- 39 replies
Featured Content
Top content from across the community, hand-picked by us.
பாட்டுக்குள்ளே பாட்டு
பாட்டுக்குள்ளே பாட்டு
ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.
எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.
எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ
ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன். நான்கு வரிகளில் அதில் குறிப்பிடம்படும் சொல்லில் நீங்கள் தொடர வேண்டும்.
எவ்வளவு தூரம் முயலலாம் என்றும் தெரியாது.
எதோ அம்மணிகளும் ஐயாக்களும் முயற்சி செய்து பாருங்கோ
- 6867 replies
Featured by மோகன்
வீரயுக நாயகன் வேள் பாரி
வீரயுக நாயகன் வேள் பாரி - 1
புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
- 127 replies
Featured by மோகன்
யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..
எனது முகநூல் எப்படி பலதும் பத்துமாக பிரகாசித்ததோ அது போன்று என்னை பல ஆண்டுகளுக்கு முன் உறுப்பினர் ஆக்கிக் கொண்ட யாழில் பல அம்சங்களையும் பதிவிட எண்ணி உள்ளேன்...அடுத்த பக்கத்தில் எந்தப் பதிவுகளும் பதிய விருப்பின்றி அதிலிருந்து என்னை முற்று முழுதாக விடுவித்துக் கொண்டதனால் இந்தப் பக்கத்தை தெரிவு செய்துள்ளேன்..யாயினியின் இந்தப் பக்கத்தையும் புரட்டிப் பார்த்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இன்று முதல் உதயமாகிறது.....
பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட இருக்கலாம்.
பறவைகள் வலைசை போவது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.அது போலத் தான் நம்ம நிலைமையும்...குளிர் மற்றும் இதர விடையங்களுக்காக பறவைகள் கூட்டம்,கூடமாக வெப்ப வலய நாடுகளுக்கு சென்று வாழ்ந்து விட்டு மீண்டும் திரும்பும் பழக்கம் உண்டு..அது இயற்கையின் நியதியாக கூட இருக்கலாம்.
- 3943 replies
Featured by மோகன்
- 1 reply
Featured by மோகன்
- 2995 replies
Featured by மோகன்
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக
தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த
இந்த வீரவேங்கைகளுக்கு
எனது வீரவணக்கங்கள் !!!
தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த
இந்த வீரவேங்கைகளுக்கு
எனது வீரவணக்கங்கள் !!!
- 16840 replies
Featured by மோகன்
இளமை புதுமை பல்சுவை
இது ஒரு பல்சுவை திரி. நான் படித்தது பார்த்ததை பதிவிடுகிறேன். இயன்றவரை யாழில் வேறு திரிகளில் வராத நிகழ்வுகளை பதிவிட முயற்சிக்கிறேன்.
- 11310 replies
Featured by மோகன்
- 9 replies
Featured by மோகன்
தேசியப் பட்டியல் நியமனம் தமிழரசுக் கட்சியின் முடிவே தவிர, கூட்டமைப்பின் முடிவல்ல! - என்கிறார் சுரேஸ்
Tuesday 2015-08-25 07:00]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்காமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இந்த கோரிக்கை தொடர்பில் திருகோணமலையில் இரண்டு முக்கிய பேச்சுகள் நடைபெற்றிருந்த போதிலும், பேச்சுகளுக்கு அமைவாக முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது, கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல. எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது தமிழரசு கட்சி மட்டும் செய்துகொண்டு போவது என்பதும் ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல; ஒரு கூட்டமைப்பு தத்துவங்களுக்கும் நல்லதல்ல; ஆனால் இதனை மிகவும் வெட்கம் கெட்டத்தனமாக தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என்பதுதான் ஒரு விடயம்" என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
அதேசமயம், இந்த பிரச்சனை குறித்து தமது கட்சி இரண்டொரு தினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இதுகுறித்த விரிவானதொரு நேர்காணலை வழங்குவதற்குத் தற்போது தான் தயாரில்லை என்றும், சுருக்கமானதொரு கருத்தை மட்டுமே இப்போது தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
http://seithy.com/breifNews.php?newsID=138988&category=TamilNews&language=tamil
- 10 replies
எனது அத்தான் நேற்று முந்தினம் இலங்கையில் காலமானார்.
எனது அத்தான் - என் அப்பாவின் அக்காவின் மகனும், எனது மூத்த அக்காவை திருமணம் செய்த எங்கள் சொந்த மச்சானும் ஆகிய திரு தம்பு சுப்பிரமணியம் நேற்று இலங்கையில் காலமானர். எனது 5 வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கும் எங்கள் குடும்பத்தையும் தனது சொந்த உறவாக கவனித்து வந்தவரின் இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னமும் நானும் எங்கள் குடும்பமும் அவரின் இழப்பை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். இந்தத் துயரச்செய்தியை எனது யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
- 37 replies
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.
Published on August 23, 2015-9:39 am · No Comments
கடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
என்ன ஐரோப்பாவிலும் தேர்தல் நடக்கிறதா என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். இலங்கையில் நடந்த தேர்தல் ஆரவாரங்களின் ஒரு பகுதியாகவே இவற்றை இங்கு காணமுடிந்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் அனைத்தும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை ஆதரிக்குமாறு அறிக்கை விட்டதுடன் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
கஜேந்திரகுமார் அணியை வெல்ல வைப்பதற்காக மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெருந்தொகை பணத்தை திரட்டி இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கனடா, இலண்டன், ஜேர்மனி என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மேற்குலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் கஜேந்திரகுமார் அணிக்கே மிகத்தீவிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டன. லண்டனில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பாளர்களை அழைத்த விடுதலைப்புலிகள் கஜேந்திரகுமார் அணிக்கே முழமையான ஆதரவை வழங்கமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களை துரோகிகளாக காட்டுமாறும் உத்தரவிட்டனர்.லண்டன், கனடா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உத்தரவை தலைமேல் கொண்டு தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை செயற்பட்டன.
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள உங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சின்னமான சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கூறுமாறு விடுதலைப்புலிகளும் தமிழ் ஊடகங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களை வலியுறுத்தி வந்தன.
இவர்களின் வலியுறுத்தலை சிலர் ஏற்றுக்கொண்டு தாயகத்தில் இருந்த மக்களுக்கு கஜேந்திரகுமார் தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தனர்.
தேர்தல் தினத்தன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு இல்லை, தாங்கள் கூறும் கருத்துக்கள் அங்கு உள்ள மக்களை சென்றடையவில்லை. அங்குள்ள ஊடகங்கள் அதனை மூடிமறைக்கின்றன. கஜேந்திரகுமார் தரப்புக்கு இலங்கையில் உள்ள ஊடகங்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என குறிப்பிட்டார். அந்நபர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக தீவிரமான பிரசாரம் செய்பவர் என்பதை அவரின் பேச்சில் அறியமுடிந்தது.
ஓட்டுமொத்தத்தில் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அரசியல் அறிவற்ற முட்டாள்கள், இதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர். அறிவாளிகளான நாங்கள் கூறும் கருத்துக்களையும் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் மூடிமறைப்பதால் அரசியல் அறிவு இல்லாத முட்டாள்களாக இருக்கும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர் என்ற கருத்துப்பட பேசிக்கொண்டிருந்தார்.
இவரைப்போன்றவர்களுக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களுக்கும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியுள்ளனர். பதில் என்பதை விட தலையில் ஓங்கி பலமான அடி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.
மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களின் ஊதுகுழல்களாக இருக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களும் தாங்கள் சொல்வதை தான் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் கேட்கவேண்டும், தங்களின் தாளத்திற்கு தான் ஆடவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி ஆடாதவர்களை வரிசையில் நிறுத்தி துரோகி பட்டம் வழங்குதையே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
கஜேந்திரகுமார் தரப்பு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் தாளத்திற்கு ஆடுவதால் அவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டுவதற்காகவே இந்த பொதுத்தேர்தலில் கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.
2010ஆம் ஆண்டும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரம் செய்திருந்தனர்.அதை விட இம்முறை நடைபெற்ற தேர்தலில் பெரும் எடுப்பில் பெரும் பணச்செலவில் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரங்களை செய்ததுடன் இலங்கையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பெருந்தொகை பணமும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியிருக்கிறார்கள். எங்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உங்கள் தலையீடு எமக்கு தேவையில்லை என்பதை அவர்கள் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றனர்.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் இதனை மிகத்தெளிவாக சொன்னார். லண்டனில் இருக்கும் தனது உறவினர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னார், வெளிநாட்டிற்கு சென்ற காலம் தொடக்கம் இன்றுவரை தொலைபேசி எடுக்காதவர் இப்போது எங்களுக்கு அரசியல் சொல்லித்தருகிறார் என கூறினார்.
