அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
ஆன்மிகம் முதல் வானிலை ஆய்வு வரை, ஒக்டோபர் 2023 மாதம் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என இரட்டை ஆச்சரியங்களோடு காத்திருக்கிறது. ஒரே மாதத்தில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் மிகவும் அரிதாகவே நிகழும். அந்த வகையில் நடப்பு ஒக்டோபர் மாதம் சிறப்பு பெற்றுள்ளது. ஒக்டோபர் 14 அன்று சூரிய கிரகணமும், அக்டோபர் 28 – 29 நாட்களில் சந்திர கிரகணமும் அரங்கேறுகிறது. சூரியன் – பூமி இடையே சந்திரன் தோன்றுவதால் நிகழும் சூரிய கிரகணம், ஒக்டோபர் 14, சனிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது. சூரியனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பதால், பூமியில் இருப்பவர்களுக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இந்த நாளில் மறைந்து காட்சியளிக்கக்கூடும். சந்திரனின் விளிம்புகளில் சூரியனை பிரகாசிக்கச் ச…
-
- 1 reply
- 658 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஏமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர், யூடாவிலிருந்து 23 செப்டெம்பர் 2023, 15:29 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலத்தில் உள்ள கொள்கலன் வரும் ஞாயிற்றுக்கிழமை பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். இது ஒரு துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் வரும். அது வளிமண்டலத்தில் நுழையும் போது வானத்தில் ஒரு தீப்பிழம்பாய் தோன்றும். ஆனால் அதன் வெப்பக் கவசம் மற்றும் பாராசூட்டுகள் அது இறங்கும் வேகத்தை குறைத்து, அமெரிக்காவின் யூடா மாகாணத்தின் மேற்குப் பாலைவனத்தில் மெதுவாகத் தரையிறக்கும். …
-
- 6 replies
- 499 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடலின் ஆழத்தில் கிடக்கும் விண்பொருள் குப்பைகள் பத்திரமாக இருக்கும் என்பதால் அவை எதிர்காலத்தில் தொல்பொருட்களாக மாறும். கட்டுரை தகவல் எழுதியவர், ஜரியா கோர்வெட் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நெமோ புள்ளி நூற்றுக்கணக்கான விண்கலங்களின் இறுதி ஓய்வுக்கான இடமாக மாறியுள்ளது. எதிர்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள்? தென் பசிபிக் கடலின் மையத்தில் இருந்து, அருகிலுள்ள வறண்ட நிலத்திற்குச் செல்லவேண்டுமானால், சுமார் 2,688 கிமீ (1,670 மைல்கள்) பயணிக்க வேண்டும். அநாமதேய கடலின் கடும் குளிர் மிக்க பகுதியாக உள்ளது அது. அங்கு எப…
-
- 0 replies
- 618 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,RAMESH YANTRA கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 அக்டோபர் 2023 இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகை, சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதி மனிதர்களின் வரலாற்று ஆதாரங்கள் நிறைந்த இந்தக் குகையின் வரலாற்றை கான்ஸ் திரைப்பட விழா வரைக்கும் கொண்டு சென்றார் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா. இந்த குடியம் குகை குறித்த ஆவணப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு மரபணு ஆய்வு, ரமேஷ் யந்த்ராவுக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஜாஸ்மின் ரோஸ் என்பவருடன் ஐந்து தலைமுறைகள் முந்தைய மரபணுத் தொட…
-
- 1 reply
- 519 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SAKKMESTERKE/SCIENCE PHOTO LIBRAR படக்குறிப்பு, பெருவெடிப்பின்போது, பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றையொன்று அழித்து, ஒளியாற்றலை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றியபோது பெருமளவில் இருந்த மர்மமான ஒரு பொருள் ‘ஆன்டிமேட்டர்’ (antimatter). தமிழில் இது 'எதிர்பொருள்' என்றழைக்கப்படுகிறது. இது குறித்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கின்றனர். ஆன்டிமேட்டர் எனப்படும் எதிர்பொருள், நம்மைச் சுற்றியிருக்கும் பொருளுக்கு (matter) எதிரானது. நட்சத்…
-
- 0 replies
- 513 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. இந்த உண்மை சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது. இதற்கு என்ன காரணம்? பூமியை விட்டு நிலா விலகிச் செல்வதால் என்ன ஆபத்து? இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை அனுப்பியது. அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் சென்று தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்தார்கள். இப்படியான பயணங்களின்போது ரெட்ரோ ரிஃப்ளக்டர் (Retroreflector) என்றழைக்கப்படும் ஒரு கண்ணாடிப் பொர…
