Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தையும் பொய்யும் by அ.பாண்டியன் • May 1, 2019 • 0 Comments முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்றுதமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது. சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியில், முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக பரந்துரை மாநாடு 2001-ல் கோலாலம்பூரில் சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசு 2008-ல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 2012-ல் அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரையையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக்கியது. இ…

  2. தொடரும் மொழிப்போர்... இரா.சிவக்குமார் ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால…

    • 0 replies
    • 1.3k views
  3. இந்த மேமாதம் 05ம் திகதியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தேவை முன் எப்போதையும் விட இப்போது மிகமிக அவசியமானதாக தமிழ் மக்களால் வேண்டி நிற்கப்படுகின்றது. ஈழத் தமிழ்தேசியத்திற்கு மட்டும் இல்லாமல் முழுத்தமிழினத்தினதும் எழுச்சியின் வடிவமாக இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் விளங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று சிங்களப் பேரினவாதமும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு துடைத்து எறியப்பட்டுவிட்டது என்று வல்லாதிக்க சக்தியும் திரும்பதிரும்ப கூறிவந்து கொண்டிருக்கின்ற போதிலும், தமிழ் மக்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது தேசிய அட…

  4. நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம். என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல…

  5. தொன்மச் சோழர்கள் சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு…

    • 2 replies
    • 17.3k views
  6. சிந்துவெளிநாகரீகம் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன…

  7. உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது. தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது, “ஒன்றறி வதுவே உற்ற…

  8. தெளிந்தேன் தெரியிழாய்! யான் பல் கால் யாமம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில் அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி முல்லை குருந்தோடு முச்சி வேய்ந்து எல்லை இரவு உற்றது! இன்னம் கழிப்பி அரவுற்று உருமின் அதிரும் குரல் போல் பொரு முறண் நல் ஏறு நாகு உடன் நின்றன பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே! ----- (முல்லை கலி - 113) பொருள்: மாடு மேய்க்கும் சிறுமிகள் இரவு வந்தது அறியாமல் காட்டு ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களையும் அவர்களது ஆடு மாடுகளையும் அழைத்துச் செல்லப் பயிற்சி பெற்ற இளம் போர்க் காளைகள் பலமுறை தாமாகக் காத்திருந்தன. https://app.box.com/s/nzsfr1yks2pqa42m4feoap5k9nevi6oj

    • 8 replies
    • 2k views
  9. https://app.box.com/s/x7n5xs5t2ra6lf311k140gqb9d8ol47i பறை எழுத்து இசைப்பப் பல்லவர் ஆர்ப்பக் குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த நறை வலம் செய விடா நிறுத்தன ஏறு அவ் ஏற்றின் மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேல் சென்று வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் பால் நிற வெள்ளை எருத்தத்தப் பாய்ந்தானை கோணாது குத்தும் இளம் காரித் தோற்றம் காண் பால் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீல்நிற வண்ணனும் போன்ம் ( முல்லைக்கலி 104: 28-30) பொருள்:- வீரர்கள் சூழ்ந்து தம்மை முற்றுகை இட விடாமல் வளையத்தை உடைத்து 'நின்று விளையாடுகின்றன' காளைகள் ஒருவன் அருகில் உள்ள பார்வையாளர் மேடை மீது ஏறி அதன் உச்சிக்கு சென்று வெள்ளை காளையின் மீது குதிக்கிறான…

    • 0 replies
    • 839 views
  10. https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn தொழூஉப் புகுத்தல் - 15 https://app.box.com/s/sj1nejyo6mus5t7ip6l0qm4ofpfgscnn கிளந்த அல்ல செய்யுளுள் திரிநயும் வழங்கு இயல் மருங்கின் மருவோடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர் (தொல்காப்பியம்-483) வழங்குக சுடர் என அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் (நற்றிணை 145: 6-7) கூடி வரு வழக்கின் ஆடியல் பெயரே (தொல் 650-5) ஆயியல் நிலையும் காலத்தானும் (தொல் 765-2) ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர் (நற்றிணை 90-1) அகவல் என்பது ஆசிரியம்போ (தொல் 1341) வெள்ளி ஆநியம் நிற்ப விசும்பு மெய் அகல (பதிற்றுப் பத்து 69-14,15) பொருள்:- பார்வைக்குக…

