ஊர்ப்புதினம்

📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.

1 week 2 days ago

📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.

adminJanuary 25, 2026

4-4.jpeg?fit=904%2C644&ssl=1

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.”

மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும், சவாலான சூழலில் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதே நியாயமானது.

எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் வைத்து தரப்போவதில்லை. எமது நற்புறவு, சினேகபூர்வ உரையாடல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்கு போதிய அரசியல் பலம் இருந்திருந்தால் இன்னும் பலவற்றை சாதித்திருக்கலாம். தற்போதுள்ள ஆளும் கட்சி தமிழ் உறுப்பினர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் கரைந்து போயுள்ளனர். அவர்களுக்கு அனுபவமோ ஆற்றலோ போதாது.

அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமாயின், மக்கள் எமக்கு மீண்டும் அந்த ஆணையை வழங்க வேண்டும்.

“கட்சியின் பலவீனங்களை அடையாளங்கண்டு, கட்டமைப்புகளைச் சீரமைப்பதன் மூலம் ஈ.பி.டி.பி-யை மீண்டும் எழுச்சி கொள்ள வைக்க முடியும். இதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும்.” என  டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://globaltamilnews.net/2026/227462/

📍 நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு!

1 week 2 days ago

📍 நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு!

adminJanuary 25, 2026

0-1-3.jpg?fit=1170%2C784&ssl=1

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திஅண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை மேம்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

🧵 நெடுந்தீவில் கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ள இயந்திரக் கட்டமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்தார். பணியாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் பணி அனுபவங்கள், மேலதிக தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறிந்தார்.

🤝 நெடுந்தீவின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் பின்வரும் தரப்பினரை அமைச்சர் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்தல் சிக்கல்கள் குறித்து பேசப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான வசதிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

“உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே தீவகப் மக்களின் வாழ்வாதாரத்தை நிலையானதாக மாற்ற முடியும்” என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

🏛️ தொடர்ந்து நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு சென்ற அமைச்சர், அங்குள்ள நிர்வாகச் செயல்பாடுகளைப் பார்வையிட்டார்.

அலுவலகத்தில் நிலவும் வளக் குறைப்பாடுகள் மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

நெடுந்தீவு மக்களின் நீண்டகால தேவைகளை நிவர்த்தி செய்யவும், அப்பகுதியை ஒரு முக்கிய கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக மாற்றவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என இவ்விஜயத்தின் இறுதியில் உறுதி அளிக்கப்பட்டது.

https://globaltamilnews.net/2026/227465/

🛑  இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️

1 week 2 days ago

🛑  இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️

January 25, 2026

itk.jpg?fit=912%2C597&ssl=1

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மட்டக்களப்புபாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில்பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

🔍 இன்று (25) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார். அரசியலமைப்புச்சபை உறுப்பினர் பதவியிலிருந்து சிறீதரன் விலக வேண்டும் என கட்சியின் அரசியல் குழு இருமுறைஆலோசனை வழங்கியும், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். 

“பதவியை வழங்கிய அதே அரசியல் குழுவிற்கு, வழங்கப்பட்ட பதவியை மீளப் பெறும் அதிகாரமும்உண்டு” என சுமந்திரன் தெளிவுபடுத்தினார். நேற்று திருகோணமலையில் நடைபெற்ற சுமார் 4 மணிநேரக் கூட்டத்திலும் அவர் கட்சியின் முடிவுக்கு செவிமடுக்கவில்லை என்பதே இந்தத்தீர்மானத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

🤔இருப்பினும், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறீதரனைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும் இதுவரைஎடுக்கப்படவில்லை எனக் கூறி நிலைமையை மென்படுத்தியுள்ளார்.

கட்சிக்குள்ளான இந்த அதிகாரப் போட்டி தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் அரசுக் கட்சிக்குள் நிலவும் இந்த உட்கட்சி மோதல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகள் தமிழ் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது கட்சியின் எதிர்கால ஒற்றுமையைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

https://globaltamilnews.net/2026/227477/

முன்பள்ளிகளின் கற்பித்தல் முறைகள் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - வடக்கு மாகாண ஆளுநர்

1 week 2 days ago

முன்பள்ளிகளின் கற்பித்தல் முறைகள் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது - வடக்கு மாகாண ஆளுநர்

Published By: Vishnu

25 Jan, 2026 | 09:52 PM

image

இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

IMG-20260125-WA0010.jpg

காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9 மணிக்கு  நடைபெற்றது. 

