24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்கள ஜேர்மன்/சுவிஸ் நிருபரிடம் இருந்து மேலும் தகவல்களை எதிர்பார்கிறோம்🙏
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
சமாதான ஜனாதிபதி 😂😂😂 தம்பருக்கு ஒரு நல்ல ஆலோசனை… பேசாமல் வெக்கத்தை கக்கத்துக்க வச்சுகொண்டு, உக்ரேனிடம், டிரோன் எதிர்ப்பு, 2வது பெரிய 😂😂😂 இராணுவத்தை எப்படி ஓட விட்டு அடிப்பது என்பதை பற்றி கோமாளி😂😂😂 செலன்ஸ்கியிடம் ஆலோசனை, உதவி கோரினால், சண்டையில் சுளுவாய் வெல்லலாம். ஆனால்…உதவி கேட்க போகும் போது கோர்ட் சூட் போட்டு போக வேணும் சென்ஸ்சிக்கு நன்றி சொல்ல வேண்டும் புஹா ஹா ஹா 😂
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
காலை 5 மணிக்கு நடந்த சம்பவம் போல் தெரிகின்றது. வேலைக்குப் போன ஆட்களாக இருக்கலாம்.
-
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
தலைவா… வந்துட்டியா? இவனுகள் எல்லாம் உன்னை டீமில சேர்கிறானுகளே இல்ல தலைவா… ஜப்பானுக்கு ஒரு ரொக்கெட் அனுப்பி இருருக்கியாம் தலவா… இப்ப இவங்களுக்கு தெரியும் நாங்க யார் எண்டு 😂 என்ன இருந்தாலும் செம்பளவத்தின் பேரன் அல்லவா😂 முடிந்தால் தம்பர் ல கைவையுங்கோ பார்க்கலாம் 😂
-
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
காத்தான்குடி தலிபான்களுக்கு... ஈரானில் இருந்து ஆயுதங்கள் வந்து இறங்கி உள்ளது போலுள்ளது.
-
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
அப்படியா. நான் பிழையாக வாசித்துள்ளேன். நன்றி. இந்தளவு குறைந்த வீரர் எனில் அது இந்த தீவுக்குத்தான் என நினைக்கிறேன்.
-
சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!
இவர்... தனக்குத்தானே தீ வைத்தார் என்று, எந்த ஊடகத்திலும் வரவில்லை. மேலுள்ள செய்தியில் கூட... "குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர்" தீ ... வைத்ததாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மை எது என்று தெரியவில்லை. அதே நேரம் அந்த பேரூந்தில் பயணித்த, வேறு தமிழ்ப் பெண் ஒருவரும் தீகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக சில செய்திகளில் உள்ளது.
-
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
2500 படைவீரர்கள் என நினைவு அண்ணை.
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
எடப்ஸ் 2017-2021 வரைதான், 4 வருடம் மட்டுமே முதல்வர். எந்த தேர்தலிலும் இன்னும் இவர் தலைமையில் கட்சி/கூட்டணி வெல்லவில்லை. ஐயோ பாவத்த.. சீமானுக்கு கூட தலைவர் பெயரை பயன்படுத்துவது காரணமாக எமோஷனலா முட்டு கொடுப்பது புரிந்துகொள்ள கூடியது… சசியின்கால், ஜெயிம் டயர் ரில் எல்லாம் விழுந்து முதலமைச்சர் ஆன, “கூவத்தூரில்” “ஒருங்கிணைப்பு” செய்து ஆட்சியை பிடித்த எடப்பாடி மாமாவுகெல்லாம் முட்டு கொடுப்பது காலக்கொடுமை😂. கண்மூடித்தனமாக ஒன்றை (திமுக) எதிர்க்க வேண்டும் என்ற முடிவில் பலர் வாழ்க்கையில் இப்படித்தான் கடைசியில் முட்டு சந்தில் போய் நிற்பார்கள். இன்னொரு அண்ணை புட்டினுக்கு முட்டு கொடுக்க போய், கடைசியில் புலிகள் விடயத்தில் இந்தியா செய்தது சரியே எண்டு ஒரு முட்டு சந்தில் வந்து நிண்டார்😂. இதுவும் அப்படி ஒரு முட்டுச்சந்தே.
