வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் இரண்டாம் மிகப் பெரிய எலக்டானிக்ஸ் உற்பத்தி ஆலையினை 1,152 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்காகக் கர்நாடகா மாநில தொழிற் துறை வடக்குப் பெங்களூருவில் உள்ள தேவனஹலியில் 36 ஏக்கர் நிலப்பரப்பினை ஒதுக்கி அளித்துள்ளது. இதற்காகப் போய்ங் நிறுவனத்தின் இந்திய தலைவரான பரத்யூஷ் குமாரும் கர்நாடக முதல்வர் எச் டி குமாரசாமியைச் சந்தித்துப் பேச்சு வார்த்தையினை நடத்தியுள்ளார். வேலை வய்ப்புகள் பெங்களூருவில் அமைய உள்ள போயிங் நிறுவனத்தின் இஞ்சினியரிங் மற்றும் டெக்னாலஜி மையத்தின் கீழ் 2,600 புதிய வேலைப்புகள் உருவாக உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன. அனுமதி சித்தராமையா கர…
-
- 0 replies
- 645 views
-
-
இலங்கையின் பொருளாதாரமும் நமது செலவீனங்களும் அனுதினன் சுதந்திரநாதன் / நாள்தோறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், மக்களை குழப்பத்துக்குள் தள்ளியிருப்பதுடன், அரசின் மீதான விமர்சனத்தையும் அதிகரித்துள்ளது. பெற்றோலியப் பொருட்கள், வாழ்வாதார அத்தியாவசிய பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என, பாரபட்சமில்லாமல், அனைத்துப் பொருட்களின் விலை அதிகரிப்பும், தனிநபரை மட்டுமல்லாது, இலங்கையின் வணிகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என, ஒருவரையும் விட்டுவைக்காமல் பாதித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், என்னதான் போதுமான வருமானத்தை பெற்றாலும், நம்மில் பலருக்கும், அது போதுமானதாகவே …
-
- 0 replies
- 465 views
-
-
இந்தியாவின் தளராத பொருளாதாரமும் தடுமாறும் ரூபாவும் இந்தியாவின் பொருளாதாரம் 2018-இன் இரண்டாம் காலாண்டில் 8.2வீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது உலகின் பெரிய நாடுகளில் மிக அதிக அளவிலான வளர்ச்சியாகும். ஒரு நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியடையும் போது வட்டி வீதம் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். ஆனால், இந்திய ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றது. மற்ற வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் , இந்திய ரூபாவின் வீழ்ச்சி குறைவானதாக இருந்தாலும் இந்திய ரூபாவின் வீழ்ச்சி பெரிய அரசியல் பொருளாதாரத் தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும…
-
- 0 replies
- 932 views
-
-
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது அமெரிக்க டொருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்து வந்தது. இது நேற்று புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 14 நாட்களில், டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.32 ரூபாவினால் (0.82 வீதம்) வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் டொலருக்கு எதிரான, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 7.73 ரூபாவினால் (4.99 வீதம்) வீழ்ச்சியடைந்திருக்கிறது. http://www.puthinappalakai.net…
-
- 7 replies
- 1k views
-
-
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி ச. சந்திரசேகர் / ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வியாபார பதற்றகரமான சூழல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்நாட்டிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றமை காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களி…
-
- 1 reply
- 2.3k views
-
-
இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா? அனுதினன் சுதந்திரநாதன் / இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில், இவ்வாறு வளர்ச்சியடையும் வணிகத்ைத நம்பியிருக்கும் வணி…
-
- 0 replies
- 536 views
-
-
பீஜிங்:வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘அலிபாபா டாட் காம்’ நிறுவனத்தை நிறுவிய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆங்கில பேராசிரியர் இவர், சீனாவில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, 20 ஆண்டுகளில், ‘நம்பர் – 1’ பணக்காரராக உயர்ந்தவர். இவரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்வூதியத்தில், குடும்பத்தை நடத்தியவர்.ஹங்சோ ஆசிரியர் கல்லுாரியில் பட்டக் கல்வி முடித்து, ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணையத்தின் அறிமுகம், புதிய வாசலை திறந்தது. ஆசிரியர் பணியைஉதறி, பின் தன் வீட்டிலேயே, ஒரு கம்ப்யூட்டர் உதவியுடன்,…
-
- 1 reply
- 544 views
-
-
உலகலேயே, பொருளாதார நெருக்கடியில் மிக இலகுவாக சிக்கவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் விரைவில் உள்வாங்கப்படும் என சர்வதேச நிதி தர நிர்ணயப்படுத்தும் மூடி (Moody) நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் வௌியிட்ட தமது புதிய தரப்படுத்தலை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் வௌியாகியுள்ளது. உலகில் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள, அபாய நிலையில் உள்ள நாடுகள் தொடர்பாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைவாக கடந்த காலங்களில் இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. இருந்த போதும் முறையான நீண்ட கால அந்நிய செலாவணி விநியோகமின்மையால் 2019 – 2023, 2024 ஆம் ஆண்டகளுக்கு இடையில் மீண்டு செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை அதிகரித்து…
-
- 2 replies
- 916 views
-
-
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து. பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் ஆளாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது. துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்…
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கையின் முருங்கை உணவுகள் சர்வதேச சந்தைக்கு சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முருங்கை சார்ந்த உணவு பொருட்களை சர்வதேச சந்தைக்கு விநியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஹம்பாந்தோட்டையில் ஏற்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த முதலீட்டாளர்களுக்கும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளது. முருங்கை உணவு பொருட்கள் பலவற்றை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முருங்கை சூப், சோஸ் ஆகியவற்றை தயாரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் முருங்கை காய் மற்றும் விதைகளை பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முருங்கை விதைகளில் கொழுப்பை கட…
-
- 0 replies
- 644 views
-
-
பெய்ஜிங்: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனிடையில் சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா அமெரிக்காவிற்கு எதிரான வர்த்தகப் போரினை சமாளிக்க நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகப் போரினை எங்களால் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்றும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது. வருவாய் அலிபாபா நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிடும் முன்பு தங்களது ஆண்டு மற்றும் தின வருவாய் குறித்த அறிவிப்பினையும் வெளியிட்டு இருந்தது. அமெரிக்கப் பொருட்கள் வரி உயர்வு போன்ற காரணங்களால் அமெரிக்கப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. எனவே சீன வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பொருட்கள் அல்லது பிற நாடுகளில் இருந்து இறக்குமத…
-
- 0 replies
- 464 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சீனாவின் வர்த்தகத்தை முற்றிலும் முடக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்தார். இதன் படி, கடந்த ஜூலை 6ல் ரூ.2.38 லட்சம் கோடி சீன இறக்குமதி பொருட்களுக்கும், நேற்று முன்தினம் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதை அறிந்ததும் ச…
-
- 0 replies
- 754 views
-
-
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை முதல் முறையாக 162.11 ரூபாவாக வீழ்ச்சிடைந்துள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் முதல் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதி பாரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் இன்று அதி உச்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளது. http://metronews.lk/article/32198
-
- 0 replies
- 1.8k views
-
-
மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்!! கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இருகால்களையும் போரில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் பாடசாலை புத்தக பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/story/15/மாற்றுத்-திறனாளியின்-கைவண்ணம்.html யுத்தத்தில் இரு கால்களையும் இழந்தாலும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் கிளிநொச்சி இளைஞரின் மகத்தான முயற்சி…..!! 3 இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடந்த கொடூர யுத்தத்தில் இறந்து போன லட்சக்கணக்கான உயிர்களை விட காயமடைந்த…
-
- 0 replies
- 606 views
-
-
ஹனோய் – ஒரு நாடு பொருளாதாரத்திலும் அரசியல் வலிமையிலும் உருவெடுக்கும்போது அந்நாட்டை ‘புலி’ என வர்ணிப்பார்கள். அந்த வகையில் ஆசியாவின் புதிய பொருளாதார வலிமைமிக்க நாடாக – புலியாக – வியட்னாமை வர்ணிக்கிறது கத்தார் தேசிய வங்கி. 2018-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்னாமின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது என்பதை பல அம்சங்கள் சுட்டிக் காட்டுகின்றன என வியட்னாம் நியூஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு உயர்வு கண்டு, இந்த ஆண்டு 7.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது மிக விரைவான வளர்ச்சியாகும். வியட்னாமின் தொழில்துறை உற்பத்தி 13.1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன்காரணமாக, 2017-இல் 17 விழு…
-
- 1 reply
- 702 views
-
-
துருக்கி நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமடைந்த நிலையில் ஒட்டுமொத்த நாணய சந்தையைப் புரட்டிப்போட்டுள்ளது. இதனால் துருக்கி நாட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் கிட்டத்தட்ட 90 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் துருக்கி நாட்டில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை கத்தார் நாடு செய்யவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டைத் துருக்கி வஹ்கி மற்றும் நிதியியல் சந்தை வழியாகச் செய்யவும் கத்தார் முடிவு செய்துள்ளது. இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து, துருக்கி லீராவின் மதிப்புச் சரிவு மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்த பின் இந்த முதலீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கத்தார். இதன் மூலம் துருக்கி நாட்டின் நாணய மதிப்…
-
- 1 reply
- 472 views
-
-
அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட், கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் வால்மார்ட் நிறுவனப் பங்குகள் 11 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. வால்மார்ட் நிறுவன பங்களில் 50 சதவீதம் இந்நிறுவனத்தை உருவாக்கிய குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் ஆஸ்தான உரிமையாளர்களான வால்டன் குடும்பத்தின் அலைஸ், ஜிம், ராப், லூகாஸ் மற்றும் கிரிஸ்டி ஆகியோரின் சொத்து மதிப்பு ஓரே நாளில் 11.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த 4 பேரின் மொத்த சொத்து மதிப்பு 163.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது இந்தி…
-
- 0 replies
- 489 views
-
-
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்றுள்ள ஒரு பாரம்பரிய கைத்தொழிலான உள்நாட்டு பால் உற்பத்தியின் ஆற்றல் மூலமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அது உதவி வருகின்றமை நாம் அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயமாகும். உள்நாட்டு பால் உற்பத்தி கைத்தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதன் நடுநாயகமாக இலங்கையில் உள்ள சிறு அளவிலான பாற்பண்ணையாளர்கள் காணப்படுகின்றனர். அதாவது அனேகமாக குடும்பங்களால் நிர்வகிக்கப்படுகின்ற சிறு பாற்பண்ணைகள். எனினும், இலங்கையின் பால் உற்பத்தி கைத்தொழில் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகக் காணப்படுவதுடன், கேள்வியை ஈடுசெய்யும் அளவிற்கு வழங்கல் இன்னும் முழுமையான அளவில் கிடைப்பதில்லை. பால் உற்பத்தி மற்றும…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்! ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமையன்று 70.06 ஆகக் கடுமையாகச் சரிந்தது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சரிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால…
-
- 0 replies
- 505 views
-