Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தடயவியல் ஆய்வு செய்யப்படும் சடலம் (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் ஆர்ச்சி அட்டாண்ட்ரில்லா பிபிசி வங்க சேவை 15 செப்டெம்பர் 2025 பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன. பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன. அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுகுவதற்கு முக்கிய காரணம் இதுத…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990 களின் நடுப்பகுதியில், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 50 மில்லியனில் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி 26 ஜூலை 2024 ஒரு காலத்தில், பாறு கழுகு இந்தியாவில் எங்கும் காணக் கூடிய ஒரு பறவை இனமாக இருந்தது. ஏராளமான பாறு கழுகுகள் இங்கும் அங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. அழுகுண்ணி (scavengers - (இறந்த விலங்குகளின் சடலங்களின் எச்சங்களை உண்ணும் உயிரினம்) பறவை இனமான பாறு கழுகுகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் சுற்றித் திரிந்து, கால்நடைகளின் சடலங்களைத் தேடின. சில சமயங்களில் வி…

  3. உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்ள்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மத்திய ரஷ்யா, வடக்கு சீனா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்பட்டு வரும் நிலையில் …

  4. உயரும் கடல் மட்டம்... இங்கிலாந்தில், 200,000 சொத்துக்கள்... கைவிடப்படும் அபாயம் ! 2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதனால் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அவற்றை சரிசெய்ய சாத்தியமா என்பது குறித்து ஆராயப்படுகின்றது. பல தசாப்தங்களாக கடல் மட்ட உயர்வு தவிர்க்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவிக்கும் அதேவேளை சொத்துக்களையும் காப்பாற்ற முடியாது என்று அரசாங்கம் கூறியுள்ளது. இங்கிலாந்தின் கடற்கரையில் மூன்றில் ஒரு பங்கு கடல் மட்ட உயர்வினால் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று அறிக்கை கூறுகிறது. https://athavann…

  5. பருவநிலை மாநாடு: காடழிப்பு ஒப்பந்தம் நியாயமற்றது என விமர்சித்த இந்தோனீசிய அமைச்சர் - கையெழுத்திட்ட அதிபர் விடோடோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காடழிப்பு 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள சட்ட திட்டங்களை இந்தோனீசியா விமர்சித்துள்ளது. மேலும் அச்சட்ட திட்டங்களை கடைபிடிக்க முடியாமல் போகலாம் எனவும் இந்தோனீசியா கூறியுள்ளது. "எங்களால் செய்ய முடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது" என இந்தோனீசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிடி நுர்பயா பாகர் (Siti Nurbaya Bakar) கூறினார். 2030ம் ஆண்டுக்குள் காடழிப்பை…

  6. வரலாறு காணாத, வெப்ப அலைக்கு... மனிதர்கள் உருவாக்கிய, பருவநிலை மாற்றமே காரணம்: ஆய்வறிக்கை! பிரித்தானியாவில் இந்த மாதம் பதிவான வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இதே போன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19ஆம் நூற்றாண்டு காலத்தில் வெப்பநிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு சர்வதேச நிபுணர் குழுவொன்று ஆய்வு செய்தது. அதில், பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால்தான் பிரித்தானியாவில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை ஏற்பட்…

  7. படக்குறிப்பு, பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொலம்பியாவின் மனிஸேல்ஸ் நகருக்கு தென்-மேற்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகள் ஆர்வலர் ஜான் முரில்லோ பறவை ஒன்றை கண்டபோது, அதில் ஏதோ ஒன்று தனித்துவமாக இருப்பதை உணர்ந்தார். இந்த பச்சை நிற ஹனி க்ரீப்பர் பறவையினம் (க்ளோரோஃபேன்ஸ் ஸ்பைஸா) பரவலாக காணப்படும் ஒன்றுதான். ஆனால், ஜான் முரில்லோ கண்ட பறவை நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆண்-பெண் தன்மைகள் இரண்டுமே அந்த பறவையிடம் இருந்தன. அந்த இனத்தின் பெண் பறவைகளிடம் காணப்படுவது போன்று இடதுபுறத்தில் பச்சை நிற இறகுகளும் வலதுபுறத்தில் ஆண் ப…

