All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே சூப்பர்8க்கு வந்தது பாராட்ட தக்கது ஆனால் வெஸ்சின்டிஸ் அணியிடம் படு தோல்வி................ சிம்பாவே இந்தியா கூட சென்னை மைதானத்தில் விளையாட போகினம் சென்னை மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அடிச்ச குறைஞ்ச ஸ்கோரை சிம்பாவே தான்டி விட்டது.................
-
செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை
செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள். அவர்களுடைய லட்சியம் செய்யறிவைக் கொண்டு வேலைகளை எந்திர முழுதியக்கம் (automate) செய்வது. இதனால் பல பணிகள் வேகமாக நடந்து முடியும் என்பதைவிட செலவில்லாமல் செய்ய முடியும் என்பதே அவர்கள் செய்யறிவைச் சந்தைப்படுத்த நிறுவனங்களிடம் நீட்டிய கேரட். கடந்த ஈராண்டுகளில் பல கார்ப்பரட் தலைவர்கள் செய்யறிவினால் மிகப்பெரிய வேலை இழப்பு வரும் என எச்சரித்தது இந்நோக்கில்தான். வேலையளிக்கும் நிறுவனங்களும் இதை நம்பினர். அவர்களுக்கு தமது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, லாபத்தைப் பெருக்கவும், ஏற்கனவே உள்ளவர்களை அச்சுறுத்தி அதிக வேலை வாங்கவும் இந்தப் பீதி உதவியது. இப்போது வேலையிழந்தவர்கள் சந்தையில் பெருகி விட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்படுத்துகிற மிகையால் ஒரு செயற்கையான போட்டி நிலவுகிறது என்றும், நேர்முகத்தின்போது உங்கள் வேலையை செய்யறிவே செய்துவிடும், நீங்கள் அதை நிர்வகித்தால் போதும், உங்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்று சொல்லி மனிதவளத்துறையினர் ஊதியத்தைக் குறைத்து பேரம் பேசுவதாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சொல்கிறார்கள். அதாவது இது ஒரு செயற்கையாக உண்டுபண்ணப்பட்ட பிரச்சினை - செய்யறிவினால் நிறுவனங்களுக்கு நட்டமே அதிகம், அவர்கள் மனித ஊழியர்களிடம் திரும்பவே விரும்புகிறார்கள், ஆனால் இப்போதைக்கு விட்டுப்பிடிக்கலாம், ஊதியத்தைக் குறைக்கலாம் எனக் கருதுகிறார்கள். இப்போது தானியங்கி செய்யறிவு (agentic AI) வந்து நம் பணிகளை அதுவே கேட்காமலே எடுத்துச் செய்யும், நம் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும், ஆவணங்களை உருவாக்கித் தொகுக்கும், நாம் அதை நிர்வகித்தால் மட்டும்போதும் என்கிறார்கள். ஆனால் இதுவும் வெற்று விளம்பரம்தானோ எனத் தோன்றுகிறது. செய்யறிவின் உண்மையான 'ஆற்றலை' நாமே நம் அன்றாடப் பணிகளில் காண்கிறோம் - அது வந்தபோது அதனால் பல புத்தகங்களை நொடிகளில் எழுத முடியும், இனி எழுத்தாளர்கள் தேவையிருக்க மாட்டார்கள் என்றார்கள். அதுவே சமூகவலைதளங்களில் எழுதும் என்றார்கள். திரைக்கதை எழுதும் என்றார்கள். இதையெல்லாம் செய்கிறதுதான் - ஆனால் தரமாக இல்லை. மாணவர்கள் இதைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கும் கட்டுரைகள் மேம்போக்காக, அர்த்தமற்று உள்ளன. இதனால் செய்யறிவு என்றாலே தரக்குறைவு எனும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. என் மாணவர் ஒருவர் செய்யறிவைக் கொண்டு ஏகப்பட்ட நூல்களைக் கிண்டிலில் வெளியிட்டுச் சம்பாதிக்கப் போவதாகச் சொன்னார். நான் அவரிடம் தரமின்மையை உள்ளடக்கத்தால் ஈடுகட்ட முடியாது, அத்தகைய பண்டங்கள் மதிப்பிழக்கும் என்றேன். அவ்வாறே நடந்தது. அவர் விரைவில் சோர்வடைந்தார். என்னதான் மின்நூல், பதிப்பு நூல் சந்தையில் செய்யறிவு பங்காற்றினாலும் அதனால் தரமான வெற்றிகரமான நூல்களை உருவாக்கி பெஸ்ட் செல்லர்களாக முடியவில்லை. செய்யறிவு ஏற்கனவே உள்ளதைத் திருடி அதைப் போலச் செய்கிறது. அதனால் புதிய கருத்துக்களை, கற்பனையை உருவாக்க முடிவதில்லை. அது ஒரு மேம்பட்ட நகல் எந்திரம். தான் எதிலிருந்து