-
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை! Mar 14, 2026 - 03:58 PM ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரை இலக்கு வைத்தால், அமெரிக்கா 'கடுமையான பழிவாங்கலுக்கு' முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்யாவிற்கான ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, ஈரானிய தூதுவர் காசெம் ஜலாலி, தஹ்ரானின் புதிய உயர்மட்டத் தலைவரான மொஜ்தபா காமெனியை படுகொலை செய்ய முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மொஜ்தபாவின் தந்தையான அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், ஈரானிய மக்கள் "இரத்தத்திற்கு இரத்தம் பழிவாங்குவதை" எதிர்பார்ப்பதாக ஜலாலி மேலும் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmmq6l92y000e356pbllwi7oj
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
அன்று அவர் தவழ்ந்து.. முதல் அமைச்சராக பதவி பெற்று இருக்காவிடில், அடுத்த சில மாதங்களில், அரசியலில் இருந்தே காணாமல் போயிருப்பார். அதன் பின் அவர் இரண்டு முறை முதலமைச்சராக 10 வருடங்கள் இருந்தது ஒரு சாதனைதான். அரசியலில் அதிரடி முடிவை எடுப்பவர்கள்... உயர் பதவிக்கு சென்ற வரலாறுகள் பல. அதில் இதுவும் ஒன்று. அம்புட்டுத்தான். 😂
-
‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
மத மூடத்தனங்களில் சிக்கி, ஒவ்வொரு பெளர்ணமிக்கும் விடுமுறை கொடுத்து, உலகில் அதிக விடுமுறை உள்ள நாடாகி, பொருளாதாரத்தில் பிந்தங்கி நிற்கும் முட்டாள் தேசம் இலங்கை. இப்போ அதில் சில முட்டாள்தனங்களை புதிய அரசு கைவிட முயல்கிறது. அதன் ஒரு அங்கம்தான் இந்த குழுவை புதுப்பிக்காமை. இதை எதிர்த்துத்தான் பிக்குகள் விகாரையில் கூடுகிறார்கள். இலங்கை அரசாங்கம் செய்யும் இனகுரோதம் உட்பட்ட மட வேலைகள் எதையும் யாழ்களம் செய்வதில்லை, எதிர்க்கும், தடுக்கும் என்பது - யாழ்களத்தின் 28 வருட பெருமை மிகு பாரம்பரியத்தின் மிக முக்கிய அம்சம். வாழ்த்துக்கள் நிர்வாகம்.
-
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான மர்மப்பொருள் கரையொதுங்கியது: பொதுமக்கள் ஆர்வம்! 14 Mar, 2026 | 04:08 PM மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை கரையொதுங்கியுள்ள இந்த மர்மப்பொருள், சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்டதாகக் காணப்படுகிறது. இது முழுமையாக 'ரெஜிபோம்' (மென்புடைப்பு மீள்மம்) எனப்படும் ஒருவகை இலகுவான பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் கரையில் தரைதட்டும்போது அல்லது துறைமுகங்களில் நங்கூரமிடும்போது, கப்பலின் மேலோட்டிற்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புத் தடுப்பாக இது இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். தற்போது காத்தான்குடி கடற்கரையில் காணப்படும் இப்பொருளைப் பார்வையிடுவதற்காகப் பெருமளவிலான பொதுமக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/240951
-
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை Mar 14, 2026 - 02:25 PM பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது. வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது 'அதிக அவதானம்' செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmq3aokq000b356p1wq6hcdn
-
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
ஈரானின் எண்ணை வளத்தில் 90% இங்கே இருந்து வருகிறதாம். இதில் எண்ணை எடுக்கும் தொழில்சார் கட்டமைப்பை உடைத்து விட்டால் அதை மீள கட்டி எழுப்பவே 5-10 வருடம் தேவைப்படுமாம். அதுவும் ஈரான் மீதுள்ள பொருளாதார கெடுபிடிகளின் மத்தியில், இதை அழித்து விட்டால் கிட்டதட்ட ஈரான் இனி ஆயில் ஏற்றுமதி (களவாக கூட) பண்ண முடியாது போகுமாம். இப்போ உள்ள கட்டமைப்பு 60/70 களில் BP கட்டியதாம். ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை அச்சுறுத்தினால், நாம் இதை கையில் எடுப்போம் என அமெரிக்கா மிரட்டுவதாக படுகிறது. கள்ளமாக கிடைக்கும் எண்ணை வருவாய் இல்லை என்றால் ஈரானின் ஆயுத வல்லமையும் கூட கேள்வி குறியாகும். இதை அழிக்காமல் விட்டு வைத்து, பேச்சுக்கான கதவை அமரிக்கா திறந்து வைக்கிறது. ஆனால் 45 கிலோ 60% செறிவாக்கபட்ட யுரேனியத்கை திருப்பி கொடுக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனையாக இருக்கும் என நினைக்கிறேன். அது ஈரானுக்கு சாத்தியமில்லை. 20,000 தரை இறங்கும் துருப்புக்களை கொண்ட தரையிறக்கி கப்பலை அமெரிக்கா வளைகுடா அனுப்புகிறது. இந்த தீவு அல்லது தெஹ்ரானில் இறங்க என நினைக்கிறேன். தெஹ்ரானில் கடல் இல்லை. எனவே இந்த தீவுதான் இலக்காக இருக்கும். நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை அவ்வளவு இலகுவில் விசேட படைகள் மூலம் எடுக்க முடியாது. ஏதோ ஒருவகையில் பேசித்தான் எடுக்க வேண்டும். அந்த பேச்சுக்கான துருப்புசீட்டில் ஒன்றே இந்த தீவு.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
