Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி கேணல் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில் கேணல் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும். அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையின…

      • Like
    • 8 replies
    • 2.2k views
  2. விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது. 20…

  3. இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இ…

  4. அமரர் சிவசாமி அவர்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர். பலாலியில் வந்திறங்கிய இந்திய இராணுவம் இராட்சத டாங்கிகள் சகிதம் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை அவர்களின் முயற்சியுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்களால் பாரிய வழிமறிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் முன்னின்றவர்களில் அமரர் சிவசாமி அவர்கள் முதன்மையானவர்.💪 இந்த நடவடிக்கைக்கு எங்கள்ஊரைச் சேர்ந்த மற்றுமொரு இன உணர்வாளரும் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இந்தப்போராட்டம் நடந்த இடம் சரியாக நினைவில்லை. நான் நினைக்கிறேன் வயாவிளான் அச்சுவேலி வீதியில் அன்பகம்/அமலிவனம் அருட்சகோதரிகளின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த போராட…

  5. "யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது" By வயவையூர் அறத்தலைவன் - 06/02/2019 1934 யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசால…

  6. (01)விவேகம், (02)வேகம், (03)சுறுசுறுப்பு, (04)நகைச்சுவை உணர்வு ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான். யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்! அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள…

  7. AN ANOTHER SAMARITAN OF OUR SOIL! “பிழை ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது. 





சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது. விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும், இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்… அஞ்சாத நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளா…

  8. தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். …

  9. “நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோர…

  10. 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில்இ இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள்இ நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு' என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். 'ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ'? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு …

  11. இதுக்குள்ளை இருக்குது கேளுங்கோ! வீரச்சாவு : 1999 https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-ம-தல-வத-எல-ல-ப-பட-ம-வ-ரர-ரத-அவர-கள-ன-வரல-ற_BronIRZ7v31JVGZ.html

  12. முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் விதையானார் லெப்.கேணல் அன்பழகன். லெப்.கேணல் அன்பழகன் கைலாயபிள்ளை ஜெயகாந்தன் பலாலி வீரப்பிறப்பு: 18.08.1972 வீரச்சாவு: 05.05.2009 05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் வலிகாமம் கிழக்குப் பகுதியிலே செம்மண் கனிவளத்துடனும் தென்னந் தோப்புக்களும் பனை வெளிகளும் வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலப்பரப்புகளும் கடல் வளங்களும் நிறைந்த எழில்மிகு ஊர் பலாலி ஆகும். இவ்வூரானது பல உழவர் பெருமக்கள், கல்விமான்கள், மக்கள் விடுதலை போராட்ட வீரர்களை பெற்றெடு…

  13. மூலம் http://irruppu.com/2021/09/22/கடமையுணர்வு-கொண்ட-கப்டன்/ நினைவுப்பகிர்வு: கொற்றவன். http://irruppu.com/wp-content/uploads/2021/09/IMG-138e0c5ac5e8fd151b2fbf71566ddc95-V.jpg யாழ்மாவட்டத்தில் வடமராட்சிகிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப்படிப்பபை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்பேகாராட்டத்தில் இணைத்துக்கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப்பயிற்சிகளை முடித்துக்கொண்டபின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச்செயற்படலானார். 2005-ம்ஆண்டுகாலப்பகுதியில் சிறிதுகாலம் திருமலைமாவட்டத்தில் போராட்டச்செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்குவந்தார். வன்னிக்கு வந்…

  14. "சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி" ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை, "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது. போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் ச…

  15. இந்தியா இராணுவகாலத்தின் போது வரலாற்று சமரான நெடுங்கேணி பாடசாலை தாக்குதலை நேரடியாக வழிநடத்தி பெரும் வெற்றியை பெற்று முல்லை மண்ணிக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து அனைத்து போராளிகளிடமும் அன்பாக பழகி பல போராளிகளை சண்டைகாறராக வளர்த்த பெரு வீரன். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் பல சமர்களை வென்றவர். மணலாற்றில் தலைவர் தங்கியிருந்த போது விசேடமாக அழைக்கப்பட்டு முன்னணி முகாமான கையிலமலை முகாமின் பெறுப்பாளாராக தலைவரால் நியமிக்கப்பட்டார். எல்விற்ரனை தாண்டிதான் இந்திய இராணுவம் உள்ளே வரமுடியும் என தலைவர் சொன்னாராம். பின் இலங்கை அரசுடன் 1990களில் சண்டை தொடங்கிய போது பலாலி வசாவிளான் முன்னரங்க பகுதியில் முன்னேற முற்பட்ட இராணுவத்தை முன்னேற விடாது தடுத்தார். …

    • 2 replies
    • 819 views
  16. எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அரு…

  17. டேவிட் ஐயா பற்றிய சில நினைவுகள்..... டேவிட் ஐயா கிளிநொச்சியில் காலமானார் என்ற செய்தியைக்கேட்டபோது அவரது பெருமைமிகு வாழ்வையெண்ணி மனது அசை போட்டது. தன் சொந்த நாட்டில் அவர் ,மறைந்தது ஒருவித நிறைவினைத்தந்தது. ஒரு காலத்தில் சர்வதேசரீதியாகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கியவர் டேவிட் ஐயா என அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.ஏ.டேவிட் (சொலமன் அருளானந்தம் டேவிட் ) அவர்கள். அவர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சமயம் அவர் தங்கியிருந்த கொழும்பு Y.M.C.A கட்டடம் அவரால் வடிவமைக்கப்பட்ட கட்டடங்களிலொன்று என்பதால், அதன் காரணமாக அந்த நிறுவனத்தால் அவர் இருக்கும் வரையி…

      • Like
    • 1 reply
    • 347 views
  18. தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது, அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானதுதான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக்கிராமம். வவுனியா விலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்தது. முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப்படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கித் தடுத்துத் தேவையானபோது நகரவிட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட ‘கொலைப் பொறி’ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 06.06.1997, விளக்குவைத்தகுளம் முன்னர…

  19. சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது. இதனை கப்பலிருந்தவர்கள் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தெரியப்படுத்தினர். அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர். சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் தரையிலும் கடலிலும் எதிரிசரணடையச் சொன்னபோது எப்படிச் செய…

  20. "வேர்கள் வெளியில் தெரிவதில்லை - சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை!" சிறுகக்கட்டிப் பெருகவாழும் வீடுகளில் விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள். தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க் காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமல்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை…

  21. 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.…

  22. கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். பிறப்பு: 13.09.1975 வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு . 1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் களஅனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன் . முகாமில் நடந்த கலைநிகழ…

  23. மேஐர் தசரதன் சந்திரன் சுபாகரன் வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். தொடர்ந்து மேஐர் போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான். போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக…

  24. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும். நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நெஞ்சினில் விடுதலைநெருப்பை ஏந்தி,காலம் எமக்குத்தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாக எமக்குத் தென்படுகின்றார்.கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப்பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.