வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
பணி ஓய்வுக்குப் பிறகு பணம் தேவையா? இந்த டிப்ஸ் உங்களுக்காக ஐ.வி.பி கார்த்திகேயா பிபிசி தெலுங்கு சேவைக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நமது தலைமுறைக்கும் நமக்கு முந்தைய தலைமுறைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு 'பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம்' என்று சொன்னால் அது மிகையாகாது. ஓய்வூதிய பாதுகாப்பு இல்லாத முதல் தலைமுறையாக நமது தலைமுறை இருக்கிறது. ஆகவே, நமது ஓய்வுக்குப் பிந்தைய காலம் எப்படி இருக்கும் என்பது ஊகங்கள் மற்றும் சில வழிமுறைகளை பொருத்தே அமைகிறது. ஆனால், பலருக்கும் அது குறித்த புரிதல் தெளிவாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், ஓய்வுக…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதாரமும் நமது செலவீனங்களும் அனுதினன் சுதந்திரநாதன் / நாள்தோறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், மக்களை குழப்பத்துக்குள் தள்ளியிருப்பதுடன், அரசின் மீதான விமர்சனத்தையும் அதிகரித்துள்ளது. பெற்றோலியப் பொருட்கள், வாழ்வாதார அத்தியாவசிய பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என, பாரபட்சமில்லாமல், அனைத்துப் பொருட்களின் விலை அதிகரிப்பும், தனிநபரை மட்டுமல்லாது, இலங்கையின் வணிகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என, ஒருவரையும் விட்டுவைக்காமல் பாதித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், என்னதான் போதுமான வருமானத்தை பெற்றாலும், நம்மில் பலருக்கும், அது போதுமானதாகவே …
-
- 0 replies
- 465 views
-
-
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்.எஸ்.சி. குல்சன் தனது முதல் பயணத்தை திங்கட்கிழமை அன்று தொடங்கியுள்ளது. சீனாவின் தியான்ஜின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் வடமேற்கு ஐரோப்பா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. கொரியா குடியரசின் சாம்சங் குழுமத்தின் கப்பல் கட்டுமான நிறுவனமான சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் இந்த கப்பலை கட்டியுள்ளது. 399.9 மீட்டர் நீளமும் 61.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 224,986.4 டன் எடை கொண்ட சுமைகளை ஏற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=14912
-
- 0 replies
- 304 views
-
-
இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பிரிண்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோன்று, ஸ்மார்ட் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோஃபோன், ரிசீவர் ஆகியவற்றின் இறக்குமதி வரியும் 15 சதவீத்டத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விலையை 1.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஐபோன் 11 ப்ரோ மே…
-
- 0 replies
- 475 views
-
-
ரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்! ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமையன்று 70.06 ஆகக் கடுமையாகச் சரிந்தது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சரிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால…
-
- 0 replies
- 505 views
-
-
ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் அவரது பொருளாதார நிலைமை பலவழிகளில் உதவக்கூடும். ஆனால், பலரும் தமது வருமானத்துக்குள் வாழ்வதில்லை. சிலர் தவறான கடன்களை பெற்றும் தமது பொருளாதார நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறார்கள். பல பொருளாதார வல்லுனர்களும் எம்மில் ஒவ்வொருவரும் ஒரு மாத வரவு - செலவு திட்டம் போட்டு செலவு செய்யவேண்டும் என கூடுவார்கள். ஆனால் பலரும் இந்த திட்டத்தை போடுவதும் இல்லை போட்டவர்களில் அதை செயல்படுத்துவதும் குறைவானவர்களே. இன்றைய உலகில் இதற்காக பல 'மொபைல் அப்பும்' இருக்கின்றது. கடினப்பட்டு உழைக்கும் மக்கள் சேமிப்பது பற்றியோ இல்லை முதலிடுவது பற்றியோ அறிவை வளர்க்க முயற்சிப்பது குறைவாகவே உள்ளது. இந்த நிலையில், செலவை பொதுவாக குறைப்பதும் ; தேவையில்…
-
- 0 replies
- 557 views
-
-
மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஓகஸ்ட் 15 வியாழக்கிழமை, மு.ப. 02:43Comments - 0 உலக வரலாற்றில் மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் பலர் தொடர்ச்சியாகப் பங்களித்தும் போராடியும் வந்துள்ளார்கள். இன்று, மனித குலம் அடைந்துள்ள வளர்ச்சி, மனித குலத்தின் மீதும் சமூகத்தின் மீதும், அக்கறை உள்ள மனிதர்களாலேயே சாத்தியமானது. இன்று, மனிதன் செல்வதற்காகவும் இலாபத்துக்காகவும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும், அமைப்பொன்றில் சிக்கி இருக்கிறான். இந்த அமைப்பு, அவனைச் சுரண்டி, அவனைத் தின்று கொழுத்து, அவனை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை விளங்காமல், செல்வத்தைப் பெருக்குவது தான், வளமான வாழ்க்கைக்க…
-
- 0 replies
- 402 views
-
-
