Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. படக்குறிப்பு, சார்லஸ் மெவேசிகா தனது பிரிட்டன் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினார், மேலும் தான் ஒரு முன்னாள் லண்டன் பேருந்து ஓட்டுநர் என்று கூறினார். கட்டுரை தகவல் ருனாகோ செலினா பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் 16 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக…

  2. 01 AUG, 2024 | 12:36 PM பாட்னா: பிஹாரில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் சக மாணவன் காயம் அடைந்தார். பிஹாரின் சுபவுல் மாவட்டத்தில் புனித ஜோன் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நர்சரி வகுப்பில் படிக்கும் 5 வயது மாணவன் நேற்று துப்பாக்கியை தனது புத்தகப் பையில் மறைத்து வைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளார். பிறகு அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை நோக்கி சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 10 வயது மாணவன் கூறுகையில், “நான் எனது வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது, அச்சிறுவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டான். நான் அவனை தடுக்க முயன்றபோது…

  3. லுக்கோமியா என்னும் ரத்த புற்று நோயால் நோயால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள பிர்கிக்காம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஒமர் அல் ஷேக்( வயது 16) மருத்துவமனை படுக்கைதான் அவரது வாழ்விடம்.இவரின் வாழ் நாள் எண்ணபடுவதாகவும் அவர் சில நாட்களில் இறந்து விடுவார் எனவும் டாக்டர்கள் எச்சரித்து இருந்தனர். தனது வாழ் நாளை எண்ணிக் கொண்டிருந்த அந்த இளைஞர் தான் சிறு வயது முதலே காதலித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டு உள்ளார். ஒமர் அல் ஷேக் என்ற இளைஞர் தனது கடைசி ஆசையை தனது காதலி அமி கிராஸ்வெல்லிடம் தெரிவித்து உள்ளார். தனது காதலரின் விருப்பத்தை நிறைவேற்ற காதலி அமியும் முடிவு செய்தார். தனது காதலனுக்கு ஒரு சில நாட்களே மனைவியாக வாழ முடியு…

    • 0 replies
    • 200 views
  4. துப்பாக்கிச்சூட்டில்... நிழல் உலக தாதா உயிரிழப்பு – இரு பொலிஸாருக்கு காயம்! பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். களுத்துறை − தியகம பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை காண்பிக்க அழைத்து சென்ற வேளையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது, அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து, பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதிலேயே, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்ப…

  5. அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் திகதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (ஒக்.30) அன்று உயிரிழந்துள்ளார். “லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி…

  6. ஜப்பானிய பிரதமருடனான உத்தியோகபூர்வ பைவத்தில் குட்டைப் பாவாடையுடன் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய இவான்கா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவான்கா ட்ரம்ப், ஜப்பானிய பிரதமருடன் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோது பொருத்தமற்ற வகையில் ஆடையணிந்திருந்தார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 36 வயதான இவான்கா ட்ரம்ப், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகளாவார். தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரர் எனும் சம்பளமற்ற பதவியை வகிக்கிறார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஜப்பானிய விஜயத்துக்கு முன்னோடியாக இவான்கா ட்ரம்ப்பும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோ நகரில் நடைபெற்ற பெண்களுக்கான …

  7. கருணைக் கொலை "காப்ஸ்யூலில்" உயிரிழந்த பெண்: சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்! கருணைக் கொலை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சர்கோ பாட் எனும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 64 வயதுடைய அமெரிக்க பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து – ஜெர்மனி எல்லைக்கு அருகில் ஒரு வனப்பகுதியில் உள்ள தி லாஸ்ட் ரிசார்ட் என்ற பெயர் கொண்ட ரிசார்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காப்ஸ்யூல் வடிவில் இருக்கும் குறித்த சர்கோ பாட் இயந்திரத்துக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து நைட்ரஜன் வாயு வெளியாகும் எனவும் இதனால் ஆக்ஸிஜனைக் குறைத்து உள்ளே இருப்பவர் சில நிமிடங்களிலேயே உயிரிழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்ப…

  8. பயணிகள் தப்பியோடியமையால் ஸ்பானிஷ் விமான நிலையம் மூடல் புலம்பெயர் பயணிகள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து ஸ்பெயினின் விமான நிலையம் ஒன்று வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மூடப்பட்டது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்றுகொண்டிருந்த கொண்டிருந்த விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக பால்மா டி மல்லோர்காவிற்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் தரையிறங்கியதும், 21 பயணிகள் ஓடுபாதையின் குறுக்கே ஓடி, சுற்றுச்சுவர் வேலிக்கு மேல் பாய்ந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் அவர்களை கைது செய்த நிலையில் அவர்கள் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வ…

  9. முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா? உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர். இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்க…

  10. சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள்! ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக கூறும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் உள்ள ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் சிவாக்ஷி ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் காணப்படுகிறது என வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படங்களில் உள்ள சிவலிங்கங்கள் சஹஸ்ரலிங்காவில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. சஹஸ்ரலிங்கா கர்நாடக மாநிலத்தின் ஷாமலா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபல வழிபாட்டு தளம் ஆகும். இங்கு ஆயிர…

  11. தன்னைப் பிரிந்து செல்ல வேண்டாமெனக் கோரி காதலியின் காலைப் பிடித்து கெஞ்சிய இளைஞர் சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கைவிட்டுச் செல்ல வேண்டாம் எனக் கோரி, வீதியில் வைத்து தனது காத­லியின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்­சிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. சீனாவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஜியாங்ஸு மாகா­ணத்தின் ஹுவாய் நகரின் பிர­பல ஷொப்பிங் வல­ய­மொன்றில் இச்­ சம்­பவம் இடம்­பெற்­றது. இந்த இளை­ஞ­னு­ட­னான காதலை முறித்­துக்­கொள்­வ­தற்கு அவரின் காதலி தீர்­மா­னித்த நிலையில், காத­லியை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கான கடைசி முயற்­சி­யாக அவர் இந் ­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. பெரும் …

  12. உலக ஏழைகள் தினத்தில் வசிப்பிடமற்ற 1,500 பேருக்கு போப் உணவளித்துள்ளார் ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அதன் உலக ஏழைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இருப்பிடம் அற்ற 1,500 பேருக்கு போப் ஃபிரான்சிஸ் இலவச மதிய உணவளித்துள்ளார். வத்திக்கானில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள், இனிப்புப் பண்டங்கள் என அறுசுவை விருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டது. இருப்பிடம் இல்லாதவர்களுக்கு நாளாந்தம் உதவிகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வசதி குறைந்தவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க கடந்த வாரம் முழுவதும் செயின்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் நடமாடும் மருந்தகம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது. அத…

  13. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையை சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாக கழித்துள்ளனர். இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி. பியாவோவி மனைவியான லாங்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பிறகு லாங்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எப்படியும் ஒருநாள் தனது உடல்நில…

  14. அமெரிக்காவில் போதைப் பொருளுடன் சிக்கிய ராகுல் காந்தி! பரபரப்பு தகவல்[ புதன்கிழமை, 22 யூலை 2015, 08:31.53 AM GMT +05:30 ] ராகுல்காந்தி போதைப்பொருளுடன் பிடிபட்டபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவரை காப்பாற்றியதாக சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்ற பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே லலித் மோடிக்கு உதவி செய்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு ராகுல் காந்தி 1.60 லட்சம் அமெரிக்க டொலர் மற்றும் 'ஒயிட் ஷுகர்' எனப்படும் போதைப்பொருளுடன் பொலிசாரிடம் சிக்கினார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சோனியா காந்தி தொடர்பு …

    • 0 replies
    • 198 views
  15. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்ம வெளிச்ச உருவங்கள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மர்ம வெளிச்சங்கள் தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/304171

  16. இந்தோனேசியாவில் 2 குழந்தைகள் உள்பட 10 பேருடன் கிளம்பிய விமானம் மாயம் ஜகார்தா: இந்தோனேசியாவில் 10 பேருடன் கிளம்பிய சிறிய ரக விமானம் சுலாவெசி தீவில் மாயமாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள மசாம்பாவில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான நிறுவனமான ஏவியஸ்டருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 10 பேருடன் கிளம்பியது. 2 குழந்தைகள் உள்பட 7 பயணிகள், 3 விமான ஊழியர்களுடன் விமானம் மகாசாருக்கு கிளம்பியது. இந்நிலையில் விமானம் கிளம்பிய வேகத்தில் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேட மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விமானம் கிளம்பிய 7வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானதாக போக்குவரத்து அமைச்சக செய்…

  17. 2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களு…

  18. நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்! நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் ரெஜிபோம் …

  19. கொழும்பு புளூமெண்டால் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர் வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக புளூமெண்டால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து 68 வயதான மருத்துவர் புளூமெண்டால் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்தக் கைத்தொலைபேசியை திருடியவர் இதுவரை சிக்காத நிலையில், குறித்த நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லங்காதீப https://thinakkural.lk/article/275642

  20. “ஆசையா கன்னத்தைக் கடிக்கத் தோணுதா?” – காதலில் வரும் ‘செல்லக் கடி’ பின்னால் இருக்கும் சயின்ஸ் இதுதான்! 18 Dec 2025, 6:30 AM காதலிக்கும்போதோ அல்லது மிகவும் பிடித்த ஒருவரைக் கொஞ்சும்போதோ, உங்களுக்கு விசித்திரமான ஒரு உணர்வு ஏற்பட்டதுண்டா? அவர்கள் கன்னத்தைப் பிடித்துப் பலமாகத் கிள்ள வேண்டும், கையை ஓங்கிக் கடிக்க வேண்டும் அல்லது எலும்பு உடையும் அளவுக்குக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுமா? “ஐயோ… பாவம் வலிக்குமே” என்று நினைத்தாலும், அந்த ஆக்ரோஷமான ஆசையைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை நினைத்து, “எனக்கு என்னாச்சு? நான் ஏன் இப்படி வன்முறையா நினைக்கிறேன்?” என்று பயப்பட வேண்டாம். இதற்குப் பெயர்தான் ‘கியூட் அக்ரஷன்’ (Cute Aggression). இது ஏன் ஏற்படுகிறது? (The Science Behind It…

  21. விபத்தில் உயிரிழந்த யாசகரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் 5 வங்கி புத்தகங்களும் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 11:58 AM புத்தளம் - சிலாபம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவர் 135,000 ரூபா பணத்தை வைத்திருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்கு புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - சிலாபம் வீதியில் ஆணைவிழுந்தான் பகுதியில் சனிக்கிழமை (05) மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் உடப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கதிரேசன் பாலமுருகன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். ஆணைவிழுந்தான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனி…

  22. அமெரிக்காவில்... அடுத்தடுத்து 15 வாகனங்கள், மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவத்துள்ளது. இதன்போது கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 சிறுவர்க…

  23. கொழும்பில்... 5 இடங்களில் குண்டுத் தாக்குதல், என்ற செய்தியில் உண்மையில்லை – பொலிஸார் கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை, கல்கிசை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எவ்வாறாயினும், அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக …

  24. பிலிப்பைன்ஸில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை அதிகரிப்பு By T. Saranya 14 Jan, 2023 | 10:17 AM பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம். ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.