Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. ஓம் இன்று சாதி பெயர்கள் சொல்லி தமிழ் தேசியவாதிகள் என்போர் முகநூலில் வெளிப்படையாகவே பிடிக்காதவர்களை ஏசுகின்றனராம்
  3. சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு - அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜீவன் தொண்டமான் Published By: Vishnu 20 Dec, 2025 | 03:29 AM (எம்.ஆர்.எம்.வசீம்) நான் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இனரீதியாக பேசியதில்லை. ஆனால் இப்போது சொல்கின்றேன், சிங்கள சமூகம் எங்கெல்லாம் அதிகமாக வாழ்கின்றதோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்தவாரம் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிவில் அமைப்புகள் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஒரு முன்மொழிவை தயாரித்து சமர்ப்பித்தார்கள். புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு, தீர்வு தொடர்பான முன்மொழிவே அது. அதனை இந்த சபையில் நான் சமர்ப்பிக்கின்றேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக எங்களால் முடிந்த உதவியாக எம்மால் சேகரிக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பணத்தில் பாதிக்கப்பட்ட 2137 குடும்பங்களுக்கு நாம் உதவி செய்துள்ளோம். இதற்கு உதவியவர்களுக்கு இந்த சபையில் நன்றி கூறுகின்றேன்.எமது உதவி தொடர்பான கணக்கு விபரங்களையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன். என்றாலும் நாம்செய்த இந்த உதவி போதாது. கடந்த பாராளுமன்ற அமர்வில் கொத்மலையில் நடந்த அசாதாரண சம்பவம் தொடர்பில் நான் உரையாற்றினேன்.அதில் முக்கியமானதொரு பிரச்சினையாக அந்த பகுதியிலிருந்த பிரதேச செயலாளர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்ற விடயத்தை முன்வைத்தேன். இது தொடர்பில் அரசு. அமைச்சர்கள் அல்லது எம்.பி.க்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் நான் கூறியபோதிருந்ததை விட இப்போது அந்த பிரச்சினை அதிகரித்துள்ளது . நேற்றைய தினம் ( வியாழக் கிழமை)அதே பகுதியிலிருக்கின்ற மக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாகவே அந்த பிரதேச செயலாளர் தம்மை முழுமையாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்கள். நான் எனது பாராளுமன்ற நாட்களில் ஒரு உரையைக்கூட இனரீதியாக ஆற்றியதில்லை. ஆனால் இன்று உண்மையான விடயம் கொத்மலை பிரதேசம் மட்டுமல்ல கொத்மலை, உடப்புசல்லாவ என சிங்கள சமூகம் எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் பிரதேச செயலாளர்கள் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றார்கள். இதுதான் உண்மை. இது தொடர்பாக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று நன் அந்த குற்றச்சாட்டை வைத்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க சொன்னார்கள். நான் அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததால் இன்று அங்குள்ள தமிழ் சமூகம் ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதே நிலைமைதான் அனைத்துப்பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது. இது அமைச்சரின் நோக்கம் கிடையாது. எனவே தயவு செய்து இது தொடர்பில் நடவடிக்கை எடுங்கள். எல்லோரும் மோசமானவர்கள் என நான் சொல்லவில்லை. ஒரு சிலரின் செயற்பாடுகளினால் அரசாங்கத்துக்கு மட்டும் கெட்ட பெயர் கிடையாது. நாட்டுக்கே கெட்ட பெயர் .அதேமாதிரி கிராமசேவகர்களைப் பார்த்தால் அவர்கள் நிறைய இடங்களுக்கு பெயருக்கே செல்கின்றார்கள். பெயர்களை எடுக்கின்றார்கள் .ஆனால் எதுவும் செய்ய மாட்டேன் என்கின்றார்கள். 9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடந்தது அதில் ஜனாதிபதி ஒன்றரை இலட்சம் மக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 9 இலட்சம் பேர்ச் காணி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். அப்படிப்பார்த்தால் ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச் காணிதான். திகாம்பரம் எம்.பி. இருக்கும்போது 7 பேர்ச் காணி என சட்டம் கொண்டுவரப்பட்டது.நாங்கள் இருக்கும்போது 10 பேர்ச் காணி என சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்போது 6 பேர்ச் எனப்படுகின்றது எனவே இதுதொடர்பில் தனது நிலைப்பாடு என்னவென ஜனாதிபதி இந்த சபையில் தெளிவு படுத்தியேயாக வேண்டும். அதேவேளை சந்தாப்பணத்தில் நான் நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். நாமல் ராஜபக்ஷ்வோடு நான் சென்ற போது அவருடன் கூட்டு சேர்ந்து விட்டதாக கூறினார்கள். எல்லோரும் சந்தாப்பணம் வாங்குகின்றார்கள்.