IMG-20260125-WA0009.jpg

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

பிள்ளைகளின் ஆளுமை விருத்தியில் முன்பள்ளிக் கல்வியே முக்கிய பங்காற்றுகின்றது. அதுவே சிறந்ததொரு எதிர்காலச் சமூகத்துக்கான அத்திவாரமுமாகும். பெற்றோர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இடங்களை விட, நல்ல பழக்கவழக்கங்களைப் போதிக்கும் இடங்களிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். சிறுபராயத்தில் அவர்கள் பழகும் நற்பண்புகளே அவர்களைச் சமூகத்தில் சிறந்தவர்களாக வழிநடத்தும்.

IMG-20260125-WA0016.jpg

இலங்கையில் முன்பள்ளிகள் வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கொண்டுள்ளன. இதனைச் சீர்படுத்தி, ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மாகாண சபையால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு போதாது என்பதை நான் அறிவேன். தற்போதைய நிலையில் அதனை உடனடியாக அதிகரிக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் இதனை ஒரு நிரந்தரக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும்.

IMG-20260125-WA0021.jpg

1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்முன்பள்ளி, இன்று மக்களின் பங்கேற்புடன் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எப்போதும் நிலைத்து நிற்கும். காரைநகர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இக்கட்டடம் அமைந்தமை மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். முன்பள்ளியின் எஞ்சியுள்ள தேவைகளை மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

IMG-20260125-WA0020.jpg

பிள்ளையார் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் முன்பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில், சனசமூக நிலையத் தலைவர் நா.பாலகிருஷ;ணன் தலைமையில் இந் நிகழ்வில் நடைபெற்றது.

107 பேரின் 142 லட்சம் ரூபா பங்களிப்பில் இந்த முன்பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/236996

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க

1 week 2 days ago

மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க  

Published By: Digital Desk 3

25 Jan, 2026 | 01:50 PM

image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க  கண்டிக்கு விஷயம் செய்து மல்வத்தை பீடம் மற்றும் அஸ்கிரிய   பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றார்.

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள் தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின்மகாநாயக்கர் வண. வரகாகொடை ஞானரத்ன தேரர் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு  விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார். 

https://www.virakesari.lk/article/236952

வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்

1 week 2 days ago

வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்

Published By: Vishnu

25 Jan, 2026 | 07:38 PM

image

வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர்.

என  வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள சுமார் 1000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திடத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சு.முரளிதரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார பொறிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

கடந்தகால போர்சூழ்நிலை காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள், மற்றும் சரசீஜா ராமன் உள்ளிட்டோர் வழங்க முன்வந்துள்ளனர்.

இலங்கையில் அதிக வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் கிளிநொச்சி, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு, ஐந்தாவது இடத்தில் மன்னார் மற்றும் பதினொன்றாவது இடத்தில் வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக அறிகிறோம். அந்த வகையில் உதவித் திட்டம் முதலில் கிளிநொச்சி, இரண்டாவது முல்லைத்தீவு, அதன் பின்னர் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்ற ஒழுங்கில் வழங்கப்படவுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/236993

யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு!

1 week 3 days ago

யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு!

24 Jan, 2026 | 04:39 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துக்கொண்டார். 

சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026 ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர்  சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

IMG-20260124-WA0039.jpg

IMG-20260124-WA0035__2_.jpg

IMG-20260124-WA0048.jpg

IMG-20260124-WA0040.jpg

IMG-20260124-WA0044.jpg

https://www.virakesari.lk/article/236906

இறுதி யுத்தத்தில் மீட்க்கப்பட்ட தமிழர்களின் நகைகளை ஒப்படையுங்கள்

1 week 3 days ago

இறுதி யுத்தத்தில் மீட்க்கப்பட்ட தமிழர்களின் நகைகளை ஒப்படையுங்கள்

சனி, 24 ஜனவரி 2026 02:50 AM

இறுதி யுத்தத்தில் மீட்க்கப்பட்ட தமிழர்களின் நகைகளை ஒப்படையுங்கள்

இறுதி யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தமிழர்களின் தங்க நகைகளை அவர்களிடம் ஒப்படைப்பதாக தற்போதைய ஆளுங்கட்சி மக்களுக்கு  வாக்குறுதியளித்தது. ஆகவே வழங்கிய வாக்குறுதியை விரைவாக  நிறைவேற்றுமாறு   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம்  வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவ்வாறு உரையாற்றினார். மேலும் தெரிவிக்கையில், 

தமிழர்களின் மீட்கப்பட்ட தங்க நகைகளை  அவர்களிடம் ஒப்படைப்பதாக  2024 ஆண்டு ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் காலங்களில்  தற்போயை ஆளும் கட்சி  பகிரங்கமாக  குறிப்பிட்டிருந்தது.