  8. வறட்சிக்குள் நுழையும், இங்கிலாந்து: இதுவரை இல்லாத அளவு.. தேம்ஸ் நதியில், நீர்மட்டம் வீழ்ச்சி! இங்கிலாந்து வறட்சிக்குள் நுழையத் தயாராகியுள்ள நிலையில், தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காட்சியளிக்கிறது தேம்ஸ் நதியின் ஆதாரமாக அறியப்படும் இயற்கை நீரூற்று பெரும்பாலான கோடைகாலங்களில் வறண்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு வறண்ட ஆற்றுப்படுகை முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கணிசமாக கீழ்நோக்கி சென்றடைகிறது என்று பாதுகாப்பு நிபுணர்களின் அவதானிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 1935ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவிய…

  9. ஜப்பானில் வரலாறு காணாத வெப்பம் ஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875 இல் பதிவான வெப்பநிலையை விட ஜூன் மாதத்தில் மிக மோசமான வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது. ஜப்பான் தலைநகரின் வடமேற்கே உள்ள இசெசாகி நகரத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே ஜூன் மாதத்தில் ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும். கடுமையான வெப்பம் காரணமாக மின் துண்டிப்பை அமுல்படுத்த வழிவகுத்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரத்தை சேமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடும் வெப்பநிலை காரணமாக…

  10. பட மூலாதாரம்,TAU படக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டன கட்டுரை தகவல் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 19 ஜூலை 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஒலிகளை எழுப்பினால், பெண் அந்துப்பூச்சிகள் அந்த செடிகள் மீது முட்டையிடுவதைத் தவிர்த்தன என்பதற்கான ஆ…

  11. பாலுறவு இல்லாமல் ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை 'கலிபோர்னியா கான்டோர்' 30 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இது அற்புதமான கண்டுபிடிப்பு என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர். இந்த வியப்புக்கு காரணம் தெரியுமா? கலிபோர்னியா கன்டோர் என்ற இனத்தை சேர்ந்த இரண்டு பெண் பறவைகள் ஆண் துணை இல்லாமல் மட்டுமல்ல, ஆண் மரபணு டி.என்.ஏ. இல்லாமலேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்திருப்பதை அமெரிக்க காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கலிபோர்னியா கான்டோர் என்பது அழிவின் விளிம்பில் இருக்கிற ஓர் உயிரினம். கலிபோர்னியா கான்டோர்கள் பார்த்தனோஜெனசிஸ் அ…

  12. 2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எச்சரிக்கை! 2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதேவேளை புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள் காற்றில் கலப்பதால், அது உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அது இந்த ஆண்டில் 1.3 டிகிரி செல்சியசிலிருந்து 1.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365451

  13. போர்த்துகலில்... கட்டுக்கடங்காத காட்டுத் தீ: தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் திணறல்! வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 12 தீயணைப்பு வீரர்களுக்கும் 17 பொதுமக்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுவதாக போர்த்துகீசிய அரசு தொலைக்காட்சி மற்றும் பிற உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை அதன் தீயணைப்பு விமானக் கடற்பட…

  14. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 19 நவம்பர் 2025, 02:42 GMT இயற்கை உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது பறவைகளின் வலசை. கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் அவற்றைக் காண பறவை ஆர்வலர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலங்களுக்கு ஆவலுடன் செல்வது வழக்கம். அப்படி வரும் வலசைப் பறவைகளின் பயணப் பாதைகளை, பயணிக்கும் தொலைவை, ஓய்வெடுக்கும் இடங்களைக் கண்டறியும் முயற்சிகளை பறவை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். அத்தகைய ஒரு முயற்சியாக, இந்திய காட்டுயிர் நிறுவனம் (WII), மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தை முன்னெடுக்கிறது. அந்தத் திட்டத்தின் இரண்டாம் நிலையில், மூன்று அமூர் வல்லூறுகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி ரேடியோ பட்டைகளை அ…

  15. கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை. கனடாவில் சஸ்கட்சிவான் (Saskatchewan) , மனிடோபா(Manitoba) , பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia), அல்பிரட்டா(Alberta) மற்றும் ஒன்டாரியோ ( Ontario) மாகாணங்களில் பற்றி எரிந்து வரும் காட்டு தீ காரணமாக ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மு…

  16. டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு! அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்ததுடன் இதில் பலர் சிக்கி கொண்டுள்ளதுடன் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை, இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் குழந்தைகள் என…

