All Activity
- Past hour
-
செவ்வாய்க்குப் பதிலாக நிலவில் முதலில் ஒரு நகரை நிறுவுவது என ஈலோன் மஸ்க் தனது திட்டத்தை மாற்றியது ஏன்?
செவ்வாய்க்குப் பதிலாக நிலவில் முதலில் ஒரு நகரை நிறுவுவது என ஈலோன் மஸ்க் தனது திட்டத்தை மாற்றியது ஏன்? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈலோன் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏன் தனது கவனத்தை செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்கும் திட்டத்திலிருந்து நிலவில் நகரத்தை உருவாக்குவதற்கு மாற்றியது என்று விளக்கினார் கட்டுரை தகவல் லூயிஸ் பாருச்சோ பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் 24 பிப்ரவரி 2026, 03:03 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நிலவில் ஒரு "சுயமாக இயங்கும் நகரம்", இது 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் சாத்தியமாகக்கூடும் - இதுவே ஈலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட திட்டமாகும். எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைவரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான மஸ்க், எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை தெரிவித்திருந்தார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவதிலிருந்து தனது கவனத்தை நிலவில் நகரத்தை உருவாக்குவதற்கு மாற்றியுள்ளதாகக் கூறினார். ஆனால் மஸ்க் ஏன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்? நிலவில் அமையவிருக்கும் இந்த "சுயமாக இயங்கும்" நகரம் பற்றி நமக்கு என்ன தெரியும்? செவ்வாய்க்குப் பதிலாக நிலவு சுயமாக இயங்கும் நகரத்திற்கான வரைபடங்களுடன் கூடிய முறையான, முழுமையான விரிவான திட்டம் இன்னும் இல்லை, மாறாக மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை மட்டுமே இது. நிலவிற்கு அடிக்கடி விண்கலங்களை ஏவுவதன் மூலம், நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி படிப்படியாக விரிவடையக்கூடிய ஒரு நிரந்தர மனிதக் குடியிருப்பை நிறுவுவதை அவர் விவரித்தார். "நிலவில் இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் சாதிக்க முடியும், அதே சமயம் செவ்வாய் கிரகத்தில் இதை சாதிக்க 20 ஆண்டுகளுக்கும் மேலாகும்" என்று தனது பதிவில் மஸ்க் கூறியிருந்தார். "ஸ்பேஸ்எக்ஸின் நோக்கம் மாறாமல்தான் இருக்கிறது. நமக்கு தெரிந்த பிரக்ஞையையும் (Consciousness), உயிரையும் நட்சத்திரங்களுக்கு விரிவுபடுத்துவதே அது." "ஒவ்வொரு 26 மாதங்களுக்கும் கிரகங்கள் நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்வது சாத்தியம் (ஆறு மாத பயண நேரம்)" என்று மஸ்க் விளக்கினார். இதற்கு மாறாக, "நம்மால் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் நிலவிற்கு விண்கலங்களை ஏவ முடியும் (இரண்டு நாள் பயண நேரம்)" என்றும் அவர் மேலும் கூறினார். "இதன் பொருள், செவ்வாய் நகரத்தை விட நிலவு நகரத் திட்டத்தை நம்மால் விரைவாக நிறைவேற்ற முடியும்." செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற மஸ்க்கின் நீண்டகால லட்சியத்தைத் தொடருவதே ஸ்பேஸ்எக்ஸின் நோக்கமாக உள்ளது. "சுமார் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் அதைச் செய்யத் தொடங்கும். ஆனால் நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே முதன்மையான முன்னுரிமை, அதற்கு நிலவு விரைவான வழி." என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதினார், மஸ்க்கின் ரசிகர்கள் மற்றும் அவரைப் பின்தொடர்பவர்கள், நிலவில் அந்த நகரம் எப்படி இருக்கும் என்பதற்கான ஓவியங்களை உருவாக்கிப் பகிரத் தொடங்கினர், சிலர் மஸ்க்கின் ஏஐ கருவியான க்ரோக்-ஐ பயன்படுத்தினர். மஸ்க்கின் இந்த கருத்துகள், இம்மாத தொடக்கத்தில் வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியை எதிரொலிக்கின்றன. அந்தச் செய்தி, ஸ்பேஸ்எக்ஸ் நிலவிற்கான பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், பின்னர் செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் மேற்கொள்ள முயலும் என்றும் முதலீட்டாளர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கிறது. மார்ச் 2027-இல் நிலவில் ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது இந்த மாற்றம், ஸ்பேஸ்எக்ஸின் முக்கிய இலக்காகச் செவ்வாய் கிரகத்தை மஸ்க் நீண்டகாலமாகக் கொண்டிருந்ததற்கு மாறாக உள்ளது. கடந்த ஆண்டு கூட, 2026 இறுதிக்குள் ஆளில்லா செவ்வாய் கிரக