Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ப்பா. பாத்துக் கொண்டு இருந்த எங்களுக்கே மூச்சு முட்டுதே. ஆடின அவங்களுக்கு. என்னா அடி. இம்மை மறுமை இல்லா அடி.
  3. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 122 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 122 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " விஜயனை அவரது சொந்த தந்தையே தனது சொந்த நிலத்திலிருந்து, அவனின் தீய செயல்களால் வெளியேற்றினார், மேலும் இதனால், அதே குணாதிசயங்களைக் கொண்ட அவனது தோழர்களுடன் ஒரு படகில் செல்ல வேண்டிய கட்டாயம் விஜயனுக்கு ஏற்பட்டது. அந்தப் படகு இலக்கின்றி இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் சுப்பராவை [சுப்பராகா / Suppara] அடைந்தது, சுப்பரா மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். அங்கேயும் அவர்கள் தங்கள், காட்டுமிராண்டித்தனமான செயல்கள், திருட்டு, விபச்சாரம், பொய் மற்றும் அவதூறு போன்ற உள்ளார்ந்த நடத்தைகளைக் அல்லது குணங்களைக் காட்டினர். எனவே, கோபம் கொண்ட சுப்பரா மக்கள் விஜயனையும் அவனது தோழர்களையும் கொல்ல விரும்பினர். பின்னர் அவர்கள் தப்பித்து, பருகாச்சாவில் [Bharukaccha] தரையிறங்கி, மூன்று மாதங்கள் அதே தீய செயல்களை அங்கும் செய்தனர். உதாரணமாக, தீபவம்சம் 9-26. விஜயன் பருகாச்சா நகரத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அங்கிருந்த மக்களை தங்கள் கொடிய செயல்களால் கோபப்படுத்தி விட்டு, அதே கப்பலுக்குள் மீண்டும் ஏறினான். 27. அந்த விஜயனின் மக்கள் குழுவும் கப்பலில் ஏறி, கடலுக்குள் புறப்பட்டனர்; ஆனால் கடும் காற்றால் அவர்கள் வழிதவறி, கடலில் திசைதவறினர். 28. இதனால், அவர்கள் இலங்கைத் தீவை அடைந்து கரையில் ஒதுங்கினர். ஆனால் வறண்ட தரையில் நின்ற அவர்கள் மிகுந்த பசிப்பிணி, தாகம் மற்றும் சோர்வு ஆகியவற்றால் களைப்படைந்ததால், அவர்களால் (?) கால்நடையாக நடக்க முடியவில்லை, அதனால் அவர்கள் அங்கேயே நின்றனர் என்கிறது. என்றாலும் மகாவம்சம் பருகாச்சாவில் தரையிறங்குவதைத் தவிர்த்து உள்ளது அல்லது அப்படியான நிகழ்வு நடந்ததாக பதியவில்லை. எப்படியிருந்தாலும், இது இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆகும். விஜயாவின் வருகை, நாம் முன்பு கூறப்பட்டது போல, கட்டாயம் ஒரு கட்டுக்கதை. மேற் கூறிய நாளாகமம்களின் துறவி ஆசிரியர்கள் தங்கள் சொந்த நலனை மேம்படுத்த எந்த அளவிற்குச் செல்வார்கள் என்பதை இவை காட்டுவதாகும். ஒரு உதாரணமாக, கருணையுள்ள புத்தர் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வருகைக்காக இலங்கையை தயார்படுத்தினார் என்று யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஒரு குற்றவாளி புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கும் வரை, அவர் செய்த எந்தவொரு குற்றச் செயலும் மகிமை வாய்ந்தது என்பது துறவி எழுத்தாளர்களின் வரலாற்று மரபு போல் தெரிகிறது. அது தான் விஜயன், துட்டகைமுனு மற்றும் அசோகன் போன்றவர்களின் நிலையாக இலங்கை நாளாகமம்களில் தெரிகிறது! மாறாக, ஒரு ஆட்சியாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவர் ஒரு பௌத்தராக இல்லாவிட்டால் கொல்லப்பட வேண்டும். இதற்கு ஒரு பொதுவான உதாரணம் இந்து அல்லது சைவ மத எல்லாளன் மன்னனாகும். தீபவம்சத்தின்படி மிகவும் பாராட்டத்தக்க பெருமைமிக்க ஆட்சியாளர் எல்லாளன் ஆகும். அவர் ஒப்பற்ற மன்னராக, தீபவம்சம் 18-50. இல் காண்கிறோம். அதாவது, தீபவம்சம் 18- 49. "எல்லாளன்" எனும் ஒரு இளவரசன், அசேலனைக் [Asela] கொன்று, நாற்பத்திநான்கு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தான். 