கலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்
வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்திய இளம்பிறையனின் அங்கோர் வாட் அனுபவங்களை வாசித்ததில் இருந்து அங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என எனது மனம் குறித்துக்கொண்டது.
ஆனாலும் பலஆண்டுகளாக என் ஆசை நிறைவேறாமலே இருந்தது. காரணம் என் கணவருக்கு அங்கு செல்வதில் ஆர்வம் இருக்கவில்லை. தெரியாத ஒரு நாட்டுக்குத் தனியாகச் செல்லவும் பயம். அதனால் ஆசையை ஒரு பக்கம் வைத்துவிட்டு என்பாட்டில் இருந்துவிட்டேன். கடந்த ஓகஸ்ட் மாதம் மகளும் நானும் கதைத்துக்கொண்டு இருந்தபோது கம்போடியா செல்லவேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகக் கூற நான் உடனே இருவரும் சேர்ந்து போகலாம் என்று கூறி ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதிவரை பத்து நாட்களுக்கு திட்டமிட்டு விமானச்சீட்டும் தயார் நிலையில். மகளே தங்குமிட வசதியை எல்லாம் ஒழுங்கு செய்ததில் எனக்கு மனதில் பெரும் நின்மதி.
முதல் ஐந்து நாட்கள் சியாம் ரீப்பில் தங்குவதாக முடிவெடுத்து விமான நிலையத்தில் இறங்கும்போதே கடலும் மரங்களும் மழைநீரினூடே தெரிய இறங்கும்போதே மழையா என்று மனம் துணுக்குற்றது. முதலே ஒன்லைனில் விசா பெற்றுக்கொண்டதால் விரைவாக வெளியே வந்தாலும் பெரும் இடி மின்னலுடன் மழை சோவெனப் பெய்வதைப் பார்த்து மனதில் சலிப்பு எழுந்தது. தங்குவிடுதியில் இருந்தே எமக்கு டாக்ஸி ஒழுங்கு செய்வதாகக் கூறியதனால் வெளியில் எம் பெயரைத் தாங்கியபடி யாராவது நிற்கிறார்களா என்று தேடினால் யாரையும் காணவில்லை. மழை பெய்ததனால் வெப்பம் தெரியவில்லை என்பது மனதுக்கு நின்மதிதர மகள் தங்குவிடுதிக்கு போன் செய்தாள். மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாகலாம் என்று அவர்கள் கூற நாம் மேலும் இருபது நிமிடம் காத்திருந்தோம்.

- 136 replies