பயணத்தைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். "இல்லை, நாம் நேரடியாகச் செவ்வாய் கிரகத்திற்குச் செல்கிறோம். நிலவு என்பது ஒரு திசைதிருப்பல்," என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எக்ஸ் தளத்தில் பதிவொன்றுக்குப் பதிலளிக்கும் போது மஸ்க் கூறியிருந்தார். மின்சார வாகனங்கள் மற்றும் சுயமாக இயங்கும் தொழில்நுட்பம் போன்ற திட்டங்களுக்கு கடினமான காலக்கெடுவை மஸ்க் நிர்ணயித்த வரலாறு உண்டு. அவை பலமுறை திட்டமிட்டபடி நிறைவேறவில்லை. இது எப்படிச் சாத்தியமாகும்? பிரிட்டனில் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி பயன்பாடுகள், ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளர் சுங்வூ லிம், நிலவில் ஒரு தளத்தை அமைப்பதற்கான ஸ்பேஸ்எக்ஸின் திட்டத்தை "அதீத விருப்பம்" என்று விவரிக்கிறார், ஆனால் அது "அறிவியல் புனைகதை" அல்ல என்கிறார். "நிலவின் மண்ணைப் பயன்படுத்தி ஆக்சிஜன், நீர் மற்றும் கட்டுமானப் பொருட்களைத் தயாரிப்பது என்ற அடிப்படை யோசனை, நாம் ஏற்கனவே பூமியில் பயன்படுத்தும் தொழில்துறை செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது. தத்துவார்த்த ரீதியாக, இது செய்யக் கூடிய ஒன்றுதான்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். தீவிரமான வெப்பநிலை, நுண் தூசி, குறைந்த ஈர்ப்பு விசை மற்றும் மின்சாரம் ஆகியவற்றைக் கொண்ட நிலவின் கடுமையான சூழலில் அந்த அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியுமா என்பதுதான் சவால் என்று லிம் விளக்குகிறார். "நாம் அவற்றைச் சார்ந்து இருப்பதற்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் அவை சரியாகச் சோதிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார். மக்களின் பணம் மற்றும் நீண்ட அரசியல் சுழற்சிகளைச் சார்ந்துள்ளதால் அரசாங்க விண்வெளி முகமைகள் "எச்சரிக்கையுடன்" செயல்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். "இது அவர்கள் புதிய யோசனைகளை எவ்வளவு விரைவாகச் சோதிக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்துகிறது, ஸ்பேஸ்எக்ஸ் "வித்தியாசமாகச் செயல்படுகிறது" என்று அவர் கூறுகிறார். "அதன் புதிய ராக்கெட் அமைப்பு திட்டமிட்டபடி செயல்பட்டால், அதன் மூலம் அடிக்கடி மற்றும் குறைந்த செலவில் நிலவிற்கு உபகரணங்களை அனுப்ப முடியும், இது முன்னேற்றத்தை வேகப்படுத்தும்." இந்தியாவில் ஜி.டி. கோயங்கா பல்கலைக்கழகத்தின் விண்வெளி மற்றும் எரிசக்தி ஆய்வுகள் மையத்தின் இயக்குநர் உகுர் குவென் கூறுகையில், விரைவான மறுவிநியோகம் மற்றும் அவசரகால பதில் நடவடிக்கை ஆகிய காரணங்களால் ஆரம்பகால மனிதக் குடியிருப்புகளுக்குச் செவ்வாய் கிரகத்தை விட நிலவு சாதகமாக இருக்கிறது என்கிறார். "அங்கு உங்களுக்கு ஒரு வாழிடம் இருந்து ஏதேனும் தவறு நடந்தால், உங்களால் உடனடியாக ஒரு தொடர் பயணத்தை எளிதாக மேற்கொள்ள முடியும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார், பூமியிலிருந்து நிலவிற்கான பயணம் பொதுவாக "இரண்டு முதல் மூன்று நாட்கள்" ஆகும் என்பதையும் குறிப்பிட்டார். இருப்பினும், "உண்மையிலேயே சுயமாக இயங்கும் நிலவு நகரம்" என்பது இன்னும் தொலைதூர இலக்காகவே உள்ளது என்று டாக்டர் லிம் எச்சரிக்கிறார். "பூமியிலிருந்து ஊட்டச்சத்துக்களைக் கொண்டு வராமல் உணவுக்கான ஆதாரங்களை உருவாக்குவதும், அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படும் ஒரு மூடிய அமைப்பை உருவாக்குவதும் மிகவும் சிக்கலானது. அதற்கு அநேகமாகப் பல தசாப்தங்கள் ஆகும். எனவே இந்தத் தொலைநோக்கு பார்வை சாத்தியமானது, ஆனால் அது படிப்படியாக நடக்கும், ஒரே நேரத்தில் நடக்காது." அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் புவி அறிவியல் பேராசிரியரான கிளைவ் நீல், நிலவில் மனித ஆய்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். அவரும் இதை ஒப்புக்கொள்கிறார். "நிலவில் மலிவான விலையில் பிரித்தெடுக்கக் கூடிய வளங்கள் இருப்பதை நிரூபிப்பதற்கான ஒரு விரிவான வள-ஆய்வு திட்டத்தை நாம் மேற்கொள்ளும் வரை, அணுகக்கூடிய மற்றும் பிரித்தெடுக்கக் கூடிய வளங்கள் இல்லாமல் ஒரு 'சுயமாக இயங்கும்' நகரத்தை எங்கே அமைப்பது என்பதை நாம் தெரிந்துகொள்ளமுடியாது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஒரு "சிறிய நிலவு புற நிலையம்" தனக்கான ஆக்சிஜனைத் தயாரிக்கத் தொடங்கும் மற்றும் நீரையும் பிரித்தெடுக்கக்கூடும் என்பது "யதார்த்தமானது" என்று லிம் நம்புகிறார். "அது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார். நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும், தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் வானூர்தி