யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,
எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.
யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.
எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.
யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.
விதிமுறைகள்:
- யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
- கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
- ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
- யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.
"நாமார்க்கும் குடியல்லோம்"
நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
53 topics in this forum
-
நண்பர்கள் என்பவர்கள் எம்மோடு இரண்டரக்கலந்தவர்கள் எம்மை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம் அதனாலும் பல நல்லது செய்யலாம் பல அரிய விடயங்களை பெறலாம் என்பதை எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான். அதன் தொடர்ச்சியாக முகநூலிலும் பயணம் தொடர்கிறது கருத்து எழுதுவதில் யாழ் தந்த அனுபவம் மற்றும் அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் தேடல்களையும் தொடர்புகளையும் தந்திருக்கிறது. அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது. எமது இலக்கிலும் நண்பர்களை சேர்ப்பதில் அவதானமாகவும் தொடர்ச்சியாக இருந்தால் முகநூலும் எமக்கு ஒரு வரப்பிரசாதமே. …
-
- 34 replies
- 12.4k views
- 2 followers
-
-
"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்கள…
-
- 40 replies
- 4.1k views
-
-
வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா ப…
-
- 33 replies
- 4.7k views
- 1 follower
-