நகலெடுத்தோம், திருடினோம் என்பதையும் அது ஒப்புக்கொள்வதோ மேற்கோள் காட்டுவதோ இல்லை. இது இன்னொரு அறம்சார்ந்த பிரச்சினை. நியாயமாக செய்யறிவு நிறுவனங்கள் தாம் 'பயிற்சிக்காக' திருடுகிற தரவுகள், நூல்களுக்கான ராயல்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் டயாய்க்கின்றன. இப்போதைக்கு (இலக்கியம் போன்ற சிக்கல்கள் இல்லாத) நேரடியான எளிய மொழிபெயர்ப்புகள், விளம்பர வசனங்கள், உரையாடல், குறிச்சொல் உருவாக்கம், மொழிப்பயிற்சிக்கு அது உதவுகிறது. நான் புக்காவஸ்கியின் நாவலை (Pulp) வாசித்துக் கொண்டிருக்கும்போது அதில் திடீரென ஒரு பாத்திரம் வந்தது. அப்பாத்திரம் நாவலில் மற்றொரு இடத்தில் ஒரே ஒருமுறை வந்த நினைவு. ஆனால் எங்கு எதற்காக என மறந்துவிட்டது. செய்யறிவிடம் கேட்டேன். அது ரொம்ப இலக்கியத்தனமான பதில் சொன்னது. ஆனால் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் இல்லை. வகுப்பில் ஒன்றுமே தெரியாத மக்கு மாணவர்கள் இட்டுக்கட்டி பதில் சொல்வார்களே அப்படி ஒரு எதிர்வினை. ஏனென்றால் அப்புத்தகத்தின் தரவுகள் அதனிடம் இல்லை. என்னிடம் பி.டி.எப் இருந்தால் நான் கணநேரத்தில் கண்டுபிடித்திருப்பேன். இதனிடம் கேட்டால் இப்படி விளையாடுகிறதே என எரிச்சலாகியது. செய்யறிவின் முக்கியமான பிரச்சினை அது தனக்கு ஒன்று தெரியாது என்று ஒப்புக்கொள்ளாது என்பது. அதனாலே அதன் நம்பகத்தன்மை போய்விடுகிறது. இந்த லட்சணத்தில் இனி ஆசிரியர்களே தேவையில்லை, செய்யறிவே அப்பணியைச் செய்யும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றும் சில கல்வி நிறுவனங்களில் அதை நம்புகிறார்கள். இப்படி இட்டுக்கட்டும் ஒரு மென்பொருளிடம் மாணவர்களை ஒப்படைத்தால் அதனால் நேரும் குழப்பங்களுக்கு யார் பொறுப்பு? செய்யறிவு நம் காலத்தின் பிளாஸ்டிக் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் ஆரம்பத்தில் சந்தைக்கு வந்தபோதும் இத்தகைய மிகை எதிர்பார்ப்பும் பிரமிப்பும் இருந்தது. இன்று அது தரமின்மைக்கான குறியீடு. செய்யறிவு வளராது என்று நான் நினைக்கவில்லை. இப்போதுள்ள செய்யறிவு வேலைக்கு ஆகாது. அது அதன் முழுப்பரிமாணங்களை அடைய நேரடியாகத் தரவுகளை உள்வாங்கும், 24*7 உலகைக் கண்காணிக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். தான் உள்வாங்கும் தகவல்களைப் பரிசீலித்து சுயமாக முடிவெடுக்க இயல வேண்டும். அதுவரை அதனால் சின்னச் சின்ன வேலைகளை மட்டுமே பண்ண முடியும். நமது வேலைகள் பாதுகாப்பாக உள்ளன. https://www.writerabilash.in/2026/02/blog-post_59.html செய்யறிவு = செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)
-
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி, ரசோதரன். 🙂
-
இரணைதீவில் சட்டவிரோத கடலட்டைகள் மீட்பு : 10 பேர் கடற்படையினரால் கைது!
இரணைதீவில் சட்டவிரோத கடலட்டைகள் மீட்பு : 10 பேர் கடற்படையினரால் கைது! 23 Feb, 2026 | 06:29 PM கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளனர். இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மூன்று டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. இதன்போது சட்டவிரோத முறையில் பிடிப்பட்ட 1,232 கடலட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் மன்னார் - பள்ளமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடலட்டைகளுடன் மூன்று டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239396
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுக்கு முதல் நடந்த போட்டிகளில் உந்த மைதானத்தில் ரன்ஸ் பெரிசா அடிக்க வில்லை இன்று வெஸ்சின்டீஸ் வீரர்கள் ரன்ஸ் வேட்டை நடத்தி விட்டினம்......................
-
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
டயஸ்போரா சவால்களுக்கு மத்தியிலும் நாமல் லண்டன் பயணம்: அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தினார் இந்திக அனுருத்த 23 Feb, 2026 | 04:39 PM நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து விஜயத்தின் போது ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த உரைகள், அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டமையானது இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். இன்றைய தினம் பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாமல் ராஜபக்ஷ சவால்களுக்கு அஞ்சாத ஒரு இளைஞர் என்றும், எதிர்ப்புகள் எழும் என்று தெரிந்தே அந்தத் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில் அவர் அங்கு சென்றார் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய எதிர்ப்புக்கள் எமது தரப்புக்கு புதியவை அல்ல என்றும், இதனை விமர்சிக்கும் 'சுத்திகரிப்புப் படையினர்' முதலில் தங்களது அரசாங்கத்தின் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் சாடினார். தற்போதைய அரசாங்கம் குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அடிமட்டம் முதல் அமைச்சரவை வரை பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார். அண்மையில் மீரிகம பிரதேச சபை தவிசாளர், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தனது அறையில் பதுக்கி வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் இன்று தொழில்துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார். பழைய விநியோகஸ்தர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்தின் நெருங்கிய சகாக்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதால், தற்போது நிர்மாணிக்கப்படும் வீதிகள் தரமற்று இருப்பதாகவும் அவை குழிவிழுந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த மோசடியைப் பாதுகாப்பதாகத் தெரிவித்தார். தரம் குறைந்த நிலக்கரியை விலைக் குறைவு என்ற போர்வையில் இறக்கிக் கொண்டுவருவது மின் உற்பத்தி நிலையத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் உணரவில்லை என்றும், இந்தத் தவறை மறைக்க முயல்வோர் எதிர்காலத்தில் சிறை செல்வதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார். அரசாங்கத்திற்கு நிதி வழங்கிய பெரும் வர்த்தகர்களின் பிடியில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சிக்கியுள்ளதால், அரிசி மாஃபியா மற்றும் கொள்கலன் மோசடிகளைத் தடுக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்துள்ளதால், தங்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கிராம மட்டத்திலிருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஊழல் தடுப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடி ஆகியன தற்போதைய அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/239392
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது நான் விளையாட்டு தொடங்க முதல் எழுதின பதிவு குரு ஹா ஹா................பார்த்திங்களா ஜக்கம்மா சொல்லி அடிப்பா ஹா ஹா😄😛...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... என்னோட சேர்ந்து அப்பாவி சிம்பாப்வேயும் ஜக்கம்மாவிடம் மாட்டுப்பட்டு விட்டதே...........
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
"சோம்பேறித்தனம்" - இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி பற்றி பாகிஸ்தானில் விவாதிக்கப்படுவது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபிஷேக் சர்மா வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டி-20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நிபுணர்கள் இது குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகப் பயனர்களும் இந்தப் போட்டியைப் பற்றி வெளிப்படையாக விவாதித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் சிறப்பான ஆட்டம், இந்திய அணியின் சராசரி செயல்பாடு மற்றும் அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட விளம்பரம் ஒன்று இப்போது நீக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவை தென்னாப்பிரிக்கா மோசமாகத் தோற்கடித்தது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் தென்னாப்பிரிக்கா சிறப்பாகச் செயல்பட்டது" என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சிறப்பானது என்று குறிப்பிட்டதோடு, இந்தியாவின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாகவும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய அணி ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் நாம் போராடுவதை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த உலகக் கோப்பை முழுவதும் பேட்டிங் வரிசை தடுமாறி வருகிறது," என்று பதிவிட்டுள்ளார். ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மில்லர் 35 பந்துகளில் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தானில் என்ன விவாதிக்கப்படுகிறது? பட மூலாதாரம்,CPL T20/CPL T20 via Getty Images படக்குறிப்பு,பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை கடுமையாக விமர்சித்தார் இந்தத் தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், அபிஷேக் சர்மாவை ஒரு 'ஸ்லாகர்' என்று அழைத்திருந்தார். ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் முகமது அமீர் கூறுகையில், "அபிஷேக் சர்மா ஒரு சரியான பேட்டர் அல்ல, அவர் ஒரு ஸ்லாகர்," என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்திய அணி இந்தத் தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் கூறுகையில், "அவர் பந்தின் திசையை நோக்கி விளையாடுவதில்லை, மட்டையை வெறுமனே சுற்றுகிறார். தட்டையான ஆடுகளங்களில் அவர் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பவுன்சி பிட்ச்களில் அவர் சோதிக்கப்படவில்லை. அங்கு அவர் சிறப்பாக விளையாடும்போதுதான், நான் அவரை ஒரு பேட்ஸ்மேனாகக் கருதுவேன்" என்றார். இருப்பினும், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத், "நான் அபிஷேக்கை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதுகிறேன்" என்று கூறியிருந்தார். நேற்றைய போட்டிக்குப் பிறகு முகமது அமீர் மீண்டும் கூறுகையில், "இந்தியா சிறப்பாக விளையாடும்போது நாம் நல்ல விஷயங்களைச் சொல்கிறோம். ஆனால் அங்கிருந்து நமக்கு வசவுகள்தான் கிடைக்கின்றன. தென்னாப்பிரிக்கா சிறந்த அணியாகச் செயல்பட்டது," என்றார். இந்தத் தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் டக் அவுட் ஆனார். நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வெறும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டிக்குப் பிறகு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். அதில், "முகமது அமீர், முதலில் நீங்கள் களத்தில் இந்திய அணியின் அதிர்ஷ்டத்தை சிதைத்தீர்கள், இப்போது ஸ்டுடியோவில் இருந்துகொண்டு அவர்களின் அதிர்ஷ்டத்தை சிதைக்கிறீர்கள். அவர்களைச் சற்று மூச்சு விட விடுங்கள். தென்னாப்பிரிக்கா கடந்த டி20 உலகக் கோப்பையை எங்கு முடித்ததோ, அங்கிருந்தே மீண்டும் தொடங்கியுள்ளது. அது ஒரு சிறந்த அணி. டாப் ஆர்டர் தோல்வியடைந்தபோது, லோயர் ஆர்டர் அற்புதங்களைச் செய்தது மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது" என்று கூறியுள்ளார். இதுகுறித்து சோயப் அக்தர் கூறுகையில், "எண்ணங்களை விட ஒழுக்கமே மேலானது என்பதை தென்னாப்பிரிக்கா நிரூபித்துள்ளது. இத்தகைய இலக்குகளை வெறும் சோம்பேறித்தனத்தால் எட்ட முடியாது. இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். மில்லர் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரிடமிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். சூர்யகுமார் யாதவ் பேட்டி பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images படக்குறிப்பு,நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர். போட்டிக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், "இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. எனவே சஞ்சு சாம்சன் அணிக்குள் வர வாய்ப்புள்ளதா?" என்று கேட்டார். இதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சூர்யகுமார் யாதவ், "அப்படியென்றால் அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். திலக் வர்மாவுக்குப் பதிலாக அவரை விளையாட வைக்க வேண்டும் என்கிறீர்கள்" எனக் கூறிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினார். நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் திலக் வர்மா இருவருமே மோசமாக விளையாடியதை அடுத்து , சூர்யகுமார் யாதவின் இந்த கருத்தைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகப் பயனர்கள் அவர்களைக் கேலி செய்து வருவதுடன், 'தலைக்கனம் பிடித்தவர்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரம் பட மூலாதாரம்,ICC/ICC via Getty Images படக்குறிப்பு,வெற்றிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை சந்திக்கிறார். ஒரு விளம்பரத்தின் காரணமாகவும் இந்த போட்டி சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியான அந்த விளம்பரத்தில், இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த போலி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த விளம்பரத்தில், இரு அணிகளின் வீரர்களும் ஒரு ஹோட்டலில் ஒரே மேஜையில் அமர்ந்திருப்பது போலக் காட்டப்படுகிறது. அப்போது இந்திய வீரர் அங்கிருக்கும் ஒரே ஒரு கப்கேக்கை நோக்கிச் செல்கிறார், ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ஓடிச் சென்று அந்த கப்கேக்கை எடுத்துக்கொண்டு இந்திய வீரரிடம் "சாரி" என்று கூறுகிறார். இதற்கு இந்திய வீரர், "உங்களுக்குத் தான் சாரி!" என்று பதிலளிக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர் "ஏன்?" என்று கேட்க, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் உங்களைத் தோற்கடித்தோம், அதனால் சாரி என்று இந்திய வீரர் அவருக்கு நினைவுபடுத்துகிறார். தொடர்ந்து அந்த இந்திய வீரர், "நாங்கள் கோப்பையை வென்றோம், வரவிருக்கும் சூப்பர்-8 போட்டியிலும் வெற்றி பெறுவோம், எனவே இந்த கப்கேக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறார். இதைக் கேட்டதும் தென்னாப்பிரிக்க வீரருக்குத் தொண்டையில் கேக் சிக்கிக்கொள்கிறது, அப்போது இந்திய வீரர் "ஓ, ஹோ! சோக்கிங்!" என்று கூச்சலிடுகிறார். (பல முக்கியத் தொடர்களின் முக்கியமான போட்டிகளில் தோல்வியடைவதால், கிரிக்கெட் உலகில் தென்னாப்பிரிக்க அணி பெரும்பாலும் "சோக்கர்ஸ்" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.) சூப்பர்-8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்த உடனேயே, இந்த விளம்பரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதுடன், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபமும் வெளிப்பட்டது. பல பயனர்கள் இந்த விளம்பரம் தென்னாப்பிரிக்காவை 'இழிவுபடுத்துவதாக' கூறினர். விளம்பரத்தில் தென்னாப்பிரிக்கா 'சோக்கர்' என்று விவரிக்கப்பட்டது, ஆனால் இந்தியாதான் 'சோக்கர்' என்று நிரூபணமாகிவிட்டது என்று சிலர் கூறினர். "தலைக்கனம் கொள்வது சரியல்ல என்பதை இந்தச் சம்பவம் நமது விளம்பரதாரர்களுக்குக் கற்பிக்கக்கூடும்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rz9gnjj11o
-
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றிய நிகழ்வுகள் இரத்து: நாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிக்கை Published By: Digital Desk 1 23 Feb, 2026 | 12:44 PM அழுத்தங்கள் காரணமாக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரையாடல் அமர்வுகள் இரத்து செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினூடாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தில் கருத்துக்களை அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட, தர்க்கரீதியான விவாதங்கள் மூலமே மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாகவும், உரையாடல்களை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், திட்டமிட்ட சில குழுக்களின் அழுத்தம் காரணமாக பல்கலைக்கழக ஒன்றியங்கள் எடுத்த இந்தத் தீர்மானம் வருத்தமளிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிரிவினைகளை விட ஆரோக்கியமான விவாதங்களே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239361
- Today
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணா ( @தமிழ் சிறி )!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்று விக்கேட் சரி......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் பின்னனி வீரர்களும் மலைகள் அடிச்சா சிக்ஸ் தான்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெஸ்சின்டீஸ் வீரர்கள் சிம்பாவே சகல வீரர்களையும் அவுட் செய்யக் கூடும்............... இன்னும் சில மைச்சு தான் இருக்கு அதில் மற்ற அணிகளால் இந்த பெரிய ஸ்கோர் அடிக்க சான்ஸ் இல்லை.............. எல்லாரும் இந்தியா தான் பெரிய ஸ்கோர் அடிப்பினம் என கணித்து இருப்பினம் எங்கட கணிப்பு பொய்த்து போய் விட்டது ஹா ஹா........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மொத்தமாக 19 ஆறுகளும் 16 நான்குகளுமாக 254 ஓட்டங்கள். என்ன சிம்ரன் இதெல்லாம். ஸிம்பாப்வெ சூப்பர் 8 வந்தது தப்பாய்யா.
-
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
போர் குற்றவாளிகளுக்கும், கள்வர்களுக்கும் உள்ளே அனுமதி இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலக கோப்பையில் இதுவரை நடந்த போட்டியில் 254 பெரிய ஸ்கோர் இனி மற்ற அணிகளால் இந்த ஸ்கோரை அடிக்க முடியாது சிம்பாவே அணிக்கி இது அவமானம் நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தவை இலங்கை மைதானம் வேறு இந்தியா மைதானம் வேறு.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒருத்தரை விட மற்றவர் ஒவ்வொருத்தரும் வாணவேடிக்கை காட்டுகிறார்கள் ......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதோ எந்தன் தேவம் முன்னாலே ........ என்னா நடிப்புடா சாமி ......... சொல்லி வேல இல்ல .......! 🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலக கோப்பையில் அதிக ரன்ஸ் இன்று நடந்த போட்டியாக தான் இருக்க முடியும்................ 250ரன்ஸ்ச தான்ட போகுது வெஸ்சின்டிஸ் அணி..................
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம் ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்........! --- இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ---
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதிரடியா விளையாடின இரண்டு பேர அவுட் ஆக்கியாச்சு..............இனி ரன்ஸ் ஏற்றம் குறையும்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே வீரர்களும் மேற்கிந்திய அணிக்காக விளையாடுகிறார்களே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே கப்டன் சின்கன்ட ரசா வின் பந்துக்கு வெஸ்சின்டீஸ் வீரர்கள் நல்ல அடி....................