத்திரம் பரப்பப்படுகின்றன. இதற்கான காரணங்கள் சரியான முறையில் கையாளப்பட்டாலே தவிர இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாது என்பது மாத்திரமே நிதர்சனமானது. 1948முதல் 30 ஆண்டுகள் அகிம்சை ரீதியான போராட்டம். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாக போராட்டம். 2009 மே மாதத்துக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியான முயற்சிகள் என நகர்ந்து கொண்டிருப்பதைத் தவிர, வேறு ஒன்றும் நடைபெறவில்லை. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம். அதன்மூலம் சிறி கொண்டுவரப்பட்டது. 1958, 1978, 1983களில், பாரிய இனக் கலவரங்கள் உருவாக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின்போது, தமிழர்கள் கடல் வழியாகத் தப்பிச் செல்லவேண்டிய நிலையும் உருவாகியிருந்தது. 1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப் போராட்டம் உருக்கொண்டது. வடகிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். உக்கிரமடைந்த போர் நிலைமையில், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாணசபை அதிகாரம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இன்றுவரை தயாராக இல்லை.இந்த நிலையில் தமிழர் தரப்பின் அரசியலில் வெறுத்துப் போன தமிழர்கள் ஆட்சியை மாற்றியும் அடிப்படையில் மாற்றம் ஏற்படாத நாட்டில் தமிழீழ அச்சம் விதைக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை என்ற முடிவுக்கே வரமுடியும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-உருவாகும்-தமிழீழ-அச்சம்/91-367277
3 months ago
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்! தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளையும் கைது செய்தது. அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ச்சியான இந்த சம்பவங்கள் தமிழக மீனவ சமூகங்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சமும் குடும்பங்களின் முதன்மை வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல், ஆழ்ந்த பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. தற்போது 114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் உடனடியாக இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்று அவர் கோரினார். https://athavannews.com/2025/1451918
3 months ago
யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு! சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதனால் இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு நாட்டின் பிற மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வானது இந்திய பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் ஒருபகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பருத்தித்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவான J/401 இல் நாளைய தினம் 05.11.2025 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இது ஒரு ஒத்திகைச் செயற்பாடு என்பதனால் இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/யாழில்_தேசிய_சுனாமி_ஒத்திகை_நிகழ்வு!#google_vignette
3 months ago
நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த இளைஞன் விபத்தில் பலி! யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த 35 வயதுடைய வசந்த் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி, வீதியில் விழுந்தவேளை, அதே வீதியில் வந்த கொண்டிருந்த கனரக வாகனம் இளைஞனுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் யூடியூப் தளமொன்றில் தன் நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்த திறமையான ஒரு கலைஞன் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/article/நடிப்பு_திறமையால்_பலரையும்_கவர்ந்த_இளைஞன்_விபத்தில்_பலி!
3 months ago
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு? பட மூலாதாரம், Pankaj Nangia/Getty படக்குறிப்பு, ஷெஃபாலி 3 நவம்பர் 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் நேரில் கண்டுகளித்தனர். இறுதிப் போட்டியில் 'ஆட்ட நாயகி' ஆன ஷெஃபாலி, சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் ஆவார். பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, "சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினீர்கள். இன்று அவர் பால்கனியில் நின்று உங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்று ஷெஃபாலியிடம் கேட்கப்பட்டது. "இது எனக்கு மிகவும் மறக்க முடியாத தருணம். சச்சின் சாரை நான் பார்த்தபோது, எனக்குள் ஒரு வித்தியாசமான உற்சாகத்தை உணர்ந்தேன். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். அவர் எப்போதும் எனக்கு நம்பிக்கையை நிரப்புகிறார். அவர் ஒரு ஜாம்பவான், கிரிக்கெட்டின் மாஸ்டர். அவருடன் பேசுவது எனக்கு நிறைய உத்வேகத்தைத் தருகிறது. அவரைப் பார்ப்பது எனக்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது." என்று ஷெஃபாலி கூறினார். இறுதிப் போட்டியில் ஷெஃபாலி 87 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்ற உதவினார். இந்த உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் ஷெஃபாலி வர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக, தொடருக்கு நடுவேதான் அவர் இந்திய அணியில் இணைந்தார். "கடவுள் என்னை இங்கு நல்லதைச் செய்ய அனுப்பினார் என்று நான் ஆரம்பத்தில் சொன்னேன், இன்று அது உண்மையாகிவிட்டது. இறுதியாக உலகக் கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது."என்றார் ஷெஃபாலி. உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து நேரடியாக உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளுக்கு மாறுவதில் என்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவரிடம் கேட்கப்பட்டது. "அது கடினமாக இருந்தது, ஆனால் நான் அமைதியாக இருந்தால், என்னால் எதையும் செய்ய முடியும் என்று எனக்குள் நம்பிக்கை இருந்தது. என் பெற்றோர், நண்பர்கள், சகோதரர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இன்று என் சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது, என் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்தேன். அந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அவர். சச்சின், கோலி பாராட்டு பட மூலாதாரம், ANI மகளிர் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய அணியை புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பாராட்டியுள்ளனர். 1983 உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி பெற்ற வெற்றி ஒரு முழு தலைமுறையையும் பெரிய கனவுகளைக் காணவும் அந்தக் கனவுகளைத் துரத்தவும் தூண்டியது என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். "இன்று நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச் சாதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண்கள் மட்டை மற்றும் பந்தை கையில் எடுக்கவும், களத்தில் இறங்கவும், அவர்களும் ஒரு நாள் கோப்பையை உயர்த்த முடியும் என்று நம்பவும் நமது மகளிர் கிரிக்கெட் அணியினர் ஊக்கமளித்துள்ளனர்." இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு தீர்க்கமான தருணம். சபாஷ், டீம் இந்தியா. நீங்கள் முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று சச்சின் கூறினார். இந்த வெற்றி வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் தரும் என்று விராட் கோலி கூறினார். "உங்கள் அச்சமற்ற கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையால் நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள். இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் மற்றும் அணிக்கு வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்." என்று கோலி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து பட மூலாதாரம், ANI குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்களும் பிரபலங்களும் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். "2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்று அவர்கள் வரலாறு படைத்துள்ளனர்" என்று முர்மு கூறியுள்ளார். "அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது, இன்று அவர்களின் திறமை மற்றும் செயல்திறனுக்கு ஏற்றவாறு இந்த முடிவு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் பெண்கள் கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லும். பெண்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியதற்கு நான் பாராட்டுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். "2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அற்புதமான வெற்றி கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வீராங்கனைகளின் செயல்திறன் சிறந்த திறமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருந்தது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோதி கூறினார். இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல்வாதிகள் தவிர, சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ.51 கோடி பரிசு பட மூலாதாரம், Pankaj Nangia/Getty உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 51 கோடி பரிசளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்தார். உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார். தேவஜித் சைகியா பேசுகையில், "உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, பரிசுத் தொகையை 3.88 மில்லியன் டாலரிலிருந்து 14 மில்லியன் டாலராக (சுமார் ரூ.124 கோடி) உயர்த்தியதற்காக ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி சொல்ல வேண்டும், இது அசல் பரிசுத் தொகையில் இருந்து 300 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்" என்றார். "வீராங்கனைகளின் சிறந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ ரூ.51 கோடியை வெகுமதியாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74j119n499o
3 months ago
தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக செல்வம் எம்.பி பொலிஸில் முறைப்பாடு! தமக்கு வெளிநாட்டில் இருந்து உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காவல்துறையில் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு, யாழ்ப்பாண காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தாம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தினார். இதேவேளை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது. இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இச் சம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/தனக்கு-அச்சுறுத்தல்-விடு/
3 months ago
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வை வென்றெடுப்பதற்குரிய நகர்வுகள் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. அதேவேளை, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. https://www.samakalam.com/இலங்கைத்-தமிழரசுக்-கட்ச-4/
3 months ago
வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் adminNovember 3, 2025 வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை, இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது அரசியல் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக அல்லது அதனுடைய வகிபாகம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்துக்கள் சொல்ல முடியும். ஒரு பலவீனமான அமைப்பாக எமது அமைப்பை எங்களுடைய கட்சியை பலரும் விமர்சிக்கக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் கூட்டணி தான் தமிழ் மக்களுடைய எதிர்காலம் என்கின்ற அசைக்க முடியாத செய்தியை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன் 2009 ஆம் ஆண்டு வரை தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்து ஒப்பற்ற தியாகங்களை புரிந்து இந்த மண்ணின் எழுச்சிக்காக தமிழ் மக்களுடைய உரிமைக்காக களமாடி மடிந்த அத்தனை உயிர்களின் ஆத்மாக்கள் மீது சத்தியம் செய்தவர்களாக நாங்கள் எங்களுடைய பயணத்தை எங்களுடைய அரசியல் இயக்கத்தை எங்களுடைய அரசியல் கட்சியை நாங்கள் முன்னோக்கி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த இலட்சியத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. எமது மக்கள் இந்த இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு கிழக்கில் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கௌரவமான வாழ்வை இந்த மண்ணில் நிலை நிறுத்தும் வரை இந்த மண்ணில் நாங்கள் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது அரசியல் இயக்கத்தின் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாது. உண்மையிலேயே எங்கள் மீது பிரயோகிக்கப் படுகின்ற அழுத்தங்கள் எத்தனை துரோகங்கள் எத்தனை சதிகள் வந்தாலும் நாங்கள் எமது இலட்சியப் பாதையில் இருந்து விலகப் போவதில்லை, இன்று நாம் மிகப்பெரிய சூழ்ச்சிகளுக்குள்ளும் சதி வினைகளுக்குள்ளும் நாங்கள் அகப்பட்டிருக்கின்றோம் ஆணித்தரமாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எங்களுடைய கட்சி சந்தர்ப்பவாத அரசியல் இயக்கமாக அரசியல் கட்சியாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருந்து விடப் போவதில்லை. என்பதையும் நாங்கள் மிக ஆணித் தரமாக எமது மக்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்த மண்ணில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இந்த மண்ணில் குறிப்பிட்ட அல்லது நிலைக்கொண்டிருக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி எழுப்புகின்ற வரலாற்று பயணத்தை சரியாக மேற்கொள்ளவில்லை என்பது எங்களுடைய ஆணித்தரமான நம்பிக்கையாக இருக்கிறது. அதிலிருந்து விலகி ஒரு முன்னுதாரணமான எமது கட்சி பயணிக்க வேண்டும். எவ்வாறு தன்னுடைய கிளைகளை பரப்பி தன்னுடைய கட்டுமானங்களை இந்த மண்ணிலே நிறுவ வேண்டும். அத்தனை விதங்களுக்கும் முன்னுதாரணமாக இந்த மண்ணிலே இந்த கட்சி செயற்பட்டு காட்டும் என்பதை நீங்கள் எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும். அந்த வகையிலே நாங்கள் இழப்புகளுக்கோ அல்லது தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என்பதை கூறி, எதிர்கால இந்த தேசத்திற்கான பாய்ச்சலில் தமிழ் தேசியத்தின் எழுச்சியின் பயணத்திலே நீங்கள் அணி திரண்டு பயணிக்க வேண்டும் என்று நான் அன்போடு உரிமையோடு நான் இந்த சந்தர்ப்பத்திலே வேண்டிக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/222271/
3 months ago
இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும்! வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன். adminNovember 4, 2025 இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீடு: இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு – உண்மையும் பின்னணியும் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் 📈 ஆச்சரியம் அளிக்கும் புதிய தகவல்: தமிழர்களின் வீதாசாரம் அதிகரிப்பா? (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை ) அண்மையில் வெளியான இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீட்டின் அடிப்படை தகவல்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2012இல் 11.1% ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024இல் 12.3% ஆக அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, இனவாதிகளின் வன்மத்தையும் அதிகரித்துள்ளது. ஒரு இனத்தின் குடித்தொகை வீதாசாரம் அதிகரிக்க, பொதுவாக கருவளம் (பிறப்பு வீதம்) அதிகரிக்க வேண்டும், இறப்பு வீதம் குறைய வேண்டும் அல்லது குடியேற்றம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அனைத்துக் காரணிகளும் குடித்தொகை வீதாசாரத்தைக் குறைக்கும் திசையிலேயே இருக்கின்றன. 📉 வரலாற்றுப் போக்கு: வீழ்ச்சியும் முரண்பாடான மாற்றமும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, இலங்கைத் தமிழரின் வீதாசாரம் தொடர்ச்சியாகக் குறைந்து வந்தது: ஆண்டு இலங்கைத் தமிழர்களின் வீதாசாரம் முஸ்லிம்களின் வீதாசாரம் 1981 12.7% 7.0% 2012 11.2% 9.2% இந்த அடிப்படையில், 2031ஆம் ஆண்டு இடம் பெறப்போகும் குடித்தொகைக் கணிப்பீட்டில் முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர்களை முந்திச் செல்வர் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இப்போது இந்த எதிர்வு கூறல்களுக்கு முரணாக வீதாசாரம் அதிகரித்து இருப்பது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும். 🔍 உண்மை வெளிச்சம்: அடையாள மாற்றமே அதிகரிப்பின் காரணம் இந்த அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள உண்மை என்னவென்றால், குடிசன மதிப்பீட்டின் போது சேகரிக்கப்படும் தகவல்களது உண்மைத்தன்மையானது பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதில்லை. மாறாக வாய்வழியாகக் கேட்கப்படும் வினாக்களுக்குக் குடியிருப்பாளர் வழங்கும் பதில்கள் நேரடியாக எவ்வித ஆதாரச் சரிபார்ப்புகளும் இன்றிக் குடிசன மதிப்பீட்டாளரால் பதிவு செய்யப்படுவதே நடைமுறையாகும். இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாள மாற்றம்: 1981ஆம் ஆண்டு 5.5% ஆக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள், அவர்களின் பிறப்பு வீதம் அதிகமாக இருந்தபோதிலும், தம்மைத் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக: 2012இல் 4.2% ஆகக் குறைந்தது. 2024இல் 2.8% ஆக மேலும் குறைவடைந்துள்ளது. சில ஆய்வாளர்கள் இதை இந்திய வம்சாவளித் தமிழர்களின் கருவளத்தை வேரறுக்கும் சூழ்ச்சித் திட்டங்களால் ஏற்பட்டது எனக் கருத்துக் கூறுகின்றனர். தற்போது வெளியாகிய குடிசனமதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிற தகவல்கள் மற்றும் ஆய்வுகள் இந்திய வம்சாவளித்தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம் என்ற கருதுகோளினை உறுதிப்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றன தரவுகள் தெளிவுபடுத்துகின்றன: மொத்த தமிழர்களின் வீதாசாரம்: (இலங்கைத் தமிழர்கள் + இந்திய வம்சாவளித் தமிழர்கள்) 2012இல் (11.1+4.1=15.2) ஆக இருந்தது, 2024இல் (12.3+2.8=15.1) ஆக, அதாவது வெறும் 0.1% மட்டுமே குறைந்துள்ளது. மத ரீதியான கணிப்பீடு: இந்துக்களின் வீதாசாரம் 2012 இல் இருந்து 2024 வரை 12.6% ஆக மாறாமல் இருப்பது இந்த அடையாள மாற்றத்துடன் ஒத்துப் போகிறது. பிராந்திய உதாரணம் (பதுளை மாவட்டம்): 2012 இல் இலங்கைத் தமிழர்கள் 2.7% இலிருந்து 2024இல் 9.4% ஆக அதிகரித்துள்ள அதே வேளையில், இந்திய வம்சாவளித் தமிழரின் வீதாசாரம் 18.5% இலிருந்து 11.0% ஆகக் குறைந்துள்ளது. (நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை) இலங்கைத் தமிழர்கள் பதுளைக்கு இடம்பெயர்ந்தமைக்கான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருந்தாலே அன்றி வேறு எந்தக் காரணியும் மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரத்திற்கான விஞ்ஞானபூர்வ விளக்கமாக அமையாது ⚖️ அரசியல் சூழ்ச்சிகளும் வாக்கு வங்கி அரசியலும் சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் கூறுபடுத்தப்படுதை நாம் கவனமாக இங்கு அவதானிக்க வேண்டும். அதாவது 1981ஆம் ஆண்டு முதல் தாழ்நிலச் சிங்களவர்கள் மற்றும் கண்டியச் சிங்களவர்கள் சிங்களவர்களாக ஒன்றிணைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறார்கள். எனினும், ஆரம்பகாலங்களில் தமிழர்களாகக் கணக்கிடப்பட்டவர்கள் 2012 முதல் மேலும் பல உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலங்கை செட்டி மற்றும் பரதவர்கள் என்று திட்டமிட்டவகையில் பிரிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டுமானால், 2012ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் “தமிழர்” என்று ஒன்றுபட்டு தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால், அதை தமது சுயநல நோக்கங்களுக்காக, வாக்கு வங்கி சரிந்து விடும் என்று கருதிச் சில மலையக தலைமைகள் எதிர்த்து இருந்தன. 