3 months ago
இந்த காணொளியை எல்லோரும் பாருங்கள்.
3 months ago
நீங்கள் சொன்னது சரி . இலங்கையில் தமிழர்களின் சன தொகை 2024 அதிகரித்திருக்கின்றது. அப்படியிருக்க பதற வைக்கும் தமிழர்களின் வீழ்ச்சி என்று காணொளியும் ஒன்று உலாவருகின்றது.
3 months ago
இரண்டு குற்றங்களுக்க மாணவ குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் மாணவர்களை வதைத்த குற்றம் பலவந்தமாக மதுபானம் பருக்கிய குற்றம்.
3 months ago
ஐயா இளஞ்செழியனின் பேச்சைக் கேட்க மிகவும் கஸ்டமாக இருந்தது. ஏன் இவ்வளவு வஞ்சகம்? எல்லோரும் சமமாக வாழுவோம் என்கிறார்களே? இதுவா சமம்?
3 months ago
இது ஆக ஓவர்😁........................
3 months ago
என்னை சட்டத்துறையில் வளர்த்தவர் குமார் பொன்னம்பலம்... https://www.facebook.com/share/v/14QPhdXVgDr/
3 months ago
Swag Sports Tamil · கபில்தேவ் தோனி சாதித்ததை விட.. ஹர்மன் செஞ்சது இதனால பெரிய விஷயம்.. இதை வெப் சீரிஸா எடுக்கணும் – அஸ்வின் கோரிக்கை.......! 🙂
3 months ago
இவா மீண்டும் அணிக்கு வந்த படியால் தான் கோப்பை இந்தியாவின் கைக்கு வந்தது இல்லையே தென் ஆபிரிக்கா மகளிர் கோப்பையுடன் நாடு திரும்பி இருப்பினம் கடந்த காலங்களில் இவாவிடம் பந்து போடக் குடுத்ததை நான் பார்க்க வில்லை...............பந்து வீச்சு மகளிர்கள் ரன்ஸ்ச விட்டு கொடுக்க இடையில் இவா பந்து போட வந்த கையோட இரண்டு விக்கேட் எடுத்த படியால் தான் இந்தியா பக்கம் மெதுவாய் வெற்றி வந்தது இவா தொடக்க மட்டையடி மகளிர்👍...................................
3 months ago
Swag Sports Tamil · அணிக்குள் வந்த 6வது நாளில் கையில் உலகக் கோப்பை.. கடவுள் நல்லது செய்ய அனுப்பி வைத்தார் – செபாலி வர்மா பேட்டி.........! 😃
3 months ago
சோசல் மீடியாக்களில் இவர்களின் வெற்றிக் கொண்டாட்டம் அதிகம்👍...........................
3 months ago
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன் Monday, November 03, 2025 செய்திகள் தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டபோது, மேல் நீதிமன்ற நீதிபதிகளில் தான் முதலாவது இடத்தில் இருந்தபோதிலும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால் மேன்முறையீடு மற்றும் உயர் நீதிமன்றங்களில் தலா இரண்டு ஆண்டுகள் என இன்னும் நான்கு ஆண்டுகள் சேவை செய்திருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட தான் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்தபோது, தனது ஓய்வு குறித்து நினைவூட்டியதாகவும் இருந்த போதிலும், தனது ஓய்வுக்குரிய ஜனவரி 20ஆம் திகதிக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், ஜனாதிபதி வெளிநாடு சென்றதாகவும் அவர் கூறினார். ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பியதால், தனக்குரிய பதவி உயர்வுக்கான சட்டம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். இந்த அநீதி தொடர்பாக "நான் விரும்பி ஓய்வு பெறவில்லை; கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன்" என்று தான் எழுதிய நான்கு கடிதங்களுக்கும் பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், "நீதித்துறை புனிதமானது, யாரையும் குறை சொல்லும் இடத்தில் நான் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய நான்கை தவிர, வேறு எதற்கு முன்னாலும் தலைகுனிந்ததில்லை என்றும் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
3 months ago
என்னால் இதை பார்த்து சிரிப்பை அடக்க முடிய வில்லை😁..............