மற்றும் விண்வெளிப் பேராசிரியருமான ஜெப்ரி ஹோஃப்மேன் கூறுகையில், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் (அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவை நிலவில் தரையிறங்கும் கலன்களை வெற்றிகரமாக உருவாக்கினால், "இப்போது நம்மால் நிலவுத் தளத்திற்கான தளவாட விநியோகத்தை நிர்வகிக்க முடியும்" என்று வாதிடுகிறார்.. "ஆனால் செவ்வாய் கிரகம் இன்னும் சற்று தொலைவிலேயே உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். நிலையான நிலவு வாழிடங்களை உருவாக்குவதன் மூலம் பெறப்படும் அனுபவம், இறுதியில் செவ்வாய் கிரகத்தில் ஒரு தளத்தை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று ஹோஃப்மேன் கூறுகிறார். குவெனும் இதை ஒப்புக்கொள்கிறார். ஒரு நிலவுத் தளம் நிறுவப்பட்டவுடன், செவ்வாய் கிரகத்தை அடைவது மிகவும் எளிதாகிவிடும், ஏனெனில் நிலவு "ஒரு படிக்கல்லாக" செயல்படும் என்று அவர் கூறுகிறார். அதிகரிக்கும் போட்டி பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இந்தத் தசாப்தத்தில் மனிதர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்பும் போட்டியில் அமெரிக்கா சீனாவுடன் மோதுகிறது இந்தத் தசாப்தத்தில் மனிதர்களை மீண்டும் நிலாவிற்கு அழைத்துச் செல்வதில் அமெரிக்கா சீனாவிடம் இருந்து போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில் மஸ்க்கின் கருத்துகள் வந்துள்ளன. 1972-இல் நாசாவின் அப்பல்லோ 17 விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு யாரும் நிலவின் மேற்பரப்பில் கால் வைக்கவில்லை. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தான் தலைமை தாங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-ஐ கையகப்படுத்தியுள்ளதாக மஸ்க் சமீபத்தில் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஸ்பேஸ்எக்ஸின் மதிப்பு 1 டிரில்லியன் டாலர் ஆகவும், ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 250 பில்லியன் டாலர் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விண்வெளியில் தரவு மையங்களை அமைக்கும் அவரது லட்சியத்திற்கும் உதவக்கூடும், ஏனெனில் அவை அதிக அளவிலான ஏஐ கம்ப்யூட்டிங்கைக் கையாளப் பயன்படுத்தப்படும் என்று நியூயார்க்கில் உள்ள பிபிசியின் மிஷெல் ஃப்ளூரி கூறுகிறார். ஸ்பேஸ்எக்ஸின் மிகப்பெரிய பங்குதாரரான மஸ்க், தனது நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான முன்னேற்பாடாக அவற்றைச் சீரமைத்து வருகிறார், ஸ்பேஸ்எக்ஸை பொது நிறுவனமாக்குவதை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது என்று நமது செய்தியாளர் மேலும் கூறுகிறார். இந்த நடவடிக்கை 50 பில்லியன் டாலர் வரை திரட்டக்கூடும், இது வரலாற்றிலேயே மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம், மஸ்க் விண்வெளியில் ஒரு மில்லியன் தரவு மையங்களை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தார், ஏஐ பயன்பாடு அதிகரிப்பதால் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தத் திட்டம் உதவும் என்று அவர் நம்புகிறார். ஆனால் சில நிபுணர்கள் இதில் சந்தேகம் கொள்கின்றனர். விண்வெளியின் வெற்றிடத்தில், ஏஐ மற்றும் தரவு சார்ந்த பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கிராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்களைக் குளிர்விக்கக் காற்று இல்லாததை ஒரு முக்கியச் சவாலாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த திங்கள்கிழமை, எக்ஸ் தளத்தில் ஒரு பயனரின் பதிவிற்குப் பதிலளித்த மஸ்க், இந்த ஆண்டு ஸ்பேஸ்எக்ஸின் வருவாயில் நாசாவின் பங்கு 5% க்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறினார். விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் பணியைக் கொண்ட நாசாவின் ஆர்டெமிஸ் நிலவுத் திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு முக்கிய ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyv9nprg3pgo
-
ஏராளன் started following மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்! , செவ்வாய்க்குப் பதிலாக நிலவில் முதலில் ஒரு நகரை நிறுவுவது என ஈலோன் மஸ்க் தனது திட்டத்தை மாற்றியது ஏன்? , யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்! and 5 others
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
காற்று இங்லாந் பக்கம் வீசுது ஹா ஹா😄...................