ஜி20 மாநாட்டை உன்னிப்பாக கவனிக்கும் நிதியியல் மற்றும் மூலப் பொருட் சந்தைகள்! பிரித்தானிய பிரதமர் தெரேசா மே – ஜீ 20 மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஆஜன்டீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பிரித்தானிய பிரதமர் உட்பட விசேட தூதுக்குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளின் பிடிக்குள் இருந்த உலகை பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்து கடந்த 2008 ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்தமைக்கு அமைவாக இந்த வருடம் அதன் அவசியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். நிதியியல் மற்றும் மூலப் பொருட் சந்தைகள் இந்த மாநாட்டின் பிரதிபலன்கள் குறித்து மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றன. முக்கியமாக அ…
-
- 0 replies
- 363 views
-
-
பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா ஒப்புதல், அவுஸ்ரேலியா இறுதி கட்ட ஆலோசனை! ஜப்பான் தலைமையிலான ஒரு பரந்த பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் ஐந்தாவது நாடாக கனடா இணைந்து கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளது. பசிபிக் வலயத்திற்கு அப்பால் கூட்டுப் பங்காண்மை கொண்ட 11 நாடுகள் விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வியாழனன்று சட்டத்துறையினர் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பின்னர் கனடா அதன் சட்டப்பூர்வ செயல்முறையை வார இறுதிக்குள் நிறைவு செய்துள்ளது. பசுபிக் வர்த்தக ஒப்பந…
-
- 0 replies
- 313 views
-
-
தென்மராட்சியில் மாம்பழச் செய்கையை ஊக்குவிக்க சிறப்பு வேலைத்திட்டம் மாம்பழங்களை உற்பத்தி செய்து அவற்றை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில் ஏற்றுமதிக்கான மாம்பழச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்காக பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தற்போது மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக மாம்பழ உற்பத்தியாளர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதன் ஊடாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்ப…
-
- 0 replies
- 975 views
-
-
AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த AFC இன் பிரதித் தலைவரும் முகாமை…
-
- 0 replies
- 631 views
-
-
கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தால் லாபத்தைவிட நஷ்டம் அதிகமா? - ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிப்டோகரன்சியில் முதலீடு அதிகரித்தால் இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு பங்கு டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாலர் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறினால் பொருளாதார சிக்கல் அதிகரிக்கும் என்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டில் லாபம் பெறுபவர்களை விட நஷ்டத்தை சந்திப்பவர்கள்தான் அதிகம் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன். பிபிசி தமிழுக்கு அவர…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
அமெரிக்கா: சான் ஹுசே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் ரூ2,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 6,500க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523680
-
- 0 replies
- 251 views
-
-
ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.50 லட்சம் - திடீர் உச்சம் ஏன்? 60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி & விசுவல் ஜெர்னலிசம் குழு பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற ம…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
கடனில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள் : ஒவ்வொரு குடிமகன் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக சர்வதேச நிதியம் அறிக்கை வெளியீடு உலகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் வாங்கும் கடனின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு அதிகரிப்பதாக சர்வதேச நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலகின் 770 கோடி மக்கள் தொகையில், ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் மொத்த கடன் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.இந்திய ரூபாய் மதிப்பில் இது 18 ஆயிரத்து 360 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் 2019-ம் ஆண்டின் …
-
- 0 replies
- 309 views
-
-
-
- 0 replies
- 380 views
-
-
அமெரிக்காவின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்த மாடல்-3 கார்களை டெலிவரி செய்துள்ளது. டெஸ்லா நிறுவனத் தயாரிப்புகளில், மிகவும் குறைவான விற்பனை விலை கொண்ட கார் என, டெஸ்டா மாடல்-3 கார் வர்ணிக்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை விலை, இந்திய மதிப்பில், சுமார் 36 லட்ச ரூபாய் ஆகும். சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டெஸ்லா தனது கார் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஷாங்காயில் தொழிற்சாலையை அமைத்த, ஒரு ஆண்டிற்குள்ளாகவே, தனது மாடல்-3 கார்களை, டெஸ்லா, டெலிவரி செய்திருக்கிறது. டெஸ்லா ஷாங்காய் தொழிற்சாலையில், வாரத்திற்கு ஆயிரம் மின்சார கார்கள் என்ற எண்ணிக்கையில் உற்பத்தி …
-
- 0 replies
- 430 views
-