50. காமம், வெறுப்பு, பயம் மற்றும் அறியாமை ஆகிய நான்கு தீய வழிகளைத் தவிர்த்து, இந்த ஒப்பற்ற மன்னன் தன்னிச்சையற்ற நீதியுடன் ஆட்சி செய்தான் என்கிறது. மற்றொரு நாளாகமம் மகாவம்சமும் எல்லாளனைக் கொன்றதை உயர்த்தி, ஆனால் அவரை ஒரு நீதியான ஆட்சியாளராக ஒப்புக்கொள்கிறது. தீபவம்ச ஆசிரியருக்கு அபயாவால் [Abhaya] அல்லது துட்டகைமுனுவால் எல்லாளன் கொல்லப்பட்டதை விவரிப்பது கடினமாக இருந்திருக்க வேண்டும், அதனால் அவர் அதை விவரிப்பதைத் தனது நாளாகமத்தில் தவிர்த்து உள்ளார் போலும். 'Eleven years in Ceylon - in two volumes by Major Forbes, First published 1840. AES Reprint 1994 / Comprising Sketches of the Field Sports and Natural History of that Colony, and an Account of Its History and Antiquities,'' என்ற நூலின் பக்கம் 176 இன் படி, ஆதாமின் சிகரத்தில் அல்லது ஸ்ரீ பாதத்தில் அல்லது சிவனொளிபாத மலையில் [Adam’s Peak / Sri Pada] உள்ள புத்தரின் இடது பாதத்தின் அளவு ஐந்து அடி ஏழு அங்குல நீளமும் இரண்டு அடி ஏழு அங்குல அகலமும் கொண்டது. மேலும் வலது பாதம் தாய்லாந்தில் உள்ள ஃபிரா சாட்டில் [Phra Sat in Thailand] உள்ளது என நம்பப்படுகிறது. புத்தர் ஒரு மனிதர், அவரது பாதங்கள் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. அது அபத்தமானது; ஒருவர் அதன் மீது தூங்கலாம். உண்மையில், அது தூங்கும் நோக்கத்திற்காக, சமண குருவுக்காக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பௌத்த இதிகாசமான மணிமேகலையின் நாயகியான மணிமேகலை, இந்த சம்மண மலைக்கு [Sammana Malai / Jain hill /also spelled Samanamalai or Samanala Malai] வருகை தந்தார். சம்மண மலை என்றால் இந்த மலை சமணர்களுக்குச் சொந்தமானது ஆகிறது. இலங்கையில் புத்த மதம் வருவதற்கு முன்பு, சமணர்களுக்கு, மலையின் உச்சியில் ஒரு படுக்கையை யாரோ தயார் செய்தனர். மணிமேகலை கூட புத்தரின் பாதங்களை வணங்க சம்மண மலைக்கு ["Jain hill "] வந்தார் என கூறப்படுகிறது. சமணர்கள் எல்லாவற்றையும், அவமானத்தையும் கூட கைவிட்டனர். அதாவது சமணர்கள் ஆடை அணியாமல் இருந்தும் அதை நாணுதற்குரிய செயலாகக் என்றும் கருதவில்லை. அது மட்டும் அல்ல, குளிக்க மாட்டார்கள், பல் துலக்க மாட்டார்கள். வேறு எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் வாழும் இடங்களிலிருந்து விலகி வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் படுக்கைகள் பல உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. Part: 122 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" Vijaya was banished from his own land by his own father, and forced to drift on a boat along with his companions who are of same characters. The boat aimlessly reached Suppara, probably on the western coast of India, and the people Suppara hospitably received them. There too they displayed their inborn behaviours: of barbarous deeds, theft, adultery, falsehood and slander. The people of Suppara wanted to kill Vijaya and his companions. Then they escaped, and landed in Bharukaccha and did the same evil deeds for three months, Dipavamsa 9-26. [26. Vijaya, having stopped three months at Bhārukaccha and exasperated the inhabitants, went again on board his ship. 27. That crowd of men having gone on board their ship, sailing over the sea, were driven away by the violence of the wind, and lost their bearings. 