    • 0 replies
    • 704 views
  11. https://app.box.com/s/in7jiea5ncp73wkv2q32ro93eoket1tv தொழூஉப் புகுத்தல் – 17 தொழி ஈ ஈ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் குருஉக்கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ ஆயர் மகன் (முல்லைக்கலி 104: 69-72) பொருள்:- வெற்றி பெற்ற வீரன் ஒருவன் தம்மைக் கண்டிப்புடன் பார்க்கிறான் என்றும், தன்னை அது துன்புறுத்துவதாகவும் குறிப்பிடும் ஒரு பெண், அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் புலப்படுத்துகிறாள். நிலமகளாகிய திரு மகளுக்கு அரசனே கணவன் என்ற மரபின்படி, அரசனின் புத்தாண்டு உருவாக்க ஆண்மைச் செயலில் பங்கெடுத்த ஆயர்மகன் தனக்கு அரசன் ஆகிறான் என்று மகளிர் வகைப்படுத்தினர் எனலாம். வீரம் என்பது உயிர் அச்சம் சிறிதும் இ…

    • 0 replies
    • 796 views
  12. https://app.box.com/s/0hs2bfr8m13kcq69yrkp446acaoofgc8 தொழூஉப் புகுத்தல் – 18 தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின் மெய்வார் குருதிய ஏறு எல்லாம் பெய்காலைக் கொண்டல் நிரை ஒத்தன (முல்லைக்கலி 106: 11-14) பொருள்:- குருதி சொரிய வீரர்களைக் குத்தி இங்கும் அங்கும் தாவித் திரியும் காளைகள் ஒன்றையொன்றை உடலால் உரசிக் கொள்வதால் அவற்றின் உடல் எங்கும் வீரர்களின் குருதி வழிந்து காட்சியளிக்கின்றன. ஒரு காளை ஒருவனைக் குத்தித் தன் உடலில் குருதி படிய அலைந்தாலும் அது அக்குருதியைப் பல காளைகளின் உடல்கள் மீது பூசி விடுகிறது. அக்காட்சியானது, மழை பெய்யும் போது கொண்டல் வரிசை அனைத்தும் நனைந்து தோன்றுவது போலத் தெரிகிறது. கடற்பரப்பில் முதலில் கர…

    • 0 replies
    • 593 views
  13. https://app.box.com/s/trblngb5li6kz8ad4w6hjgd2jo5tsv4y தொழூஉப் புகுத்தல் - 19 கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடிநின்று பீடுகாண் செந்நூல் கழி ஒருவன் கைப்பற்ற அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம் (முல்லைக்கலி 103: 28-31) பொருள்:- தன்னை வயிற்றில் குத்திவிட்டது ஒரு காளை. குடல் சரிந்து மாலையாக வெளிவந்து விட்டது. அது காளையின் கொம்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மென்மையாக அதனை வெளியே எடுக்க முயற்சிக்கும் வீரன் அந்தக் காளையின் கொம்புகள் ஆடும் வசம் எல்லாம் தானும் ஆடி நின்று குடல் அறுந்து விடாமல் வாங்கி எடுக்கிறான். அது வீரனின் பீடு என்று வியக்கிறாள் ஒரு பெண். அக்காட்சியை முப்புரிநூல் அணியும் செய்கையோடு ஒப்பிடுகிறாள். காவியில் அல்லது குருதியில் தோய்ந்த ந…

    • 0 replies
    • 647 views
  14. https://app.box.com/s/a7j79fflp6txzxnv93fpx7na9vq2xwja ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள் இழாய் இன்று எவன் என்னை எமர் கொடுப்பது? அன்று அவன் மிக்குத் தன்மேல் சென்ற செங்காரிக் கோட்டு இடைப் புக்கக் கால் புக்கது என் நெஞ்சு (முல்லைக்கலி 105: 66-69) அவன் புல்லினமா, புகர் இனமா, கோவினமா, குடம் சுட்டு இனமா என்று ஆயர் முறை பார்த்து இன்று எமது பெற்றோர் முடிவு செய்கின்றனர். இவற்றில் எதையும் பார்க்கவில்லை, அன்று அவன் செங்காரிக் காளையின் கொம்புகளுக்கு இடையில் பாய்ந்தபோதே என் நெஞ்சுக்குள்ளேயும் பாய்ந்து விட்டான் என்பது தான் உண்மை என்று குறிப்பிடுகிறாள் ஒரு பெண். சீறிப் பாய்ந்து வரும் காளையின் எதிரே நிற்பதற்கே பெரும் துணிச்சல் வேண்டும். அதிலும் கொம்புகளுக்கு இடையில் பா…