போர்க்கப்பல் மீதான தாக்குதல் - பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான் Mar 14, 2026 - 02:05 PM ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதில் வழங்கப்படும்" என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார். போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியான தீர்மானத்துடன் செயற்படுவதாக ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmmq2lsov000a356p76whnj2i
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில் 5 அமெரிக்க விமானங்கள் சேதம் 14 Mar, 2026 | 01:00 PM ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை தொடர்ந்து குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்திய தாக்குதல் சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படைதளம் மீது நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலில் அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் 5 விமானங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை, அவை தற்போது பழுதுபார்க்கப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் போது, அமெரிக்காவின் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 6 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஈரான் தன் தாக்குதலால் விமானம் வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் எதிரிகளின் தாக்குதலால் அல்ல, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா எதிர்வரும் நாட்களில் ஈரான் மீது கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். மேலும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய தளமாக விளங்கும் கார்க் தீவு மீது இன்று நடைபெற்ற தாக்குதலில் அங்கு உள்ள இராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/240938
-
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார். நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது . சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப் பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது. கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுகிறது.இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றனர். https://athavannews.com/2026/1468417
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
சீமானே திராவிட கட்சி ஜெயலலிதாவுக்கு தான் வாக்கு கேட்டிருக்கின்றார் அப்போதே தொடங்கிவிட்டது தமிழ்நாட்டில் அனைத்தும் திராவிடம் தான் என்பது இப்போது நாம் தமிழர் காளியம்மாள் தவழும் திராவிட தமிழனை தலைவராக ஏற்றிருக்கின்றார் .
-
‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
அரசாங்க கலாச்சார அமைச்சே... சுபநேரக் குழு என்று, ஒரு அமைப்பை நடத்தி வந்துள்ளது. யாழ் களத்தில் தான்... சாத்திரம், சம்பிரதாயம், சுப நேரம் என்று.... திராவிட பெரியார் வழித்தோன்றல்களின் "அலப்பறை" தாங்க முடியவில்லை. 🤣
-
இந்துக்கல்லூரிகளின் சொற்சமர்
அந்தக்காலத்தில் இருந்து இன்றுவரை அருமையான அரசியல் அலசல் ...... இளந்தலைமுறையின் அரசியல் அறிவு சிறப்பாக இருக்கு .......! பகிர்வுக்கு நன்றி செந்தமிழாளன் 25........! 👍
-
போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?
தம்பி (நாலரை வருடமாக) அந்த வடை இன்னும் வர்ல😂
-
ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு வீச்சு : உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் அதிகரிப்பு
வெறும் 20 சகிமீ பரப்பே உள்ள மிகச்சிறிய 'கார்க்' தீவு இரானின் உயிர் நாடி என்று கூறப்படுவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபர்ஸாத் சைஃபிகிரன் பிபிசி செய்தியாளர் 14 மார்ச் 2026, 07:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சற்று நேரத்திற்கு முன்பு, எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவு இரானின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது." என்று கூறியிருக்கிறார். தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த செய்தியைப் பதிவிட்ட டிரம்ப், தற்போதைக்கு "மனிதநேயம் மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக, இந்தத் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று எழுதியுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு டேங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இஸ்ரேலியப் படைகள் இதுவரை டெஹ்ரானில் உள்ள ரய் (Rayy), ஷஹ்ரான் மற்றும் அக்டிசியே ஆகிய எண்ணெய் கிடங்குகளையும், கரஜ் நகரத்தின் ஃபார்டிஸ் பகுதியையும் தாக்கியுள்ளன. இரானிய அரசு "ராணுவத் தளங்களை உருவாக்கப் பயன்படுத்திய" எரிபொருள் டேங்குகளே இந்தத் தாக்குதல்களின் இலக்கு என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இரானும் பதிலடி கொடுப்பதில் பின்வாங்கவில்லை. பாரசீக வளைகுடாவின் பல நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது அது தாக்குதல் நடத்தியுள்ளது. கார்க் தீவு மீதான தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா இந்தத் தீவைக் கைப்பற்றக்கூடும் என்ற ஊகங்கள் இப்போது