28. They came to Laṅkādīpa, where they disembarked and went on shore. Standing on dry ground, being exhausted by great hunger, thirst and fatigue, they were unable (?) to walk on foot.] Then they landed in Lankadipa. The Mahavamsa omitted the landing in Bharukaccha or the Dipavamsa added this. Either way, it is an anomaly. Vijaya’s arrival is a myth as stated elsewhere. The above paragraph is to show that to what extent that the monkish authors would go to advance their own interest. Could anyone imagine that the compassionate Buddha prepared Lanka for the arrival of convicted criminals? The monkish chronicle tradition is that any criminal behaviour is glorious so long as the criminal is connected with the Buddhism. Conversely, however good a ruler is, he shall be killed if he is not a Buddhist. The typical example is the ruler Elara. The most praiseworthy ruler, as per Dipavamsa, is Elara. He was described as; incomparable monarch, Dipavamsa 18-50. [49. A prince, Elāra by name, having killed Asela, reigned righteously forty-four years. 50. Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously.] The other Chronicle Mahavamsa too exalts the killing of Elara while acknowledging him a just ruler. The Dipavamsa author must have found it hard to describe the killing of Elara by Abhaya, he simply avoided describing it. As per the page 176 of the Reference 'Eleven years in Ceylon - in two volumes by Major Forbes, First published 1840. AES Reprint 1994 / Comprising Sketches of the Field Sports and Natural History of that Colony, and an Account of Its History and Antiquities,', the size of the Buddha’s left foot on Adam’s Peak / Sri Pada is five feet seven inches in length and two feet seven inches in breadth, the right footprint being at Phra Sat in Thailand. The Buddha was a human, and his footsteps cannot be this big & It is ridiculously excessive; one can sleep on it. In fact, It look like, it must have been prepared for the sleeping purpose. Mannimeghalai, the heroine of the Tamil Epic Mannimeghalai which is a Buddhist epic, visited this Sammana Malai. Sammana Malai means the hill belongs to Sammanars; to Jains. Someone prepared a bed on top of the hill to Sammannars, to Jains, prior to the advent of Buddhism in Lanka. Even Mannimeghalai came to Sammana Malai ["Jain hill"] to worship Buddha’s feet. Jains forsook everything, even shame, and do not wear anything. Do not bathe, do not brush teeth etc. They do not do anything which may harm any other living being. They used to live away from the living quarters. There are many such stone beds in Tamil Nadu. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 123 தொடரும் / Will follow துளி/DROP: 2072 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 122 https://www.facebook.com/groups/978753388866632/posts/34120392554275955/?