    • 0 replies
    • 689 views
  15. https://app.box.com/s/a8h7aepn7s61y85s65p4wkdgwoedvifh தொழூஉப் புகுத்தல் – 21 மண்ணின் மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற்று இவட்கு என நின்னை இப்பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையொடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு பொருள்:- பார்வையாளர் மேடையின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் தோழியின் தலைமுடிப் பின்னலுக்குள் ஒரு வீரன் அணிந்திருந்த மாலையின் கண்ணி வந்து விழுந்தது. காளையோடு போரிட்டபோது அதன் கொம்பில் சிக்கி வீசப்பட்ட அந்த மாலை தெய்வத்தால் தரப்பட்டதாகக் கருதி அவனது குடும்பத்தார் அந்தப் புதியவனுக்கே அவனை மணம் முடித்தனர் என்று கூறுகிறாள் ஒரு பெண். காளையோடு போரிட்டு வெல்லாமலேயே எதிர் பாராமல…

    • 0 replies
    • 548 views
  16. https://app.box.com/s/3rv2nsuu2epb7t2rhkn7v7zrw62u5i12 தொழூஉப் புகுத்தல் - 34 பாடு இமிழ் பரப்பு அகத்து அரவு அணை அசை இய ஆடுகொள் நேமியான் பரவுதும் (முல்லைக் கலி: 105: 70-71) சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு இழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல் துப்பு (பதிற்றுப்பத்து 62: 6-9) பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எமிலி (முல்லைப்பாட்டு 4-5) நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த சூர்புகல் அடுக்கத்து ப்ரசம் காணினும் ஞெரேகரன நோக்கல் ஓம்புமின் உரித்தன்று! நிரைசெலல் மெல் அடி நெறி மாறு படுகுவிர் (மலைபடுகடாம் 238:41) நீல் நிற ஒரி பாய்ந்தென நெடுவரை நேமியின் செல்லும் நெய்க்கண் இறால் (மலைபடுகடாம் 524-525) …

    • 0 replies
    • 569 views
  17. தொழூஉப் புகுத்தல் - 35 https://app.box.com/s/m3vf15ei1qxu28qa1cmbl7zptgem8xot பார் முதிர் பனிக்கடல் கலங்க உள் புக்கு சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் (திருமுருகு 45-46) வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் ஓரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறை வாய் நிலை இய மலர் வாய் மண்டிலத்தன்ன... -அறத்துறை நின்னே! (புறம் 175: 5-9) பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின் இனம் சால் யானை நிலம் தவ உருட்டிய நேமியோரும் (புறம் 270: 1-3) கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் (புறம் 185: 1-2) பொருள்: சூர்ப்பு எனப்படும் வளிமண்டல உள் இழுப்பினால் உலக உருண்டையின் ஆட்டை தளர்வதைக் கண்டு அறிந்து, அவ…

    • 0 replies
    • 650 views
  18. தொழூஉப் புகுத்தல் - 36 https://app.box.com/s/36iyxisru0pdpj4nyat7w6f99cm1oldn தளி பெறு தண்புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று முளிமுதல் பொதுளிய முன் புற பிடவமும் களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலியுடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் மணிபுரை உருவின காயாவும் பிறவும் அணிகொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் மாறு எதிர் கொண்ட தம் மைந்துடன் நிறுமார் சீரு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉப் புகுத்தனர் இயயைபு உடன் ஒருங்கு (முல்லைக் கலி 101: 1-9) பொருள்:- முல்லைக் கலியின் முதற் பாடல், தளியென்பது கோயில் ஆகிய அரண்மனை. அங்கு பெய்யும் முதல் மழை நாட்காட்டியின்படி அமையும். அன்று பிடவ மலர் அரும்பு விடும். அதைச் சேர்த்து வைத்துக் கண்ணியாக ம…

    • 0 replies
    • 446 views
  19. தொழூஉப் புகுத்தல் - 37 https://app.box.com/s/x3sldzhrfoaypkbbb9jwj52ldfidzctv முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத் தாதுஎரு மன்றத்து அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 103: 56, 62) பொருள்:- ஆற்று நீர்த்துறை, பெரிய ஆலமரம், பழமையான மரங்கள் உள்ள இடங்கள…

