துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான …
-
- 2 replies
- 721 views
-
-
ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் குளாய்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவையானது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை நிறைவு செய்ய புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் நிதியுதவியில்12 குளாய்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் புவியில் அமைவுக்கேற்ற வகையிலான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவிகளை வேண்டுகிறோம். முதலில் குடும்பமொன்றுக்கு 10 தென்னைமரங்களை வழங்க விரும்புகிறோம். ஒரு தென்னங்கன்ற…
-
- 1 reply
- 996 views
-
-
ஆபிரிக்காவில் அவதியுறும் ஈழப்போராளியின் நன்றி ஈழவிடுதலைப் போரில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த பல்லாயிரம் போராளிகளில் ஒரு தொகுதியினர் சொந்த நாட்டில் வாழமுடியாத நிலமையில் புலம்பெயர்ந்து ஐரோப்பிய ஆபிரிக்க , ஆசியநாடுகளில் அவதியுறுகின்றனர். இத்தகையதொரு போராளி குடும்பம் ஆபிரிக்க நாட்டில் அந்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட உணவிலிருந்து அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலமையில் வாழும் குறித்த குடும்பத்தினர் தமக்கான உதவியினைக் கோரியிருந்தனர். அவர்களுக்கான உதவியினை புலம்பெயர்ந்து வாழும் பல உறவுகள் முன்வந்து வழங்கியிருந்தனர். உதவியைப் பெற்றுக் கொண்ட போராளியும் அவரது குடும்பமும் எழுதிய நன்றிக் கடிதம். http://nesakkaram.org/ta/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E…
-
- 0 replies
- 578 views
-
-
ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் தமிழ் குழந்தைகள் 3வயதுப் பெண்குழந்தையை ஆயிரம் ரூபாவிற்கு விற்க ஒரு தமிழ்த்தாய் மட்டக்களப்பு காத்தான்குடி சந்தையில் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை காப்பாற்றிக் கொண்டு வந்து தந்த தமிழனுக்கு முதலில் நன்றிகள். 19.01.2014அன்று நேசக்கரம் அமைப்பானது டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பின் நிதியாதரவில் குசேலன்மலை (கரடியனாறு) மாணவர்களுடனான பொங்கல் விழாவினைச் செய்திருந்தது. வளமையான வரவிலிருந்து 2பிள்ளைகள் அதிகமாயிருந்தார்கள். 2பிள்ளைகளின் வரவுக்கான காரணத்தை விசாரித்ததில் ஒரு பெண்குழந்தைக்கு நடந்த அவலம் தெரியவந்தது. குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் பணத்திற்காக பல குழந்தைகள் விற்கப்பட்ட விடயமும் வெளிச்சத்துக்கு வந்தது. அது மட்டுமன்…
-
- 1 reply
- 850 views
-
-
வணக்கம் உறவுகளே கணிணி, கைப்பேசி இணையம் மூலம் நடைபெறும் தொழில்களை கற்று தனது உழைப்பில் முன்னேற விரும்பும் தாயக உறவுகளுக்கு மட்டும் என்னால் இயன்ற அளவு கட்டணமில்லாமல் கற்றுக்கொடுத்து வருகிறேன்.. விருப்பமுள்ள தமிழீழ தாயக உறவுகள் எம்மை தொடர்புகொள்ளவும்.. பெரியார்தளம் அகரன் whatsapp: +918973979933
-
- 0 replies
- 532 views
-
-
இத்தாலி பலர்மோ தமிழ் தேசிய மாணவர் கூட்டமைப்பு திருவையாறு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உதவி என் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடை பெற்ற நிகழ்வில், இத்தாலி பலர்மோ தமிழ்த் தேசிய மாணவர் கூட்டமைப்பு கிளிநொச்சி திருவையாறு மாணவர்களின் ஒரு பகுதியினருக்கு நேற்று அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளனர். கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், சுவிஸ்கரன், ஓய்வுநிலை அதிபரும் சமுக அபிமானியமான ராஜேந்திரம், திருவையாறு கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், வடமாராட்சி கிழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், எனது செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட தமிழ…
-
- 0 replies
- 518 views
-
-
இன்று எனது பெரியக்காவின் அதாவது எனது இரண்டாவது அம்மாவின் 75 வது பிறந்தநாள். அவர் கர்ணனைப்போன்றவர் எவர் இரங்கி எதைக்கேட்டாலும் கொடுத்து உதவும் மனம் கொண்டவர். இப்படியான மனம் கொண்டவர்களை இன்று பார்ப்பதே அருகிவரும் நிலையில்..... எமது அம்மாவின் துவசத்தன்று நாம் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி கொடுத்தவரின் மகன் தனது மனைவியை இழந்து தாயாரில்லாத 6 பிள்ளைகளுடன் (4 பெண் பிள்ளைகள் 2 ஆண்பிள்ளைகள்) வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுவதாக கூறி அவர்களது வீட்டிலேயே கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் உதவி கேட்டதை அக்காவுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தம்பி எனது 75வது பிறந்தநாள் வருகி…
-
- 30 replies
- 4.5k views
- 1 follower
-
-
இன்று நாம் புலத்திலிருந்த படி பல உதவிகளை தாயகத்தினை நோக்கிச் செய்கிறோம். அப்படிச் செய்யப்படும் உதவிகள் அணைத்தும் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கயை கொண்டு நடாத்துவதற்குரிய (சுயதொழில் சார்ந்த) உதவிகளாக, அல்லது கல்வி சம்மந்தப்பட்ட ஊக்கங்களாக அமைகின்றன. இவை மிகவும் இன்றியமையாதவை, காலத்தின் தேவை அறிந்து செய்யப்படும் உதவிகள், தாயகத்தினை நோக்கி இவ்வாறான உதவிகளை செய்கிறவர்கள் என்றுமே போற்றுதற்குரியவர்கள். எனினும் நாம் தாயக மக்களின் தூர நோக்கில், அவர்களின் வளமான ,உறுதியான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அப்படி நாம் முன்னெடுக்க வேண்டியவற்றில் (எனது அனுபவத்தில்) நான் சிறப்பாகக் கருதுவது " பட்டதாரிகளை உருவாக்குவது". ஒவ்வொரு வருடமும் A/L …
-
- 12 replies
- 2.4k views
-
-
இரத்ததானம்: பொது நலமும் சுய நலமும் 80களில் (அப்பொழுது மட்டுமல்ல இன்றுவரை) குறிப்பாக வடக்கு கிழக்கில் பெரியளவிலும் தெற்கில் ஒரளவிலும் இரத்தம் மிகவும் தட்டுப்பாடாக இருந்த காலங்கள் அவை. ஏனெனில் அந்தளவிற்கு நாள்தோரும் செல் அடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சுடுகளும் பொம்பர் அடிகளும் நடைபெற்ற நேரங்கள். இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆகவே தமது உறவினர் யாருக்காவது இரத்தம் தேவை எனின் பிற உறவினர்கள் இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருந்தது. அப்பொழுதுதான் குறிப்பிட்ட உறவினருக்கு இரத்தம் வழங்கி அவரைப் பாதுகாப்பார்கள். இல்லாவிட்டாலும் பாதுகாப்பார்கள். ஆனால் இரத்ததானம் வழங்குவதை ஊக்குவிப்பதற்கு அ…
-
- 0 replies
- 570 views
-
-
இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினரால் விதைதானியங்கள் அன்பளிப்பு பளை மாசார் பகுதி மக்களுக்கு விதை தானியங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு மாசர் கிராம அபிவிருத்தச்சங்கத்தலைவர் செல்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. புலம் பெயர்ந்து வாழுகின்ற எம் தமிழ் உறவுகளின் மகத்தான உதவிகள் வாயிலாகத்தான் எங்களால் இயன்ற வரை எம்மக்களுக்கான தேவைகளை ஓரளவேனும் பூர்த்தி செய்து வந்திருக்கிறோம். கொட்டும் பனிக்குள்ளும் தங்களை வருத்தி உழைத்து அதில் கிடைக்கப்படும் நிதியைக் கொண்டு எம் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் சரி எம்மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகளை வழங்குவதிலும் சரி தாயகத்தின் புலம் பெயர்ந்…
-
- 1 reply
- 531 views
-
-
இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்தை கடந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தனியார் கல்வி நிலையங்கள் சென்று பிரத்தியேக வகுப்புக்களை பெற முடியாத 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்கள் , கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் , உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி முன்னோடி வினாத்தாள்களைத் தயாரித்து கற்பித்து வருகிறோம். 2012ம் ஆண்டு 2500புலமைப்பரிசில் மாணவர்களுக்கும், 2012 க.பொ.தா.சாதாரணதரமாணவர்கள் 10ஆயிரம் பேருக்குமான வழிகாட்டி கேள்விபதில் , மற்றும் தொலைபேசியிலான பாடநெறிகளையும் வழங்கியிருந்தோம…
-
- 4 replies
- 834 views
-
-
இளம் தமிழ் பொறியியலாளரை ஆதரியுங்கள்! மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் இரு இளம் பொறியியலாளர்களது முயற்சிக்கு உலகின் முதல் நிலை பொறியியல் கல்லூரியான அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகத்தினால் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இவர்களது நீர் நிலைகளை தன்னியக்கமாகச் சுத்திகரிக்கும் கருவி MIT பல்கலைக்கழகத்தின் Solve Challenge இல் இறுதி அறுபதில் ஒன்றாகத் தெரிவாகியிருக்கின்றது. உலகெங்கும் இருந்து கிடைக்கப் பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் தெரிவாகியிருக்கின்றார்கள். இவர்கள் இறுதிச் சுற்றுத் தெரிவிற்கு இம் மாதம் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக் கூட்டத்தொடரிற்கு செல்லவிருக்…
-
- 3 replies
- 2.6k views
-
-
-
ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினர் தந்துதவிய 163000.00ரூபா (ஒரு லட்சத்து ஆறுபத்து மூவாயிரம் ரூபா) நிதியுதவியில் மன்னார் மாவட்டம் மடுவலயம் ஈச்சலவக்கை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 118மாணவ மாணவியருக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் 10.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஈச்சலவக்கை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.பயஸ் , ஆசிரியர்கள் , எழுவான் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ஜோன்சன் , மற்றும் துணைத்தலைவர் சுதேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலமையில் கல்விக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்…
-
- 9 replies
- 865 views
-
-
வன்னியில் இருக்கும் உறவுகளோடு நம் குடும்பத்து நிகழ்வுகளை எப்படிக் கொண்டாடி மன நிறைவு கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தனி மடலில் நண்பர்கள் பலர் இந்த இல்லங்கள் குறித்த விபரங்களைத் தனி மடலில் கேட்டிருந்தீர்கள். நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் எம் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும். இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள். கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை. 13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான். அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடு…
-
- 1 reply
- 656 views
-
-
உறவுகளிற்கு உதவுங்கள் உறுப்பினராகுங்கள் நேசக்கரம் அமைப்பு என்பது சுமார் மூன்று ஆண்டு களிற்கு முன்னர் யாழ் இணையத்தில் சில நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு உதவி அமைம்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட எமது உறவுகளிற்கான உதவிகளை வழங்குதல்..அவற்றில் 1) போரினால் உறவுகளை இழந்த பின்னைகளை பராமரித்தல் மற்றும் அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்குதல். 2)குடும்பத் தலைவரை இழந்து பொருளாதார வசதிகள் இன்றி தவிக்கும் பெண்களிற்கான சுய வேலைவாய்ப்பத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தல் 3)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்தோரிற்கான வைத்திய உதவிகளை வழங்குதல். 4)பண வசதியின்றி உயர்கல்வியை தொடர முடியாது போயுள்ள மாணவர்களிற்குஉயர் …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை. ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த வீடு நிலங்களை இழந்து அலைந்து மீண்டும் தமது ஊரில் குடியேறியுள்ள ராணமடு , மாதிரி கிராமம் , மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர். கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் கவனிக்கும் சிவபாலன் அவர்களால் ஊனமுற்ற குழந்தைகள் இருவரையும் பராமரிக்கும் வசதியின்றி இருக்கிறார்கள். யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே மிகவும் அவதியுறுகின்றனர். பல அரச அரசசார்பற்…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி ஊனமுற்று நடக்க முடியாத நிலமையில் வாடும் சிறுவன் அனுராஜ் அவர்களுக்கான சக்கரநாற்காலியினை பெற்றோர் எமது நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இவ்வுதவியை யேர்மனியிலிருந்து யோனாஸ் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார். சக்கரநாற்காலி வேண்டுதல் கடிதம்:- படங்கள் :- சக்கரநாற்காலி பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக் கடிதம் :- http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/
-
- 4 replies
- 782 views
-
-
ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள். குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/ http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%…
-
- 0 replies
- 478 views
-
-
எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ். நேசக்கரம் சமூகப்பணிகளில் இணைந்து கடந்த ஒருவருட காலத்தில் றவி, சுரேஷ்(கனடா) நண்பர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் எமக்கு 800000.00ரூபா (எட்டுலட்சரூபாய்கள்) உதவியுள்ளார்கள். போரால்பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கான தங்கள் உதவிகளை வழங்கி தாயகத்திற்கான பணிகளில் தங்களையும் இணைத்து எம்மோடு தொடர்ந்து வரும் நண்பர்கள் றவி , சுNhஷ் ஆகியோருக்கு எங்களது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நேரில் ஆளையாள் அறிந்தவர்களே குற்றம் குறை பழி தீர்த்தல் என சுயநலத்தோடு நேசக்கரம் மீது அள்ளியெறிந்த சேற்றுக்குள்ளிருந்து மீள எழும் நம்பிக்கையைத் தந்த நண்பர் றவி அவர்களும் அவரது நண்பர் சுரேஸ் இருவரையும் …
-
- 3 replies
- 805 views
-
-
எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம். உதவிகோரும் 36 மாணவர்களின் விபரங்கள் 1) சுரேஸ்கண்ணா கோபாலராசன் கலைப்பீடம் 1ம் வருடம் 2) …
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தக் குரலுக்குரியவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. ஒருவருடத் திருமண வாழ்வில் கிடைத்த இரண்டரை வயதுப் பெண்குழந்தைதான் இவளது நம்பிக்கை. குழந்தை பிறந்து 31வது நாள் இவனது கணவனைத் துப்பாக்கிகள் வவுனியா நகருக்குள் தின்றுபோட்டது. தொழிலுக்குப் போனவன் பிள்ளையின் 31ம் நாள் கொண்டாட்டத்திற்கு பணத்தோடு வருவானென்று காத்திருந்தவளுக்கு அவளது காதல் கணவன் இறந்து போனானென்ற செய்திதான் வந்தது. 2007.10.03 ம்திகதி பிறந்த தனது குழந்தைக்காக பணத்தோடு வருவேனென்றவன் 2007.11.03 அன்று இறந்து போனானென்றது இதயத்தில் இடியையல்ல இவளது வாழ்வில் மாறாத துயராயே முடிந்து போனது. தன் குழந்தை தனது எதிர்காலம் எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத சூனியத்தில் தொலைந்து போனாள். கிளிநொச்சியிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே. மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம் சம்பவித்துள்ளது. எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட அவ்வமைப்ப…
-
- 2 replies
- 1k views
-