-
யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்!
யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்! 24 Feb, 2026 | 05:49 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு நிற HONDA ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, திருட்டு இடம்பெற்ற பகுதியில் இருந்த CCTV கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படம் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்: தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் (யாழ்ப்பாணம்): 071-8591329 பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவு (யாழ்ப்பாணம்): 071-2384310 https://www.virakesari.lk/article/239480
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
யாழுக்கு விஜயம் செய்தார் சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் Published By: Digital Desk 3 24 Feb, 2026 | 05:02 PM இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள 'ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், இன்று செவ்வாய்க்கிழமை (24) மதியம் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றனர். அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர். இதன்போது, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்ஜுக்கு பொன்னாடை போர்த்தி ஆளுநர், வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட 'சிவன் யாத்திரைப் பாதை' மற்றும் 'இராமாயண யாத்திரைப் பாதை' ஆகிய நூல்களையும் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'சிவ யாத்திரைப் பாதையில்' உள்ளடங்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரம் விளங்குவதுடன், ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்ட 'சிவன் யாத்திரை பாதை' நூலிலும் இவ்வாலயத்தின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ்பெற்ற 2025ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் தலைமை அமைப்பாளராகச் செயற்பட்ட சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜின் இந்தப் பயணமானது, இலங்கையின் இராமாயண மற்றும் சிவ யாத்திரைப் பாதைகளை மையப்படுத்திய ஆன்மீகச் சுற்றுலாவை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலிருந்து அதிகளவான பக்தர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 'சிவ யாத்திரைப் பாதையில்' உள்ளடங்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரம் விளங்குவதுடன், ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்ட 'சிவன் யாத்திரை பாதை' நூலிலும் இவ்வாலயத்தின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகப் புகழ்பெற்ற 2025ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் தலைமை அமைப்பாளராகச் செயற்பட்ட சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜின் இந்தப் பயணமானது, இலங்கையின் இராமாயண மற்றும் சிவ யாத்திரைப் பாதைகளை மையப்படுத்திய ஆன்மீகச் சுற்றுலாவை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலிருந்து அதிகளவான பக்தர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/239477
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முகமட் நவாஸ் போட்ட சுழல் பந்துக்கு இங்லாந் கப்டன் நல்ல அடி அந்த ஓவரில் 17ரன்ஸ் ஹா ஹா😄....................
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - அரசாங்க அதிபர் தெரிவிப்பு 24 Feb, 2026 | 03:09 PM வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல்அமைவதாகவும் , கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறப்புற அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் அரசாங்க அதிபரால் விரிவாக ஆராயப்பட்டது. இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு படைகளின் அதிகாரி லெப். கேணல் கே. எம். சி. எஸ். டி. கருணாதிலக, உதவி பொலிஸ் அத்தியகட்சகர் கொ. டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் .கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை), வைத்திய அதிகாரிகள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், படகு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/239464
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தகர்த்துவிட்டதா? பட மூலாதாரம்,Indranil MUKHERJEE / AFP via Getty Images படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடும் ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் அகேல் ஹொசைன். 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் திங்கட்கிழமை ( பிப்ரவரி 23 ) நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி வீரர்கள் விளாசிய அதிகப்படியான சிக்ஸர்களும், பவுண்டரிகளும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்வித்தன. வெஸ்ட் இண்டீஸின் ஆட்டத்தை ரசித்தவர்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் விளாசிய ஒவ்வொரு பந்தும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கடினமான பாதையை உருவாக்கும் என்பதை அவர்கள் எண்ணி இருக்க மாட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை எடுத்தது. இது டி20 ஆடவர் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். 2007ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருப்பது டி20 கிரிக்கெட்டின் அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கடினமாகிவிட்டது. சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 நிலவரம் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-இல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன. நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே தோல்வியடைந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி 5.35 என்ற நிகர ரன் ரேட்டுடன் (NRR) அந்தக் குழுவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது, அதன் நிகர ரன் ரேட் 3.80 ஆகும். இந்தியா -3.80 என்ற நிகர ரன் விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஜிம்பாப்வே -5.35 நிகர ரன் விகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன. இந்தியாவின் முன்னுள்ள சவால் பட மூலாதாரம்,Nikhil Patil/Getty Images படக்குறிப்பு,ஷிம்ரான் ஹெட்மயர் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். சூப்பர் 8 சுற்றில் குரூப் ஒன்றில் இந்தியாவுக்கு தற்போதுள்ள ரன் ரேட் அதன் பாதையை மிகவும் கடினமாக்கியுள்ளது. இந்தியா அடுத்தடுத்து விளையாடும் இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளையும் வெற்றி பெறுவது மட்டும் போதாது. மற்ற காரணிகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "ஆமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு வர முடியும். ஆனால் தென்னாப்பிரிக்கா தோற்றால், ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறுகிறார். "ஏனென்றால், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு அதில் எந்த வாய்ப்பும் இல்லை, ஏனெனில் இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது" என்று அவர் கூறுகிறார். இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக செயல்பட்டாலும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் நம்புகின்றனர். அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸின் தற்போதைய ஆட்டத்தை கருத்தில் கொண்டால், தென்னாப்பிரிக்கா அவர்களைத் தோற்கடிப்பது எளிதானதல்ல. இந்தத் தொடர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை 35 ரன் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 30 ரன் வித்தியாசத்திலும், நேபாளத்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், இத்தாலியை 42 ரன் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 107 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளனர். "வெஸ்ட் இண்டீஸ் அனைவருக்கும் மிகவும் வலுவான செய்தியை அனுப்புகிறது" என்று கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்லே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விளையாட்டுப்பிரிவு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா, "இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெல்லும் நிலை வந்தால், இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும், அதனால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனவே, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால், இந்தியா வெளியேறும் ஆபத்து இன்னும் அதிகரிக்கும். இதன்மூலம், மீதமுள்ள இரண்டு சூப்பர்-8 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். தனது முதல் சூப்பர் 8 போட்டியில், இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் விளைவாக இந்தியாவின் நிகர ரன் ரேட் -3.80 ஆக உள்ளது. இந்த மிகப்பெரிய தோல்வி இந்திய அணியை ஒரு நெருக்கடியான நிலையில் தள்ளியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதியில் இந்தியா இடம் பெறுவதை உறுதி செய்ய முடியாது. தனது குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவைப் பொருத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இறுதியாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77e6zlnk5vo
-
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்தார் அயோத்தி சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்தார் அயோத்தி சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் Published By: Digital Desk 3 24 Feb, 2026 | 04:23 PM இந்தியாவின் அயோத்தி நகரில் உள்ள சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (24) விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளை சந்தித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள கைஷானந்த் கிரிஜி மகாராஜ், பொதுமக்கள் மற்றும் மதகுருமார்களை கொண்ட 14 பிரதிநிதிகளை கொண்ட குழுவுடன் சேர்ந்து, இலங்கையில் உள்ள பல இந்து திருத்தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளார். அதன்படி இக்குழுவினர் வரலாற்று பிரசித்திப்பெற்ற கோவில்களான மன்னாரில் உள்ள திருக்கேதீச்சரம், யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம். நுவரெலியா சீதையம்மன் ஆலயம் மற்றும் பொலன்னறுவையில் உள்ள பழமையான கோட்டைகளையும் சிவாலயங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த பிரதிநிதிக் குழுவின் வருகை, இலங்கையின் மதச் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/239461
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அருமையா ஓடி போய் கைச்சை பிடித்தார்.................சுழல் பந்தில் கைச்சை விட்டு வேக பந்தில் அவுட்................................ .
-
திருகோணமலையில் இலங்கை இராணுவத்தின் இலவச வைத்திய முகாம்
திருகோணமலைவில் இலங்கை இராணுவத்தின் இலவச வைத்திய முகாம் 22வது நாளை நிறைவு 24 Feb, 2026 | 01:41 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச வைத்திய முகாம் இன்று செவ்வாய்க்கிழமை (24) திருகோணமலை 22வது படைப்பிரிவின் நடை பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான இலவச வைத்திய முகாம் இடம்பெற்றது. இம்மருத்துவ முகாமில், கண் பரிசோதனை சேவை இரத்த பரிசோதனை சத்துக்குறை மற்றும் உடல்நல பரிசோதனை இரத்த அழுத்த பரிசோதனை பல் பரிசோதனை சிறுநீர் பரிசோதனை மகப்பேறு மற்றும் குழந்தை நல ஆலோசனை பொதுமக்கள் சுகாதார ஆலோசனை சுகாதார விழிப்புணர்வு சேவை, ஆயுர்வேத மருத்துவ சேவை போன்ற பரிசோதனைகள் இடம்பெற்றன. https://www.virakesari.lk/article/239456
-
டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள்
