Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் அபார வெற்றி கண்டவர்: ‘வைரஸ்’ வெ(கொ)ன்ற தமிழன்! இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த சாதனையாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மதுரைக்காரரான கருப்பையா முத்துமணி. உலகிலேயே முதல்முறையாக சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ள இவரை மருத்துவ உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இவரது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் கருப்பையா முத்துமணி (51). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. மதுரை …

  2. தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இரண்டு இலட்சம் முதல் பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மனிதர்கள் (தமிழர்கள், திராவிடர்கள், இந்தியர்கள், ஆசியர்கள். உலக மாந்தர்கள்..) – மூதாதையர் வாழ்ந்த குடியம் குகைகளுக்கு (Kudiyam Caves) கல்விப் பயணம், அறிவு சுடர் நடுவம் சார்பில் திட்டமிட்டோம். இணையத்தை தட்டினால் போக வர 14 கி.மீ காட்டு ஒற்றையடி மலைபாதை நடைபயணம் என்று காட்டியது பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆஸ்த்துமா நோய், கால் ஊனம்.. நடக்கமுடியுமா..? கேள்விகள் வந்து வந்து எச்சரித்தது. இதையும் மீறி இந்த மலைக்குகைக்கு போக வேண்டுமா என்ற கேள்வியும் எழுவது இயல்புதான்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சாமியே அய்யப்பா ..சரணம் அப்ப்பப்பா… என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து மண்…

    • 0 replies
    • 849 views
  3. இங்கிலீஷ் பேச வராது, என்ன பண்றது?', 'இவ்ளோ நாள் கழிச்சு எங்கே போய் இங்கிலீஷ் படிக்கிறது? ஆயிரத்த குடு, ரெண்டாயிரத்த குடு' னு பணம் தான் வீணாகும்' இப்படி நினைப்பவரா நீங்கள்? உங்கள் இங்கிலீஷ் வாத்தியார் உங்க கூடவே இருந்தா எப்படி இருக்கும்? அதுவும் நீங்கள் விரும்பும் நேரத்தில் தமிழ் வழியாகவே உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தால்? அந்த வேலையைத் தான் செய்கிறது கல்ச்சர் அல்லீயின் 'ஹலோ இங்கிலீஷ்' (Hello English) ஆண்டிராய்டு செயலி, அதுவும் இலவசமாக. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம், அதுவும் அடிப்படை இலக்கணத்தில் இருந்து. இலக்கணம் என்றவுடன் பயந்து விடாதபடிக்கு, அன்றாடம் நாம் பேசும் வாக்கியங்களில் இருந்தே ஆங்கில இலக்கணம். அதுவும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பல எடுத்துக்காட்டு…

    • 0 replies
    • 874 views
  4. நௌகட்டில் புதுசா என்ன இருக்கு? #AndroidNougat கிட்காட் (K) ,லாலிபாப் (L), மார்ஷ்மெல்லோவ் (M) என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப் பொருட்களின் வைப்பதுதான் கூகுளின் வழக்கம். அதில் அடுத்த வெர்ஷனுக்கு, இந்திய உணவான 'நெய்யப்பம்' என்றுதான் பெயரிடப்படும் என நாம் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு 'நௌகட்' எனப் பெயரில் ட்விஸ்ட் வைத்தது கூகுள். தற்போது அந்த 'நௌகட்'-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது கூகுள். நௌகட் (N) அப்டேட் முதலில் கூகுளின் நெக்சஸ் டிவைஸ்களில், பீட்டா பயன்பாட்டிற்கு வரும் எனவும், பிறகு அனைத்து போன்களிலும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக நெக்சஸ் 6, நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் 9, நெக்சஸ…

  5. இன்றைக்கு இயற்கை வேளாண் உலகில் மண்புழு வளர்ப்பு பற்றிய பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிலர் மண்புழுவை ஏன் வளர்க்க வேண்டும்? அவைதாம் மண்ணிலேயே இருக்கின்றனவே என்றும், வெளிநாட்டு புழுக்கள் நமக்கு எதற்கு (கலப்பின மாடுகளைப் போல) என்று கூறுபவர்களும் உள்ளனர். பொதுவாக மண்புழுக்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, மண்ணின் மேல்புறத்தில் சாணத்தை உண்டு, தம்மைப் பெருக்கிக்கொள்ளும் சாணப்புழுக்கள். இவை ஏராளமான கழிவை உண்ணும் திறன் பெற்றவை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானவை என்று கருதப்படுபவை. இவற்றில் இரண்டு இனங்களை நமது பண்ணையாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஒன்று Eisenia fetida , மற்றொன்று Eudrilus eugeniae. இந்த இரண்டும் வெளிநாட்டு புழுக்கள் என்று சொல்லப்பட்டால…

    • 0 replies
    • 574 views
  6. இரண்டு காசா மாணவர்களால் உருவாக்கப்பட்ட சூரிய சக்தி வாகனம். இஸ்ரேலால் உணவு. பெற்றோல் என்பனவற்றுக்கு மாற்றீடாக இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. https://www.facebook.com/XinhuaNewsAgency/videos/1355154344512006/

    • 0 replies
    • 649 views
  7. உலகிலேயே அதிநவீன மோதிரம் Touch HB Ring. இது காதலர்களுக்கும் தம்பதியர்களுக்குமான மோதிரம். இதை அணிந்து கொண்டால் உங்கள் அன்புக் குரியவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும். போன், ஸ்கைப் என்று எத்தனையோ கருவிகள் உறவுகளுக்கு இடையே இருக்கும் தூரத்தைக் குறைத்துவிடுகின்றன. ஆனால் அவற்றைவிட இந்த மோதிரம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தில் கணவனும் மனைவியும் தனித்தனியாக இருந்தாலும் மோதிரத்தின் மூலம் அவர்களின் இதயத் துடிப்பை உணர முடியும்! அருகில் இருப்பது போலவே தோன்றும். ஸ்மார்ட்போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, கணவன் அல்லது மனைவியின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். பிறகு மோதிரத்தை அழுத்தினால் இதயத் துடிப்பைக் கேட்கலாம். இந்…

  8. விண்ணிலிருந்து, பூமிக்கு அனுப்பும் தகவல்களை திருட முடியாத வகையில், உலகில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி, சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜிகுவான் மையத்திலிருந்து, 'மிசியஸ்' என பெயரிடப்பட்ட செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், ஒளியின் வேகத்தை விட விரைவாக, பூமிக்கு தகவல்கள் அனுப்பி வைக்கும்.எனவே, இதிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை இடைமறித்து திருட முடியாது என கூறப்படுகிறது. உலகில் முதல் முறையாக, இந்த வகை செயற்கைக்கோளை தயாரித்து, சீனா, சாதனை படைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் எடை, 600 கிலோ. http://www.seithy.com/breifNews.php?newsID=163683&category=Worl…

  9. சமீபத்தில், தனது சர்வதேச விண்வெளி நிலையத்தின் நேரடி ஒளிபரப்பில் எதோ ஒரு விசித்திரமான பொருள் காட்சியளிக்கவும் நேரலையை நாசா துண்டித்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது. பின் அது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட காரியமில்லை என்று நாசா விளக்கமளித்து இருந்தாலும் அதை பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பவில்லை, இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் முதல்முறை நிகழவில்லை. நாசாவில் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் கூட ஏலியன் சார்ந்த உண்மைகள் அமெரிக்க அரசு மற்றும் நாசாவினால் மறைக்கப்படுவதாக தகவல்கள் அளித்துள்ளனர். ஆனால், எதற்கும் செவி கொடுக்காமல் தனது பணிகளையும் ஆய்வுகளையும் நாசா தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியாக, நாசா வேண்…

  10. உங்களுக்கு எதிரே நின்றுகொண்டிருக்கும் உங்கள் காதலி, அல்லது காதலன் ஒரு நானோ நொடிக்கு முந்தையவர்! இந்தப் பிரபஞ்சம் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கியது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையல்ல. பிரபஞ்சத்தின் பிறப்புக்குக் காரணமான பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது இடத்தில் அல்ல, காலத்தில். "பெருவெடிப்பு நிகழ்ந்தது எங்கே?" என்று என்னிடம் பலரும் அடிக்கடி கேட்பதுண்டு. கையெறி குண்டு ஒன்று வெடிப்பதைப் போன்று பிரபஞ்சம் விரிவதையும், அந்தக் கையெறி குண்டின் சிதறல்கள் பறப்பதுபோல் சூரியக் குடும்பத்தையும், பால்வெளியையும் கற்பனை செய்துகொண்டு இது போன்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் ஒரு இடத்தில் தொடங்கவில்லை, காலத்தில்தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுக…

  11. 900 மில்லியன் திறன்பேசிகளில் அன்ட்ரொயிட் bug என அச்சம் மில்லியன் கணக்கான அன்ட்ரொயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளில், திறன்பேசியினுடைய தரவின் கையாளுகையை முழுமையாக ஹக்கர்களுக்கு வழங்கும் மோசமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க நிறுவனமான Qualcomm-இனால் தயாரிக்கப்பட்ட chipsetகளில் இயங்கும் மென்பொருள்களிலேயே Checkpoint ஆராய்ச்சியாளர்களினாலேயே மேற்கூறப்பட்ட bugsகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Qualcomm processorsகளானவை, ஏறத்தாழ 900 மில்லியன் அன்ட்ரொயிட் திறன்பேசிகளில் இருப்பதாக Checkpoint நிறுவனம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும், தற்போது இணையத் திருடர்களினால் மேற்கொள்ளப்படும் இணையத் திருட்ட…

  12. தொலைபேசி கேபிள்களில் ஒட்டுக் கேட்க முடியும், ஒளியியல் கேபிள்களில் அது முடியாது தண்ணீருக்குள் மூழ்கியவாறு மேலே பார்த்தால் ஒரு குறிப்பிட்ட திசையில், கீழேயிருக்கிற பொருட்கள் எல்லாம் தெரியும். இதற்கு ‘முழு அகப் பிரதிபலிப்பு’ என்ற நிகழ்வே காரணம். அடர்த்தி மிகுந்த ஓர் ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஓர் ஊடகத்துக்குள் ஒளி புகும்போது, எடுத்துக்காட்டாகத் தண்ணீருக்குள்ளிருந்து காற்றுக்குள் ஒளி புகும்போது, தண்ணீர்ப் பரப்பில் ஒளிபடும் கோணம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலிருந்தால், ஒளி நீர்ப்பரப்பில் பிரதிபலிக்கப்பட்டு நீருக்குள்ளேயே பாயும். அந்தக் கோணம் ‘மாறுநிலைக் கோணம்’ எனப்படும். பாலைவனங்களில் கோடைக் காலத்தில் தோன்றும் கானல் நீர், வைரங்களின் சுடரொளி போன்றவற்றுக்கு …

    • 0 replies
    • 663 views
  13. சிங்கப்பூரில் சோதிக்கப்படவுள்ள தன்னியக்க வாடகைக் கார்கள் தானாக செலுத்தப்படும் வாடகைக் கார்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் ஒப்பந்தமொன்றுடன், உலகின் முதலாவது ஸ்மாட் தேசமாக மாற சிங்கப்பூர் தயாராகியுள்ளது. தானியங்கி வாகனங்களை சோதிப்பதற்கு, தொடக்க நிறுவனமான nuTonomyயுடன் ஒப்பந்தமொன்றை கடந்த மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது, வணிக நிலையங்களில் பயணிகளைக் காவிச் செல்வதற்கான சிறிய, தானியங்கி வாடகைக் கார் அணியொன்றை Delphi Automotive அறிமுகப்படுத்தியுள்ளது. சாரதியில்லாத வாடகைக் காரின் மூலம் மூன்று ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான மைலொன்றுக்கான பயணத்தின் செலவை 90 சதங்கள் ஐக்கிய அமெரிக்க டொ…

  14. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்: ஸ்நேப்சாட்டின் க்யூட் வெர்ஷன் இன்ஸ்டாகிராம் என்ற புகைப்பட பகிர்வு தளம், தனது புது அப்டேட்டில், 'இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்' என்ற புதிய வசதியை வெளியிட்டு இருக்கிறது. ஸ்நேப்சாட்டில் இருப்பது போல், இனி இன்ஸ்டாவிலும், புகைப்படங்களை வைத்தே கதை சொல்ல முடியும். இன்ஸ்டாகிராம் ஆப் வந்ததும், அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதுவும் ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாவை வாங்கியதால், அதன் மேல் பலருக்கும் ஈர்ப்பு அதிகமானது. இன்ஸ்டா படங்களை, தொடர்ந்து ஃபேஸ்புக்கில் விளம்பரமாக வைத்ததால், அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கபாலி வசூல் வேகத்தில் உயர்ந்தது. 2012-ம் ஆண்டு ஏப்ரலில், இன்ஸ்டாவை ஃபேஸ்புக் வாங்கி இருந்தது. ஆனால், 2011-ம் ஆண்ட…

  15. நமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும் போதிலும், பேட்டரியின் திறன் மோசமடைவதில் நமது பங்கும் உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம்-இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு ஏற்படும் 'stress' எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் 'stress' அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்…

  16. திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள மியாவாக்கி முறை காட்டைப் பற்றிக் கேட்டறியும் அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள். “இடைவெளி இல்லாத அளவுக்கு நெருக்கமாக மரங்கள் வளர்ப்பதுதான், ஜப்பானின் பிரபலத் தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ அறிமுகப்படுத்திய காடு வளர்க்கும் முறை. அவர் முன்வைத்த சூழலியல் கோட்பாடு சார்ந்து காடு வளர்க்கும் முயற்சியைத் திருப்பூரில் முன்னெடுத்துள்ளோம்” என்கிறார்கள் லீலம்- ஜெ.ரூபன் தம்பதி. இருவரும் திருப்பூர் கணியாம்பூண்டியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர்கள். சுற்றுச்சூழல் நாளையொட்டி, திருப்பூரில் மியாவாக்கி முறையில் 12,200 சதுர அடியில் 3,200 மரங்களை நெருக்கமாக நட்டு வளர்த்துவருகின்றனர். இயற்கையாக நாம் பார்க்க…

    • 0 replies
    • 687 views
  17. உங்களுக்கு KFC துரித உணவுகள் பிடிகுமோ பிடிக்காதோ ஆனால் கேணல் ஹார்லாந்து சாண்டர்ஸ் (Colonel Harland Sanders) கதை உங்களுக்கு நிச்சயம் பிடித்தனமானதாகவே இருக்கும். அவரின் பயணம் எல்லோருக்கும் வெற்றிக்கான தூண்டுதலையே கொடுக்கும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவை இணைந்தால் எந்த வயதிலும் வெற்றியை உருவாக்க முடியும் என்பதை அவரின் வாழ்க்கை பயணம் சொல்லுகிறது. கேணல் சாண்டர்ஸ் தன்னுடைய கென்டகி ஃபிரைடு சிக்கன் (Kentucky Fried Chicken) கடையை உலகின் மூலை முடுக்கெல்லாம் திறந்தவர். 1009 முறை விடாமுயற்சி கேணல் சாண்டர்ஸின் KFC சிக்கன் உரிமையை முதன் முதலில் விற்றபோது அவருக்கு வயது 65. இந்த முதல் வெற்றி பெறுவதற்கு முன்பு 1009 முறை, உணவகங்களால் KFC சிக்க…

    • 0 replies
    • 383 views
  18. செப்டம்பரில் வருகிறது எஸ் 3... எஸ் - 3 என்றவுடன் சூர்யாவின் சிங்கம் - 3 பற்றிய செய்தி என நினைத்தவர்களுக்கு......ஸாரி நீங்கள் சினிமா பக்கத்தை பின் தொடரவும். இது கேட்ஜட் (gadget) பிரியர்களுக்கான இனிப்பான செய்தி. ஆம், சாம்சங் தனது கியர் (துணைக்கருவி) எஸ் 3 ஸ்மார்ட் வாட்ச்சை இவ்வருட செப்டம்பர் மாதம் பெர்லினில் நடக்கவிருக்கும் ஐ.எஃப்.ஏ (IFA) தொழில்நுட்ப நிகழ்வில் வெளியிடவிருக்கிறது. ஸ்மார்ட் வாட்ச் என்பது என்ன? ஸ்மார்ட் போன்கள் போர் அடிக்க ஆரம்பித்துவிட, பயனாளர்களின் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதில் தான் கையடக்க...மன்னிக்கவும்., கைகளில் கட்டிக்கொள்ளக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள். நாம் சாதாரணமாக அணியும் டிஜிட்டல் கைக்கடிகாரமே, ஆண்ட்ராய்ட…

  19. உலகிலேயே மிகுந்த தொந்தரவு கொடுக்கும் உயிரினங்களில் ஒன்றாக கொசுவைக் கூறலாம். நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பவர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதோடு டெங்கு, மலேரியா, யானைக்கால், ஜிகா, யெல்லோ பீவர் என கொசுக்கள் பரப்பும் நோய்களின் எண்ணிக்கைக்கும் ஒரு கணக்கில்லை.கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவலை, கொசுவர்த்தி, க்ரீம், திரவ கொசுவிரட்டிகள், கொசுப் பிடிக்கும் மின்னியந்திரம் என எத்தனையோ வந்தபோதும் கொசுவிடமிருந்து முழுமையாகத் தப்பித்தபாடில்லை.இந்நிலையில் கொசுக்களை அழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் ஒரு புது யுக்தியைக் கையாண்டுபார்க்கிறது சீனா. அதாவது கொசுக்களை ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பி கொசுக்களை அழிப்பதுதான் அந்நாட்டின் டெக்னிக். கொசுவளர்த்தால் எப்ப…

  20. 5ஜி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது கனடா! கனடாவைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பெல் மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியாவும் சேர்ந்து, 5ம் தலைமுறைக்கான இணைய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. கனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல், ரோஜர்ஸ் மற்றும் டெலஸ் ஆகிய மூன்றும் போட்டிப் போட்டுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கான இணையதள தொழில்நுட்பத்தைப் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக பெல் நிறுவனமானது, நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கனடாவின் தற்போதைய சராசரி இணையதள வேகத்தைவிட ஆறு மடங்கு இணையதள வேகத்தை அளிக்கும்…

  21. குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது ஏன்? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு AddThis Sharing Buttons Share to FacebookShare to TwitterShare to Google+Share to Email உலகம் முழுவதும் குடிப்பழக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையானவற்களை மீட்க விஞ்ஞான ரீதியாக பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், குடிப்பதற்கு காரணமானவை என்று மனித மூளையின் இரண்டு பகுதிக்கு இடையே செல்லும் நரம்பு பகுதியை கண்டறிந்துள்ளனர். மூளையின் நடுவில் நீட்டிக்கப்பட்ட அமிக்டாலா மற்றும் கீழ்ப்ப…

    • 0 replies
    • 320 views
  22. பிரமிடுகளின் உள்ளே! பிரமிடுகளுக்குள் கிருமிகள் வளர வாய்ப்பு இல்லாததால் அதனுள் வைக்கப்படும் உணவுகள் கெட்டுப்போவதில்லை மனித உழைப்பின் மகத்தான படைப்புகளில் 4,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட பிரமிடுகள் குறிப்பிடத்தக்கவை. எகிப்து சாம்ராஜ்யம் உலகிலேயே பெரும் செல்வச்செழிப்பும் வலுவும் கொண்டிருந்த காலம் அது. மக்கள் மன்னர்களைத் தெய்வங்களாக வழிபட்ட காலம் அது. மன்னர் மரித்த பிறகும் அவரை வழிபட்டால்தான் தமக்குத் தீங்கு ஏதும் வராது என மக்கள் நம்பினார்கள். மன்னரின் ஆத்மா சிரமம் இல்லாமல் வானுலகுக்கு ஏற வசதியாகப் பிரமிடுகள் நாற்கூம்பு வடிவில் அமைக்கப்பட்டன. அவற்றின் சரிந்த பக்கங்கள் சூரியனின் கதிர்களைக் குறித்தன. மன்னர் …

  23. கோழி­களின் வாச­னையை நுளம்­புகள் விரும்­பு­வ­தில்லை என எத்­தி­யோப்­பி­யா­வி­லுள்ள விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். இதனால், மலே­ரியா நோய் பர­வலை தடுப்­ப­தற்கு நவீன வழி­மு­றை ­ஒன்றை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மனி­தர்­க­ளையும் ஏனைய மிரு­கங்­க­ளையும் நுளம்­புகள் கடிக்­கின்ற போதிலும் கோழி­க­ளி­லி­ருந்து நுளம்­புகள் வில­கி­யி­ருப்­பதை சோமா­லி­யாவின் தலை­நகர் அடீஸ் அபா­பா­வி­லுள்ள அடீஸ் அபாபா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஹெப்தே தெக்கீ தலை­மை­யி­லான பூச்சியில் நிபு­ணர்கள் குழா­மொன்று அவ­தா­னித்­த­னராம். அதை­ய­டுத்து மலே­ரியா நுளம்­பு­களின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான புதிய வழிகள் குறித்து இக்­ கு…

    • 0 replies
    • 346 views
  24. நீங்கள் நினைத்தே பார்க்காத இடத்தில் புதிய ஆண்டிபயாடிக்குகள் ! புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று , அதற்குத் தேவைப்படும் ஆண்டிபயாடிக்குகளை (நுண்ணுயிர்க்கொல்லி) ஒரு அசாதாரணமான இடத்தில் கண்டறிந்துள்ளனர். அந்த இடம் - மனித மூக்கு ! மூக்கிற்குள் நுண்ணுயிர்க்கொல்லிகள் மூக்குக்குள் வாழும் நுண்ணுயிரிகள் பல ஆபத்தான 'பேத்தஜென்' எனப்படும் நோய்க்காரணிகளைக் கொல்லகூடியவை. மிக ஆபத்தான கிருமியான எம்.ஆர்.எஸ்.ஏ உட்பட பல கிருமிகளை அவை கொல்லும் சக்தி படைத்தவை. பெரும்பாலான நுண்ணுயிர்க்கொல்லிகள் மண்ணில் வாழும் பாக்டிரியாவிலிருந்து உருவாக்கப்படுகின்றன. ஆனால் மேலும் மேலும் பல நோய்கள்,தற்போது இருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.