  4. இந்த ஈரான் கப்பல்... காத்தான்குடி இணைய போராளிகளை, ஈரான் போருக்கு அழைத்துப் போக வந்ததாக சொல்கிறார்கள். 😂 அதனை கேள்விப்பட்ட அமெரிக்கா... இதனை தாட்டுப் போட்டுதாம். 🤣
  5. RESULT 1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup South Africa 169/8 New Zealand (12.5/20 ov, T:170) 173/1 New Zealand won by 9 wickets (with 43 balls remaining) Finn Allen* rhb 100 33 10 8 303.03 31 (7b) 24 (5b) Rachin Ravindra lhb 13 11 2 0 118.18 அடுத்த பக்கம் சம்பியன் கனவில் இருப்பவர்கள் பீதியாகப்போகிறார்கள் அண்ணை!
  6. அண்ணை, போர்க் கப்பலா / பெயருக்குக் கப்பலா / காகிதக் கப்பலா?!
  7. அதுகள் பாவங்கள்😂… நீர்மூழ்கி கப்பல் கொழும்பு ஹாபருக்கு வந்து போனாலும் அவைக்கு தெரிய வருமோ தெரியாது😂 தவிர எல்லாருக்கும் நண்பனான எமக்கு இதென்னடா சோதனை - பேசாம விபத்து என முடிப்பம் என நினைத்திருக்க கூடும். ஆனால் அமெரிக்கா உரிமை கோரியதோடு வீடியோவும் வெளியிட்டுள்ளது. 2ம் உலக போரின் பின் நீர்மூழ்கியால் மூழ்கடிக்க பட்ட முதல் கப்பல் இதுவாம். இதேபோல் ஹொர்ர்ம்ஸ் நீரிணையை மூடுவோம் என மிரட்டி, அதை நடைமுறை படுத்த ஈரான் நம்பி இருந்த போர் கப்பலும், ஈரானின் பெரிய கப்பல் தளமான பந்தா அப்பாசின் வாயிலில் ஜெகஜோதியாய் ஏரிகிறது.
  8. ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு Mar 4, 2026 - 09:28 PM இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட 'ஐரிஸ் டேனா' கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, இன்று (04) பிற்பகல் நடைபெற்ற மத்திய கிழக்கு நெருக்கடி தொடர்பான ‘அத தெரண’ விசேட நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்ட வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, காணாமல் போனவர்களில் 80 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஈரான் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 80 பேரின் சடலங்கள் மீட்பு
  9. 19 பந்துகளில் 50 அடித்த பிஃன் அலன். பயபுள்ள!!!
  10. எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை 04 Mar, 2026 | 05:16 PM எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறையை மீண்டும் அமுல்படுத்துமாறு வடக்குமாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது எமது பகுதிகளில் எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள், நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவை பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எரிபொருள் பெறுவதற்கு 3 அல்லது 4 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்ற எரிபொருள் அவசியமாகவுள்ளது. எனவே எரிபொருள் விநியோகத்தைச் சீரமைத்து தேவைக்கேற்ப நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க QR குறியீட்டு நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கோருகின்றோம் இக் கோரிக்கையைக் கருணையுடன் பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம் என்றுள்ளது. எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் - வடக்கு மாகாண அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை
  11. நிசியின் இருவரும், இணைப்பாட்டமாக, இதுவரை 463 ஓட்டங்கள் மொத்தமாக அடித்துவிட்டார்கள். இன்று இரண்டாவது 100 ஓட்ட இணைப்பாட்டம். எல்லா உலகக் கோப்பையிலும், இதுதான் அதிகூடிய இணைப்பாட்டமும்.
  12. அண்ணை, அப்ப இலங்கைக் கடற்படை மறுத்தான் விட்டது ஏன்?
  13. சிலரை தூக்குவது…. சிலரை போடுவது…. இன்னும் சிலரை மோஸ்கோ வரை விரட்டுவது…. இவர்களுக்கு எல்லாம் அபயம் அழிப்பதாக சொன்னவரை, ஒரு காலத்தில் சிரியாவில், மாலியில் ஒரு நவ காலனியை நடத்தியவரை, இதையெல்லாம் பார்க்க வைத்து விரக்தியாகி தற்கொலைக்கு தூண்டுவது😂. அல்லது கடாபி போல் அவர் மக்களே அவருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பி வைப்பது. இதுதான் மொசாட்டின் பிளான்😂. ஆனால் இவரிடம், அவரின் பிடி இருப்பதால் இன்னும் மூன்றரை வருடம் பொறுக்க வேண்டும்.
  14. இரான் மதம் (வெறி) என்றால் ( அப்படி உண்மையில் இல்லை), அது ஒவ்வொரு தனிமனிதனும் அல்லாஹ்விடம் அல்லது அவர்கள் கருதும் சொர்க்கத்துக்கு போவது. ஜிகாதில் கூட தனிமனிதனின் (ஆன்மிக) விடுதலையை எப்படி அடைவது என்பது. அனால், இந்த சுனி இஸ்லாமே , அதை (இராணுவ) தற்கொலை தாக்குதலுக்கு உசுப்பேற்ற பாவிக்கும் பயிற்சி முறையை கொண்டு வந்தது. (ண்மையில், ஈரான் ஷியா முஸ்லிம்கள் வரலாறு அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள், அழிக்கப்பட்டவர்கள்) ஆனால் இந்த விவிலிய பிரளய கிருமிகள் சொல்வது, (இயேசு திருப்பி பூமியில் வர ) கூண்டோடு முழு மனித குலமுமும் அழிய, சொற்ப்பமானவர்கள், அவர்களை பொறுத்தவரை புண்ணியம் செய்தவர்கள், இயேசுவை காணும், யேசுவுடன் பூமியில் வாழும் பாக்கியத்தை பெற்றவர்களே எஞ்சி இருப்பார்கள் என்று. (எது மிகுந்த ஆபத்தானது? அத்துடன் இந்த விவிலிய பிரளய கிருமிகள் இடம் அணுஆயுதங்களும் உள்ளன) டிரம்ப் மாற்ற்ம் குழாம், இஸ்ரரேல் இப்பொது ஈரானை அடிப்பதில் அடிப்பதில். இதுவம் ஒரு பங்கு. அதாவது இந்த விவிலிய பிரளய நம்பிக்கை. அல்லது அதை போன்ற, இப்படியான வேறு பிரளய கருத்துருவாக்கமும் Genesis இருக்கிறது என்றே நினைக்கிறன். இதனால் தான், டிரம்ப் க்க இப்போதும் என் இரான் மீது யுத்தம் அமெரிக்காவால் தொடுக்கபட்டதுக்கான காரணத்தை சொல்ல முடியாது இருப்பது. டிரம்ப் வெளியில் சொன்னது எல்லாமே பொய் (அடிப்பதற்கு முதல் நாள் ஒமானின் பேச்சுவார்த்தை மதியஸ்தர் / வசதிப்படுத்தும் அதிகாரி ஸ்டீவ் விட்கப், ஜாரெட் கிருஷ்னர் ஐ நம்பாது, பகிரங்கமாக சர்வதேச தொலைக்காட்சி ஊடகங்களை பாவ்வித்து சொல்லி இருந்தார், இரான் இணக்கப்பாட்டுக்கு வந்து இருப்பதாக. ஓமான் அமெரிக்காவையே குற்றம் சாட்கிறத்து, பேச்சவார்த்தையை இரானை ஏய்க்காட்டியதாக, அப்படியான கருத்து பட) இரானை அடுத்து எந்த நாடுகள் என்று இஸ்ரேல் வெளியில் சொல்லி விட்டது, துருக்கி, பாகிஸ்தான் என்று. (இது டிரம்ப் இன் நேட்டோ இல் இருந்து விலத்தவது என்பதுடன் ஒத்து போகிறது) (ஈரான் இஸ்லாமிய குடிஅரசு என்றாலும், இரானின் எந்த அரச படைகளும் இப்படியான மத பிரளயங்களை பாவித்து படைகளை உசுப்பேற்றுவது இல்லை, இரானின் தேசியவாதத்தையே பாவிக்கிறது )
  15. ஈரானுடனான போரினால் இஸ்ரேலுக்கு வாராந்தம் 2.9 பில்லியன் டொலர் இழப்பு Mar 4, 2026 - 08:05 PM ஈரானுடனான போர் நிலைமை காரணமாக இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் இழப்பு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, போரினால் நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியமை, அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டே இந்தப் பாரிய நிதி இழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மோதல் நீண்ட காலம் தொடருமானால், இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளும் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmmc4ydbp000f356plfnsd6sa
  16. குழு நிலைப் போட்டிகளில், நியுசிலாந்து 175 அடிக்க தெ.ஆ 17 பந்துப் பரிமாற்றங்களிலேயே துரத்திப் பிடிச்சவை. இப்போ நிசி, அதைத் திருப்பிச் செய்யினம்
  17. எனக்கு புள்ளிகளை கணக்குப் பார்க்கும் வேலை இன்று இல்லை!
  18. பவர் பிளேயில, 84 ஓட்டங்கள். அலன் ஆறாவது பந்துப் பரிமாற்றத்தில் ஐந்து பந்துகளை எல்லைக்கு அனுப்பி விட்டார்.
  19. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம் Mar 4, 2026 - 07:26 PM போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஈரானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது. "இந்தத் தாக்குதல்கள்... எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானவையாகும்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்படுவது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு என இந்த விசாரணைக் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்
  20. Today
  21. விபத்தல்ல. நீர்மூழ்கியில் இருந்து டோர்பிடோவால் தாக்கியுள்ளனர். அண்மையில் விசாகபட்டினத்தில் நடந்த கடல் படை கண்காட்சியில் பங்கெடுத்து விட்டு, நாடும் திரும்பும் போது தாக்கப்பட்டுள்ளது.
  22. தென்னாபிரிக்காவும் பிடிகளை எல்லாம் விடினம்.
  23. “மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை” நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் March 4, 2026 டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் சடலத்தை அங்கு வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறி டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹட்டன் ஏபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதுடைய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சடலத்தை கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் மூன்று சிற்றூழியர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் செய்வது மனநல மருத்துவத்தில் “நெக்ரோபிலியா” (Necrophilia) என அழைக்கப்படுகிறது. இது ஒரு அரிதான மற்றும் கடுமையான பாராபிலிக் குறைபாடாக கருதப்படுகிறது. காரணம், மரணமடைந்த நபர் ஒப்புதல் (consent) வழங்க முடியாது என்பதே ஆகும். மனநல மருத்துவ வரையறைகளின்படி, ஒப்புதல் அளிக்க முடியாத நபரை மையமாகக் கொண்ட பாலியல் ஈர்ப்பு ஒரு குறைபாடாக வகைப்படுத்தப்படுகிறது. அடிப்படை உளவியல் காரணிகள் நெக்ரோபிலியாவிற்கு ஒரே காரணம் இல்லை. பல உளவியல் காரணிகள் இணைந்து செயல்படலாம். (A) முழுமையான கட்டுப்பாட்டு உந்துதல் சிலருக்கு உறவு சார்ந்த அச்சங்கள் அதிகமாக இருக்கலாம் உதாரணமாக நிராகரிப்பு பயம், நெருக்க உறவு உருவாக்க இயலாமை, பாலியல் செயல்திறன் குறித்த பதட்டம் போன்றவை. ஆனால் மரணமடைந்த உடல் எதிர்ப்பு காட்டாது, தீர்ப்பளிக்காது, மறுக்காது. இதனால் “முழு கட்டுப்பாடு” என்ற உணர்வு உருவாகலாம். இது உறவு சார்ந்த உளவியல் குறைபாடுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம். (B) இணைப்பு (Attachment) கோளாறு சிறுவயதில் பாசக்குறைவு, பாதுகாப்பற்ற இணைப்பு, உணர்ச்சி புறக்கணிப்பு இவற்றால், நபர் உண்மையான மனித உறவுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான (ஆனால் அசாதாரணமான) கற்பனை உலகில் ஈடுபடலாம். (C) Conditioning (பழக்கமாதல்) பாலியல் தூண்டுதல் சில சமயங்களில் குறிப்பிட்ட சூழல்களுடன் இணைக்கப்பட்டு பழக்கமாக மாறலாம். உதாரணமாக மரணம் தொடர்பான அனுபவங்கள், மோர்ச்சரி வேலை சூழல் போன்றவை. (D) ஆளுமைக் கோளாறுகள் சில சந்தர்ப்பங்களில் சமூக விரோத ஆளுமைக் கோளாறு, சாடிசம் (Sadism), மனச்சாட்சி குறைவு போன்ற ஆளுமைக்குறைபாடுகள் இவ்வாறான நடத்தைகளில் ஈடுபடுபவர்களிடத்தில் காணப்படலாம் . இருப்பினும், எல்லா நெக்ரோபிலிக் நடத்தைகளும் ஆளுமைக் கோளாறுடன் தொடர்புடையவை அல்ல. (E) மனவெறுக்கோளாறு (Psychosis) மிக அரிதாக கடுமையான மனவெறுக்கோளாறு, மாயநம்பிக்கைகள் போன்ற நோய் நிலைமைகளினால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம் நரம்பியல் (Neurobiological) காரணிகள் நரம்பியல் பார்வையில், பாலியல் உந்துதல் மூளையின் சில முக்கிய பகுதிகளுடன் தொடர்புடையது: Hypothalamus – பாலியல் உந்துதல் கட்டுப்பாடு Limbic system – உணர்ச்சி செயலாக்கம் Prefrontal cortex – தீர்மானம் மற்றும் சமூக கட்டுப்பாடு சில ஆய்வுகள், தன்னாட்சி கட்டுப்பாட்டின் குறைவு (impulse control deficit) மற்றும் உணர்ச்சி செயலாக்க கோளாறுகள் அசாதாரண பாலியல் நடத்தைக்கு காரணமாக இருக்கலாம் என முன்வைக்கின்றன. வகைப்பாடு சில உளவியல் ஆராய்ச்சியாளர்கள் நெக்ரோபிலியாவை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர் முதன்மை நெக்ரோபிலியா – பிரதான பாலியல் விருப்பம் வாய்ப்புச் சூழ்நிலை – கொலைக்குப் பிறகு திடீர் உந்துதல் கற்பனை மட்டுமே சட்டப் பார்வை மரணமடைந்த உடலுடன் பாலியல் செயல் (post-mortem sexual act) என்பது சட்டரீதியாக மிகவும் கடுமையான விஷயம். இலங்கையில் இது குறித்து தனித்துப் “necrophilia” என்ற பெயரில் பிரிவு இல்லாவிட்டாலும், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் தண்டனை சட்டத்தின் பிரகாரம் (a) Section 365 – “Unnatural offences” பழமையான பிரிவாக இருந்தாலும், மனித உடலுடன் இயற்கைக்கு மாறான பாலியல் செயல் மேற்கொண்டால் குற்றமாகப் பார்க்கப்படும். மரணமடைந்த நபருடன் நடந்த பாலியல் செயலும் இப்பிரிவின் பரப்பளவுக்குள் வரலாம். (b) Section 292 – Trespassing on burial places கல்லறை அல்லது அடக்கம் செய்யப்பட்ட இடங்களை அவமதிக்கும், கல்லறையை சேதப்படுத்தும் அல்லது சடலத்தை அசட்டையாக கையாளும் செயல்கள் குற்றமாகும். (c) Section 346 – Causing disappearance of evidence மரணத்திற்குப் பிந்தைய பாலியல் செயல், முன் நடந்த குற்றத்தை மறைக்க மேற்கொள்ளப்பட்டதாக இருந்தால், ஆதாரங்களை மறைத்தல்/மாற்றுதல் குற்றமும் சேர்க்கப்படும். சட்டரீதியான நிலைப்பாடு மரணமடைந்த நபர் ஒப்புதல் வழங்க முடியாததால், இது “ஒப்புதல் இல்லாத செயல்” என கருதப்படும். மனித மரியாதை (human dignity) மரணத்திற்குப் பின்பும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது நெக்ரோபிலியா என்பது மிகவும் அரிதான, கடுமையான மற்றும் சட்ட ரீதியாக தண்டனைக்குரிய பாராபிலிக் குறைபாடாகும். இது இயல்பான மனித பாலியல் நடத்தை அல்ல. இதன் பின்னணி உளவியல், நரம்பியல் மற்றும் சமூக காரணிகளின் சிக்கலான ஒருங்கிணைப்பாகும். இந்நிலையைப் புரிந்து கொள்ளும் போது மருத்துவ அறிவு, நீதிமுறை உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை ஒன்றிணைந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும். Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) “மரணத்திற்குப் பின்னரான பாலியல் வன்முறை”