ட்ரம்பின் உலகளாவிய வரி 10% ஆகக் குறைப்பு! Feb 24, 2026 - 08:47 PM அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி சதவீதம் இன்று (24) முதல் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய உலகளாவிய பரஸ்பர சுங்கவரி சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமையே இந்த சுங்கவரி மாற்றத்திற்குக் காரணமாகும். அமெரிக்காவின் சுதந்திர தினமாகக் குறிப்பிட்டு, இந்த உலகளாவிய பரஸ்பர சுங்கவரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தினார். எவ்வாறாயினும், குறித்த சுங்கவரியை அறிமுகப்படுத்தியதில் ஜனாதிபதி தனது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த வரிகள் சட்டவிரோதமானவை என அண்மையில் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று மணித்தியாலங்கள் முடிவடைவதற்கு முன்னரே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத உலகளாவிய சுங்கவரி விதிக்கப்படும் என வலியுறுத்தினார். பின்னர் அந்த சுங்கவரியை 15 சதவீதமாக அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். சுங்கவரி தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைத் தவிர்க்க முற்படும் நாடுகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தே அவர் இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, இன்று முதல் 10 சதவீத சுங்கவரி மாத்திரமே அமுல்படுத்தப்படவுள்ளது. 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122 ஆவது பிரிவின் பிரகாரம், காங்கிரஸின் அனுமதியின்றி 150 நாட்களுக்கு வரியை விதிப்பதற்காக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்க காங்கிரஸில் ஜனாதிபதி ட்ரம்ப் ஆற்றும் வருடாந்த உரை நாளை நடைபெறவுள்ளதுடன், இதன்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் புதிய சுங்கவரி தொடர்பில் ஜனாதிபதி மேலதிக கருத்துகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmm0r0r6b0010356pu5xdwsi4
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பட்லர் அவுட் பட்லர் நல்ல போமில் இல்லை😞 எனக்கு பிடிச்ச இங்லாந் வீரர்😍......................
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு விஜயம் 24 Feb, 2026 | 06:08 PM இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார். மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர். சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். பின்னர் இக்குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலயத்தின் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239455
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டிய மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது! Feb 24, 2026 - 11:36 AM எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னாரிற்குத் தெற்கு திசையில் இந்நாட்டு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர். இந்த இந்திய மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் குழுவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வு அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm07cgwx0008356phij3h4lq
-
இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு
பக்க விளைவுகள் குறைவானது என நினைக்கிறேன். கிருபன் அண்ணை பகிர்விற்கு நன்றி. Bali Pulendran Bali Pulendran (born in Sri Lanka in 1966) is an American and Australian immunologist. He is the Violetta L. Horton Professor at the Stanford University School of Medicine, and Director of the Institute for Immunity, Transplantation, and Infection[1] at Stanford University. He is a professor in the Department of Pathology, Department of Microbiology and Immunology, and Fellow at ChEM-H[2] (Chemistry, Engineering and Medicine for Human Health) at Stanford University School of Medicine, Stanford University. Education Pulendran received his undergraduate degree from Cambridge University, and his PhD from the Walter & Eliza Hall Institute in Melbourne, Australia, under the supervision of Sir Gustav Nossal. He then did his post-doctoral work at Immunex Corporation in Seattle, Washington.[3][4] Career After serving as a postdoctoral scholar at Immunex Corporation, Pulendran held assistant an associate professorships at the Baylor Institute for Immunology Research in Dallas, Texas and joined Emory University's faculty as an associate professor in 2002, at the Emory Vaccine Center. Promoted to full professor in 2004, he became director of Emory's innate immunity program in 2008, receiving the Charles Howard Candler chaired professorship that same year. He came to Stanford University as Violetta L. Horton professor in 2017. He was appointed director of Stanford Medicine's Institute for Immunity, Transplantation and Infection in 2024.[3][4] Research Pulendran's research has helped define major paradigms in vaccinology and immunology. Systems biological assessment of human immunity to vaccination and infection Pulendran pioneered the field of systems vaccinology to use systems biological approaches to probe immunity to vaccination and infection in humans.[5] In a study published in 2008,[6] Pulendran and team used systems biological approaches to predict the immune response to the yellow fever vaccine, one of the most successful vaccines ever developed. Using transcriptional profiling and machine learning, they identified early blood signatures that accurately predicted subsequent T-cell and antibody responses. This study provided proof of concept of the application of systems biological approaches to predicting vaccine responses and offered key mechanistic insights into vaccine immunity. Subsequently, he and several other groups have extended this systems vaccinology approach to studying immune responses to other vaccines such as those against COVID-19,[7][8] influenza,[9][10][11] shingles.[12] During the COVID pandemic, his group was amongst the first to apply systems biological approaches to analyzing the human immune responses to SARS-CoV-2.[13][14] They have further developed analytical tools such as blood transcriptional modules (BTMs)[15] and multiscale multiresponse networks (MMRNs)[12] to analyze multi-omics data. This research has revealed fundamental insights into mechanisms of immune regulation, such as the role of the microbiome on vaccine immunity in humans,[16][17] and the role of cholesterol metabolism in the antibody response to vaccination.[12][18] In recent studies, Pulendran and colleagues used a systems vaccinology approach to define a universal predictor of antibody responses to vaccination,[19] and discovered a molecular signature that predicts the durability of antibody responses to multiple vaccines in humans, along with the underlying immunological mechanisms.[20] The science and medicine of vaccine adjuvants Pulendran's group has also made major contributions to understanding the mechanism of action of vaccine adjuvants and designing novel adjuvants. They have revealed new mechanisms by which vaccine adjuvants induce durable[21][22] and broad[23] antibody responses. This work has revealed the capacity of a TLR7/8 ligand (3M-052) to stimulate remarkably durable antibody responses and bone marrow plasma cells, leading to its evaluation in the clinic.[22] Furthermore, their work has revealed new mechanisms by which adjuvants induce broad antiviral defense by epigenetic imprinting of innate immunity in myeloid cells.[11] Synergy between innate and adaptive immunity in protection against pathogens In addition, Pulendran's study in nonhuman primates demonstrating synergy between the cellular, humoral, and innate responses in mediating protection against HIV has invigorated the field to develop vaccines that mobilize the synergistic interactions between the innate and adaptive immune systems[.[24] More recently, he has developed this idea further to introduce the concept of 'integrated organ immunity'[25][26] to explain how the innate and adaptive immune systems and non-haematopoietic cells can interact in tissues to generate protective immunity against diverse pathogens in an antigen-agnostic manner. Considering immune responses through this framework could enable the design of a new class of vaccines termed 'universal vaccines' that are not pathogen specific.[25][26] Dendritic Cell Biology Earlier in his career, Pulendran discovered that dendritic cells (DCs), one of the key cell types orchestrating the immune response, consist of multiple subtypes, which are functionally distinct in their capacity to modulate T-helper 1/T-helper 2 responses in vivo.[27][28] This was the first evidence for functional specialization of DC subsets in vivo. He also discovered the mechanisms by which microbial stimuli program DCs to modulate T-helper responses,[29][30] and helped establish Flt3-Ligand as the key growth factor for DCs in vivo in mice and in humans.[29][31] He further elucidated the molecular mechanisms by which DCs mediate immunological tolerance,[32][33][34] and how metabolic sensors such as GCN2 and mTOR regulate DC function and innate immunity.[35][36][37] Awards and honors 2025 AAI-Ralph Steinman Award in Human Immunology[38] 2024 ViE Award for the Best Research Team at the World Vaccine Congress[39] 2024 Fellow of the American Association for the Advancement of Science[40][41] 2023 Invited Speaker, Nobel Symposium in Physiology or Medicine 2023, organized by Nobel Foundation, the Royal Swedish Academy of Sciences, Karolinska Institute 2020 Fellow of the European Society of Clinical Microbiology and Infectious Diseases (ESCMID)[42] 2017 – present Violetta L. Horton Professorship, Stanford University 2014 – present Thomson Reuters[43] (Clarivate) list of Highly Cited Researchers, 2014[44] (ranked amongst top 1% of researchers most cited for their subject during the past decade) 2013 – 2023 Scientific Advisory Board Member, Keystone Symposia 2011 – 2021 MERIT AWARD, NIDDK, National Institutes of Health[45] 2011 Albert E. Levy Award for Excellence in Scientific Research,[46] Emory University 2010 Member of the "Blue Ribbon Panel on Adjuvants,"[47] convened by Dr. Fauci at NIAID, NIH 2010 Millipub Club Award, Emory University[48] 2009 – 2019 MERIT AWARD, NIAID, National Institutes of Health[49] 2008 – 2011 Member of the AIDS Vaccine Research Subcommittee, NIAID, National Institutes of Health 2008 – 2017 Charles Howard Candler Professorship, Emory University[50] Over 50 keynote lectures, including: Keynote lecture at the 2025 Cold Spring Harbor Symposium on Systems Immunology;[51] President's Symposium at the annual meeting of the American Association of Immunologists (AAI) 2023; Peter Doherty Oration: Asia Pacific Vaccine and Immunotherapy Congress;[52] Mary Lou Clements-Mann Memorial Lecturer in Vaccine Sciences at the Annual National Foundation for Infectious Diseases meeting;[53] Opening Keynote Lecture, 3rd Institut Pasteur International Network Symposium, Paris, France;[54] Keynote, Speaker, Annual International Society for Vaccines (ISV) Congress, Quebec City https://en.wikipedia.org/wiki/Bali_Pulendran https://med.stanford.edu/profiles/bali-pulendran
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்லாந் தொடக்க வீரர் அவுட்😄😛......................
-
இலங்கை - ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் நிறுவும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்க இலங்கையில் உயர்மட்ட கலந்துரையாடல் : ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆராய்வு ! Published By: Priyatharshan 24 Feb, 2026 | 12:35 PM ( வீ. பிரியதர்சன் ) ஜப்பான் – இலங்கை வர்த்தக சூழல் தொடர்பான மூன்றாவது குழுக் கூட்டம் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி, இலங்கை முதலீட்டு சபையில் (BOI) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (JCCI), இலங்கையில் செயல்படும் ஜப்பான் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மேலும் இலங்கை முதலீட்டு சபை மற்றும் தொடர்புடைய இலங்கை அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலங்கையில் இயங்கி வரும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வர்த்தக மற்றும் முதலீட்டு சவால்கள் குறித்து இருதரப்பினரும் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பெப்ரவரி 16 ஆம் திகதி நடைபெற்ற இடராட்சி பொருளாதார கொள்கை கலந்துரையாடலை (Intergovernmental Economic Policy Dialogue) குறிப்பிட்ட ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார பிரிவு தலைவர் ஓஹாஷி கெஞ்சி, இலங்கையில் ஜப்பான் முதலீட்டை ஊக்குவிக்கும் வழிமுறைகள் மற்றும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், எதிர்கால ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வர்த்தக சூழலை உருவாக்குவதில் இந்தக் குழுவின் பங்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் இயங்கும் ஜப்பான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், இலங்கை முதலீட்டு சபை (BOI) மற்றும் அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கி வரும் நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஓஹாஷி கெஞ்சி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். ஜப்பான் – இலங்கை பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் இத்தகைய கலந்துரையாடல்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239450
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
164 நான் கணித்ததை விட ஒரு ரன்ஸ் குறைய அடிச்சு இருக்கினம் ஹா ஹா😄......................
-
இந்தோ - பசிபிக் பாதுகாப்பு முன்னுரிமை: கொழும்பில் சிறப்பு சைபர் பாதுகாப்பு பயிற்சி
இந்தோ - பசிபிக் பாதுகாப்பு முன்னுரிமை: கொழும்பில் சிறப்பு சைபர் பாதுகாப்பு பயிற்சி Published By: Priyatharshan 24 Feb, 2026 | 12:01 PM ( வீ. பிரியதர்சன் ) கடல்சார் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த, சைபர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது அவசியம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் (British High Commission Colombo) தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் University of Plymouth நிபுணர்கள், இலங்கையின் கடல்சார் துறை நிபுணர்களுடன் இணைந்து, கொழும்பிலுள்ள Regional Centre for Maritime Studies மையத்தில் சைபர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்டனர். கடல்சார் துறையில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். துறைசார் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து, கடல்சார் தகவல் அமைப்புகள், துறைமுக முகாமைத்துவம் மற்றும் கடற்பாதுகாப்பு அமைப்புகளில் உருவாகக்கூடிய சைபர் அச்சுறுத்தல்களை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றிய நடைமுறை விளக்கங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இந்த பயிற்சி நிகழ்வு, பிரிட்டன் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) Foreign, Commonwealth & Development Office இந்தியப் பெருங்கடல் சார் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டம், General Sir John Kotelawala Defence University உடன் கூட்டாண்மையில் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” (Free and Open Indo-Pacific) கொள்கையை ஆதரிக்கும் வகையில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது முக்கிய முன்னுரிமையாகக் கருதப்படுகின்றது. பிரிட்டன் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய கட்டமாக இந்த பயிற்சி அமைகின்றது என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239441
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அமெரிக்காவுக்கு கீழே தென்அமெரிக்கா என்று பல ஸ்பானிய நாடுகள் உள்ளன. எல்லாமே வறிய நாடுகள். முழு வெளி வேலைகள் கோட்டல் வேலைகள் புல்லு வெட்டுதல் கட்டட வேலைகள் தோட்டங்களில் பழங்கள் பறிப்பது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
165 நல்ல ஸ்கோர் அடிப்பது சிரமம்.................
-
மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்!
மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்! Feb 24, 2026 - 05:09 PM விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக முழுமையாக பொருத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப கணினி மையம் 2026 பெப்ரவரி 23ம் திகதி அன்று கையளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கற்றல் சூழலை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தில் 15 டெஸ்க்டாப் கணினிகள், யுபிஎஸ் அமைப்புகள் மற்றும் இணைய வசதிகள் போன்றவை உள்ளடங்கப்பட்டுள்ளன . இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நவீன கணினி வசதிகளைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும். இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள பல கிராமப்புற பள்ளிகளில் இந்தத் செயல்திட்டத்தினை நிறுவ இலங்கை விமானப்படையால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகளை மட்டக்களப்பு ரோட்டரி சங்கம் வழங்கியது, மேலும் கணினி வசதியின் திறப்பு விழாவில் விமானப்படை, மின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டி ஆராச்சி, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், குரூப் கேப்டன் சானக சூரியஆராச்சி, விமானப்படை அதிகாரிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சகிதம் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmm0j6k3s000q356pwb70t37v
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இடையில் நல்ல பாட்ன சிப் அடுத் அதடுத்து இரண்டு விக்கேட் இனி புது வீரர்கள் வந்து அடிச்சு ஆடுவதுக்கிடையில் ஓவர்கள் முடிந்துடும்.....................................
-
மேரி கொல்வின் - தமிழினம் மறக்காத வரலாற்றுப் பெயர்!
மேரி கொல்வின் அம்மையாருக்கு நினைவு அஞ்சலிகள்! 🙏
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.