முடிவுகளை எடுப்பதற்கு எங்களுக்கு தெரியும், வெளிநாட்டில் உள்ளவர்கள் இதில் தலையிட தேவையில்லை என்பதே வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் நிலையாகும். இதனையே அவர்கள் தேர்தலில் பிரதிபலித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக புலம்பெயர் புலிகளின் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமார் அணி இருக்கவில்லை, அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட சுயேச்சைக்குழுக்களில் ஒன்றாக ஒரு உதிரிக்கட்சியாகத்தான் கஜேந்திரகுமார் அணியை பார்த்தனர்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் சிவில் சமூகம், பல்கலைக்கழக சமூகம், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட கஜேந்திரகுமார் தரப்பு அம்மாவட்டத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெறுவோம், அல்லது ஆகக்குறைந்தது 3 ஆசனங்களை பெறுவோம் என்றும் சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களை தோற்கடிப்பதே தமது இலக்கு என்றும் பிரசாரம் செய்தனர். இதற்காக அவர்கள் சுமந்திரனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வடமராட்சி பகுதி உட்பட யாழ் மாவட்டம் எங்கும் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தனர்.
தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி மண்ணில் துரோகி சுமந்திரனுக்கு இடம் கொடுப்பதா என துண்டு பிரசுரத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பருத்தித்துறை உடுப்பிட்டி தொகுதிகளில் மிகத்தீவிரமான பிரசாரங்களை கஜேந்திரகுமார் தரப்பு மேற்கொண்டிருந்தது. வடமராட்சிகிழக்கு பகுதியில் கோழி, ஆடு, மீன்பிடி வலை போன்றவற்றை விநியோகித்து சலுகைகளை காட்டி வாக்கை பெறலாம் என்றும் எண்ணினர்.
இது தவிர சுமந்திரன், மாவை போன்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மீது புதுப்புது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்களே ஒழிய தமது இரு தேசம் ஒரு நாடு என்ற கொள்கையை அடைவது எவ்வாறு, தமது இலக்கு என்ன என்பதை மக்களுக்கு விளக்கவே இல்லை,
விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக நாங்கள் வந்திருக்கிறோம், விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறோம் என்றே மக்கள் மத்தியில் அவர்கள் பிரசாரம் செய்தனர்.
தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலேயே வெளியிட்டு வைத்தனர். அந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான், மற்றவர்கள் எல்லோரும் போலிகள் என்றும் கஜேந்திரகுமார் தரப்பு அறிவித்தது.
நாங்கள் தோற்றால் விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடும், எனவே எங்களை வெற்றிபெற செய்யுங்கள் என அவர்கள் கோரிநின்றனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கைகளையோ கொள்கைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, யாழ். மாவட்டத்தில் வெறும் 15ஆயிரத்து 22 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பெற்றுக்கொண்டது. டக்ளஸ், தேவானந்தா, அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் பெற்ற வாக்குகளை கூட இவர்களால் பெற முடியாமல் போய்விட்டது. யாரை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றார்களோ அவர்கள் அதிகப்படியான விரும்புவாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் கஜேந்திரகுமார் தரப்பால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாமல் போய்விட்டது.
திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்போம் என கஜேந்திரகுமார் தரப்பு பிரசாரங்களை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு இடம்தருமாறு கோரிய முன்னாள் விடுதலைப்புலிகளின் மாவட்ட பொறுப்பாளர் ரூபன் அது கிடைக்காததை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ரூபன் பிரசாரம் செய்தால் திருகோணமலையில் பெரும்பாலான தமிழர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள் என சொல்லப்பட்டது. கிராமம் கிராமமாக ரூபனும் அவரது மனைவியும் வீடு வீடாக சென்று பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் 1144 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்திருக்கிறது.
அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 865 வாக்குகளையும் அம்பாறை மாவட்டத்தில் 439 வாக்குகளையும் மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்தது.
தாங்கள் விடுதலைப்புலிகளின் நீட்சியாக அல்லது அவர்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறோம், அவர்களின் கோரிக்கைகளை இலக்குகளை நோக்கியே செல்கிறோம் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நாங்களே, இரு தேசம் ஒரு நாடு என்ற இலக்கை அடைய எங்களுக்கு வாக்களியுங்கள் என கோரிய கஜேந்திரகுமார் தரப்பை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.இதன் மூலம் இலங்கையில் உள்ள கஜேந்திரகுமார் தரப்புக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பலமான செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.
எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம், அதில் தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது.