-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா 100 மில்லியன் டாலர்கள் கொரோனா நிதியுதவியை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டுள்ள 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 2.9 மில்லியன் டாலர் தொகை இந்தியாவுக்கு வழங்கப்படுகிறது. ஆய்வக வசதிகளை ஏற்படுத்தவும், கொரோனா பாதிப்புள்ளவர்களை கண்டறியவும், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றிற்காகவும் இந்த தொகை வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவுக்கு 2.8 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், அதில் சு…
-
- 0 replies
- 322 views
-
-
கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்? சைமன் மெயர் பிபிசிக்காக Getty Images (கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் இரண்டாவது மற்றும் கடைசிபகுதி இது.) நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும் வகையில் எதிர்காலவியல் ஆய்வுத் துறையில் உள்ள ஒரு பழைய உத்தியை நான் இங்குப் பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிற இரண்டு காரணிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காரணிகள் வெவ்வேறு விதமாகக் கூட்டுச் சேர்ந்து ஊடாடினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் எடு…
-
- 0 replies
- 365 views
-
-
பணவீக்கத்தின் விளைவு – சீனாவின் நுகர்வோர் விலையில் வளர்ச்சி! பணவீக்கத்தின் முக்கிய விளைவாக சீனாவின் நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 2.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஓகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாக இருந்ததாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தொழிற்சாலை வாசலில் பொருட்களின் பெறுமதியை அளவீட செய்யும் சீனாவின் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண் (பிபிஐ), செப்டம்பர் மாதம் ஆண்டுக்கு 3.6 சதவீதம் உயர்வடைந்துள்ளது. ஆனாலும் முந்தைய மாதத்தை விடவும் 0.5 சதவீத புள்ளிகள்; குறைவடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள், பழங்கள், மற்றும் முட்டை, பன்றி இறைச்சி விலைகள் 2.4 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன் உண…
-
- 0 replies
- 530 views
-
-
வடக்கு, கிழக்கு பிராந்தியத்திலிருந்து சுமார் 1.25 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நுண்நிதியியல் கடனாக பெற்றுக் கொண்ட பெண்கள், அதைத் தொகையை மீளச் செலுத்தாத இயலாத நிலையில், அரசாங்கம் அந்தத் தொகையை பொறுப்பேற்றுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 45,135 பெண்களின் இந்தக் கடன் சுமையை அரசாங்கம் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நுண் நிதியியலுடன் தொடர்புடைய கடன் சுமை பாரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினாலும், இந்த பிரச்சினைக்கு இவ்வாறான தீர்வு வழங்கப்பட்டிருந்தது, குறிப்பாக தேர்தல் காலம் நெருங்கி வரும் போது, இவ்வாறானச் செயற்பாடுகளை …
-
- 0 replies
- 445 views
-
-
சீன பொருட்களுக்கான வரி விதிப்பு ஒத்திவைப்பு! சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை நல்லெண்ண நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில், ‘சீனாவில் 70-வது தேசிய தினம் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டொலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு ஒக்டோபர் 1ஆம் திகதி பதில் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமலுக்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 360 views
-
-
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கையில் தொழிலாளர் வளம் எப்படி செறிந்து உள்ளதோ ? அதுபோல, எதிர்காலத்தில் தொழில்தருநர் வளமும் அதிகரிப்பதற்கான சாதக தன்மையை தொடக்கநிலை வணிகங்கள் (Startups) ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆசியாவில் தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிப்பதற்கு மிகசிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. அண்மைய காலத்தில் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் துணிகர வணிக செயலமர்வுகள், தொடக்கநிலை வணிகங்களுக்கான போட்டிகள் என்பன இலங்கையின் புதிய முயற்சிகளுக்கு உலகளாவிய ரீதியில் வரவேற்புள்ளதையும், அதற்காக நிறுவனங்களும், தனிநபர்களும் நிதியைக் கொட்டி வழங்கத் தயாராகவுள்ளதையும் எடுத்துக் காட்டுகின்றது. இலங்கை மக்கள் அடிப்படையில், துணிகரவணிக முயற்ச…
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கை மத்திய வங்கி என்றால் என்ன? இலங்கை மத்திய வங்கி என்பது இலங்கையின் நிதித் துறையில் உச்ச நிறுவனமொன்றாகும். இது 1949இன் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் ஓரளவு சுய நிர்ணய நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாணயச் சபையொன்றினால் ஆளப்படுகின்றது. நாணயச் சபை என்றால் என்ன? மத்திய வங்கியானது தனித்துவமான சட்ட கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. இங்கு மத்திய வங்கி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமொன்றல்ல. நாணய விதிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய அனைத்து அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளுடன் உரித்தளிக்கப்பட்ட நாணயச் சபையின் மீது நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆளுகின்ற அமைப்பாக நாணயச் சபையானது மத்திய வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாட…
-
- 0 replies
- 321 views
-