🚨 தமிழ் அரசியல் கட்சிகள் மீதான நேரடி விமர்சனம் தமிழர்களது இருப்பைத் தக்கவைக்கும் அடிப்படைப் பொருண்மிய மேம்பாடு குறித்துத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகள் எவையும் அக்கறைப்படாதிருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். புலிகளின் காலத்தில் அவர்கள் போரின் மத்தியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக, பல தசாப்தங்களாகத் தமிழ் தேசியம் பேசிவரும் தமிழரசு கட்சி (ITAK) மற்றும் தமிழ் காங்கிரஸ் அல்லது இந்திய ஐந்தாம் படையுடன் இணைந்து செயல்படும் ஏனைய தமிழ்க் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கோ இன்றுவரை தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதே பாரிய பிரச்சினையாக இருக்கிறது. தமிழர்களுக்கு உரிமைகளைப் பெறுவதாக உணர்ச்சிகளைத் தூண்டிப் போராட்டம் நடத்துவதையும், உரிமைகளை இழந்தமைக்கு ஏனையவர்களைக் குற்றம் சாட்டுவதையும் செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் இலக்கை அடைவதற்கு முயற்சி செய்தார்களே தவிர, இதுநாள் வரையில் குறித்த அரசியல் தலைமைகள் இனத்தின் இருப்பினைக் காப்பதற்காக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடவில்லை என்பதே நிதர்சனம். 💡 தமிழர்களின் இருப்புக்குத் தீர்வு: பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் அதிகரித்த திருமண வயது, சீதனம், சோதிட நம்பிக்கை, சாதீயம், பிராந்தியவாதம், மதவாதம் போன்ற பல காரணிகள் தமிழர்களின் பிறப்பு வீதத்தைக் குறைத்தாலும், நலிவடைந்த பொருளாதாரமே முதன்மைக் காரணியாகத் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், குறைந்த பிள்ளைகள் பெறுவதையும் தூண்டுகிறது. தமிழர்களின் குடித்தொகையை இலங்கையில் அதிகரிக்க வேண்டுமானால், தமிழர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். தமிழர்களின் நலிவடைந்த பொருளாதாரம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் தமிழர்களின் புள்ளிவிபரங்களினாலும், அதிகரித்த மந்த போசணை மற்றும் தாய்-சேய் இறப்பு வீதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்திடம் இருந்து கற்க வேண்டிய பாடம்: இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மைக்கு மத்தியிலும், தமக்கென வங்கி கட்டமைப்பு, பள்ளிவாசல்கள் மூலம் ஒன்றுபட்ட சமூக பொருளாதார வேலை திட்டங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இவ்வாறான வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியும் சிந்திக்காது, தமிழினம் விசர் தனமான பதிவுகளை யூடீயுப் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி மற்றவர்களைக் குற்றம் சாட்டியும், நக்கலடித்தும் மகிழ்ந்து கொண்டிருப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர், குடித்தொகையியல் ஆய்வாளர் 4.11.2025 https://globaltamilnews.net/2025/222281/
3 months ago
சர்ச்சைகள், அழுத்தத்தை தாண்டி இந்தியாவின் வெற்றியில் ஜெமிமா முக்கிய பங்காற்றியது எப்படி? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜான்வி மூலே பிபிசி செய்தியாளர் 31 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025 "கிரிக்கெட்டா அல்லது ஹாக்கியா?" 11 வயது சிறுமி ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் அவரது தந்தை இந்தக் கேள்வியைக் கேட்டபோது, இரண்டையும் நேசித்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இறுதியில் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த ஜெமிமா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஜெமிமாவின் சதம் இந்தியாவை ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. நிச்சயமாக, இந்தப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. மும்பையின் நெரிசலான உள்ளூர் ரயில்களில் முட்டி மோதி பயணித்தது முதல், அணியில் இருந்து நீக்கப்பட்ட மன வேதனையைச் சமாளித்தது வரை ஜெமிமாவின் வெற்றிப் பாதையில் எண்ணற்ற முட்கள் தடைகளாக இருந்தன. 2022-இல் இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத அதே ஜெமிமா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த கடுமையான மனப் போராட்டத்தை அவர் போட்டிக்குப் பிறகு வெளிப்படுத்தினார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எஸ்.ஐ.ஆர் பற்றிய முழு விவரம் இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல் ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு நபர் இப்போது எப்படி இருக்கிறார்? வெளிநாட்டில் தனக்கிருந்த ஒரே ஒரு ராணுவ தளத்தையும் இந்தியா காலி செய்தது ஏன்? End of அதிகம் படிக்கப்பட்டது "நான் தினமும் அழுதேன், பதற்றமடைந்தேன், போராடினேன், அது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று அவர் மனம் திறந்து பேசினார். ஜெமிமாவுக்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல. தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் மற்றும் திறமையால் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளார். பட மூலாதாரம், ANI பார்பி பொம்மையா கிரிக்கெட் மட்டையா? 'ஜெமி' என்று அன்பாக அழைக்கப்படும் ஜெமிமாவுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவருடைய தாத்தா பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசளித்தார். "எனக்கு பார்பி பொம்மைகள் பிடிக்காது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். எனவே அவர் பொம்மைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் வாங்கிக் கொடுத்தார். நாங்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினோம். மட்டையைப் பிடிக்கும்போது உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன்" என்று நேர்காணலில் அவர் நினைவு கூர்ந்திருந்தார். தனது சகோதரர்களான ஏனோக் மற்றும் எலியுடன் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடினார். ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ்தான் அவருடைய முதல் பயிற்சியாளராக இருந்தார். பின்னர், பாந்த்ராவில் உள்ள MIG அகாடமியில் பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியிடம் ஜெமிமாவின் சகோதரர் எலி கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தார். ஜெமிமாவின் தந்தை இவான் மற்றும் ஜெமிமாவின் தாய் லவிதா, தங்கள் மகள் விளையாடுவதைப் பார்க்குமாறு பிரசாந்த் ஷெட்டியிடம் கேட்டுக்கொண்டார். அப்போது ஜெமிமாவுக்கு வெறும் 9 வயதுதான், கிரிக்கெட் விளையாட ஆசை இருந்தாலும், அந்த நேரத்தில் அது மிகவும் அசாதாரணமான காட்சியாகவே இருந்தது. "2007-08 ஆம் ஆண்டில், மிகக் குறைவான பெண்களே கிரிக்கெட் விளையாடினார்கள். MIG கிளப்பில் எந்தவொரு பெண்ணும் கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை," என்று அந்த நாளை ஷெட்டி நினைவு கூர்ந்தார். ஆனாலும், பிரசாந்த் ஷெட்டி ஒப்புக்கொண்டார். அடுத்த நாளில், ஜெமிமா பயிற்சிக்காக மைதானத்துக்கு சென்றார். ஜெமிமாவின் முதல் ஷாட், ஒரு கவர் டிரைவ். இந்தப் பெண்ணிடம் ஏதோ இருப்பதை பிரசாந்த் ஷெட்டி உணர்ந்தார். பட மூலாதாரம், Getty Images MIG இல் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்ட முதல் பெண் என்பதால், அவர் சிறுவர்களுடன் விளையாட வேண்டியிருந்தது. பெண்ணை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று சில உறவினர்கள் கூறினாலும், இவானும் லவிதாவும் ஜெமிமா கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக நின்றனர். ரோட்ரிக்ஸ் குடும்பம் அப்போது மும்பை நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டப்பில் வசித்து வந்தது. பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ளது. பயிற்சிக்காக பாந்த்ராவுக்கு உள்ளூர் ரயிலில் செல்லும் மூன்று குழந்தைகளுக்கும் உணவு தயார் செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார் ஜெமிமாவின் தாய் லவிதா. மும்பையின் நெரிசல் மிகுந்த ரயில்களில் கனமான கிரிக்கெட் கிட்-ஐ எடுத்துச் செல்வது எவ்வளவு சிரமமானது என்பதை அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் அதுவே மும்பை கிரிக்கெட் வீரர்களிடையே மன உறுதியை உருவாக்கியது. ஜெமிமாவும் விதிவிலக்கல்ல. இறுதியில், குடும்பம் பாந்த்ராவுக்கு அருகில் செல்ல முடிவு செய்தது. பட மூலாதாரம், Getty Images ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து - அல்லது கிரிக்கெட்? பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல ஜெமிமா கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்திலும் தனது பள்ளியின் சார்பில் கலந்துக் கொள்வார். 12 வயதில், மகாராஷ்டிராவுக்காக தேசிய அளவில் ஹாக்கி மற்றும் மண்டல அளவிலான போட்டியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவரது விளையாட்டுத் திறமையைக் கண்ட இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஜோவாகிம் கார்வால்ஹோ, "உங்கள் மகள் ஒலிம்பிக்கிலும் கூட இந்தியாவுக்காக விளையாடலாம்" என்று ஜெமிமாவின் தந்தையிடம் கூறியிருந்தார். ஹாக்கி விளையாடி ஒலிம்பிக்கிற்கு செல்வதா அல்லது கிரிக்கெட்டில் தொடர்வதா என்ற முடிவு எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பதினொரு வயது ஜெமிமா கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார். 2012-13 சீசனில், தனது 13 வயதில் மும்பையின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். பட மூலாதாரம், Getty Images 'குழந்தை' வளர்ந்தபோது... சிறுமியாக இருந்தபோதே ஜெமிமா மும்பை கிரிக்கெட் உலகில் பிரபலமானார். விரைவில், நாடு முழுவதும் ஜெமிமாவை கவனித்தது. 2017-ஆம் ஆண்டு, செளராஷ்டிராவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில் ஜெமிம்மா ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு இதுபோன்ற சாதனையைப் படைத்த இரண்டாவது வீராங்கனை இவர்தான். அந்த இன்னிங்ஸ் ஜெமிமாவை பிரபலமாக்கியது. பின்னர், சேலஞ்சர் டிராபியில் அவர் பெற்ற வெற்றி மற்றும் இந்தியா ஏ அணிக்காக அவர் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் பலனாக, 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு ஜெமிமாவுக்குக் கிடைத்தது. அதே ஆண்டு, டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அவர், தனது அறிமுகத்தை அரை சதத்துடன் தொடங்கினார். மற்றவர்களைவிட வயதில் இளையவர் என்பதால் ஆரம்ப நாட்களில் அவரது அணி வீரர்கள் ஜெமிமாவை குழந்தையைப் போலவே நடத்தினார்கள். சில சமயங்களில், வயது வித்தியாசம் அவரை தனிமைப்படுத்தியது. சில நேரங்களில் ஜெமிமா தனிமையாக உணர்ந்தார். அப்போதுதான் ஸ்மிருதி மந்தனாவுடன் நட்பு கொண்டார். ஆரம்ப நாட்களில், இருவரும் அறை தோழிகளாக இருந்தனர், இப்போது அவர்கள் சகோதரிகளைப் போல இருக்கிறார்கள். பட மூலாதாரம், ANI இன்று, ஜெமிமா ஒரு நட்சத்திர வீராங்கனை மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர், கிட்டார் திறமை மற்றும் துடிப்பான ஆளுமைக்காகவும் அறியப்படுகிறார். உலக டி-20 போட்டிகளில் பெற்ற வெற்றி அவரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் பிரபலமானவராக்கியது. இன்று, ஜெமிமா இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னணி பிராண்ட் தூதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இருப்பினும், இந்திய அணியில் ஜெமிமாவின் வாழ்க்கை தொடர்ந்து ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்தது. 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜெமிமா இடம் பெறவில்லை. ஆனால் விரைவில், அவர் ஒரு வலுவான மறுபிரவேசத்தை ஏற்படுத்தினார். 2022 ஆகஸ்ட் மாதத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், 2023-இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியிலும் ஜெமிமா இருந்தார். 2023-ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 2023 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார். அணியில் மறுபிரவேசம் இந்த 2025 உலக கோப்பையின் தொடக்கம் அவருக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலும், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். ஆனால் 'மீண்டும் ராணி' போல, அவர் ஒரு பிரமாண்டமான மறுபிரவேசத்தை மேற்கொண்டார். முதலில், நியூசிலாந்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர், 2025 அக்டோபர் 30 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து, வரலாற்று வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் இடம் பிடித்தார். "இந்த இன்னிங்ஸ் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று உள்ளது. உண்மையில் துன்பங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் அவர் ஒரு உண்மையான உத்வேகம்" என்று பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டி பாராட்டுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதியில் ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி சாதனை படைத்தனர். உலகக் கோப்பை சாதனை இன்னிங்ஸ் தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் விளையாடிய ஜெமிமா, 134 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார், 14 பவுண்டரிகள் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது மூன்றாவது சதம் ஆகும். அவரது இன்னிங்ஸ், 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை அடைய இந்தியாவுக்கு உதவியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேஸிங்கில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜெமிமா பொதுவாக மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார், இந்த போட்டியில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். விளையாடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என்கிறார் அவர். திடீர் மாற்றம் இருந்தபோதிலும், அவரும் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் 167 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். பெரும்பாலான வீரர்கள் சதம் அடிக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பேட்டை வானை நோக்கி உயர்த்தி கொண்டாடுவார்கள். உலகக் கோப்பையில் சதம் அடிப்பது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த போதிலும், ஜெமிமா அந்த தருணத்தைக் கொண்டாடவில்லை. வெற்றிக்காகக் காத்திருந்த அவர், வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபோதுதான் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்தார். மன அழுத்தத்தை சமாளித்தல் 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மும்பையின் கார் ஜிம்கானாவில் அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று விவாதத்தைத் தூண்டிய பிறகு, அவர் சர்ச்சைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் ஜெமிமா தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உலகக் கோப்பையின் சில போட்டிகளில் ரன்கள் எடுக்காதபோதும், தனது பீல்டிங் மூலம் கவனத்தை ஈர்த்தார். "இந்த தொடரின்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அழுதேன். மனதளவில் அழுத்தமாக இருந்தது, பதற்றமாக இருந்தது. என்ன நடந்தாலும் சரி, என் வேலையை தொடர்ந்து செய்வேன், மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என நினைத்தேன்" என்று ஜெமிமா கூறினார். உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், ஜெமிமா அமைதியாக இருக்க முயன்றார், ஏனென்றால் தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரால் இன்னும் நிறைய செய்ய முடியும் என ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் நிபுணர்களும் நம்புகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vnzqk7z40o
3 months ago
ஓம். ஆனால் அனுர வெள்ளை கொடி விவகாரத்தை சொல்லுற வகையில் இவரை தட்டவே மாட்டார். மீளவும் இனவாதம் மூலம் இவர்கள் தம்மை வெல்லாமல் தடுக்க மட்டுமே. மட்டுப்பட்ட தட்டல்.
3 months ago
எனது பூட்டன் சம்புநாதர், சம்பர் என்று அழைப்பார்கள். இவர் காலத்தில்தான் காடாக கிடந்த கரவாகு வட்டை காணியும், தற்போது கல்முனை என்று அழைக்கப்படும் இடமும் வோச்சி துரை என்று அழைக்கப்படும் வெள்ளைக்கார அதிகாரியால் காடு வெட்டி வயல் வெளி உருவாக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் கரவாகு என்னும் பெரிய தமிழ் கிராமம் இருந்தது. கரவாகு கிராமத்தில் எனது தாயின் பாட்டனார் முத்துக்குட்டி ஆச்சாரி அவர்கள் ஓரளவு ஆங்கிலம் கதைக்க தெரிந்தவர் வெள்ளைக்கார துரை கூறுவதை தமிழில் மக்களுக்கு எடுத்துரைப்பவர். காடுகள் வெட்டி கூலிக்கு வேலை செய்ய வந்த முஸ்லிம்கள் குடியேறிய இடம்தான் கல்முனைக்குடி. போக்குவரத்து மார்க்கம் தாளவட்டுவான் சந்தியில் இருந்து கிட்டங்கி துறைக்குச் சென்று, அங்கிருந்து வள்ளம் மூலமாக மட்டக்களப்புக்கு செல்வார்கள். --> குணசேகரன் வீரக்கொடி, மட்டக்களப்பு
3 months ago
கல்முனை இனவன்முறை: https://noolaham.net/project/840/83902/83902.pdf
3 months ago
90ஆம் ஆண்டு புலிகள் 24மணி நேரம் கொடுத்து யாழ் முஸ்லிங்களை வெளி ஏற்றினார்கள் என்பது பிழை என்றால் (உண்மையில் பிழை)1968/04/12அன்று எந்தவித பிழையும் செய்யாத போதும் எந்த வித தமிழ் ஆயுத குழுக்களும் இல்லாத காலத்தில் 1நிமிடம் கூட கொடுக்காமல் கல்முனை கரவாகு தமிழர்களை அகமது எம்பிக் வழி காட்டலில் வம்முறு சயிது போண்ற காடையர் குழுவை வைத்து அப்பாவி தமிழர்களை சித்திரை புது வருடத்தை கொண்டாட விடாமல் இரவோடு இரவாக அடித்து விரட்டியது புனித ஜிகாத் யுத்தமா அமைதி மார்க்கத்தை பின்பற்றும் காத்தான் குடி இஸ்லாமிய சகோதரர்களே --> சிவதாசன் சந்திரமோகன் இது தொடர்பில் மேலும் தகவல்கள் திரட்ட வேண்டும்.
3 months ago
போன கிழமை எங்கேயோ T20 விளையாடிக் கொண்டு இருந்தவா. இப்போ உலகக் கிண்ண வெற்றியாளர். அதிரடிக்குப் பெயர் போன ஆள். ஆனால் என்ன, தொடர்ச்சியான பெறுபெறு இல்லை. இனியாவது அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
3 months ago
இந்த குற்றவாளிகள் சிறைக்கு செல்ல சந்தர்பம் வராது போல் தெரிகின்றது. அமைச்சர் சொல்லியுள்ளாராம் இந்த செயல் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால் இப்படியான செயல்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
3 months ago
இவர் ரணிலின் மற்றும் மகிந்தவின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார் என்றும், அதனால் தான் அரசியல் ரீதியில் பழிவாங்கபட்டார் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையான காரணம் எதுவென அறிய முடியவில்லை.
3 months ago
பயங்கர துவேசி , அத்துடன் ராஜபக்ஸ விசுவாசி. இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரி/சாட்சி. தட்டுற மாதிரி தட்டினால் வாயை திறப்பார்!
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed