24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் சுற்று முடிவுகள் எண்ணும் பணி ஆரம்பமாகிவிட்டது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK USA NED NAM போட்டியாளர் செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் IND PAK நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா IND PAK நிலாமதி IND PAK நந்தன் IND PAK 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) செம்பாட்டான் IND PAK ஏராளன் IND PAK வசீ IND PAK புலவர் IND PAK சுவைப்பிரியன் IND NED அல்வாயன் IND PAK ஈழப்பிரியன் PAK IND நியூ பலன்ஸ் IND PAK வாத்தியார் IND PAK கறுப்பி IND PAK வாதவூரான் IND PAK வீரப் பையன்26 IND PAK சுவி IND PAK கிருபன் IND PAK கோஷான் சே IND PAK அஹஸ்தியன் IND PAK கந்தப்பு IND PAK நியாயம் IND PAK எப்போதும் தமிழன் IND PAK ரசோதரன் IND PAK பிரபா PAK IND நிலாமதி IND PAK நந்தன் IND PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NAM ஏராளன் USA வசீ USA புலவர் NAM சுவைப்பிரியன் NAM அல்வாயன் USA ஈழப்பிரியன் NED நியூ பலன்ஸ் USA வாத்தியார் NAM கறுப்பி USA வாதவூரான் USA வீரப் பையன்26 NAM சுவி NAM கிருபன் NED கோஷான் சே NED அஹஸ்தியன் USA கந்தப்பு NAM நியாயம் NAM எப்போதும் தமிழன் USA ரசோதரன் NAM பிரபா NAM நிலாமதி NAM நந்தன் OMA 43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @கந்தப்பு முதல்வராக இருந்த @alvayan முதுகின் மீது ஏறி நாற்காலியைக் கைப்பற்றியுள்ளார்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்படியும் நடக்கலாம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதிலும் அவன் கிலென் பிலிப்ஸ் இருக்கானே, பறவை மாதிரி. எக்ஸ்ரா கவர் இடம் அவனின் ராஜ்ஜியம். அடிச்சுப் பாருங்கோவன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இல்லை. அது கிரிபாட்டி தீவு எனும் நாடு. 🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தமிழுக்கு அமிழ்தென்று பெயர்.🤣 இலங்கை சிம்பாவே போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சுவிங்க் ஆகியது, ஆனால் சிம்பாவே பந்து வீச்சாளருக்கு பந்து சுவிங்க் ஆகாததிற்கு அவர்கள் வீசிய சோர்ட் லெந்த் பந்துகளும் காரணமாகவும் இருக்கலாம், இலங்கை பந்து வீச்சாளர் குறிப்பாக டில்சான் மதுசங்க புல் லெந்தில் பந்தினை மிக சிறப்பாக வீசியிருந்தார் (மேக மூட்டமும் காரணம்). அனைவருக்கும் பிடித்த அணி நியுசிலாந்து, அது ஏனோ தெரியவில்லை! பாகிஸ்தான் இந்த சூழ்நிலை சாதகமான அணி, ஆனால் நியுசிலாந்து வெல்லும் என ஒரு எண்ணம் உள்ளுக்குள் இருக்கின்றது. ஆம், எமக்கு முதல் நியுசிலாந்தில் நாள் பிறக்கும் (முதலில் நாள் பிரக்கும் நாடு என நினைக்கிறேன்).
-
அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை
இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளை சந்தித்து பல விடயங்களை ஆராய்ந்தார் அட்மிரல் ஸ்டீவ் கேலர் Published By: Vishnu 20 Feb, 2026 | 09:49 PM (வீ.பிரியதர்சன் ) அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு துறையை மட்டுமல்லாது இரு நாடுகளின் பொருளாதாரப் பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்காக அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை துறைமுக அதிகாரசபை அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகப் பாதுகாப்பு மற்றும் துறைமுக ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இலங்கை தனது கடற்பரப்பை பாதுகாப்பாக பராமரிப்பதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ப செயல்திறன் மிக்க சரக்கு மாற்று (Transshipment) மையமாகத் தொடர்வது மிக அவசியமானதாக இதன்போது குறிப்பிடப்பட்டது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்வழித் தடங்களின் சந்திப்பாக விளங்கும் இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான துறைமுக செயற்பாடுகள் உறுதி செய்யப்படும் போது, இலங்கையிலும் அமெரிக்காவிலும் வர்த்தகம் சீராக முன்னேறி, வணிக வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா–இலங்கை பங்காண்மை, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.South Asians & Diaspora இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/239190
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
25 ஓட்டங்களை சேமிப்பார்கள் எனபார்கள். பாக்கிஸ்தான் களதடுப்பில் இப்போ ஓரளவு ஓக்கே ஆனாலும் நியூசிலாந்த்துக்கு கிட்ட அல்ல தூரவும் வராயினம். 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவான அணிகள்: குழு A இந்தியா பாகிஸ்தான் குழு B ஸிம்பாப்வே சிறிலங்கா குழு C மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்து குழு D தென்னாபிரிக்கா நியூஸிலாந்து
-
இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு
வளைகுடாவில் ராணுவ குவிப்பு - அமெரிக்கா மிரட்டியும் இரான் உறுதியாக இருப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அமீர் அசிமி பிபிசி பாரசீக சேவை 20 பிப்ரவரி 2026, 14:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் வளைகுடா பிராந்தியத்தில் ராணுவத்தை அமெரிக்கா தொடர்ந்து குவித்து வரும் போக்கு வெறும் எச்சரிக்கை என்பதை தாண்டி மோதலுக்கு நேரடியாக தயாராகும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இரானிய கடல் பகுதிக்கு அருகே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பலின் வருகை ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில், மற்றொரு விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டும் (USS Gerald R Ford) அந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. உலகின் மிக வலிமையான ராணுவம் மற்றும் மத்திய கிழக்கில் அதன் பலமான கூட்டாளியான இஸ்ரேலை எதிர்கொண்டாலும், இரானியத் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஏன் இன்னும் விட்டுக் கொடுக்காமல் உள்ளனர்? அதற்கான பதில் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளில் உள்ளது என்றே கூறலாம். பட மூலாதாரம்,US Navy / Reuters இரான் பார்வை என்ன? இரான் பார்வையில், அந்த கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கானது மட்டுமல்ல, மாறாக நிபந்தனையற்ற சரணடைதலுக்கு சமமானவை. யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வரம்பைக் குறைப்பது, பிராந்தியம் முழுவதும் உள்ள ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துவது ஆகியவை இதில் அடங்கும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டபடி, இஸ்லாமியக் குடியரசு தனது சொந்த குடிமக்களை நடத்தும் விதத்தை மாற்றியமைப்பதும் அதில் அடங்கும். இரான் தலைமையை பொறுத்தவரை, அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் இரானின் இரண்டாம் நிலை கொள்கைகள் அல்ல. மாறாக அவை அனைத்தையுமே தங்களின் பாதுகாப்பு கட்டமைப்புக்கான மைய அம்சமாக இரான் கருதுகிறது. பட மூலாதாரம்,US Navy / Reuters 'எதிர்ப்பின் அச்சு' தனக்கு வலிமையான சர்வதேச கூட்டாளிகள் இல்லாத நிலையில், 'எதிர்ப்பின் அச்சு' என்ற கட்டமைப்பை உருவாக்க பல ஆண்டு காலத்தை இரான் செலவிட்டுள்ளது. இது மோதலை இரானின் எல்லைகளிலிருந்து விலக்கி வைத்து, அழுத்தத்தை இஸ்ரேலுக்கு அருகில் தள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் ஒரு வலையமைப்பாகும். பழமையான விமானப்படை மற்றும் குறைவான நவீனத்தன்மை கொண்ட தனது ராணுவ தொழில்நுட்பத்துக்கான மாற்றாக இரானுக்கு அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் உள்ளது. அணுசக்தித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமைதி நோக்கங்களுக்கானது என கூறப்பட்டாலும், அது பெரும்பாலும் ஒரு தடுப்பு சக்தியாகவே பார்க்கப்படுகிறது. எனவே இத்தகைய விஷயங்களில் தனது ஆதிக்கத்தை குறைப்பது இரானின் பார்வையில், அதன் தடுப்பு திறனுக்கான அடித்தளத்தையே தகர்த்துவிடுவது போல. பட மூலாதாரம்,NurPhoto via Getty Images போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதா? இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி பார்வையில், இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது, அமெரிக்காவுடன் ஒரு சிறிய போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதாக தெரியலாம். பெரிய இழப்புகளை ஏற்படுத்தினாலும் ராணுவ மோதல் மீண்டெழுவதற்காக வாய்ப்பாக அவருக்கு தெரியலாம். ஆனால், வியூக ரீதியான விஷயத்தில் பின் வாங்குவது அந்த வாய்ப்பை வழங்காமல் போகலாம். ஆனால், இந்த கணக்கீட்டின் பின்னால் உள்ள அபாயங்கள் மேலோட்டமானவை அல்ல, அதே போல அத்தகைய அபாயங்கள் இரானுக்கு மட்டும் இல்லை. அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் அதன் ஆரம்ப கட்டத்திலேயே உயர்மட்டத் தலைமையைக் குறிவைக்கக்கூடும். காமனெயி கொல்லப்பட்டால், அது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், ஒரு பலவீனமான தருணத்தில் அடுத்த தலைமையை உருவாவதையும் சீர்குலைக்கக்கூடும். இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய குடியரசின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் வன்முறை ஒடுக்குமுறைக்குப் பிறகு சமீபத்தில் கட்டுப்பாட்டை நிலைநாட்டிய கட்டமைப்பை பலவீனப்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,"கடல் ஆச்சரியங்கள்" என்ற தலைப்புடன், இரானிய நாளிதழான வதன்-இ எம்ரூஸின் பிப்ரவரி 19 பதிப்பு அண்மையில் வீதியில் இறங்கி போரடியவர்கள் அரசு கடும் பலத்தை பயன்படுத்திய பிறகே பின்வாங்கினார்கள். ஆனால், அவர்கள் இன்னும் அதிருப்தியுடன்தான் உள்ளனர். எனவே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது உள்நாட்டு சமநிலையை கணிக்க முடியாத வகையில் மாற்றக்கூடும். மற்றொரு புறம் பொருளாதார அழுத்தமும் ஆபத்தை அதிகரிக்க கூடியதாக உள்ளது. ஏற்கனவே பொருளாதாரத் தடைகள், பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் பொருட்களை வாங்கும் திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரானின் பொருளாதாரம், ராணுவ மோதலைத் தொடர்ந்து ஏற்படும் அதிர்ச்சிகளைத் எதிர்கொள்ள சிரமப்படும். அதே போல, எண்ணெய் ஏற்றுமதிக்கு ஏற்படும் இடையூறு அல்லது உட்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம், மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தும். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன. இரான் உறுதியுடன் எதிர்ப்பது ஏன்? இந்த பின்னணியில் பார்த்தால் இரான் உறுதியுடன் எதிர்ப்பது பல நோக்கங்களை கொண்டுள்ளது. அதாவது வெளியுலகிற்கு இஸ்லாமிய குடியரசின் உறுதியைக் காட்டும், உள்நாட்டில் அதன் பலத்தை காட்டும். ஆனால் அதே சமயம் சமரசத்திற்கான வாய்ப்பையும் சுருக்கும். ஒருவேளை விரிவான போர் மூண்டால் இரு தரப்பும் விரும்பாத விளைவுகளை உருவாக்கக்கூடும். இரானில் அதிகார வெற்றிடம் உருவானால், புதிய அல்லது தீவிர கருத்துக்களை கொண்ட அதிகார மையங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. இது பிராந்திய அதிகார சமநிலையை சிக்கலாக்கி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு விருப்பமற்ற விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். அதி உயர் தலைவருக்கு தற்போது சாதகமான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது இரானின் எதிர்ப்பு உத்தியை பலவீனப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. அவற்றை நிராகரிப்பது உள்நாட்டிலேயே பலவீனமாக இருக்கும் சமயத்தில் மோதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதி உயர் தலைவர் மிக மோசமான வாய்ப்பாக கருதக்கூடியது வீயூக ரீதியான சரணடைதல், அதைவிட குறைவான மோசமான வாய்ப்பு கட்டுப்படுத்தக் கூடிய சிறிய ராணுவ மோதலில் ஈடுபடுவது ஆகிய இரண்டு விஷயங்களில், இரான் இரண்டாவது விஷயத்தை தேர்வு செய்வது போல தெரிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpd84ndydd9o
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏதாவது (+)வா சொல்லுவம் என்டால்... நீங்கள் எவடம். மதவடியா. 😁
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்திரேலியாவில் 21 ஆம் திகதி பிறந்துவிட்டது. நான் ஏன் நீங்கள் இன்று என எழுதினீங்க என்று சற்று குழம்பிவிட்டேன்!😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரம்ப வீரர்கள், சிறந்த தொடக்கம் குடுத்தால் சரி. அவர்களின் வேகப் பந்தா, பாகிஸ்தானின் சுழல் பந்தா...... நியுசிலாந்தின் முக்கிய ஆயுதம், அவர்களின் களத்தடுப்பு. பாகிஸ்தான் கிட்டவும் வர முடியாது
-
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு 20 Feb, 2026 | 03:35 PM யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகளை நேரில் கண்டறிவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணிகள் முனையக் கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்த அமைச்சர், 800 சதுர மீற்றருக்கும் அதிக பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய வருகை முனையத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், தற்போது பயன்பாட்டிலுள்ள முனையத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்ற அவர், அங்குள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 53,443 பயணிகள் பயணம் செய்துள்ளமை ஒரு பாரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. தற்போது இந்தியாவின் சென்னைக்கு தினசரி விமான சேவைகளும், திருச்சிக்கு வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளும் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. வடபகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில், விமான நிறுவனங்களுக்கு விமானம் தரையிறக்கம் மற்றும் தரித்துநிற்பதற்கான கட்டணச் சலுகைகள் வழங்கப்படுவதுடன், பயணிகளுக்கான விமான நிலையப் புறப்பாட்டு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவைகளையும் மேம்படுத்தி, சுற்றுலாத் துறையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, விமான நிலைய உதவி செயல்பாட்டு மேலாளர் அநுத் தயாவங்ச, பணிப்பாளர் பிரீமால் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239163
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Laws of mathematics, physics இற்கு அப்பாற்பட்ட சக்தி கோஷான் என்பதை உங்களுக்கு காலம் உணர்த்தும்😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதை தான் நானும் நினைத்தேன் மேகம் மழை மூட்டமாய் தெரிந்தது.............பந்து சுழல வில்லை பிச்சில் வெப்பம் இல்லாம சரியான மாற்றம் தெரிந்தது.................. நியுசிலாந்தை விட பாக்கிஸ்தான் சிறந்த பந்து வீச்சாளர்களை வைத்து இருக்கும் அணி........................வெற்றி வாய்ப்பு அதிகப் பாக்கிஸ்தானுக்கு பாப்போம் நாளைக்கு............................