தேர்தல்கள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் இருக்கும் தமிழ் மக்களுக்கு எந்த மகிழ்ச்சியான செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை.

தங்களின் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மனநிலையை இந்த அரசு மனிதாபிமானத்தோடு கரிசனை கொள்ளுமா? வடக்குக் கிழக்கில் இவ்வாறு தமிழ் மக்களிடம் எடுக்கப்பட்ட தங்கநகைகள் எத்தனை கிலோ பவுண்?,நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இம்மக்களின் தங்க நகைகள் எப்போ அவர்களிடம் மீள வழங்கப்படும்?

இந்த தங்க நகைகளை மீள அம்மக்களிடம் ஒப்படைப்பதற்கான ஏதாவது ஒரு வேலைத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதா? மொத்தமாக வடக்கு,  கிழக்கில் இவ்வாறு தமிழீழ வைப்பகத்தில் தங்கநகைகளை அடகு வைத்தோரின் விபரங்களையாவது உங்கள் அரசுமேற்கொண்டு வெளியிடுமா?

தங்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகளில் இத்தங்க நகை விடயம் முக்கியத்துவம் பெறுவதால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க தாங்கள் எடுத்துள்ள துரித நடவடிக்கைகள் என்ன? என  கேள்வி  எழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு வாரகால அவகாசம் தேவையென அரச தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரினார்.

https://jaffnazone.com/news/54524

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல் வன்முறைகள் : சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்!

1 week 3 days ago

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல் வன்முறைகள் : சர்வதேச பொறுப்புக்கூறல் அவசியம்!

January 24, 2026

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறலை அவசியம் என்பதை கனேடிய தமிழர் தேசிய பேரவை (National Council of Canadian Tamils – NCCT) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 13, 2026 அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்ட “We Lost Everything – Even Hope for Justice: Accountability for Conflict-Related Sexual Violence in Sri Lanka” என்ற அறிக்கையை மேற்கோள் காட்டி,  இலங்கையில் யுத்தக காலத்தில் பாதுகாப்புப் படைகளால் தமிழர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கனேடிய தமிழர் தேசிய பேரவை ( NCCT ) தெரிவித்துள்ளது.

1985 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட நேரடி கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாலியல் வன்முறை என்பது அச்சுறுத்தல், தண்டனை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான ஆயுதமாக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

காவல் நிலையங்கள், தடுப்பு முகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் வீடுகளிலேயே கூட தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் கடுமையான பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்முறைகள் காரணமாக உடல் மற்றும் மனநல பாதிப்புகள், குடும்ப அமைப்புகள் சிதைவு, சமூக ஒதுக்கல், வறுமை, நீண்டகால நோய்கள், இனப்பெருக்க பாதிப்புகள் போன்ற பல விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடரும் மனஅழுத்தங்களாக (Intergenerational Trauma) மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலியல் வன்முறைகளுக்கு காரணமான எவரும் இதுவரை சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை என்றும், இலங்கையின் அரசின் உள்ளக விசாரணை முறைகள் நம்பகமான நீதியை வழங்கத் தவறியுள்ளதாகவும் கனேடிய தமிழர் தேசிய பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

இதனால், முழுமையாக சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், சுயாதீனமான, நம்பகமான விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அமைப்பு ஒன்றே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள், கனடா அரசு மற்றும் சர்வதேச சமூகத்தினர் இணைந்து உடனடி, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு,

மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழர் இன அழிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என கனேடிய தமிழர் தேசிய பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் இலங்கை அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும் யுத்த காலத்தின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/wartime-sexual-violence-against-tamils-in-sri-lanka/

மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்- 23 நாட்களில் 16 பேர் உயிர்மாய்ப்பு!

1 week 3 days ago

மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்- 23 நாட்களில் 16 பேர் உயிர்மாய்ப்பு!

Vhg ஜனவரி 24, 2026

AVvXsEgtCJeGKTTYUbaX-nUTv6pvnv3rRFkMDyqahNorqXoWheMOALPdH2L_zPauUbJNnMmUVXNIwE-J30FR01Ll5o_5EhVFY6LoOkQi9XuaJRLMkj03K-RfP08LiS_w2DBPZULfXFBGBv5Wxn2iF1MGctPM2dR2qRboYjnlSwnKgrIiJkpRGv77c00TTaMpGxuR

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றயைதினம் (23.01.2026)தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

உடனடியாகச் செயற்பட்ட மீனவர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து, படகு மூலம் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர் எனவும், காதல் விவகாரம் காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அதேவேளை இந்த வருடத்தின் ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (23) வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 3 இளம் யுவதிகளும், 75 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.battinatham.com/2026/01/23-16.html

நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது

1 week 3 days ago

நிந்தவூரில் சிறுமி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் - தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது

24 Jan, 2026 | 01:23 PM

image

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர்  பகுதியில் சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில்  சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.இந்த கைது நடவடிக்கையானது கடந்த புதன்கிழமை (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த   தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தலைமைறைவாகிய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவத்துடனான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த  தவணை நடைபெற்ற போது  விளக்கமறியலில் வைக்கப்பட்ட  தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்கள்  ஒரு சந்தர்ப்பத்தில் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி 4 சந்தேக நபர்களையும்  அடையாள அணிவகுப்பில் சரியாக இனங்காட்டினார். பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி பாதுகாப்பு கருதி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் இறுதியாக வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதான சந்தேக நபர் கல்முனை குடி பகுதியை பிறப்பிடமாகவும்  அக்கரைப்பற்று பகுதியை  வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர்  என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர்  இன்று  உரு  மறைக்கப்பட்ட நிலையில்   சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில்   ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 2 ஆந் திகதி  அடையாள அணி வகுப்பிற்கு   உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான்  வழக்கினை மறு தவனைக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன்  முறைப்பாட்டுக்காரரான 12 வயது மதிக்கத்தக்க  சிறுமியினால் கூறப்பட்ட பெயர்கள் யாவும் சந்தேக நபர்களின் பட்டப் பெயர்கள் ஊர்களில் அழைக்கப்படுகின்ற பெயர்கள்  ஆகையினால் தான் எஞ்சிய சந்தேக நபர்களை  கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இருந்தும் பல  சிரமங்களுக்கு மத்தியில் எஞ்சிய சந்தேக நபர்களை பல்வேறு தரவுகளை பெற்று  கைது செய்வதில்   பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக  எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான்  தெரிவித்தார்.

இக்கைது நடவடிக்கையின் போது அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண ஆலோசனைக்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில்  பெருங்குற்றப் பிரிவு   பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழு பல்வேறு தரவுகளை சேகரித்து வைத்து எஞ்சிய 2 சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர்  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுமார் 5 மாத காலமாக விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின்  1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று   வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார்  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு அதிகாரிகளிடம்  சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட  சிறுமியை நிந்தவூர் பொலிஸ்  நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக  அதிகாரிகளிடம் நடந்த அனைத்தையும் குறித்த  சிறுமி கூறியுள்ளார்.

இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக  12 வயது மதிக்கத்தக்க தனது மகளை முதலில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை பின்னர் சம காலத்தில் ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்து வந்தமையும்  பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2025.12.11 அன்று  தந்தை உட்பட 5 பேரை கைது செய்த பொலிஸார்  தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேக நபர்களை   தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் அச்சிறுமியிடம் இருந்து  பெறப்பட்ட தகவலின்படி  முதலில் தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர் சாய்ந்தமருது மாளிகைக்காடு  சம்மாந்துறைப்  பகுதியில் அச்சிறுமியை  பணத்திற்கு வாங்கி வன்புணர்ந்த   04 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் 52 , 41, 24, 40 , வயதிற்குட்பட்ட சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர்.

மேலும் தந்தை தனது மகளை  சுமார் 05 மாத காலமாக பல்வேறு நபர்களுக்கு விற்று வந்ததாக  பொலிஸ்  ஆரம்ப கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

இது தவிர இச்சம்பவத்தில் தலைமறைவான ஏனைய மூன்று சந்தேக நபர்களையும்  கைது செய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் வழிநடத்தலில்    அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் மேற்பார்வையின் கீழ்  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே நெறிப்படுத்தலில்  பெருங்குற்றப் பிரிவு   பொறுப்பதிகாரியும் உப  பொலிஸ் பரிசோதகருமையான கே.எல்.எம் முஸ்தபா  தலைமையிலான பொலிஸ் குழு  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி  தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள்  இணைந்து குறித்த  கைது   நடவடிக்கை  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பகுதியில் வசித்து வந்த ஐவர் கொண்ட இக்குடும்பம் பொருளாதார நிலைமை காரணமாக அவ்விடத்தில் இருந்து குடிபெயர்ந்து அருகில் உள்ள மற்றுமொரு ஊரான  நிந்தவூர் பகுதியில் உள்ள புறநகரில்  வாடகை அடிபபடையில் வீடொன்றை பெற்று வாழ்ந்து வந்தனர்.இக்குடும்பத்தில் 18 வயது ஆண் 12 வயது பெண் பிள்ளை உட்பட  5 வயது ஆண் பிள்ளையும் உள்ளடங்குகின்றனர்.

இதில் 18 வயது ஆண்  பிள்ளை உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஊடாக கல்வி கற்று  வருகின்றார். இச்சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளையே  பாதிக்கப்பட்டவராவார்.சிறுமியின் தந்தை கடற்தொழில் செய்பவர் ஆவார்.தந்தைக்கு 40 வயது என்பதுடன் தாய்க்கு 36 வயதாகும்.ஆரம்ப காலத்தில் தந்தையுடன் தொழில் உறவில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் முறைகேடான தொடர்புகளை தந்தையின் சம்மதத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

இத்தொடர்புகள் தங்களது வசதியின்மையை காரணம் காட்டி  பொருளாதார நன்மைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்த போதிலும் மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமாகி பின்னர் வாடகை வீடு அமைந்துள்ள நிந்தவூர் வீட்டிலும் குறித்த விபச்சாரம்  தொடர்ந்தமை விசாரணையில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தான் குறித்த குடும்பத்தில் இருந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுமியும்   ஆபாசப்படம் காண்பிக்கப்பட்டு தனது தந்தை மூலம்  பாலியல் துஷ்பிரயோகம்  செய்யப்பட்டுள்ளார்.பின்னர்  ஏனைய சந்தேக நபர்களுக்கும் சிறுமி  பணத்திற்காக விற்கப்பட்டிருந்தார்.

இச்செயற்பாடுகள் தாயின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றமை விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.இதன் போது வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடம் இருந்தும் 20 ஆயிரம்,  10 ஆயிரம்,  2 ஆயிரம்  என பணம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை  பாலியல் துஷ்பிரயோகம்  செய்த   தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் கைது செய்யப்பட்ட நிலையில்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று   குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் உடனடியாக கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் குறித்த சம்பவத்துடனான  வழக்கு கடந்த தவணையின் போது   சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் இரு தடவை   விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதில்  தந்தை  உட்பட 5 சந்தேக நபர்களும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் மற்றுமொரு  சந்தர்ப்பத்தில்  சந்தேக நபர்களான    தந்தை தாய்  தவிர ஏனைய 4 சந்தேக நபர்களையும்  அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை    குறித்த சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி அந்த 4 சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/236893

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு

1 week 3 days ago

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளைப் பேணத் தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகப் பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது, மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவைக் கையாண்டமை, திண்மக்கழிவுகளைத் திறந்த வெளியில் வீசியமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தரக் கொள்கலன்களைப் பயன்படுத்தாது பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவைக் கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இதனடிப்படையில் ஐஸ்கிரீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள், காரச் சுண்டல் வண்டிகள் மற்றும் பானி பூரி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 24 உணவு நிலையங்களுக்கு எதிராக, வல்வெட்டித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் பா. தினேஷ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்தார். 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 24 உரிமையாளர்களில் 19 பேர் மன்றில் முன்னிலையாகி, தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். 

இதனையடுத்து, குறித்த 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த மன்று, அவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. 

அதேவேளை, மன்றில் இன்று முன்னிலையாகாத ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmkr6x3ny04byo29nxw86k2co

யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம்

1 week 3 days ago

யாழ். சுழிபுரத்தில் வெளியேறிய இராணுவம்

யாழ். - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார்.

அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (M)

https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-சுழிபுரத்தில்-வெளியேறிய-இராணுவம்/175-371486

பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!

1 week 3 days ago

பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!

adminJanuary 23, 2026

pp3.png

குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங்குவதில்லை. ஆனால், அவசரமாக வந்து பல மணிநேரம் தங்கியிருந்து தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவார்.

‘ஹசினி’ என்ற பெண்ணும் அங்கு வந்து தங்குவதாகக் குறிப்பிட்ட தேரர், அந்த கிராமத்து மக்களுக்கே இப்படியொரு அறை இருப்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அந்த விகாரையில் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் மகிந்த ராஜபக்சவே திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227331/

என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்

1 week 4 days ago

என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்

23 Jan, 2026 | 04:16 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன்.ஜனாதிபதியாகும் கனவு காணும் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்துக்கு ஆடையணிந்துக் கொண்டு வருவாராயின் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன்  நிரூபிக்க வேண்டும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தால் தான்  என்மீது எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற  பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (நேற்று முன்தினம்) எனது பெயரை குறிப்பிட்டு  பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.  இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

தயாசிறி ஜயசேகர  2026.01.08 ஆம் திகதியன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான எஸ்.சிறிதரனை  அரசாங்கம் பயன்படுத்துகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க   வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ' தமிழ் சிலோன்' என்ற வலைத்தளத்தில் இந்த செய்தி முழுமையாக வெளியாகியிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு வசிப்பதற்கு  இடமில்லை ஆனால் சிறிதரன் 1200 ஏக்கர் காணியை தன்வசப்படுத்தியுள்ளார். அதேபோல் சுமார் 7 கோடி ரூபா நிதியை  சிறிதரனும் அவரது மகனும் வைப்பிலிட்டுள்ளார்கள் என்று  தயாசிறி ஜயசேகர சபையில் குறிப்பிட்டிருந்தார்.

பூநகரி மின்னுற்பத்தி திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார். எனது 16 ஆண்டுகால பாராளுமன்ற பயணத்தில் நீதியாகவும்இ நீதியாகவும் செயற்பட்டுள்ளேன்.அரசியலமைப்பு பேரவையில் நீதியாகவும், சுயாதீனமாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துள்ளேன். எவரும் என்னை நிர்பந்திக்கவில்லை. அரசாங்கத்துக்கு வால் பிடித்து அவர்களுக்கு சார்பாக செயற்பட வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

பல கட்சிகளுக்கு தாவிச் செல்லும் தயாசிறி சிரேஷ்ட அரசியல்வாதியாவார். அவர் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் தவறானது.  எந்த வங்கியில், யாரால், எப்போது நிதி வைப்பிலிடப்பட்டது என்பதை தயாசிறி குறிப்பிட வேண்டும்.

தயாசிறி ஜயசேகர  சிங்கள பௌத்த அரசியல்வாதி மற்றும் நியாயமானவர் என்றால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் என்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.உண்மையில் அவர் ஆடையுடன் தான் பாராளுமன்றத்துக்கு வருகிறார் என்றால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன்  நிரூபிக்க  வேண்டும் என்று உயரிய சபையில் வலியுறுத்துகிறேன்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 2025.07.25 ஆம் திகதியன்று 'சிவில் புத்தி பெரமுன' என்ற அமைப்பின் உறுப்பினரான சஞ்சய் மாவத என்பவர் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்தார் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்  இந்த  முறைப்பாடு தொடர்பில் என்ன முறைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.  ஏன் அறிக்கை வெளியிடவில்லை.

அதேபோல் 2025.12.31 ஆம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் இவ்விடயம்    தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரையில்  விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. பூநகரி மின்திட்டம் தொடர்பில் அப்பிரதேசத்தின் அரசாங்க அதிபர், அரச அதிகாரிகளை ஏன் இதுவரையில் விசாரிக்கவில்லை. தயாசிறி ஜயசேகரவிடம் தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

தன்னை சிரேஷ்ட அரசியல்வாதியாக காட்டிக் கொள்ளும் தயாசிறி ஜயசேகர ஏன் பொய்யுரைக்க வேண்டும். தயாசிறி ஜயசேகர அண்மையில் என்னுடன் உரையாடும் போது ' எதிர்வரும் ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.வடக்கு மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்களா' என்று கேட்டார். ' உங்களின் முகம் தமிழர்களுக்கு பரீட்சயமானது அல்ல ஆகவே முதலில் வடக்கு மாகாணம் உட்பட தமிழ் மக்களுடன் பழகுங்கள்' என்று அவருக்கு பதிலளித்தேன்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நியாயமற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பமிடுமாறு குறிப்பிட்டார்கள். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் .  எனது கட்சியும் அவ்வாறே குறிப்பிட்டது.  எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு ஏதும் பேசலாம்,சேறுபூசலாம் என்பது நியாயமற்றது.  கிபுல் ஓயா திட்டம், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்,  தையிட்டி விவகாரம் பற்றி சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர ஏன் பேசவில்லை.

சிறிதரன் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என்று கத்துகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் 2  இலட்சம் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் சலூன், முன்பிள்ளை பள்ளி நடத்துகிறார்கள். திறந்தவெளி சிறைச்சாலையாக யாழ்ப்பாணம் இருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி தான் இடம்பெறுகிறது. தயாசிறி, சஜித் ஆகியோர் ஏன் இதுபற்றி பேசுவதில்லை.