வலுவடைந்துள்ளன. இரானின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகள் கார்க் தீவிலேயே உள்ளன. இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்த சிறிய தீவிலிருந்தே நடைபெறுகிறது. கார்க் தீவு செய்திகளில் இடம்பெற்றிருப்பது ஏன்? பட மூலாதாரம்,Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2024 இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போருக்கு முன்பே, இஸ்ரேலின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் கார்க் தீவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இம்முறை, டெஹ்ரான் மற்றும் கரஜ் எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலுக்கு மறுநாள், இஸ்ரேலின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான யாயிர் லேபிட்-இன் சமூக ஊடக பதிவைத் தொடர்ந்து, கார்க் தீவு மீதான கவனம் மேலும் அதிகரித்தது. அவர் கூறுகையில், "கார்க் தீவில் உள்ள இரானின் அனைத்து எண்ணெய் வயல்களையும் எரிசக்தித் தொழில்துறையையும் இஸ்ரேல் அழிக்க வேண்டும். இது இரானின் பொருளாதாரத்தை அழித்து, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்" என்று எழுதியிருந்தார். இரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், இஸ்ரேல் தனது "இலக்குகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தினார். "இந்த ஆட்சி வீழ்ந்த பிறகு, இரானிய மக்கள் ஒரு புதிய மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதே எமது குறிக்கோள். இந்த இலக்கை அடைவதில் இரானின் எண்ணெய் பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கும்," என்று அவர் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார். கார்க் தீவை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மார்ச் 7-ஆம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'ஆக்சியோஸ்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. பென்டகனின் முன்னாள் மூத்த ஆலோசகர் மைக்கேல் ரூபின் கடந்த வாரம் 'பொலிட்டிகோ'விடம் (Politico) பேசுகையில், கார்க் தீவின் முக்கியத்துவம் மற்றும் அதை ஆக்கிரமிக்கும் விஷயம் குறித்து டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேசியதாகத் தெரிவித்தார். "ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளுக்கு அப்பால் இரான் மீதான அழுத்தத்தை டிரம்ப் அதிகரிக்க விரும்பினால், கார்க் தீவைக் கைப்பற்றுவது இரானிய ஆட்சியின் மிக முக்கியமான நிதி ஆதாரத்தைப் பறிக்கும்," என்று அவர் நம்புகிறார். கார்க் தீவு மற்றும் எண்ணெய் வயல்கள் பட மூலாதாரம்,Getty Images கார்க் என்பது சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு பவளத் தீவாகும். இது இரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் நிர்வாகப் பிரிவுகளில் புஷெர் மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இங்குள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அருகே மான்கள் உலவுவதைக் காணலாம். இத்தீவு மான்களின் வாழ்விடத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் சாதகமான இடமாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விடப்பட்ட மான்களின் எண்ணிக்கை, சமீபத்திய அறிக்கைகளின்படி தீவின் கொள்ளளவை விட அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. மிகச் சிறிய அளவிலான தீவாக இருந்தாலும், இரானுக்கு கார்க் தீவு மிகவும் முக்கியமானது, குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கார்க் திகழ்கிறது. நாட்டின் தெற்கே உள்ள எண்ணெய் வளமிக்க பகுதிகளுக்கு மிக அருகாமையில் இருப்பது, சாதகமான கடல் சூழல் மற்றும் பெரிய எண்ணெய் டாங்கர்கள் வந்து செல்லத் தேவையான ஆழம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மிகவும் பொருத்தமான இடமாக கார்க் கருதப்படுகிறது. கார்க் தீவை இரானின் எண்ணெய் வயல்களின் மையப்புள்ளியாகக் கருதலாம். கச்சா எண்ணெயைச் சேமிப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இது ஒரு முக்கியமான தளம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். கார்க் தீவிற்கு மேற்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் இரானின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் வயலான அபுசார் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவில் இரானின் பெரும்பாலான எண்ணெய் உற்பத்திக்கான ஆதாரமாகும். அபுசார் எண்ணெய் வயலில் மூன்று முக்கிய உற்பத்தித் தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அபுசார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் கார்க் தீவில் அமைந்துள்ளது. பட மூலாதாரம்,Kaveh Kazemi/Getty Images) இதன் காரணமாக, இரானின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு மையங்களில் ஒன்று கார்க் தீவில் அமைந்துள்ளது. இரான் ஆயில் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்படி, கார்க்கில் மொத்தம் 20 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட 40-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. நாட்டின் தெற்கு எண்ணெய் வயல்களில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் இந்த கிடங்குகளுக்கு கொண்டு வரப்படுகிறது. டிசம்பர் 2023-ல், இரான் ஆயில் டெர்மினல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அப்பாஸ் கரிபி, கார்க் தீவில் கச்சா எண்ணெய் சேமிப்புத் திறனை 2 மில்லியன் பீப்பாய்கள் அதிகரிப்பதாக அறிவித்தார். கார்க் தீவு கச்சா எண்ணெயைச் சேமிப்பது மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கு முன்னதாக எண்ணெயை அளவிடவும், அதன் தரத்தை சரிபார்க்கவும் மற்றும் பல்வேறு வகையான கச்சா எண்ணெய்களை வகைப்படுத்தவும் செய்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரான் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதை விற்கவும் அனுமதிக்கப்பட்டபோது, தனது எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை விரிவுபடுத்த இரான் முடிவு செய்தது. கார்க் தீவில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதாலும், அங்கு அடிக்கடி புயல் போன்ற மோசமான வானிலை நிலவுவதாலும், 2016ஆம் ஆண்டில் புஷெர் மாகாணத்தில் உள்ள கனாவே நகருக்கு 28 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 10 மில்லியன் பீப்பாய் கொள்ளளவு கொண்ட ஓமித் (Omid) எண்ணெய் சேமிப்புக் கிடங்குத் திட்டம் தொடங்கப்பட்டது. கனாவேவில் உள்ள ஓமித் எண்ணெய் கிடங்கு வளாகம் மிகப்பெரிய தனியார் எண்ணெய் சேமிப்பு வசதி என்று கூறப்படுகிறது. கார்க்கின் துறைமுகம் மற்றும் வசதிகள் கார்க் தீவு கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு முக்கிய கடற்கரைகளைக் கொண்டுள்ளது. 1955ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கார்க்கில் எண்ணெய் ஏற்றும் தளம் மற்றும் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணி தொடங்கியது. கிழக்கு தளம் 'T' வடிவிலானது மற்றும் 2,75,000 டன் கொள்ளளவு கொண்ட 6 எண்ணெய் கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மேற்கு தளத்தில் 5,00,000 டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் கப்பல்களை கையாள ஏற்றது. கார்க் தீவில் கச்சா எண்ணெய் தரத்தை தொடர்ந்து பரிசோதிப்பதற்கான இரசாயன ஆய்வகமும் உள்ளது. இந்த ஆய்வகம் ISO/IEC 17025 தரச் சான்றிதழ் பெற்றது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகமாகக் கருதப்படுகிறது. பெட்ரோகெமிக்கல் நிறுவனம் பட மூலாதாரம்,Getty Images கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனமும் இந்தத் தீவில் இயங்கி வருகிறது. எண்ணெய் உற்பத்தியின்போது வெளியாகும் வாயுக்களை எரிப்பதற்குப் பதிலாக, அவற்றை பயனுள்ள தயாரிப்புகளாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் மெத்தனால், சல்ஃபர், புரோபேன், பியூட்டேன் மற்றும் நாப்தா ஆகும். 8,000-க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தத் தீவில், இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் கலைப் பிரிவும் அமைந்துள்ளது. அங்கு கற்பிக்கப்படும் முக்கியமான பாடங்களில் பெட்ரோலியம் மற்றும் கடல்சார் படிப்புகள் அடங்கும். இரான் - இராக் போரின் போது, இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கார்க் தீவு வழியாகவே நடைபெற்றன. இதன் விளைவாக, இராக் இந்தச் சிறிய தீவின் மீது சுமார் 2,800 முறை தாக்குதல் நடத்தியது. அக்காலத்தில் அதிக கவனம் ஈர்த்த எண்ணெய்க் கப்பல் போரின் பெரும் பகுதியும் கார்க் தீவைச் சுற்றியே நடந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c747k4xwwjyo
- Today
-
‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
சுப நேரக் குழுவுக்கு, காலம் சரியில்லை போல கிடக்கு😂
-
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்!
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 11:21 AM வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா' முகாமில் நடைபெற்றது. வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் கடந்த 10ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், எல்லை தாண்டிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடத்தல்களைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடல் வளங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவித்தல் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, பொலிஸ், மீன்பிடி திணைக்களம் மற்றும் மீனவ சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மீன்பிடி சூழலை உருவாக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் வட பிராந்திய கடற்படை அதிகாரிகள், இலங்கை கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், மீன்பிடி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மீன்பிடி பரிசோதகர்கள் மற்றும் உள்ளூர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்படையினர் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். https://www.virakesari.lk/article/240930