-
மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்
ஆமென்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொல்லுறதும் சரிதான். இப்போ குப்பிற நிக்கிறபடியால், இனி குப்புற விழுந்தால், மேல் நோக்கி எல்லோ போவீர்கள். குப்பிற நிக்கிற ஆள் குப்பிற விழுந்தால், விளைவு மேல் நோக்கி. நான் சொல்லும் தர்க்கம் சரி தானே. இரண்டு (-) சேர்ந்து (+) ஆகிற மாதிரி. 😉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆரும் தெரியாத ஆட்கள் வாசிச்சால், நியூசிலாந்திலும் தமிழ் ஆட்கள் விளையாடுவாதாய் நினைப்பார்காள்😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந்து எப்போது திறமையாக திட்டமிடுபவர்கள் இந்த சூழ்நிலை மாற்றத்தினை எவ்வாறு அதற்கெதிராக திட்டமிட்டு எதிர்கொள்கிறார்கள் என்பதில் அவர்கள் வெற்றி வாய்ப்புள்லது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நிலைமாறும் உலகில் …. நிலைக்கும் கோஷான் வீடு 😂
-
மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்
அனுர அரசில்.... மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கணிசமாக உள்ளமையால்... ரிஷாட் பதியுதீன் வீட்டில் எரியூட்டப் பட்டு இறந்த அந்த ஏழைச் சிறுமிக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போது... நீதி கிடைக்காவிடில் எப்போதும் கிடைக்காது. பதியுதீனின் மனைவியின் சகோதரனும்... அந்தச் சிறுமியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து, அடித்து துன்புறுத்துவதாக அப்போதைய செய்திகளில் வந்திருந்தது. 😢
-
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது
அப்படி சொல்ல முடியாது. ஒருவரை 24,48 மணிக்கு மேல் தடுக்க பொலிசார் மேலதிக அனுமதி பெறல் வேண்டும். அத்தோடு இவர் (இன்னமும்) பாலியல் வழக்குகளில் கைதாகவில்லை. இப்போ இவர் மீது விசாரிக்கபடும் குற்றம் பொதுவாழ்வில் தன் அதிகாரத்தை துஸ்பிரயோகித்தார் என்பதே. ஒருவரை பெயிலில் விடும் போது… அவர் உடனடியாக மீள குற்றம் உழைக்க கூடுமா, வழக்கின் தன்மை, தப்பி ஓடும் நிகழ்தகவு எல்லாமும் கருதப்படும். குறிப்பாக வழக்குதாக்கல் செய்ய முன் இப்படியான வழக்குகளில் ரிமாண்டில் போடுவது அரிதிலும் அரிது. அதுவே இங்கும் நடந்துள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று முதலாவது சுப்பர் 8 போட்டி நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தானிடையே நடைபெறவுள்ளது. சிம்பாவே மற்றும் இலங்கை போட்டி நடைபெற்ற பிரேமதாச மைதானத்திலேயே இப்போட்டி நடைபெறவுள்ளது, பாகிஸ்தானின் மிக சிறப்பான சுழல் பந்து வீச்சுகொண்ட அணியினை நியுசிலாந்து ஒரு பகலிரவு போட்டியில் எதிர்கொள்கிறது. இலங்கை சிம்ப்பாவே போட்டி பகல் போட்டியாக விளையாடியமையால் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட அப்போட்டியில் முடிவெடுத்திருந்தது, ஆனால் இது பகலிரவு போட்டி, மைதான ஈரலிப்பு இரண்டாவதாக விளையாடும் அணிக்கு மெதுவான ஆடுகளத்தில் பந்து இலகுவாக மட்டைக்கு வர உதவும் என்பதால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்வார்கள். இந்த குறூப்பில் பலவீனமான அணியாக நியுசிலாது உள்ளது (இலங்கை ஆடுகள சூழ்நிலைக்கு), பையனின் தெரிவான இஸ் சோதியினை (மணிக்கட்டு சுழல்) நியுசிலாந்து அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது அத்துடன் ஜிம்மி நீசத்திற்கு பதிலாக (சகலதுறை ஆட்டகாரர்) நியுசிலாந்து அணியில் இணைக்குமா? மறுவளமாக சகல வகையிலும் (பாகிஸ்தானுக்கு ஒரு சொந்த நாட்டு பிட்ச் போன்ற, மற்றும் சிறந்த சுழல்) சாதகமான நிலையில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது, இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கே சூழ்நிலைகள் சாதகமாகவுள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது என்ன புதுசா வழமை போல் நடப்பது தானே..........................