இராணுவ அதிகாரி நியமனத்துக்கு சிறிதரன் ஆதரவளித்து விட்டார் என்று குறிப்பிடுகிறார்கள்.  2024.01.21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தேர்தலில் .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள டி.பி.எஸ். ஜெயராஜ்' சிறிதரன் ஒரு பிரிவினைவாதி அவர் சமஸ்டி கோருகிறார்' என்று எழுதியுள்ளார். சிங்கள மக்களிடம் நான் பிரிவினைவாதி என்று குறிப்பிடுகிறார்கள். தமிழர்களிடம் நான் இராணுவ அதிகாரி நியமனத்துக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார். நான் யாருக்குரியவன் என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.

நான் சிங்கள மக்களுக்கும் எதிரி, தமிழ் மக்களுக்கும் எதிரி என்கிறார்கள். இதன் பின்னணியின் நிகழ்ச்சி நிரல் என்ன,? தயாசிறி ஜயசேக,சாமர சம்பத் கூறுவதென்ன,2011. பங்குனி மாதம்  அநுராதபுரம் உடுக்குளம் பகுதியில் கோட்டபய ராஜபக்ஷ  தனது இராணுவ குழுவை வைத்து என்மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார். நான் மயிரிழையில் தப்பினேன்.

2013 ஆம் ஆண்டு எனது அலுவலகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டு எமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். அதே காலப்பகுதில் எமது அலுவலகத்தில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் .இருக்கும் போது 500 பேர் சிங்க கொடியுடன் வந்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். தயாசிறி ஜயசேகர இதுபற்றி ஏன் பேசவில்லை.சாமர சம்பத்,அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அப்போது ஏன் பேசவில்லை. ஏன் என்னை தற்போது இலக்காக கொண்டு என் மீது பாய்கிறார்கள்.

என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன்.

என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏன் முறையாக விசாரிக்கவில்லை. அரசாங்கத்தின் பலம் என்ன? அரசாங்கமும் எனக்கு எதிராக செயற்படுகிறது. எதிர்க்கட்சியினரும்,எம்மவர்களும் என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை வெளிப்படுத்துங்கள். என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/236821

மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துக - அதிகாரிகளுக்குப் ஆளுநர் பணிப்புரை!

1 week 4 days ago

மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துக - அதிகாரிகளுக்குப் ஆளுநர் பணிப்புரை!

Published By: Vishnu

23 Jan, 2026 | 07:04 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

IMG-20260123-WA0099.jpg

மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால்,  தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (23) மாலை நடைபெற்றது.

IMG-20260123-WA0100.jpg

மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன உரிய வகையில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனை மாற்றியமைத்து, அப்பகுதியை முழு அளவில் இயக்குவதற்கான திட்ட வரைபு நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டு, இக்கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டது.

IMG-20260123-WA0093.jpg

சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன.

IMG-20260123-WA0096.jpg

பேருந்து நிலையத்துக்கான போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான இணைப்பு வீதிகள் அமைத்தல். மாங்குளத்தை மையப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகளை எதிர்காலத்தில் வினைத்திறனாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துதல்.

IMG-20260123-WA0095.jpg

பேருந்து நிலையத்துக்காகத் திட்டமிடப்படும் வீதி, மாங்குளம் ரயில் நிலையத்திற்குரிய காணி எல்லைக்குள் வருவதால், ரயில்வே திணைக்களத்தின் அனுமதியை விரைவாகப் பெற்றுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்ட முன்மொழிவை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெறுமாறும் ஆளுநர் இதன்போது பணிப்புரை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், ரயில்வே திணைக்களப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/236840

மன்னார் - எலுவங்குளம் - புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி கையெழுத்து வேட்டை

1 week 4 days ago

எலுவங்குளம் - புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி கையெழுத்து வேட்டை

Jan 23, 2026 - 07:32 PM

எலுவங்குளம் - புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி கையெழுத்து வேட்டை

மன்னாரிலிருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (23) காலை மன்னார் பேருந்து நிலையத்தில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மன்னார் - எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவினால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்கு விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்ட மதத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வீதி திறக்கப்படுவதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த வட பகுதி மக்களும் நன்மையடைவார்கள்" என்று தெரிவித்தனர். 

மேலும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரும் தென்பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொள்ளவும், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

மன்னார் மாவட்ட மக்களிடம் சேகரிக்கப்படும் இந்தக் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmkqyact304bqo29njn0qgd08

கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

1 week 4 days ago

கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

Jan 23, 2026 - 02:46 PM

கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. 

இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன. 

12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 

75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கிழக்கு முனையத்தின் மொத்த நீளம் 1320 மீற்றர்களாகும். 

அதில் 1090 மீற்றர் பகுதியும் ஏனைய நிர்மாணப் பணிகளில் 82% ஆனவையும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

2025 ஆம் ஆண்டில் கிழக்கு முனையத்தின் ஊடாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், முழுமையான நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் 1.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும். 

கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் துறைமுக அதிகார சபையின் கண்காணிப்பு மற்றும் முதலீட்டின் கீழ் இந்த கிழக்கு முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. 

கிழக்கு முனையம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலைமையின் அடிப்படையில் உருவான எதிர்ப்புகளுக்குப் பின்னரே இது இடம்பெறுகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.

https://adaderanatamil.lk/news/cmkqo1tdn04b7o29n7ve7zaf3

மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை

1 week 4 days ago

மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை

Published By: Digital Desk 3

23 Jan, 2026 | 04:15 PM

image

இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது 2025 பெப்ரவரி மாதம் முதல், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பெரிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மின் விநியோகத்தை மின்சார சபை கட்டுப்படுத்தி வருகின்றது.

இதனை ஒரு அவசர நிலை என்று மின்சார சபை கூறினாலும், நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை மின் கொள்வனவு ஒப்பந்தங்களை (PPA) மீறும் செயல் எனவும், இதனால் உற்பத்தியாளர்களின் மாத வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி குறைக்கப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேர உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவதற்கான மின்கல சேமிப்பு முறைமைக்கு (BESS) அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியுள்ள போதிலும், மின்சார சபை அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான செயலாக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு காரணமாக, உள்நாட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரியளவிலான டாலர்களைச் செலவழித்து டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய மின்சாரக் கொள்கையானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்களை இத்துறையிலிருந்து முற்றாக வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளதாகச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள உள்ளீட்டு கட்டண (FIT) முறையை ஒழித்து போட்டி ஏல முறையைக் கொண்டு வருவது மற்றும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நிபந்தனைகள் முதலீட்டாளர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனங்களுக்கு முரணாக மின்சார சபை எடுத்து வரும் இத்தகைய முடிவுகளால், இத்துறையில் முதலீடு செய்துள்ள பல தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் நாட்டின் வங்கி முறைமையில் செயலிழந்த கடன் நெருக்கடியை (NPL) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மின்கல சேமிப்பு முறைமைக்கான ஒப்பந்தத் திருத்தங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், ஒப்பந்தங்களை மீறி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான உற்பத்தித் தடையை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 2030 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இலக்கை அடைவதற்குத் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதால், அரசாங்கமும் மின்சக்தி அமைச்சும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/236817

அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்

1 week 5 days ago

அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்

January 23, 2026

மட்டக்களப்பு  ஏறாவூர் பற்று செங்கலடி சபை  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22)  தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது முக்கிய பிரச்சனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன.

அனுமதியற்ற செயற்பாடு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தின்படி, உள்ளூர் அதிகார சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபையின் அனுமதி அவசியம். ஆனால், தொல்பொருள் திணைக்களம் எவ்வித ஆலோசனையுமின்றி இப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

தொல்பொருள் இடங்களாகக் கூறி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சந்திகளிலும் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் 56 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறி, மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்பாக மேலும் தெரிவித்த நிலாந்தன் நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றிய வர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னர் இருந்த  எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.வவாநந்தன் தமது கடும் கண்டனமான முறையில் தனது வாதத்தை அரசின் செயற்பாட்டிற்கு எதிராக முன்வைத்தார்.

மேலும் சபையில் தொல்பொருட்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, நுணுக்கமான முறையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் என்றும் இதன்போது  விமர்சிக்கப்பட்டது.

முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களின்றி நாட்டப்பட்ட பலகைகள் குறித்து விளக்கம் அளிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாக் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அடையாளப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதோடு, தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சபை  தீர்மானித்துள்ளது.

தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் அவை சட்ட ரீதியாகவும், மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சபையின் நிலைப்பாடாக உள்ளது என்றார்.

இதன் போது சட்ட ரீதியாக பெயர்ப்பலகைகளை அகற்றுவது தொடர்பாக உறுப்பினர்களது ஆதரவுடன் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/resolution-to-remove-archaeological-signs-placed-without-permission/

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr