அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர். மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து, அதன் மூலம் பீர் …
-
- 3 replies
- 255 views
-
-
இந்தியாவில் பிக்காசூக்களை பிடிக்கிறீர்களா? சற்றே கவனம் உணவருந்தச் செல்லும் ஹோட்டல்கள் துவங்கி வகுப்பறையின் உள்ளே வரை பிக்காசூக்களைத் தேடி ஒரு கூட்டம் செல்போனும் கையுமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆம் “போக்கிமான் கோ" இந்த வார்த்தையை உச்சரிக்காத ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்களே இருக்க முடியாது எனலாம். "ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி" தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, நிஜ உலகத்தில் மாய உலகின் பூச்சிகளை பிடிப்பதே ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த “நயாண்டிக்" என்னும் மென்பொருள் நிறுவனம்தான் "போக்கிமான் கோ"வை இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற சில நாடுகளில் வெளியிட்டது. தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வெள…
-
- 0 replies
- 452 views
-
-
ஒரேஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காரின் எடையளவே கொண்ட இவ்விமானம் நீளமான இறக்கைகளை கொண்டதாகும்.சுற்றுச்சூழல் மாசில்லாத உலகம் என்ற பிரசாரத்துக்காக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானிகளான ஆன்ட்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்டான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த சோலார் இம்பல்ஸ் விமானத்தை மாறிமாறி ஓட்டியபடி உலகை சுற்றி வலம் வந்தனர்.ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றி சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், …
-
- 3 replies
- 557 views
-
-
நிலத்திலும், நீரிலும் தரையிறங்கும் திறன் கொண்ட விமானத்தை தயாரித்தது சீனா நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக்கூடிய பெரிய விமானம் ஒன்றை சீனா தயாரித்துள்ளது. ஏஜி-600 என்று அழைக்கப்படும் அந்த விமானம் மேலெழும்பி விமான ஓடுபாதை அல்லது நீரில் தரையிறங்க முடியும். குவாங்தொங் மாகாணத்தின் தெற்கு பகுதியில் பொதுமக்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், கடல் பணகளுக்கும் இந்த விமானம் உதவும் என சீன பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள சீன தளங்களுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கவும் இது உதவும் என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம்…
-
- 0 replies
- 308 views
-
-
சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில் விலங்குகளிலும் இனப்பெருக்கம் செய்ய ஆய்வுப் பணி நடைபெற்றது.இந்த ஆராய்ச்சியில் முதன் முறையாக கனடாவை சேர்ந்த கால்நடை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அழியும் இனப்பட்டியலில் இருக்கும் காட்டு எருமைகளை இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர். தற்போது மலைப்பகுதியில் வாழும் அரிய வகை காட்டெருமைகள் உலக அளவில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையே உள்ளன. அவை நோயினாலும், இயற்கை மாற்றங்களினாலும் அழிந்து வருகின்றன. 5 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உயிர் வாழ்கின்றன.எனவே …
-
- 0 replies
- 398 views
-
-
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு முலம் காற்று மாசுபடுகிறது. அதனால் பூமி வெப்பமடைந்து பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.அதை தடுக்க காற்றில் ஏற்படும் மாசுககளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த ரோசெகார்டே என்பவர் காற்று மாசு சுத்திகரிப்பு கருவியை தயாரித்துள்ளார். இக்கருவி 23 அடி உயரம் கொண்டது. மிக சிறிய அளவிலான அடுக்குமாடி கட்டிடத்தை போன்று வடிவம் உடையது.அதன் உள் பகுதியில் புகையை உறிஞ்சும் தொழில் நுட்பங்களுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை ஒரு கால்பந்து மைதான அளவுஉள்ள இடத்தில் 36 மணி நேரத்தில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான மாசுபட்ட காற்றை வெளிய…
-
- 0 replies
- 351 views
-
-
வேற்றுகிரகவாசிகள் வாழும் சாத்தியக்கூறுகள் நிறைந்த புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதில் கூறுகிறார்கள். தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே அங்கும் சுற்றுச்சூழல் …
-
- 0 replies
- 584 views
-
-
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான டன் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகளாக மாறி மாசு ஏற்படுத்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுத்து உபயோகமான பொருளாக மாற்ற தீவிரமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதன் விளைவாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோககரமான டீசல் போன்ற எரிபொருளாக மாற்ற முடியும் என ஆய்வில் தெரிய வந்தது. எனவே, அதை எரிபொருளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவின் இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் ஷாங்காய் ஆர்கானிக் கெமிஸ்டரி நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிஎத்திலீன் என்ற வேதி பொருளால் தயாரிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் இதன் தேவை அளவு 10 கோடி மெட்ரிக் டன் என கணிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 466 views
-
-
புவித் தகடுகள் நகருவதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் ஏராளமான அளவில் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது.அந்த நாட்டின் டியூக் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆழ்கடலடிப் பகுதிகளில் புவித்தகடுகள் நகரும் பகுதிகள் இதுவரை மேலோட்டமாகவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அந்தப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள புதிய ஆய்வு முறை மூலம் ஹைட்ரஜன் வாயு இருப்பை துல்லியமாக கணிக்க முடிவதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்ததாவது: புவித் தகடுகள் வேகமாக நகர்வதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் எவ்வளவு ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகும்…
-
- 0 replies
- 336 views
-
-
நீர்ச் சோதனையில் சம்சுங் திறன்பேசி தோல்வி நீர் உட்புகாது என விளம்பரப்படுத்தப்பட்ட சம்சுங் திறன்பேசி ஒன்று, முன்னணி உற்பத்தி மதிப்பீடு இணையத்தளமொன்றின் நீரில் மூழ்கும் சோதனையில் தோல்வியடைந்துள்ளது. நீருக்கடியில் ஐந்து அடி ஆழத்தில் இருப்பது போன்ற நிலைமைகளை வழங்கக் கூடிய தொட்டியொன்றினுள், சம்சுங் கலக்ஸி எஸ்7 அக்டிவ் திறன்பேசியை இட்டபோது, அது இயங்குவதை நிறுத்தியுள்ளது. மேற்குறித்த சோதனையை இரண்டாவது மாதிரியொன்றில் மேற்கொண்ட போது, அம்மாதிரியும் பாதிப்படைந்ததாக குறித்த சோதனையை மேற்கொண்ட Consumer Reports தெரிவித்துள்ளது. முதலாவது திறன்பேசியை அரை மணித்தியாலத்தின் பின்னர் தொட்டியிலிருந்து அகற்றியபோது அதன் திரையானது இயங்க…
-
- 0 replies
- 302 views
-
-
புதிய 104 கிரகங்கள் கண்டுபிடிப்பு நமது சூரிய அமைப்புக்கு வெளியே 104 புதிய கிரகங்களைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கூறுகிறது. கெப்லர் விண்நோக்கியைச் சித்தரிக்கும் வரைபடம் இதில் நான்கு கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன; அவை சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. கெப்லர் விண்நோக்கி மூலமும், பூமியிலிருந்து செய்யப்பட்ட கண்காணிப்புகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகக்கூட்டங்களில் 21 கிரகங்கள், அவைகளின் சூரியனிலிருந்து வசிக்கக்கூடிய தொலைவில் உள்ள பகுதியில் இருக்கின்றன. இந்தத்…
-
- 0 replies
- 418 views
-
-
புதிய நட்சத்திர மண்டலங்கள் கண்டுபிடிப்பு உலகின் மிக சக்தி வாய்ந்த விண் நோக்கியாக ( டெலெஸ்கோப்) உருவெடுக்கவிருக்கும் டெலஸ்கோப் அனுப்பிய புதிய படங்கள் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையில் 1,300 புதிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன. புதிய நட்சத்திர மண்டலங்கள் கண்டுபிடிப்பு (ஆவணப்படம்) பிரபஞ்சத்தின் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு வரை 70 நட்சத்திர மண்டலங்கள்தான் இருப்பதாகத் தெரியப்பட்டுவந்தது. தென்னாப்ரிக்காவின் கேப் டவுனிலிருந்து 600 கிமீ தொலைவில் இருக்கும் மீர்கேட் விண் நோக்கி இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும். இந்த விண் நோக்கி அனுப்பிய படங்கள் எதிர்பார்த்ததை விட மேலும் நன்றாக இருப்பதாக இத்திட்ட…
-
- 0 replies
- 396 views
-
-
மார்ஷ்மெல்லோவைவிட சுவையாக இருக்குமா நௌகட்?#AndroidNougat பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்பொருள் ஆண்ட்ராய்டுதான். கூகுள் நிறுவனத்தினர், தங்களது ஆண்ட்ராய்டு மென்பொருளுக்கான ஒவ்வொரு அப்டேட்டிற்கும் , புதுப்பெயரை யோசிப்பார்கள். அவை எப்போதும் தின்பண்டங்களாகத்தான் இருக்கும் . அதன்படி புதிய வெர்ஷனான ஆண்ட்ராய்டு N-ற்கு என்ன பெயர் வைக்கலாம் என சமூக வலைதளங்களில் போட்டியெல்லாம் நடத்தினார்கள். தற்போது அதற்கு நௌக்கட் என பெயர் வைத்து இருக்கிறார்கள். மார்ஷ்மெல்லோவை விட நௌக்கட்டில் என்னெவெல்லாம் ஸ்பெஷலாக இருக்கும் என்பதை பார்ப்போம்... * மல்ட்டிடாஸ்கிங் முந்தைய அப்டேட்களிலும் மல்ட்டிடாஸ்கிங் என்பது இருந்தது. நீங்கள் ஃபேஸ்புக…
-
- 0 replies
- 518 views
-
-
கோபுரங்கள் சாய்வதில்லை..? நாம் கிராமத்தையோ, நகரத்தையோ கடந்து, காட்டு வழியே கவலைப்படாமல் நடந்து செல்லும்போது, உயர் மின்னழுத்த கம்பிகளையும், அதனை தாங்கி நிற்கும் ராட்சத உலோகத்தாலான கோபுரங்களையும் கண்டிருப்பீர்கள்.. அதனருகில் சென்றால் "ஹ்ம்.. ம்ம்" என்ற 'கரோனா ஒலி'யையையும் கேட்டிருப்பீர்கள்தானே? சமதள பரப்புள்ள காடுகளின் வழியாக, ஊர்விட்டு ஊர் செல்லும் இந்த கம்பி வழித்தடங்களை நிர்மாணிப்பது எளிது.. ஆனால் அதுவே குன்றும்,குழியுமான மலைப்பாங்கான பகுதிகளின் வழியாக மிக உறுதியாக மின் கோபுரங்களை நிறுவி, உயரழுத்த மின்சாரத்தை (உதாரணமாக 400, 220, 132, 33 கிலோவாட் சக்தியுள்ளவற்றை) எப்படி கடத்தி எடுத்துச் செல்வது..? இந்தக் காணொளி, அற்புதமாக கோபுரங்கள் நிர்மாணிக்கும் வேலையின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
சர்வதேச விண்வெளித் துறையில் குறிப்பிடத் தகுந்த மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது நாஸா. வியாழன் கிரகத்தின் தீவிரமான காந்தப்புலத்திலும் கதிர்வீச்சிலும் தாக்கப்படாத வகையில் தனது சுற்றுப்பாதையில் ‘ஜூனோ’ விண்கலத்தை வெற்றிகரமாக நுழைத்திருக்கிறது. வியாழன் ஆராய்ச்சியில் ஜூனோ முக்கியமான பங்கு வகிக்கும். இந்த விண்கலம் 2011 ஆகஸ்ட் 5-ல் புறப்பட்டு 280 கோடி கி.மீ. பயணம் செய்துள்ளது. முன்னதாகத் திட்டமிட்டதைவிடக் கூடுதலாக, நெருக்கமாக அது வியாழனை நெருங்கியுள்ளது. வியாழனைச் சுற்றுகிற முதல் விண்கலம் அல்ல இது. இதற்கு முன்னதாக கலிலியோ விண்கலம் வியாழனை 1995 முதல் 2003 வரை சுற்றியது. அதைவிட நுட்பமான முறையில் ஜூனோ வியாழனை ஆராயும். அதற்காக அதில் ஒன்பது விதமான விஞ்ஞானக் கருவிகள் பொருத்…
-
- 0 replies
- 341 views
-
-
லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை கோப்புப் படம் அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது. ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது. இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாத…
-
- 0 replies
- 360 views
-
-
340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை 340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (European Southern Observatory)எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டுள்ளம…
-
- 1 reply
- 369 views
-
-
இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன 'அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 …
-
- 0 replies
- 557 views
-
-
170 கோடி மைல்களை கடந்து “ ஜுனோ ” விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது. சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில்…
-
- 1 reply
- 643 views
-
-
மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா.?? ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர். சோதனை செய்யப்பட்டும் மைதானத்தை விட்டு சுமார் 10-20 மைல் தூரத்தில் சோதனையின் பார்வையிடும் பகுதி அமைக்கப்படுகின்றது. சரியான 5.29 மணி 45 விநாடிகளில் முதல் அணு ஆயுதம் வெடிக்கச் செய்யப்படுகின்றது. இது தான் இன்று வரை உலகம் அறிந்த முதல் அணு ஆயுதம் என நினைக்கப்பட்டு வருகின்றது. ஆனா…
-
- 8 replies
- 3.8k views
-
-
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம். தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்…
-
- 0 replies
- 386 views
-
-
வந்துவிட்டது ஹிலாரி மோஜி! பிரபலங்களின் புகழை இன்றைய தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் இமோஜிக்கள் எனப்படும் செய்கையை உணர்த்தும் கார்ட்டூன்கள். கோபம், அழுகை, மகிழ்ச்சி, சோர்வு, ஆச்சர்யம், படபடப்பு, காதல், அன்பு போன்ற நமது வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நிகழும் அன்றாட சுபாவங்களை வார்த்தைகள் அல்லாமல் வெளிக்கொணர சிறந்த பதிவாக உள்ளது இந்த இமோஜிக்கள். இதன்மூலம் சாட்டிங் மிகவும் எளிதாகிறது. நான்கு வார்த்தைகள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு இமோஜி பயன்படுத்தினாலே போதும் என்கிற நிலை தற்போது இளசுகளிடம் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் இவை பயன்படுத்தப்படுகின்…
-
- 0 replies
- 402 views
-
-
-
நீங்கள் இறந்தப்பின் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதை முடிவு செய்யும் வசதியை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இணையத்தில் எல்லோராலும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரே சமூக வலைதளம் ஃபேஸ்புக். தினசரி வாழ்வில், எதை மறந்தாலும் சரி இந்த ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த யாரும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தை இறந்தப்பின் யார் பயன்படுத்துவது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. அந்த கேள்விக்கு விடை தரும் வகையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் நாம் இறந்த பின் நம் ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை இப்போதே முடிவு செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இந்த வசதி ‘Legacy Contact' என்ற பெயரில் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 425 views
-
-
வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடத்தில் ஜொலிப்பது என்ன? ---------------------------------------------------------------------------------------------------------------------------- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்…
-
- 3 replies
- 748 views
-