  17. சீரற்ற வானிலை: அமெரிக்காவில் 600 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து சீரற்ற வானிலை காரணமாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் நேற்று முன்தினமும் 800 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1,500 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்யும் மழையுடன் கூடிய கடுமையான காற்று காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். பிறக்கப்போகும் புதிய மாதத்துடன் சேவைகள் பட…

  18. ஸ்காட்லாந்தில் 1,200 மான்களை கொல்ல வாக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் சுமார் 1200 செந்நிற மான்கள் கொல்லப்பட வேண்டுமா என வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ள சவுத் உயிஸ்ட் எஸ்டேட்டில் வாழும் சிலர் மான்களில் உன்னிப் பூச்சிகள் கடித்து ஏற்பட்ட காயத்திலிருந்து லைம் என்ற நோய் பருவும் என்பதால் அவற்றை கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த எஸ்டேட்டை சேர்ந்த 200 பேர் அங்குள்ள மான்களை கொல்ல வேண்டும் என்று ஏற்கனவே கையொப்பமிட்ட நிலையில் அடுத்த வாரம் மேலும் 8…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல்…

  20. ஆர்டிக் பெருங்கடல் பனிக் கட்டிகளின் தடிமனை அளவிட புதிய கண்டுபிடிப்பு ஜொனாதன் அமோஸ் அறிவியல் நிருபர் 22 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,AWI/S.GRAUPNER ஆர்டிக் பெருங்கடல் மீது படிந்துள்ள பனிப்படலத்தின் தடிமன் அளவை இனி செயற்கைக் கோள் உதவியோடு கணக்கிடலாம். ஆண்டு முழுவதும் அளவிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலில் மிதக்கும் பனி பகுதிகளை முழுமையாக கண்டறிவதில் பாரம்பரிய விண்கலத்திற்கு பெரும் சிக்கல் இருந்தது. ஏனெனில், பனியின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் காரணமாக அளவிடும் கருவிகளால் அதை தெளிவாக கண்டறிந்து கணக்கிட முடியவ…

  21. 27 MAR, 2024 | 11:18 AM உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு (அனகொண்டா்) வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த பெண் மலைப்பாம்புக்கு அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/179804

  22. சோலைகாடுகளின் அழிவால் கலாசார அடையாளத்தை இழக்கும் தோடர் பழங்குடிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தோடர்கள்... காலநிலை மாற்றத்தின் தாக்கம் இந்தியாவில் எப்படி உள்ளது எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தரவுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், கணிப்புகள், விவாதங்கள் நடந்தபடி உள்ளன. ஆனால் நீலகிரி மலையின் தொல்குடிகளான தோடர் இன மக்களோ தங்கள் வாழ்விலும் பண்பாட்டிலும் நிகழும் மாற்றங்களின் ஊடாக காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள். நாளுக்கு நாள், மலையின் உறுதி க…

  23. 12 AUG, 2025 | 10:40 AM 'சர்வதேச யானைகள் தினம்' இன்று செவ்வாய்க்கிழமை (12) கொண்டாடப்படுகிறது. உலகளவில் யானைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக 2012 ஆம் ஆண்டு சர்வதேச யானைகள் தினம் அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு மற்றும் வளர்ப்பு யானைகளைப் பாதுகாப்பது, யானை வேட்டையாடுதல் மற்றும் கடத்தலைத் தடுப்பது, யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மற்றும் வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ முடியும் என்பதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும். நாட்டில் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைப்பாளர், சுற்றாடல் நிபுணர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க…

  24. காற்று மாசு புற்றுநோயை உண்டாக்குமா? - அறிவியல் விதிகளை மாற்றும் ஆய்வு முடிவு ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் நிருபர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் தலைச்சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் சார்லஸ் ஸ்வாண்டன், இந்த ஆய்வு நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார். காற்று மாசு, புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புற்றுநோய் கட்டிகள் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என இந்த ஆய்வின் மூல…

  25. அழிந்து போனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி மீண்டும் கண்டுபிடிப்பு! 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா முழுவதும் பரவலாக காணப்பட்டது. தட்டான் பூச்சி வடிவிலிருக்கும் இந்த லேஸ்விங் பூச்சியின் இறகே சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் கொண்டிருக்கும். காலநிலை மாற்றம், வாழ்விட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் ராட்சத லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்காவில் வேகமாக அழியத் தொடங்கியது. 1950களுக்குப் பிறகு இந்த லேஸ்விங் பூச்சிகள் வட அமெரிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.