எத்தனைபேர் கணக்கு வழக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள் ? ஆனால் நான் சமர்ப்பித்துள்ளேன். நான் அனைத்து கட்சித்தலைவர்களிடமும் நுவரெலியா மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, முடிந்த உதவிகளை செய்யுங்கள் எனக்கூறினேன். எனக்கு ஆளும் கட்சியா எதிர்கட்சியா, சிவில் அமைப்புக்களா என்ற பிரச்சினை கிடையாது. அந்த வகையில்தான் நாமல் ராஜபக்ஷ் அங்கு வந்து உதவிகளை வழங்கினார் என்றார். https://www.virakesari.lk/article/233892
  4. ஆட்டத்தை மாற்றிய 15 பந்துகள்: அதிரடியில் மிரட்டிய தென் ஆப்ரிக்கா தடம் புரண்டது எப்படி? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-1 எனக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்தியா 231 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார். மீண்டும் சாம்சன் - அபிஷேக் ஜோடியின் அதிரடி கில் காலில் காயமடைந்த காரணத்தால், மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார் சஞ்சு சாம்சன். கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரும், அபிஷேக்கும் சேர்ந்து ஒரு அதிரடியான தொடக்கத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அபிஷேக், இரண்டாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். யான்சன் வீசிய அந்த ஓவரில் சாம்சனும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். அதன் பின்னும் அவர்கள் தங்கள் அதிரடியைத் தொடர, 4.4 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை இருவரும் நாலாப்புறமும் அடித்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 5.4 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது. பவர்பிளேவிலேயே அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். பத்தாவது ஓவரில் அவுட்டான சாம்சன், 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் 81.7% ரன்களை பவுண்டரிகள் மூலமே எடுத்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. நான்காவது போட்டி கைவிடப்பட்டது. கடைசி 8 ஓவர்களில் மிரட்டிய திலக் - ஹர்திக் ஜோடி இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 5 ரன்கள்) தவிர்த்து, அனைத்து இந்திய பேட்டர்களுமே களமிறங்கியது முதலே அதிரடி காட்டினர். அபிஷேக், திலக் இருவரும் தங்களின் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, ஹர்திக்கும் துபேவும் தாங்கள் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார்கள். குறிப்பாக திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காட்டிய அந்த அதிரடி அணுகுமுறை இந்தியாவை ஒரு மிகப் பெரிய இலக்கை நோக்கி பயணப்பட வைத்தது. வேகம், சுழல் என எந்த பந்தாக இருந்தாலும் இருவரும் தங்கள் அதிரடியைத் தொடர்ந்தனர். திலக் வர்மா மைதானத்தின் நாலாபுறமும் 360 டிகிரியில் பந்துகளை விளாசினார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 'ரிவர்ஸ் ஸ்வீப்' என்றால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 'ரேம்ப் ஷாட்' ஆடினார். பந்துகள் ஒவ்வொன்றையும் சரியாக அவர் அடிக்க, எல்லாம் பவுண்டரிக்குப் பறந்தன. அதனால், 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் அவர். மறுபுறம் தன் அசாத்திய பலத்தால் பவுண்டரிகள் விளாசிக் கொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், பதினாறு பந்துகளிலேயே அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் இது. இந்த ஜோடி களத்தில் இருந்தது 7.2 ஓவர்கள் தான். ஆனால், அதில் அவர்கள் அடித்தது 105 ரன்கள். அவர்கள் ஜோடி சேரும்போது 9.45 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், கடைசி ஓவரில் அவர்கள் பிரியும்போது 11.28 ஆக உயர்ந்திருந்தது. அதனால் தான் இந்தியாவால் 231 என்ற இமாலய ஸ்கோரை எட்ட முடிந்தது. ஹர்திக் பாண்டியா 63 ரன்களிலும் (25 பந்துகள்), திலக் வர்மா 73 ரன்களிலும் (42 பந்துகள்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹர்திக் மற்றும் திலக் இருவரின் அதிரடியால் 231 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா 15 பந்துகளில் ஆட்டம் மாறியது எப்படி? பெரிய இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு குவின்டன் டி காக் பெரும் நம்பிக்கை கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய அவர், அந்த அதிரடியைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். அதனால், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஒருபக்கம் தடுமாறிய போதும் கூட பவர்பிளேவிலேயே அந்த அணி 67/0 என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸை வருண் சக்கரவர்த்தி வெளியேற்ற, அதன்பிறகு களமிறங்கிய இளம் வீரர் டெவால் பிரெவிஸ், டி காக் உடன் இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். வருண் வீசிய இன்னிங்ஸின் 9வது ஓவரில் இருவரும் இணைந்து 23 ரன்கள் எடுத்தனர். ஹர்திக் வீசிய அடுத்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட, 10 ஓவர்கள் முடிவில் 118/1 என நல்ல நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா. தேவைப்படும் ரன்ரேட்டை விட அந்த அணியின் ரன்ரேட் அதிகமாக இருந்ததாலும், கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததாலும், அவர்களால் இலக்கை சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் அடுத்த ஓவர் பந்துவீச வந்த ஜஸ்ப்ரித் பும்ரா உடைத்தார். 11வது ஓவரை வீசிய பும்ரா, டி காக் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் பிரெவிஸ் சிங்கிள் எடுக்க, டி காக் ஸ்டிரைக்குக்கு வந்தார். அப்போது பும்ரா ஒரு பவுன்சரை வீச, நடுவர் அதை வைட் என அறிவித்தார். அடுத்ததாக யார்க்கர் லென்த்தில் சற்று மெதுவாக பந்தை வீசி பேட்டருக்கு அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா. 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து பும்ரா ஏற்படுத்திய கோணத்தால், பந்து பேட்டரை நோக்கி உள்ளே வந்தது. டி காக்கால் அதை சரியாக அடிக்க முடியாமல் போக, பந்து எட்ஜாகி பும்ராவின் கையிலேயே விழுந்தது. இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்த டி காக் 65 ரன்களில் (35 பந்துகள்) வெளியேறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் 10 ஓவர்களில் இந்திய பௌலர்கள் ரன்களை வாரி வழங்கியிருக்க, 11வது ஓவரில் பும்ராவை அழைத்துவந்தார் கேப்டன் சூர்யகுமார். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அந்த ஒரு விக்கெட் தென்னாப்பிரிக்காவை சீட்டு கட்டு போல் சரியச் செய்தது. அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக்கின் பவுன்சரை, பிரெவிஸ் 'புல்' செய்ய, அது மிட்விக்கெட் திசையில் இருந்த வாஷிங்டன் சுந்தர் கையில் தஞ்சமடைந்தது. 17 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார் பிரெவிஸ். அதற்கடுத்த ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை பெரும் சரிவுக்குள்ளாக்கினார் வருண் சக்கரவர்த்தி. 12வது ஓவரின் மூன்றாவது பந்தில் மார்க்ரம் எல்பிடபிள்யூ ஆக, அடுத்த பந்திலேயே டானவன் ஃபெரீரா போல்டாகி வெளியேறினார். 10.1 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 120/1 என்ற நல்ல நிலையில் இருந்தது. அடுத்த 15 பந்துகளில், 135/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அந்த அணி. பத்தாவது ஓவர் முடிவில் 11.4 ஆக இருந்த அந்த அணியின் தேவைப்படும் ரன்ரேட், 13வது ஓவர் முடிவில் 13.71 ஆக உயர்ந்தது. அந்த 15 பந்துகள் அந்த அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தன் இரண்டாவது ஓவரில் 23 ரன்கள் கொடுத்திருந்த வருண், தன்னுடைய மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வலுவான நிலையை அடைய உதவினார் அதன்பிறகு மீண்டுவர முடியாத தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் மட்டும் எடுத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மொத்தம் 432 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில், 4.25 என்ற எகானமியில் பந்துவீசி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார் ஜஸ்ப்ரித் பும்ரா. அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பால்கள். வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங்கில் 252 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 63 ரன்கள் எடுத்ததோடு, பிரெவிஸ் விக்கெட்டையும் வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என (நான்காவது போட்டி கைவிடப்பட்டது) இந்தியா கைப்பற்றியது. இந்தத் தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce86pryl38ko
  5. பிள்ளைகளின் உள நலனுக்காகவே பாடசாலைகள் திறப்பு - பிரதமர் Published By: Vishnu 19 Dec, 2025 | 10:57 PM இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்காகவும் குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காகவுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக குறைநிறப்பு மதிப்பீட்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை 19 ஆந் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, டித்வா புயலின் அனர்த்தத்தினால் எமது நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை (19) ஆந் திகதி குறைநிறப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் கூடியுள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்பட்ட நவம்பர் 27 ஆம் திகதி, அரசாங்கம், அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸார், இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவினாலும்தான் எமக்கு இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வர முடிந்தது. அதேபோல், ஜனாதிபதியின் வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தினால்தான் நாடு இன்று இருக்கும் நிலையை அடைய முடிந்தது. இதனாலேயே தான் குறிப்பாக, உட்கட்டமைப்பு, நீர், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இவற்றை இன்றைய நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. நாட்டில் இயல்பு வாழ்க்கையை இந்த அளவுக்கு மீட்டெடுக்கப்பட்டிருப்பதற்கும், நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதற்கும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இந்தப் பேரனர்த்தம் வெறுமனே ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு மாறும் சூழ்நிலை. மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் மூட வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையில், சாதாரண மழைவீழ்ச்சி கூட ஆபத்தை அதிகரிக்கக்கூடும். நிலச்சரிவுகள் எந்த நேரத்திலும் நிகழலாம். அந்தப் பகுதிகளுக்குச் சென்ற எவருக்கும் அந்த நிலைமை விளங்கும். அதனால்தான் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து முடிவுகளை மேற்கொள்கிறோம். எனவே, முதல் சந்தர்ப்பங்களைப் போலவே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தேவைப்படும்போது அவர்களை மீட்பதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலைபேறாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். பாடசாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம். கிராமங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டம். இது இரண்டு மூன்று ஆண்டுகள் தேவைப்படும் திட்டம் என்று நாம் நினைக்கிறோம். 2026 ஆம் ஆண்டிற்காக இந்த குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இதில் நாங்கள் திட்டமிட்டுத் தான் தலையிட்டுள்ளோம். எமது பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே 2026 ஆம் ஆண்டிற்கான ரூபா 500 பில்லியனுக்கான குறைநிறப்பு பிரேரணையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். விரிந்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு மீண்டும் கடனால் மூழ்கடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படாதிருக்க, இந்தத் திட்டங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்திலிருந்தே பொருளாதார முகாமைத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தியதால்தான், இந்த நோக்கத்திற்காக 75 பில்லியனை ஒதுக்கவும், பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டை முன்வைக்க முடிந்தது. குறிப்பாக எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சர்வதேச சமூகம், புலம்பெயர்ந்தோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இந்த நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு பொருள், உழைப்பு மற்றும் பணத்தின் அடிப்படையில் பெரிதும் பங்களித்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே இதை நாங்கள் பயமின்றி ஆதரவளிக்க முடிந்தது என்று எங்களுக்கு உதவிய மக்களும், சர்வதேச சமூகமும் கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒன்றிணைக்க முடிந்திருப்பதும், சர்வதேச சமூகம் இவ்வாறு எங்களுக்கு உதவுவதற்குக் காரணமும், நாங்கள் முன்வைத்துள்ள ஊழலற்ற நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைதான் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். கல்வித் துறையின் நிலைமை குறித்தும் நாம் சில விடயங்களை முன்வைக்க வேண்டும். இந்த தகவல் டிசம்பர் 17 ஆம் திகதி பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகிறது. இது நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு நிலைமை. எனவே, இது இறுதியான தரவு அல்ல. இருப்பினும், இந்த தரவுகளின்படி, சுமார் 1382 பாடசாலைகள் அனர்த்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, 666 பாடசாலைகளைத் தவிர மற்ற அனைத்து பாடாசாலைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இன்று, மத்திய மாகாணத்தில் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும், பல பாடசாலைகள் பராமரிப்பு மையங்களாக செயற்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் கருத்திற் கொண்டுதான், பாடசாலைகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. பாடசாலைகளைத் திறப்பதன் முக்கிய நோக்கம், உட்கட்டமைப்பு வசதிகளைப் போன் றே பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்தாலாகும். குறிப்பாக, பிள்ளைகளை இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் பழக்கப்படுத்த விரும்பினோம். குடும்பத்தைத் தவிர, பிள்ளைகளுக்கு பாடசாலையை விடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை. அதனால்தான், இந்தக் காலகட்டத்தை வழமையான முறையிலன்றி, இந்த நாட்களை பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் உளவியல் சமூக நல்வாழ்வுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இந்த பேரனர்த்தம் ஏற்பட்டபோது உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த பிள்ளைகளும் இருந்தனர். மீதமுள்ள 7 நாட்களை நாங்கள் மீண்டும் திட்டமிட்டுள்ளோம். அந்த பிள்ளைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அடுத்ததாக சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் பிள்ளைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ. 15,000 என மொத்தம் ரூ. 25,000 வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படுவது வெறுமனே கற்பிப்பதற்காக மட்டுமன்றி, அனர்த்தத்திற்குப் பின்னர் பிள்ளைகளின் உளநிலையைப் பற்றி சிந்தித்தும் செய்யப்பட்டதாகும். மேலும் பல்கலைக்கழகங்கள், கல்விக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களும் சேதமடைந்தன. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் கடுமையாக சேதமடைந்தது. நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, சர் ஐவர் ஜென்னிங்ஸால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் கூட சேதமடைந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இது நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. அதாவது, நாம் முறையாக திட்டமிட்டு, விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் சரியான இடங்களில் கட்டிடங்களை அமைத்தால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் எடுக்கப்படும் முடிவுகளால்தான், இதுபோன்ற பேரழிவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மீண்டும், ஆபத்தை குறைக்கும் வகையில் இவற்றை அமைக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். எதிர்க்கட்சியும் இதனை ஆதரிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம். தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், விஞ்ஞானபூர்வமாக, படிப்படியாக இதைச் செய்துவருகிறோம். இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தே இதைச் செய்ய வேண்டும். அந்த ஒற்றுமையின் மூலம், இந்த நாட்டை அதன் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கவும், அனைவரின் வாழ்க்கையையும் பாதுகாக்கவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்படுகிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233884
  6. மட்டு. வாவியில் பிளாவுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன | பின்னணியில் தெரிவது பசார் 1963/05/14
  7. ஒரு 'பாதை' மூலமாக மக்கள் கடப்பதை காணலாம். அருகில் ஓர் பிளாவு உள்ளது அறுகம்குடா, மட்டு 1979/7/29 பிளாவில் பொய்போடுத (Gunwale) அகண்டதும் உண்டு. குறுகியதும் உண்டு. மேலுள்ளது அகண்டது, கீழுள்ளது குறுகியது.
  8. Today
  9. மன்னார் வளைகுடாவில் வத்தைகளில் முத்துக்குளிக்கும் தமிழர்கள் 1900<
  10. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஏரிப்புறக்கரை & அதிராம்பட்டினத்தில் பாவிக்கப்பட்ட வத்தை 1900+ பண்டகர்(Dr.) புளூ(blue) என்னும் ஆங்கிலேயர் வத்தையினை இவ்வாறு சித்தரிக்கின்றார். Dr. Blue Says, "Vattai, are flat-bottomed, have a box-like transverse section and are near-wall-sided over much of their length. "They range in size from around 13.72m long, with a beam of 2.13m and a depth of 1.37m, to the smallest vessels of c. 5.18m x 1.07m x 0.76m. However, irrespective of their size, they are all similar in shape with very high bows, and two or three masts each with a settee-lateen sail, a balan"
  11. வல வத்தை 1900+ முதுப்பேட்டையில் (பாக்கு நீரிணை) ஓடிய ஓர் வத்தை. இதுவும் பலகைக்கட்டு வத்தை தான், எனினும் சுக்கானுடன் மூன்று பாய்கள் உள்ளதால் இது வல வத்தை எனப்படும். இதன் கடிசு நீளமானது. length = 43 அடி beam = 4½ அடி depth 2½ அடி. பாயின் உயரம்: வலப்பாய் = 13 அரை அடி நடுப்பாய் =22 அடி கடைப்பாய் = 14 அரை அடி கடிசு (balance board) - 17 அடி
  12. பலகைக்கட்டு வத்தை 1900+ அதிராம்பட்டினத்தில் இருந்து உருவோட்டப்பட்ட(sail) வத்தை. இதன் கடிசு மிகவும் நீளமானது (l= 34 அடி). பலகைகள் கொண்டு கட்டப்பட்டதால் பலகைகட்டு வத்தை என்று பெயர்பெற்றது. எனினும் சுக்கான் இல்லை இதற்கு. நீளமான கலவோடு(hull) & மூன்று பாய் கொண்டது. 5 பேர் வரையிலும் பாதுகாப்பாக பயணிக்கலாம்: length: 18 - 37 அடி beam : 2 - 3 அடி depth : 2½ அடி
  13. வத்தை திருப்பலக்குடியில் உருவோடிய வத்தை. இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.
  14. இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது. ஒற்றை நெடுங்கட்டை (boom) இரட்டை நெடுங்கட்டை
  15. இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். எனினும் இதற்கு Washtakes உண்டு. (தென் தமிழீழத்திலிருந்த வள்ளங்கள் போன்று தோற்றமளிக்கிறது)
  16. தலைநகர் திருமலையின் மாவலி கங்கையில் வள்ளங்கள் நிற்கின்றன 1940கள் இதை ஒத்த வடிவமுடைய வள்ளமொன்று தமிழ்நாட்டிலும் இருந்துள்ளது.
  17. முத்துக்குளித்தலில் வத்தல் ஒன்று சிலோன் - மன்னார் வளைகுடா, 1904
  18. நாகபட்டினத்திலிருந்து ஓடிய கட்டுத்தோணி மாதிரி, 1900கள்
  19. கொலிடே தேடி போகும் உங்களுக்கு வேண்டியதுதான் கண்ணுக்கு தெரியும். ஏன் அங்கே நிரந்தரமாக இருக்க முடியவில்லை உங்களால்? கொலிடே போகிறவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து தமது கொலிடேயை பாழாக்க விரும்பமாட்டார்கள். சரி, யாராவது வந்தால், வாழ வழியை காட்டுங்கள். எந்தத் தமிழனும் யாழ்ப்பாணம் வரமாட்டான் என்று நீங்களே சொல்லி விட்டு யாரை குடியேற்றப்போகிறீர்கள்?
  20. இராணுவத்தின் அடாவடிகளால் தமது நிலங்களை பறி கொடுத்தவர்கள், விகாரைக்கு பறித்து எடுக்கப்பட்ட காணிகள், பிள்ளைகளை கையால் கொடுத்துவிட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது கதிகலங்கி நிற்கும் உறவுகள், இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்டு தவிப்பவர்கள் அவரது தேர்தல் பகுதியில் இருக்கும்போது, அவர்களை கை விட்டு கண்டியில் போய் நின்று கூவி அழைத்து அரசியல் செய்தால் யார் இவரை அறிவாளி, சுய புத்தியுள்ளவன் என்று என்று நம்புவார்கள்? இது தெரியாமலா இவ்வளவு நேரம் பக்கம் பக்கமாய் பாடம் எடுத்தீர்கள்? கேலி பண்ணினீர்கள்? இதற்குத்தான் சொன்னேன் அவர்களுக்கு என்ன தேவை என கேளாமல், அறியாமல் மேதாவித்தனம் காட்டக்கூடாது, அது கோமாளித்தனம். இனி என்ன? சீசீ இந்தப்பழம் புளிக்கும். தானே சொந்த நிலத்தை விட்டு ஓடி விட்டு மற்றவர்களை குடியேற அழைக்கிறாராம். நீங்களே மீண்டும் வந்து குடியேறுங்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.