மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்... “வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது. அவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது. “கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்…
-
- 0 replies
- 2k views
-
-
மின்மினிப் பூச்சிகள் விளக்கேந்திய கானகம் விருட்சங்களின் உரசலில் தீப்பொறிக்கும் நீலக்கடல் நிமிர்ந்த தென்னை,பனை மரங்கள் உச்சரிக்கும் குடம் குடமாய் இரத்தம் பருகிய நிலம் எதையும் மறவாது நெருப்புப் பூக்கள் பூத்திருக்கின்றன நினைப்பதற்கு காலம் நேரமென்றில்லை சந்ததி சந்ததியாக ஒளி சூடி ஓடிக்கொண்டேயிருப்பதற்காகவே பிறந்தோம்.. -தா.பாலகணேசன்
-
- 0 replies
- 433 views
-
-
வவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா. மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும், சோதனையும் நிறைந்த காலமாகவே இருந்தது. மட்டுநகர் காடுகளை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றுமுழுதாக ஆக்கிரமித்திருந்த காலமது. அடிப்படை வசதிகள் கூட இன்றிய நிலையில், நம்பிக்கையும் மனவுறுதியும் மட்டும் பலமாகக் கொண்ட தருணங்களில் மதனா ஒருபோதும் சோர்வடைந்ததில்லை. தனது தோழிகளுக்குத் தெம்பூட்டி உற்சாகப்படுத்துவாள். இதன் பின்னர் படையணியைத் திரட்டி, அப்படையணிகள் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிகளில் பங்குபற்ற வகைசெய்தாள். …
-
- 0 replies
- 598 views
-
-
அளவெட்டியில் காவியமான 11 கரும்புலி வீரர்களின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் 29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் கொக்குவில், மட்டக்களப்பு கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா கல்முனை, அம்பாறை கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்) கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன் திராய்மடுக்கொலனி, மட்டக்களப்பு கரும்புலி கப்டன் ஈழவன் திருச்செல்வம் ரொபேட்சன் நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம் கரும்புலி லெப்டினன்ட் வேணுதாஸ் கந்தப்போடி தர்மன் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு கரும்புலி …
-
- 0 replies
- 545 views
-
-
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்நடராசா ரமேஸ்வரன்சிவபுரி, திருகோணமலை வீரச்சாவு: 29.10.1999
-
- 0 replies
- 708 views
-
-
மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும் -தோழர் செங்கொடி.! வீரமங்கை தோழர் செங்கொடியின் நினைவு வணக்கநாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்ற வேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று தமிழகத்தில் காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “வீரத்தமிழிச்சி” தோழர் செங்கொடி ஆகிய வீரமங்கையின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் (28.08.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த …
-
- 0 replies
- 363 views
-
-
காவலூர் அகிலன் அகில் ஒரு முறை வீட்டில் உணவு சமைத்திருந்தோம் போராளிகளோடு உண்பதற்கு வந்திருந்தான் அண்ணா மேஜர் கஜன். அதற்குள் அவர்களுக்குள் ஏதோ போட்டி வந்துவிட்டது சரி சுட்டுப் பார்க்கலாம் வாருங்கள் என எல்லோரையும் அழைத்தான் அவர்களோடு அத்தானும் சேர்ந்துகொண்டார். (சாந்தன் அரசியல் துறைப்போராளி காணாமல் ஆக்கப்பட்டவர் பட்டியலில் உள்ளார்) போட்டி இளநீரைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதே...! (நிற்க ஊருக்குள் துப்பாக்கிகள் பயன்படுத்துவது தடை ஆனால் இவர்கள்தான் ஆயுதங்களை வழங்குபவர்கள் திருத்தம் செய்பவர்கள் ஆதலால் கொஞ்சம் இப்படியான செயல்களைச் செய்வர் பலமுறை தண்டனைகளும் அனுபவித்திருக்கிறான்) எல்லோருமாகச் சுட்டுச் சுட்டு வீழ்த்தி தாங்கள் எப்படிச் சுட்டோம் என்பதைக் க…
-
- 0 replies
- 414 views
-
-
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 604 views
-
-
உயிர் கூட்டிலிருந்து பிரிந்தபறவை கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன் Last updated Mar 9, 2020 ” ஜெயரஞ்சன் A/L சோதினையில் பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம் ” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருன்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக்கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்டமுன்பே அவன் தன திறமைகளை இந்த தேசத்திற்க்கா அர்ப்பணிக்கத் தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழகப் படிப்பிர்க்குள் முடங்கிபோகாமல் அவன் எடுத்த முடிவு எங்கள் கடற்செனையில்ன் ஒரு கடற்தளபதி என்ற ந…
-
- 0 replies
- 523 views
-
-
நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்... லெப்.கேணல் சீராளன் தேவதாஸ் சூரியவதணன் - 12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:-13.11.1980 வீரச்சாவு: - 24.09.2006 நிகழ்வு: -திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடு…
-
- 0 replies
- 297 views
-
-
லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று! AdminMarch 13, 2021 லெப்.கேணல் ஜொனி அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். ஜொனி மிதிவெடிபற்றி அறியாதவர்கள் இல்லை எனும் அளவிற்கு ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல் எனவே பார்க்கப் படுகின்றது. ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது. இந்த மிதிவெடியை உருவாக்கியபோது புலிகளமைப்பில் 400 இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களில் இருந்து “ஜொனி” என்ற பெயரை தலைவர் ஏன் தெரிவு செய்தார்? இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும். லெப். கேணல்…
-
- 0 replies
- 502 views
-
-
[size=1]கரும்புலிகளின் வீரத்தை அழியாது காக்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட [/size]http://www.facebook.com/karumpulimaveerarkal[size=1] இந்த முகப்புத்தாக பக்கம் இதுவரை 904 விருப்பங்களை மட்டுமே பெற்றிருக்கிறது தயவு செய்து அனைவரும் இந்த பக்கத்தின் விருப்பு எண்ணிக்கைகளை பெருக்க உதவி செய்யவும் நன்றி [/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 0 replies
- 568 views
-
-
எம் நினைவுகளின் என்றும் நின்றகலாத நேசத்துக்குரிய மருத்துவப்போராளி லெப்டினன்ட் கேணல் கமலினி, கேணல் லக்ஸ்மன் அண்ணனின் மனைவி. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையில் கடமையின் போது வீரமரணத்தை தழுவிக்கொண்டார். ->Credit: Facebook
-
- 0 replies
- 356 views
-
-
[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size][size=2] [size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன. இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள…
-
- 0 replies
- 903 views
-
-
செல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன் போர் உச்சம் பெற்றிருந்த நேரம், 1989களில் என்று நினைக்கின்றேன், லெப். கேணல். சூட்டண்ணையால், மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டார். நான் சந்திக்கும் போது போராளிக்குரிய எந்த சாயலும் இல்லாது சாதாரணமாக இருந்தார். அந்த நேரத்தில் யாழ் நகரை கலக்கிய போராளிகளான சூட்டண்ணை, யவானண்ணை போன்றவர்களுடன் குமாருக்கும் முக்கிய பங்குண்டு. இவர்கள் இந்திய இராணுவத்தை நித்திரை கொள்ளவிடாமல் செய்தவர்களில் முக்கியமானவர்கள். இந்திய இராணுவம் தோல்விகளுடன் வெளியேறி சென்றபின் புதிதாக பொட்டு அம்மான் தலைமையில் புலனாய்வுத்துறை மீள் உருவாக்கம் பெற்றபோது குமாரும் அதனுள் உள்வாங்கப்பட்டார். ஆரம்பகாலங…
-
- 0 replies
- 192 views
-
-
மேஜர் தமிழரசன் நவம்பர் 23, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் / டொச்சன். வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது. தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :- புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ் குலம் (குலம்மாமா) அவர்களது. 80களில் இராணுவ கெடுப…
-
- 0 replies
- 566 views
-
-
கேணல் கீதன் மாஸ்ரர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவில் - கீதனுடன் ஒரு உரையாடல் .! கேணல் கீதன் மாஸ்டர் இந்த இடத்தில் இந்த போராளியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தனது குடும்பம் வெளிநாட்டில் வசித்தாலும் தமிழீழ விடுதலையை தன் உயிர் மூச்சாக நினைத்து பீசிங் எனப்படும் முட்டு வருத்தத்தின் மத்தியிலும் தலைவனையும் சக போராளிகளையும் உயிராக நேசித்த உன்னதமான போராளி கேணல் கீதன் தன் ஏலாத உடல் நிலையிலும் தலைவரின் எண்ணங்களுக்கு 100% செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று தானும் கால நேரம் பாராமல் செயல்பட்டு தன் சக போராளிகளையும் செயற்பட வைத்த அரிய செயல்பாட்டாளன். லெப்.கேணல் ராஜன் கல்விப் பிரிவு தொடங்கி லெப் கேணல் திலீபன் கல்லூரி வரை தலைவரின் எண்ணக்கருவுக்கு ஏற்ப …
-
- 0 replies
- 1.2k views
-
-
மறக்காமல் சொல்லுவோம்-பரமபுத்திரன்… September 24, 2019 போர், போராட்டம் என்ற சொற்கள் தமிழர்கள் மத்தியில் வெறுப்பான அல்லது விரும்பத்தகாத ஒன்றாக மாறிவிட்டது அல்ல மாற்றப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஈழத்தில் நடந்த விடுதலைப்போராட்டம்தான் எம்மை இந்த வெறுப்புக்கு ஆளாக்கியது என்று எல்லோரும் சுலபமாக சொல்லிடுவர். ஆனால் போரும் போராட்டமும் மனித வாழ்கையில் மட்டுமல்ல புவியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் பொதுவானது. நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையுடன் போராடினால்தான் எம்மை நிலைப்படுத்தமுடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை. உணவு, பாதுகாப்பு, வாழிடம், சந்ததி நிலைப்படுத்தல் என எல்லாவற்றுக்கும் போராடியே ஆகவேண்டும். இருப்பின…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெளித்தெரியா வேர்கள் கரும்புலி லெப். கேணல் சுபேசன்…! Last updated Feb 1, 2020 இவனின் குடும்ப விருட்சம்; ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் . நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது. எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது. நாங்கள் பின்வாங்குவதர்க்கான வி…
-
- 0 replies
- 565 views
-
-
இம்ரான் பாண்டியன் படையணியில் பயிற்சி ஆசிரியராகவும் உந்துருளி படையணியிலும் பின்பு தகரி(tank) இயக்குனராகவும் செயற்பட்ட மேஐர் மருதவாணன் அண்ணா
-
- 0 replies
- 404 views
-
-
புதியவன் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகநேசன் என இயற்பெயர் கொண்ட புதியவன் என்ற மாவீரரின் போராட்ட வரலாறு என்பது பொறுப்புகள். பதவிகளைக் கடந்த உறுதி தளராத நேர்மையும், தன் அடக்கமும், அர்ப்பணிப்பும் நிறைந்த வாழ்வியல் சகாப்தம். யாழ்.மாவட்டம்அரியாலையைச்சேர்ந்தநாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணபதிப்பிள்ளைக்கும் கனகாம்பிகைக்கும் மகனாக 05.04.1956 ஆம் ஆண்டு பிறந்து குகநேசன் எனும் பெயருடன் வளர்ந்தார். உயர்தரத்தில் விஞ்ஞானபாடரீதியாக நல்ல பெறுபேற்றைப் பெற்றும் சிங்களத் தரப்படுத்தல் மூலம் சிங்களவர் அதே பெறுபேறில் சித்தியடைய அதே பெறுபேறுள்ள தான் தரப்படுத்தல் என்ற போர்வையில் புறக்கணிக்ப்பட்டதை கண்டித்து இனி சிங்களவர்களது இந்த பாடத்திட்டத்தைப் படிக்கமாட்டேன் …
-
- 0 replies
- 444 views
-
-
சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக் கூடிய வீரக்கதை இருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டு விடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன். Last updated Feb 1, 2020 அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன. வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்ந்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பரந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல் கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமதிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்…
-
- 0 replies
- 436 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும் (நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது…
-
- 0 replies
- 486 views
-