-
- 0 replies
- 702 views
- 1 follower
-
-
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது சூரியன் நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் தோன்றுவதால், பகல், இரவு சம அளவு ஏற்படும். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ஈஎஸ்ஏ கூறும்போது, ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த செயற்கைக்கோள் படம் காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. தற்போது சூரியன்…
-
- 0 replies
- 479 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WEIZMANN INSTITUTE OF SCIENCE கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, ஆரோக்கியம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விந்தணு, முட்டை அல்லது கருப்பை என எதுவுமே இல்லாமல், ஆரம்பக்கால மனிதக் கருவை ஒத்த ஒரு பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்டெம் செல்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘மாதிரி கரு’, இயற்கையாக உருவான 14 நாளைய கருவை ஒத்திருக்கிறது என்று சொல்கிறார்கள் அதை உருவாக்கிய இஸ்ரேலின் வெய்ஸ்மேன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள். இந்தக் கரு, கர்ப்பப் பரிசோதனை உபகரணங்களில் நேர்மறையான பரிசோதனை முடிவுகளை விளைவிக்கும் ஹார்மோன்களைக்கூட வெளியிட்டது. …
-
- 2 replies
- 735 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MARCEL DRESCHSLER படக்குறிப்பு, ஒரே உறைக்குள் ஒரு ஜோடி நட்சத்திரங்களை காட்டும் புகைப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆண்ட்ரோமெடா விண்மீன் மண்டலத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஒரு பெரிய பிளாஸ்மா ஆர்க்கின் புகைப்படம் இந்த ஆண்டுக்கான பெருமதிப்புடைய வானியல் புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது. மார்செல் ட்ரெக்ஸ்லர், சேவியர் ஸ்ட்ரோட்னர் மற்றும் யான் செயின்டி ஆகியோல் தலைமையிலான அமெச்சூர் வானியலாளர்கள் குழு, இந்த பிரபஞ்ச அதிசயமான, ஆச்சரியமான நிகழ்வைப் படம்பிடித்தது. வானியல் விஞ்ஞானிகள் இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத வாயு மேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். இது பி…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, K2-18b என்பது ஒரு குளிர்நிறைந்த குள்ள நட்சத்திரத்தைச் சுற்றும் ஒரு புறக்கோள். அதன் வெப்பநிலை, அங்கே உயிர் வாழ்வதற்கு ஏற்ற முறையில் இருக்கும் என நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி நியூஸ் 13 செப்டெம்பர் 2023 நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, பூமிக்கு வெளியில் எங்கோ ஒரு கோளில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான உத்தேச ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது டைமெதில் சல்பைடு (டிஎம்எஸ்) என்ற மூலக்கூறைக் கண்டறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. பூமியில் இந்த வேதிப்…
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘யூ.எஃப்.ஓ’ என முதன்முதலில் அழைத்தது அமெரிக்க விமானப்படை தான். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம். ‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை. ‘யூ.எஃப்.ஓ’ என்றால் என்ன? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அவற்றைப்பற்றி என்ன சொல்கிறது? இக்கட்டுரையில் பார்க்கலாம். ‘யூ.எஃப்.ஓ’ - பெயர் எப்படி வந்தது? அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் என்பதன் ஆங்கிலப் பிரயோகமான Unidentified Flying Object என்பதன் சுருக்கம் தான் U.F.O. தமிழில் இ…
-
- 2 replies
- 581 views
- 1 follower
-
-
பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சூழலில் நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா, ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ ஆகியோர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை. இந்த கைப்பர்…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, Y குரோமோசோம் குறித்த புதிய தகவல்களை அறிந்துகொள்வதற்கான புதிய காலம் பிறந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜென்னி கிரேவ்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 2 செப்டெம்பர் 2023 ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில மரபணுக்களும், குப்பை போல் ஏராளமான டிஎன்ஏக்களும் உள்ளன. அதனால் அதை வரிசைப்படுத்துவது மிகவும் கடின…
-
- 1 reply
- 712 views
- 1 follower
-
-
1976ஆம் ஆண்டுக்கு பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஒகஸ்ட் 21 ஆம் திகதி இந்த விண்கலம் நிலவில்…
-
- 5 replies
- 812 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ISRO 29 ஆகஸ்ட் 2023 சந்திரயான்-3 திட்டத்தின் முதலிரு இலக்குகளை ஏற்கனவே எட்டிவிட்ட இஸ்ரோ, மூன்றாவது இலக்கில் அடுத்தக்கட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது. நிலவி மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் உள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை. இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? நிலவில் குடியேற்றங்கள் அல்லது விண்வெளி தளம் அமைப்பதற்கான மனித குலத்தின் கனவை நனவாக்க இது உதவுமா? அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நிலா ஆய்வில் சரித்திரம் படைத்த இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்…
-
- 1 reply
- 672 views
- 1 follower
-
-
நாளை புதன்கிழமை (30) சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளது. நாளைய தினத்துக்குப் பின் அடுத்த சுப்பர் புளூ மூன் 14 ஆண்டுகளுக்குப் பின்னரே வரும் என்கிறது நாசா. சுப்பர் மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும், சுப்பர் மூன் எப்படி ஏற்படுகிறது?? பூமியை சந்திரன் சுற்றிவருவதற்கு 29.5 நாட்கள் செல்லும், அதாவது 29.5 நாட்களுக்கு ஒரு தடவை பௌர்ணமி (முழு நிலவு) தென்படும். ஆனால், சீரான வட்டப்பாதையில் பூமியை சந்திரன் சுற்றிவருவதில்லை. அது நீள்வட்டச் சுற்றுப்பாதையிலேயே சுற்றி வருகிறது. அதாவது மாதத்தின் சில நாட்களில் பூமிக்கு அண்மையாகவும் சில நாட்களில்…
-
- 3 replies
- 856 views
- 1 follower
-
-
AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை - ஏஐ கருவிகள்! செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பரவல் காட்டுத் தீயை விட அதிவேகமாக உள்ளது. மனிதர்கள் அதன் மீது காட்டி வரும் ஆர்வம் அதற்கு காரணம். அதனால், நாள்தோறும் ஏஐ சார்ந்த புதுப்புது வினோதங்களை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை கையாளும் மக்களுக்கும், அதனால் வேலையை இழக்கும் மக்களுக்கும் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. அநேகமாக இதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கும் இடையிலான யுத்தமாக கூட இருக்கலாம். இப்போதைக்கு நாம் ஓரளவுக்கு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் வீடு, கல்விக் கூடம், அலுவலகம் என எங்கும் எதிலும் ஏஐ கண்டுப…
-
- 5 replies
- 603 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 28 ஆகஸ்ட் 2023 இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒருமுறை அலுவலக உணவகத்தின் கதவைத் திறக்கும்போதும் இதேபோன்று சில விநாடிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நினைவில் வந்து சென்றது. உங்களில் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒருவரைத் தொடுவதன் மூலமோ, கதவைத் திறப்பதன் மூலமோ வேறு சில செயல்பாடுகள் …
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CARGILL படக்குறிப்பு, புதிய தொழில்நுட்ப முறையிலான சோதனை ஓட்டத்தில் Pyxis Ocean சரக்கு கப்பல். கட்டுரை தகவல் எழுதியவர், டாம் சிங்கிள்டன் பதவி, பிபிசி செய்தியாளர் 25 ஆகஸ்ட் 2023 காற்றை எரிசக்தியாக பயன்படுத்தி படகுகளை இயக்குவது பழமையான கடல்சார் தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது புதிய பரிமாணத்தை எட்ட உள்ளது. பிரிட்டனில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சரக்கு கப்பல், தனது முதல் சோதனை பயணத்தை தொடங்கி உள்ளது. காற்று எரிசக்தி மூலம் இக்கப்பல் இயக்கப்படுவதே இந்த பயணத்தின் தனிச்சிறப்பு. இந்தக் கப்பலை வாடகை…
-
- 2 replies
- 577 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, நிலவில் மென்மையாகத் தரையிறங்கிய நான்காவது நாடாக இருந்தாலும், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், குல்ஷன் குமார் வாங்கர் பதவி, பிபிசி மராத்தி 24 ஆகஸ்ட் 2023 சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நிலவில் மென்மையாகத் தரையிறங்கிய நான்காவது நாடாக இருந்தாலும், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வி…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MIKIELL / GETTY படக்குறிப்பு, நிலா உருவானது எப்படி? இந்தக் கேள்விக்க்கான அறிவியபூர்வ விளக்கத்தை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 20 ஆகஸ்ட் 2023 மனித வரலாற்றில் நிலாவுக்குப் பெரும் பங்கு உண்டு. நிலாவை பார்த்து நேரம் சொன்னதில் தொடங்கிய அந்தத் தொடர்பு, நிலாவிலேயே வாழ முயலும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது. நம் மீது இவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தி வரும் இந்த நிலா உருவானது எப்படி? அதைத்தான் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. நிலா எப்படி உருவானது? …
-
- 2 replies
- 616 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REIDAR HAHN / FERMILAB படக்குறிப்பு, இயற்பியலில் வழக்கத்திற்கு மாறான வேகம் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இந்தக் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் பிரிவு 12 ஆகஸ்ட் 2023, 06:49 GMT புதுப்பிக்கப்பட்டது 12 ஆகஸ்ட் 2023, 07:01 GMT ஏற்கெனவே பூமியை நான்கு சக்திகள் ஆட்டிப்படைப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில், சிகாகோ அருகே செயல்படும் ஃபெர்மிலாப்பை சேர்ந்த விஞ்ஞானிகள், இயற்கையின் இன்னொரு புதிய சக்தி இருப்பதாக நம்பத் தொடங்கியுள்ளனர். துணை அணு இயற்பியலின் தற்போதைய கோட்பாட்டால…
-
- 1 reply
- 374 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐந்தாண்டுகளுக்கு முன், சைபீரியாவின் உறைபனி பகுதியில் இவ்வகை நூற்புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஒரு ஜோடி புழுக்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ள வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சைபீரியாவில், எப்போதும் பனிப்படலம் மூடிய நிலையில் காணப்படும் உறை மண் படுகையில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த நூற்புழுக்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த அதி…
-
- 7 replies
- 674 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, வானத்தை வழக்கம்போல ஸ்கேன் செய்தபோது வாயேஜர் 2-லிருந்து ஒரு சமிக்ஞை பெறப்பட்டதாக நாசா கூறியது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆன்ட்ரே ரோடென் பால் பதவி, பிபிசி செய்திகள் 3 ஆகஸ்ட் 2023, 04:21 GMT தனது வாயேஜர் 2 விண்கலத்துடனான தொடர்பை பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் இழந்த பின்னர், இப்போது அதனிடமிருந்து ஒரு ‘இதயத்துடிப்பு’ சமிக்ஞையைப் பெற்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 1977-ம் ஆண்டு முதல் முதல் பிரபஞ்சத்தை ஆராய்ந்து வந்த இந்த விண்கலம், கடந்த மாதம் அனுப்பப்பட்ட தவறான ஒரு கட்டளை அனுப்பப்பட்ட பின்னர் தனது ஆண்டனாவை பூமியிலிர…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
ஓகஸ்ட் மாதம் வானத்தைப் பார்ப்பவர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக இருக்கும், ஏனெனில் இது இரட்டை சந்திர கிரகண நிகழ்வைக் கொண்டுள்ளது. இந்த மாதம் முழு சூப்பர் மூனுடன் தொடங்குகிறது, இன்றிரவு (01) உதயமாகும், ஓகஸ்ட் இறுதியில் ஓர்ரு அரிய நீல நிலவு தென்படும் அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 1) இரவு வான்வெளியில் சந்திரன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து 226,000 மைல்கள் (363,300 கிலோமீட்டர்) தொலைவில் முழு சூப்பர் மூன் இன்றிரவு உயரும், இது கூடுதல் பிரகாசமான மற்றும் பெரிய நிலவை காணலாம். சந்திரன் வழக்கத்தை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என்று பாகிஸ்தான் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஜாவேத் இக்பால்…
-
- 0 replies
- 428 views
-