துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு. போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மாலையர்கட்டில் வறுமைக்கோட்டிற்கு கீட்பட்ட 44குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பாக ஆயிரம் கோழிக்குஞ்சுகள் 01.10.2013 அன்று நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , உபதலைவர் டினேஷ் , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் பொருளாளர் , உறுப்பினர்கள் , மலையர்கட்டு கிராம சேவகர் திரு.குகதாசன் , கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கயேந்திரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஏற்கனவே இக்கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக அடிப்படைத் தேவைகளை எமது அமைப்பு …
-
- 26 replies
- 2.9k views
-
-
போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை. ------------------------------------------------------------------------------------------------------- போரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது. இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை மேம்படுத்த புலம்பெயர் தமிழர…
-
- 0 replies
- 405 views
-
-
தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு. இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உதாரணமாக :- அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும். மீன்ரின் – 220ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 180ரூபாவிற்கு வழங்…
-
- 0 replies
- 717 views
-
-
இரண்டாம் இணைப்பு.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் அலுவலகத்தில் பதிவுசெய்தால் புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவிகளிடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பரபரப்புத் தகவலொன்று சமூகவலைத் தளமான ' பேஸ்புக் ' வாயிலாக பரப்பப்பட்டுவருவதால் போராளிகளும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர் . புலம்பெயர்ந்து வாழுகின்றவர்களின் உதவிகளை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கான பதிவுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் ம…
-
- 2 replies
- 764 views
-
-
பத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள், எழுதுகருவிகள் தேவை. நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – 150000.00ரூபா மொத்தம் – 675000.00ரூபா (3900€) உதவ விரும்புவோர் தொடர்புகளுக்கு :- Paypal Account – nesakkaram@g…
-
- 0 replies
- 511 views
-
-
பிறேம் குமார், "கம்பிகளின் மொழி" எனும் கவிதைத் தொகுப்பு மூலம் வல்வையில் கலைஞராக அறிமுகமானவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி. தற்பொழுது மிகவும் மோசமாக விழுப்புண் அடைந்திருக்கும் நிலையிலும் கூட, தொடர்ந்து கலைஞன் வடிவில் சமூக சேவை தொடர்ந்து முனைபவர், சாதனைகள் செய்யத் துடிப்பவர். திரு. பிறேம் குமார் அகில இலங்கை ரீதியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலாவது இடத்தினை பெற்றிருந்ததும், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது சாதனைக்கு நிதி உதவி கோரி எம்மூடாக வல்வை மக்களிடமும், புலம் பெயர் வல்வை மக்களிடம் சிறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனுடன் சம்பந்தப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து உதவினால் அவரது வாழ்வில் மீண்டும் புது நம்பிக்கையும் ஏற்றமும் உண்டாக ஏதுவாக இருக்கும். தொடர்புகளுக்கு :- Telephone: (Shanthy) +49…
-
- 3 replies
- 750 views
-
-
சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி தமிழர் பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டவர் சுற்றுலாச் செல்லல் அதிகரித்துவருகிறது. இத்தோடு எயிட்ஸ் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி போரால் பாதிக்கப்பட்டவர்களையும் பொருளாதார வசதியுள்ளவர்கள் தவறாக வழிகளில் பயன்படுத்தி வருவதும் அதிகரித்துள்ள நிலமையில் பல குழந்தைகளை இளம் வயதினைரை எயிட்ஸ் அபாயத்தை எமது தழிழ்ச் சமூகமும் பெற்றுள்ளது. இன்றைய சர்வதேச எயிட்ஸ் தினத்தை விழிப்பூட்டல் நாளாக ஏற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மேற்படி பேரணியை ஒழுங்கமைத்திருந்தது. நேசக்கரம் பிறைட் பூயூச்சர் அமைப்பின் நாவலர் பாலர் பாடசாலையும் இணைந்து பேரணியில் எமது ஆதரவினையும் வழங்கியிருந்தது. இப்பேரணியில் …
-
- 3 replies
- 758 views
-
-
எனது நண்பர் ஒருவரின் தங்கை புலிகளுடன் இருந்தவர். வயது 31. போரின் போது சிறு காயங்களுக்கு ;உள்ளானார். இவர் புனர்வாழ்வின் பின் இப்பொழுது ;யாழ்ப்பாணத்தில் தனது தாயூடன் வசிக்கின்றார். இவர் தனது எதிர்காலம் தொடர்பாக மிகவூம் கவலையில் உள்ளார். இவருக்கு ;திருமணம் ஒன்றை செய்துவைப்பதற்கு நண்பர் மிகவூம் முயற்சி செய்கின்றார். பலர் இவரது: தங்கையை வந்து பார்க்கின்றனர். ஆனால் முன்பு புலிகள் இயக்த்தில் இருந்தமையினாலும் அரசாங்க உத்தியோகம் இல்லாமையாலும் எந்தவிதமான திருமணப் பொருத்தங்களும் சரிவரவில்லை. இவரது அண்ணன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அல்லாத நாடு ஒ;னறில் புலம் பெயர்ந்து இருப்பதால் அவருக்கு அருகிலிருந்த உதவ முடியாத நிலை. . இவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைப்பதற்கு பொருத்தமா…
-
- 18 replies
- 2.7k views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் 3வது முன்னேற்றம் ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை :- http://hmclk.com/p121.html
-
- 0 replies
- 476 views
-
-
தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013 போட்டியில் பங்கெடுத்திருந்தனர். எமது உப அமைப்பான நேசம் அமைப்பின் அமைப்பாளர்; நே…
-
- 0 replies
- 681 views
-
-
பற்பொடி உற்பத்தி தொழில் முயற்சிக்கு உதவி தேவை. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு சிறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் எமது திட்டத்தில் நாம் முன்னெடுத்த முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் பற்பொடி உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளோம். பற்பொடி உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்வாங்கி இத்தொழிலை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்ட வேலைகளை முடித்துள்ளோம். உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு மற்றும் இட ஒழுங்கு அத்தோடு உற்பத்தி செய்யப்படும் பற்பொடியை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்கான வாகனம் உட்பட மொத்த முதலீட்டுத் தொகை ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபா தேவைப்படுகிறது. இத்தொழிலில் 3குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கலாம். …
-
- 6 replies
- 1.3k views
-
-
ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள். 18.05.2009 அன்று இறுதியுத்த முடிவில் கைதாகிய போராளி. கடந்த 4வருடங்கள் சிறைவாழ்வு. குடும்பத்திலிருந்து 3சகோதரர்களையும் நாட்டுக்காக இழந்தவன். வயதான அப்பா மட்டுமே தனது கடைசிக்காலங்களை மகனோடு கழிக்க காவலிருக்கிறார். இவனது வழக்கை நடாத்துவதற்காக சட்டத்தரணிக்காக வழங்கப்பட வேண்டிய தொகை இலங்கைரூபா 150000ரூபா (அண்ணளவாக 1000€) முற்பணம் 50000ரூபா இரு கருணையுள்ளங்களின் உதவியில் செலுத்தப்பட்டு வழக்கு வெல்லப்பட்டுள்ளது. இன்னும் 6மாதங்களில் குறித்த போராளி விடுதலையாகிவிடுவான். உதவி கிடைக்குமென நம்பி சட்டத்தரணிக்கான பணம் மீதி ஒரு லட்சத்தையும் 5ஆயிரம் ரூபா வட்டிகட்டிக்கப் பெற்று பணத்தைச் செலுத்தியாயிற்று. ஆனால் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை…
-
- 5 replies
- 1.2k views
-
-
நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள். நேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை - 77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம், மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இம்மாணவர்களுக்கான ஆதரவினை உறவுகளிடமிருந்து வேண்டுகிறோம். தலா ஒரு மாணவருக்கு 1…
-
- 0 replies
- 414 views
-
-
புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2013புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு வினாத்தாழ்களை வழங்கி மாணவர்களின் அடைவுமட்ட உயர்வுக்கான ஆதரவினை நேசக்கரம் வழங்கியிருந்தது. எம்மால் தயாரிக்கப்பட்ட வழகாட்டி கையேடு வினாத்தாழ்களுக்கான கணக்கறிக்கை :- 3 வழிகாட்டிகளிலும் 3ஆயிரம் வழிகாட்டிகள் எமது களப்பணியாளர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டது. தங்கள் பணிகளின் மத்தியிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய எமது களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மொத்தம் 197700.00ரூபா (ஒரு இலட்சத்துத் தொண்ணு10றாயிரம் ரூபா) செலவு. இவ்வுதவியை வழங்கிய உறவுகளுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். http://nesakkaram.or…
-
- 0 replies
- 548 views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் இரண்டாவது முன்னேற்றம் செப்ரெம்பர் மாதம் கணக்கறிக்கை :- தொடர்புபட்ட செய்தியிணைப்பு :- http://nesakkaram.org/ta/hmc%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/ http://nesakkaram.org/ta/hmc%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95-2/
-
- 0 replies
- 435 views
-
-
மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். நேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அ…
-
- 0 replies
- 570 views
-
-
புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌவிப்பு நிகழ்வு. மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் புpயூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த் ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் திரு.எ.எம்.இ.போல் , பிரதேச செயலாளர் ஏறாவூர்பற…
-
- 2 replies
- 616 views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தோம். இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் தொடர்ந்து எங்கள் மக்களை உதவி உதவியென்று உபத்திரம் கொடுக்காமல் தொழில் முயற்சிகளைச் செய்வதன் மூலம் சுயபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வறுமையில் உள்ளவர்களை மீட்பதோடு அவர்களது உழைப்பிலிருந்து அவர்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பித்தோம். வியாபாரத்தில் அனுபவம் வியாபார தந்திரம் எதனையும் அறியாத புதியவர்களே இந்நிறுவனத்தின் ஒழுங்…
-
- 4 replies
- 753 views
-
-
New Opportunities for Wounded, Widowed, and Orphans of War, (புதிய சந்தர்ப்பங்கள்) அமைப்பானது அமெரிக்க நாட்டு வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 501c3 பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு அமெரிக்க நாட்டைத் தளமாகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ் தமிழ் பேசும் மக்களைத் தன் சேவை நலங்களின் பெறுனராகவும்கொண்டியங்கும் ஒரு அறக்கொடை அமைப்பாகும். புலம்பெயர் தமிழ் மக்களுக்குத் தகவல் தருநோக்கில் உருவாக்கப்பட்ட எமது முகநூற் தளத்தினைத் (Facebook page) தற்போது நாம் விரிவுபடுத்தி வருகின்றனம். இந்த வகையில் நடைமுறையில் விரிந்துவரும், மற்றும் ஏற்கெனவே கனிந்துவிட்ட எமது திட்டங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், சலனப்படங்கள், நிழற்படங்கள் போன்றவற்றால் நிறைந்து காணப்படும் இத்தளமானது மேலதிகமாக…
-
- 0 replies
- 446 views
-
-
நேசக்கரம் – எழுவான் அமைப்பின் தொழில் ஊக்குவிப்புக் கடன் மீளச்செலுத்தல். இவ்வருடம் எம்மால் மன்னார் மாவட்டத்திற்காக உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான எழுவான் அமைப்பின் மூலம் 13 குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்புக்கடன் வழங்கியிருந்தோம். எமது புலம்பெயர்வாழ் உறவுகளின் ஆதரவில் கிடைக்கப்பெற்ற 275000.00ரூபா (இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) உதவி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் மாதாந்த அடிப்படையில் இதுவரையில் எமக்கு 60200.00ரூபா மீளச்செலுத்தியுள்ளனர். மீளச்செலுத்தப்பட்ட பணத்திலிருந்து யூலியஸ் என்பவருக்கு 25ஆயிரம் ரூபா மீன் வியாபாரத்திற்காக வழங்கியுள்ளோம். புதிதாக எம்மிடமிருந்து கடனைப் பெற்றுக் கொண்ட யூலியஸ் அவர்கள் மாதாந்தம் 2500 வீதம் மீள…
-
- 0 replies
- 627 views
-
-
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி மட்டக்களப்பு தாளங்குடா மதுராபுரம் முன்பள்ளி மாணவர்கள் 30பேருக்கான கல்வியுபகரணங்கள் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் 20.09.2013அன்று வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை , தண்ணீர்ப்போத்தல் ,சாப்பாட்டுப்பெட்டி , கொம்பாஸ்பெட்டி , கலர்பெட்டி ,சித்திரக்கொப்பி , பென்சில் ,அழிறப்பர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் , மண்முனைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் தாளங்குடா 1 கிராமசேவகர் டிலக்சன் , சீப்பிரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் , மதுராபுரபொதுமக்கள் பிறைட்; பியூட்சர் – நேசக்கரம் அமைப…
-
- 3 replies
- 981 views
-
-
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள் 12.09.2013 அன்று மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களாக மலையர்கட்டு கிராமத்தின் பாடசாலை மாணவர்கள் 43பேருக்கும் மற்றும் மண்டுர் அ.த.க.பாடசாலை மாணவர்கள் 16பேருக்கும் புத்தகப்பைகள், மற்றும் அடிப்படை கல்வியுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளைநாயகம் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன் , பாடசாலை அதிபர் தேவகுமார் – (மலையர்கட்டு) பாடசாலை அதிபர் ஜெயரதன் (16ம் கொலனி), பாடசாலை அதிபர் கணேசமூர்த்தி (வெல்லாவெளி) , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் சண்முகம் , பொருளாளர் , ஜீவராஜா ,உறுப்பினர் பிரசாந்தன் ஒருங்கிணைப்புத் தலைவர் தயாரூபி நேசக்கரம் பிறைட்பியூச்சர் உப செயலா…
-
- 2 replies
- 773 views
-
-
சர்வதேச சிறுவர்தின நிகழ்வு சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான 50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி அவர்களும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வியதிகாரி சுபா சக்கரவர்த்தி , மட்டக்க…
-
- 0 replies
- 632 views
-
-
க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான சிறப்பு பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். விஞ்ஞான , கணித ப…
-
- 0 replies
- 502 views
-