இனிமேலாவது தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் இச்செய்தியை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கஜேந்திரகுமார் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
( இரா.துரைரத்தினம்)thurair@hotmail.com
http://www.thinakkathir.com/?p=62541
- 29 replies
ஓராவது இடத்தில் தமிழ் மொழி - தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
ஒருாவத வது இடத்தில் தமிழ் மொழி - தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா [Friday 2015-08-14 07:00]
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.
உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்TOP 10 Oldest Languages in the World - சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.
10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)
ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)
இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)
இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)
அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
5 வது இடத்தில் சீன மொழி (Chinese)
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
4 வது இடத்தில் கிரீக் (Greek)
கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)
இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)
5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.
http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-wo…/
தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா
தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
http://www.seithy.com/breifNews.php?newsID=138115&category=CommonNews&language=tamil
- 2 replies
கறுப்பு பந்துகளாக காட்சியளித்த ஏரி: தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் கலிபோர்னியா (வீடியோ இணைப்பு)
கறுப்பு பந்துகளாக காட்சியளித்த ஏரி: தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் கலிபோர்னியா (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 01:24.26 பி.ப GMT ]
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருவதை தடுக்கும் பொருட்டு 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் நீர்த்தேக்கம் முழுவதும் போடப்பட்டுள்ளன.இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 1135 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும்.
மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்த பந்துகள் தடுத்து விடுகின்றன.
இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பதே வெளியில் தெரியாத அளவிற்கு கறுப்பு பந்துகளாக காட்சியளிக்கிறது.
http://newsonews.com/view.php?22IMC302lOU4e2BnBcb280Mdd3088bc3nBTe43OlR023gA43
- 0 replies
இலங்கை பாராளுமன்ற தேர்தல் - 2015- பிரித்தானிய தமிழர் பேரவை
இலங்கை பாராளுமன்ற தேர்தல் - 2015
எதிர்வரும் 17 ஆகஸ்ட் 2015 இல் இலங்கையில் மேலும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இத் தேர்தல்கள் அர்த்தமற்ற நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன. சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றம் சனநாயகப் போர்வையில் தமிழர் தேசியத்தின் அத்திவாரத்தையே அழித்தொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கின்றது. இதே பாராளுமன்றமே எமது மக்கள் மீது மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புத் தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றது. 70,000ற்கும் மேற்பட்ட எம் மக்களை காவு கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தாக்குதலுக்கான ஆணையை வழங்கியதும் இதே பாராளுமன்றமே. எமது பாரம்பரிய தாயக மண்ணை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சிதைத்தொழிக்கும் செயலையும் இப் பாராளுமன்றமே நிறைவேற்றி வந்திருக்கின்றது. எம் மக்களின் மேல் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதற்கு தடையாக இருப்பதும் இதே பாராளுமன்றமே.
1948ஆம் ஆண்டு தொட்டு தமிழ் மக்கள் இப் பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வந்திருக்கின்றார்கள். சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் எதையுமே சாதிக்க முடியவில்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள மேலாதிக்கம் முற்றிலும் புறக்கணித்தே வந்திருக்கின்றது. இலங்கை அரசியலில் தமிழர் தலைமைகளுக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டு பின் கிழித்தெறியப்பட்ட உடன்படிக்கைகள் ஏராளம்.
இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்தை ஒரு சம பங்காளியாக ஏற்க சிங்கள தேசம் மறுத்து வருகின்றது. மாறாக தமிழ் தேசியத்தின் அத்திவாரத்தையே தகர்த்தழிக்கும் செயற்பாடுகளில் சிங்கள தேசம் முனைப்புடன் ஈடுபடுகின்றது.
இத் தேர்தலில் போட்டியிடும் சிங்களக் கட்சிகள் எதுவும் தமிழர் தேசியப் பிரச்சினை பற்றியோ அல்லது அதிகாரப் பகிர்வு பற்றிய தமது கொள்கைகளையோ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. சிங்கள வாக்குகளை இழக்க நேரிடும் என்ற பயமே இதற்கான காரணம் ஆகும். சிங்கள தேசம் தமிழர் தேசத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவில்லை என்பதையே இது கோடிட்டுக் காட்டுகின்றது.
மேற்குறிப்பிட்ட ஒரு பின்னணியிலேயே தமிழ் மக்கள் சிங்கள மேலாதிக்கப் பாராளுமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்கின்றார்கள். இந்த இன அழிப்புச் சிங்கள அரசின் கீழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பேரபாயத்தை உணரத் தொடங்கியிருக்கும் சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
சிங்கள தேசம் தமிழின அழிப்பை தொடரும்போது தமிழ் மக்கள் வாழாதிருக்க மாட்டார்கள் என்ற தெளிவான செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்ப வேண்டிய தருணமிது. எமது உயிர்களுக்கும் எம் மண்ணுக்கும் எம் வாழ்வாதாரங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இன அழிப்பு சிங்கள தேசத்திடமிருந்து எம்மைப் பாதுகாக்கவும் எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கவும் வேண்டிய அவசியத்தை சர்வதேச சமூகத்திற்கு நாம் உணர்த்துவோம்.
இனவழிப்புச் சிங்கள தேசத்திடமிருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதில் நேர்மையாகவும் உறுதியுடனும் இருக்கும் பிரதிநிதிகளை தமிழ் மக்கள் தெரிவு செய்தல் இன்றியமையாதது. தம் மக்களின் மேல் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு அனைத்துலக மன்றத்தில் நீதி கோரும் நடவடிக்கைகளில் தம் பிரதிநிதிகள் செயல்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. வெறுமனே பாராளுமன்ற கதிரைகளை நிரப்பும் பணிகளை விடுத்து மக்களை அணி திரட்டி எமது விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகளையே தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள்.
எமது மக்கள் எதிர்நோக்கும் வாழ்வபாயத்தைச் சிறிதும் உணராத சக்திகளுக்குப் பணியாத தைரியமுள்ள தலைமைகளையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையே சர்வதேச சனநாயக சமூகம் சட்டபூர்வமான மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்கின்றது. எனவே தமிழ் மக்கள் எமது விடுதலையில் உறுதியுடன் இருக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்வது அத்தியாவசியம் ஆகும். சர்வதேச அரசியல் போக்குகளைப் புரிந்து கொண்டு சர்வதேச சமூகத்தை எம் விடுதலையின்பால் வென்றெடுக்கும் சாதுரியமுள்ளவர்களையே எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
அதிவேகத்தில் நடந்து வரும் இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கையினால் தமிழ் மக்களின் இருப்பு பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
அரசியல் தீர்வொன்றிற்கான அடிப்படைகள்
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக எமது மூத்த தலைவர்கள் முன்மொழிந்த பின்வரும் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை நாமும் வலியுறுத்துகின்றோம்.
1. தமிழர் தேசத்தை அங்கீகரித்தல்.2. வடக்கு கிழக்கு தமிழரின் பாரம்பரிய தாயக பூமியாக ஏற்றுக் கொள்ளல்.3. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளல்.
சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வழி செய்யுமென்று தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். உள்ளக விசாரணையோ அல்லது உள்ளகக் கலப்புப் பொறிமுறையோ வெறும் கண் துடைப்பாக அமைவது மட்டுமல்லாது குற்றவியல் சாட்சியங்களை பேராபத்திற்கு உள்ளாக்கும் என்பதனால் தமிழ் மக்கள் இப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றார்கள்.
இராணுவத்தை வெளியேற்றல்
உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் மக்கள் பாரிய ராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளக்கப்பட்டுள்ளனர். போர் முடிவக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அடித்தளங்களை தகர்த்தெரிவதற்கு சிங்கள ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை அரசின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு சிங்கள ராணுவமனது விவசாயம்இ வர்த்தகம் இ சுற்றுலா போன்ற பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. எமது மக்களின் வீடுகளையும் நிலங்களையும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்குள் வைத்து அவர்களை இடம்பெயர் முகாம்களுக்குள் தள்ளி நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்க வைத்துள்ளது. எம் தாயக பூமியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். தமிழர் தேசத்தின் சமூக கட்டமைப்பை நிர்மூலமாக்கும் இலங்கை அரசின் மூலோபாயத்தின் ஒரு அம்சமாக சிங்கள ராணுவம் எம் தாயகப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
தெரிவு செயப்படும் பிரதிநிதிகள் மேற்ப்படி பாதிப்புக்குள்ளான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வழி நடத்தவேண்டும்.
தமிழ் தேசிய பொருளாதாரம்
எம் தாயகத்தில் எம் மக்களின் சமூகஇ பொருளாதார மற்றும் மருத்துவ தேவைகளை கண்டறியும் முகமாக ஒருங்கிணைக்கப்பட்ட தேவைகள் மதிப்பீட்டாய்வினை செய்ய விடாது ஸ்ரீலங்கா அரச தடுத்துவருகின்றது. இவ் ஆய்வினைச் செய்து முடிப்பதற்கும் தமிழர் தாயகத்தின் பொருளாதரத்தை மீள கட்டியெழுப்பி பேணுவதற்கு தேவைப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வழிமுறைகளை திறந்து விடுவதற்கும் தெரிவு செயப்பட்டிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் தீர்வுக்கு அடிப்படை கோட்பாடுகளில் உறுதியாக நிற்கும் அதேநேரத்தில் இராணுவமயமாக்கல்இ போதைப்பொருள் பாவனைஇ வேலைவாய்ப்பின்மைஇ தமிழ் தேச பொருளாதார மீளமைப்பு போன்ற விடயங்களை சரியாகக் கையாளக்கூடியவர்களையே தமிழ் மக்கள் தெரிவு செய்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை எதிபார்க்கிறது.
சிங்கள மேலாதிக்க பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் பெரிய மாற்றங்களை செய்ய முடியாவிட்டாலும்இ அவர்கள் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களிடமிருந்து வேறு பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமைக்காக செயல் படுவதும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுப்பதும் அவசியமானதாகும். மேற்படி காரணங்களுக்காக தகுதியுள்ள ஒவ்வொரு தமிழர் வாக்காளர்களும் தமது வாக்குரிமைகளை சரியான முறையில் பயன்படுத்துவர் என எதிர்பாக்கிறோம்.
நீதிக்கும் சுயநிர்ணய உரிமைக்குமான புலம் பெயர் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் குரலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமது வாக்குரிமைகளை பயன்படுத்துமாறு தாயகத்தில் வாழும் எம் உறவுகளை வேண்டிக் கொள்கிறோம்.
பிரித்தானிய தமிழர் பேரவை
http://seithy.com/breifNews.php?newsID=138102&category=TamilNews&language=tamil
- 0 replies
மலரும் முகம் பார்க்கும் காலம் - கவிதைத் தொடர்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம்.
திரு.பொலிகை ஜெயா - சுவிஸ்திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனிதிருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவுதிருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனிதிரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க்திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க்திருமதி. மாலினி மாலா – ஜேர்மனிசெல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனிதிரு. நோர்வே நக்கீரா – நோர்வேதிருமதி.நர்மதா சஞ்சீபன் - யாழ்ப்பாணம்டாக்டர் எழில்வேந்தன் - தமிழகம், இந்தியாதிரு. எஸ் தேவராஜா – டெனமார்க்திருமதி. ரதி சிறீமோன் - டென்மார்க்திருமதி. நிவேதா உதயராயன் - லணடன்மருத்துவர். மதுராகன் செல்வராஜா – வவுனியா, இலங்கைமருத்துவர். அகிலன் நடேசன் - காரைதீவு(மட்டக்களப்பு)இலங்கை திரு.இணுவையூர் சக்திதாசன் - டென்மார்க்திரு. இணுவையூர் மயூரன் - சுவிஸ்திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்திரு.சசிகரன் பசுபதி – லண்டன்திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் - கைதராபாத், இந்தியாதிருமதி. கவிதாயினி நிலா – புத்தளம், இலங்கைதிரு.பார்த்தீபன் பத்மநாதன் - பிரான்ஸ்திரு.வன்னியூர் செந்தூரன் - வன்னி, இலங்கைதிரு.நயினை விஜயன் - ஜேர்மனிதிரு.பகீரதன் அரியபுத்திரன் - கனடாதிரு.மண் சிவராஜா – ஜேர்மனிதிரு. மட்டுவில் ஞானகுமாரன் - கனடாதிருமதி. சிவமேனகை – சுவிஸ்திரு. ஆவூரான் - அவுஸ்திரேலியாதிரு.பசுபதிராஜா – ஜேர்மனிதிரு. தமிழ்முரசு பாஸ்கரன் - அவுஸ்திரேலியாதிருமதி. நகுலா சிவநாதன் - ஜேர்மனிதிரு. வேலனையூர் பொன்னண்ணா – டென்மார்க்திரு. அம்பலவன் புவனேந்திரன் - ஜேர்மனிதிரு. சரவணன் - மலேசியாதிரு.ராஜ்கவி ராகில் - சிசில்தீவுகள்
திரு . கந்தையா முருகதாசன் - யேர்மனி
திரு.இக.கிருஷ்ணமூர்த்தி - யேர்மனி
(இத்திட்டத்தில் இன்னும் பல படைப்பாளிகளின் பெயர்களையும் இணைக்கவிருக்கின்றோம்)
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்Tamil Writers Net Portal
- 25 replies
- 4593 replies
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள்.
2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள்.
3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும்.
அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள் பதிவினை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ள முடியும்.
- 397 replies