3 months ago
பழைய நினைவுகளை மீண்டும் கிரகித்து பார்க்கின்றேன். இராணுவத்திற்கு விடுதலை புலிகள் அமைப்பு, நடமாட்டங்கள் பற்றிய உள்ளூர் தகவல்களை வழங்குகின்றார்கள், காட்டி கொடுக்கின்றார்கள் எனும் காரணத்தாலேயே முஸ்லீம் மக்கள் அப்போது வெளியேற்றப்பட்டார்கள் என ஊருக்குள் கதைத்தார்கள். முஸ்லீம் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது விடுதலை புலிகளுக்கு பல்வேறு அனுகூலங்களை ஏற்படுத்தின. நிர்வாக ஒழுங்குகளுடன் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சி அடைவதை இந்த வெளியேற்றம் இலகுவாக்கியது என்றே கூறவேண்டும். ஒருவேளை முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்து நிலைகொண்ட நிலை காணப்பட்டால் போராட்டம் எந்த பாதையில், எப்படி பயணித்து இருக்கும் எனவும் சிந்தித்து பார்க்கலாம். 1990 இல் வெளியேற்றம் ஏற்பட்டது. 1995 இல் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவம் வசமாகியது. கிட்டத்தட்ட இந்த ஐந்து வருட கால இடைவெளியில் முஸ்லீம் மக்களை வெளியேற்றதன் மூலம் விடுதலை புலிகளுக்கு கிடைத்த பலன்கள் எவை, பாதகங்கள் எவை எனவும் நோக்கப்படலாம்.
3 months ago
ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் சொல்வது சரியென்று தெரியவில்லை. இலங்கை தமிழர்களின் சனத்தொகை 11.1 வீதத்திலிருந்து 12.3 வீதமாக அதிகரித்திருக்கின்றது என்றே பகிரப்பட்ட தரவுகளில் இருக்கின்றது. இது இங்கு களத்தில் கூட ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு செய்தி.
3 months ago
பகிடிவதையின்போது பலவந்தமாக மதுபானம் பருக்கிய இந்த சிரேஷ்ட நாய்களை முதலில் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3 months ago
இவங்கள் கூட ஆங்கிலம் கலந்து கதைப்பாங்கள் அதனால் பெரிசா பார்க்க விரும்புவதில்லை உங்களுக்காக நாளைக்கு பார்க்கிறேன்👍..............................
3 months ago
நேரம் இருந்தால், இந்த கலந்துரையாடலைக் கேட்டுப் பாருங்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றி அருமையாகக் கதைச்சிருக்கினம். எப்படி எல்லா பந்து வீச்சாளர்களும் தங்களின் பங்களிப்பைக் கொடுத்தார்கள். விக்கட் எடுத்தால்தான் பங்களிப்பதில்லை. https://www.youtube.com/watch?v=gPT8O1duVUc
3 months ago
நான் தான் கவனிக்க மறந்து விட்டேன்................மற்ற இந்தியன் மகளிர்கள் சிவப்பு பொட்டு வைச்ச மாதிரி தெரிய வில்லை.................பாப்போம் அடுத்த விளையாட்டில் இவா பொட்டுடன் விளையாடுகிறாவ என..................எனக்கு நேற்று தான் முதல் முறை பார்த்த மாதிரி தெரிந்தது😁.....................
3 months ago
95 ஆம் ஆண்டில் 39 ரூபாவுக்குச் சாதாரண செருப்புத்தான் வாங்க முடியும். 30 ஆண்டுகள் அழியாமல் இருக்குமானால் செருப்பின் விலை அதனைச் செய்யும்போதே அச்சில் முப்பரிமாணமாகப் பதியப் பட்டிருந்ததா ?
3 months ago
பார்த்தது காணாது போல 😁. அவ மட்டும்தான் எப்போதும் பொட்டுடன். பொட்டு வைத்த எங்கள் தங்கம். நேற்றுப் போட்டு உருட்டிவிட்டாவே
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed