Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. லெப்டினன்ட் ஜோன்சன் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து தமிழீழ விடுதலைப் போரில் கள பலியான இஸ்லாமியத் தமிழ் வீர மறவன் லெப்டினன்ட் ஜோன்சன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன். அரசுக்குத் துணைபோன பிரமுகர்கள் மீது மேற்கொண்ட சகல தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போன நிலையில் தனது எதிர்கால பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிக…

  2. ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.! விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன். நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி ச…

  3. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

  4. கரும்புலி மேஜர் ஆதித்தன் டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து நிதானித்துக் கொள்வதற்கிடையில் அந்த நிகழ்வு அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. கைகளால் தொடுகின்ற தூரத்திற்குள் கடுமையான துப்பாக்கிச் சூடுகளை எதிர்பார்த்தது தான்; என்றாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. இராணுவ முகாம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த போது முகாமிற்கு அருகே பதுங்கியிருந்த இராணுவம் தான் தாக்குதலை ஆரம்பித்தது அந்தத் தாக்குதல். இமைப்பொழுதில் அவனோடு கூடவந்தவர்களைப் பிரித்துவிட அவன் தனித்தவனானான். எங்கும் கடும் இருட்டு, இருளிற்குள் இருந்து பெரிய உருவம் ஒன்று பாய்ந்து அவனைக் கட்டிப்பிடித்தது. அவனைவிட பெரிய உருவம் அது இரண்ட…

  5. கரும்புலி கப்டன் நாகராணி டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கரும்புலி கப்டன் நாகராணி: “பாதுகாப்பு” அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக்…

  6. வீரத்தின் சிகரங்கள் டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள். உலகின் எந்த ஆயுதங்களால…

  7. காலம் எழுதிய வரிகளில் கப்டன் ரவி…! இந்திய ராணுவம் ஈழமண்ணுக்குத் தந்து சென்ற வடுக்கள் எங்கள் மனங்களில் நூற்றாண்டுகள் போனாலும் கரையாத துயரங்கள்; அவை. ஓவ்வொரு ஊருக்குள்ளும் ஒரு குடும்பமேனும் இந்தியப் படைகளால் சிதைவுற்ற கதைகளைச் சுமந்து கிடக்கிறது வரலாறு. அந்தக் கொடிய நாட்களில் எங்கள் ஊர்களில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்த புலிவீரர்கள் பலரது கதைகளையும் காலம் மௌனமாகச் சுமந்து கொண்டு நகர்கிறது. 1989ம் ஆண்டின் ஓரிரவு எங்கள் வீடுகளில் அத்துமீறி நுளைந்து நிரந்தரமாய் எங்களோடு உறவாகி நினைவுள்ளவரை தங்கள் ஞாபகங்களைத் தந்து சென்றவர்களுள் கப்டன் றவியண்ணாவும் ஒருவர். ஊரில் உலாவிய போராளிகளுள் றவியண்ணா வித்தியாசமான போராளி. அமைதியென்றால் அது றவியண்ணாதான். அதிகம் கதையில்லை அலட்டலில்…

    • 0 replies
    • 955 views
  8. மறைந்தும் மறையாத வரலாற்றுக் காவியம்- ஈழத்துக் கொற்றவை ஈழத்துக் கொற்றவைகள் தெய்வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு துயிலுமில்லங்களில் நினைவுக் கற்களோ கல்லறைகளோ இருக்காது. இவர்கள் வீரச்சாவடைந்தால் நினைவுநாட்களில் பெயர்களோ அடையாளங்களோ தகவல்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் எந்தக் காலத்திலும் வெளிவராது. ஊரறியாமல் உறங்கும் உண்மைகள் இவர்கள். ஊமையாய் இருந்து ஒரு பெரும் சரித்திரத்தைப் படைத்துவிட்டுச் செல்வார்கள். கல்லாகிக் கிடக்கும் கடவுளர்களை மறந்துவிட்டு கல்லறை கூட இல்லாத எம்மின கொற்றவை தெய்வங்களை வணங்குவதே என்றும் போற்றுதற்குரியது. அவ்வாறாகப் போற்றப்பட வேண…

  9. உருக்கினுள் உறைந்த பனிமலை உருக்கினுள் உறைந்த பனிமலை: கேணல் சங்கர் அவரோடு வித்தியாசமான மனிதர். எப்போதுமே சீரான நேர்த்தியான தோற்றத்துடனே தோன்றுவார். சீராக வகிடெடுத்து அழுந்த வாரப்பட்ட தலையும், பரந்த தெளிவாக காணப்படும் முகத்தில் நகைப்பும், வியப்பும், கூர்மையும் காண்பிக்கும் கண்களுக்கு இறுக கால்பதித்து நிலமதிர நடக்கும் கனத்த உருவமும் அசாதாரண மனிதரிவர் என்கிற பதிவை எவரிடத்திலும் ஏற்படுத்தும். எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் தோளை குலுக்கிக் குலுக்கி தலைசரித்து இலேசான செருமலுடன் கண்களை நேராக பார்த்து பயனுள்ள உரையாடலொன்றிற்கு அவர் ஆயத்தமாகும் தோற்றம் என்றும் எம் மனதில் நிலழாடும். எந்தவொரு விடயமானாலும் தனது உறுதியான றிலைப்பாடுடனும், மெலும் விபரங்…

  10. 19.09.1994 அன்று “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடித்து வெற்றிக்கு வித்திட்ட மறவர்கள் நினைவில் கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகு…

  11. வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும்…

    • 0 replies
    • 615 views
  12. வரலாறு அவனை என்றுமே நினைவுபடுத்தும்(லெப்.கேணல்.விக்டரின் நினைவாக..) - ச.ச.முத்து யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித…

  13. கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியா…

  14. நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் இன்று, ஒன்றுகூடி நினைவுகொள்வதற்கான காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து, தேசவிடுதலைக்காக தம்வாழ்வை அர்ப்பணித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் உள்ளங்களில் நினைவில் இருத்தி நினைவுகூருங்கள். https://newuthayan.com/நாட்டுப்பற்றாளர்-நாள்/

  15. தகவல் வழங்குநர்: இவரின் உறவினர் எழுத்து & வெளியீடு: நன்னிச் சோழன் இடது புறத்தில் இருப்பவர் றஞ்சன் அவார். இவர் 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதிப்போர் வரை களமாடிய ஓர் மூத்த போராளி ஆவார். ஆகாய கடல் வெளி நடவடிக்கை, தவளைப் பாச்சல் நடவடிக்கை, வெற்றியுறுதி எதிர்ச்சமர், ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை என தமிழீழத்தின் புகழ்பூத்த பல்வேறு சமர்க்களங்களில் தன் தடம் பதித்து திறமையாக களமாடியவர். லெப் கேணல் குணா அவர்களின் சிறந்த நண்பனுங்கூட. இவர் முள்ளிவாய்க்காலில் 07.04.2009 அன்று லெப் கேணல் றஞ்சன் ஆக விழிமூடினார். வலது புறத்தில் இருப்பவர் லெப் கேணல் றஞ்சன் அவர்களின் தம்பி குயிலன் ஆவர். இவர் திறமையான குறிசாடுநர் (marksman) ஆவார். ஓயாத அலைகள் …

  16. பொறுப்பு: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி நிலை: லெப்.கேணல் இயக்கப் பெயர்: மதன் (அரசன்) இயற்பெயர்: துரைசாமி சுந்தரலிங்கம் பால்: ஆண் ஊர்: கூழாங்குளம், வவுன்யா மாவட்டம்: வவுனியா வீரப்பிறப்பு: 07.06.1972 வீரச்சாவு: 11.04.2000 நிகழ்வு: கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: ஆலங்குளம் மேலதிக விபரம்: ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை…

  17. தீரமுடன் போராடிய எல்லைப்படை மாவீரர்கள் நினைவில்.... எல்லைப்படை மாவீரர்கள் எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள் உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர் மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர் -அன்பரசு ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக…

  18. மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும்! AdminApril 16, 2021 நண்பர்களுடன் உணவருந்தும்போது, எதிர்பாராது கைக்குண்டு கழன்றுவிட, அந்நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக குண்டை தனது வயிறோடு அணைத்து வீரகாவியமான மாவீரன் அன்புவின் 36வது வீரவணக்க நாள் இன்றாகும். ஓ எம் தோழா உன் அன்பான நடத்தையால் உனக்கு அன்பாக நாமிட்ட பெயர் அன்பு. உன்னை இழந்தோம். எம் அன்பை இழந்தோம். அன்பு என்ற பெயரைக் கேட்டு சிலர் உன்னை சிறுவன் என்றோ மிருதுவான தோற்றமுடையவன் என்றோ நினைக்கலாம். 6 அடிக்கும் கூடிய உனது உயர்ந்த தோற்றத்தையும், தினவெடுத்த திரண்ட தோள்களையும் எம்மால் என்றும் மறக்கமுடியாது. உன்னால் பயிற்றப்பட்ட எம் இளைஞர்கள் நீ இறந்த செய்தி கேட்டு உன்மீது கொண்ட அன்பால் அவர்கள் அடைந்த துயர…

  19. தமிழீழ படைப்பிரிவுச் சீருடைகள் - விக்கிபீடியா.

  20. உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 1[/size] https://www.facebook.com/photo.php?v=355682331175917 உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 2[/size] https://www.facebook.com/photo.php?v=356077774469706 உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 3[/size] https://www.facebook.com/photo.php?v=356548037756013 [size=1]அன்பான நண்பர்களே தயவுசெய்து முகப்புத்தாக லிங்கை கிளிக் செய்து லைக் செய்யவும் நன்றி [/size] https://www.facebook.com/karumpulimaveerarkal [size=5]அன்பான நண்பர்களே தயவுசெய்து முகப்புத்தாக லிங்கை கிளிக் செய்து லைக் செய்யவும் நன்றி [/size] https://www.facebook...pulimaveerarkal

  21. எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.! 19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்கு தல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா. சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும…

  22. கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன். எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன்…

  23. (இவ வீரச்சாவடைந்த திகதி தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்) எழுதியவர்: எல்லாளன் (2008) நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.''மகள் கதைக்கட்டாம்... "அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள். ''வழமையான நலஉசாவல்..." தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்...." எல்லாம் முடிய, ''நான் வேற இடம் போறனப்பா....அதுதான் எடுத்தனான்....,இனி எடுத்தால் தான் தொடர்பு....நீங்கள் எடுக்காதீங்கோ....சரி வைக்கிறன் அப்பா...."மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான். ஒரு முறை அவள் …

  24. கப்டன் மலரவன் நவம்பர் 23, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். “விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்” போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீ…

    • 0 replies
    • 1.1k views
  25. கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள். நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள். கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும். || தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்… மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க் கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் …. …

    • 0 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.