    • 0 replies
    • 526 views
  20. தொழூஉப் புகுத்தல் - 38 https://app.box.com/s/9bt4976dpxbb8gl4f7k800ctu6jt5c43 மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காயாவும் புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர் பல ஆன் பொதுவர் கதழ்விடை கோள் காண்மார் முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர் பெருமழைக் கண்ணர் மடம் சேர்ந்த சொல்லர் கடரும் கனம் குழைக் க்ஆதினர் நல்லவர் கொண்டார் மிடை (முல்லைக்கலி 103: 1-9) பொருள்:- கொன்றை மலர், காயாம்பூ, வெட்சி, பிடவம், தளவம், கஞ்சா, குருந்த மலர், கோடல், பாங்கர் போன்ற மணமுள்ள மலர்களைக் கண்ணியாகத் தொடுத்து ஏறுகளோடு மோதும் வீரர்கள் அணிந்து கொண்டனர். அழகிய இளம் பெண்கள் மேடைகளில் இடம் பிடித்தனர். '…

    • 0 replies
    • 455 views
  21. தொழூஉப் புகுத்தல் - 39 https://app.box.com/s/x8zuxwnvl9cwoxi5gz26qs7eiyjfyvhu மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்ம்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையபு மலிந்த கோடு அணி சேயும் பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் பெருமலை விடர் அகத்து ஒருங்குடன் குழீஇ படுமழை ஆடும் வரை அகம் போலும் கொடி நறை சூழ்ந்த தொழூஉ (முல்லைக்கலி 103: 11-21) பொருள்:- கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துக் காளைகள் பலவும் களமாடும் காட்சி சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் மலை இடுக்குகளின் இடைவெளியில் ஒன்று கூடி பருவமழை அடித்…

    • 0 replies
    • 495 views
  22. தொழூஉப் புகுத்தல் - 40 https://app.box.com/s/sbliny1zot6nfh8k1ajvchpqxsmh3avh அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி கரும்ம்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க எம் மறம்கெழு கோவே! (முல்லைக்கலி 106: 47-50) பொருள்:- தை முதல் நாளில் பிறந்த காளைக்கன்று வளர்ந்து போர்ப் பயிற்சி பெற்றுள்ளது. காதலனையும் தேர்வு செய்தாயிற்று. காளை காதலன் வரிசையில் காடும் போற்றுதற்குரியது ஆகிறது. பெரு வேந்தர்களுக்கு ஏறுகளைத் திறையாகத் தரும் வழக்கம் இருந்துள்ளது. அதனோடு தொடர்பு உடைய ஏதோ ஓர் அரிய அகச்செய்தி இதனுள் புதைந்து கிடக்கிறது. இது முற்றிலும் உயர் ஆய்வுக்கு உரியது. முல்லைக் கலியில் மிகப்பெரிய செய்தியைத் தாங்கியுள்ள மிகச்சிறிய பாடல்…

    • 0 replies
    • 548 views
  23. https://app.box.com/s/wgp9l95fcza3ubmxfcnqgk8w9hx4s3yb தொழூஉப் புகுத்தல் - 41 தண்ணுமைப்பாணி தளராது எழூஉக பண் அமைஇன் சீர்க் குரவையுள் தெள் கண்ணித் திண்தோள் திறல் ஒளி மாயப்போர் மாமேனி அம்துவர் ஆடைபொதுவனோடு ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்தது உரை (முல்லைக் கலி 102: 35-40) போர் ஏற்று அருந்தலை ஏறுஅஞ்சலும் ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் இவ்விரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ எம் கேளே! கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல் கேளா அளை மாறியாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே (முல்லைக் கலி 106:40-45) பொருள்:- தளராத இசையோடு ஒன்றிய ஒரு பெண் எந்த வீரனை விரும்புகிறாள் என்பது அவனது உடல் மொழியாலும், குரவ…

    • 0 replies
    • 686 views
  24. https://app.box.com/s/tiq0mpoy4ockv05yph6nltobi0nsgusq தொழூஉப் புகுத்தல் - 42 தொழுவினுள் கொண்ட ஏறு எலாம் புலம் புகத் தண்டாச் சீர் வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 104: 60-62) தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ (முல்லைக்கலி 106: 31-33) பொருள்:- முல்லைக் கலியில் ஏறு தழுவுதல் இல்லை. காதலர்கள் தழுவுவது நிறையவே இடம் பெற்றுள்ளது. உரையாசிரியர்கள் ஆரிய வைதிகத்தைத் தழுவி உரைசெய்த படியால் தெரியாமல் ஏறுகளையும் தழுவி விட்டனர் போலும்! இதனை நுட்பமாக ஆய்வு செய்து கழுவி விட வேண்டியது தமிழ் அறிஞர்களின் கடமை.

    • 0 replies
    • 505 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.