  24. தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தின் படி 170 ஒரு நல்ல இலக்கு. நியுசிலாந்து ஆரம்ப துடுப்பர்கள் நல்ல தொடக்கம் குடுக்காட்டி, கஸ்டம்.
  25. இலங்கை தெற்கு கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் ? - 101 பேர் மாயம், 78 பேர் காயம் Published By: Digital Desk 3 04 Mar, 2026 | 05:40 PM இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில், குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளதுடன், 78 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 180 பேருடன் பயணித்த இந்த 'மௌஜ்' (Moudge) ரக போர்க்கப்பல், இன்று விடியற்காலை காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் வைத்து அபாய சமிக்ஞையை விடுத்துள்ளது. வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலொன்றிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை அல்லது தாக்குதல் காரணமாக கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. ஈரானியக் கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட அவசர உதவி அழைப்பை (Distress Call) தொடர்ந்து, இலங்கை கடற்படை உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளிநாட்டு செய்திச்சேவையொன்றுக்கு தெரிவித்துள்ளார். கப்பல் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் உரையாற்றும் போது, மூழ்கிக் கொண்டிருந்த போர்க்கப்பலில் இருந்து குறைந்தது 30 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை. இலங்கை தனது கடற்பரப்பு பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் சட்டங்களுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாக்குதலுக்குள்ளான போர்க்கப்பல், ஈரானின் தெற்கு கடற்படைக்குச் சொந்தமான ‘மௌட்ஜ்-கிளாஸ்’ (Moudge-class) ரகத்தைச் சேர்ந்த ‘IRIS Dena’ என அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கப்பல் தெற்கு கடலோர நகரமான காலிக்கு அருகில் இருந்து அவசர உதவி சமிக்ஞையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அண்மைக் காலங்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளன. இந்த வாரத்தின் தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் 10 ஈரானியக் கப்பல்களை மூழ்கடித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், அவை எந்த கடற்பரப்பில் இடம்பெற்றன என்பது குறித்து அவர் விவரம் வழங்கவில்லை. இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் கவலைக்குரியதாகக் கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை செய்திகள் இதேவேளை, “இலங்கை கடற்படையாகிய நாம் தாக்குதல் தொடர்பான செய்திகளை முழுமையாக நிராகரிக்கிறோம். இச்சம்பவம் தற்போதைக்கு விபத்தாகவே கருதப்படுகிறது,” என இலங்கை கடற்படையின் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தெற்கு கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் ? - 101 பேர் மாயம், 78 பேர் காயம்
  26. யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது ! 04 Mar, 2026 | 04:59 PM யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர். டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ். ஏழாலை பகுதியில் 800 லீட்டர் டீசல் பதுக்கல்: இருவர் கைது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.